பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, November 27, 2009

மூன்று

மூன்று சர்தார்ஜிக்கள் வண்டியில் ட்ரிபிள்ஸ் வந்து கொண்டிருந்தார்கள்.

போலீஸ்காரர் ஒருவர் கையைக் காட்டி வழிமறிக்க வண்டி ஓட்டி வந்த சர்தார்ஜி சொன்னார் "ஏற்கனவே நாங்க மூணு பேர் போய்ட்டு இருக்கோம், இப்ப வந்து லிப்ட் கேக்குறியே, அறிவில்லையா உனக்கு?"

இதைவிட நல்ல ஜோக் மூன்று கீழே இருக்கிறது...


டெலிஃபோன் மணி போல் சிரித்தவன் அவனா ?
இந்த பதிவை மறந்திருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். இப்பொழுது அந்த சாமாசாரம் தூசி தட்டப்பபடுகிறது.

சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி திரு.ரகுபதி, நீதிமன்றத்திலேயே பகிரங்கமாக ஒரு குற்றச்சாட்டைக் கூறினார். தமிழக கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஒருவர் ஒரு வழக்கு தொடர்பாக தன்னைத் தொடர்பு கொண்டு பேசியதாகவும் ( மிரட்டினார் என்றும் சொல்லலாம் ), இது தொடர்பாக அவ்வமைச்சர் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கூறினார். பிறகு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஒரு லெட்டர் எழுதினார்.

யார் அந்த அமைச்சர் என்று கேள்வி எழுந்த போது ஜெயலலிதா அந்த அமைச்சர் ராசாதான் என்று அடித்து கூறினார். ஆனால் ராசா இக்குற்றச்சாட்டை மறுத்தார். தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் என்றால், திமுக, காங்கிரஸ் தவிர வேறு எவரும் தமிழக அரசியல் கட்சியிலிருந்து மத்திய அமைச்சரவையில் இடம்பெறவில்லை. காங்கிரஸ் சார்பில் மத்திய அமைச்சராக இருக்கும் ஜி.கே. வாசன் நிச்சயம் செய்திருக்க மாட்டார் ஏன் என்றால் டெல்லியிலிருந்து பர்மிஷன் வாங்கி விட்டு தான் அவர் செய்ய முடியும். எஞ்சியவர்கள் பற்றி சொல்ல வேண்டாம்.

இந்த செய்தி கொஞ்ச நாள் பரபரப்பாக பேசப்பட்டது பிறகு காணாமல் போய்விட்டது. நீதிபதியும் அமைச்சர் தொடர்பு கொள்ளவில்லை, அவருடைய வழக்கறிஞர் மூலம் தொடர்பு கொண்டார் என கூறிவிட்டார். பிறகு நீதிபதிகளும் அதை பற்றி ஒன்றும் பேசவில்லை.

கத்தி போய் வால் வந்த கதையாக இப்பொழுது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக, S.C.அகர்வால் என்பவர், நீதிபதியை மிரட்டியது யார் என்பதனை தெரியப்படுத்த வேண்டுமென மனு செய்துள்ளார். இது தொடர்பாக மத்திய தகவல் வாரியம் உச்ச நீதிமன்றத்திடம் தகவல் கோரியுள்ளது. அதாவது அந்த மத்திய அமைச்சரின் பெயரும், அவருக்காக நீதிபதியைத் தொடர்பு கொண்ட அவரது வழக்கறிஞர் பெயரையும் 15 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டுமாம்.

அதில் அகர்வால் தனது மனுவில் முதலில் வந்த மீடியா தகவல்களின் படி, உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணுக்கு நீதிபதி ரகுபதி அமைச்சரே தன்னிடம் நேரடியாக பேசியதாக குறிப்பிட்டுள்ளார். அகர்வாலின் இந்த மனுவை மத்திய தகவல் வாரியம் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.


தொலைப்பேசிய மத்திய அமைச்சர் யாராக இருந்தாலும், சனி பகவானுக்கு சனிக்கிழமை பூஜையும், சனிபகவானின் வாகனமான காக்கைக்கு கொஞ்சம் சாதமும், ஒரு முறை திருநள்ளாறு சென்று வருவது நலம் பயக்கும்.


நிரந்திர நிவாரணம்

நேற்று ஆங்கில மீடியாவிற்கு கையும் ஓடலை காலும் ஓடலை. 26/11 ஒர் ஆண்டு நினைவு தினத்தை எப்படி கொண்டாடலாம் என்று குழம்பிப் போனார்கள். தாஜ் ஹோட்டலில் நடந்த பிராத்தனை கூட்டததை காண்பிக்க வேண்டுமா ? அல்லது கேட்வே ஆப் இந்தியா முன்பு மெழுகுவத்தி ஏற்றுவதையா ? அல்லது ஸ்டுடியோவிற்கு வந்த சண்டைபோட்டவர்களைஆ ? என்று ஒரே குழப்பம். சரி எதற்கு வம்பு என்று எல்லாவற்றையும் சின்ன சின்ன பெட்டியில் காமித்தார்கள். வந்தர்வர்களிடம், பொது மக்களிடம் திரும்ப திரும்ப ஒரே கேள்வி - உங்களுக்கு பயமா இருக்கா ? ராத்திரி தூக்கம் வருகிறதா ? அரசியல்வாதிகள் ஒரே மாதிரி சல்ஜாப்பு பதில்கள் என்று 26/11னை அருமையாக கொண்டாடினார்கள்.

பாராளுமன்றத்திலும் ஒரு நிமிஷம் மௌனத்துக்கு பிறகு ரகளையை ஆரம்பித்தார்கள். மும்பை தாக்குதலில் பிடிபட்ட தீவிரவாதி இன்னமும் தண்டிக்கப்படாதது ஒருபுறம் இருக்க, தாக்குதலில் மரணமடைந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு நிவாரணமே இன்னும் முழுமையாக வழங்கப்படவில்லையாம். பாராளுமன்றத்தில் இது குறித்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் திரு.எல்.கே.அத்வானி அவர்கள், மும்பை தாக்குதல்களில் ஏன் இன்னும் நிவாரணம் அளிக்கப்படவில்லை என கேள்வி எழுப்பினார். இதை தட்டிக்கேட்க ஏன் 26/11 வரை அவர்கள் காத்திருக்க வேண்டும் ? அதற்கு முன் இவர் என்ன செய்துக்கொண்டிருந்தார் ? நல்ல வேளை பிப் 29 அன்று நடக்கவில்லை, இல்லை என்றால் இவர்கள் நான்கு வருஷம் கழித்து தான் கேள்வி கேட்பார்களா ?


சம்பவம் நிகழ்ந்து ஓராண்டாகிவிட்ட நிலையில், பாதிக்கப்பட்டவர்களில் 403 பேர்கள் நிவாரணத்திற்கு தகுதி படைத்தவர்கள் என்று அறிவிக்கப்பட்டு, அதில் சுமார் 118 பேர்களுக்கு மட்டுமே நிவாரணம் அளிக்கப்பட்டிருக்கிறது. அதில் 64 பேர்களுக்கு நிவாரணமாக ரயில்வேயில் வேலை அளிக்கப்படுமென உறுதியளிக்கப்பட்டு, இதுவரை 32 பேர்களுக்கு மட்டுமே நியமனப் பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த செய்தியை வைத்துக்கொண்டு மீடியா கிழி கிழி என்று கிழித்து தள்ளிவிட்டார்கள் நேற்று இரவு. அஜ்மல் கஸாப் கோழி கறி கேட்டான் என்ற நியூஸ் வந்த போது ஏன் இப்படி கிழிக்கவில்லை இவர்கள் ?

சரி ஒரு வருஷம் கழித்து கேள்வி கேட்கிறார்கள், அதற்கு காங்கிரஸாருக்கு ஏன் கோபம் வரவேண்டுமென்று தெரியவில்லை. மூத்த காங்கிரஸ் தலைவரும், நிதியமைச்சருமான திரு.பிரணாப் முகர்ஜி சற்றே ஆவேசப்பட்டு பதிலளித்துள்ளார். பதிலளித்துள்ளார் என்பதை விட, தர்ம சங்கடமான கேள்வி கேட்டுவிட்டாரே என்று கோபபடாரா ? ஆத்திரப்பட்டாரா என்று தெரியவில்லை. ஏதோ பட்டார். குருவிற்கு விடை தெரியலை என்றால் கோபித்துவிட்டு விடை சொல்லாமல் தப்பிக்க வேண்டும் என்று சாஸ்திரம் சொல்லுகிறது. ஆத்திரகாரனுக்கு புத்திமட்டு என்றும் ஒரு பழமொழி இருக்கு. நேற்று அவருக்கு கோபமா ஆத்திரமா என்று தெரியவில்லை. ஆனால் பார்க்கும் நமக்கு கோபமும், ஆத்திரமும் சேர்ந்து வந்தது.

மும்பை தாக்குதலை பாஜக ஏற்கனவே அரசியலாக்க முனைந்தது; அதற்கான பலனும் தேர்தலில் கிடைத்தது; திரும்பவும் அரசியலாக்க முனைகிறது; திரும்பவும் பலன் கிடைக்கும் என பாஜக அடைந்த தோல்வியை சுட்டிக் காட்டி ஆவேசப்பட்டுள்ளார். ஆனால் அத்வானி கேட்ட கேள்விக்கு இது எவ்வகையில் பதிலாகும் என்பது ப்ரணாப்பிற்கே வெளிச்சம்.

தொடர் தீவிரவாத தாக்குதல்கள், அப்ஸல் குரு, அஜ்மல் கஸாப், தீவிரவாதத்திற்கெதிரான நடவடிக்கைகள் இவைகளைப் பற்றி பாஜக தவிர எந்த எதிர்க்கட்சியுமே வாய் திறப்பதில்லை. சிறுபான்மை பக்தி இதற்கு ஒரு காரணம். தவிர பாஜக எப்பொழுது எழுப்பினாலும், முன்பு உங்கள் ஆட்சியில் அது நடந்ததே, இது நடந்ததே என சால்ஜாப்பு சொல்கிறதே தவிர ஆக்கப்பூர்வமான தீர்வு இதுவரை எட்டப்படவில்லை.

இந்நிலையில் அஜ்மல் கஸாப்பின் ஒரு நாளுக்கான பராமரிப்பு செலவு 8.5 லட்சமாம்!! காங்கிரஸ் சார்பில் தினமும் அவனுக்கு ஸ்வர்ணாபிஷேகம் எதுவும் நடக்கிறதா என்று தெரியவில்லை. இதுவரை கிட்டத்தட்ட நமது வரிப்பணத்தில் 35 கோடிகள் ஒரு கொலைகாரனைக் காபந்து செய்ய செலவழிக்கப்பட்டிருக்கிறது. இதுவரை செலவழிக்கப்பட்ட பணத்தில் நாலில் ஒரு பங்கு கூட பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணமாக அறிவிக்கப்படவில்லை.


பாதிக்கபட்ட மக்களுக்கு உண்மையான நிவாரணம் பெட்ரோல் பங்கோ, ரயில்வே வேலையோ இல்லை. Zero Tolerance for Terrorism என்ற கொள்கை. கிடைக்குமா ?


26/11 பழைய பதிவு

மீண்டும் இந்தியா ஒளிர்கிறது

கலைஞர் முன்பு அடிக்கடி கூறுவார்....தில்லியின் தலைநகர் கோபாலபுரத்தில் என்று. இப்பொழுது அவவாறு சொல்லக்கூடிய வாய்ப்பில்லை என்றாலும், காங்கிரஸ் கழகத்தை பல விதங்களில் தனக்கு முன்னோடியாகக் கொண்டுள்ளது. ஹிந்துக்களை அவமதிப்பது, ஊழல், இலவச அரிசி, இலவச கலர் டிவி, என்று தொடங்கி கட்-அவுட் வைப்பது வரை பட்டியல் மிக நீளம். ஆனால் காங்கிரஸ் கொஞ்சம் கழகத்தை விட காஸ்ட்லியான கட்சியாதலால் எல்லாமே காஸ்ட்லியாகத்தான் நடக்கும்.

இனி பாரத மக்களுக்கு காங்கிரஸ் தலைவி சோனியாவையும், பிரதமர் மன்மோகன் சிங்கையும் தெருவுக்குத் தெரு, முச்சந்திக்கு முச்சந்தி என திரும்பியவிடமெல்லாம் தரிசிக்கும் பாக்யம் கிட்டப் போகிறது. ஆம்!! எங்கெங்கு காணினும் சக்தியடா என்று பாரதி பாரதிதாசன் சொன்னது போல, எங்கெங்கு காணினும் சோனியாவடா என்று சொல்லும்படியாக தேசிய நெடுஞ்சாலைத் துறை ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பதவியேற்ற பிறகு சாலைகளை மேம்படுத்துவதில் அதிக அக்கறை (??) காண்பித்துள்ளதாம். அதனை சிறப்பிக்கும் வண்ணம் ஒவ்வொரு 25 கிலோ மீட்டர் தொலைவிற்கும் ஒரு பதாகை, அதுவும் எவ்வாறு?? காங்கிரஸ் தலைவி அன்னை சோனியா மற்றும் மன்மோகன் ஆகியோர்களின் புகைப்படங்களைத் தாங்கிய பதாகை!! இவர்களுடைய (காங்கிரஸினுடைய) இத்திட்டம் புதிய சோடா பாட்டிலில் அடைக்கப்பட்ட பழைய சோடா!! இது ஏற்கனவே பாஜக அரசால் செயற்படுத்தப்பட்ட தங்க நாற்கர சாலைத் திட்டம். அதனை சற்றே பெயர் மாற்றி "National Highways Developement Programme (NHDP) என்று செயல்படுத்தி வருகிறது. அது போகட்டும், யார் ஆரம்பித்தாலும் பயன்பட்டால் சரிதான்.

இதில் விஷயம் என்னவெனில், இந்த ஒரு பதாகைக்கு ஆகக் கூடிய செலவு சுமார் 4 லட்சம் என கணக்கிடப்படுகிறது. சுமார் ஆயிரம் கிலோமீட்டர்களுள்ள நெடுஞ்சாலையில், 25 கி.மீக்கு ஒன்றாக வைத்துக் கொண்டாலும் சுமார் 40 பதாகைகள் சுமார் 1.6 கோடி ஆகிறது. இதனை தயாரிக்கும் செலவு அதனை தயாரிக்கப் போகும் தயாரிப்பாளர்களைச் (நெடுஞ்சாலைத் துறை) சேர்ந்தது. இதனை பராமரிக்கும் செலவு தனியாரிடம் விடப்படப் போகிறது. இந்த பதாகைகளில் இவ்விருவரின் புகைப்படம் தவிர, திட்ட இயக்குனர், மேற்பார்வையாளர், திட்ட மதிப்பீடு போன்றவை பற்றிய விவரங்களும் கொசுறாக இடம்பெறும். தவிர இந்த பதாகைகள் ஒரு குறிப்பிட்ட முறையில்தான் தயாரிக்க வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது. புகைப்படங்கள் தெளிவாக தெரிய வேண்டுமென்பதற்காக சிறப்பான முறையில் அதிக பொருட்செலவோடு தயாராகிறது. 1000 கிலோ மீட்டர்களுக்கே இவ்வளவென்றால், நாடு முழுவதுமுள்ள 70000 கி.மீ சாலைகளுக்கு எவ்வளவு செலவாகுமென்பதை தோராயமாக நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.


சாலையோரங்களில் இருக்கும் இப்பதாகைகள் காற்றின் வேகத்தைக் குறைக்க உதவுமென கூறப்படுகிறது. ராமர் பாலத்தை இடிக்க முற்பட்டவர்கள் இப்பொழுது வாயு பகவானின் வேகத்தைக் குறைக்கப் போகிறார்களாம். தேசிய நெடுஞ்சாலைத் துறையின் விதிமுறைகளின் படி, சாலையோரங்களில் விளம்பரங்கள் வைக்கப்படக் கூடாது. இவ்விதமான பதாகைகள் உங்களது விதிமுறைகளையே மீறுவதாகாதா என கேட்டதற்கு, சாலையின் பயனாளர்கள் அரசின் இத்திட்டத்தைப் பற்றி அறிந்து கொள்ளும் பொருட்டே இவை அமைக்கப்படுகின்றனவே தவிர இது விதிமுறை மீறலாகாது என பதிலளிக்கப்பட்டுள்ளது. திட்டம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமானால் இவர்களின் புகைப்படம் எதற்கு?? ரோடு போட்ட பணியாளர்கள் புகைப்படத்தைப் போடலாமே?? எல்லாம் அவர்களுக்கே வெளிச்சம்.

ஒருபுறம் இந்தியா முழுவதிலும் விவசாயிகள் பட்டினிச் சாவால் இறந்து கொண்டும், தற்கொலை செய்து கொண்டும் இருக்கின்றனர். மறுபுறம் நக்ஸல்கள் மற்றும் ஜிஹாதி தீவிரவாதிகளின் அட்டூழியங்கள் ஜகஜ்ஜோதியாக நடைபெறுகின்றன. மறுபுறம் சீனா நம்மிடத்தை ஆக்கிரமிக்கிறது. இவற்றிற்கெல்லாம் தீர்வு காண அரசிற்கு துப்பில்லை. இந்நிலையில் இது போன்ற ஆடம்பர விளம்பரங்கள் தேவையா?? இந்தியா ஒளிர்கிறது என்று பாஜக தேர்தல் பிரச்சாரம் செய்த போது மக்களின் வரிப்பணம் தண்ணீராய் செலவிடப்படுகிறது என்று கவலைப்பட்ட காங்கிரஸ் இப்போது இதுபோன்ற உதவாத வேலைகளில் முனைந்துள்ளது. உத்திரப்பிரதேசத்தில் மாயாவதி தனக்குத்தானே சிலை நிறுவிக் கொண்டதற்கு கண்டனம் தெரிவித்த காங்கிரஸ், தற்போது அதே போன்ற வேலையில் ஈடுபட முனைகிறது.

தவிர, சாலைகள் என்பது ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு அத்யாவசியமானது. அதனை மேம்படுத்துவது ஒரு அரசின் கடமைகளுள் ஒன்று. இதில் விளம்பரப் படுத்திக் கொள்வதற்கு ஏதுமில்லை. நாங்கள் சாலை போட்டோம், நாங்கள் குளம் வெட்டினோம் என்று பீற்றிக் கொள்ள இதில் எதுவுமே இல்லை. இவைகளை செய்வதர்க்குத்தான் இவர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.


ஒரு அரசாங்க ஊழியன் இன்று இவ்வளவு பைல்களைப் பார்த்து கையெழுத்திட்டேன் என்று அதைப் பெரிய் சாதனையாக தன்னுடைய அலுவலக வாயிலில் பெரிதாக விளம்பரப் படுத்திக் கொண்டால் அது எவ்வளவு அபத்தமாக இருக்குமோ இதுவும் அவ்வளவு அபத்தம்.


( யதிராஜ் + இட்லிவடை )

13 Comments:

maddy73 said...

wonderful & thoughtful messege by the authors.

Looking like u r imitating 'cho'(thuglak).. b'cos such type of articles (content and also the words/sentences ie the language style) appear in thuglak.

I appreciate the article.. atleast some readers will think & convery the mesg. to others.

பாலாஜி said...

நாட்டில் செய்ய வேண்டிய ஆக்கபூர்வமான விஷயங்கள் பல உள்ளன அதை விடுத்து இது போன்ற விஷயங்களில் கவனம் செலுத்துவது வருத்தம் தரக்கூடிய ஒன்று

மானஸ்தன் said...

//நேற்று ஆங்கில மீடியாவிற்கு கையும் ஓடலை காலும் ஓடலை. 26/11 ஒர் ஆண்டு நினைவு தினத்தை எப்படி கொண்டாடலாம் என்று குழம்பிப் போனார்கள்.//

//பாராளுமன்றத்திலும் ஒரு நிமிஷம் மௌனத்துக்கு பிறகு ரகளையை ஆரம்பித்தார்கள்.//

:-))

மோகன்தாஸ் said...

//எங்கெங்கு காணினும் சக்தியடா என்று பாரதி//

இது பாரதிக்கு தெரியுமா?

Anonymous said...

Mayavathi 1000 silai vaikka sonna maathiriya?

(A)DMK mattum enna level kammiya? some ideas! Kalaignar / Picture printed
i ) ll tickets - (Ticket price hiked)
ii) in every street name board (Tamil la thaan irukkanum sollipitten aama)
iii) all govt buildings & posters
iv) free pocket calender with picture
v) inna pira anaithilum.
itharkaaga, Japan idam irunthu 10000 Crore Tender korapaadum.

read this way!
>> எங்கெங்கு காணினும் சகதியடா

IdlyVadai said...

//இது பாரதிக்கு தெரியுமா?//

"கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன்" :-)
அது பாரதிதாசன் கவிதை. தவறுக்கு மன்னிக்கவும்.

Anonymous said...

" GOOD POST" "WNODERFULS ARTICLE"

""THANKS ""

THIS OUR PROBLEM. WE ARE HAPPY BY EPRESSING OUR IN MAGAZINE .BLOG POST ,IN MEDIA ETC
WHAT IS THE SOUTIOM?
"nO WE CAN ONLY CRTISZE AND WIRTE WHAT IS WRONG AND WHOS IS WRONG
iTS NOT OUR JOB TO COME FORWARD CLEAN THE SOCITY"
hAVE YOU EVER COME DOWN TO SEE THE LIFE OF POOR
MK,RAJA AND OTHER POLTICIANS ARE BETTER THAN YOU GUYS!
yES OFCURSE THEY ARE COMMING TO MAKE THE MONEY ANDCHEAT PUBLIC.ATLEAST FOR THAT REASON THEY ARE COMMING AND SEE THE POOR PEOPLE .
bUT WHTAT YOU GUYS HAVE? ONLY BIG MOUTH!
tHATS IT!
aS LONG AS YOU PEOPLE ARE THERE THERE IS BIG CHANCE MORE PEPOLE COMMING LIKE MK AND OTHERS.YOU GUYS CAN SIT IN THE A/C MAKE POSTS.yOCANT DO A JOB WHICH IS PHYSCICALY HARD .BACAUSE ... FILL UP YOURSEF

SATHEESH said...

ஹலோ இ வ . நீங்கதான யதிராஜ சம்பத்குமார் ?

மர தமிழன் said...

ஆக்ரோஷமான நடிகர்களின் நடிப்பை நேரில் பார்க்க முடியாதவர்கள் குறையை நேற்று பிரணாப் முகர்ஜி தீர்த்து வைத்தார் என்றே சொல்லவேண்டும்.. அடேய் யப்பா என்ன ஆவேசம்.. இப்போதான் தெரியுது ஏன் எதிர்கட்சி லேட்டா கேட்டாங்கன்னு... முன்னாடியே கேட்டிருந்தா ' ஒண்டிக்கு ஒண்டி' குஸ்தி கோதா ல்லாம் நடந்துருக்குமோ என்னமோ. அனா அந்த கேள்வியே தப்பு ன்ன மாதிரி ஆங்கில தொலைக்காட்சிகள் உட்பட 'ஐயோ இன்னிக்காவது உங்க அரசியல நிருத்தமாட்டேங்கலான்னு' திரும்ப திரும்ப பிளாஷ் நியூஸ் போட்டுக்கிட்டே இருந்ததுதான் செம காமெடி (இவங்களோட ஸ்கூப் நியூஸ் அத்வானி அடிச்சிட்டாரே ன்னு ஆத்திரம் போல!) யோக்கியன் வரான் சொம்ப எடுத்து உள்ள வை ன்னு சொல்றா மாதிரி....

my name is பில்லா said...

ஐயா அனானி இந்த பிக் மௌத் கத்தரதுனாலதான் எல்லாரும் ஏழைங்கள பாக்க வராங்க ன்னு தெரியுமா உனக்கு. சரி ஒத்துக்கறோம் நாங்க தான் விளம்பரத்துக்கு அலையறோம்.. நீ?? ஏழைகளுக்காக ஏதாவது கிழிசிருக்கன்னா படம் போட்டு பாகம் குறிக்கறது தானே? இட்லிவடைகுள்ளையே மூஞ்சி காமிக்க முடியல உன்னால.. பேச வண்ட பெரிசா... ஏன்யா எல்லாத்தையுமே சொல்லிட்டு செய்யறதுக்கு நாங்க என்ன கட்சியா நடத்தறோம். இல்ல ஏழை இன்னும் ஏழையா இருக்கறதுக்கு நாங்கதான் காரணமா? இந்த சவுண்டு கூட இல்லன்ன என்னிக்கோ உன்னையும் என்னையும் வித்துட்டு எறோப்ளான் ஏறி இருப்பானுங்க.. புரிஞ்சிக்கோ..

Anonymous said...

"'ஐயா அனானி இந்த பிக் மௌத் கத்தரதுனாலதான் எல்லாரும் ஏழைங்கள பாக்க வராங்க ன்னு தெரியுமா உனக்கு""
aDRA SAKKAI!! aTHU EPPEDI SAMMI ELLATHUKKUM NEENGALAE URMAI KONDADARENGA? APPADI PATHA ENNEEKU NADU SEERAZHINTHU PONATHUKLUM NEENGATHAN KARANAMA ? BALE!!
NALLAA KALLAM 67-ELL AATCHI MARRIYATHU! ATHUKAPPURAM SOCITY CHANGED BIT BY BIT
OTHERWISE YOU WOULD KEPT THE UNEDUCATUED PEOPLE IN DARK.BUT ONE THING IS SURE STILL YOUR EGO (GARVAM "NATHANAAN ARRIVALLI MATHAVANEELAM WSATE") IS THERE
BUT IT WILL GO SOON!
IV KEE MUGAM KADAYTHU! ATHULA COMMENT yAAR POTA ENNA? cOMMENT YAARTHUNUU PAKKAMA ATHULA ULLA UNMAYA EDUTHUKUNGO SIR!
ID ODDA NAAN COMMENT POTA ENNAKU JATHI POOSI ORRU JALLI ADPEEKNAG .i POST A WHAT IFEEL

Kameswara Rao said...

இ,வா, & எதிராஜ்

இது எத்துனை பேருக்கு புரியும் என்று நினைக்கேரீர்கள் நம் நாட்டில் தான் என்ன செய்தோம் என்று சொல்லிகொள்வதில் தெரியும் வரிப்பன செலவு இதில் தெரிந்தால் அதுதான் enaka ஆச்சர்யமான ஒரு விஷயம் மற்றபடி இதுவும் ஒரு செலவுதான் கணக்கில்லாதது அவ்வளவுதான். நாம் புழுங்க வேண்டியதுதான் போலம்பவேண்டியதுதான் செவிடன் kaathil சங்கூதி என்ன பயன்

இப்போதாவது உண்மை தெரியும் என்று நம்பினால் நாம் அடி முட்டாள் தான் neethipathiyum சிவனே என்று போய்விடுவார்
நாம் தான் ஒலிபெருக்கியை கத்திகொண்டிருக்கவேண்டும்

நாம் செலுத்தும் varippanaam ஆகா பூர்வமான காரியங்களுக்கு செலவழிக்க பட்டதெல்லாம் அந்தக் kaalam இப்போது அதை பார்த்து பேருமுவது தான் inthaak காலம்
காமேஷ்

Asir said...

தொலைப்பேசிய !??? மத்திய அமைச்சர் யாராக இருந்தாலும்


Ha ha h ah

@ Nakkal...

Congrats ....