பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, November 25, 2009

சாதிகள் இல்லை ஆனா இருக்கு.

படங்களில் ஜாதிக்கு எதிராகக் குரல் கொடுக்கும் விவேக், தனக்குப் பிரச்னை என்று வந்தவுடன் தனது ஜாதி முகமூடியை எடுத்து அணிந்துகொண்டிருக்கிறார். பத்திரிகையாளர்கள் என் மீது வழக்குத் தொடருகிறார்கள். எனக்குக் கொடுக்கப்பட்ட பத்மஸ்ரீ விருதைக்கூடத் திரும்ப பெற சூழ்ச்சி நடக்கிறது. எனக்கு ஆதரவராக நீங்களும் களம் இறங்க வேண்டும் என்று பேசியிருக்கிறார். எங்கே தெரியுமா? அகில இந்திய மூவேந்தர் முன்னேற்றக் கழக ஆலோசனைக் கூட்டத்தில். சாதி இல்லே, சாமி இல்லே எல்லாம் சினிமா வசனம்தானா?

இன்னும் காமெடி கீழே...


வட சென்னை ஜாதி ஒழிப்பு மாநாடு தமிழர் தலைவர் எழுச்சியுரை ஐயா வீரமணி அருமையா பேசியிருக்கார். வீடியோக்களை பார்க்க இங்கே செல்லுங்கள்.

ஜாதி என்பதை சாதி என்று மாற்றலாம் ஆனால் அதை ஒழிக்க முடியுமா ? தமிழ் நாட்டில் எவ்வளவு சாதிகள் இருக்கு என்று அறிந்துக்கொள்ள

தமி்ழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் பணி வெட்பாளர்களுக்கான விதிமுறைகள். அதாங்க TNPSC விதிமுறைகள் லிங்க் இங்கே . நேரா 21ஆம் பக்கம் போங்க தமிழ் நாட்டில் எவ்வளவு சாதிகள் இருக்கு என்று தெரியும். அரசியல் தலைவர்கள் வேட்பாளர்களுக்கான தேர்வு எவ்வளவு கஷ்டம் என்று உங்களுக்கு புரியும்.

எனக்கு ஒரு டவுட். இதுல இருக்கும் சாதிகளை தவிர வேற எதாவது இருக்கா ? இருந்தா பின்னூட்டத்தில் சொல்லுங்க. பரிசுக்கு இட ஒதுக்கீடு எல்லாம் கிடையாது.

23 Comments:

மானஸ்தன் said...

:-)))

Nara said...

இட்லி !! என்னாது அது முழு சாதிப்பட்டியல் இல்லை போலருக்கே.

சென்னையில் வசவாக சொல்லக்கூடிய வார்த்தை ஒரு சாதியின் பெயராமே

அதில 24- பக்கத்தில் 35 லிருந்து 59- க்குள் குரிபிடப்படுள்ளது

ஜிகர்தண்டா said...

அடேயப்பா இந்தியாவ கண்டுபிடிச்ச அம்பது வருஷத்துக்குள்ள இம்புட்டு சாதிகளா!!! இதுல காமெடியே 12 வது பக்கத்துல (அதாவது மொதல் பக்கம்) 2 'ஆ' மற்றும் 'இ' தான்.

Anonymous said...

Yes, both Nagapathaniyar and Nagapppathanaiyar are missing.

Baski said...

நான் என்ன தப்பு செஞ்சுட்டேன். எதுக்கு என்னக்கு இந்த தண்டனை.
இந்த அ*** (வீரமணி) பேச்சை கேக்க .... என்னால முடியல... (not even 5 mins)

இந்த மாறி லிங்க் போடும் "டிஸ்கி" கொடுக்கவும்.

ஜெயக்குமார் said...

யோவ், இ.வ., பார்ப்பணர்கள் உள்ளிட்ட முற்பட்ட வகுப்புனு ஒரு பகுதியே கானோமேயா...

இது முழுத் தொகுதி அல்ல..

யதிராஜ சம்பத் குமார் said...

அடேயப்பா இந்தியாவ கண்டுபிடிச்ச அம்பது வருஷத்துக்குள்ள இம்புட்டு சாதிகளா!!! ///


எல்லாம் திராவிட சிசுக்களின் கைங்கர்யம்.

வால்பையன் said...

ப்ளாக்கர் என்பது சாதி லிஸ்டில் சேர்க்க சொல்லுங்க!

அதுல சாதிய ஆதிரிக்கிறவங்க வலது!
எதிர்க்குறவங்க இடதுன்னு வச்சிகலாம்!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவிய தேர்தல் முறையில்
பாதி பயல்கள் பணம்பெறும் வோட்டர்கள்
மீதி தலைகள் அறி.

(இது இலக்கணத்தோடு கூடிய வெண்பா செய்யுள் - ஆக்கம் அடியேன்)

Anonymous said...

We can classify all the caste under 3 sections

UPPER CASTE
Brahmins,Arcot Mudaliars,Chettiars,Naidus,Reddiyars,Saiva Pillai's....

MIddle CASTE
Devars,vanniyars,gounders,vannans,barbers,saurasthtra's.....

DALITS are

Christians,Muslims and other untouchable hindus....

what a shame...

Murali

Anonymous said...

அடேயப்பா இந்தியாவ கண்டுபிடிச்ச அம்பது வருஷத்துக்குள்ள இம்புட்டு சாதிகளா!!! ///


எல்லாம் திராவிட சிசுக்களின் கைங்கர்யம்.

-- I don't understand the role of Dravidian parties in the formation of caste system. For a complete list of Castes and Tribes in South India, you can read the seven volume of "Castes and Tribes of Southern India" by Edgar Thurston. It is available in amazon. Just for a glance, you can check with the following link http://www.archive.org/details/CastesAndTribesOfSouthernIndiaVolV

Input from Wikipedia
Although generally identified with Hinduism, the caste system was also observed among followers of other religions in the Indian subcontinent, including some groups of Muslims and Christians. The Indian classes are similar to the ancient Iranian classes ("pistras"), wherein the priests are Athravans, the warriors are Rathaestha, the merchants are Vastriya, and the artisans are Huiti. In Early Evidence for Caste in South India, George L. Hart stated that "the earliest Tamil texts show the existence of what seems definitely to be caste, but which antedates the Brahmins and the Hindu orthodoxy". He believes that the origins of the caste system can be seen in the "belief system that developed with the agricultural civilization", and was later profoundly influenced by "the Brahmins and the Brahmanical religion".

Anonymous said...

//DALITS are

Christians,Muslims and other untouchable hindus....//

Oh untouchable hindus...what a shame we are in SMS and twitter era still using the term "untouchable".

All are equal under God's Eye

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவிய தேர்தல் முறையினில்
பாதி பயல்கள் பணம்பெறும் வோட்டர்கள்
மீதி தலைகள் அறி

என்று திருத்திப் படிக்கவும், தவறுக்கு வருந்துகிறேன். (முறையில் என்று வந்தால் அலகிட்டு வாய்பாடு கூறும்போது தட்டும்-வெண்பா உதைக்கும்).

Anonymous said...

Is Idlyvadai anti-caste or anti-DK/DMK?

Anonymous said...

Is Idlyvadai anti-caste or anti-DK/DMK?

IdlyVadai said...

//Is Idlyvadai anti-caste or anti-DK/DMK?//

இதுக்கு தான் இட்லிவடை டைட்டில் கீழே
"Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists.... " என்று சொல்லியிருக்கேன்.

Anonymous said...

In school the teacher advise the students to read well and become Engineer, Doctor etc. As the teacher is not an Engineer or Doctor, wheather he can not advise students to become Engineer or Doctor?.No one can advise others if they have to follow 100% of the advise.
So advise of Vivek on good intention must not be criticised.

vedanarayanan said...

விவேக் பண்ணியது தப்பு போன்று தோன்றவில்லை.
அவரை எதற்காக ஒரு ஹீரோவை போல பார்கிறீர்கள்? அவர் அட்வைஸ் பண்ணுவது எல்லாம் a style of acting in his profession (like N S krishnan மாதிரி). அவர் அதுபடி வாழ்க்கையில் நடப்பேன் என்று promise பண்ணினாரா ? . Frankly இது நம்ம mistake.

மீடியா அவர ரொம்ப torture பண்ண ஆரம்பிச்சுட்டானுக. அவருக்கு வடிவேல் வந்ததால் ஏற்கனவே மார்க்கெட் கம்மி, . So இப்ப suddenஆ பேசினது எல்லாம் தப்பு என்று சொல்ல முடியாது. அதனாலே நாம் polticians எல்லாம் என்ன சொல்லி கொடுத்தாங்களோ (caste ) அதுக்கே போய்ட்டாரு.

Cho visiri said...

peyar solla viruppamillai said//சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவிய தேர்தல் முறையினில்
பாதி பயல்கள் பணம்பெறும் வோட்டர்கள்
மீதி தலைகள் அறி

என்று திருத்திப் படிக்கவும், தவறுக்கு வருந்துகிறேன். (முறையில் என்று வந்தால் அலகிட்டு வாய்பாடு கூறும்போது தட்டும்-வெண்பா
உதைக்கும்//

Good, but a couple of modifications are suggested;-
"Needhi nazhuviya (instead of "vazhuvia") endrum "instead of "muraiyini" enbadhai "muraiyile" endrum kollalaam.
"Paadhi payalgall" may be read as "paadhip payalgall" enbadhu better.

cho visiri said...

peyar solla viruppamillai said
//அலகிட்டு வாய்பாடு கூறும்போது தட்டும்-வெண்பா உதைக்கும்//
secondly, vennbaa udhaikkadu. "Thallai" thattum.

Anonymous said...

Thanks for sharing the link, but unfortunately it seems to be down... Does anybody have a mirror or another source? Please reply to my post if you do!

I would appreciate if a staff member here at idlyvadai.blogspot.com could post it.

Thanks,
Thomas

Anonymous said...

Thanks for sharing this link, but unfortunately it seems to be down... Does anybody have a mirror or another source? Please reply to my post if you do!

I would appreciate if a staff member here at idlyvadai.blogspot.com could post it.

Thanks,
Alex

Anonymous said...

Hi,

I have a inquiry for the webmaster/admin here at idlyvadai.blogspot.com.

May I use some of the information from your blog post above if I provide a link back to your website?

Thanks,
John