பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, November 24, 2009

மவுன வலி - கொத்து பரோட்டா

திடீர் என்று முதல்வர் ஏன் விடுதலை புலிகளை பற்றி 'மவுன வலி' என்று பேசுகிறார் என்று தெரியவில்லை. இன்று ஃபிரஷாக கேள்வி பதில் அறிக்கையில்...

முதல்வர் கேள்வி பதில் அறிக்கை
"மவுன வலி' என்ற தலைப்பில் நீங்கள் எழுதிய கடிதத்தை ஒரு சிலர் ஏற்காமல், விமர்சனம் செய்கின்றனரே?


ஈழ விடுதலைப் போரில் வீழ்த்தப்பட்ட வேங்கை பிரபாகரனுக்காக என் விழிகள், நீரைப் பொழிகின்றன. அதே நேரத்தில், இளந்தலைவர் ராஜிவும், நாவலர் அமிர்தலிங்கமும், யோகேஸ்வரன், முகுந்தன், சிறீ சபாரத்தினம், பத்மநாபா, யோதீஸ்வரன் கொல்லப்பட்ட போது, அவர்களை இழந்த மனைவி மக்களும், உற்றார் உறவினர்களும், நண்பர்களும் கண்ணீர் பெருக்கியபோது, அவர்களோடு சேர்ந்து கண்ணீர் சிந்த எனக்கு உரிமை இல்லையா?புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன் மறைந்த போது, ஓர் இரங்கல் கவிதை எழுதினேன். மடிந்த ஒருவருக்கு அனுதாபம் தெரிவித்ததைக் கூட, ஜெயலலிதாவால் பொறுத்துக்கொள்ள முடியாமல், "புலிகளுடன் கருணாநிதிக்கு ரகசியத் தொடர்பிருக்கிறது' என்றவர் தான் அவர்.அப்படி அறிக்கை விட்டவர்களைப் பற்றி எதுவும் சொல்லாமல், சொல்ல துணிவு இல்லாமல் என் மீது பாய்கின்றனரே; தமிழ் இனம் தாழ்வதற்கும், வீழ்வதற்கும் இதை விட காரணங்கள் இருக்க முடியுமா?


ஜெயலலிதா உட்பட சிலர், நீங்கள் பிரபாகரனை கடுமையாகத் தாக்கி எழுதிவிட்டதைப் போல அறிக்கை விட்டுள்ளனரே?


பிரபாகரனைப் பற்றி அறிக்கை அல்ல; கடிதம் அல்ல; அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில், "இலங்கைக்கு இந்திய ராணுவத்தை அனுப்பி பிரபாகரனை கைது செய்ய வேண்டும்' என, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அப்படியொரு தீர்மானத்தை முன்மொழிந்தவர் தான், நான் நல்லதை எண்ணி, நடுநிலையுடன் எழுதியதற்கு நம் மீது பாய்கிறார். "பிரபாகரனை என்றைக்கும் ஆதரிப்பேன்' என சொல்லிக் கொண்டிருப்பவர்களும், அம்மையாருக்குத் துணை போய், நம்மைத் தாக்கி அறிக்கை விடுகின்றனர்.


துரோகிகளுக்கு நீங்கள் பாராட்டுப் பத்திரம் வழங்குவதாக ஒருவர் அறிக்கை வெளியிட்டிருக்கிறாரே?


உண்மை தான். துரோகிகள் யார் எனத் தெரியாமல், அவர்களுக்கு சில காலம் பாராட்டுப் பத்திரம் வழங்கிக் கொண்டிருந்து விட்டேன்.


இலங்கைத் தமிழர் முகாம்களுக்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்வதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டு விட்டதா?


இலங்கைத் தமிழர்கள் தங்கியுள்ள முகாம்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கும், முன்னுரிமைப்படுத்தப்பட்டுள்ள நலத் திட்டங்களை உடனடியாகச் செயல்படுத்துவதற்கும், முதற்கட்டமாக 45 கோடி ரூபாய் ஒப்பளிக்கப்பட்டு, 20ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டு விட்டது. 37 கோடியே 33 லட்சம் ரூபாய்க்கான திட்டங்களுக்கு நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டு விட்டது.இதுதவிர, நலத் திட்டங்களான - உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான காப்பீட்டுத் திட்டத்தில் சேர்த்தல், இலவச கலர் "டிவி' வழங்குதல், திருமண நிதி உதவி, விளையாட்டு உபகரணங்கள், ஊனமுற்றோருக்கு உபகரணங்கள் வழங்குதல், ஈமக்கிரியைக்கான தொகையை உயர்த்துதல், மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் போன்றவை, சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் உடனடியாக நிறைவேற்றவும் அரசாணை பிறப்பிக்கப்பட்டு விட்டது.ஒதுக்கீடு செய்யப்பட்ட 100 கோடி ரூபாயில், இதற்கான செலவுகள் போக எஞ்சியுள்ள தொகையில் தக்கதொரு கட்டட வடிவமைப்பை ஏற்படுத்தி, தகுதியான நிலத்தைத் தேர்ந்தெடுத்து, புதிய கான்கிரீட் வீடுகள், ஊரக வளர்ச்சித் துறை மூலம் கட்டுவதற்கு, தனியாக நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

கல்கி தலையங்கம்
தமிழக முதல்வர் திடீரென்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தாம் மௌனமாக அழுவதாகத் தெரிவித்திருக்கிறார்! அந்த அழுகையின் ஒலி யாருக்கும் கேட்காது என்றும், அதன் வலி யாருக்கும் புரியாது என்றும் கூடுதலாக அதே அறிக்கையில் அவர் சொல்லியிருப்பது எதன்பொருட்டு என்பது புதிராகவே இருக்கிறது!

விடுதலைப் புலி தளபதிகள் சிலருக்கு ஆதரவு அளித்ததுடன் விவேகத்தைக் கடைப்பிடிக்கும்படி அறிவுறுத்தியதாகவும் ஒப்புக் கொண்டிருக்கிறார் கருணாநிதி. அந்த அறிவுரையை அவர்கள் கேட்டிருந்தால், இன்று நிலைமையே வேறாக இருந்திருக்கும். ஆனால், அவர்கள் தேர்தலைப் புறக்கணிக்குமாறு இலங்கைத் தமிழர்களை வற்புறுத்தினார்கள்; அதன் பின்விளைவுகள் சோகமயமாகிவிட்டன என்பதாகவும் கனத்த இதயத்துடன் முதல்வர் தமது அறிக்கையில் கூறுகிறார். இலங்கை அதிபராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்கும் வகையில் தமிழர்கள் தேர்தலில் வாக்களித்திருந்தால், சமீப சரித்திரம் வேறு விதமாக எழுதப்பட்டிருக்கும் என்பது அவர் கருத்து.

விடுதலைப் புலிகளோ அவர்களுடைய தலைவரோ யாருடைய அறிவுரையைத்தான் கேட்டார்கள்?! தமிழர் நலன் என்பதைக் காட்டிலும் அதிகார வேட்கையே அவர்களது முடிவுகளுக்கும் செயல்பாடுகளுக்கும் ஆதாரமாக இருந்தது; பொதுநலன் என்பதைக் காட்டிலும் பழிவாங்கும் வெறிதான் அவர்களைக் கண்மூடித்தனமாக இயங்கச் செய்தது. இதனால் விளைந்த உயிர்ச்சேதம், பொருள் சேதம் இரண்டுமே சொல்லி மாளாதவைதான்.

கருணாநிதி கூறுவதுபோல், புலிகள் அவருடைய அறிவுரையைக் கேட்டு நடந்து, தேர்தலில் இலங்கைத் தமிழர்கள் வோட்டுப் போட்டு, ரணில் விக்ரமசிங்கே அதிபராகியிருந்தாலும், பேச்சு வார்த்தைக்கு அவர் அழைப்பு விடுத்து அது நடந்திருந்தாலும், விடுதலைப்புலிகள் அந்த இடைவெளியைப் பயன்படுத்தி தங்களை மேலும் பலப்படுத்திக் கொண்டு திரும்பவும் இலங்கை அரசையும் ராணுவத்தையும் தாக்கத்தான் முற்பட்டிருப்பார்கள். ஆயுதம் துறந்து ஜனநாயக ரீதியான தீர்வுக்கு அவர்கள் ஒத்துழைத்திருப்பார்கள் என்று நம்புவதற்கு எந்த முகாந்திரமோ முன் நிகழ்வு ஆதாரமோ இல்லை.

இலங்கைத் தமிழர்களின் மறுக்கப்பட்ட உரிமைகளைப் பெற்றுத் தருவதற்கு, இந்தியாவில் வேறு யாரைக் காட்டிலும் அதிகமாகச் செய்யக்கூடிய நிலையில் இருப்பவர் கருணாநிதி தான். அவர் மட்டும் மத்திய அரசுடன் அமர்ந்து பேசி, இலங்கை அரசுக்கு எவ்வாறு அழுத்தம் கொடுக்கலாம் என்று எடுத்துச் சொல்லி செயல்திட்டம் வகுப்பாரேயானால், மத்திய அரசு அதை ஏற்காமலிருக்க முடியாது. அப்படியே மத்திய அரசு சுணக்கம் காட்டினாலும், கூட்டணிக் கட்சித் தலைவர் என்கிற முறையில் கருணாநிதி பிரதமரை நிர்ப்பந்திக்க முடியும். தமது கட்சி எம்.பி.க்களுக்கான அமைச்சக இலாகாக்களைப் பெறுவதில் தி.மு.க. தலைவர் வெற்றி கண்டது சமீபத்திய சரித்திரம். இலங்கைத் தமிழர்கள் உரிமைகளுக்காக அழுத்தம் கொடுத்து அவர் புதிய வரலாறு படைக்கலாமே!

பிறகு ஏன் ஈழத்தமிழர்களுக்கான உரிமைகள் குறித்து சிந்தித்துச் செயல்படாமல், நடந்து முடிந்த கதைகளை நினைவுகூர்ந்து `சென்டிமெண்ட்' பேச வேண்டும்? மத்திய அரசைப் பகைத்துக் கொள்ள மனமில்லாமல், மக்களை உணர்ச்சிகரமான வார்த்தைகள் மூலம் கவர்ந்து அனுதாபம் பெறும் முயற்சியாகவே இது தோன்றுகிறது!

கலைஞர் 50 என்ற நிகழ்ச்சி ஒன்றை ரெடி செய்யுங்கப்பா

13 Comments:

lalitha said...

இளந்தலைவர் ராஜிவும், நாவலர் அமிர்தலிங்கமும், யோகேஸ்வரன், முகுந்தன், சிறீ சபாரத்தினம், பத்மநாபா, யோதீஸ்வரன் கொல்லப்பட்ட போது, அவர்களை இழந்த மனைவி மக்களும், உற்றார் உறவினர்களும், நண்பர்களும் கண்ணீர் பெருக்கியபோது, அவர்களோடு சேர்ந்து கண்ணீர் சிந்த எனக்கு உரிமை இல்லையா?


[[[அறிந்தறிந்து செய்கிற பாவத்தை அழுதழுது தான் தொலைக்க வேண்டும்]]]]

லெமூரியன்... said...

பங்கருக்குள் ஒளிந்து கொண்டு வெடி மருந்து படிந்த காஞ்சி குடிப்பவனுக்கு மட்டுமே தெரியும் அவன் கஷ்டம். இங்கு குளிரூட்டப்பட்ட அறையில் உட்கார்ந்து கொண்டு புலிகள் ரத்த வெறி பிடித்தவர்கள் என்று எழுதுவது மிகவும் பெரிய காமெடி. தலித் மக்கள் தோளில் துண்டு போட்டு சென்றாலே பொருத்து கொள்ள முடியாத ஆதிக்க கிராமங்கள் பரவலாக தமிழகத்தில் இருக்க.....கல்கி புலிகளை பற்றி எழுதுவது கோமாளித் தனம். நிற்க. பெரியவர்(மூ.கா) இன்னும் அந்த காலத்திலேயே இருக்கிறார்....வார்த்தை ஜாலங்கள் மூலம் மக்களை மதி மயக்கலாம் என்று....!
அவர் மௌன வலி, சூது ஒழி என்று எது சொன்னாலும் இனி யாரும் அவரை சீண்டப் போவதில்லை..!
அப்படியே அவர் சிறிது முயற்சி எடுத்தாலும் நாயர்களும் மேனன்களும் அதை அமுக்கி போட்டு விடுவார்கள்.
தன் நாட்டினுள்லையே தன் ராணுவத்தை அனுப்பி போரிட்டுக் கொண்டிருக்கும் ஒரு அரசாங்கத்திற்கு பிராந்திய நலன் காக்க முயற்சிப்பது கேலிக்கூத்தான விஷயம்.

காஸ்மிருக்கும் நாகலாந்திர்க்கும் ஸ்பெசல் பாஸ் வாங்காமல் மற்ற மக்கள் அந்த பகுதிக்கு சென்று வர இந்த வக்கற்ற நாயர்களும் மேனன்களும் முயற்சிக்க வேண்டும்.

saivakothuparotta said...

no comments the reason is "Mouna vali"

Anonymous said...

If muka would have told before prabakaran's Death it would have been different Story.Now praba is no more. so muka can blabber anything he wish, who cares or who can question.Soon he will say if ltt was not there he would got Thani Ellam Very long time .even he will say that prabakaran came in his dream (pakuatharivu!!)and apperciated hinm for his views and feel regert for his (praba)own mistaekes and requested him to care
the rest of tamils in srilanka as he is the only one can do !!
He is real camalin (in tamil: pachonthi)
But still some allakys beliving that prabakaran is alive and he will come in open soon ( today or
tommorow ?)
If so we will get one more arrikai from muka.imagine how funny it will and get may be get gayana pedanm virudhu for best novel by muka

Anonymous said...

மக்களை மதி மயங்க வைத்து வோட்டு வாங்கும் பனங்காட்டு நாரி.

யதிராஜ சம்பத் குமார் said...

கல்கி புலிகளை பற்றி எழுதுவது கோமாளித் தனம்.//


கல்கியை எழுதுவதை கோமாளித்தனம் என்று விமர்சிப்பது இருக்கட்டும்! இங்கு புலிகளுக்காக வீரம் பேசியவர்கள் காங்கிரசுடன் கைகோர்த்தது ஏன்? காங்கிரஸை வேரோடும் வேரடி மண்ணோடும் அழிப்போம் என்று சவடால் பேசியவர்கள் அதே காங்கிரசிடம் சரணாகதி அடைந்தது ஏன்?? இங்கு ராஜபக்ஷேவை நாயை விடக் கேவலமாக விமர்சித்து விட்டு, இலங்கை சென்று கைகுலுக்கி விட்டு இங்கு வந்து அவருடைய விருந்தோம்பல் பற்றிப் பெருமை பேசுவது ஏன்?? இங்கு மேடைகளில் முழங்கிய அனைத்தையும் ராஜபக்ஷேவிடம் நேரடியாகவே கேட்டிருக்கலாமே?? எங்கு சென்றது இனமானமும், வீரமும்?? ஒருகால் டி.ஆர்.பாலு சொன்னால் எதை வேண்டுமானாலும் இனமானக் காவலர்கள் செய்வார்களோ??


ஆதிக்க கிராமங்களில் இன்றும் தலித் மக்கள் தோளில் துண்டு போட்டு நடமாட முடியாதது பற்றி தலித் மக்களின் ஆபத்பாந்தவனாகப் போற்றப்படும் பெரும்தலைவர் மானமிகு. திருமாவளவன் இதுவரை என்ன செய்துள்ளார்? அவர் ஏன் அதற்கெல்லாம் போராடக் கூடாது?? விடுதலைப் புலிகளுக்கு குரல் கொடுப்பதில் லட்சத்தில் ஒரு பங்கு நேரமாவது உள்ளூர் தமிழர்களுக்காக ஒதுக்கியிருக்கலாமே? ஈழ சகோதரிகளுக்காகக் குரல் கொடுக்கும் மானமிகு சீமான் மற்றும் திருமாவளவன் போன்றோர் உள்ளூர் சகோதரிகளுக்காக ஏன் நேரம் ஒதுக்குவதில்லை?? ஐரோப்பிய நாடுகள், கனடா என்று பறந்து பறந்து புலிகளுக்காக குரல் கொடுக்கும் நேரத்தில் இதோ கூப்பிடு தூரத்தில் இருக்கும் நாட்டார் மங்கலத்திலும், திண்ணியத்திலும் ஏன் இவர்களால் பிரச்சனைகளைத் தீர்க்க முடியவில்லை?? கையாலாகாத் தனமா அல்லது கரன்ஸிகள் கிடைக்காததினாலா?

சீனு said...

//ஐரோப்பிய நாடுகள், கனடா என்று பறந்து பறந்து புலிகளுக்காக குரல் கொடுக்கும் நேரத்தில் இதோ கூப்பிடு தூரத்தில் இருக்கும் நாட்டார் மங்கலத்திலும், திண்ணியத்திலும் ஏன் இவர்களால் பிரச்சனைகளைத் தீர்க்க முடியவில்லை??//

அவரு ஆன்சைட் போறாருப்பா...புலிகள் இருந்தப்போ எல்லாம் தெரியல. இப்போ தான் அவருக்கு "முள்வலி" தெரியுது. ஜு.வி. படிங்க. பயங்கர காமெடியா இருக்கு.

இவங்க நடத்துற நாத்தம் பிடிச்ச 'அரசியல்' தான் இலங்கையில ஒரு லட்சம் மக்கள் சாவுக்கு காரணம். ஆனா, அதையெல்லாம் சாமர்த்தியமா காட்டிக்கம மறைச்சு, அங்க போயி ராமன் வேண்டாம், இராவணனை ஏத்துக்கோங்கோனு பாடுவார் திருமா. தூ...

இ.வ.,

உங்களுக்கு அந்த கட்டுரை கிடைக்கலியா?

"ராமன் ஆரியன்! ராவணன் தமிழன்! ராமன், ராவணனை அழித்தான் என்றால், ஆரியன் தமிழனை அழித்தான் என்றுதானே பொருள்! அரக்கன் என்று முத்திரை குத்தி அழித்தான் என்பதுதானே அதன் அடிப்படை! அப்புறம் எப்படி, இந்த மண்ணின் மைந்தனான ராவணனை நீங்களும் அரக் கனாகப் பார்க்கிறீர்கள். தமிழனின் எதிரி ராமனை ஆண்டவனாக ஏற்கிறீர்கள்!
இந்துத்துவக் கருத்தியலால் ஈழத்தமிழர்களிடையே ஏற்பட் டுள்ள சிக்கல்களையும், அது ஈழவிடுதலைக்கு எத்தகைய இடர்ப்பாடுகளைத் தரும் என்பதையெல்லாம் சுட்டிக்காட்டிப் பேசினேன்.
"

அதாவது ஈழபோருக்கு காரணமும் இந்துக்கள் தானாம். "சாவு வீட்டிலும் அரசியல் பன்னும்..." (பில் இந்த ப்ளாங்க்ஸ்)

vedanarayanan said...

கலைஞருக்கு என்ன compulsions புரியவே இல்ல.
இப்படி ஒரு ஐடியாவே இல்லாம பேசறது, even DMK மத்தியிலே, அவரோட ministers , his family மத்தியிலே அவருக்கு என்ன மரியாதையை கொடுக்கும் என தெரியவில்லை.

Family பெரிசாக பெரிசாக, compulsions from all side is throwing away his stand on the basics of DMK.

SUBBU said...

no comments the reason is "Mouna vali"

Repeatuuuu ;)

Anonymous said...

//"ராமன் ஆரியன்! ராவணன் தமிழன்! ராமன், ராவணனை அழித்தான் என்றால், ஆரியன் தமிழனை அழித்தான் என்றுதானே பொருள்! அரக்கன் என்று முத்திரை குத்தி அழித்தான் என்பதுதானே அதன் அடிப்படை! //

அப்போ அடுத்தவன் பொண்டாட்டிய தூக்கினு போனது தமிழன் தானா? ஆரியனோ திராவிடனோ அமெரிக்கனோ தன் பொண்டாட்டிய தூக்கினு போனவன் சங்க
அறுக்காம வேற என்ன பண்ணனுமாம்?

//அப்புறம் எப்படி, இந்த மண்ணின் மைந்தனான ராவணனை நீங்களும் அரக் கனாகப் பார்க்கிறீர்கள். //

ராவணன் பார்பனன், சிவ பக்தன், இப்போ இவர் மண்ணின் மைந்தன் என்று சொல்லும்போது... பகீர் சித்தர் இவருக்கு FRANCHISE குடுத்துட்டாரா என்ன?
========
// compulsions from all side is throwing away his stand on the basics of DMK.//
IS THERE ANY BASICS IN DMK? PLS LET US KNOW IN DETAIL.

======
இலங்கை தமிழர்களுக்கு கூட நல வாழ்வு கிடைத்து விடலாம். ஆனால் தமிழ் நாட்டு தமிழருக்கு ஒருக்காலும் கிடைக்காது, பிற்படுத்தப்பட்ட மக்கள் அப்படியே இருக்கும் வரை தான் இவர்கள் சம்பாதிக்க முடியும். ஆட்சியாளர்கள் பிச்சையிலே மக்களை வாழவைப்பதற்கு எந்த EXTEND வரையிலும் அவர்கள் போவார்கள்.

Kameswara Rao said...

இவ,

வயதானவர், muthiyavar எதோ வயதின் மூப்பு காரணமாக எதோ உளறுகிறார்.. இந்த mattum தான் மு.க வின் "மௌன வலியை" எடுத்துக்கொள்ளவேண்டும் அதை விடுத்தது... என்னப்பா .. அவர் வீட்டிலேயே அவரது உரை எடுத்துகொள்ளதபோது நாம் என் அலட்டிகொள்ளவேண்டும்..எப்போது அவருக்கு இலங்கை விஷயம் அரை நாள் உண்ணா விரதமாக மாறியதோ அன்றே புரியவில்லையா (புரியாதவர்களுக்கு) அவர் ஒரு கை தேர்ந்த வியாபாரி என்று. If he does not have enough strength in the Assembly he will ask him MLA's to resign which will have no impact these are all his gimicks but nothing else.. unnecessaryily talking about kuruma ( i am sorry thiruma) he is no.1 opportunist and living example for that.

Kamesh

பொற்கோ said...

விடுதலை புலிகளை அழித்தொழிக்க ஆதரவு தருவதற்கு தான் மத்தியில் இலாகாக்கள் கொடுத்து சரி கட்டினார்கள்.இது தான் உண்மை! இப்படியெல்லாம் சொல்லி இனியும் ஏமாற்ற தமிழன் இவருக்கு ஏமாந்த சோணகிரியா?

venkatramanan said...

சென்னை புத்தகக் கண்காட்சி – ஒரு டிரெயிலர் - நேசமுடன் வெங்கடேஷ்: டிசம்பர் 28, 2009 முதல் ஜனவரி 8, 2010 வரை புத்தகக் கண்காட்சி நடைபெற இருக்கிறது. சென்னை பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரே இருக்கும் செயிண்ட் ஜார்ஜ் பள்ளி வளாகமே புத்தகக் காட்சி வளாகம்.

அன்புடன்
வெங்கட்ரமணன்