நச் பூமராங் போட்டி முடிவுகள்
ஜெயக்குமார்
1. "இப்போது தி.மு.க.வோடு ஆட்சியில் சேர்ந்தால் பாத்திரம் கழுவும் வேலை தான் மீதம் இருக்கும்'' - பீட்டர் அல்போன்ஸ்
அப்ப நீங்களும் சாப்பிட நெனச்சீங்கன்னு சொல்லுங்க...
3. ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடாவின் ஊழல்கள் தோண்ட தோண்ட பெருகுகின்றன. - செய்தி
ஒருவேளை ஊழல் சுரங்கமோ அவர்..
மர தமிழன்
2. "இடைத்தேர்தலே தேவை இல்லை என்பது தான் எங்கள் கருத்து. அதை ஒரு தமாஷாகத்தான் நாங்கள் கருதுகிறோம்'.
-பாமக நிறுவனர் ராமதாஸ்
சிரிப்பு டாக்டர்
பெயர் சொல்ல விருப்பமில்லை
4. முடிதிருத்தகம், சலவையகங்களில் விடுதலைஏடு - செய்தி
சமூகத்தை திருத்தறேன்னுட்டு இப்போ முடியத்தான் திருத்தப் போறாங்களா?
முதல் பரிசு: ஜெயக்குமார்
இரண்டாம் பரிசு: மர தமிழன், பெயர் சொல்ல விருப்பமில்லை
வாழ்த்துகள்.
பரிசுபெற்றவர்கள் தங்கள் முகவரியை எனக்கு idlyvadai2007@gmail என்ற ஐடிக்கு அனுப்பினால் ( வழக்கம் போல தாமதமாக ) பரிசு அனுப்பிவைக்கப்படும்.
கலந்துக்கொண்ட அனைவருக்கும் நன்றி.
அன்புடன்,
இட்லிவடை
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Friday, November 27, 2009
நச் பூமராங் போட்டி - முடிவுகள்
Posted by IdlyVadai at 11/27/2009 04:19:00 PM
Labels: நச் பூமராங், போட்டி
Subscribe to:
Post Comments (Atom)

நன்றி: தினமணி










13 Comments:
ஒரு பரிசுப்போட்டி வெச்சி - சுறுசுறுப்பா - பரிசையும் அறிவிச்சிட்டீங்களே!
இன்னைக்கு மழைதான்!
என்னை ஞாபகமிருக்கா?போன வருஷம் ராமதாஸ் கமெண்ட் போட்டியில் பரிசு பெற்ற அதிர்ஷ்டசாலி??9பரிசு இன்னும் வரலைன்னு நான் சொல்லனுமா? அறிவிக்காதீங்க..அறிவிச்சா கொடுத்துடுங்க..லேட்டாவாவது...
//என்னை ஞாபகமிருக்கா?போன வருஷம் ராமதாஸ் கமெண்ட் போட்டியில் பரிசு பெற்ற அதிர்ஷ்டசாலி??9பரிசு இன்னும் வரலைன்னு நான் சொல்லனுமா? அறிவிக்காதீங்க..அறிவிச்சா கொடுத்துடுங்க..லேட்டாவாவது...//
உங்களுக்கு முதலில் அனுப்பிய பரிசு போய் சேரவில்லை கூரியரிடம் கேட்டதற்கு சரியான பதில் இல்லை. அதனால் அடுத்த முறை Professional Courier மூலம் அனுப்பினோம். அதுவும் உங்களுக்கு கிடைக்கவில்லை என்று தற்போது தான் எங்களுக்கு தெரிகிறது. திரும்பவும் உங்க அட்ரஸ் கூடவே ஃபோன் நம்பரையும் அனுப்புங்க. அந்த பரிசை ஸ்பான்சர் செய்தவரிடம் சொல்லுகிறேன்.
நன்றி
தண்டோரா - முடிந்தால் உங்க அலுவலக முகவரி கொடுங்கள் அல்லது நான் சொல்லும் முகவரியில் போய் புத்தகத்தை வாங்கிக்கொள்ளுங்கள்.
பரிசு வந்து சேர்ந்ததா இல்லையான்னு தண்டோரா போட்டு அறிவிக்க்கவும்னு - இட்லி வடையில சில மாதங்களுக்கு முன் வலது புறம் மேல் பகுதியில் ஓர் அறிவிப்பு பார்த்த ஞாபகம், எனக்கு இருக்கிறது.
It's good to see u conduct contest and award prize also.
But.. I wonder, If I claim as the winner & give my address , email id etc.. (as if I am 'Jayakumar', 'Mara-thamizhan' & 'Peyer solla viruppamillai)..
Do u have any fool proof method..?
PS..(No attempt made to know who Idlyvadai actually is).
Friendly yours..
ஹி ஹி நா கூட ஒரு கேள்வி கேட்டிருக்குறேன் (madhavan73.blogspot.com)
கரீக்டா சொன்னா பரிசு கூட கொடுப்பேன்..
//
பரிசு வந்து சேர்ந்ததா இல்லையான்னு தண்டோரா போட்டு அறிவிக்க்கவும்னு - இட்லி வடையில சில மாதங்களுக்கு முன் வலது புறம் மேல் பகுதியில் ஓர் அறிவிப்பு பார்த்த ஞாபகம், எனக்கு இருக்கிறது.
//
13 வாரங்களுக்கு முன் இந்த அறிவிப்பு செய்திருந்தேன்:
பரிசு அறிவிப்பு:
இரண்டு பேர் வந்து விட்டது என்று சொல்லிவிட்டார்கள். ஒருவர் தான் பாக்கி. வந்துவிட்டது என்றால் தண்டோரா அடித்து சொல்லவும் :-)
தேர்ந்தெடுத்த இட்லிவடைக்கு நன்றி.
//இரண்டாம் பரிசு: மர தமிழன், பெயர் சொல்ல விருப்பமில்லை //
வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி. நன்றி, இட்லிவடை அவர்களே!
பரிசு வருமம்ம்ம்ம்..ஆனா வராது...அத்தான் இட்லி வடை..
மிக்க நன்றி இட்லி வடை, எனக்கும் பரிசுகளுக்கும் ரொம்ப தூரம்! உங்களிடத்திலிருந்து வந்ததில் மகிழ்ச்சி. பின்னூட்டமிட தாமதம் குடும்பத்தில் ஒரு திருமணம், அதனால் வெளியூர் பயணம். போட்டியில் கலந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும், பரிசு பெற்ற சக நண்பர்களுக்கும் நன்றி மற்றும் வந்தனம்.
பரிசு நான்குநாட்களுக்கு முன்னர் கையில் கிடைத்தது. நன்றி இட்லிவடை. கிட்டத்தட்ட வாழ்க்கையில் முதல் முறையாய் பரிசு பெறுகிறேன் என நினைக்கிறேன்.. ஸ்கூலில் மூன்றாவதாய் வந்ததற்குக் கூட பரிசு ஏதும் தரவில்லை.. மிக்க மகிழ்ச்சி.மேலும் சோ எழுதிய புத்தக்ம் கிடைத்தது கூடுதல் மகிழ்ச்சி.
நன்றி, ஜெயக்குமார்
Post a Comment