பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, January 20, 2010

இலவச விளம்பரம் - அதிகாரம் 134

கடையில் நாம் ஏதாவது பொருள் வாங்கினால் இன்னொரு பொருளை இலவசமாகத் தருகிறார்கள். உடனே மகிழ்ச்சியாக இருக்கும் ஒன்றைத் தவிர!

பாத்திரம் தேய்க்கும் பவுடருடன் இன்னொரு பாக்கெட் கொடுத்தால் உடனே உங்க மனைவியின் முகத்தில் பரவசமும், உங்க முகத்தில் சோகமும் வரும் ஏன் என்றால் பாத்திரம் தேய்க்க போவது நீங்க தானே?

ஒரு 'விதி'விலக்கு இருக்கு. அந்த விதி உங்க அம்மா, அதாவது உங்க மனைவிக்கு மாமியார் இருந்தால் நீங்க தப்பிச்சீங்க. உங்க அம்மா இருக்கும் போது உங்களை பார்த்திரம் தேய்க்க சொல்ல மாட்டாள் உங்க மனைவி. இதற்காகவே நீங்கள் உங்க அம்மாவிற்கு கடன்பட்டுள்ளீர்கள்.

ட்விட்டர்ல மக்கள் ஒண்ணும் உருப்படியா செய்வது இல்லை என்று நாலு நாள் முன்னாடி சொன்னேன். ஆனால் பாத்திரம் தேய்க்கும் வேலையை செய்கிறார்கள் என்று தெரிகிறது. இன்று இலவசம் திருவள்ளுவருக்குப் போட்டியாக வாழும் வள்ளுவனின் நற்றமிழிலில் பாத்திரம் என்ற அதிகாரத்தில் போட்ட வெண்பாம்கள்.

அதிகாரம் - பாத்திரம்

1. துலக்கிவைக்க சொன்னாலே செய்திடு இல்லை
விலக்கியே வைப்பாள் உன்னை

2. அழுத்தித் தேய்த்திடு அழுக்கெல்லாம் போயிடணும்
கழுத்தில் இருக்குதுபார் கத்தி

3. தேங்காத பாத்திரம் தெளிவான ஸ்ட்ராட்டஜி
ஏங்காது இருப்பாயே நீயும்

4. துடைத்து வைக்காதது துக்கிரித் தனமென்பாள்
சடைக்கு மேல்விழுமே குட்டு

5. பாத்திரத்தை ஊறவெச்சுப் பதமாகத் தேய்த்திடு
ஆத்திரத்தில் ஆக்காதே ஸ்க்ராட்ச்

6. நான்ஸ்டிக் பாத்திரத்தை நல்லபடி தேய்த்திடு
வான்புகழும் வாய்க்கும் உனக்கு

7. ஓராயிரம் விளம்பரம் ஒருசொட்டுப் போதுமென்று
யாராலும் முடியாதது அது

8. குக்கர் பாத்திரத்தில் எலுமிச்சை தனையிட்டால்
மக்கர் செய்யாதே அழுக்கு

9. பீங்கான் கிண்ணத்தில் சிப்பொன்று பார்த்தாலே
தாங்காது தங்கமணி மனசு

10. மஞ்சப் பொடிக்கறை மறைந்தும் போயிடவே
கஞ்சப் படாதேநீ சோப்பில்


பாத்திரம் தேய்க்க வீட்டுக்காரி விம்முனா,
வச்சுகுடு வேலைக்காரிக்கு சபினா!


பொழுது போகாமல், இந்த வெண்பாம்களை இலவசமாய் எனக்கு அனுப்பிய இலவசத்தின் ரசிகருக்கு நன்றி!

25 Comments:

மானஸ்தன் said...

:>
தொடரட்டும் இலவசத்தின் பணி!!
:>

மஞ்சள் ஜட்டி said...

மொத்தமா வெட்டிப்பய வேலை... சும்மா கிடந்த நாசுவன் குரங்குக்கு சிரைச்ச கதையா இருக்கு இந்த பதிவு..பார்த்து..!!! தற்கால வாழும் வள்ளுவர் மு.க இதற்கும் விளக்க உரை எழுதிட போறாரு??

Itsdifferent said...

Within 48 hours of earthquake in Haiti, Israel team was in ground with most complicated, high tech medical stuff and enough supplies to setup ICUs, Operating tables. They were able to capture the personal details in Electronic medical records, take x-rays and the whole thing. They were accompanied by ethics team, to make the tough decisions on life and death, amputations etc. Psychiatric teams to help the doctors and other medical professionals, to cope up with such decisions that are being made on the field, under most stressful situations. Its like dream and ideal care for the US teams. What about India? If India or any of our neighbors have to face such a situation, will India ever be ready? Or expect US and Israel to fly thousands of miles to help?
Are our ministers learning anything from these events, both positive and negative lessons? Or they are sitting in their homes sipping alcohol with kababs?
Wake up Govt of India, learn, prepare and be ready....
http://www.msnbc.msn.com/id/3032619/ns/nightly_news/#34944405

R.Gopi said...

ஹலோ.... எனக்கு தெரிய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்....

இதற்கு ”தல” விளக்க உரை எழுதுவாரா, மாட்டாரா??

இலவசக்கொத்தனார் said...

/ஒரு 'விதி'விலக்கு இருக்கு. அந்த விதி உங்க அம்மா, அதாவது உங்க மனைவிக்கு மாமியார் இருந்தால் நீங்க தப்பிச்சீங்க. உங்க அம்மா இருக்கும் போது உங்களை பார்த்திரம் தேய்க்க சொல்ல மாட்டாள் உங்க மனைவி. இதற்காகவே நீங்கள் உங்க அம்மாவிற்கு கடன்பட்டுள்ளீர்கள்./

இது எந்த ஊர் கணக்கு? அதெல்லாம் விதிவிலக்கு இல்லை ஸ்வாமின்!!

போஸ்டருக்கு நன்னி ஹை!!

இதுக்கு பதிலா பாராவும் பெனாத்தலும் போட்ட பாம்கள் இங்கே!!

http://tinypaste.com/1d063

http://tinypaste.com/c1154

maddy73 said...

'திருக்குறள்' குறள் வெண்பா ஆகும். அதன்படி, ஏழாவது சீர் (வார்த்தை) 'குறில் ஒற்று' அல்லது 'நெடில் ஒற்று' மட்டுமே வரவேண்டும். 134 வது அதிகாரமாக கூறப்பட்ட இவற்றுள், 'இலக்கண சுத்தம்' இல்லை என்று, நான் கருதுகிறேன்.

ரெண்டு லைன் எழுதினா, அது திருக்குறள் ஆயிடுமா?

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

ஏய்ப்பது நானடிமை இல்லை எனச்சொல்லி
தேய்ப்பது பாத்திரம் தான்.

துவைப்போம் மனைவியின் துணிகளையும் சேர்த்து
சுவைப்போம் மனையின் வாழ்வு.

SUBBU said...

என்னங்க வெட்டிவேல இது ;)

Anonymous said...

Annaiku uthavathavarkal thaan
pira nangaikku ulaiparkal.

chovisiri said...

Mady73 said
//திருக்குறள்' குறள் வெண்பா ஆகும். அதன்படி, ஏழாவது சீர் (வார்த்தை) 'குறில் ஒற்று' அல்லது 'நெடில் ஒற்று' மட்டுமே வரவேண்டும். 134 வது அதிகாரமாக கூறப்பட்ட இவற்றுள், 'இலக்கண சுத்தம்' இல்லை என்று, நான் கருதுகிறேன்.

ரெண்டு லைன் எழுதினா, அது திருக்குறள் ஆயிடுமா//

Kurall means briefly said. Vennpaa is defined as follows;-
Irandadi or Naangadi only should be there.

Eeradi Muchcheer aenaiadi Naarchcheer.

Kadaisi chcheer should be of Single Asai - be it Kuril or Nedil
. It may be Maachcher, or Niraichcheer. It (irudichcheer) should end with any one of the four, namely, Naal Malar Kaasu and Pirappu.

In Thirukkurall each Adhikaaram conrtains 10 couplets.

May Thirvalluvar forgive the person who posted the so called 134 Adhikaaram.

R. Jagannathan said...

I enjoyed the Manjal kuraL more than the rest!

Ref, Itsdiffernt's post (unrelated to the kuraLs). He would have read about the looters in Haiti and I am sure India and our politicians do not need lessons in this aspect as they specialise on this activity. - R. Jagannathan

chovisiri said...

One more aspect was inadvertantly omitted to be mentioned.

Maa mun niraiyum Vilam mun Naerum amainditudal murai.

chovisiri said...

I am sorry to add. This is certainly the last errat, I assure the readers.

Kaai mun Naer varavendum.

maddy73 said...

//Cho visiri said... "Kadaisi chcheer should be of Single Asai - be it Kuril or Nedil
. It may be Maachcher, or Niraichcheer. It (irudichcheer) should end with any one of the four, namely, Naal Malar Kaasu and Pirappu." //

குரல் வெண்பா என்பது 'ஈற்றடி முச்சீறாய், ஏனைய அடிகள் நார்சீறாய், கடைசி சீர் பின்வரும் ஒன்றாக மட்டுமே இருக்கும்
1) குறில் (நேர், உம். 'சொல்')
2) நெடில்(நிறை, உம். 'மழை' )
3) நெடில்-ஒற்று (நேர்பு, உம்.'நட்பு' ) ,
4) நெடில்-ஒற்று ( நிரைபு, உம்.'உலகு')
மேலே கொடுக்கப்பட்டுள்ள 'உம்' (உதாரணங்கள்) திருக்குறளில் வரும் கடைசி சீர்களாகும்

நேர்-நேர் தேமா (நாள்)
நிறை-நேர் புளிமா (மலர்)
நேர்-நிறை கூவிளம் (காசு)
நிறை-நிறை கருவிளம் (பிறப்பு)
-------------
காய் முன் நேர்
விளம் முன் நேர்
மா முன் நிறை
----------

kggouthaman said...

நல்லா இருக்கு. குறள் வடிவில் அமைந்த இந்தக் கிறள்கள் / கீறல்கள்.

இலவசக்கொத்தனார் said...

வெண்பா இலக்கணம், குறள் இலக்கணம் எல்லாம் அளித்த நண்பர்களுக்கு நன்றி. வெண்பா இலக்கணம் பற்றி நான் எழுதி இருக்கும் இரு பதிவுகள் இவை.

http://wikipasanga.blogspot.com/2007/01/1.html

http://wikipasanga.blogspot.com/2007/01/2.html

ட்விட்டரில் சடுதியில் ஓசை நயம் மிக்க பாட்டுக்களைப் போடுவது ஒரு விளையாட்டு. அது வெண்பாவை ஒத்து இருப்பதால் அதனை வெண்பாம் என பெயரிட்டு விளையாடி வருகிறோம். இதில் தளை தட்டல்கள் பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை.

அது போல எழுதப்பட்டவையே இவை. இவற்றில் தளை தட்டல்கள் உண்டு என்பதை நான் அறிவேன்.

ஜெயக்குமார் said...

நல்ல கிறல்கள்...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//Cho visiri said:
. It may be Maachcher, or Niraichcheer.//

Sorry brother, it is not maachcheer but it is nerchcheer.

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//ஏய்ப்பது நானடிமை இல்லை எனச்சொல்லி

தேய்ப்பது பாத்திரம் தான்.

துவைப்போம் மனைவியின் துணிகளையும் சேர்த்து
சுவைப்போம் மனையின் வாழ்வு//

இரண்டாவது குறளில் கடைசியில் இலக்கணம் தவறாக வருவதால், என் திருத்தப்பட்ட குறள்கள் இதோ:

ஏய்ப்பது நானடிமை இல்லை எனச்சொல்லி
தேய்ப்பது பாத்திரம் தான்.

துவைப்போம் மனைவியின் துணிகளையும் சேர்த்து
சுவைப்போம் மனவாழ் வினை.

kggouthaman said...

எழுதுவது இட்லி வடை,
இலக்கணங்கள் இதற்கு இலை!
படிப்பதுவும், படித்தபின்
நகைப்பதுவும் நம் வேலை!

cho visiri said...

maddy said my counter questions
நெடில்-ஒற்று (நேர்பு, உம்.'நட்பு' )
Pu is Kutrialugaram, here.


நெடில்(நிறை, உம். 'மழை' )
This is an kuril nedil (
Orasai chchol.
4) நெடில்-ஒற்று ( நிரைபு, உம்.'உலகு')
Idhu Iru kuril otru with kutrialugaram.
நெடில்-ஒற்று ( நிரைபு, உம்.'உலகு')
Kuril nedil with kutrialugaram
நெடில்(நிறை, உம். 'மழை' )
Kuril nedil
,

Anonymous said...

இம்சை தாங்க முடியலடா சாமி! ஆளுக்காளு அறிவு கொழுந்தா இருக்கீங்க்ளே?
இட்லிவடை தயவுசெய்து அடுத்த பதிவை சீக்கிரமாக பதிக்கவும்!

maddy73 said...
This comment has been removed by the author.
maddy73 said...

// 3) நெடில்-ஒற்று (நேர்பு, உம்.'நட்பு' ) ,//

I meant to say '3)' is 'குறில்-ஒற்று' & realised now that it is acutually 'குறில்-ஒற்று-குற்றியலுகரம்'

Sorry for not saying abt. 'குற்றியலுகரம்'.

Thanks for correcting, 'Cho visiri'

வி.பாலகுமார் said...

எனது வெண்பா(ம்?) முயற்சி.

http://bit.ly/abgyF0