பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, November 23, 2009

வெடிக்கும் லிபரன் கமிஷன் ரிப்போர்ட்

டிசம்பர் 6ம் தேதி அயோத்தியில் நடந்த இறை தலம் இடிப்புக்குப் பின் பத்தே நாட்களில் அமைக்கப்பட்ட கமிஷன் தான் லிபரன் கமிஷன். பஞ்சாப், ஹரியானாவில் உட்கார்ந்திருந்த (சிட்டிங்) நீதிபதி லிபரனை வாங்கண்ணே. நல்லா இருந்த எடத்த இடிச்சு போட்டுட்டாங்க, யார் இடிச்சான்னு எல்லாருக்கும் தெரியுது, ஏன் இடிச்சாங்கன்னும் தெரியுது ஆனா யாராரு இதுல சம்பந்தக்காரரு, அந்த மாநில சர்க்காரு வீகம் என்னன்னு கொஞ்சம் சொல்லுங்கன்னு கேட்டுச்சு நம்ம இந்திய சர்க்கார். ”மாதவ் காட்போலே”ன்னு அப்போதைய ஹோம் செக்ரட்டரி, சொல்றது தான் சொல்றீங்க கொஞ்சம் சீக்கிரமா சொல்லுங்க, மிஞ்சி போனா ஒரு மூணு மாசம் அதுக்குள்ள சொல்லிடுங்க.

சரின்னு வேலையை ஒப்புத்துக்கிட்டவர் நம்ம லிபரன். அவர் முழுப் பேரு ”மன்மோகன் லிபரன்” (இவர் பேரும் மன்மோகன்). இந்திய வரலாற்றிலே சாதனை படைக்க வைச்சுட்டார். எப்படி? ஒண்ணு இல்ல ரெண்டு இல்ல 48 எக்ஸ்டென்ஷன். இன்னும் வேலை முடியல, கொஞ்சம் நாளாகும் என சொல்லி சொல்லி. இந்த மிக நீளமான விசாரணை, 339 பேரிடம், செத்துப் போன ”நரசிம்மராவ்” முதல் எல்லார் கிட்டயும் விசாரணை. அது மட்டுமா, இந்திய வரலாற்றிலே மிக அதிக பொருட்செலவில் உருவான காவியம் (இங்கு “பொன்னர் சங்கர்” நினைவு யாருக்கும் வராமலிருக்கட்டும்). செலவு தொகை 8 கோடி. இது மட்டுமா, காலத்திலும் மிக அதிகம் என சாதனை படைத்து. பதினாறு வருசத்துக்கு பொறவு 900 பக்கத்துல ரிப்போர்ட் ரெடி பண்ணி மன்மோகன், மன்மோகனிடம் கொடுத்தார்.

இந்த ரிப்போர்ட் கசிந்து நாளிதழின் வாய் வழியாக இன்று தேச மக்களை தொட்டது. வெல்லங் காய்ச்சினவன் ஒருத்தன் விரல் சூப்பினவன் மத்தவன்ங்கிற கதையா, செய்தி போட்டு காச பார்த்த பத்திரிக்கையாளர் ஒரு புறம், எப்படி லீக் ஆச்சு, காச்சு மூச்சு-ங்கிற எதிர் கட்சி ஒரு புறம், எங்க தப்பில்ல தெரியாது என இரு தலை கொள்ளியாய் ஆளும் கட்சி மறுபுறம். இன்னும் கொஞ்சம் நாளைக்கு அரசியல் சட்டியில் நெருப்பு பொறி பறக்கும்.

நன்றி: லாரன்ஸ் - படுக்காளி.ப்ளாக்ஸ்பாட்.காம்

லிபரன் கமிஷன் ரிப்போர்ட் டிசம்பர் 6 வரை லிபரலாக வெடிக்கும். அதன் புகை வானத்தில் தோன்றும் ஸ்பெக்டரத்தை மறைக்கும்

19 Comments:

மானஸ்தன் said...

//டிசம்பர் 6ம் தேதி அயோத்தியில் நடந்த இறை தலம் இடிப்புக்குப் பின் பத்தே நாட்களில் அமைக்கப்பட்ட கமிஷன் தான் லிபரன் கமிஷன்.//

எந்த வருஷம்ன்னு கொஞ்சம் சொல்லிடுங்க. உ.நா. சொன்ன மாதிரி நம்ம மக்களுக்கு "தேசிய வியாதி" இருக்கு.

:>

IdlyVadai said...

//எந்த வருஷம்ன்னு கொஞ்சம் சொல்லிடுங்க. உ.நா. சொன்ன மாதிரி நம்ம மக்களுக்கு "தேசிய வியாதி" இருக்கு.//


தெவசம் வருஷா வருஷம் வரும்

Anonymous said...

LIBRAN COMMISSION REPORT WILL NOT AFFECT SPECTRUM. SPECTRUM IS A TRUMP CARD CONGRESS WILL KEEP AGAINST KARUNANIDHI AND DMK. KARUNANIDHI WILL PLEDGE ANYTHING AND EVERYTHING TO CONGRESS FOR BURYING SPECTRUM WHICH WILL NEVER BE DONE. NOR THE MARAN BROTHERS WILL ALLOW IT TO DIE TILL THEY SETTLE THEIR SCORES AGAINST RAJA. DON'T WORRY. IN THIS COUNTRY ONLY INTERNAL QUARELLS WILL EXPOSE UNHOLY THINGS. LET US PRAY SOMETHING HAPPENS BETWEEN CONGRESS AND DMK OR WITHIN THE FAMILY SO THAT SPECTRUM WILL BE VISIBLE TO ALL.

Asir said...

ஸ்பெக்டரத்தை மறைக்கும்

Ha ha ha ha

@Over Nakkal

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//லிபரன் கமிஷன் ரிப்போர்ட் டிசம்பர் 6 வரை லிபரலாக வெடிக்கும். அதன் புகை வானத்தில் தோன்றும் ஸ்பெக்டரத்தை மறைக்கும் //

மஞ்சள் கமெண்ட் சூப்பரே..................ய்!

Anonymous said...

iv
Manasthan enthavarushannu kelvi keetaru
Audhuku sambandhame ellama oru Bathil""தெவசம் வருஷா வருஷம் வரும்""
Aaa .. uunana .. Ulla nelartha kaamekiragley?

Hariharan # 03985177737685368452 said...

Just a pre-emptive move by Congress govt with the connivance of foreign loyal Indian English Media just to blind fold Indian public on the 26/11 Islamist war on Mumbai last year.

Anonymous said...

பாஜகவிற்கு உதவும்.வழக்குப் போட்டால் பாஜகவினர் அதை வைத்து அனுதாபம் தேடுவார்கள்.
வழக்கு 50 வருடம் நடக்கும்.அதற்குள் அத்வானி,வாஜ்பாயி,ஜோஷி மேலுலகம் போய் விடுவார்கள்.
ஆக மக்கள் வரிப்பணத்திற்கு இன்னும் கொஞ்சம் எள்ளு.

vedanarayanan said...

எனகென்னவோ இது காங்கிரஸ் பண்ணிய திருகுதாளம் மாதிரி தெரியவில்லை. பிஜேபி இல் ஒருத்தனை ஒருத்தன் அடிச்சிகிட்டு இருக்கற டைம்ல அவங்கள ஒண்ணு சேர்க்கற மாதிரி இந்த ரிப்போர்ட் லீக் ஆகி இருக்கு .

So it is a leak somehow for BJPs benefit .
Or it is to ban RSS /BJP through legal ways , is Sonia that strong ?.

sathish said...

NDTV X24 x7 Claims that they are the only channel having the leaked information? how they got it? Who gave information, will not give for free.Its seems to be the tv want some bussines .thats why this sensnational news.
May be the parliment will have from funs next few days
Burga dat and ndtv will get some publicity with exculsive interviews with cong and bjp leaders who will get a chance to come in tV
Nothing more will happen.
As a common man we can enjoy the in commedy in papers ,tv channels and blogs
i thing BJP must took the issue back and recomond a for a commission under a retired judge to probe how the Ram temple was damaged by Mugals

Unless the military take the country on its hand ,orru urupadathu sir
srinivasan

Kameswara Rao said...

IV,

Your yellow comment was nice. Public in general has the tendency to forget and Indians in particulars have proved it time and again... you will have something or other to leave behind the burning topic and to jump to the next level... what an irony is "Sonia that STrong" banning RSS and BJP can you ban a Muslim League party in pakistan . our people are so secular in nature that is what I can say.. you (We) are not going to gain anything but for the blame game to continue for some next some days/weeks .. NDTV this four letter channel was the first one to make the comment "Hindu Extremist" did anybody question ours is supposed to be a predominantly Hindu dominated country where we fight for unbaissed selection in various levels .. vekka kedu...

Kamesh

ந.லோகநாதன் said...

முதல்ல குரொத்வாச்சி, ஸ்ப்ப்ட்ரம் பற்றி அறிக்கை தேவை

யதிராஜ சம்பத் குமார் said...

இந்த விஷயம் பாஜகவின் கோஷ்டிப் பூசலுக்கு முடிவு கட்டுமோ என்னவோ தெரியாது....ஆனால் ஜஸ்வந்த் சிங் சொல்ல மறந்த குற்றச்சாட்டுகளை நினைவு படுத்த உதவும். நான் அப்பொழுதே பாபர் மசூதியை இடிக்க வேண்டாமென்று சொன்னேன்., அத்வானிதான் கேட்ககவில்லை என்ற ரீதியில் நாளை டைம்ஸ் நெள, NDTV, CNN IBN ஆகிய அனைத்திலும் இவர் பேசிக் கொண்டிருப்பார்.


So it is a leak somehow for BJPs benefit .
Or it is to ban RSS /BJP through legal ways , is Sonia that strong ?


இதற்கான சாத்தியக்கூறுகள் நிச்சயம் கிடையாது, தவிர காங்கிரசும் முனையாது. இது முழுக்க முழுக்க ஒரு சிவில் வழக்கு....கிரிமினல் வழக்கு அல்ல. ஆகவே இதனைக் காரணம் காட்டி பாஜக/ஆர்.எஸ்.எஸ் தடை என்பது சாத்தியம் இல்லை. தவிர அப்படியே முனைந்தாலும் 1984 சீக்கிய கலவரத்திற்காக காங்கிரஸை என்ன செய்வது?? ராஜீவ் கிட்டத்தட்ட வெளிப்படையாகவே ஒப்புக் கொண்டார்....மரம் விழுந்தால் பூமி அதிர்வது இயற்கை என்று!! ஐரோப்பிய தேசத்து அன்னை கூட பகிரங்கமாக மன்னிப்பே கோரினாரே?? மன்னிப்பு கோரினால் அவரது கடவுளர் போல் இறந்த 2400 பேரும் உயிர்பெற்று விடுவார்கள் என்பது எண்ணமா??

vinu said...

This parliament session was successfully diverted from the Spectrum issue.
Congrats congress....

vedanarayanan said...

yathiraj,

Thanks for the details that it is a civil case.

Anonymous said...

Mr.Idly vada,
Some times your comments hurt the feelings of us. Are you RSS member. Just asking this.

The "Thevesam" comment is horrible

your blog is read by ppl from all religions. Try to be non partial.

IdlyVadai said...

//Mr.Idly vada,
Some times your comments hurt the feelings of us. Are you RSS member. Just asking this.

The "Thevesam" comment is horrible

your blog is read by ppl from all religions. Try to be non partial.//

Sorry if I had hurt your sentiments. But I can confirm to you that I am not a 'டிரவுசர் பாண்டி '

Selvakumar said...

மாப்பு.. இட்லிக்கு லிபரான் அடிச்சுட்டாண்டா ஆப்பு..

Anonymous said...

\\Sorry if I had hurt your sentiments. But I can confirm to you that I am not a 'டிரவுசர் பாண்டி '//

Thank you Mr.idly vadai for your response. I also feel sorry if i have hurt you.

REALLY SORRY

Abdul Salam
Kuala Lumpur Malaysia