பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, November 06, 2009

(Y/R)eddy யா ?

கர்நாடக முதல்-மந்திரி பதவியில் இருந்து எடியூரப்பாவை நீக்க வேண்டும் என்று அவரது மந்திரி சபையில் இடம் பெற்றுள்ள ரெட்டி

சகோதரர்களான ஜனார்த்தன ரெட்டி, கருணாகர ரெட்டி மற்றும் ஸ்ரீராமுலு ஆகியோர் வற்புறுத்தி வருகிறார்கள். வழக்கம் போல் டெல்லி பிஜேபி தலமை ஒன்றும் செய்ய முடியாமல் சப்பாதி மாவு பிசைந்துக்கொண்டு இருக்கிறார்கள்.தற்போது கர்நாடகத்தில் பா.ஜனதா எம்.எல்.ஏக்கள் எல்லாம் டெல்லி, ஹைதராபாத், கோவா என்று ஊர் சுற்றிக்கொண்டு

இருக்கிறார்கள். இதில் ரெட்டி சகோதரர்களுக்கு ஆதரவான எம்.எல்.ஏ.,க்கள் 52 பேர் ராஜினாமா கடிதங்களை அளித்திருப்பதாக

தெரிகிறது. கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் முதன்மை செயலாளர் பாலிமர் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அடுத்து பெண்

மந்திரி ஷோபாவை ராஜினாமா செய்வார்.

என்ன நடக்கலாம் ?

ஆப்ஷன் : 1

ரெட்டி தரப்பிலுள்ள 40 சட்டசபை உறுப்பினர்களும் ராஜினாமா செய்து, அதனை சபாநாயகர் ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில், சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 184 ஆகக் குறையும். இந்நிலையில் கவர்னர் மற்ற கட்சித் தலைவர்களை ஆட்சியமைக்க உரிமை கோருவதற்கு அனுமதிக்கலாம். அதற்கு 93 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும். அந்நிலையில், எடியூரப்பா வசம் 76 உறுப்பினர்களும் (சபாநாயகர் தவிர்த்து), காங்கிரஸ் வசம் 74 உறுப்பினர்களும் இருப்பர். அவ்வாறான ஒரு சூழ்நிலையில் 27 உறுப்பினர்களைக் கொண்ட மதச்சார்பற்ற ஜனதா தளம் முக்கியத்துவம் பெறும். அதன் ஆதரவு பெறும் கட்சியை கவர்னர் ஆட்சியமைக்க அழைக்கலாம்.ஆப்ஷன்:2

40 உறுப்பினர்களின் ராஜினாமாவை கவர்னர் ஏற்காத நிலையில், கவர்னர் ஆட்சியைக் கலைத்து, குடியரசுத் தலைவர் ஆட்சியை பிரகடனப் படுத்தலாம், அல்லது சபையில் தனது பலத்தை நிரூபிக்குமாறு முதல்வரைக் கோரலாம். சபாநாயகர் 40 உறுப்பினர்களின் ராஜினாமாவை ஏற்காத நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பில் அவர்களும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். கட்சிக் கட்டுப்பாட்டை மீறி அரசுக்கு எதிராக வாக்களிக்கும் நிலையில் அரசு கவிழும்.

இந்நிலையை எதிர்பார்த்து, முதல்வர் மற்ற கட்சிகளிடமிருந்து ஆதரவு திரட்டி வாக்கெடுப்பில் வெற்றி பெறும் பட்சத்தில் அரசிற்கு ஆபத்தில்லை.

ஆப்ஷன்: 3

யாரும் ராஜிநாமா செய்யாமல், அதிகார மையத்தை எதிர்த்து கலகத்தைத் தொடர்ந்தாலும், அரசாங்கம் தொடரும். இந்நிலையில் கவர்னர் தலையிட்டு, முதல்வரை சபையில் தனது கட்சியின் பலத்தை நிரூபிக்கக் கோரலாம் அல்லது அரசியலமைப்புச் சட்டத்திற்கு குந்தகம் விளைவிக்குமானதொரு நிலை தோன்றினாலும் கவர்னர் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தலாம்.

ஆப்ஷன்:4

(ஆளுங்கட்சியின்) உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் ஒரே பக்கம் இருப்பின், அவர்கள் தாங்கள் அதிகாரபூர்வமான பாஜக வாக ஆட்சியமைக்க உரிமை கோரலாம். மீதமிருக்கும் மூன்றில் ஒருபங்கு உறுப்பினர்கள் வேறு விதமாக (கட்சியாகவோ அல்லது Rebels ஆகவோ) கருதப்படுவர். அல்லது அந்த மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் வேறு ஏதேனும் ஒரு கட்சியுடன் இணைந்து ஆட்சியமைக்க உரிமை கோரலாம்(அதிகாரபூர்வமான கட்சியாக). அல்லது அவர்கள் மற்ற கட்சிகள் ஆட்சியமைக்க வெளியிலிருந்து ஆதரவளிக்கலாம். மீதமுள்ள ஒரு பங்கு உறுப்பினர்களும் வேறு கட்சி ஆட்சியமைக்க ஆதரவளிக்கலாம்.


ரெட்டி ப்ரதர்ஸ் ஏதோ முறைகேடு செய்ததை எடியூரப்பா கண்டிச்சிருக்கார்...ரெட்டிக்கு ஆதரவா இருந்த அரசாங்க அதிகாரிகள ட்ரான்ஸ்பர் பண்ணிருக்கார் என்றும் சொல்லுகிறார்கள். ஃபிராடு செய்ய அலவ் செய்யவில்லை என்றால் எப்படி அரசியல் செய்ய முடியும் என்று ரெட்டி ப்ரதர்ஸ் கொடி பிடிக்கறாங்க என்று நினைக்கிறேன்.

மக்களோடு சேர்ந்து, தேவகவுடா, காங்கிரஸ் இதை எல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறது. அடுத்த எலக்ஷனில் நிச்சயம் வர முடியாது என்று நினைக்கிறேன்.


ரெட்டியோ, எடியூரப்பாவோ யார் ஜெயித்தாலும் தோற்க்க போவது பிஜேபி தான்.


பிகு: கர்நாடகாவிற்கு பிறகு குஜராத்

கேள்வி: குஜராத் கவர்னராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அர்ஜுன் சிங்கை நியமிப்பதால், மோடியின் அரசுக்குத் தொல்லைகள் வர வாய்ப்புள்ளதா?

ப : வாய்ப்பு உண்டு (அதாவது அர்ஜுன் சிங் கவர்னர் ஆகிவிட்டால்). அர்ஜுன் சிங், வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் செயல்படக் கூடிய அரசியல்வாதி. ஆகையால், மோடியை ஹிம்சை செய்ய அவர் முனையக் கூடும். மோடி, அர்ஜுன் சிங் வைக்கக் கூடிய கண்ணி வெடிகளை சாமர்த்தியமாக அப்புறப்படுத்த வேண்டும். அவசரத்திலும், கோபத்திலும் எதையும் பேசிவிடக் கூடாது.
( துக்ளக் கேள்வி பதில் )

( படம் உதவி: தி.ஹிந்து, துக்ளக் )

9 Comments:

Anonymous said...

ஆப்ஷன் 5:

(மக்கள் விரும்புவது)

- ரெட்டி பிரதர்ஸ் அமைச்சர் பதவிகளை பிடுங்குவது

- காபினெட் கூட்டதைக் கூட்டுவது - சட்டசபையைக் கலைக்கும் தீர்மானத்தை நிறைவேற்றுவது (அவர்கள் அமைச்சரவையில் இருந்தால் இந்த காபினெட் தீர்மானம் நிறைவேற தடையாக இருக்கும்)

- தேர்தலை எதிர் கொள்வது

- ரெட்டி பிரதர்ஸ் மற்றும் ஆதரவாளர்களுக்கு சீட் கொடுக்காமல் கட்சியை விட்டு வெளியேற்றுவது

- எந்த கட்சியும் ரெட்டி பிரதர்ஸை கட்சியில் சேர்க்காமல் இருப்பது

- மீண்டும் தேர்தல்


இந்த ரெட்டி பிரதர்ஸை இப்படி ஓரங்கட்டாவிட்டால் எல்லா மாநிலங்களிலும் இப்படிப்பட்ட பணப்பெட்டி பிசினசுமேன்கள் கொட்டம் தான் நடைபெறும்

ஒபலாபுரம் மைன்ஸ் என கூகிள் மேப் இல்லை விக்கிமேபியாவில் தேடுங்கள். ரெட்டிகளின் ஏரியா தெரியவரும்.

M Arunachalam said...

ரெட்டி சகோதரர்களின் துணையுடன் பணத்தை கொட்டி மற்ற கட்சிகளின் எம். எல். ஏ. க்களை வாங்கி தன் சட்டசபை பலத்தை பெரும்பான்மையாக்கி கொண்டதன் பலனை இப்போது பா. ஜ. க. ஆட்சி கர்நாடகத்தில் அனுபவித்துக்கொண்டு இருக்கிறது.

யதிராஜ சம்பத் குமார் said...

அனானி::


Exactly....இதேதான் எனது கருத்தும்!!


கர்நாடகத்தில் எப்பாடுபட்டும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டுமென்ற எண்ணத்தில், பாஜக தலைமை, ரெட்டி சகோதரர்களின் மிரட்டல்களுக்கு பணிந்து போனால், எதிர்கால மிரட்டல்களுக்கும்/முறைகேடுகளுக்கும் இது ஒரு உதாரணமாகவும், வழி ஏற்படுத்திக் கொடுத்ததாகவும் ஆகிவிடும்.


பதிவர் குறிப்பிட்டுள்ளது போன்று, ரெட்டி சகோதரர்கள் கர்நாடகாவில் மிகப்பெரும் தொழிலதிபர்கள். இவர்கள் செய்த முறைகேடுகளைத் தட்டிக் கேட்டமையாலும், அதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகளை மாற்றியதற்காகவும் எடியூரப்பாவை மாற்ற வேண்டுமென்று ரெட்டிக்கள் கொடி பிடிக்கின்றனர்.


இதில் எடியூரப்பாவை மாற்ற முடியாது என்பதில் ஒரே முடிவாக இருக்கின்ற பாஜக தலைமை பாரட்டத்தக்கது. அநேகமாக ரெட்டி சகோதரர்களையும், அவர்கள் சார்ந்திருக்கிற உறுப்பினர்களையும் காங்கிரஸ் ஒரு விலை பேசியிருக்கும். ஊழல்வாதிகள் காங்கிரஸாரோடு ஒத்துப் போவது ஒன்றும் புதிதில்லை.


எனவே அரசைக் கலைத்து விட்டு புதிதாக தேர்தல் நடத்துவது பாஜக விற்கு மிகுந்த நன்மை பயக்கும். ஆனால் மத்திய காங்கிரஸ் தலைமையும் அதன் கைப்பாவையுமான கவர்னர் அதற்கு முனைய மாட்டார். கர்நாடகாவில் ஏற்பட்டிருக்கின்ற இந்நிலை பாஜக விற்கு சாதகமாகவே முடியக்கூடும் என்பது அவர்களுக்கு தெரிந்திருக்கும். தவிர, முதன்முறையாக கர்நாடகத்தில் ஆட்சியை விட்ட காங்கிரஸ் இந்த இக்கட்டான நிலையில் கவர்னரின் உதவியுடன் ஆட்சியைப் பிடிக்கவே முயலும்.


தேர்தல் ஒன்றே நிலையான ஆட்சிக்கு வழி!! மதச்சார்பற்ற ஜனதா தளத்தை நம்பி எக்கட்சி பலப் பரீட்சையில் இறங்கினாலும், அடுத்து அமையப் போகும் அந்த ஆட்சி, நித்ய கண்டம் பூர்ணாயிசாகவே இருக்கும்.

யதிராஜ சம்பத் குமார் said...

நான்கு ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருந்தாலும், நடக்கப் போவது என்னவோ முதல் ஆப்ஷன் தான்.


40 உறுப்பினர்களும் ராஜிநாமா செய்தால் கவர்னர் உடனடியாக ஏற்றுக் கொள்வார். மதச்சார்பற்ற ஜனதா கட்சியுடன் ஒரு பேரத்தை நடத்தி காங்கிரஸ் அநேகமாக ஆட்சியமைக்க உரிமை கோரும்.

kggouthaman said...

வினாச காலே விபரீத புத்தி.

Anonymous said...

Congress will get power by hook or crook. BJP seems to be the ONLY honest party we have in India today.

Anonymous said...

Enna kodumai sir ithu...

Anonymous said...

பாஜக ரெட்டி பிரதர்சை பயன்படுத்தி 8 பேரை விலைக்கு வாங்கினால் ரெட்டி பிரதர்ஸ் 40 பேரை விலைக்கு வாங்கி பாஜக அரசை ஆட்டம் காணவைப்பது சரியான போட்டி.
பாஜக காங்கிரசை விடவே சீரழிந்து விட்டது.திமுகவே பரவாயில்லை என்று சொல்லும்படி இருக்கிறது.
உட்கட்சிப் பூசலால் பாஜக வலுவிழந்துவிட்டது.பாஜக பிழைக்க தமிழ் இந்து சார்பாக யாகம் செய்யச்சொல்லுங்கள் :).

Anonymous said...

BJP is the only last hope left for India.