பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, January 10, 2010

சன்டேனா இரண்டு ( 10-1-10) செய்திவிமர்சனம்


இந்த வார செய்திகள்...விளையாட்டு ஸ்பெஷல்.செய்தி # 1

இதுவரை நடந்த சிறந்த விளையாட்டு தொடர்கள் பற்றிய ஒரு கருத்து கணிப்பு...

கடந்த 10 ஆண்டுகளில் (2000 முதல் 2009) சிறந்த விளையாட்டு உணர்வை வெளிப்படுத்திய போட்டிகளுக்கான கருத்துக் கணிப்பை லண்டனை சேர்ந்த "தி டெலிகிராப்' பத்திரிகை நடத்தியுள்ளது.

இந்த கருத்துக் கணிப்பில் விம்பிள்டனுக்கு முதலிடம் கிடைத்துள்ளது.

உலகின் "நம்பர்-1' வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், இரண்டாம் நிலை வீரரான ஸ்பெயினின் ரபெல் நடால் இருவருக்கும் இடையே, கடந்த 2008 ம் ஆண்டு நடந்த விம்பிள்டன் பைனல் போட்டிக்கு, கருத்துக் கணிப்பில் 17 சதவீத ஓட்டுகள் கிடைத்துள்ளது.

கடந்த 2005 ம் ஆண்டு இஸ்தான்புலில் நடந்த சாம்பியன்ஸ் லீக் கால்பந்து பைனல் போட்டி 15 சதவீத ஓட்டுகளை பெற்று, கருத்துக் கணிப்பில் இரண்டாவது இடம் பெற்றுள்ளது.

கடந்த 2004 ம் ஆண்டு நடந்த பிரிமியர் லீக் பைனல் போட்டி 13 சதவீத ஓட்டுகளுடன் மூன்றாவது இடத்தையும், 2003 ம் ஆண்டு நடந்த ரக்பி உலககோப்பை பைனல் போட்டி, 11 சதவீத ஓட்டுகளுடன் நான்காவது இடத்தையும் பெற்றுள்ளன.

இந்த கருத்துக் கணிப்பில் இடம் பெற்ற ஒரே கிரிக்கெட்டாக, 2005 ம் ஆண்டு நடந்த ஆஷஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் இடம் பெற்றுள்ளது. 18 ஆண்டுகளுக்குப் பின் இங்கிலாந்து கிரிக்கெட் அணி,ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆஷஸ் கோப்பையை கைப்பற்றியது.ஐ.பி.எல்., தொடர் (சீரியல்?) - பாகம் 3 :

இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) "டுவென்டி-20' கிரிக்கெட் தொடருக்கான ஏலத்தில் 51 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இங்கிலாந்து அணி வீரர்கள் இப்பட்டியலில் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

ஐ.பி.எல்., அமைப்பின் சார்பில், மூன்றாவது "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 12 ம் தேதி இந்தியாவில் துவங்குகிறது. இத்தொடருக்கான வீரர்கள் ஏலம், வரும் 19 ம் தேதி மும்பையில் நடக்க உள்ளது. மொத்தம் உள்ள 8 அணிகள் ஏலத்தின் மூலம் வீரர்களை ஒப்பந்தம் செய்ய உள்ளன.

இந்த முறை மொத்தம் 97 பேர் ஐ.பி.எல்., ஏலத்துக்கு விண்ணப்பம் செய்திருந்தனர். நியூசிலாந்து வீரர் கிறிஸ் கெய்ன்ஸ், இந்தியன் கிரிக்கெட் லீக் (ஐ.சி.எல்.,) போட்டிகளில் பங்கேற்றது காரணமாக இப்பட்டியலில் இருந்து நீக்கப்பட்டார்.

மீதமுள்ள 96 பேர்களின் பெயர்களை ஐ.பி.எல்., நிர்வாகம் பரிசீலனை செய்தது. வீரர்களின் திறமையை அடிப்படையாகக் கொண்டு 51 பேர் மட்டுமே ஏலத்துக்கு தேர்வாகி உள்ளனர். அதிக பட்சமாக ஆஸ்திரேலியா தரப்பில் 11 வீரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். தென் ஆப்ரிக்கா (9 பேர்), வெஸ்ட் இண்டீஸ் (8 பேர்), இலங்கை (8 பேர்), பாகிஸ்தான் (7 பேர்), நியூசிலாந்து (4 பேர்) வீரர்கள் வழக்கம் போல வாய்ப்பு பெற்றுள்ளனர். வங்கதேசம், கனடா, ஹாலந்து, ஜிம்பாப்வே தரப்பில் தலா ஒரு வீரர் வாய்ப்பு பெற்றுள்ளார்.

இங்கிலாந்து தரப்பில் மான்டி பனேசர், டிராட் உள்ளிட்ட 8 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். ஆனால் ஒரு வீரருக்கு கூட வாய்ப்பு கிடைக்க வில்லை. இங்கிலாந்தில் வரும் ஏப். 9 ம் தேதி உள்நாட்டு கிரிக்கெட் தொடர் நடக்க உள்ளது. இதே சமயத்தில் இந்தியாவில் ஐ.பி.எல்., தொடரும் நடக்கிறது. இதனால் தான் இங்கிலாந்து வீரர்களுக்கு ஏலத்தில் பங்கேற்கும் வாயப்பு கிடைக்கவில்லை எனத் தெரிகிறது. தவிர, இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு விதித்த புதிய நிபந்தனைகளும், வீரர்கள் புறக்கணிப்புக்கு காரணமாக அமைந்துள்ளது.

பாகிஸ்தான் தரப்பில் அப்ரிதி, முகமது ஆமெர்,இம்ரான் நசீர், அப்துல் ரசாக் உள்ளிட்ட 7 வீரர்கள் பட்டியலில் உள்ளனர்.

முதலாவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 6 கோடி ரூபாய்க்கு தோனி ஒப்பந்தம் செய்யப்பட்டார். இத்தொடரில் இவர் எடுத்த ஒவ்வொரு ரன்னுக்கும் சுமார் 1.5 லட்ச ரூபாய் கொடுக்கப்பட்டது. உள்ளூர் ரஞ்சி டிராபியில் விளையாடும் வீரருக்கு, நாள் ஒன்றுக்கு 35 ஆயிரம் ரூபாய் வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ஹாக்கி வீரர்களின் சம்பள பாக்கி: அர்ஜென்டினாவில் சாம்பியன்ஸ் சாலஞ்ச் ஹாக்கி தொடரில், நமது இந்திய அணி வெண்கலப் பதக்கம் பெற்றது.இத்தொடரில் பங்கேற்ற வீரர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் சம்பளம் தர வேண்டுமாம். இதனை வழங்காமல் இழுத்தடித்து வருகின்றனர்.

"டில்லியில் வரும் பிப்., 28 முதல் மார்ச் 13 வரை உலக கோப்பை ஹாக்கி தொடர் நடக்க உள்ளது. இதற்கான பயிற்சி முகாம் தான் புனேயில் நடக்கிறது. சம்பள பாக்கியை கொடுக்கும் வரை இப்பயிற்சி முகாமை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். முன்பு ஒவ்வொரு தொடர் முடிந்த பின் உடனடியாக சம்பளம் தரப்படும். தற்போது இந்த நடைமுறை பின்பற்றப்படுவதில்லை. "ஸ்பான்சர்கள்' பணம் வழங்குகின்றனர். ஆனால், வீரர்களுக்கு தான் எதுவும் கிடைப்பதில்லை,''என்றார் ஹாக்கி கேப்டன் ராஜ்பால்சிங்.

ஹாக்கி - நமது இந்திய நாட்டின் தேசிய விளையாட்டு.செய்தி # 2

முதலாவது படத்தில் இருக்கும் என்.நாகராஜ், சிவகங்கை சூரக்குளத்தை சேர்ந்த தடகள வீரர்.இவரது தந்தை காமாட்சி, ஒரு சலவை தொழிலாளி.

. ஐந்தாவது வயதில் போலியோவால் பாதிக்கப்பட்ட இவர், கால்கள் ஊனமுற்றபோதும் மனம் தளராமல் போட்டிகளில் ஆர்வமுடன் பங்கேற்று வருகிறார். கோவையில் நடந்த மாநில போட்டியில் குண்டு, வட்டு, ஈட்டி எறிதலில் வெள்ளி பதக்கம் பெற்றார். டில்லியில் 2007 ல் நடந்த தேசிய போட்டியில் 4.90 மீட்டர் தூரம் குண்டு எறிந்து தங்கமும், 12.17 மீ., தூரம் வட்டு எறிந்து வெள்ளியும் பெற்றார். அதே ஆண்டு பெங்களூருவில் ஜூனியர் தேசிய போட்டியில் வட்டு எறிதலில் வெண்கலம் வென்றார்.


இதுவரை மூன்று தங்கம், எட்டு வெள்ளி, வெண்கலம் பெற்றுள்ளார். இவர் பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க முடிவு செய்துள்ளார். இதற்காக பிப்., 8 முதல் 13 ம் தேதி வரை துபாயில் நடக்க உள்ள சர்வதேச போட்டிகளில் பங்கேற்க உள்ளார். இதற்கான வீரர்கள் தேர்வு டிசம்பரில், பெங்களூருவில் நடந்தது. இதில் தமிழகம் சார்பில் இவர் உட்பட 18 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

துபாய் செல்ல விமான டிக்கெட், நுழைவு கட்டணம், விசா, விளையாட்டு சாதன செலவுக்கென 58 ஆயிரம் ரூபாய் தேவைப்படும். இந்த தொகையை மிகவும் ஏழ்மையான, சலவை தொழில் குடும்பத்தை சேர்ந்த இவரால் ஏற்பாடு செய்ய இயலாத நிலையில் இருக்கிறார்.
"எனக்கு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பயிற்சியாளர் ரஞ்சித் குமார் பயிற்சி அளிக்கிறார். அவரது பயிற்சியால் தேசிய போட்டியில் பதக்கம் பெற்றேன். சர்வதேச போட்டியில் பங்கேற்று பதக்கம் வெல்வதே லட்சியம். விளையாட்டு ஆர்வலர்கள் நிதி உதவி அளிக்க வேண்டும்" என்றார் என்.நாகராஜ்.

இவருக்கு உதவி செய்ய விரும்புவோர், "98437 53684' ல் தொடர்பு கொள்ளலாம்.(செய்தி ஆதாரம் : தினமலர்).

நமது நாட்டில் வெளிச்சத்துக்கு வராமல், உதவிக்கு காத்து இருக்கும் நாகராஜ்கள் இன்னும் எத்தனையோ?

இரண்டாவது, படத்தில் இருக்கும் பெண்மணியின் பெயர் லட்சுமி. பள்ளியில் உடற்கல்வி ஆசிரியையாக பணியாற்றி,ஓயவு பெற்றவர்.


இவருக்கு வயது 60. இந்த வயதில் இந்து பேப்பரும்,ஈஸி சேரும் ஆக மற்றவர்கள் முடங்கிவிட, இவர் இந்த வயதுக்கு பின் கடுமையாக உழைத்து, தடகள வீராங்கனை ஆக
சாதனை படைத்து இருக்கிறார்.

முதன் முறையாக தஞ்சாவூரில் நடந்த மாநில "மாஸ்டர்ஸ்' தடகள போட்டியில் 55+வயது பிரிவில், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், போல்- வால்ட் பிரிவுகளில் பங்கேற்றார். துவக்கத்திலிருந்தே செல்லுமிடமெல்லாம், வெற்றியே கண்டார்.மாவட்டம்...மாநிலம்...இந்திய அளவில் எல்லாவற்றையும் தாண்டி, சர்வதேச போட்டியிலும் வெற்றியை எட்டிப்பிடித்தார்.

தாய்லாந்து பாங்க்காக்கில் 2004ல் நடந்த ஆசிய தடகள போட்டியில் உயரம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல் போட்டியில் பங்கேற்று பதக்கம் வென்றார். 2006ல் பங்களாதேசில் நடந்த ஆசிய போட்டியில் 300மீ.,தடை ஓட்டம், உயரம் தாண்டுதலில் வெண்கல பதக்கம் வென்றார்.60 வயது பிரிவில் 89 நாடுகள் பங்கேற்ற, பின்லாந்து நாட்டில் நடந்த 18வது சர்வதேச மாஸ்டர்ஸ் தடகள போட்டியில் போல்-வால்ட்(கம்பூன்றி தாண்டுதல்) பிரிவில் வெண்கல பதக்கம் பெற்றார். கோவை மாஸ்டர்ஸ் தடகளத்தில், சர்வதேச அளவில் பதக்கம் பெற்ற முதல் பெண்மணியானார்.

கோயம்புத்தூர் கிழக்கு ரோட்டரி கிளப் சார்பில் "சிறந்த தடகள வீராங்கனை' விருதும், பசும்பொன் தேவர் அறக்கட்டளை சார்பில் "முருகாலயா' விருதும், நவராஜ் செல்லையா அறக்கட்டளை சார்பில் "ஜீவஜோதி' விருதும் பெற்றுள்ளார். அதோடு, இவர் .இப்போது "பி.எச்.டி.,' படித்துக் கொண்டிருக்கிறார்.

லட்சுமி - ஒரு 60 வயது வெண்கல(இரும்பு) மங்கை..

.(நன்றி...இனி அடுத்த வாரம்).

-இன்பா

9 Comments:

சைவகொத்துப்பரோட்டா said...

வாழ்த்துக்கள் திரு.என்.நாகராஜ்.

Anonymous said...

No relation to the news.. but one of the main things that happened last week

தமிழக வேளாண் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்: பி.டி., கத்தரிக்காய் விதைகளை வாங்க வேண்டும் என, அரசு பிரசாரம் செய்யவில்லை. "மான்சாண்டோ' நிறுவன விதைகளை பயன்படுத்தினால், தொடர்ந்து அவர்களிடமே, அவர்கள் சொல்லும் விலைக்கு விதைகளை வாங்க வேண்டிய நிலை ஏற்படும்.


டவுட் தனபாலு: அவங்கள்ட்ட தான் வாங்கணும்... அவங்க சொல்ற விலைக்கு தான் வாங்கணும்னு சொல்றதுல இருந்தே தெரியலையா, இதுல ஏதோ சதி இருக்குன்னு... அப்புறம், "அந்த விதையைப் பயன்படுத்த வேண்டாம்'னு தைரியமா சொல்றதுல என்ன தயக்கம்...?

யதிராஜ சம்பத் குமார் said...

நல்ல பதிவுகள். இன்பாவிற்கு பாராட்டுக்கள்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் முதலான T-20 கிரிக்கெட் போட்டிகள் என்னதான் விருவிருப்பாக இருந்தாலும், ஒருபுறம் டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலத்திற்கு குழி தோண்டிக் கொண்டிருக்கிறது. தவிர, பெயர் குறிப்பிட விரும்பாத சில் ஆஸ்திரேலிய வீரர்கள், தங்கள் நாட்டு அணிக்காக விளையாடுவதைக் காட்டிலும், ஐபில் போட்டிகளில் விளையாட ஆர்வமாக உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். காரணம் இங்கு தரப்படும் பணம். இது கிரிக்கெட்டிற்கு நல்லதல்ல. நாட்டுக்காக என்பது போய் பணத்திற்காக என்று வந்து விட்டால் அது ருசிக்காது.

Anonymous said...

//ஹாக்கி - நமது இந்திய நாட்டின் தேசிய விளையாட்டு//

good comedy...

முகமூடி said...

உலகிலேயே மிகப்பணக்கார கிரிக்கெட் போர்ட் BCCI. ஆனால் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கென்று அவர்கள் செலவிடும் பணம் சொற்பம் தான். பணத்தை என்னதான் செய்கிறார்களோ? ஹாக்கி போன்ற மற்ற விளையாட்டுக்காவது செலவிட்டால் உபயோகமாக இருக்கும். இவ்வளவு பணம் ஒரே இடத்தில் குவிந்தால் கூடிய விரைவில் மேலும் பல ஊழல் புகார்கள் வழிவகை செய்யும்.
**********************************
வீரர் நாகராஜின் மேலும் சில விவரங்களை (Bank account etc) பதிக்க முடியுமா?

சங்கர் said...

நாகரஜ்க்க்கு வாழ்த்துக்கள்

வழமை போல நீங்களும் அசத்திட்டிங்க

Anonymous said...

Our country is getting more and more ridiculous. When we can waive millions of Rs. on import Tax waiving on a gift given to Sachin, we don't have money for even flights for our other sportsmen.

Kudos to Nagaraj and Lakshmi.

ஜெயக்குமார் said...

என்.நாகராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

இதுபோன்ற செய்திகளை நமது மக்களுக்கு அவ்வப்போது சொல்லிக் கொண்டே இருக்கவேண்டும். குறைந்தபட்சம் நல்ல மனம் கொண்டோர் உதவவாவது ஒரு வழிகிடைக்குமே.

மற்றபடி கிரிக்கெட் வாரியம் ஒரு ஊழல் சுரங்கம்..ஒரு நாள் எல்லாக் கன்றாவிகளும் வெளிவரும்... அதுவரை ஜெண்டில்மேன் விளையாட்டாகத்தான் இருக்கும்..

Itsdifferent said...

I think the blogging community has a duty to create a trust and keep collecting funds. Those funds should be used against such help. Timing is must in such incidents, so it will be very difficult to start collecting funds after the news.
Folks in India, whoever can take initiative please start the procedure for the same, I can send whatever funds are needed to start that Organization.