பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, January 17, 2010

சன்டேனா இரண்டு (17-1-10) செய்திவிமர்சனம்


இந்த வாரம் வெளியான சில அறிக்கைகள் அல்லது 'பன்ச்' டையலாகுகள்(?) ... ஒரு தொகுப்பு...

நடிகர் கம் எம்.எல்.ஏ எஸ் வி சேகர் : "தி.மு.க.வில் இணையாவிட்டாலும், அக் கட்சியின் 100-வது எம்.எல்.ஏ.வாக செயல்பட்டு வருகிறேன்.

தேர்தலில் ஒருவர் போட்டியிடும் வரைதான் கட்சியைச் சார்ந்தவர். வெற்றி பெற்ற பின்னர், அனைவருக்கும் பொதுவானவர். என்னை வெற்றி பெற வைத்த மக்களுக்கு பணியாற்றுவது எனது கடமை. அதனால், பதவியை ராஜிநாமா செய்ய வேண்டிய அவசியம் இல்லை".

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் : "விஜயகாந்த் கட்சியை ஒரு கட்சியாகவே நாங்கள் அங்கீகரிக்கவில்லை. எந்த திட்டமும் கொள்கையும் இல்லாத கட்சி அது’’

அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா: "அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கு முதல்வரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் உழவர் பாதுகாப்புத் திட்டம் கொண்டு வந்தபோது அதற்கு 'முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம்' என்று தான் பெயர் சூட்டப்பட்டதே தவிர எனது பெயர் சூட்டப்படவில்லை. முதல்வர்கள் வருவார்கள் போவார்கள். ஆனால், எந்த திட்டமானாலும் அது மக்கள் பணத்தைக் கொண்டுதான் செயப்படுத்தப்படுகிறது. எனவே, முதல்வரின் பெயரை ஒரு திட்டத்திற்கு சூட்டப்படுவது முறையற்ற செயல்".


முதல்வர் கருணாநிதி : "சபையில் முதல்வரை பற்றி புகழ் பாடுவதை உறுப்பினர்கள் தயவு செய்து நிறுத்திக் கொண்டு, கருத்துரைகளுக்கு முக்கியத்துவம் தரவேண்டும். அதுவும் குறிப்பாக ஆளும்கட்சியில் இருக்கும் உறுப்பினர்கள், புகழுரையிலே நேரத்தைச் செலவழிக்காமல், எடுத்துச் சொல்லவேண்டிய கருத்துகளிலே கவனத்தை செலுத்த வேண்டும் என்று ஏற்கனவே பலமுறை கேட்டுக்கொண்டிருக்கிறேன். அதை இப்போதும் ஞாபகப்படுத்துகிறேன். புகழுரையை சொல்லுகிற நேரத்தில் அதை தாங்களே துண்டித்து, கருத்துகளை மாத்திரம் சொல்ல அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்".

சிவசேனை தலைவர் பால் தாக்கரே : "இந்தியர்கள் மீதான தாக்குதல்களை கண்டு கொள்ளாத
ஆஸ்திரேலிய நாட்டின் கிரிக்கெட் வீரர்கள் நமது மராத்திய மண்ணில் விளையாடுவதை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் ".

வெளியுறவு இணையமைச்சர் சசி தரூர் : "இந்தியாவின் முதல் பிரதமர் நேரு கையாண்ட வெளியுறவுக் கொள்கை சரியல்ல. இந்த விஷயத்தில் நேரு மட்டுமின்றி மகாத்மா காந்தியின் அணுகுமுறையும் சரியல்ல".

மைக்கேல் ஜாக்சனின் உடலை பரிசோதனை செய்த மருத்துவ ஆய்வாளர் கிறிஸ்டோபர் ரோஜர் :"இந்த சாவு அப்பட்டமான கொலை".

மலேசியா பிரதமர் முகமது நஜீப் துன் ரசாக் : "மலேசியாவுக்கு சுற்றுலா விசாவை பயன்படுத்தி, வருகை தந்த 40 ஆயிரம் இந்தியர்களை காணவில்லை. அவர்களில் பலர் தோட்டங்களிலோ, ஓட்டல்களிலோ வேலை செய்து கொண்டிருக்கலாம். நல்ல வேளையாக அவர்கள் யாரும் பயங்கரவாதிகள் அல்ல. பெரும்பாலோர் மீண்டும் தாயகம் திரும்பி இருக்கலாம். சுற்றுலா விசாவில் வந்து காணாமல் போனவர்களில் பெரும்பாலோர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்".


செய்தி # 2

ஒரு ஏற்றுமதி விவகாரம் :

அழிவை நோக்கி காளை மாடுகள் இனம் செல்வதாக ஒரு செய்தி அறிக்கை தெரிவிக்கிறது.

"சமீப காலமாக விவசாய தொழிலில் உழவு பணிக்கு டிராக்டர், நெல் அறுவடை எந்திரம், தானியங்கள் சுத்தம் செய்து, தரம் பிரிக்கும் எந்திரம், மின் மோட்டார், மினி ஆட்டோ உள்ளிட்ட இயந்திரங்கள் பயன்பட்டில் உள்ளன. அதனால், காளை மாடுகள் வளர்ப்பதில் விவசாயிகளிடையே ஆர்வம் குறைந்து, பால் தரும் பசு மாடுகளை வளர்ப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பசு மாடுகள் ஈன்று எடுக்கும் காளை கன்று குட்டிகளை இறைச்சி கடைக்கு விற்று விடுவதால், காளை இனம் தொடர்ந்து அழிந்து வருகிறது.பசு மாடுகளுக்கு செயற்கை முறை கருவூட்டல் செய்யப்படுவதால், இனப்பெருக்கம் செய்ய காளை மாடுகள் தேவைப்படுவதில்லை. இதனால், காளை மாடுகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது"என்கிறது அந்த அறிக்கை.

பெங்களூரில் உள்ள "கார்டுமேன்" நிறுவனம் ஒரு சர்வே நடத்தி சேகரித்த தகவல் படி இந்திய காளைகளின் சக்தி தினமும் ஆறு மணி நேர வேலை என்ற அடிப்படையில் 30,000 மெகா ஹெர்ட்ஸ் அளிக்கிறது. உழவிற்கு பால் வற்றிய பசு ,எருமை மாடுகளின் ஈடுபாடும் சுமார் 16,000மில்லியன் யூனிட் மின் சக்தியை மிச்சமாக்குகின்றன. பாரமிழுக்கும் மாடுகள், சந்தைக்கு செல்ல, குடும்ப உறுப்பினர்களை அழைத்து செல்ல, தோட்டத்திற்கு செல்ல என அனைத்து அடிப்படை தேவைகளையும் பூர்த்தி செய்வதால் சுமார் 4000 மில்லியன் யூனிட் மின்சக்தி மிச்சமாகிறது.இந்த அளவு மின்சக்தியை பெற 40,000 கோடி ரூபாய் டீசலை நாம் கச்சா எண்ணை வாங்க வேண்டும்.

"இந்த நடமாடும் சக்தி ஜீவன்களின் பயன்பாடு முற்றிலுமாக அழிக்கப்பட்டு பூஜ்ஜிய நிலைக்கு வருமானால், நம் பொருளாதாரம் திவாலாகும் நிலைமை ஏற்படும்" என எச்சரிக்கை விடுக்கிறார் அமெர்த்தியா சென். "நவீன அறிவியலை உட்புகுத்திய ஐரோப்பிய நாடுகள், தங்கள் கிராமங்களில் இன்றும் காளைகளை பயன்படுத்துவதற்கு எப்போதும் தயங்குவதே இல்லை" .என்கிறார் அவர்.

ஒரு வாரத்தில் குறைந்த பட்சம் 8 முதல்10 லாரிகளில் அடி மாடுகள் கேரளாவுக்கு ஏற்று மதி செய்ய படுவதாக ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
ஒரு இறக்குமதி விவகாரம் : நாம் மாடுகளை செய்வது போலவே, நமது தமிழகத்துக்கு மனிதர்களை மற்ற மாநிலங்கள் லாரிகளில் இறக்குமதி செய்வதாக ஒரு புகார் எழுப்பபட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஆந்திரா மற்றும் கர்நாடக மாநில எல்லை பகுதியில் அமைத்துள்ளதால், அந்த மாநிலத்தில் இருந்து மன நிலை பாதிக்கப்பட்டவர்களை லாரிகளில் ஏற்றி கொண்டு வந்து கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் டிரைவர்கள் இறக்கி விட்டு சென்று விடுகின்றனர்.இப்படி, தேசிய நெடுஞ்சாலையில் திரிந்துக் கொண்டிருந்த 30க்கும் மேற்பட்ட மன நோயாளிகள், தற்போது, கிருஷ்ணகிரி நகருக்கு வந்துள்ளனர்.

தண்ணீரை தவிர வேறு எல்லாவற்றையும் இங்கு அனுப்பிவைக்கிறார்கள் சுற்றி உள்ள மாநிலங்கள்.
(நன்றி..இனி அடுத்த வாரம்).

-இன்பா

11 Comments:

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

மாடுகள் விஷயம், கவலைப் பட வைக்கிறது.
(ஒரு அவசிய பின்குறிப்பு: இந்த விமரிசனம் இரண்டாவது செய்திக்குத் தான். முதல் செய்தியில் வரும் சில நபர்களைக் குறித்தல்ல!!!!!)

kggouthaman said...

அமர்த்தியா சென் சொல்கிறாரே என்று காளை மாடுகளிடம் வேலை வாங்கினால், மேனகா காந்தி கடித்துவிடுவார் ஜாக்கிரதை.

kggouthaman said...

// தண்ணீரை தவிர வேறு எல்லாவற்றையும் இங்கு அனுப்பிவைக்கிறார்கள் சுற்றி உள்ள மாநிலங்கள்.//
தமிழகம், மனிதர்களை ஏற்றுக்கொண்டு, மணலை மற்ற மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்கிறது!

R.Gopi said...

//kggouthaman said...
அமர்த்தியா சென் சொல்கிறாரே என்று காளை மாடுகளிடம் வேலை வாங்கினால், மேனகா காந்தி கடித்துவிடுவார் ஜாக்கிரதை.//

---------

கௌதமன் சார்... கடித்து அல்ல... முட்டி விடுவார்....

அமைதி அப்பா said...

"தி.மு.க.வில் இணையாவிட்டாலும், அக் கட்சியின் 100-வது எம்.எல்.ஏ.வாக செயல்பட்டு வருகிறேன்//.

காணாமல் போனவர்களில் பெரும்பாலோர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்"//.


இரண்டையும் மாற்றி மாற்றி படித்துக்கொண்டாள் போதும், கமென்ட் தேவையில்லை....!
.

பிள்ளையாண்டான் said...

தமிழகத்தில்தான் மன நோயாளிகளுக்குப் (முதல் செய்தியில் வருபவர்கள்) பதவி கிடைக்கும் என்று அவர்களுக்கும் தெரிந்துவிட்டது போல!

இலவச டி.வி, இலவச கேஸ் ஸ்டவ் கணக்கு காட்ட, இன்னும் 30 பேர் ரெடி.

முகமூடி said...

எஸ்.வி.சேகர்க்கு தொகுதியை பார்க்க எங்கே நேரம் இருக்கு. அடையாரில் குடியிருப்பு பகுதிக்கு நடுவில் கொரியன் உணவகம் திறப்பதை எதிர்த்து மனு கொடுத்தபோது ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏன் க்ராண்ட் ஸ்வீட்ஸ் வாடிக்கையாளர்கள் வாகனங்களை தெருவில் நிறுத்துவதால் வரும் போக்குவரத்து நெரிசல் காரணமாக விபத்தில் ஒரு பெண் இறந்த போது கூட ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அம்மாவின் வால்பையான் அதிமுகவிற்கு அல்வா கொடுத்து இப்பொழுது கோபாலபுரத்தின் தத்துப்பிள்ளையாக மாறியிருப்பதுதான் அவரின் சாதனை!!!

cho visiri said...

It is interesting to see Jayam Calender in that Room (where CM is seen seated)and the magnified version shows that the Calender has much religious information - and perhaps Raasi Palan for each of 12 Zodiac Signs.

Well, yellow yellow B.....o

Anonymous said...

முக்கியமான விஷயங்களைப் பற்றி (காளை மாடுகளினால் மிச்சமாகும் மின்சாரம்) பேசும் போது, விஷயத்தை திசை திருப்ப வேண்டாம்! அதே சமயம், காளை மாடுகளைவதைப்பதும் நிறுத்தப் பட வேண்டும்

Anonymous said...

sir, unit of the power should be in watts.. not in hertz..

Anonymous said...

It was a Sports Stadium.

Eight Children were standing on the track to participate in a running event.

* Ready! * Steady! * Bang !!!

With the sound of Toy pistol,

All eight girls started running.

Hardly had they covered ten to fifteen steps,

when one of the smaller girls slipped and fell down,

Due to bruises and pain she started crying.

When the other seven girls heard the little girl cry they stopped running, stood for a while and turned back.

Seeing the girl on the track they all ran to help.

One among them bent down, picked her up and kissed her gently

And enquired as to how she was..

They then lifted the fallen girl pacifying her.

Two of them held her firmly while all seven joined hands together and walked together towards the winning post........ ..

There was pin drop silence at the spectator's stand.

Officials were shocked.

Slow claps multiplied to thousands as the spectators stood up in appreciation.

Many eyes were filled with tears

And perhaps even God's!

YES.!! This happened in Hyderabad [ INDIA ], recently!

The sport was conducted by
National Institute of Mental Health.


All these special girls had come to participate in this event

They were spastic children.

Yes, they were Mentally Challenged.

What did they teach the WORLD.?

Teamwork.?

Humanity.?

Equality among all.??

Successful people help others who are
slow in learning

So that they are not left far behind.