பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, November 10, 2009

மஹா காட்டுமிராண்டிகள்

காட்டுமிராண்டிகள் எத்துனை ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா? தெரியாது என்று சொல்லுபவர்களுக்கு ஒரு நற்செய்தி. அவர்கள் இன்னும் நம்முடன் வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்கள்.

நேற்று 'வட்டம்' போட்டு பல தொலைக்காட்சிகளில் அவர்களைக் காண்பித்துக்கொண்டிருந்தார்கள்.

நாட்டில் தற்போது விலைவாசி யாரும் கேட்பாரற்று எட்டாத உயரத்திற்கு உயர்ந்து உள்ளது. பல இடங்களில் லஞ்சமும், சில இடங்களில் பஞ்சமும் தலைவிரித்து ஆடுகிறது. அரிசி, பருப்பு, காய்கறிகள் விலைக்கு கிடைத்தாலும் நல்ல தலைவர்கள் நமக்கு எந்த விலை கொடுத்தாலும் கிடைப்பதில்லை.

மதம், ஜாதி, மொழி, ஊழல் என்ற அடிப்படியில் மக்களை தூண்டிவிட்டு அரசியல் அடாவடி அடிவருடிகள்தான் நம்மை ஆள்கிறார்கள். முன்பு பா.ஜ.க ஒரளவு நம்பிக்கையான கட்சியாக இருந்தது. ஆனால் கர்நாடகாவில் நடந்த கூத்துக்கு பிறகு மேலும் ஒரு தேசிய கட்சி திராவிட கட்சி அளவு தேய்ந்து போனது வெட்ட வெளிச்சம். வெட்கக் கேடு.

'தாக்கரே' என்பது என்ன மொழி என்று தெரியாது ஆனால் அவர்கள் எதற்கு எடுத்தாலும் 'தாக்குரே' ? என்று அடிக்கடி கேட்ட வைக்கும் ஒரு ரவுடி கும்பலாக இருக்கிறார்கள். எனக்கு தெரிந்து பாகிஸ்தானைவிட இவர்கள் ஆபத்தானவர்கள். வெளியே இருக்கும் வெடி குண்டை விட வீட்டில் இருக்கும் வெடி குண்டு ஆபத்தானது.

நேற்று மராத்திய மாநிலத்தின் சட்டசபைக் கூட்டத்தின் முதல் நாளே மிகவும் அமோகமாக, பத்திரிக்கைகளின் தலைப்புச் செய்தியாகத் துவங்கியுள்ளது. அதுவும் சட்டசபை உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளும் தினம் வேறு!

தேர்தல்கள் முடிவுற்று, பதவி பங்கீட்டு பேரங்கள் ஒரு வழியாக முடிவுற்று நேற்றுதான் மஹாராஷ்டிர சட்டசபை முதன் முறையாகக் கூடியது. கவர்னர் முன்னிலையில் சட்டசபை உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் மற்றும் ரகசியக் காப்புப் பிரமாணம் எடுத்துக் கொண்டிருந்தனர்.

சமாஜ்வாதி கட்சி உறுப்பினரான அபு ஆஸ்மி என்பவர் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ளும் போது அவரை மூன்று மஹராஷ்டிர நவநிர்மாண் சேனா உறுப்பினர்கள் பிடித்துக் கொள்ள, ராம் கடம் என்ற உறுப்பினர் முகத்திலேயே ஓங்கி அறைந்துள்ளார். இவையத்தனையும் நடு சபையில், கவர்னர் மற்றும் சபாநாயகர் முன்னிலையில்.

எதற்காக? அபு ஆஸ்மி ஹிந்தி மொழியில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டதற்காகத்தான். ஏன் மராத்தியில் பிரமாணம் எடுத்துக் கொள்ளவில்லை எனக் கேட்டு சபையிலேயே இந்த அராஜகத்தை நிகழ்த்தியுள்ளனர். இதனையடுத்து அந்த நான்கு உறுப்பினர்களும் நான்கு ஆண்டுகளுக்கு தற்காலிய நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதற்குப் பிறகு அபு ஆஸ்மி ஹிந்தியியேலே தனது பிரமாணத்தைத் தொடர்ந்து எடுத்துக் கொண்டார்.

ஏன் இது நடந்தது ? ராஜ் தாக்கரே அனைத்து உறுப்பினர்களும் மராத்தியில்தான் பிரமாணம் எடுத்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தி வந்தார். அதையும் மீறி அவர் ஹிந்தியில் எடுத்துக் கொண்டதால் வந்த விளைவு இது. இந்த சம்பவத்தை ரவுடித்தனம் என்றால் ரவுடிகள் கோபித்துக்கொள்வார்கள்.

இந்த நால்வரும் தற்காலிக நீக்கம் செய்யாமல் அவர்களை டிஸ்மிஸ் செய்திருக்க வேண்டும். பொது வாழ்வில் தேர்ந்து எடுக்கப்பட்ட எம்.எல்.ஏ. ஒருவரை அடித்த குற்றத்திற்காக வழக்குப் பதிவு செய்து இருக்கவேண்டும். அப்போதுதான் அவர்களை தேர்ந்தெடுத்த மக்கள் மகிழ்ந்திருப்பார்கள்.

சிவசேனா அபு ஆஸ்மியை 'தந்தூரி' அல்லது 'ரோஸ்ட்' செய்யும் என்று பால் தாக்கரே சொல்லியுள்ளார்.

இவர்கள் ஹிந்து மதத்தினையும், கலாச்சாரத்தினையும் காப்பாற்றுகிறேன் என்ற போர்வையில் புறப்பட்டவர்கள்....ஆனால் ஹிந்து மதம் போதிப்பது எதையுமே கேட்பதில்லை என்ற பிரமாணம் எடுத்துக் கொண்டுள்ளனர் போலும்! வேற்று மத அடிப்படைவாதிகளை விடவும், அந்நிய ஆட்சியாளர்களை விடவும் இவர்கள்தான் ஹிந்து மதத்திற்கும், கலாசாரத்திற்கும் உலை வைப்பவர்கள்

தச்சம்யோ ராவ்ருணீ மஹே! காதும் யஜ்ஞாய !
காதும் யக்ஞ பதயே: தைவீ ஸ்வஸ்திரஸ்துந :!
ஸ்வஸ்திர் மானுஷேப்ய:! ஊர்த்வம் ஜிகாது
பேஷஜம் ! சந்நோ அஸ்துத்விபதே ! சம்சதுஷ்பதே ஓம் சாந்தி : சாந்தி : சாந்தி :

தமிழில்
மனித சமுதாயம் நன்மை பெற வேண்டும்;
செடி கொடிகளும் மூலிகைகளும் நன்கு வளர வேண்டும்; மரங்கள் ஆகாய மார்க்கமாக நெடிந்து வளர வேண்டும்; இரண்டு கால் ஜீவராசிகள் நலம் பெற வேண்டும்:
நான்கு கால் ஜீவராசிகள் நலம் பெற வேண்டும்....அமைதி அமைதி அமைதி என்பதே நிலவ வேண்டும்


மராத்தி தெரிந்தவர்கள் இதை மராத்தியில் மொழி பெயர்த்து ராஜ்தாக்கரே வகையரா "கும்பலுக்கு" ஒரு காப்பி அனுப்புங்கள். Conditions (jandu balm) Apply.


படம்: அடித்தவர்களுக்கு மாலை மரியாதை.
யதிராஜ் + இட்லிவடை கூட்டணியில் உருவான பதிவு

36 Comments:

Mohan Kumar said...

"யதிராஜ் + இட்லிவடை கூட்டணியில் உருவான பதிவு"

அப்போ யதி ராஜுக்கு இட்லிவடை யாருன்னு தெரியும் போல தெரியுது. யதி ராஜ்- ராம் கடம் சந்திப்பு ஒன்றுக்கு ஏற்பாடு செய்தால் இட்லிவடை யாருன்னு தெரிந்து விடும்!!

மோகன் குமார்

மானஸ்தன் said...

கொஞ்சம் லேட்.

IdlyVadai said...

//கொஞ்சம் லேட்.//


மான்ஸ்தன்,
நீங்க இரண்டாவதாக வந்து பின்னூட்டம் போட்டதை தானே சொல்றீங்க ? :-)

M Arunachalam said...

"பரோலில் தொலைந்த நீதி"

Please see in the following URL:

http://hereisarun.blogspot.com/2009/11/blog-post.html

மர தமிழன் said...

இவர்களை விட வெறும் புனர்ச்சிக்க்காகவும் இறைச்சிக்காகவும் ஒன்றுக்கடித்து தான் ஏரியா வை உறுதி செய்யும் தென் ஆப்பரிக்க சிறுத்தை கூட்டம் எவ்வளவோ நாகரீகமானதுதான்..

ஊமையாய் பிறந்த ஒரு மராத்தி யை இவர்கள் என்ன பாஷையில் செய்கை செய்ய சொல்வார்களோ??

Anonymous said...

Whether it is VHP or Modi or Thackreys they also know what they are doing. That is their politics.

அமுதப்ரியன் said...

மானஸ்தன் said...
கொஞ்சம் லேட்.

இதத்தானய்யா நான் நேத்துலேர்ந்து கேட்டுக்கிட்டு இருக்கேன்

அமுதப்ரியன்

டகிள் said...

இந்த செயல்களுக்கெல்லாம் முன்னோடி எனது கழகக்கண்மணிகள் அல்லவா. சட்ட மன்றத்தில் ஆபாச வார்த்தைகளி பேசுவது, செருப்பை வீசுவது, எதிர்க்கட்சி தலைவியின் புடவையை பிடித்து இழுத்தது என்று வரலாற்றில் பல சாதனைகளை நடத்திக் காட்டிய கழக கட்சியினரை மறந்து விடலாமா.

லெமூரியன் said...

ஆரோக்கியமான முன்னேற்றம் இது...மராட்டியத்தில் மராத்தியில் பதவிப் பிரமாணம் எடுப்பதில் தவறென்ன இருக்கிறது.....பெரும்பான்மையாக உள்ள மாராத்தி பேசும் மக்களின் பிரதிநிதிகள் மும்பையில் (மராட்டியத்தில் மும்பையில் மட்டுமே பெரும்பான்மையாக ஹிந்தி பேசப் படுகிறது ) மட்டுமே பேசப் படுகிற சிறுபான்மை மொழியில் பிரமாணம் எடுக்க வேண்டிய அவசியமென்ன......அது மராத்தியர்கள் தேசம்....மகர்களும் மகர்களின் மொழியையும் மதிக்காதவர்கள் அங்கு இருக்க அருகதை அற்றவர்கள்... தேசியம் பேசி இனத்தையும் மொழியையும் அழித்துக் கொண்டிருந்த வட தேசங்களில் ( குறிப்பு: இந்தியா ஒரு துணைக் கண்டம்...அதாவது தேசங்களின் கூட்டமைப்பு.....constitutionlil union endre alaikkap padugirathu india ) ராஜ் தாக்ரே ஒரு புதிய சகாப்தம் படைக்க ஆரம்பித்ததற்காக அவர்களுக்கு பாராட்டு விழா எடுக்கவேண்டுமேயன்றி தூற்றத் தேவைல்லை. மாநில சுயாட்சி இருக்கும் வரைதான் வந்தே மாதரமும் மூவர்ணக்க் கொடியும்.....அதற்க்கு பங்கம் வரும்போது இருப்பதியாறு நாடுகள் உண்டாகலாம் என்பதற்கு வியப்பில்லை.

வால்பையன் said...

அடிச்சதுல ஒருத்தன் உடம்புபூரா நகை போட்டு கேடி ராமகிருஷ்ணா மாதிரியே இருக்கான் பாருங்க!

இவனுக சட்டசபைக்கு போய் நாட்டை உருப்பட வைத்தா மாதிரி தான்!

ஒன்னொன்னும் சொல்லனும்!

பி.ஜெ.பி. சிவசேனா போன்ற மதவாத கட்சிகள் ஒழியனும், அதே போல் மிஸ்லீம் லீக் போன்ற மத கட்சிகளும்!

Guru said...

/// இந்த செயல்களுக்கெல்லாம் முன்னோடி எனது கழகக்கண்மணிகள் அல்லவா. சட்ட மன்றத்தில் ஆபாச வார்த்தைகளி பேசுவது, செருப்பை வீசுவது, எதிர்க்கட்சி தலைவியின் புடவையை பிடித்து இழுத்தது என்று வரலாற்றில் பல சாதனைகளை நடத்திக் காட்டிய கழக கட்சியினரை மறந்து விடலாமா./////

தமிழகம் இதிலாவது மகாராஷ்டிராவை முந்தியதே.. தெற்கு வழி காட்டுகிறது வடக்கு அதை ஏற்று நடக்கிறது !

kggouthaman said...

Again,
விநாச காலே,
விபரீத புத்தி.

சீனு said...

லெமூரியன்,

பக்கக்து இலைக்கு பாயாசமா? பலே... பலே...

vedanarayanan said...

தThe reaction by MNS sounds too extreme .

But the cause is not to be missed .

நம்ம ஊர்ல இங்கிலீஷ்-ல பேசினாலே மேல கீழ பார்பாங்க. ஹிந்தி நா கேட்கவே வேண்டாம்.

இங்க மும்பைல entire capital market is by Gujjus . Labour எல்லாம் north இந்தியன். Trading எல்லாம் muslims . Bollywood எல்லாம் north அண்ட் punjab அண்ட் tamil domination .
என்ன problem நா எல்லோரும் அவன் ஆட்களை தான் கூட்டிண்டு வராங்க.
நம்ம மூத்த பையன் , chaturvedi போக சொல்லிட்டு கிருஷ்ணன் கூப்பிட்டாரு . Lalu railways முழுக்க biharis favour பண்ணலியா. There was a huge fight during railway examination in Karnataka . Bangalore public sector புல்லா tamilians தானே !

இதில merit இக்கு தான் scope ந சொல்லி ஒரு முழு pumpkin rice க்குள்ள அமுக்கறாங்க.
Favoritism is the cause of all these.

MNS சொல்லுவதில் தப்பில்லை. செயல் படுத்துவதில் தான் தப்பு.

யதிராஜ சம்பத் குமார் said...

லெமூரியன்::


நீங்கள் ஒன்று செய்யலாம். இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பின், அது எனக்கு வேண்டாம், லெமூரியா பாஸ்போர்ட் தான் வேண்டுமென்று தலைமைச் செயலகத்தின் முன்பு ஒரு போராட்டம் செய்யலாம். தற்போதைய ஆட்சியாளர்கள் ஒருகாலத்தில் உங்களைப் போலவே மாநில சுயாட்சி, தனிநாடு என்று பிதற்றி விட்டு பின்பு பணத்திற்காகவும், புகழுக்காகவும் கொள்கைகளைச் சமாதிக்கு அனுப்பியவர்கள். சரியாக இருக்கும்.


நீங்கள் நெல்லைக்காரர் போலும். தமிழகத்தைத் தனியாகப் பிரித்துக் கொடுத்தால், பிறகு சமாதான புரம், மேலப்பாளையம், பாளையங்கோட்டை இவையெல்லாம் தனித் தனி நாடாக வேண்டும் என்று கேட்பீர். :P

பா. ரெங்கதுரை said...

அபு ஆஸ்மி உருது அல்லது அரபு மொழியில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டிருந்தால் இந்தப் பிரச்சினைகள் வந்திருக்காது. சேனைகளும் சரி, கழகங்களும் சரி முன்னாலும் பின்னாலும் பொத்திக்கொண்டு உட்கார்ந்து இருந்திருப்பார்கள். துள்ளினால் இருக்கைக்குக் கீழேயே குண்டு வெடிக்கும் என்பது அவர்களுக்குத் தெரிந்ததுதானே?

Swami said...

Not sure which medium the children of Raj Thackery family kids study.. Is it the same english medium where our Nakamuka and Dr Iyya family kids study..?

Mrs. Mohamed said...

அபு ஆஸ்மி, ஹிந்தி, தாக்கரே க்ரூப் = இஸ்லாமியர்கள், வந்தே மாதரம், RSS/VHP/BJP வகையறா

எங்கயோ இடிக்குதோ?

Kameswara Rao said...

IV,

These type of activites remind us whether we are living in India or an associate of countries... Biggest democracy... mockery.. unfortunate thing is that some of our commentors also feel that raj is doing the right thing...I really wonder whether I am holding an Indian Passport which in future has to be changed to Tamilnadu Passport or by my name to Karnataka or Andhra passport or since I was in Mumbai need to get a Marathi passport... clueless. "Integrity in Diversity" where this concept has gone... I may oppose congress but there were few principles which need to be protected to proctect our soverignity which were brought in by the Gandhi Group.

MNS is nothing but nonsense these type of activities should be curbed in bud else it will be a danger in future.
Kamesh

Kameswara Rao said...

IV,

If you find Manasthan you can find IV has now turned to if you catch Yathiraj you can come to know of Idlyvadai who knows it might turn into a surprise.

Kamesh

Anony8 said...

Raj Thackarey in one of his interviews cited and quoted the anti-Hindi politics as a Tool in TN Polity. No wonder DMK and Nakkamukka are the role models for such a new Divide & Rule uprising in MH.

Anonymous said...

அடிச்சதுல ஒருத்தன் உடம்புபூரா நகை போட்டு கேடி ராமகிருஷ்ணா மாதிரியே இருக்கான் பாருங்க!

இவனுக சட்டசபைக்கு போய் நாட்டை உருப்பட வைத்தா மாதிரி தான்!

ஒன்னொன்னும் சொல்லனும்!

பி.ஜெ.பி. சிவசேனா போன்ற மதவாத கட்சிகள் ஒழியனும், அதே போல் மிஸ்லீம் லீக் போன்ற மத கட்சிகளும்

-----------

The so-called Secular parties of today are the most communal ones and on the flip side BJP is the most secular party for the every word and letter in our constitution. Useless Idiots of India won't realize until this Nation becomes a crypto Islamo evangelist country.

Anonymous said...

Anonymous said
//Whether it is VHP or Modi or Thackreys they also know what they are doing. That is their politics.//

I do not understand as to where Modijee comes into the picture on the subject under review.

If you do not understand you must leave Gujarat and our CM alone. You may not know how Modijee Rules Gujarat and how our State has developed.

Idlyvadai Moderators may employ some methodology either to delete or edit posts.(mine included). ( I am myself a moderator of a Blogspot.)

Nethiyadi Muhammad said...

Oh! Idly Vadai...! They (thakareys)are your team members. Why are you putting 'same side goal'? Wake-up! Ask apology to your ideology.

Anonymous said...

லெமூரியா இன்னும் வழக்கொழிஞ்சு போகலியா??

R.Gopi said...

மானஸ்தன்...

லேட்டா வந்ததோ, ஒரு ஆஜர் போட்டுட்டு போனதோ பிரச்சனை இல்லை... உங்க கமெண்ட் எங்கே??? அந்த ஆஜர் கமெண்ட் ரிஜெக்டட்...

Muthu said...

//அபு ஆஸ்மி உருது அல்லது அரபு மொழியில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டிருந்தால் இந்தப் பிரச்சினைகள் வந்திருக்காது...... துள்ளினால் இருக்கைக்குக் கீழேயே குண்டு வெடிக்கும் என்பது அவர்களுக்குத் தெரிந்ததுதானே?//

பா. ரெங்கதுரை .......
கெளம்பிட்டாராய்யா.....கெளம்பி ட்டாரு!!
- சாயம் பூசி எண் : ஒன்று

rawanan said...

"மதம், ஜாதி, மொழி, ஊழல் என்ற அடிப்படியில் மக்களை தூண்டிவிட்டு அரசியல் அடாவடி அடிவருடிகள்தான் நம்மை ஆள்கிறார்கள். முன்பு பா.ஜ.க ஒரளவு நம்பிக்கையான கட்சியாக இருந்தது."

சும்மா ஜோக்கடிக்காதிங்க சார்!

லெமூரியன் said...

தோழர் யதிராஜ சம்பத் குமார் அவர்களுக்கு சுதந்திரத்திற்கு பின் மாநிலங்கள் பிரிக்கும் போது மொழி வாரியாக பிரிக்காமல் ஆங்கிலயோர் கொண்டிருந்த மாகாணங்கள் வாரியாக பிரிக்கலாம் என்று ஒரு யோசனை முன்வைக்கப் பட்டுள்ளது....அனைத்து பிரிவினரிடமும் இருந்து கடும் எதிர்ப்புகள் எழவே மொழி வாரியாக பிரிப்பதென முடிவாக்கப்பட்டது...இந்திய கூட்டமைப்புக்கு அடித்தளமாக இருப்பதே இந்த மொழி வாரி மாநிலங்கள்தான்...! உங்கள் ஜாதி பெண் வேற்று ஜாதியைச் சேர்ந்த ஆணைக் காதலித்தாலே உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத போது எப்படி உங்களால் தேசியம் பேச முடிகிறது என்று யோசித்தீர்களா?? விடை எதில் அடங்கிருக்குனு தெரியுதா? உங்கள்(உங்களைப் போன்ற தேசியம் பேசுபவர்களை ) தொகுதி பிரதிநிதியாக ஒரு கீழ் ஜாதியைச் சார்ந்த ஒருவரை உங்களால் தேர்வு செய்ய முடியாத நிலை இருக்கும் போது ஒட்டு மொத்த தேசத்தின் தேசியம் பற்றி எப்படி உங்களால் மனசாட்சி உறுத்தாமல் பேச முடிகிறது???? இந்தியக் கூட்டமைப்பின் அடித்தளம் இரும்பால் ஆனதல்ல தோழர்....வெறும் நூலிளைகளால் ஆனது...லேசாகச் சீன்டினாலே போதும் அறுந்து விடும்...ஆதலால் தான் ஒரு ஒரு மாநிலத்திர்கென்று ஒரு உளவுப்படையும்,அனைத்து மாநில அரசாங்கங்களைக் கண்காணிக்க ஒரு உளவுப் படை என்று பயத்துடனே உளவு அரசியல் ஒன்று, இந்திய அரசியலுக்கு பின்னால் நடந்து கொண்டிருக்கிறது தெரியும்தானே உங்களுக்கு? எதற்காக இத்தனை உளவு வேலை என்று யோசித்தீர்கள? நூலிளைகளில் ஏற்படுகிற சிறு அருப்புகளை இணைக்கவே இத்தனை உளவு.......... இறுதியாக அவ்வளவு தேசத்தின் தேசியம் மீது அக்கறை இருக்கும் உங்கள் தேசியவாதிகளால் ஏன் தவித்த வாய்க்கு தண்ணீர் தராமல் வீணாக கடலில் கொண்டு கொட்டுகிறான் உங்கள் சகோதரனைக் கண்டித்து தண்ணீர் தர இயலவில்லை அப்போ மாநில நலன் காக்கும் அவன் உங்கள் பார்வையில் தேசிய வாதி. அதைத் தட்டிக் கேட்டால் நாங்கள் பிரிவினை வாதிகளா? வரையறையின் அளவுகோலை மாற்றிப் பாருங்கள் தோழர்....உங்களுக்கு எங்கள் பக்கம் உள்ள நியாயம் புரியும். மற்ற படி இந்துத்துவம் தான் இந்தியாவை கட்டிக் காக்கிறது என்று சொன்னால் உங்கள் காவிக் கூடத்தில் இருந்தே நாற்ப்பது வருடத்திற்கு முன்பு ஒருவர் புத்தகம் போட்டுவிட்டார் அது ஒரு மாயை என்று.

Anonymous said...

மும்பை: கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மும்பையில் தீவிரவாதிகளில் சுட்டுக் கொல்லப்பட்ட மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஹேமந்த் கர்கரே அந்த சம்பவத்தின்போது அணிந்திருந்த புல்லட் புரூப் உடை காணாமல் போய்விட்டது.

இந்த புல்லட் புரூப் உடை தரமற்றதாக இருந்ததாக புகார்கள் கூறப்பட்டு வந்த நிலையில் அது காணாமல் போயுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்த விவகாரத்தை மகாராஷ்டிர மாநில அரசும், காவல்துறையும் மூடி மறைக்க முயன்றதையடுத்து இது தொடர்பாக தகவல் அறியும் சட்டத்தி்ன் கீழ் விளக்கம் கேட்டு மனு செய்துள்ளார் கர்கரேவின் மனைவி கவிதா.

மகாராஷ்டிர தீவிரவாதத் தடுப்புப் பிரிவு தலைவராக இருந்த ஹேமந்த் கர்கரே தான் மாலேகான் வெடிகுண்டு வழக்கில் திருப்பத்தை ஏற்படுத்தியவர்.

இந்த வழக்கில் அவர் நடத்திய ஆழமான விசாரணையால், பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின. இந்த குண்டுவெடிப்புக்குக் காரணமான பெண் துறவி பிரஞ்யா சிங் தாக்கூர், சாமியார் பான்டே, ராணுவ அதிகாரி உள்பட பல இந்து தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.

இதற்காக அவரை பாஜக, விஎச்பி, சிவசேனா, ஆர்எஸ்எஸ் ஆகியவை கடுமையாக விமர்சித்து வந்த நிலையில் தான் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் குண்டுக்கு இறையானார் ஹேமந்த் கர்கரே. தீவிரவாதிகள் மும்பைக்குள் தாக்குதல் நடத்த ஆரம்பித்த அடுத்த 15வது நிமிடத்தில் தானே துப்பாக்கியுடன் களமிறங்கியவர் கர்கரே.

தரக் குறைவான புல்லட் புரூப் உடையை முதலில் அணிய மறுத்தவர், பின்னர் ஜூனியர் அதிகாரிகள் நிர்பந்தித்தால் அதை அணிந்து கொண்டு காமா மருத்துவமனையில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளை நோக்கி முன்னேறினார். ஆனால், மூன்று குண்டுகள் அவரது புல்லட் புரூப் உடையைத் துளைத்ததில் அதே இடத்தில் பலியானார்.

ஆனால், அவரது உடல் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டபோது புல்லட் புரூப் இல்லை. அதை யார் கழற்றினார்கள் என்றும் தெரியவில்லை. அவர் அதை அணியவே இல்லை என்று காவல்துறை அதிகாரிகள் சிலர் கூறினர்.

ஆனாலும் அவர் அதை அணிந்திருந்த நிலையில் தான் அதை குண்டுகள் துளைத்ததாக சில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் இந்த உடைகளை வாங்கிய அதிகாரிகள், இந்த உடைகள் கொள்முதலுக்குக் காரணமாக இருந்த அரசியல்வாதிகளும் சிக்கலுக்கு உள்ளாகும் நிலை உருவானது.

இந் நிலையில் தான் கர்கரே அணிந்திருந்த அந்த புல்லட் புரூப் உடையே காணாமல் போக செய்யப்பட்டுள்ளது.

அந்த உடை எங்கே என்று கேட்டு ஹேமந்த் கர்கரேவின் மனைவி கவிதா காவல்துறை அலுவலகங்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் அலைந்தும் விவரம் கிடைக்கவில்லை. இதையடுத்தே ஆர்டிஐ சட்டப்படி (தகவல் அறியும் உரிமை சட்டம்) அந்த உடை எங்கே என்று கேட்டு 3 மாதங்களுக்கு முன் மனு தாக்கல் செய்தார்.

இதற்கு நேற்று முன் தினம் அவருக்கு காவல்துறை தலைமையகத்திடமிருந்து பதில் வந்துள்ளது. அதில், அந்த உடையைக் காணவில்லை என்று சர்வசாதாராணமாக பதில் தரப்பட்டுள்ளது.

இத் தகவலை நிருபர்களிடம் தெரிவித்த கவிதா, தொடர்ந்து கூறுகையில்,

மகாராஷ்டிர காவல்துறையின் தீவிரவாதத் தடுப்புப் பிரிவிலிருந்து விலகிவிட என் கணவர் திட்டமிட்டிருந்தார். காவல் துறையை விட்டு விலகிவிட்டு அமைதியான வாழ்க்கை வாழ விரும்பினார்.

அவருடன் 28 ஆண்டுகள் மிக மகிழ்ச்சியாக வாழ்ந்தவள் நான். திடீரென ஒருநாள் அவர் இல்லை என்றாகிவிட்டது. அவர் மறைந்து ஓராண்டு ஆகிவிட்டாலும் அவரது நினைவு ஒரு கணமும் என்னை விட்டு அகலவில்லை, அகலாது. அவரது மறைவை இன்னும் என்னால் ஏற்க முடியவில்லை.

கைது செய்யப்பட்ட தீவிரவாதி கசாபுக்கு இன்னும் தண்டனை தரப்படவில்லை. நீதிமன்றத்தில் நடக்கும் இழுத்தடிப்புகளைப் பார்த்தால் கோபமாக வருகிறது. சம்பவம் நடந்து ஓராண்டு ஆகிவிட்ட நிலையில் இன்னும் விசாரணையா.. இந்நேரம தீர்ப்பு வந்திருக்க வேண்டாமா?.

தீவிரவாதிகள் மும்பைக்குள் தாக்குதல் நடத்துவதாக தகவல் வந்தவுடன சாப்பிட்டுக் கொண்டிருந்தவர் அப்படியே விட்டுவிட்டு கையில் தனது ஷூக்களை எடுத்துக் கொண்டு காரை நோக்கி ஓடினார்... நான் போன் செய்தபோது.. நன்றாக இருக்கிறேன் என்றார். அது தான் அவரிடம் நான் கேட்ட கடைசி வார்த்தை.

நள்ளிரவில் டிவியில் பார்த்துத் தான் அவர் காயமடைந்ததை அறிந்து அவர் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனைக்கு ஓடினேன். அங்கு அவரது ஜூனியர்கள் அழுந்து கொண்டிருந்ததைப் பார்த்தவுடனேயே எனக்கு எல்லாம் புரிந்து போய்விட்டது. அவர் இல்லை என்ற உணர்வு என்னை ஆக்கிரமித்தபோது நான் சுயநினைவை இழந்தது இன்னும் எனக்குள் நிழலாடுகிறது.

அவர் ஒரு நல்ல கணவர், நல்ல தந்தை, ஜூனியர்களுக்கு ஒரு நல்ல ரோல் மாடல், சவால்களை விரும்பும் பர்சனாலிட்டி என்றார் கவிதா

Sivakumar said...

இதே வேலை தமிழ்நாட்டிலோ கேரளத்திலோ ஆந்திராவி-
லோ அல்லது கர்நாடகாவிலோ அந்தந்த மாநில மொழி தவிர
அந்தந்த மாநில சிறுபாண்மை மொழியில் பதவிப் பிரமாணம்
எடுத்துக் கொள்ள முடியுமா - மேலும் மஹாரா ்ட்ரத்தில்
மராட்டிய மொழி தமிழ் மொழிக்கு ஈடான வரலாறு உள்ளது.

ஆட்சியாளர்கள் மற்றும் சென்ற தலைமுறையைச்
சேர்ந்தவர்கள் செய்த தவறால் ஹிந்தி அங்கு முன்னிலை
பெற்றுக் கொண்டிருக்கிறது.

எப்போது மராட்டி மொழி முன்னணி பெறுகிறதோ அப்போது
தான் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாது என்பது எண்ணம்.
ராஜ் தாக்கரேயின் மொழி வெறி ஏற்றுக் கொள்ளத்தக்கதே.

சில மாதங்களுக்கு முன் ஒரு ஆங்கில செய்தி நிறுவனத்திற்கு
ஆங்கிலம் தெரிந்திருந்தும் நம்முடைய முக தமிழில்
பேட்டியளித்ததை கண்டு கொள்ளாமல் ராஜ் தாக்கரே
ஆங்கிலத்தில் பேட்டியளிக்காமல் மராட்டியில் பேசியதை
விவகாரம் ஆக்கினரே!!

Muthu said...

கட்டுரையாளர் இன, மத பேதமின்றி கண்டித்து இருப்பதை வரவேற்கிறேன்! தலைப்பு அட்டகாசம்!!
நாளை இவர்கள் தேசிய கீதத்தை கூட அவர்கள் மொழியில் பாட சொன்னாலும் சொல்வார்கள்!!...
பாவம் அவர்கள் என்ன செய்வார்கள்? அரசியல் அவர்களின் தொழில்!! அவர்களுக்கு தெரிந்தததை தான்செய்வார்கள்...! பேஷ்..பலே!!

Erode Nagaraj... said...

//அப்போ யதி ராஜுக்கு இட்லிவடை யாருன்னு தெரியும் போல தெரியுது. யதி ராஜ்- ராம் கடம் சந்திப்பு ஒன்றுக்கு ஏற்பாடு செய்தால் இட்லிவடை யாருன்னு தெரிந்து விடும்!!//

அதுதான் இல்லை, அப்பொழுதும் உங்களால் இட்லி யார் - வடை யார் என்று கண்டுபிடிக்க முடியாது... ஆனால், ஒன்று நிச்சயம், மானஸ்தான் தான் தட்டு (இலை)... பெரும்பான்மையான பொழுதுகளில், அவர் தானே, தட்டுகிறார் இட்லி-வடையின் கதவை பின்னூட்டங்களாக...

பாரதி மணி said...

லேட் ந்யூஸ்:

இன்று மதியம் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த மஹாராஷ்ட்ரா நவ்நிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, மராட்டியில் பெயர் வைத்தாலொழிய முமபைக்கு வரவிருக்கும் ‘பையான்’ புயலை மும்பைக்குள் வரவிடமாட்டோம் என்று சூளுரைத்தார். யாரும் மராட்டியில் பெயர் வைக்காததால், பையான் புயல் பயந்துபோய் மும்பைக்கு வராமலே போய்விட்டது!

இதை தனக்குக்கிடைத்த ம்ற்றொரு வெற்றி என்று ராஜ் தாக்கரே ஓர் அறிக்கையில் தெரிவித்தார்!

Anonymous said...

Anney lemurian,

natula evlo vishayangal irukku anney panrathuku....marathi-la uruthi mozhi edukuroma, hindi-la edukuroma, tamizh-la eduluromanrathu mukiyam illaney...antha uruthi mozhi padi nadakurama enbathu thaan mukiyam..

ippadi aduthavana kutham solli solliye (ennayum sethu thaan) vazhrathunnu ayiduchu...nadathunga

nanri...velmurugan

Muthu said...

திரு வால் பையன்,
கேடி ராமகிருஷ்ணா வா?
கோட்டி ராமகிருஷ்ணா ரசிகர்கள் உங்களை ஆட்டோவில் தேடிக்கொண்டு இருப்பதாக செய்தி!!