பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, November 09, 2009

தமிழகத்தில் அடுத்த காங்கிரஸ் கோஷ்டி ரெடி!

அதிமுகாவில் இருந்த திருநாவுக்கரசு ஜெயுடன் ஏற்பட்ட மோதலில் ( ஜெயுடன் நட்பாக இருந்தால் தான் ஆச்சரியம் ) பின் திருநாவுக்கரசராக பா.ஜ.கவில் இருந்தார். பா.ஜ.காவில் உட்கட்சி சண்டையில் முழுகாமல் ஒதுங்கியே வாழ்ந்தார்.

வாஜ்பாய்க்கு பின் இவர் டெல்லி அரசியலிலும் அதிகம் ஈடுபடவில்லை. பா.ஜ.க இவரை சரியாக உபயோகப்படுத்தவில்லை என்பது எண்ணம்.

இன்று திருநாவுக்கரசர் அந்தக் கட்சிக்கு முழுக்குப் போட்டு விட்டு காங்கிரசில் இணைந்தார்.

டெல்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி. தங்கபாலு, மத்திய அமைச்சர் குலாம்நபி ஆசாத் ஆகியோர் முன்னிலையில் திருநாவுக்கரசர் காங்கிரசில் சேர்ந்தார். இந்த கூட்டதில் வாசன் ஆதரவாளர்கள் மிஸ்ஸிங்.

தமிழகத்தில் அடுத்த காங்கிரஸ் கோஷ்டி ரெடி!. அடுத்த முறை ராகுல் காந்தி தமிழ்நாட்டுக்கு வந்தால் இவர் கையால் ஒரு மாலை/துண்டு நிச்சயம் உண்டு காங்கிரஸில் வேறு உருப்படியான வேலை இருப்பதாக எனக்கு தெரியவில்லை. அந்த பாக்கியம் கிடைக்கவில்லை என்றால் இருக்கவே இருக்கு கோபாலபுரம்.

படம்: பழைய படம், இதில் இன்னும் பா.ஜ.காவில் இருப்பவர் பாவம் இல.கணேசன் மட்டும் தான்.

18 Comments:

மானஸ்தன் said...

///
படம்: பழைய படம், இதில் இன்னும் பா.ஜ.காவில் இருப்பவர் பாவம் இல.கணேசன் மட்டும் தான்.
///:-)

மானஸ்தன் said...

கட்சி மாறியாச்சு. மீண்டும் பெயர் மாறுமோ?

Mohan Kumar said...

அது என்ன பாவம்.. இல கணேசன் மட்டும் தான்??

திருநாவுக்கரசர் ஒரு ரவுண்டு வர்றார். நீங்க சொன்னது போல், இங்கு ஒன்னும் நடக்காட்டி அறிவாலயம் போய்டுவார்.

மோகன் குமார்
http://veeduthirumbal.blogspot.com/

அமுதப்ரியன் said...

மும்பையைப் பற்றி நீயுஸ் ஒண்ணும் இல்லையா?

அமுதப்ரியன்

சீனு said...

//தமிழகத்தில் அடுத்த காங்கிரஸ் கோஷ்டி ரெடி!.//

:))

Muthu said...

இதுலேயும் முஸ்லிம்களோட கைவேலை ஏதாவது இருக்குமோன்னு ஒரு கூட்டம் யோசிச்சுகிட்டு இருக்கும்!! (மர தமிழன், வலைஞன், யதிராஜ சம்பத் குமார்- இவர்களை சொல்லவில்லை!!)

kggouthaman said...
This comment has been removed by a blog administrator.
Dubai Nara said...

இல.கனேசன் போன்றவர்கள் தான் திருநாவுக்கரசர் பெட்டிய கட்டுவதற்கே காரணமாக இருக்கலாம்.

Kameswara Rao said...

IV,

Pazhanila Panchamritham
Tiruppathila laddu
Tirunelvelila Halva
Kadalla Uppu

Congress la goshti illanna thaan
athisayam

Kamesh

Anonymous said...

தங்கபாலு, ஈ வி கே எஸ், போல இவர் மண்ணைக் கவ்வுவார். இவர் என்ன பெரிய லீடரா: இத்தைப் போய் போட்டு இருக்கீஙக!
ஒரு ரகசியம்: இவ்ர் எப்படி மந்திரி ஆனார் தெரியுமா? அத்வானி கிட்டே
“காஞ்சி” செய்த சிபாரிசினால் தான்!

seetha said...

BJP has had its sell by date value.It is time to move on ....move to real issues than keep beating imagined enemies all the time.BJP has managed to divide the country more than ever before.what else is their achievement.By the way i am a practising hindu who believes the word hindu can mean multitude of things.Not necessarily a saffron clad rabid violent person.

யதிராஜ சம்பத் குமார் said...

இந்த மடமில்லையென்றால் சந்தை மடம். கட்சி மாறுவது அரசியல்வாதிகளுக்குள் சகஜமே!! ஆனால் காங்கிரஸின் பெரு நோயான மதச்சார்பின்மை இவரையும் பீடிக்காமல் இருக்க வேண்டுமென்பதுதான் நம் கவலையெல்லாம்.


இல.கணேசன் போன்ற பழம் பஞ்சாங்கங்கள் RSS அமைப்பின் ஊழியர்களாக இருந்து பின்பு கட்சிப் பணிக்கு அனுப்பப்பட்டவர்கள். அதனால் அவர்கள் அவ்வளவு எளிதில் கட்சி மாறி விட மாட்டார்கள்.

மர தமிழன் said...

Muthu said...
//இதுலேயும் முஸ்லிம்களோட கைவேலை ஏதாவது இருக்குமோன்னு ஒரு கூட்டம் யோசிச்சுகிட்டு இருக்கும்!! (மர தமிழன், வலைஞன், யதிராஜ சம்பத் குமார்- இவர்களை சொல்லவில்லை!!)//

அன்பு நண்பர் முத்து தமிழக அரசியலில் பார்பன சதி என்று சொல்லி அவர்கள் யாருக்கெல்லாம் பூணூல் மாட்டுகிறார்கள் என்றுதான் பார்ப்பேனே ஒழிய நீங்கள் சொல்வதுபோல சிந்திக்கும் திறமை எதுவும் எனக்கு இல்லை. (அப்போ முஸ்லிம்களின் கட்சிதான் காங்கிரஸ் னு சொல்லவரீங்களா? நீங்க கருப்பா பயங்கரம்மா யோசிக்கிறீங்க போல!!) நீங்கள் என்னை சொல்லாவிட்டாலும் என்பெயர் காதில் கேட்டதால் சொல்லவேண்டியதாயிற்று, மற்றபடிக்கு பின்னூட்டமிடும் அளவுக்கு இதை ஒரு பெரிய மேட்டராகவே நான் பார்க்கவில்லை.

R.Gopi said...

இந்த மடம்....சந்தை மடம்....

எதுவும் இல்லையென்றால் ரம்பா போல் நேரா "கோபாலபுரம்"... அந்த கதவுகள் எல்லோருக்கும், எப்போதும் திறந்திருக்கும்....

"தல" இப்படி ஃபீல் பண்ணினாலும் பன்ணுவாரு...எல்லாருக்கும் இதயத்துல இடம் கொடுத்து...கொடுத்து, இதயம் நிர‌ம்பி வழிகிறது... இனி வரும் அனைவருக்கும் இடத்தை கொஞ்சம் கீழே இறக்கி மண்ணீரல், கல்லீரல்னு கொடுக்க வேண்டியதுதான்...

Subbu said...

// Muthu said...
இதுலேயும் முஸ்லிம்களோட கைவேலை ஏதாவது இருக்குமோன்னு ஒரு கூட்டம் யோசிச்சுகிட்டு இருக்கும்!! (மர தமிழன், வலைஞன், யதிராஜ சம்பத் குமார்-
//
அட என்னடா இது, தென்ன மரத்துல தேள் கொட்டினா பனமரத்துல நெறி கட்டுது ??

Guru said...

nakeeran Seithi
////காங்கிரசில் இணைந்துள்ள திருநாவுக்கரருக்கு வாழ்த்துக்கள்: பாஜக

காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ள அவருக்கு அரசியலில் சிறப்பான எதிர்காலம் அமைய எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தமிழக பாஜக துணைத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியில் தேசிய செயலாளராக இருந்த திருநாவுக்கரசர், டெல்லில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் நேற்று சந்தித்து, காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக துணைத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன்,கடந்த 7 ஆண்டுகளாக திருநாவுக்கரசர் எங்களுடன் பணியாற்றினார். கட்சியில் அதிகபட்சமான மரியாதை அவருக்கு அளிக்கப்பட்டது. கட்சியில் இணைந்த உடன் அவருக்கு அகில இந்திய செயற்குழு உறுப்பினர் பொறுப்பு அளிக்கப்பட்டது. 30 ஆண்டுகளாக கட்சிக்காக உழைக்கும் எங்களுக்குக் கூட அந்த வாய்ப்பு கிடைத்ததில்லை.

கட்சியில் இணைந்த சில மாதங்களில் அவர் மத்திய அமைச்சராக்கப்பட்டார். 2004 தேர்தலில் சில சூழ்நிலைகளால் அவர் தேர்தலில் போட்டியிட இயலாமல் போனது. அதனால் அவர் மத்தியப் பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர் ஆக்கப்பட்டார். அதனை நாங்கள் அனைவரும் மனதார வரவேற்றோம்.

அதன் பிறகு அவர் பாஜக அகில இந்தியச் செயலாளராகவும் நியமனம் செய்யப்பட்டார். தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது மிகவும் சகஜமானது. வெற்றிமேல் வெற்றிகளை குவித்து வந்த காங்கிரஸ், திமுக, அதிமுக போன்ற கட்சிகள்கூட மிகப்பெரிய சரிவுகளை சந்தித்துள்ளன.

தோல்விக்காக கட்சி மாறுவது முறையான செயல்தானா? என்பதை அவர்தான் தீர்மானிக்க வேண்டும். திருநாவுக்கரசர் காங்கிரஸில் இணைந்துள்ளதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ள அவருக்கு அரசியலில் சிறப்பான எதிர்காலம் அமைய எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

2002 ல் அவருடன் பாஜகவில் இணைந்தவர்கள் எங்களுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர். தொடர்ந்து அவர்கள் எங்களுடன் பணியாற்றுவார்கள் என்று நம்புகிறேன் என்றார்./////

இது தான் அரசியல் நாகரீகம் ! இதை நம் கழகங்களில் இன்றைய தேதியில் இதை எல்லாம் எதிர்பார்க்க கூடாது.

Muthu said...

//அப்போ முஸ்லிம்களின் கட்சிதான் காங்கிரஸ் னு சொல்லவரீங்களா?//

மர. தமிழன்,
நான் வேற யோசிச்சேன்!! ஆனா உங்க அளவுக்கு லீவ் போட்டுட்டு யோசிக்கல!! :-))

Erode Nagaraj... said...

பொன்.இராதாகிருஷ்ணன் அழகாகச் சொல்லியுள்ளார்...

கட்சிகள் எல்லாமே, இனிமேல் trial pack அறிமுகம் செய்யலாம்.. எங்கள் கட்சியில் இரண்டு மாதங்கள் இருந்து பாருங்களேன் என்று. "வாங்க பழகலாம்" என்று சாலமன் பாப்பையாவை விட்டு அதற்கான விண்ணப்பப் படிவம் தயாரிக்கச் சொல்லலாம்.

BTW , trial என்று type செய்தால் டரியல் என்று கூகிளில் வருவது பொருத்தமே!