பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, November 13, 2009

இட்லிவடை : வருத்தமான யதார்த்தம் - நேசமுடன் வெங்கடேஷ்

நண்பர் வெங்கடேஷ் பற்றி அதிகம் சொல்லத் தேவையில்லை. அவரை பற்றிய விரிவான அறிமுகம் இங்கே இருக்கிறது. தொடர்ந்து பல பத்திரிகையில் எழுதி வருபவர். இவருடைய 'டிஜிட்டல் உலகம்' ஜூவியில் வந்த போது நல்ல கவனத்தை பெற்றது. கிழக்கு பதிப்பகம் கொண்டு வந்த ஆதவன் சிறுகதைகள் உருவாக முக்கிய காரணமாக இருந்தவர்.

இந்த வார கல்கியில் எஃப் எம் வானொலியைப் பற்றி எழுதியுள்ளார். இட்லிவடையை இவர் எழுதிய கட்டுரை கீழே... அவருக்கு என் நன்றி!

இட்லிவடை வலைப்பதிவுகள் எழுத ஆரம்பித்து ஆறு ஆண்டுகள் முடிந்ததை ஒட்டி சில செய்திகளை எழுதவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். பல வகைகளில், இட்லிவடை இணையத்தின் முக்கியமான சாதனை. இட்லிவடையில் பேசப்படும் விஷயங்கள், மஞ்சள் கமெண்டுகள், பாடிகாட் முனீஸ்வரன் கட்டுரைகள், கேள்வி பதில் பகுதிகள் போன்றவை தேர்ந்த பத்திரிகையாளர் ஒருவரின் அணுகுமுறையை எடுத்துக்காட்டுகிறது.

ஆரம்பத்தில் இட்லிவடை தொடங்கியபோது, நண்பர்கள் மத்தியில் நிறைய ஹேஷ்யங்கள் இருந்தன. சொல்லப்போனால், சந்திக்கும் இணைய நண்பர்கள் மத்தியில் ‘நீங்கள்தானே இட்லிவடை’ என்று கேட்டுக்கொள்ளாதவர்களே இருக்க மாட்டார்கள். என்னை இரண்டு மூன்று பேர் கேட்டிருக்கிறார்கள். என் தலையை ஏன் உருட்டுகிறார்கள் என்று நினைத்துக்கொள்வேன்.

இப்போது ஆறு ஆண்டுகள் முடிந்தபின்னர், இட்லிவடையின் வளர்ச்சி, போக்கு, பார்வை, நோக்கு என்றெல்லாம் யோசிக்கும்போது, தோன்றியவை இவை:

1. இணையம், அனானிமிட்டி என்று மறைந்து திரியும் வாழ்க்கைக்கு பாதை சமைத்துக்கொடுத்திருக்கிறது. இது ஒரு வகையில் தலைமறைவு வாழ்க்கை. தம் கருத்துகளை சமூகம் முகத்துக்கு நேராக ஏற்காதபோது, நேரடியாக பேசமுடியாத போது, விருப்புவெறுப்பின்றி, பயமின்றி சொல்ல சொல்ல முடியாதபோது, தலைமறைவு எழுத்து மிகவும் உபயோகமாக இருக்கிறது. இதற்குள் பல உட்பொருள்களை / கேள்விகளை நீங்கள் புரிந்துகொள்ளவும் கேட்கவும் முடியும்.

முதலாவது, இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில், ஏன் இப்படி ஒருவர் தலைமறைவு எழுத்தை எழுத வேண்டும்? இங்கே அவர் தம் கருத்துகளை பட்டவர்த்தனமாக முன்வைக்க எது அவரைத் தடுக்கிறது? அப்படி தம் கருத்துகளை முன்வைக்கும்போது, ஏற்படக்கூடிய பாதிப்புகளைப் பற்றிய பயம், குழப்பம், பாதுகாப்பின்மை அல்லது ஸ்டீரியோடைப்பிங் (உ.தா: அவன் அப்படித்தான் பேசுவான். .....சாதிக்காரன் தானே) இதற்குக் காரணங்களாக இருக்கலாம் அல்லவா?

நான் அறிந்து திரைமறைவு வாழ்க்கை என்பது அது தரும் ‘த்ரில்’லுக்காக எங்கும் மேற்கொள்ளப்படுவதாகத் தெரியவில்லை. உள்ளே நோக்கம் என்று ஒன்று இருக்கிறது.

2. இரண்டாவது பரிமாணம் பயனர்களிடம் ஏற்பட்டிருக்கும் மனமாற்றம். பெரும்பாலும் முகம் இல்லாமல் எழுதப்படும் எதையும் சந்தேகத்தோடு அணுகும் மனப்பாங்கு நம்முடையது. பெயர் இல்லையெனில், அது ‘மொட்டைக் கடுதாசி.’ வேறு பெயர்களில் எழுதினால், அது ‘பெட்டை எழுத்து’ (பெண்கள் மன்னிக்க). இதுபோன்ற எழுத்துகளை யாரும் சீரியஸ்ஸாக எடுத்துக்கொள்வதில்லை. அதைப் பொருட்படுத்துவதும் இல்லை. ஆனால், பல இதழ்களில் முகமற்று சொல்லப்படும் செய்திகளை எல்லோரும் படிக்கவே செய்கிறார்கள். உ.தா: டீக்கடை பெஞ்ச் (தினமலர்), கழுகார், ஆந்தையார் (ஜூனியர் விகடன்), வம்பானந்தா (ரிப்போர்ட்டர்).

இப்படி முகமற்று எழுதப்படுவதாக சொல்லப்பட்டாலும் இவை எல்லாம், அந்தந்த இதழ்களின் கருத்துகளாகவே மக்கள் மத்தியில் புரிந்துகொள்ளப்படுகின்றன. பொத்தாம் பொதுவாக, அந்தந்த இதழ்களின் ஆசிரியர்களே, இத்தகு பத்திகளின் சூத்ரதாரிகள் என்று நினைக்கப்படுகிறார்கள். ஒரு பக்கம், இவர்களை ஏற்க மறுப்பவர்கள் உண்டு (சென்சேஷனலிஸம், பொய் நியூஸ், சிண்டு முடியறாங்க என்று காரணங்கள்), இன்னொரு புறம், இத்தகு பத்திகளை விரும்பிப் படிக்கிறார்கள்.

இணையத்தில், இட்லிவடை, மிகவும் சுலபமாக புழங்குகிறார். பலர் அவரோடு சாட்டில் பேசினேன் என்று சொல்கிறார்கள், இமெயிலுக்கு பதில் போடுகிறார். இட்லிவடையை யாரும் சந்தேகத்தோடு அணுகுவது மாதிரி தெரியவில்லை. அவர் தன்னை எல்லா சோர்ஸ்களும் வந்து அணுகுமாறு வைத்துக்கொண்டு இருக்கிறார்.

இப்போதெல்லாம், இட்லிவடை யார் என்று தேடுவது நின்றுவிட்டது மாதிரி தெரிகிறது. அவரது ஐ.பி.யைக் கண்டுபிடித்து, ஆளைப் பிடிக்கிறேன் பார் என்று சொன்னவர்கள் எல்லாம், இட்லிவடையை இயல்பாக எடுத்துக்கொண்டு புழங்க ஆரம்பித்துவிட்டார்கள் போலிருக்கிறது.

3. மூன்றாவது பரிமாணம், இட்லிவடை என்ற நபருடைய பரிமாணம். இட்லிவடை ஒருவரா, ஒரு குழுவா, என்ன வண்ணம், எந்த ஊர்க்காரர் என்றெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால், ஒன்று நன்றாகத் தெரிகிறது. அவர் மனத்தளவில் மிகவும் அடக்கமானவர். தன் பெயர் பிரபலம் ஆனவுடன், அதற்கு ஒரு முகம் சொந்தம் கொண்டாடிக்கொண்டு ஓடிவந்துவிடும். புகழ் போதை அப்படிப்பட்டது. சமூக அங்கீகாரம் என்ற இச்சை அப்படிப்பட்டது.

ஆறு ஆண்டுகள் ஆகியிருக்கிறது. இதுவரை ஒருவர்கூட இட்லிவடைக்குச் சொந்தம் கொண்டாடிக்கொண்டு வரவில்லை. இட்லிவடைக்கு அபாரமான மனக்கட்டுப்பாடு. குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி.யை அப்படிச் சொல்லுவார்கள். முந்தைய தலைமுறை பத்திரிகை ஆசிரியர்கள் பலர் தங்கள் முகத்தை வெளிப்படுத்திக்கொள்ள விரும்பியதில்லை. அவர்களுடைய முகம் பத்திரிகைதான்.

இட்லிவடையின் தன்னடக்கம் என்னை வியப்பில் ஆழ்த்துகிறது.

4. முகமற்று இருப்பதில் எப்படி செளகரியம் இருக்கிறதோ, அதேபோல் மிகப்பெரிய அபாயமும் இருக்கிறது. அதன் நம்பகத்தன்மை எப்போதும் கேள்விக்குறியானதே. எவ்வளவு சீரியஸ்ஸான விஷயங்களை எடுத்து எழுதினாலும், கிசுகிசு என்று இடக்கையால் புறமொதுக்கிவிடும் அவமானம் எப்போதும் உண்டு. என்ன நோக்கத்துக்காக இப்படிப்பட்ட தலைமறைவு எழுத்து உருவானதோ, அதற்கு நேர் எதிரான விளைவையே ஏற்படுத்துவது இதன் முரண்நகை.

இதில் இன்னொரு பகுதியும் உண்டு. உப அபாயமும் உண்டு. வாசகர் இதுபோன்ற பத்திகளில் மேன்மேலும் கிசுகிசுக்களையே விரும்புவார்களே அன்றி, வேறெந்த புதிய அணுகுமுறையையும் எதிர்பார்க்க மாட்டார்கள். இது தாங்களே தங்கள் காலில் கட்டிக்கொண்ட சங்கிலி. தங்கக் கூண்டு என்றாலும் கூண்டு கூண்டுதானே! இதெல்லாம் தெரிந்தே இட்லிவடை இதை நடத்துகிறார் என்று நினைக்கிறேன்.

5. என் ஒரே ஆசை: இட்லிவடை என்ற இந்த மனிதரை ரத்தமும் சதையும் உள்ள ஒரு நபராக பார்க்கவேண்டும் என்பதுதான். தன் தலைமறைவு வாழ்க்கையை துறந்துவிட்டு எப்போது, தைரியமாக இதுபோன்ற விஷயங்களைத் தன் சொந்த முகத்துடன், தன் சொந்தப் பெயருடன், தன் சுய விருப்பு வெறுப்புகளுடன் எழுதுகிறாரோ அதுதான் உண்மையில் ஜனநாயகம் தழைக்கும் நாள்.

ஜனநாயகத்தில், தலைமறைவு ஒரு அவமானம். கறை.

ஆனால், கூடவே இதையும் சொல்லியாக வேண்டும். இப்படிப்பட்ட ஒரு முகமூடி இருப்பதனால்தான், இதுபோன்ற விஷயங்களைச் சுதந்திரமாகப் பேச முடிகிறது, எழுத முடிகிறது என்ற நிலை இருக்கும்வரை, இட்லிவடையால் வெளியே வர முடியாது. இதுதான் யதார்த்தமோ? வருத்தமான யதார்த்தம்.

http://www.nesamudan.com
Email: venkatesh.nesamudan@gmail.com

என் ஒரே ஆசை: இட்லிவடை என்ற இந்த மனிதரை ரத்தமும் சதையும் உள்ள ஒரு நபராக பார்க்கவேண்டும் என்பதுதான். - பெயர் சொன்னால் அப்படி தான் பார்க்க முடியும்.

35 Comments:

மானஸ்தன் said...

///இட்லிவடை என்ற இந்த மனிதரை ரத்தமும் சதையும் உள்ள ஒரு நபராக பார்க்கவேண்டும் என்பதுதான். - பெயர் சொன்னால் அப்படி தான் பார்க்க முடியும்.
////

:>

kggouthaman said...

மஞ்ச கமெண்ட் படிச்சு வாய் விட்டு சிரிச்சேன்!

kggouthaman said...

ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை !
இடி இடி என்று இடித்து நின்றாலும்
இட்லி முகம் காட்டுவதில்லை!

blogpaandi said...

மறைந்திருந்து பதிவு எழுதும் மர்மம் என்ன ?

இட்லி வடை அவர்களே, சொல்வீர்களா?

kggouthaman said...

பிளாக் பாண்டி அண்ணே - அதான் அவரு மஞ்சக் கமெண்டுல சொல்லிட்டாரே - யாரென்று காட்டினால் - ரத்தமும் சதையுமாகப் பண்ணிடுவாங்கன்னு! அதுதான் மர்மயோகியா கீறாரு!

maddy73 said...

It doesn't matter who idlyvadai is. It matters what he/she writes. Even if it helps a fraction of a fraction of the people, the purpose of writing is served.

I wish idlyvadai continues to write only good things that will be good for the society.

சீனு said...

ரொம்ப சீரியஸா படிச்சுட்டு வந்தேன். மஞ்சள் கமென்டை பார்த்ததும் வாய்விட்டு சிரித்தேன். சூப்பர்.

Anonymous said...

நல்லது. இதே போன்று முகமூடி அணிந்து கொண்டு ‘நேசகுமார்’ என்ற ஒருவரும் இணைய உலகில் உலவிக் கொண்டிருக்கிறார். வெங்கடேஷுக்கு அவரைக் காண ஏன் ஆர்வம் இல்லையோ?

ஆனால் ஒன்றுமட்டும் புரிகிறது. ’இட்லி வடை’ யாரோ அல்ல. எல்லோருக்கும், குறிப்பாக இணைய உலகில் புழங்கும் எல்லோருக்கும் நன்கு தெரிந்த ஒருவர்தான் என்பது.

’நிழல்களில்’ ’பாரா’க்குப் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு ’கிருபை’ கிடைக்குமா என்பது ’என்றென்றும் அன்பான’, ’பிரகாஷமான’, ’தயிர் வடை’ ”தேசிகனுக்கே” வெளிச்சம். ’இன்ப’மான ’வெற்றிச் செல்வா’, ’ஜெயகுமரா’, நீயே அருள வேண்டும் ’சம்பத்து’.

இவண்
- இட்டலிவடை ப்ரியன்

மர தமிழன் said...

உண்மையை சொல்வதற்காக முகமூடியை கழட்டிவைத்தால் invicible என்று சொல்லிவிடமுடியுமா என்ன?

முகத்தை காட்டினால் மட்டும் இவர்தான் இட்லி வடை என்று நம்பிவிட போகிறோமா என்ன?

சர்வே ஜனா இட்லி வடை!!

அந்தரி மஹானு பாவலு அல்லாருமே இட்லி வடைகளு!!

யதிராஜ சம்பத் குமார் said...

கட்டுரை மிகவும் அருமை. இட்லிவடைக்கே உரித்தான ட்ரேட்மார்க் மஞ்சள் பஞ்ச் மிகவும் அருமை.

lalitha said...

இப்போதெல்லாம், இட்லிவடை யார் என்று தேடுவது நின்றுவிட்டது மாதிரி தெரிகிறது.

[[[கோணல் சட்டியானாலும் கொழுக்கட்டை வெந்தால் சரி]]]

வீரராகவன் said...

இட்லி வடை என்ற பெயர் பொருத்தமாக அமைந்துள்ளது (தற்செயலாக) என்பது எனது கருத்து.
பாலில் நெய் போல இட்லியில் உளுந்தும் அரிசியும், வடையில் எண்ணெயும் மறைந்துள்ளது.
வடையை பிழிந்தால் எண்ணெய் வெளிப்படும். இட்லியை பிய்த்தால்தான் மாவு வெளிப்படும் என்று யாராவது கிளம்பி விடுவார்களோ என்று இட்லிவடையார் நினைத்திருக்கலாம்.
ஆனால் ருசியான சாம்பார் போல அனைத்து விஷயங்களிலும் ஊறிக் கொண்டிருக்கும் இட்லியை பிய்க்க யாருக்கு மனம் வரும்?
அவ்வப்போது மிளகாய் பொடி போல் சிலருக்கு எரிச்சலை கொடுத்தாலும், பாட்டியிடமிருந்து காக்கையும், காக்கையிடமிருந்து நரியும் வடையை லபக்கென்று பறித்தாற் போன்று மஞ்சள் கமெண்ட் அடித்து அவர்களையும் சமதானப்படுத்தும் வல்லமை இட்லி வடையாருக்கே உண்டு.
எனவே இட்லி வடையாரே உங்களுக்கே ஒரு புதிர்.
‘ நிகோலஸ் போர்பாக்கி’ யார்? அவருக்கும் உங்களுக்கும் என்ன ஒற்றுமை?

சரவணகுமரன் said...

//என் ஒரே ஆசை: இட்லிவடை என்ற இந்த மனிதரை ரத்தமும் சதையும் உள்ள ஒரு நபராக பார்க்கவேண்டும் என்பதுதான். - பெயர் சொன்னால் அப்படி தான் பார்க்க முடியும்.
//

:-))

Shankar said...

Dear Idly vadai,

Never mind the identity.
It thrills to be anonymous and invisible.In todays world when the politicians get away with what ever they do,one needs a mask to call a spade a spade.
Keep the good work
Shankar

Cho visiri said...

kg gauthaman said;-
//மஞ்ச கமெண்ட் படிச்சு வாய் விட்டு சிரிச்சேன்//

Nijamaagave Naanumdhaan - sirrippai kettu adhirindhuvittall en manaivi.

சந்திரமௌளீஸ்வரன் said...

இப்படியான புகழ்ச்சி கட்டுரைகளை தனது தளத்திலேயே வெளியிடுவது தன்னடக்கத்தின் வெளிப்பாடல்ல
மாறாக புகழ் போதையின் மயக்கம்தான்

பெயர் தெரியவில்லை என்றாலும்.. அடையாளம் அறியப்படவில்லை என்றாலும்.. இந்தப் புகழ்ச்சிகளை வெளியிடுவதன் மூலம் இதில் தனக்கும் சம்மதம் /சந்தோஷம் இருப்பதாக இட்லி வடையார் மறைமுகமாக வெளியிடுவதாகத்தான் அர்த்தமாகிறது

R.Gopi said...

//என் ஒரே ஆசை: இட்லிவடை என்ற இந்த மனிதரை ரத்தமும் சதையும் உள்ள ஒரு நபராக பார்க்கவேண்டும் என்பதுதான். - பெயர் சொன்னால் அப்படி தான் பார்க்க முடியும். //

**********

உண்மைதான் போலிருக்கிறது...

சிலது எல்லாம் கண்டுபிடிக்க முடியாதுங்கற லிஸ்ட்ல இட்லிவடையும் இருக்காரு...

"ஓ மஹ சீயா வாஹி வாஹா"
இந்த பாடலுக்கு அர்த்தம் கூட கண்டுபிடித்து விடலாம்... ஆனால், இட்லிவடை என்ற அந்த நபரை கண்டுபிடிப்பது மிகவும் கஷ்டம்...

(இட்லிவ‌டையாரே : "இப்ப‌டி மறைந்திருந்து தாக்கும் ம‌ர்ம‌மென்ன‌?")

பாரதி மணி said...

இ.வ. முகமற்று இருப்பதில் நம்பகத்தன்மை குறைகிறது என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. நம்பகத்தன்மை எழுதும் விஷயங்களைப்பொறுத்தே இருக்கும்.

இ.வ. எனக்கு அனுப்பிய கடிதத்திலிருந்து அவருக்கு ‘A sensible head on his shoulders' என்பது புரிகிறது!

அவர் யாராக இருந்தாலும் எனக்கு கவலையில்லை. வாழ்க இட்லிவடை!

R.Gopi said...

//சந்திரமௌளீஸ்வரன் said...
இப்படியான புகழ்ச்சி கட்டுரைகளை தனது தளத்திலேயே வெளியிடுவது தன்னடக்கத்தின் வெளிப்பாடல்ல, மாறாக புகழ் போதையின் மயக்கம்தான்//

*********

உங்க‌ளுக்கு தான் பார‌தி ம‌ணி அவ‌ர்க‌ள் ப‌தில் அளித்துள்ளார் என்று நினைக்கிறேன்...

சந்திரமௌளீஸ்வரன் said...

அன்பின் R Gopi

நான் கேள்வியே கேட்கவில்லை.. நல்ல தெளிவான சிந்தனையுடன் definite ஸ்டேட்மெண்ட்
மேலும் பாரதி மணியின் பின்னூட்டத்திற்கும் எனது ஸ்டேட்மெண்ட்டுக்கும் தொடர்பு ஏதும் என் கண்ணில்படவில்லை..

இட்லி வடை பதிவுகளின் தரம்,, நையாண்டி இதைக் குறித்தெல்லாம் நான் நான் எதுவும் சொல்லவில்லை

தன்னைப் புகழ்ந்து ஒருவர் சொன்னால் அதை பிரகடனப்படுத்துவது தன்னடக்கத்திலே சேர்த்தியாகாது என்பது என் தீர்மானமான் எண்ணம்

Anonymous said...

hi guys
Iv is group of people like desikan,haran prsanna,e. bala,ethiraj,pinathal etc.if you observe (only)one thing in common!! they are all "threads"

saivakothuparotta said...

after i starts to read Idlyvadai i was induced to create a blog.So, thanks to Idlyvadai.

kggouthaman said...

எதற்காகத் தேடுகிறோம் முகத்தை?
எனக்குத் தோன்றுவது இது :
'வாழ்த்துவது / வணங்குவது என்றால் முகம் தெரியாதவர்களைக் கூட சுலபமாக வாழ்த்தலாம் - அல்லது வணங்கலாம் - உதாரணம் "எந்தரோ மகானுபாவுலு - அந்தரிகி வந்தனமுலு"
ஆனால் வசை பாடவேண்டும் என்றால் - அவர் யார் - நம்மைத் திருப்பி அடிக்கக் கூடியவரா - அவருடைய பின்னணி என்ன? அவருக்கு என்ன வர்ணம் பூசி அவரை இகழலாம் - அல்லது மட்டம் தட்டலாம் - என்று ஆராய்பவர்களுக்கு வசதியாக இருக்கும் என்று தோன்றுகிறது.

ஸ்ரீராம். said...

முகமா முக்கியம்? யார் சொல்றாங்கங்கறதை விட என்ன சொல்றாங்கங்கறதுதான் முக்கியம். மிச்ச தளங்களில் கொடுத்துள்ள முகங்களும் தகவல்களும் எந்த அளவு உண்மையாக இருக்க முடியும்? அதை நம்பலை?

Dubai Nara said...

ஒருத்தர் பாராட்டும் போது அதை வெளியிடுவது எப்படி தன்னடக்கமின்மை ஆகிறது புரியலை.

தன்னைத்தானே பாராட்டிக்கொள்வது வேனுமானால் அல்பமாக இருக்கலாம்.

பார்டர் மார்க் வாங்குகிற பையனுக்கு தன்னடக்கமாக மார்க்‌ஷீட்-ஐ மறைக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.

ஆனால் தன்னை யார் என்று தேடுகிற கேள்வி மட்டும் கானாமல் போய்விடக் கூடாது என்பதில் இ.வ. கண்ணும் கருத்துமாக இருப்பதாகத் தெரிகிறது. (ஒரு வகை பிராண்ட் புரோமோஷனோ?)

Anonymous said...

S. Sivanesa Chelvan (Coimbatore) writes,
By whatever name you are called , we admire you and your writings on varied topics. Many readers (writers ) fillup the gap on what not touched by you and they are eminent too!. I.V. is having this courage to give place to 180 degrees opposite views of Individuals like MUTHUS even.
Now my main point to I.V. is, if ever it has ever attempted to knock door of ABC to know its no. of readership like all other Newspapers & magazines so that I.V. could Boast of ? Or is it the same readers repeatedly discussing amongst themselves
My point (Wish) now is that it gets more readership and teaches its viewers the good / bad governance of the Day , Shape the Destiny atleast a bit though not in a Very big way
LONG LIVE I.V, AND ITS Services To TN and Thro' It To Nation.

யதிராஜ சம்பத் குமார் said...

hi guys
Iv is group of people like desikan,haran prsanna,e. bala,ethiraj,pinathal etc.if you observe (only)one thing in common!! they are all "threads"//


ஏன் மானஸ்தன மட்டும் விட்டுட்டீங்க?

Anonymous said...

""hi guys
Iv is group of people like desikan,haran prsanna,e. bala,ethiraj,pinathal etc.if you observe (only)one thing in common!! they are all "threads"//


ஏன் மானஸ்தன மட்டும் விட்டுட்டீங்க?""
OFFCOURSE MANASTHAN(A)YATHIRAJ. AND YOU AGREE THE ABOVE PAPPANS ARE RUNNIG THE SHOW.
These posts are same like muka giving best dialague writre for his onwn flim uylien ossai.
but iv can crtisise others for same thing so clalled mausruthi.only one thing in all your mind is that you guys are the best allways.!! rest of the people are useless (pronthathe waste) extrem egosit people.you can see the comments itself" all chmchas.oh my ears are getting blocked!!! but only one surprisingly(chandra mouli same colourr with dff shade (6 or 3???)pointed that this is no a right thing.he dindnt even blame or crtisiseb immdeiatly one of the chamcha came backing iv .nenga ellanm shaemama eurungo

vedanarayanan said...

அந்த காலத்தில் கல்கி எழுதியபோது இருந்த ஒரு democratic setup and acceptability to criticism இப்ப இல்லை.

அப்புறம் I pray இட்லி வடை is not a brahmin . இந்த ஆறு வருடங்களக எழுதியதை நம்ம கழகங்கள் biased என்று சொல்ல வாய்ப்புஉள்ளது.

Situation பார்க்கும் போது "freedom in exile " இல் Dalailama எழுதியது தான் ஞாபகத்திற்கு வருகிறது.

But எனக்கு பார்க்க வேண்டும் என்ற ஆவல் எதுவும் கிடையாது. நம்ம மன்மோகன் singh , அப்துல் கலாம் இவங்களாலே எதுவுமே பண்ண முடியலே. இட்லி வடை வந்து என்ன பண்ண போறாரு. இப்படியே எழுதி கொண்டே இருங்கள். TN சேஷன் தான் கொஞ்சம் பண்ணினாரு.

R.Gopi said...

//யதிராஜ சம்பத் குமார் said...
hi guys
Iv is group of people like desikan,haran prsanna,e. bala,ethiraj,pinathal etc.if you observe (only)one thing in common!! they are all "threads"//


ஏன் மானஸ்தன மட்டும் விட்டுட்டீங்க?//

*************

ய‌திராஜ், அப்போ இன்பா?? ச‌ண்டேன்னா ரெண்டு??

அமுதப்ரியன் said...

அதுதான் மர்மயோகியா கீறாரு!

ஒரு வேளை கமலா இருக்குமோ?

---------------------------------

ஞானமா பேசுறதாலே, ஞா__யா இருக்குமோ?

--------------------------------

பார்ப்பனர், Anti DK, DMK அப்படிங்கிறதாலே, ச்+ஓ வா இருக்குமோ?

------------------------------

ஆனால் எனது கருத்து, ரொம்ப நல்ல மனிதர்.

அமுதப்ரியன்.

அமுதப்ரியன் said...

சண்டேனா இரண்டு எங்கே?

இன்பா எங்க இருக்கேள்?

அமுதப்ரியன்

Anonymous said...

நாட்டு மக்களுக்கு ஒரு நற்செய்தி

இட்லிவடை யாரென்று தெரிந்து விட்டது...

இந்த புதிர் விடுவிக்க காரணமாய் இருந்த மானஸ்தன்,கவுதவமன், இன்பா, ப்ளாக் பாண்டி, சீனு, மற்றும் கோபி அவர்களுக்கு மிக்க நன்றி.

இறைவனுக்கு கூட ஒரு ஸ்பெஷல் நன்றி.

சொல்லக் கூடாதுன்னு இவ்வளவு நாள் நினைச்சேன்... ஆனா முடியல... இன்னிக்கு சொல்லிட்டேன்...

நான் தான் இட்லி வடை....

நன்றி....

சந்தோசமா!!!!.... இனியாவது ஒரு அப்புராணிய அப்பிராதீங்க... போய் பிள்ளைங்கள படிக்க வையுங்க.

என் பெயர் பெயரில்லாதவன், அல்லது அனானிமஸ்...

kggouthaman said...

// [[[கோணல் சட்டியானாலும் கொழுக்கட்டை வெந்தால் சரி]]]//
கோணலா இருந்தாலும், எங்களோடதாக்கும், க்கும் க்கும்
ம்ம்ம்ம்ம் ...... இட்லிவடை!

அன்பு செல்வம் said...

ஆட்டோ வரும்ன்னு பயந்து அனானியா BLOG நடத்துற இட்லி வடையே?? தில் இருந்தா உன் அடையாளத்தை வெளிப்படுத்து பார்ப்போம்..