பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, November 06, 2009

இனிப்பு கண்ணா, இனிப்பு....


சமீபத்தில் நடந்த மருத்துவ ஆய்வில், இந்தியாவிலேயே இனிமை ஜாஸ்தி உள்ளவர்கள் .... கேரளாதான் என சொல்கிறது அறிக்கை. இது ரொம்ப பழைய மேட்டராச்சே, நம்ம பாட்டுக்கு ஒரு தலைவன் பாரதி சொன்னதுதானே,சேர நாட்டிள‌ம் பெண்களுடனே, சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து’ என்பது தானே என நினைப்பவருக்கு, இல்லைங்க இது வேற‌ ரூட். மேட்டர் வேற. இது புதுசு கண்ணா புதுசு.

நாடெங்கும் ஆய்வு செய்ததில், சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டுள்ள‌ நோயாளிகளில் அதிக எண்ணிக்கையில் உள்ளவர்களில் முதல் இடம் கேரளாவுக்கு.

எனக்கு சுகர் இருக்குங்க, என பெருமையாய் போன தலைமுறையில் சொன்னது, அல்லது அதை ஒரு ஸ்டேட்டஸ் சிம்பலாய் பார்த்தது எல்லாம் பரணில் தேடி தூசி தட்டாமல் இன்றைக்கு பார்த்தால். அதெல்லாம் நாப்பது வயசுல சகஜமய்யா என பழகிக் கொண்டது இந்த தலைமுறை. (ஒரு விழா மேடையில் கவிஞர் வாலி அவர்கள் தலைமை ஏற்க வருகை தந்த கலைஞர் அவர்களை பார்த்து இப்படி சொன்னது நினைவுக்கு வருகிறது...

தலைவா நீ பாப்புலர் ஃபிகர் உன்னை கண்டவுடன் ஏறுது என் ஷுகர்)

நீரழிவு எனும் சுத்த தமிழ் வார்த்தை கேட்டவுடன் பக் என பயமாய் இருக்கிறது. ஏதோ ஒரு பேரழிவு போல பூச்சாண்டி காட்டுகிறது. அதையே ஆங்கில மொழி மாற்றம் சாதாரணமாக்கி விடுகிறது. சக்கரை நோய், ஹும்... ரத்தத்திலா, யூரினிலா என சகஜமாக்கி விடும். கிராமத்தில் இப்படி சொல்வதை வெறுமே ஆங்கிலத்தில் சுகர்ங்க என ஸ்டைலாய் ஸ்வீட்டாய் சொல்லும் போது இன்னும் சூப்பர்.

அவருக்கு கன்னாபின்னான்னு சுகர். அசந்து படுத்தார்னா எறும்பு வந்து மொய்க்குது’ இனிப்பை கண்ணால கூட பாக்கக்கூடாது. என கண்டிப்புடன் கண்ணாடி தூக்கி விட்டு மாமி சொல்லி விட்டு நகர. சுகர் தான்... ஆனா கண்ட்ரோல்ல இருக்கு. அடிக்கடி சாப்பிடக் கூடாது, அப்பப்ப சாப்பிடலாம் தப்பில்ல என அசடு வழிந்து பச்சப் பிள்ள மாதிரி கேக்கிறார் நம்ம அப்புராணி மாமா, ஒரே ஒரு ஜாங்கிரியை... இந்த புரட்டு புரட்டுதே இது என்ன வியாதி.

வியாதி இல்ல. ஒரு சின்ன குறைபாடு. இன்சுலீன் எனும் த‌க்கூனுண்டு சமாச்சாரம் ரத்தத்தில குளுக்கோஸ் அளவை சமமாக்கி, தேவையானதை எடுத்துக்கிட்டு, போலாம் ரைட் என கழிவுக்கு அனுப்பி விட்டுவிட்டு, உடம்புக்கு வைச்சுக்கோ நீ என கொடுப்பது. சில சமயங்களில் கோவிச்சுக்குட்டு, மாட்டேன் போ தரமாட்டேன்னு தகராறு பண்ணுறதால உடம்புலயே இருக்க வேண்டிய ஸ்வீட் மெலடிஸ் கழிவாய் போறது தான் பிரச்சனை. இது அன்றி, சர்க்கரையை ரத்தத்திலேயே வைத்து கொள்வது (உடன்பிறப்புகளை இதய‌த்துல மட்டும் இடம் கொடுத்து), ப்ளட் ஷுகர்...

உணவு பழக்கம் முக்கிய வில்லன்னாலும், வேலை பளு, ஸ்ட்ரெஸ், போதிய ஓய்வின்மை இதெல்லாம் சைடு வில்லன். சில சமயம், இந்த சைட் வில்லன் பண்ற சேட்டை, மெயின் வில்லனின் சேட்டையை விட ஜாஸ்தினு நாம ஆராய்ச்சி செஞ்சு கண்டுபிடிச்சுட்டோம்.

நிற்க.... தொடங்கின மேட்டர் கேரளாவுக்கு வந்தால். ஏன் கேரளாவில ஷூகர் கம்ப்ளைண்ட் ஜாஸ்தியாச்சுன்னு கேட்டா, அளவுக்கதிகமான தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் உபயோகம் என காரணம் காட்டுகிறது ரிப்போர்ட். இதப் பத்தி நம்ம "பாலக்காட்டு சேட்டன் திரு மாரார்" கிட்ட கேட்டதுக்கு அவர் பரைஞ்சது என்னன்னா ‘தானா வளர்ர தென்னைமெரம். அதுல புடுங்கி எண்ண எடுத்தா என்ன ஏன் புடுங்கிங்கீறீங்கங்கறார். அங்கன பரைஞ்சாலே இந்தியாவிலே 95 சதவிகிதத்துக்கு மேலா எழுத்தறிவு, படிப்பறிவு உள்ளது கேரளாவில தான். தினசரி நியூஸ் பேப்பர் படிச்சுட்டே P.hd வாங்குற அளவுக்கு அறிவு ரோடெல்லாம் கொட்டிக் கிடக்குது. அந்த கேந்தியில லேசா தல சுத்துன உடன, ஒண்ணுக்கு மேலா ஒண்ணுக்கு போனவுடன ஓடிப் போய் டாக்டர பாக்கிற வினை எல்லாம் தான், இது மாதிரி பர்ஸ்டா வருது.

கலகலப்பா ஒரு பதிவு இருக்கும்யா, பாடிகார்டு முனிக்கு ஒரு கடிதம் இருக்கும்யா, என நகைச்சுவை தேடி வரும் இட்லி வடை வாசகர்களுக்கு வாங்கய்யா, உடம்ப நல்லா பாத்துக்கோங்க, நல்லவங்க கெடச்சா வந்து பழகுங்கய்யா...முடிஞ்சா சீனிய குறைங்க, டென்ஷன குறைங்க, உடற்பயிற்சி செஞ்சு, நல்லா கெதியா இருங்க என சொல்ல ஆசையும் அக்கரையும் உண்டுங்கோ.......


ஷூகர்னு கேட்டாலே சும்மா கிர்ர்ர்ர்ர்ர்ருங்குது இல்ல..


(லாரன்ஸ் / படுக்காளி.ப்ளாக்ஸ்பாட்.காம்) + அனுப்பிய நண்பர் R.Gopiக்கு நன்றி

13 Comments:

யதிராஜ சம்பத் குமார் said...

தேங்காய் எனக்கு ரொம்ப இஷ்டம். ஏன் இதெல்லாம் சொல்லி பீதிய கிளப்புறீங்க??

kggouthaman said...

அக்கரையோட போடப்பட்ட சர்க்கரைப் பதிவு. டூஸ் அண்ட் டோனட்ஸ் - இன்னும் கொஞ்சம் அகலமா ஆழமா - பி செண்டர் சி செண்டர் ஆட்களையும் அடையும் வண்ணம் இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

M Arunachalam said...

Thanks to Padukaali & R.Gopi as also IV for bringing to light such news for awareness of more people. I also saw the news in some channel couple of days back where they said Kerala has the highest no. of people diagnosed with diabetes.

This brings to my mind some very good & hilarious posts written by blogger Desikan on his tryst with diabetes in the following URLs:

1. சக்கரை இனிக்கிற சக்கரை

http://www.desikan.com/blogcms/?item=159

2. சீனி கம்

http://www.desikan.com/blogcms/?item=196

sreeja said...

படுக்காளி + கோபி + இவ = மூவர் கூட்டணிக்கு நன்றி. (!!!)

உருப்படியான பதிவு.

இந்த சுகர், பரம்பரையாகவும் வரும் அபாயமும் உள்ளது.

Anonymous said...

http://www.health-forums.com/alt-support-diabetes/coconut-diabetes-128367.html

மர தமிழன் said...

அட போங்க சார் அவனவன் பன்றி காய்ச்சலையே மறந்து போய் நேத்து 3 ரன்ல இந்தியா தோத்த சோகத்துல இருக்கான், சர்கரையாம் வியாதியாம், பல் தெய்க்கறதுதான் இப்போதைக்கு பெரிய exercise நம்மூர்ல.

Sundara said...

அண்ணே! இது ஒரு சதி. பார்ப்பனச் சதி. தமிழர்களை இனிப்பு சாப்பிடமுடியாமல் தடுக்கத்தான் இந்தப் பார்ப்பனக்கட்டுரை.
அ. நாமதேயன்

krish3898 said...

even,some people shot dead in american army,,that also,
பார்ப்பனச் சதி,,,good,very good.

ஈ ரா said...

கோபி - லாரன்ஸ் - இ.வ.

நீரிழிவு பற்றி அருமையான பதிவைப்போட்ட
நீருயர்வு !

மர தமிழன் said...

இதோ இன்னொரு பார்ப்பன சதி

இது வரை ஹார்லிக்க்ஸ் உற்சாகத்தையும், சுறு சுருப்பையும் தரும் என்று பாட்டல் பாட்டிலாய் வாங்கி குடித்த எனக்கு பேரதிர்ச்சி!!

இந்த முகவரிக்கு செல்லுங்கள் புரியும்... இந்திய முகவரி ஆண்டாண்டு காலமாய் செப்பனிடப்பட்டு கொண்டே இருக்க UK ல நல்லா தூங்கறதுக்கு இத குடிங்கன்னு நிலா படத்த போட்டு ...

மக்கா சாச்சு புட்டாடா...

(ஆமா இதுல எங்க பார்ப்பன சதி வந்ததுன்னு கேட்கறீங்களா - அட இந்த வார்த்தைய போட்டுதான் பல பேர் குபெரனாயிருக்கங்க ஸாமியொவ்)

http://www.horlicks.com/html/index.html

Anonymous said...

Blaming coconut was an end result of PR campaign done by hydrogenated oil companies few decades ago. West has woken up from this misinformation propaganda. See the link by anonymous and also do a search.

http://www.coconutresearchcenter.org/The key to deal with diabetes is to eat by glycemic index or go to a Zone like diet.

R.Gopi said...

"இனிப்பு கண்ணா இனிப்பு"

இந்த பதிவை பதிவு செய்த இட்லிவடைக்கு எங்கள் (லாரன்ஸ்/ஆர்.கோபி) மனமார்ந்த நன்றி...

பதிவை படித்து பாராட்டிய தோழமை அருண், ஈ.ரா., யதிராஜ் சம்பத்குமார், ஸ்ரீஜா மற்ற அனைவருக்கும் எங்கள் நன்றி.....

//kggouthaman said...
அக்கரையோட போடப்பட்ட சர்க்கரைப் பதிவு. டூஸ் அண்ட் டோனட்ஸ் - இன்னும் கொஞ்சம் அகலமா ஆழமா - பி செண்டர் சி செண்டர் ஆட்களையும் அடையும் வண்ணம் இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.//

கௌத‌ம‌ன் சார்... டூஸ் அன்ட் டோன்ட்ஸ் போட்டு இருக்க‌லாம்... பி & சி ஆட்க‌ளையும் அடைந்திருக்க‌லாம்... ஆனால், நம் ஆட்கள் அதையும் படித்துவிட்டு, ஒன்றுக்கு இரண்டாக "ஜாங்கிரி" சாப்பிட்டு விட்டு போவார்கள்.. இதே மேட்டரை நினைக்கும்போதுதான் காத்தாடி ராம‌மூர்த்தி அவ‌ர்க‌ளின் "அய்யா, அம்மா, அம்மம்மா" நாட‌க‌த்தின் இந்த‌ ட‌யலாக் ஞாப‌க‌ம் வந்த‌து...

டெல்லி கணேஷ் : ஏண்டா, பேப்பர்ல "ஸ்மோக்கிங் ஈஸ் இன்ஜூரியஸ் டூ ஹெல்த்"னு போட்டுருக்கே... அதை படிச்சுட்டுமாடா தம் அடிக்கறத விட மாட்டேங்கற...

காத்தாடி ராமமூர்த்தி : டேய்... மிச்ச நியூஸ் எல்லாம் பெருசா போட்டுட்டு, இந்த தம் அடிக்காதீங்கோங்கறத மட்டும் சின்னதா போட்டு இருக்கானே, அதனால, அதயும் படிச்சுட்டு, ஒரு தம் அடிச்சுட்டு போக வேண்டியதுதாண்டா...

Kameswara Rao said...

IV

Useful Info about Diabetes.
thozhar gopikku nandri.


Kamesh