பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, January 13, 2010

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 13-1-2010

முனிக்கு இட்லிவடை சொந்தமாக எழுதும் கடிதம் :-)

மைடியர் முனி,

அட்வான்ஸ் பொங்கல் மற்றும் தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் கலைஞர் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.

சென்ற ஞாயிற்றுக்கிழமை விஜய் டிவியில் நீயா நானா நிகழ்ச்சியின் கடைசியில் முஸ்லீம் பெண்கள் பர்தா அணிவது சரியா தவறா என்று அடுத்த வார விவாதம் என்று விளம்பரம் செய்தார்கள். உடனே நேற்று முன் தினம் இதற்கு சில முஸ்லீம் அமைப்புகள் எதிப்பு தெரிவிக்க உடனே விஜய் டிவி பயந்து போய் வாலைச் சுருட்டிக்கொண்டு அந்த நிழச்சியை ரத்து செய்வதாக அறிவித்திருக்கிறது. இதுதான் மேட்டர். உடனே என்னை ஒருவர் சாட்டில் இதே போல நம்ம மக்கள் தாலி நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. நாம(இந்துக்கள்) வேஸ்ட் என்று என்னிடம் சொன்னார். அவருக்கு நான் சொன்ன பதில் "இந்து மதத்தை விஜய் டிவியின் நிகழ்ச்சி அழிக்கும் என்று நீங்கள் நம்பினால் அது உங்களுக்கு இந்து மதத்தை பற்றிய நம்பிக்கையை தான் காண்பிக்கிறது. எவ்வளவோ சவால்களை சந்தித்த இந்து மதம் மேதாவி மாதிரி பேசும் கோபிநாத் போன்ற ஆட்களாலும் விஜய் டிவியாலும் ஒன்றும் துவண்டு போகப்போவதில்லை". இந்து மதம் என்று நெட்டில் கூட பலர் ஜல்லி அடிக்கிறார்கள், அவற்றை எல்லாம் தாங்கிக்கொள்ளும் இந்து மதம் விஜய் டிவியையும் கண்டிப்பாகத் தாங்கிகொள்ளும். பெரியார் சொன்னதால் கோயிலில் கூட்டம் கம்மியாகிவிட்டதா என்ன? என்றதற்கு அவர் சிரித்தார்.

ராமகோபாலன் சொல்லுவதை கேட்டால் இதைவிட சிரிப்பா இருக்கு. "தமிழ் செம்மொழி மாநாட்டில், ஆன்மிக அரங்கம் அமைக்கப்பட வேண்டும்" என்று சொல்லியிருக்கார். தமிழ் செம்மொழி மாநாட்டில் ஏன் ஆன்மீக ஸ்டால் அமைக்க வேண்டும்? ஆன்மீகம் என்ன ஸ்டால் போட்டு விலை பேசும் வியாபார பொருளா? ஏதோ கோயில் குளம் என்றால் பரவாயில்லை. செம்மொழி மாநாட்டில் ஆன்மீக ஸ்டால் போட்டால் யாருக்கு லாபம்? சென்னையில் மார்கழியிலே வெய்யில் காலத்தின் எபக்ட் இருக்கிறது. இது கூடப் பரவாயில்லை திருப்பதி வெங்கடாசலபதி பற்றிய பாடல்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மானைக் கொண்டு இசையமைக்கச் செய்து ஆல்பம் வெளியிடப் போவதாக அறிவித்துள்ள தேவஸ்தானத்தைக் கண்டித்து இந்து தர்மத்தில் நம்பிக்கை உள்ளவர் இசையமைப்பதே சிறப்பாக இருக்கும் என்று ஹிந்து முன்னணி மாநிலச் செயலாலர் வெள்ளையப்பன் சொல்லுகிறார். இந்து மதத்தை அழிக்க எவ்வளவோ முயற்சி செய்கிறார்கள், பாவம் முடியவில்லை. சில நாட்களுக்கு முன் ஷனாய் இசை பற்றி யதிராஜ் எழுதியிருந்தார். அதை கேட்டால் இசைக்கு ஜாதி மதம் இல்லை என்று புரியும்.

சரி, அந்த இந்து முன்னணி ஜோக்கை விடு. பி.ஜே.பி அதைவிட பெரிய காமெடி செய்கிறார்கள். காங்கிரஸை வீழ்த்த பி.ஜே.பி பத்து அம்சத் திட்டம் போட்டிருக்கார்கள். பி.ஜே.பியை வளப்படுத்த திட்டம் போட்டால் பாராட்டலாம், ஆனால் இவர்கள் காங்கிரஸை வீழ்த்த போட்டிருக்கிறார்கள். பி.ஜே.பி உருப்படுமா? இவர்களுக்கு பி.ஜே.பியை மொத்தமாக அழிக்காமல் தூக்கம் வராது என்று நினைக்கிறேன்.

பிரதமருக்கு சில வாரங்களா தூக்கமே இல்லையாம், பல டாக்டர்கள், சோனியா என்று எல்லோரும் விசாரித்து பார்த்தார்களாம் என்ன என்று கண்டு பிடிக்கமுடியலை, பிறகு மன்மோகன் சிங் படுக்கை பக்கத்தில் இருந்த நியூஸ் பேப்பர் என்று கண்டு பிடித்துள்ளார்கள். அந்த நியூஸ் பேப்பரில் "மு.க.அழகிரியைப் பிரதமராக்குவதே லட்சியம் என்றபடி அவர் பெயரில் பேரவை ஒன்று ஆரம்பித்துள்ளார்கள்" என்று நியூஸ் தான் என்பது கூடுதல் செய்தி.

இந்த மாதிரி பேரவை ஆரம்பிக்கும் நோய் போல writerxxx என்று எல்லோரும் ஆரம்பித்துவிடுகிறார்கள். எங்கே நாம இவர்களை ரைட்டர் என்று சொல்ல மாட்டோமோ என்று பயம். இவர்களா ரைட்டர் என்று போடுக்கொள்கிறார்கள். எனக்கு ஒரு டவுட் போலீஸ் ஸ்டேஷனில் ரைட்டர் என்று ஒருவர் இருப்பார், அவர்களும் வெப் சைட் ஆரம்பித்தால் ரைட்டர் என்று தான் போட்டுக்கொள்வார்கள். அப்ப நம்ம தமிழ் ரைட்டர்ஸ் பாடு படு திண்டாடம் தான். தற்போதைய புது xxx - laram தப்பா நினைச்சுக்கதீங்க இது அந்த சமாச்சாரம் இல்லை! இப்படியே கலக்கல் கபாலி, பாத்ரூம் பாகவதர் என்று பொங்கல் தினத்திலேர்ந்து நமக்கு எனிமா கொடுத்துவிடுவார்! அப்துல் கலாம் என்னடா என்றால் இளைஞர்கள் எல்லாம் அரசியலுக்கு வாங்க என்கிறார். ஆனால் நம்ம மக்கள் பிளாக் எழுதி அதில அரசியல் செய்கிறார்கள். இளைஞர்கள் ரொம்ப கெட்டுபோய்விட்டார்கள்.

தமிழகம் தேவலாம், கர்நாடக அரசியல் ரொம்ப மோசமாகிவிட்டது. எடியூரப்பாவிற்கு எதிராக தனிப்பட்ட முறையில் குறிப்பிட முடியாத தகாத வார்த்தையையும் பயன்படுத்தியுள்ளார் தேவகவுடா. முன்னாள் பிரதமார் பார்லிமெண்டில் தூங்குபவர். இப்படி பேசலாமா என்று பெரிய சர்ச்சை எழுதுள்ளது. இட்லிவடை சார்பில் அவருக்கு கோல்கேட் மவுத் வாஷ் ஒன்று பரிசாக அனுப்ப திட்டமிட்டுள்ளேன். உடனே எடியூரப்பா பொங்கி எழுந்து அறிக்கைவிடவில்லை, என்ன செய்தார் தெரியுமா ? மூன்று இடியட்கள்' படம் பார்த்தார். ஏதோ அவரால் முடிந்தது அது. இல்லை என்றால் அழுதிருப்பார். படம் என்று சொன்னவுடன் தான் நினைவுக்கு வருது.

இப்ப மார்கெட்டில் 3 டி டிவி வரபோகுது. இப்பவே அதற்கு நல்ல மார்கெட் இருக்கும் என்று சொல்லுகிறார்கள். தமிழ்நாட்டில் விஜய் நடித்த வேட்டைக்காரன், நமிதா போன்றவைகளை
3 டி டிவியில் பார்த்தால் மக்களின் நிலமை என்ன ஆகும். கலைஞர் காப்பீட்டு திட்டதில் நிறைய பேர் பயன் பெறுவார்கள். 'கண்'கெட்ட பிறகு 'சூரிய' நம்ஸ்காரம் என்று இதை தான் சொல்லுவார்கள் போல


நாளைக்கு மறுநாள் கங்கண சூரிய கிரகணம். ஆயிரம் வருஷத்துக்கு ஒரு முறைதான் இது மாதிரி வருமாம். இந்த முறை வைர வளையத்துக்கு பதில் தங்க வளையம் தெரியுமாம். இந்த கிரகணத்தை வெறுங் கண்ணால் பார்க்கக்கூடாது. அவ்வாறு பார்த்தால் கண் பாதிப்பு ஏற்படும் என்பது அறிவியல் உண்மை. பக்குதறிவாளர்கள் கவனிக்க. கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு ஒரு செய்தி - சூரிய கிரகணத்துக்காக திருப்பதி ஏழுமலையான் கோவில் 15ஆம் தேதி சாத்தப்படும்.

சூரியனுக்கு சக்தி அதிகம், அது இலசமாக இருந்தாலும்!. நான் அந்த சூரியனை சொல்லவில்லை. மன்மோகன் சிங் சொன்ன சூரியனை சொன்னேன். இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி எட்டுத்திக்கும் பரவியதைப்போல, சூரிய எரிசக்தித் துறை பரவலாக வேண்டும். 'சிலிக்கான் வேலி' வரிசையில் 'சோலார் வேலி'க்கள் உருவாகவேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங் சில நாட்களுக்கு முன் கூறினார். நல்ல யோசனை. ஆனால் இந்த செய்தியை எவ்வளவு பேர் படித்தார்கள்? நமக்கு இந்த மாதிரி செய்திகள் எல்லாம் பிடிக்காது ஆனால் ஜெயலலிதா என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே என்று சட்டசபையில் பாடினார் என்ற செய்தி எல்லோரும் போட்டி போடுக்கொண்டு போட்டார்கள்.

அந்த நியூஸ் பற்றியும் சொல்லிவிடுகிறேன். ஜெயலலிதா திங்கட்கிழமை சட்டசபையில் பேசினார். பேச்சை முடிக்கும் போது தி.மு.க. ஆட்சி குறித்து விமர்சித்த அவர் என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்ற பாடலைப் பாடினார்.உடனே அதற்கு மெனக்கட்டு வழக்கம் போல கலைஞர் பதில் சொல்லியுள்ளார். "எதிர்க்கட்சித் தலைவர் தன்னுடைய உரையின் இறுதியில் எம்.ஜி.ஆர் பாடலை இங்கே சொன்னார்கள். அந்தப் பாட்டு அவர்களுக்காகப் பாடியதல்ல. எனக்குத் தெரியும் எம்.ஜி.ஆர். என்னை மனதிலே கொண்டு பாடிய பாடல் அது. ஏனென்றால் என்னுடைய 40 ஆண்டு கால நண்பர் அவர். இன்னும் சொல்லப் போனால், தி.மு.க. உட்கட்சித் தேர்தல் நடைபெற்ற போது தலைவராக நான் தான் வரவேண்டுமென்று எண்ணி அதற்காகப் பாடுபட்டவர். அதற்காக ஆட்களைச் சேர்த்தவர். அந்த நன்றி எனக்கு உண்டு. சாகின்ற வரையிலே உண்டு. அதேபோல இந்தப் பொறுப்புக்கு நான் வர வேண்டுமென்று விரும்பியவர்களில் அவரும் ஒருவர். எனவே எம்.ஜி.ஆர். பாடிய பாடலை நான் இப்படி கருதிக் கொள்கிறேன். அந்தப் பாடலில் தலைவன் இருக்கின்றான் மயங்காதே என்று வரும் வரி என்னைக் குறிப்பிட்டுத் தான் சொல்கிறார். தலைவி இருக்கிறார் மயங்காதே எனச் சொல்லவில்லை" என்று சிரிப்பாக பேசியுள்ளார். கலைஞரின் ஞாபக சக்திக்கு ஒரு சல்யூட்!

இது இப்படி இருக்க அம்மாவோ இன்னிக்கு ஐயா வழியிலேயே அவரின் பதிலுக்கு பதில் சொல்லி இருக்கார். எம்ஜிஆரின் மேற்படி பாடல் பணத் தோட்டம் திரைப்படத்தில் வருகிறது. இந்தப் படம் வெளியான வருடம் 1963. அப்போது தமிழ் நாட்டில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. “ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே” என்று எம்ஜிஆர் கூறியது அண்ணாவை நினைத்துத் தானே தவிர, கருணாநிதியை நினைத்து அல்ல. அந்த சமயத்தில் நான் அரசியலிலேயே இல்லை. அப்போது எனக்கு வயது 15. மாணவியாக பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்தேன். அப்படி இருக்கும் போது ‘தலைவி இருக்கிறார்’ என்று என்னை எப்படி கூற முடியும்? இது எப்படி இருக்கு! இதையெல்லாம் படிச்சுத் தொலைக்கவேண்டியது கடமை உணர்ச்சியோட காசு வாங்கிண்டு ஓட்டுப் போடும் தமிழ்நாட்டு மக்களின் தலையெழுத்து.

தமிழக மக்களின் தலையெழுத்து இப்படி இருக்கு என்றால், இந்தியாவின் தேசிய விளையாட்டை விளையாடும் வீரர்களின் தலையெழுத்தும் சரியாகத்தான் இல்லை. ஒரு பக்கம் ஐ.பி.எல்.சீரியல் பாகம் மூன்றிற்கு பல கோடிகள் செலவு செய்ய ஆயத்தப்படும் நிலையில், சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியில் பதக்கம் வென்ற அணியினருக்கு சம்பள பாக்கி வைத்து ஊக்கத்தொகை வழங்க மறுத்ததால் அணி வீரர்கள் ஸ்டிரைக் செய்து வருகின்றனர். இதனால் வெடித்த பிரச்சினையில் உலகக் கோப்பைக்கு அணியே மொத்தமாக மாற்றுவோம் என்று ஹாக்கி இந்தியா அமைப்பு அதிரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளது. இதே போல ஒரு நிலைமை கிரிக்கெட்க்கு ஏற்பட்டு இருந்தால் இந்நேரம் இந்தியாவே ஸ்தம்பித்து இருக்கும். ஒரு ஆறுதலான விஷயமாக ஸ்ரீ சிமென்ட் நிறுவனம் இந்தப் பிரச்சினையை தேசிய அவமானமாகக் கருதுவதாகவும், இதை முடிவுக்குக் கொண்டுவர நிதி உதவி அளிப்பதாகவும் கூறி உள்ளது.

விளையாட்டுலதான் பிரச்சினை என்று இல்லை. இட்லிவடை மாதிரி ஒளிந்து விளையாடினாலும் சிக்கல்தான். லேட்டஸ்டாக நயன்தாரா காணவில்லை என்பததுதான் திரையுலகப் பரபரப்பு.

தற்போது லேட்டஸ்ட் கண்டுபிடிப்பு சமையல் குறிப்பு புத்தகம் எழுதுவது தான் கதை, கவிதை எழுதுவதை விட ரொம்ப கஷ்டமாம். அதனால் இனிமேல் இட்லிவடை நடத்தும் போட்டியில் பரிசாக ஆண்கள் எழுதிய சமையல் குறிப்பு புத்தகம் பரிசாக தரலாம் என்று இருக்கிறேன். பெண்கள் எழுதிய சமையல் குறிப்பு புத்தகம் படிக்க நன்றாக இருக்கும், செய்து பார்க்க ? மவனே எந்த ஹோட்டலில் பெண் சமைக்கிறார் ? எனக்கு தெரிந்து சமைக்க தெரிந்த ஒரே பெண் பரவை முனியம்மா தான். ( முனியின் அம்மா இல்லை இவர் டிவியில் வருபவர் ).

எல்லோரும் புத்தகக்கண்காட்சியில் நிறைய புத்தகம் வாங்கியிருக்கார்கள் என்று பட்டியல் போடுகிறார்கள். அவர்களுக்கு ஒரு அறிவுரை .


புத்தகங்களை யாருக்கும் இரவல் தராதீர்கள்.
அது உங்களுக்குதிரும்ப வராது.
என்னிடம் உள்ள புத்தகங்கள் யாவும்
என் நண்பர்கள் எனக்கு இரவல் தந்தது தான்! ( சமையல் குறிப்பு புத்தகம் தவிர )


இப்படிக்கு,
இட்லிவடை

34 Comments:

மானஸ்தன் said...

//முனிக்கு இட்லிவடை சொந்தமாக எழுதும் கடிதம் :-)
//

:>

ஜெயக்குமார் said...

பெர்சனல் லெட்டரையெல்லாம் எதுக்கு பொதுவுல போடுறீங்க? முனி கோச்சுகப் போறார்..

நல்லா இருந்தது, முனிக்கு இட்லிவடையின் கடிதம்..

ISR said...

ஏ.ஆர்.ரஹ்மானைக் கொண்டு இசையமைக்கச் செய்து ஆல்பம் வெளியிடப் போவதாக அறிவித்துள்ள தேவஸ்தானத்தைக் கண்டித்து இந்து தர்மத்தில் நம்பிக்கை உள்ளவர் இசையமைப்பதே சிறப்பாக இருக்கும் என்று ஹிந்து முன்னணி மாநிலச் செயலாலர் வெள்ளையப்பன் சொல்லுகிறார்.
// இந்து மதத்தை அழிக்க எவ்வளவோ முயற்சி செய்கிறார்கள், பாவம் முடியவில்லை//
இதில் உள்குத்து இருப்பதாக நினைக்கிறேன்.

maddy73 said...

For "திமுக உருவானது ஏன்? - புத்தக விமர்சனம் ஹரன்பிரசன்னா" post, maddy73 commented as " இட்லிவடையாரே, நீங்களா சொந்தமா எழுதமாட்டீங்களா ? "

//முனிக்கு இட்லிவடை சொந்தமாக எழுதும் கடிதம் :-) //

அது! (that should be the spirit)

//எனக்கு தெரிந்து சமைக்க தெரிந்த ஒரே பெண் பரவை முனியம்மா தான். ( முனியின் அம்மா இல்லை இவர் டிவியில் வருபவர் )//

இதுதான் தெரியுமே! முனிக்கே அவங்க அம்மாவப் பத்தி எழுதுவீங்களா, என்ன?

ம்... ம்... நடத்துங்க நடத்துங்க.

//புத்தகங்களை யாருக்கும் இரவல் தராதீர்கள்.
அது உங்களுக்குதிரும்ப வராது.
என்னிடம் உள்ள புத்தகங்கள் யாவும்
என் நண்பர்கள் எனக்கு இரவல் தந்தது தான்! //

கண்டிப்பா எ.வ கு இரவல் தரவே தராதீங்க..

சாதாரண கிராமத்தான் said...

“ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே” என்று எம்ஜிஆர் கூறியது அண்ணாவை நினைத்துத் தானே தவிர, கருணாநிதியை நினைத்து அல்ல. அந்த சமயத்தில் நான் அரசியலிலேயே இல்லை. அப்போது எனக்கு வயது 15. மாணவியாக பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்தேன். அப்படி இருக்கும் போது ‘தலைவி இருக்கிறார்’ என்று என்னை எப்படி கூற முடியும்?"
ஜெயலலிதாவின் பதிலில் கொஞ்சம் கூட logic இல்லை. அவர் கேள்வியிலும்தான். ஜெயலலிதாவுக்கு தலைவர் எம் ஜி ஆர். அப்படி இருக்க அவர் எப்படி தலைவி இருக்கிறார் என்று பாட முடியுமோ தெரியவில்லை. அங்கே இருப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆனவச்சிரிப்பு, எத்தனை காலம்தான் எமாற்றுவார் இந்த நாட்டிலே மற்றும் பல பாடல்கள். இந்த பாடல்கள இவர் ஆட்சியில் இருக்கும்போதுதான் படப்பட்டதா என்று தெரியாது. பாடல் மற்றும் ஆண்டுகளை யாரவது தெளிவு படுத்துங்களேன். இதை எல்லாம் என்னை பார்த்துதான் பாடினார் என்று வாழும் வள்ளுவர் சொல்வாரா. இந்த பெயரினால் தானோ என்னவோ இவளவு பெரிய விளக்கவுரை சட்டமன்றத்தில் சொல்லிருக்கிறார்.
my blog: http://sollaninaikkiren.blogspot.com/

வலைஞன் said...

//எவ்வளவோ சவால்களை சந்தித்த இந்து மதம் மேதாவி மாதிரி பேசும் கோபிநாத் போன்ற ஆட்களாலும் விஜய் டிவியாலும் ஒன்றும் துவண்டு போகப்போவதில்லை". //

என்ன செய்வது?கையாலாகாத தனத்தை இப்படி டயலாக் பேசித்தான் சமாளிக்கணும்.ஒடம்புல ரத்தம் ஓடினாதானே சூடு சொரணை இருக்கும்!

பிள்ளையாண்டான் said...

இந்து மதத்தைப் பற்றி குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் ஆழமானவை. அர்த்தமுள்ளவை. 5000 ஆண்டுகளுக்கும் பிறகு, இன்னமும் வளர்ந்துக் கொண்டிருப்பதற்க்குக் காரணமே, எல்லா மாற்றங்களையும் தன்னுள்ளே அனுமதிப்பதால் தான். முகலாயர்கள், ஆங்கிலேயர்களாலேயே அழிக்க முடியவில்லை.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
டகிள் பாட்சா said...

இ.வ

மத்த விஷயமெல்லாம் சொல்லிக்கொண்டு போகும்போது வீணாக LA RAM ன் தலையில் த்ட்டி விட்டு போவதில் உமக்கென்ன அவ்வளவு சந்தோஷம்? [edited] இரா.முருகனை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு அந்த ஆட்டம் ஆடினீர்கள். இப்ப அவர் அட்ரஸ்ஸே தெரியவில்லை. அமெரிக்காவின் மேற்கு கோடியில் தேமேன்னு இருந்து ஏதாவது எழுதிக் கொண்டிருக்கும் ராமை வெறுப்பேற்றாவிட்டால்தான் என்ன?

[ edited ]

R.Gopi said...

//"இந்து மதத்தை விஜய் டிவியின் நிகழ்ச்சி அழிக்கும் என்று நீங்கள் நம்பினால் அது உங்களுக்கு இந்து மதத்தை பற்றிய நம்பிக்கையை தான் காண்பிக்கிறது. எவ்வளவோ சவால்களை சந்தித்த இந்து மதம் மேதாவி மாதிரி பேசும் கோபிநாத் போன்ற ஆட்களாலும் விஜய் டிவியாலும் ஒன்றும் துவண்டு போகப்போவதில்லை". இந்து மதம் என்று நெட்டில் கூட பலர் ஜல்லி அடிக்கிறார்கள், அவற்றை எல்லாம் தாங்கிக்கொள்ளும் இந்து மதம் விஜய் டிவியையும் கண்டிப்பாகத் தாங்கிகொள்ளும். பெரியார் சொன்னதால் கோயிலில் கூட்டம் கம்மியாகிவிட்டதா என்ன//

ஒன்றே சொன்னீர்கள்... நன்றே சொன்னீர்கள்... அதையும் இன்றே சொன்னீர்கள்....

இது விஷயமாக நான் எழுதிய இந்த வரிகள் தான் இப்போது நினைவுக்கு வந்தது....

“ஐந்தறிவு கொண்டவைகள் ஆச்சரியமாய் இணைந்திருக்க
ஆறறிவு கொண்ட நாம் எப்போதும் பிரிந்திருக்க
மதமும், ஜாதியும் துரத்தி அடிக்கும் தூரத்தில்
துரத்த முயற்சிப்போம், நாம் இந்த நேரத்தில்”

//நாளைக்கு மறுநாள் கங்கண சூரிய கிரகணம். ஆயிரம் வருஷத்துக்கு ஒரு முறைதான் இது மாதிரி வருமாம். இந்த முறை வைர வளையத்துக்கு பதில் தங்க வளையம் தெரியுமாம். இந்த கிரகணத்தை வெறுங் கண்ணால் பார்க்கக்கூடாது. அவ்வாறு பார்த்தால் கண் பாதிப்பு ஏற்படும் என்பது அறிவியல் உண்மை. பக்குதறிவாளர்கள் கவனிக்க. //

தமிழின தலைவர் மானமிகு வீரமில்லா மணி இப்போதே தன் உடன்பிறப்புகளுக்கு அதே நேரத்தில் ஒரு போஜன விருந்து ஏற்பாடு செய்து விடுவார்...

//புத்தகங்களை யாருக்கும் இரவல் தராதீர்கள்.
அது உங்களுக்குதிரும்ப வராது.
என்னிடம் உள்ள புத்தகங்கள் யாவும்
என் நண்பர்கள் எனக்கு இரவல் தந்தது //

இந்த டீல் எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு..... எனக்கு மட்டும் தாங்க....

Sivakumar said...

இ வ,
இந்து மதம் பற்றிய தங்களுடைய குறிப்பு தவறானது.
ஏனெனில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இந்து மதம்
தான் உலகம் முழுக்க பரவியிருந்தது என்கிறார்கள். சான்றாக
தென்னமேரிக்காவில் பிள்ளையார் மற்றும் சிவனின் லிங்க
வடிவங்களை அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளதாக
சொல்கிறார்கள். மேலும் 5000 ஆண்டுகளுக்கு முன்பு வரை
கிழக்கு மேற்காக சவுதி அரேபியாவில் இருந்து இந்தோனிசியா
வரை மற்றும் வடக்கு தெற்காக காந்தகார் முதல்
ஷ்ரீலங்கா வரை பரவி இருந்த இந்து மதம் இப்போது
இந்தியாவிற்குள் அதுவும் ஹிமாச்சல் பிரதே முதல் தமிழ்ந-
ரடு, ராஜஸ்தான் முதல் மேற்கு வங்கம் வரை சுருங்கி விட்-
டது. நேபாளத்தில் தீவிர மாவோயிஸ்டுகளின் ஆட்சி வந்த
பிறகு சர்ச் மிசனரி மிகவும் தீவிரமாக நடந்து கொண்டிரு-
ப்பதாக தகவல். வடகிழக்கில் மிசோரம் மாநிலம் முழுக்க
முழுக்க கிறிஸ்தவ மயமாகி விட்டது. இப்படியே சென்றால்
இன்னும் சிறிது காலத்திற்குள் - (50 ஆண்டுகள் என்று
வைத்துக் கொள்வோம்) அதற்குள் தமிழ்நாடும் கிறிஸ்தவ மயமாகி விடும் - ஏற்கனவே கன்னியாகுமரி அப்படி ஆகிவிட்டது. இந்நிலையில் மீண்டும் மீண்டும்
இந்து மதத்திற்கு சாவே கிடையாது என்று கூறிக் கொண்டி-
ருந்தால் இது நம் கையாலாகா தனமே ஆகும்.

தயவு செய்து இந்து மதத்திற்காக பாடுபடுபவர்களை விமர்-
ச்சிகாதீர்கள். இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ
மதங்களுக்காக பாடுபடுபவர்களைக் காக்க அரசு உள்ளது.
ஆனால் இந்து மதத்திற்காக பாடுபடுபவர்கள் அவர்களை
அவர்களே காத்துக் கொள்ள வேண்டிய துர்பாக்கிய
நிலையில் உள்ளோம்.

writerxxx பற்றிய செய்தியை ரசித்தேன்.
நிலா நிலா ஓடி வா... தண்ணீரைக் கொண்டு வா...
:)

jaisankar jaganathan said...

//தமிழ்நாட்டில் விஜய் நடித்த வேட்டைக்காரன், நமிதா போன்றவைகளை
3 டி டிவியில் பார்த்தால் மக்களின் நிலமை என்ன ஆகும்//

....??????????????

jaisankar jaganathan said...

//என்ன செய்வது?கையாலாகாத தனத்தை இப்படி டயலாக் பேசித்தான் சமாளிக்கணும்.ஒடம்புல ரத்தம் ஓடினாதானே சூடு சொரணை இருக்கும்//

vanmurai thavaru

சாதாரண கிராமத்தான் said...

தனி மனிதன் சொல்வது எதுவுமே நாட்டில் நடக்காது. நாம் விரும்புவது கிடைக்கவேண்டுமென்றால் ஆட்சியாளர்களால்தான் முடியும். இது எல்லாம் ஓட்டு வங்கி இருந்தால் தான் முடியும். இந்துக்களுக்கு எபோதும் ஓட்டு வங்கி கிடையாது. ஒவொருவரும் ஒவ்வொரு கட்சியை ஆதரிப்பவர்கள். அதனால் யாருமே இந்துக்களின் ஓட்டுகளை குறித்து கவலைப்படுவது இல்லை. மேலும் சாதிய அடுக்குகளும் இந்துக்கள் எல்லாரும் ஒன்று சேராமல் வைதிருக்கிறது. இது எல்லாம் தீரும் வரை இந்துக்களை ஆதரிப்பவர்கள் ஆட்சியில் அமர முடியாது. அதுவரை நாமும் சூடு சொரணை என்று கணினியில் எழுதிக்கொண்டிருக்க வேண்டியதுதான். மேலும் இதனை கருத்துக்கள் சொல்பவர்கள் எல்லாரும் ஓட்டு போடுவது கிடையாது. காசு கொடுப்பதை விமர்சிப்பவர்களில் எத்தனை பேர் ஓட்டு போடுகிறார்கள் என்று பார்க்க வேண்டும். மேலும் மதத்தில் என்ன இருக்கிறது. நாம் அதற்க்கு என்ன செய்தோம்? எல்லாமே பிறப்பினால் வந்தது. இதற்காக இவ்வளவு வுணர்ச்சிவசப்பட்டால் அதன் பிறகு பிறப்பினால் வந்த சாதீயமும் சரிதான் என்று ஆகிவிடும்.
இட்லி சொந்தமான சரக்கு என்றாலும் வேறு மாஸ்டர் போட்டாலும் சரக்கு சுவையாக இருந்தால் சரிதான்.

குடுகுடுப்பை said...

தாலி, ஜாதி இன்னும் எந்த இந்து மதப்பழக்கங்களும் விமர்சிக்கப்படவேண்டும்.
விமர்சிக்கப்படவில்லையென்றால் முன்னேற்றம் இருக்காது.

ரிஷபன் said...

இந்தியா முழுதும் ரோடு வசதி சரிவர இல்லை , இந்தியாவின் பெரும் பகுதிக்கு ஆற்காட்டார் மின்சாரம் தான் கிடைக்குது , குடி தண்ணீரே நிறைய இடத்தில் சரி வர கிடைப்பதில்லை. சரிபாதி சனத்தொகைக்கு அன்றாட வாழ்வே பெரும் சிக்கல் நிறைந்ததாக இருக்கிறது.

இத்தனை இடர் இருந்தாலும் சராசரி மக்கள் தங்களுக்கு கிடைத்ததை வைத்து திருப்தியுடன் வாழ வழிவகுப்பதே நம் மக்களிடம் இருக்கும் குடும்ப அமைப்பு தான். "தாலி" போன்றவற்றை கேலி செய்ய செய்ய இந்த அமைப்பு ஆட்டம் காண்பது உறுதி. ஏனெனில் எறும்பு ஊற கல்லும் தேயும்.

இட்லி!! சொந்த சரக்கு என்பதால் ரொம்ப அருமையா இருக்கு.சென்ற சில கடிதங்களை விட இது சிறப்பா இருக்கு.

பொங்கல் வாழ்த்துக்கள்

செல்லதுரை said...

அரசாங்கம் மற்றும் விளையாட்டுத்துறையுடன் மோதி சோர்ந்து போயிருந்த இந்திய ஹாக்கி வீரர்களுக்கு 5 கோடி நிதியும், அடுத்த இரண்டு வருடங்களுக்கு ஸ்பான்ஸர் போன்ற நல்ல விஷயங்களை செய்த உத்திர பிரதேச முதலமைச்சர் மாயாவதியின் சமீபத்திய அறிக்கை பாராட்டத்தக்கது...

கிரிக்கெட்டை மட்டும் கட்டிக்கொண்டு அழாமல் இது போன்ற விஷயங்களையும் ஊக்குவித்தால் இன்று ஊக்கு விற்கும் அவர்கள் நாளை தேக்கு விற்கும் அளவிற்கு வளருவார்கள் என்று நம்பலாம்...

ஓரளவிற்கு நன்றாக விளையாடியும், மெதுவாக முன்னேறியும் வந்த டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் விளையாட்டு சகாப்தம், மதத்தின் பெயரால் குதறி எடுக்கப்பட்டு (இஸ்லாம் மதத்தில் இருந்து கொண்டு, இது போன்ற குட்டை கவுன் போட்டு கொண்டு டென்னிஸ் ஆடாதே.... அது நொட்டை, இது நொள்ளை இத்யாதி...இத்யாதி) இப்போது இந்தியாவில் மகளிர் டென்னிஸ் பிரிவில் வேறு யாரும் பிரகாசித்து பரிமளிக்கும் நிலையே இல்லை என்றளவில் உள்ளது...

IdlyVadai said...

//என்ன செய்வது?கையாலாகாத தனத்தை இப்படி டயலாக் பேசித்தான் சமாளிக்கணும்.ஒடம்புல ரத்தம் ஓடினாதானே சூடு சொரணை இருக்கும்!//

என்ன செய்வது சில இடத்தில் 30 அடியில் தண்ணீர் கிடைக்கும், சில இடங்களில் 300 அடியில், சில இடங்களில் கிடைக்கவே கிடைக்காது. சிலருக்கு சீக்கிரம் புரியும், சிலருக்கு கொஞ்சம் நாள் கழித்து புரியும், சிலருக்கு புரியவே புரியாது. நான் என்னை சொல்லிக்கொண்டேன்!

வலைஞன் said...

Dear இட்லி வடை,

என்னுடைய பதிவு உங்களையோ அல்லது வேறு எந்த ஒரு தனி நபரையோ குறை கூற எழுதப்பட்டது அல்ல.ஒட்டு மொத்தமாக ஹிந்துக்கள் தங்களுக்கு எதிரான அநீதிகளையும் அவமதிப்புகளையும் எதிர்த்து குரல் கொடுக்காமல் இருக்கிறார்களே என்ற ஆதங்கத்தில் எழுதப்பட்டது .இந்த கூட்டத்தில் நானும் ஒருவன்.

இருப்பினும் அது உங்களை எதிர்த்து எழுதப்பட்டது போல தெரிந்தால் அதற்கு நான் மிகவும் வருந்துகிறேன்.
My apologies, Sir!

மேலும் இதன் மூலம் (சிலர் கூறியுள்ளது போல) எந்த வன்முறையையும் நான் ஆதரிக்கவில்லை.அதே சமயம் இவ்வளவு மெத்தனம் ஹிந்துக்களுக்கு எந்த வகையிலும் நல்லது அல்ல.எல்லா மதங்களிலும் நாத்திகர்கள் உள்ளனர் ஆனால் ஹிந்துக்கள் போல அவர்கள் கேலி செய்வதோ அவர்கள் கடவுளை அவமதிப்பதோ கிடையாது.இதையும் நாம் எண்ணிப்பார்க்கவேண்டும்

என் நிலையை புரிய வைத்துவிட்டேன் என நினைக்கிறேன்.
நன்றி

IdlyVadai said...

//என் நிலையை புரிய வைத்துவிட்டேன் என நினைக்கிறேன்.//

நன்றி. யார் மீதும் கோபம் கிடையாது.

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

'போகிற போக்கில் LA Ram தலையில் எதற்காக ஒரு குட்டு?' என்று டகிள் பாட்சா எனக்கே எனக்காகப் பொங்கியிருப்பதைப் படித்து என் கண்கள் பனித்தன, காது ம்டல் சிவந்தது, பொங்கல் புரையேறியது, ஜென்மம் கடைத்தேறியது.

'அமெரிக்காவின் மேற்குக்கோடியில் தேமேயென்று இருந்து' என்று பாட்சாஜி எழுதியிருப்பதையும் படித்தேன். தேமேயென்றால் என்னங்ணா? அது நல்லதா, பொல்லாததா? கடிக்குமா, கையை நக்குமா?

இட்லி வடை அரசியல்ல இதெல்லாம் சகஜம், வுடுங்க டகிள்ஜி.

அம்புடுதேங்!

vignaani said...

//ஒட்டு மொத்தமாக ஹிந்துக்கள் தங்களுக்கு எதிரான அநீதிகளையும் அவமதிப்புகளையும் எதிர்த்து குரல் கொடுக்காமல் இருக்கிறார்களே என்ற ஆதங்கத்தில் எழுதப்பட்டது .இந்த கூட்டத்தில் நானும் ஒருவன்.//

well said. applicable for many of the i.v.readers

SUBBU said...

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே !!

வால்பையன் said...

என் பின்னூட்டம் அவ்வளவு சூடாவா இருந்துச்சு, ரிலீஸ் ஆகவேயில்ல!

கருத்து சுதந்திரம்னு சொல்றாங்களே, அது எந்த ஊருல விக்கிது!?

Cinema Virumbi said...

>>>>>>புத்தகங்களை யாருக்கும் இரவல் தராதீர்கள்.
அது உங்களுக்குதிரும்ப வராது.
என்னிடம் உள்ள புத்தகங்கள் யாவும்
என் நண்பர்கள் எனக்கு இரவல் தந்தது தான்! ( சமையல் குறிப்பு புத்தகம் தவிர )<<<<<

அன்புள்ள இ.வ.,

வடமொழியில் ஒரு பழமொழி உள்ளது. (சற்றே பெண்ணியத்திற்கு எதிரானது!).

'புஸ்தகம், நாரீ பரஹஸ்தம் கதம் கதம் (Gatham Gatham)'.

பொருள்: புத்தகமோ அல்லது பெண்ணோ, வெளியாட்கள் கையில் போனால் நாசம்தான்!

நன்றி!

சினிமா விரும்பி

Wilting Tree said...

//............"இந்து மதத்தை விஜய் டிவியின் நிகழ்ச்சி அழிக்கும் என்று நீங்கள் நம்பினால் அது உங்களுக்கு இந்து மதத்தை பற்றிய நம்பிக்கையை தான் காண்பிக்கிறது. எவ்வளவோ சவால்களை சந்தித்த இந்து மதம் மேதாவி மாதிரி பேசும் கோபிநாத் போன்ற ஆட்களாலும் விஜய் டிவியாலும் ஒன்றும் துவண்டு போகப்போவதில்லை".......//

இந்து மதத்தைப் பற்றி தவறான தகவல்களை பரப்புவதும், அதுகுறித்த சரியான தகவல்களை பரப்பாமல் இருப்பதன் மூலம் இந்து மதம் அழிந்துவிடாதா?

உலகம் முழுவதும் இருந்த இயற்கை சார்ந்த, தனிமனித சுதந்திரமுடைய மதங்களை எல்லாம் பேகன் மதங்கள் என்றோ, காபிர் மதங்கள் என்றோ, பிற்போக்கானவை என்றோ சொல்லி அழிந்துபோனத்தில், மிஞ்சி இருப்பவை இந்தியாவில் இந்து மதம் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன.

இதைக் காக்க தைரியமாக எழுந்து நின்று உண்மையை சொல்லாமல் ஸெக்யூலரிஸம் பேசி அல்லது இந்து முல்லாத்தனம் பேசி மெதுவாக அழிந்துகொண்டிருக்கிறது இந்து மரபு.

இது புரியாமல் உண்மையாக இருப்பதால், இந்துக்கள் உதவி இல்லாமல் தனியாகவே நின்று இந்து மதம் தன்னைத் தானே காப்பாற்றிக்கொள்ளும் என்பது கடமையிலிருந்து நழுவும் இந்துக்களின் வழக்கமான பதிலே.



//.பெரியார் சொன்னதால் கோயிலில் கூட்டம் கம்மியாகிவிட்டதா என்ன? என்றதற்கு அவர் சிரித்தார்.....//

ஈ. வே. ரா சொன்னதால் கோயிலில் மக்கள் எண்ணிக்கை குறையவில்லை. ஆனால், கோயில்கள் அழிகின்றன. எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் கோயில் சொத்தை மக்கள் சுரண்டுகின்றனர். அநியாயங்களை நியாயப்படுத்த போலியான காரணங்கள் கிடைத்தன.

Wilting Tree said...

//.....தமிழ் செம்மொழி மாநாட்டில் ஏன் ஆன்மீக ஸ்டால் அமைக்க வேண்டும்?...//

தமிழில் உள்ள மரபிலக்கியங்கள் அனைத்திலும் ஆன்மீகம் இருக்கிறது. ஆனால், ஆன்மீகத்திற்கு, தமிழ் மாநாடு மதிப்புத்தரவேண்டும் என்றால் அது இடிக்கிறது. இந்த லட்சணத்தில் இந்துக்கள் எதுவுமே செய்யாமல் இந்து மதம் தானாக தன்னைக் காத்துக்கொண்டுவிடும் என்று குறி சொல்லுகிறார்கள். எங்கே போய் முட்டிக்கொள்ளுவது ?

Anonymous said...

வரிந்து கட்டிக்கொண்டு எழுதுபவர்கள் சற்றே நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள்.

சாதிகளை உருவாக்கி, மனிதருக்குள் வேற்றுமை ஏற்படுத்தி, பார்பனனை உயர்த்தும் வர்ணாசிர தர்மம்...

நிர்வாண சாமியார்கள்...

பெண்களை உயிரோடு எரித்த “சதி”க்கொடுமை...

பேய், பிசாசு, பில்லி, சூன்யம்,ஜோசியம் என மூடப்பழக்க வழக்கங்களின் மாய வலை...

உயிர்ப்பலி, நரபலி, இரத்தக்குளியல், நடு ராத்திரி சுடு காட்டுப்பூசை என காட்டுமிராண்டித்தனங்கள்...

இவை போதாதா “இந்துமதம்” தானாக அழிவதற்க்கு ?

Anonymous said...

சினிமா விரும்பி
அப்படி மாதிரி ஒரு பழமொழி இல்லவே இல்லை
நீங்கள் அந்த பழமொழியை மாற்றிக் கூறுகிறீர்கள்

புஸ்தகஸ்தா தூயா வித்யா பரகஸ்து கதம் தனம்
கார்யகாலே சமாயதே நா தத் வித்யா நா தத் தனம்
- இது தான் சரியான பழமொழி.
-----------------------------------
அனானி
வருணாசிரம தருமத்தின் படி வாழ்ந்தால் பார்ப்பனால் மேலே
உயர முடியாது....

நிர்வாண சாமியார்கள்....
ஈ.வே.ராவையா கூறுகிறீர்கள்

பேய், பிசாசு, ஜோசியம் மற்றும் தாங்கள் குறிப்பிட்டுள்ள
காட்டுமிராண்டித் தனங்கள் எந்த மதத்தில் தான் இல்லை....

Cinema Virumbi said...

அனானி,

அந்த வடமொழிப் பழமொழியின் அர்த்தத்தையும் கொஞ்சம் சொல்லிடுங்களேன்!

சினிமா விரும்பி

Anonymous said...

புஸ்தகஸ்தா தூயா வித்யா பரகஸ்து கதம் தனம்
கார்யகாலே சமாயதே நா தத் வித்யா நா தத் தனம்

ஏட்டிலுள்ள கல்வியும் மற்றவரிடத்தில் உள்ள பணமும் நமக்குத் தேவையான சமயத்தில் பயன் தராது.

மறைபொருள்:
ஏட்டிலுள்ள கல்வியைப் படித்து மனதில் ஏற்றிக் கொள்வதும் நமக்குத் தேவையான அளவு வருமானம் செய்து கொள்வதும் தான் சிறந்தது.

varunan said...

hai muni nanum ezhuthalama

varunan said...

hai i can join

varunam said...

hai