பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, November 07, 2009

புழலில் ஒரு போர்

வெளியே அனுதினமும் ஆயிரக்கணக்கான போராட்டங்கள் நூதனமான முறையில் பல்வேறு காரணங்களை முன்னிட்டு நடந்து கொண்டிருக்கின்றன. வித்யாசமாக நேற்றைய(5/11) தினம் புழல் சிறையில், ஆயிரக்கணக்கான சிறைவாசிகள் (குற்றவாளிகள்) இணைந்து ஒரு போராட்டத்தை நடத்தியுள்ளனர். அதுவும் எவ்வாறு?? இந்த ஆயிரக்கணக்கானோரில் சிலர் எவ்வித ஆடையும் அணியாமல் நிர்வாணமாக!! ஒருவர் உடம்பில் கீறல்களை ஏற்படுத்திக் கொண்டு தற்கொலை செய்து கொள்வேன் என்று வேறு மிரட்டியுள்ளார். ஆயினும் நிர்வாணப் போராட்டம் நடைபெறவில்லை என சிறை அதிகாரி ராஜேந்திரன் மறுத்துள்ளார், எனினும் போராட்டம் நடைபெற்றது என்றார்.
இவையத்தனையும் எதற்காக?? முல்லை பெரியாறு பிரச்சனையை முன்னிட்டோ அல்லது ஸ்பெக்ட்ரம் முறைகேட்டைக் கண்டித்தோ அல்ல!! சிறைவாசிகளின் வாழ்வாதார பிரச்சனையை முன்னிட்டு. அதாவது சமீபகாலமாக சிறைக்குள் பீடி, சிகரெட் போன்ற புகையிலை வஸ்துக்களை உபயோகப்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாம். அதனை நீக்க வேண்டி இந்நிர்வாணப் போராட்டம்.

சிறைக்கூடம் என்பது தவறிழைத்தவர்கள் தண்டனைக் காலத்தில் நல்ல விஷயங்களைக் கற்று, திருந்த வேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு இடம். ஆனால் சமீப காலங்களில் சிறைக்கூடம் என்பது ஒரு மூன்று நட்சத்திர ஹோட்டல் அந்தஸ்துஸ்க்கு உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை மத்திய சிறைக்கு மாற்றாக புழல் சிறைக்கூடம் கட்டப்பட்டு சிறைவாசிகள் அங்கு சகல போகங்களுடனும் இருந்து வருகின்றனர். என்ன வெளியுலகத்தை மட்டும் காண முடியவில்லை. உள்ளேயே சினிமா கூட பார்ப்பார்கள் போலும்!! சமீபத்தில் கோவை குண்டுவெடிப்பு தீவிரவாதி கமலஹாஸனுக்கு கடிதம் வேறு ஒன்று எழுதியுள்ளதைப் பார்க்கையில் அதுவும் உண்டென்று தோன்றுகிறது.


சிறைச்சாலைக்குள் பீடி, சிகரெட், செல்போன் இன்னும் சொல்லப் போனால் கஞ்சா கூட புழங்குவதாக பத்திரிக்கைகளில் அவ்வப்போது அடிபடும். இது போன்ற சீர்கேடுகள் சிறை அதிகாரிகளின் துணையில்லாமல் நடைபெற வாய்ப்புகளே இல்லை. ஏனெனில் சிறைவாசிகளை சந்திக்க வரும் உறவினர்/நண்பர்கள் கடுமையான சோதனைகளுக்குட்படுத்தப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுவர். சிறை அதிகாரிகள் சிறு ஆதாயங்களுக்காக இது போன்ற விஷயங்களை அனுமதித்து விடுகின்றனர். தவிர சில அதிகாரிகளே இவற்றை ஒரு விலைக்கு சப்ளை செய்வதாகவும் சில பத்திரிக்கைகள் கூறுகின்றன.

அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி விஜிலென்ஸ் அதிகாரிகள் புழல் சிறையில் நடத்திய அதிரடி சோதனைதான் , பீடி, சிகரெட் தடைக்கு வழிவகுத்ததாகக் கூறப்படுகிறது. பின்பு கூடுதல் சூப்ரின்டெண்ட் திரு.கருப்பையா அவர்கள் போராட்டக்காரர்களை சமாதானம் செய்துள்ளார். எனினும் இனி வரும் காலங்களில் பீடி சிகரெட்டின் மீதான தடை கட்டாயமாக அமல்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார். இன்னொரு அதிகாரி தெரிவிக்கையில், எவ்வாறு சிறைவாசிகளை பீடி, சிகரெட் பிடிக்காமல் கட்டுப்படுத்த முடியும்?? என்று கேட்டுள்ளார்.


இதென்ன பிரமாதம்!! அடுத்து அண்ணா பிறந்த நாளோ, பெரியார் பிறந்த நாளோ வராமலா போய்விடும்?? அரசு செலவிலேயே சிறைவாசிகளுக்கு இலவச பீடி, சிகரெட் திட்டமே அமல்படுத்தப் பட்டாலும் படலாம். யார் கண்டது?? குற்றவாளிகளின் தயவு தேர்தல் காலங்களில் மிகவும் முக்கியம் அமைச்சரே!!


9 Comments:

மர தமிழன் said...

பொது இடத்தில் தானே புகைக்க கூடாது இது பொது இடம் இல்லைன்னு நினைச்சிடாங்களோ என்னமோ!

ஸ்பெக்ட்ரமும், மது கோடா சமாசாரங்களையும் பார்த்தால் இனிமேல் சிறையில் centralized aircondition வந்தாலும் வரும் போல.

ஹுஉம் அகம் ப்ரம்மாஸ்மி இந்த விஷயத்தில சரியாதான் இருக்கு!!!

Rajaraman said...

This is democracy. They have a right to protest. If not allowed the human right activist will put people outside into jail
They are given eggs kozhi biriyani
How else they can spend energy accrued
GREAT COUNTRY
WONDERFUL RULERS AND
SPINELESS PEOPLE

kggouthaman said...

பு(ழ)ல்லரிக்கிறது. நிர்வாணப் போராட்டம் நடத்தியவர்களுக்கு - இ வ போட்ட தீபாவளி வாழ்த்துப் படம் போல - ஏதாவது செய்ய முடியுமா?

R.Gopi said...

தினம் ஒரு பாக்கெட் சிகரெட்
தினம் ஒரே ஒரு கட்டு பீடி (கணேஷ் பீடி தவிர...!!?? பகுத்தறிவு...)
வாரம் இருமுறை ஒரு ஃபுல் பாட்டில் (எந்த ப்ராண்டு வேண்டுமென்றாலும்). டாஸ்மாக் சேல்ஸ் ஜிவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...
மாதமிருமுறை பார்க்க விரும்பும் திரைப்படம் (ஷகீலா படம் தவிர...)

வருடமொருமுறை அண்ணா, பெரியார் பிறந்த நாள் அன்று கொத்து, கொத்தாக ரிலீஸ்..

உடன்பிறப்பே... வருந்தாதே... உன் தலைவன் இருக்கிறான் ... கலங்காதே...

ஜெயக்குமார் said...

சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வேலைநீக்கம் செய்ய வைப்பதன் மூலமே இதுபோன்ற அராஜகங்கள தடுக்கப்படும். சிறையில் சகல வசதிகளோடு இருந்துவிட்டு வருபவர்கள் திருந்துவார்கள் என நினைப்பதைவிட என்ன முட்டாள்த்தனம் இருக்கக்கூடும்??

நிர்வாணப் போராட்டம் நடத்தினால் காவலர்கள் ஆணுறுப்பு அறுப்புப் போராட்டம் நடத்த வேண்டும். அப்புறம் யார் நிர்வாணப்போராட்டம் நடத்துகிறார்கள் எனப் பார்ப்போம்.

இனிமேல் சிறை என்பதை வெளியுலகம் பார்க்கவியலா உல்லாசக்கூடம் என மாற்றிவிட்டால் இந்தக் கொடுமையை சாதாரனமாக நினைத்துக்கொண்டு போய்விடலாம்.

Anonymous said...

எங்க ட்ரைன்ல ஒரு முஸ்லிமுக்கு உக்கார இடம் கொடுக்கவில்லை என்று போராடும், தமிழ் பதிவுலக புலிகள், அவர்களின் வந்தே மாதரம் மீதான பாத்வா பற்றி பேச்சு மூச்சே காணோம்? இந்த மாதிரி timid ஆக இருக்கிரதனால் தான், வடிவேல் மாதிரி, போற வரவன் எல்லா நம்மளை எட்டி உதைச்சுட்டு போறான். இங்க இருக்கிற முஸ்லிம் பதிவர்கள், இதைகண்டித்து ஏன் ஒரு பதிவு போட கூடாது? நீங்க அவ்வளவு வெறுக்கிற அமெரிக்காவில் பாருங்கள், பெரும்பாலான முஸ்லிம் தலைவர்கள், Ft Hood சம்பவத்தை எதிர்த்து அறிக்கையாவது விட்டு இருக்கிறார்கள்.

Anonymous said...

க. க. க. போ

Bala
Txas

Anonymous said...

Kamalhassan has already precluded all about what really is happening in our Jails.

Anonymous said...

maggala ulla pottutu anna namam solli kalaiger valga solli veliye jollya povom. appavi tamila vaya moodu
by
yayathi raja