பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, December 13, 2009

சன்டேனா இரண்டு (13-12-09) செய்திவிமர்சனம்

இந்த வார செய்திகள் சினிமா ஸ்பெஷல் ...

செய்தி # 1


இப்படி ஒரு எஸ் எம் எஸ் பார்த்தேன்.

சும்மா பார்க்கில் தூங்குவது போன்ற சின்ன பிரச்சினைகளுக்கு கும்பிபோகம் சொன்ன ஷங்கரே, ஆறு மணி நேரம் 'டிராபிக் ஜாம்' ஏற்படுத்தின உங்களுக்கு கருட புராணத்தில் தண்டனை என்னங்க?
முதல்வன் படத்தில் உள்ள மிகவும் ஹை லைட் காட்சிகள்....ஒரு டிராப்பிக் ஜாம் பற்றி இருக்கும்.

மருத்துவமனை செல்வோர், இன்டர்வ்யூ செல்வோர், திருமணத்துக்கு செல்லும் மணபெண், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் இப்படி பலதரப்பட்டோர் பாதிப்புக்கு உள்ளாகும் இந்த சினிமா காட்சிகளை இய்க்குநர் ஷங்கர் உட்பட சினிமா இயக்குநர்கள், நெரிசல் நிறைந்த இடங்களில், மேம்பாலகளில் தங்கள் படப்பிடிப்பு மூலம் நிஜத்தில் அரங்கெற்றி வருவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

சென்னையில் படப்பிடிப்பு அதிகம் நடக்கும் பொது இடங்களில் கோயம்பேடு முக்கிய இடத்தை பிடித்துள் ளது. இங்குள்ள ஆம்னி பஸ் நிலையம், மார்க்கெட்டை "ரவுண்டடித்து' சினிமா படப்பிடிப்புகள் அதிகளவில் நடக்கின்றன.அத்தகைய நாட்களில் கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். மார்க்கெட்டில் வியாபாரம் பாதிக்கப்படுவதால், வியாபாரிகளும் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகின்றனர். என்கிறது ஒரு செய்தி. .


"மார்க்கெட்டில் வியாபாரம் நடக்கும் பகல் நேரத்தில் படப்பிடிப்புகள் நடத்துவதால் வியாபாரிகள், பொதுமக்களுக்கும் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகிறது. மார்க்கெட் கூலித் தொழிலாளர்கள் மட்டுமின்றி பொது மக்களும் போட்டி போட்டுக்கொண்டு படப்பிடிப்பை வேடிக்கை பார்க்கின்றனர். அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு திருடர்கள் அவர்களிடம் கைவரிசை காட்டி செல்கின்றனர். வெளியாட்கள் படப்பிடிப்பை பார்ப்பதற்காக மார்க்கெட்டினுள் வருவதால் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. அந்த நேரத்தில் டூவீலர்கள் அதிகளவில் திருடுபோகின்றன. சினிமா மட்டுமின்றி "டிவி' சீரியல்களும் இப்போது மார்க்கெட்டில், படம் பிடிக்கப்படுகின்றன. ஒருவர் காய்கறி வாங்குவதுபோல் காட்சியை ஒரு நாள் முழுவதும் படமாக்கி அன்றைய வியாபாரத்தையும் முடக்கிவிடுகின்றனர். கிராபிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு தொழிற்நுட்பங்கள் உள்ளநிலையில் அதையெல்லாம்விட்டுவிட்டு பொது இடத்தில் சினிமா படப்பிடிப்பு நடத்துவது கண்டிக்கதக்கது" என்கிறார் கோயம்பேடு பழ மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் சீனிவாசன்.

சினிமா படப்பிடிப்பு குழுவினர் மூலம் ஏற்பாடு செய்யப் பட்டுள்ள தனியார் செக்யூரிட்டி ஊழியர்கள் அவ்வழியாக வரும் வாகனங்களை வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பி வருகின்றனர். இதனால், வாகன ஓட்டிகள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.மேலும், வாகனங்கள் திரும்பி செல்லும் எதிர்புறச்சாலையும் படப்பிடிப்பு குழுவினரால் தடுப்புகள் வைக்கப்பட்டு அடைக்கப்பட்டுள்ளதால், ஒரே சாலையில் வாகனங்கள் பயணிக்க வேண்டியுள்ளது. அவ்வாறு செல்லும் போது, எதிரில் வரும் வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்படும் அபாயமும் அதிகரித்துள்ளது. நுழைவுவரி செலுத்தி சென்னை பை-பாஸ் சாலையில் பயணித்த வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். திருப்பி அனுப்பப்பட்ட வாகனங்கள், சில கிலோ மீட்டர் தூரம் கடக்க வேண்டிய இடத்தை பல கிலோமீட்டர் தூரத்திற்கு சுற்றி சென்று கடந்து செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது.

கொருக்குப் பேட்டை மீனாம்பாள் நகர், கத்திவாக்கம் சாலையில், சில தினங்களுக்கு முன் "மூலக் கொத்தளம் முருகன்' என்ற சினிமா படப்பிடிப்பு நடந்தது. ஏற்கெனவே அப்பகுதியில் காக்ரின் பேசின் சாலை, கத்திவாக்கம் நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில் மேம்பாலம் அமைக்கப் பட்டு வருகிறது. இதனால் போக்குவரத்துக்கு சரியான வழியின்றி மக்கள் திண்டாடி வருகின்றனர். அப்பகுதியில் படப்பிடிப்பு நடந்ததால் பொதுமக்கள் டூவீலர்களில் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

ஒரு சினிமா படப்பிடிப்பு நடந்த இடம், மாநகராட்சி நடுநிலைப் பள்ளியின் வாசல்தான். சண்டைக் காட்சிகள் பதிவு செய்யப்பட்டன. படப்பிடிப்பை பார்ப்பதற்காக மாணவ, மாணவியர் ஆர்வ மிகுதியில் பள்ளியின் மாடிகளில் நின்று கொண்டு வேடிக்கை பார்த்தனர்.பள்ளியில், இயல்பான பணிகள் பாதிக்கப்பட்டதோடு, மாணவர்களின் படிப்பும் தடைபட்டது. போக்குவரத்து பாதிக்கும் வகையில், பள்ளியின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிக்கும் வகையில் படப்பிடிப்பு நடந்துள்ளது அப்பகுதி மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது

காசு,செல்வாக்கு காரணமாக மாநகாரட்சி இதை எல்லாம் கண்டு கொள்ளவில்லை.

இந்த விவகாரம் பற்றி , துணை முதலவர் ஸ்டாலின் அவர்களுக்கு வழக்கம் போல ஒரு புகார் கடிதம் . அனுப்பினார் நம்ம டிராபிக் ராமசாமி.

வழக்கம் போலவே பதில். ...?????

செய்தி # 2

வேட்டைக்காரன் படத்தில் "புலி வருது " என்னும் பாடல் சிங்கள இசை அமைப்பாளர் உருவாக்கபட்ட மெட்டு என்றும் அவர் அனுமதியோடு பயன்படுத்தபட்டு இருக்கிறது என தெரிகிறது. ( 'புலி' என்ற வார்த்தை ஏனோ?)

நான் படித்த ஒரு செய்தி.....

வேட்டைக்காரன் படத்துக்கு மீண்டும் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த முறை உள்ளூரில் அல்ல… வசூலுக்கு பெரிதும் நம்பியிருக்கும் வெளிநாடுகளிலிருந்து.

காங்கிரஸுடன் ரகசிய உறவு வைத்துக் கொண்டு, ஒப்புக்காக ஈழத் தமிழர்களுக்கு ஆதரவளிப்பதாக நாடகமாடிய விஜய்யின் வேட்டைக்காரனைப் புறக்கணிப்போம் என ஈழத் தமிழர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

மேலும் இலங்கை ராணுவத்துக்கு வன்னிப் போர் காலத்தில் பாடல்கள் உருவாக்கிய ராஜ் வீரரத்னே என்பவருடன் இணைந்து பணியாற்றும் விஜய் ஆண்டனி, இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

தமிழ் உணர்வுக்கு எதிரான ஒரு சிங்களப் பாடலின் மெட்டையும் அப்படியே வேட்டைக்காரனில் பயன்படுத்தியுள்ளார். எனவே இந்தப் படத்தை அனைத்து தமிழர்களும் புறக்கணிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

படம் வெளியாக இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் கிளம்பியுள்ள இந்த எதிர்ப்பு விஜய் தரப்பை அதிர வைத்துள்ளது.

இந்
த எதிர்ப்பு கோஷத்தை தமிழர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகவும், துண்டுப் பிரசுரங்களாகவும் புலம்பெயர்த் தமிழர்கள் அனுப்பி வருகின்றனர்.


டிசம்பர் 12 - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் பிறந்த நாள் என்பதால் அவர் ரசிகர்களுக்கு ஒரு சிறப்பு செய்தி:

மு
ன்பு ஒரு புத்தக வெளியிட்டு விழாவில் ரஜினி அவர்கள் பற்றி இப்படி ஒரு கருத்து தெரிவித்தார் மதன்.

" ரஜினியைப் பற்றி நிறைய சொல்லலாம். அவரை நான்
கு முறை சிறப்பு நேர்காணல் செய்த பெருமை எனக்குண்டு.

தமிழ் சினிமாவில் தியாகராஜ பாகவதர் காலத்துப் பாடல்களை இன்றும் கூட கேட்டு ரசிக்கலாம். அதற்குப் பிறகு எம்ஜிஆர்தான் மிகச் சிறந்த பொழுதுபோக்குப் படங்களைத் தந்தார். இப்போது பார்த்தாலும் அவரது படங்கள் மிகச்சிறந்த பொழுதுபோக்காக அமைந்துள்ளன. அவருக்குப் பிறகு அந்த மேஜிக் கைவரப் பெற்றவர் சூப்பர் ஸ்டார் ரஜினிதான். மிகச் சிறந்த நடிகர் மட்டுமல்ல.75 ஆண்டு கால தமிழ் சினிமா வரலாற்றில் சிறந்த பொழுதுபோக்குப் படங்களைத் தருவதிலும், குழந்தைகளையும் கவரும் தனித் தன்மையிலும் அமரர் எம்ஜிஆருக்குப் பின் சிறந்து விளங்குபவர் ரஜினி மட்டும்தான்" என்றார் பத்திரிக்கையாளர் மற்றும் கார்ட்டூனிஸ்ட் மதன்.

ஜப்பானில் ரஜினிகாந்த் படங்கள் மிகவும் விரும்பி பார்க்கபடுகின்றன. அவர் டான்சிங் மஹாராஜா என்ற பெயரில் அழைக்கபடுகிறார். அவரது படங்கள் தொலைக்காட்சிகளில் திரும்பத் திரும்ப ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.இதற்கு காரணம்.. ஹிரோசி யமாஷிடோ(பதிவின் படத்தில் இருப்பவர்) ரஜினிகாந்தின் படங்களை ஜப்பானில் மொழியாக்கம் செய்து அவரது திரைப்படங்களை ஜப்பானிய ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தவர் பேராசிரியர் ஹிரோசி யமாஷிடோ. இவர் டோஹகு பல்கலைகழகத்தில் மொழியியல் பேராசிரியராக பணியாற்றுகிறார். சென்னை பல்கலைகழகத்தில் திராவிட மொழியியல் பற்றி தமிழில் ஆய்வு செய்த மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. (தகவல் : எஸ். ராமகிருஷ்ணன் ).


(நன்றி.....இனி அடுத்த வாரம் )

-இன்பா


11 Comments:

படுக்காளி said...

சண்டேனா இரண்டு
இன்பா நம்ம பிரெண்டு
இட்லிவடைன்னா டிரெண்டு

நச்சுன்னு செய்திகள்.

என்னைப் போல் பாமரனுக்கு சினிமாதேன்... பிரதானம். என்றாலும் சினிமா செய்தி வாயிலாக சமூகத்தை பார்த்ததுக்கு நம்ம இட்லிவடைக்கு கருட புராணம் படி என்ன தண்டனை பாராட்டு.... ?????

vedanarayanan said...

௧. Traffic ராமஸ்வாமி பற்றி படிக்கும் போதே ஒரு பெருமிதம் தான். நல்ல வைர நெஞ்சம் கொண்டவர்.

௨. வேட்டைக்காரன்... ஐயோ விட்டுவிடுங்கள் சார் அந்த மாதிரி நியூஸ்களை போட்டு உங்களுக்கு (popular நியூஸ் சொல்லி) பெயர் எடுக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை. And I sincerely feel the movie deserves better reception. Lot of work goes behind any movie .

௩. ரஜினி.......a man without "தி நியூஸ்" , and the news is that he is entering politics. I feel now is the right time for taking political "அவதார்".

அஞ்சா நஞ்சன் said...

சினிமாவில் டைரக்டோர்களோ நடிகர்களோ சொல்வதை எல்லாம் சீரியஸ் ஆக எடுத்துக் கொள்ளாதீர்கள். அதெல்லாம் collection-ஐ மனதில் வைத்து சொல்லபடுபவை.

மர தமிழன் said...

சாரி நான் இன்னிக்கு லீவு...

Anonymous said...

News 2:

Swiss Tamils have decided not to screen this movie anywhere in Swiss. Usually we get to see all major Tamil movies in atleast 10 cinemas across Swiss.

rajeepan said...

நல்ல பதிவு இதையும் படிச்சு பாருங்கள்..(http://rajeepan.blogspot.com/2009/12/blog-post_13.html)

மணிகண்டன் said...

சண்டேனா ரெண்டு ஆன்மீகத்த விட்டு வெளியில வந்ததுக்கு வாழ்த்துக்கள். பதிவு நல்லா இருக்குங்க. எங்க வூருல வேட்டைக்காரன் வெளியிடறது ஈழத்தமிழர் தான், இந்த செய்தி யாராவது சும்மா கிளப்பிவிட்டதா இருக்கும்ன்னு நினைக்கறேன்.

ஜெயக்குமார் said...

ஹல்லோ..சங்கரு அண்ணன் சொன்னது நமக்கு.. அவருக்கல்ல..

சட்டம் தன் கடமையைச் செய்யும்னு நம்மை ஆள்பவர்கள் சொல்வதில்லையா அதுமாதிரி ஊருக்கு உபதேசம் செய்துவிட்டு தனது புக்ழை வைத்து அதிகாரம் செய்திருக்கிறார்.. கருடபிராணம் அவருக்கு த்ண்டனை வழங்குமென நம்புவோம்..

ஆனால் ரஜினிக்குத் தெரியாமலா இப்படி பொதுமக்களை கொடுமைப்படுத்தி இருப்பார்கள்..

-------

பட்ட கால்லையே படும்கிறது நம்ம விஜய்க்கு நல்ல பொருத்தமான பழமொழி..

சண்டேனா ரெண்டு நன்று.

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

லஞ்சம் வாங்கறதை எதிர்க்கற படம்தான், இந்தியன். அந்தப் படத்தை எடுக்கும்போது, கொடுக்க வேண்டியதைக் கொடுக்காமலா ஷூட்டிங் நடந்திருக்கும்? சினிமா வேற, நடைமுறை வேற, புரிஞ்சுக்கங்க, சார்!

seetha said...

கடந்த வெள்ளிக்கிழமை சென்னையில் மாட்டிகொண்டேன்...5 மணிக்குமேல் கோட்டூர்புரம் அருகே முதல்வர் பாலம் திறப்பு விழா........3 மணினேரம் அண்ணாசாலையில் மாட்டியதுதான் மிச்சம். நண்பர்கள் யாரையும் பார்க்க முடியவில்லஇ. விமானத்தையாவது சரியான நேரத்தில் பிடித்தேனே என்று சந்த்தோஷம் அவ்வளவுதான்.நானாவது பரவாயில்லை, சாயஙாலம் ஆபீஸ் முடித்து வீடு போக காத்திருந்தவர்களையெல்லாம் பார்க்க பாவமாக இருந்தது.

Murali said...

On MGR being timeless entertainment; i watch pallandu vazhga on TV recent. Couldnt sit through it. In all respects including songs it was tacky. i found it difficult to sit through.

As we all know, nostaligia lies. Madan suffers from remembering selective history of MGR.