பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, November 05, 2009

மாருதி மாலை - புதிர்


மக்களே இந்த 'பத்தி' பாடலை எழுதினது யாருனு சொல்லுங்க...

ஒன்று தெய்வம் ராமனே
உலகனைத்தும் கோயிலே
என்றுவாழும் தேவனே
எங்கள் ஆஞ்சநேயனே
அன்றரக்கர் வாலிலே
அஞ்சிலொன்றை வைப்பினும்
வென்றுவந்த வீரனே
வெல்க ராம தூதனே.

இரு நிலத்து வீரர்கள்
இருபுறத்தும் போரிட
குருநிலத்துப் பார்த்தனின்
கொடியில் வந்த மாருதி
அரிய வெற்றி அர்ஜுனன்
அன்றுபெற்ற காரணம்
கருதிவந்து நிற்கிறேன்
காக்கவேண்டும் ஐயனே

மூன்று தேவ தேவர்கள்
மூன்று தேவிமாருடன்
தோன்றுகின்ற போதிலே
தூயபிரம்மச் சாரியாய்த்
தோன்றுகின்ற வீரனே
துணையெனக்கு நின்னருள்
தோன்றுமாயின் என்னிடம்
தொடர்ந்து வெற்றி காணுமே

நாலு வேதம் நாவிலே
நல்லபக்தி மூச்சிலே
சீலம் அன்பு நெஞ்சிலே
சீர்த்தியென்றும் பேரிலே
நீலமேனி ராமனின்
நிலைத்தநாமம் உயிரிலே
நாளும் கொண்டு வாழும் உன்
நாமம் எங்கள் மந்திரம்

அஞ்சு பூதம் உன்னிடம்
அஞ்சும் பூதம் ஐயனே
மஞ்சுவண்ண ராமனை
மனதில் வைத்த மாருதி
தஞ்சமென்ற நேயரைத்
தாங்குகின்ற தெய்வமே
அஞ்சுவண்ண நாயகா
அஞ்சல் என்று காக்கநீ.

ஆறு வான மாகவே
அன்று சென்று ஜானகி
மீறு துன்பம் தீரவே
மீட்சிதந்த தூதனே
வீறுகொண்டு தூதர்கள்
மூவர்வந்து நிற்கையில்
கூற உண்டு மந்திரம்
கூவ உண்டு நெஞ்சகம்

ஏழு சாகரத்தையும்
இமைக்கும் முன்னர் தாவவே
மேலும் மேலும் ஓங்கும் உன்
மேன்மையென்ன புதியதா
பாலனான போதிலே
பரிதிநல்ல பழமென
நீளுகின்ற கையினால்
நீபறிக்கத் தாவினாய்

எட்டெழுத்தில் உள்ளவை
இரண்டெழுத்தில் உள்ளதைச்
சுட்ட வந்த மாருதி
சொல்லின் செல்வன் நீயெனக்
கட்டறுத்த ஞானியும்
கருதுகின்ற ராமனே
பட்டம் அன்று தந்தனன்
பல்கலைக்கும் வேந்துநீ.

ஒன்பதான வாசல்கள்
உள்ள வீட்டில் உள்ளநான்
இன்பவாழ்வு வாழவே
இராமநாமம் வேண்டுமே
அன்பிலாத கூட்டிலே
அச்சம் என்ற பேய்வரும்
என்பதாலே வேண்டினேன்
ஏற்றபக்தி நீகொடு

பத்து மொத்தம் திக்குகள்
பத்திடத்தும் உன்பெயர்
அத்தனென்று ஜானகி
அன்றழைத்த தன்மையால்
வித்து வேத வித்துநீ
வேட்கையற்றா ஞானிநீ
சித்து நீ அசித்துநீ
செய்கையற்ற பிரம்மம்நீ

தன்னை வெல்லும் ஒருவனே
தடையைவெல்லுவான் எனும்
உண்மைசொன்ன தேவனே
உன்னிடத்தில் வேண்டுகோள்
என்னுடம்பை எஃகிலும்
என்மனத்தை இடியிலும்
கண்ணிரண்டைக் கதிரிலும்
கடைந்துவைக்க வேண்டும் நீ

கன்னியர்க்குத் திருமணம்
காளையர்க்குப் பதவிகள்
சின்னவர்க்கு நெஞ்சுரம்
ஜெயம் எவர்க்கும் வேண்டுமே
பொன்னிறத்து மாருதி
புயலளித்த மைந்தனே
முன்னுகின்ற செயலெலாம்
முடித்துவைக்க வேண்டும் நீ

ஆழிதாவி ஆழியை
அன்று தந்த மாருதி
மீளவந்து நேரிலே
மெய்யர்காண நிற்கிறாய்
ஊழி ஊழி செல்லினும்
ஓங்கும் ஓங்கும் உன்புகழ்
வாழிராம மந்திரம்
வாழி ஆஞ்சநேயனே.

இந்தப் பாடலை எழுதியவர் யார்?

பின்னுட்டத்தில் பதில் சொன்னால் ஆஞ்சநேயர் அருள் கிடைக்கும் :-) தெரியாதவர்கள் இந்த பாடலை உங்க குழந்தைக்கு சொல்லிக்கொடுங்க!

22 Comments:

மானஸ்தன் said...

அருள்வேண்டி.
:-)

அமுதப்ரியன் said...

கவிஞர் வாலி
அமுதப்ரியன்

kggouthaman said...

நாமக்கல் வெ. இராமலிங்கம் பிள்ளை?

sitrodai said...

The writer is Crazy Mohan?

Anonymous said...

vali

R.Gopi said...

அட... இன்னும் யாருக்கும் ஆஞ்சனேயர் அருள் பாலிக்கவில்லையா??

நான் கூட‌ குழந்தைக்கு சொல்லி கொடுக்க‌ வேண்டிய‌து தான்!!!

Anonymous said...

Perarasu

Guru Prasath said...

kalaignar

Dubai Nara said...

கவிஞர் இளம்தேவன்

Anonymous said...

தெரியவில்லை.
மக்களே என்று எங்களை விளிப்பதற்குப் பதிலாக ‘மக்குகளே’ என்று அழைத்திருக்கலாம்!
-டில்லி பல்லி

யதிராஜ சம்பத் குமார் said...

அதிமுக அரசியல் பிரமுகரும், கவிஞருமான இளந்தேவன் அவர்கள் எழுதியது.

ஜெயக்குமார் said...

யோவ் இ.வ. நான் எழுதுன கவித இது..எப்படி இருக்குனு கேக்க வேண்டியதுதான.. எதுக்கு இப்படி சுத்தி வளைச்சிகிட்டு???

ரொம்ப நல்லா இருந்தது.. யார் எழுதியிருப்பினும்...

IdlyVadai said...

//Dubai Nara said...

கவிஞர் இளம்தேவன்//

Super!!

இந்த அழகான, பக்திச் சுவை ததும்பும் பாடலை எழுதிய கவிஞர், பின்னாளில் பாட்டு எழுதுவதை விடுத்து அ.தி.மு.க.வில் சேர்ந்து அம்மாவுக்குப் பேச்சு எழுதிக் கொடுத்து வீணாய்ப் போன கவிஞர் இளந்தேவன்!

சீனு said...

வர வர இட்லி பரிமாரப்படும் இலையில் நிறைய காவி நிறம் தெரிகிறதே...

மத்தபடி நல்ல, தேவையான பதிவு.

மானஸ்தன் said...

/// IdlyVadai said...
//Dubai Nara said...

கவிஞர் இளம்தேவன்//

Super!!

இந்த அழகான, பக்திச் சுவை ததும்பும் பாடலை எழுதிய கவிஞர், பின்னாளில் பாட்டு எழுதுவதை விடுத்து அ.தி.மு.க.வில் சேர்ந்து அம்மாவுக்குப் பேச்சு எழுதிக் கொடுத்து வீணாய்ப் போன கவிஞர் இளந்தேவன்
////

எதுக்காக இட்லி இப்டி கோவப்படறீங்க. இளந்தேவன் அனுமாருக்கு எழுதினா என்ன, அம்மாவுக்கு எழுதினா என்ன!!!

ரெண்டு பேருக்கும் அவங்க பலம் என்னன்னு சரியாத் தெரியாது. முதலாமானவர் தனக்கு பலம் இல்லைன்னு தப்பா நினைச்சுண்டு அடக்கி வாசிக்கரவரு. ரெண்டாவது ஆளு, தனக்கு இன்னும் பலம் ரொம்ப இருப்பதாக நினைத்து ஆடற ஆளு!!
எப்படியோ, ரெண்டு பேருக்கும் அவங்க பலம் சரியாத் தெரியாது!!!! அதுனால இளந்தேவன் அம்மாவுக்கு எழுதினது தப்பில்லை.

:>

vanila said...

இதை கவிஞர் இளந்தேவன் எழுதியிருப்பார் என்று எண்ணுகின்றேன்..

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//ரெண்டு பேருக்கும் அவங்க பலம் என்னன்னு சரியாத் தெரியாது. முதலாமானவர் தனக்கு பலம் இல்லைன்னு தப்பா நினைச்சுண்டு அடக்கி வாசிக்கரவரு. ரெண்டாவது ஆளு, தனக்கு இன்னும் பலம் ரொம்ப இருப்பதாக நினைத்து ஆடற ஆளு!!
எப்படியோ, ரெண்டு பேருக்கும் அவங்க பலம் சரியாத் தெரியாது!!!! அதுனால இளந்தேவன் அம்மாவுக்கு எழுதினது தப்பில்லை.
//
மானஸ்தன்.... கலக்கிட்டீங்க போங்க!

Any way,

இப்படி ஒரு அருமையான பாடலை எழுதிய இளந்தேவன் அவர்களுக்கும் அதைப் பதிவு செய்த இட்லிவடைக்கும் (எப்படியா பிடிக்கிறீங்க?) என் நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

Sundaresan said...

Crazy Mohan.

Guru Prasath said...

Why comparing Lord Hanuman with Amma. For me she feels like Kumbakarna. Predominantly she is in sabbatical(or resting) state. Her party members like ravana's army, trying very hard to wake her from long sleep.

Dubai Nara said...

நான் கல்லூரியில் படித்த காலத்தில் காரைக்குடி கம்பன் விழா கவியரங்கில் பாடினார்.

அப்போதே பத்தொடு பதினொன்றாக இவர் இல்லை என்று நினைக்க வைத்தார்.

மிகப் பெரிய அளவில் பேசப் படுவார் என்று நினத்தேன். ஆனால் டேக் ஆப் ஆகவே இல்லை.

நல்லோதோர் வீனை........

நல்லூரான் said...

//Dubai Nara said...

கவிஞர் இளம்தேவன்

Super!! //

யோவ் GOOGLE பண்ணினா எல்லாம் கிடைக்கிறது.. இதிலென்ன பிரமாதம்?
நம்ம பா.ரா தான் எனக்கு ஹெல்ப் பண்ணினாரு GOOGLE வழியா...

kggouthaman said...

முதலாமவர் - இராம நாம மகிமையை அறிந்தவர்; அதை என்றுமே மறவாமல் சிரஞ்சீவியாய் வாழ்பவர். நான் என்ற வார்த்தையையே அறியாதவர்.

இரண்டாமவர் - இராமச்சந்திர நாம மகிமையை - முன்பு அறிந்தவர், அதை என்றோ மறந்துவிட்டு வாழ்பவர். நான் என்ற வார்த்தை தவிர வேறு எதையும் இப்போதெல்லாம் நவில்வதில்லை.