பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, November 08, 2009

ஹிந்து கடவுள்களே உஷார் !

இரண்டு நாட்கள் முன் டைம்ஸ் டிவியில் திரும்ப திரும்ப Exclusive, First time on TV என்ற விளம்பரத்துடன் எம்.எப்.ஹுஸேன் பேட்டியை ஒளிபரப்பிக்கொண்டிருந்தார்கள்.

இந்தியா வருவதால் உங்களுக்கு பயம் இல்லையா ? ஏன் இப்ப துபாயில் இருக்கீங்க போன்ற கேள்விகள் தான். சீக்கிரமே என் வேலை முடிந்து இந்தியா திரும்புவேன் போன்ற பதில்கள்.


சீக்கிரமே இவர் மீது இருக்கும் கேஸ்களை 'முடிவுக்கு' கொண்டு வர அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. ஹுஸேனும் உள்துறை அமைச்சர் போன் செய்வார் என்று காத்துக்கொண்டிருக்கிறார். கடந்த ஒரு வார காலமாக இவரை பற்றிய செய்திகள் வர தொடங்கியுள்ளது.


நீண்ட காலமாக அயல்நாட்டில் வசித்து வரும் பிரபல ஓவியர் எம்.எப்.ஹுஸேன் இந்தியாவிற்கு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இந்திய அரசிற்கு உணர்ச்சிகரமான வேண்டுகோளும் விடுத்துள்ளார். இவரது விருப்பத்தின் பேரில், நியாயத்தின் அடிப்படையிலும், பாரதத்தில் வசிப்பதற்கான அவரது தார்மீக உரிமையின் அடிப்படையிலும், அவர் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டுமென மத்திய சர்க்கார் உச்ச நீதிமன்றத்தை அணுகப் போவதாக செய்தி வெளியானது.

அதாவது அவர் மீதுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஒரு நியாயமான முடிவிற்கு கொண்டு வரப்பட வேண்டுமாம். மதச்சார்பற்றவர்களின் பார்வையில், அவர் மீதான வழக்குகளைத் தள்ளுபடி செய்ய வேண்டும். அதுதான் இவர்கள் பார்வையில் நியாயமான முடிவு. பாரத மாதாவை நிர்வாணமாக சித்தரித்ததற்காக, பாரதத்தில் வாழுகின்ற தார்மீக உரிமை அவருக்கு அளிக்கப்படவேண்டுமென கோரப்படுகிறது. இதையடுத்து பேட்டியளித்த ஹுஸேன், இந்தியாவில் என் தொடர்பான சட்ட சிக்கல்கள் நீங்குமானால், முதல் விமானத்தில் இந்தியாவிற்கு வந்து உள்துறையமைச்சர் சிதம்பரத்திற்கு நன்றி கூறுவேன் என கூறியிருக்கிறார். சிதம்பரம் தான் கலைக் கண்ணோடு பார்க்க தெரிந்தவர் போல!

இந்தியாவின் பிக்காஸோ என்று பிரபல Forbes பத்திரிக்கையால் வர்ணிக்கப்பட்டவர் ஓவியர் MF ஹுஸேன். மராட்டியத்தில் பிறந்த இவரது ஓவியங்களில் சில 1990 களில் மிகப்பெரிய சர்ச்சையைத் தோற்றுவித்தன. பாரத மாதா நிர்வாணமாக இருப்பது போலவும், ஹிந்து தெய்வமான துர்க்கை ஒரு புலியுடன் புணர்ச்சியில் ஈடுபடுவது போன்றதுமான இவரது இதே பாணியிலான ஹிந்து கடவுளர்களை இழிவு படுத்தும் பல ஓவியங்கள் வெளியிடப்பட்டன. இவை மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தின. தவிர, மத உணர்வுகளை புண்படுத்தியதாக இவர் மீது தில்லி உயர்நீதி மன்றத்தில் சில வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஆரம்பத்தில் அவை தள்ளுபடி செய்யப்பட்டாலும், தொடர்ந்து விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள் போன்ற அமைப்புகளின் போராட்டத்தின் விளைவாக, மத உணர்வுகளை புண்படுத்தியதன் பேரில் இவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, கைது வாரண்டும் பிறப்பிக்கப்பட்டது. கலை நோக்கத்தோடு வரையப்பட்டது என்று சால்ஜாப்பு சொல்லியவர், விளைவுகளின் தீவிரத்தைக் கண்டு மன்னிப்பு கோரினார். பின்பு மேலும் சட்ட சிக்கல்கள் துரத்தியதால் இங்கிலாந்திலும், துபாயிலுமாக தஞ்சமடைந்தார்.

முன்னர், டானிஷ் பத்திரிக்கையொன்றில் முகமது நபியை கேலிச் சித்திரமாக தீட்டியதற்காக, அந்த ஓவியரின் மீதும், பத்திரிக்கையின் மீதும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் பத்வா பிறப்பிக்கப்பட்டது. இது தொடர்பாக இஸ்லாமிய நாடுகளில் கலவரம் மூண்டு நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதன் உச்சமாக, சிரியாவில் உள்ள டானிஷ் தூதரகம் தீக்கிரையாக்கப்பட்டது.

இங்கு இந்தியாவில் பாரத மாதாவையும், ஹிந்து தெய்வங்களையும் கலை என்ற பெயரால் கொச்சைப் படுத்தியவரை மாலை மரியாதைகளுடன் வரவேற்க அரசாங்கம் தயாராகி வருகிறது. கேட்டால் தார்மீக உரிமை!!


"பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானிலும் நனி சிறந்தனவே" என்றார் பாரதியார். இது, எதையுமே கலைக் கண்ணோடு நோக்கும் ஹுஸேனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான். ஆனால் தட்டிக் கேட்க வேண்டிய அரசாங்கமும் இப்பொழுது சால்வையுடன் காத்துக் கொண்டிருக்கிறது.

இந்து மதத்துக்கு சகிப்பு தனமை அதிகம். இல்லை என்றால் இவ்வளவு காலமாக இந்து மதம் இருக்குமா ? ஹுஸேனின் தாத்தாக்களையே சகித்துக்கொண்ட இந்து மதம் இவரையும் சகித்துக்கொண்டு போகும்

கட்டுரை யதிராஜ், கொஞ்சம் எடிட் செய்திருக்கிறேன்.

58 Comments:

மர தமிழன் said...

இத்தாலியின் கலை தேவதை ஆட்சி செய்யும் இந்தியாவில், பாரத மாதாவை இந்த அளவுக்குள் விட்டு வைத்ததே பெரிய புண்ணியம். கேட்டால் எங்கள் மதத்தில் பாரதம் என்ற ஒன்றே கிடையாதபோது மாதா எங்கே வந்தது என்று கேட்டாலும் கேட்பார்கள்.

பாரத மாதா எல்லாம் நார்த் இந்தியன் லேடி சார், எவனாவது தமிழ்தாயை சொல்லி பாக்கட்டும், அப்பறம் பாருங்க நம்மாளுங்க வீரத்த...

kavanur express said...

you know this is italy goverment

ஜெயக்குமார் said...

யதிராஜ சம்பத்குமாருக்கு நன்றி. மிக நல்ல கட்டுரை. மதச்சார்பின்மை என்பது இந்துக்களுக்கு எதிராகச் செயல்படுதல் என்பதும் அநியாயத்தை நியாயம் என்ற பெயரில் ஹுசேன் போன்ற கீழ் மக்களுக்கும் வழங்குவதையும் செய்யும் அரசு மதச்சார்பின்மை அரசு... நாடு வெளங்கிரும்...

//ஹுஸேனின் தாத்தாக்களையே சகித்துக்கொண்ட இந்து மதம் இவரையும் சகித்துக்கொண்டு போகும்//

உண்மை.

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

ஹிந்து மதத்திற்கு சகிப்புத் தன்மை அதிகம்தான். ஒருவர் கலைக் கண்ணோடு படைக்கும் ஓவியத்தை விமர்சிக்கக் கூடாதுதான். ஆனால்

பாரதத் தாயை அவமதிக்க எவனுக்கும் அனுமதி கிடையாது. அதுவும் ஒரு இந்தியனாகப் பிறந்த ஒருவனுக்கு நிச்சயம் அனுமதி கிடையாது. பிறந்த நாட்டை மதிக்காத எந்த நாயும் அந்த நாட்டில் இருக்க உரிமை கிடையாது.

ஒரு மதத்தவனின் உணர்வைப் புண்படுத்த அந்த மதத்தவனுக்கே உரிமை கிடையாது என்னும்போது, மற்ற மதத்தவனுக்கு அந்த உரிமை நிச்சயம் கிடையாது.

எந்த கோணத்தில் பார்த்தாலும், அந்த நாய் இந்த நாட்டில் நுழைய அருகதை இல்லை.

ஆனால், சகிப்புத் தன்மை, கலைக் கண்ணோட்டம் என்ற பெயரில் அந்த ஆளுக்கு வக்காலத்து வாங்க, இங்க பண்ணிக் கூட்டமே இருக்கையில், அவனுக்கு திமிர் ஏறத் தான் செய்யும்.

(அவசியமான பின் குறிப்பு: நாகரிகம் கருதி என் பின்னூட்டத்தை மென்மையாகச் சொல்லி இருக்கிறேன்)

Anonymous said...

jananayaga naadu india enbathai marubadiyum nirubithurikirarrgal aatchi aalrgal..

vazhga jana-nayagam....vazhga india.

india prajai....Velmurugan

vedanarayanan said...

MFHusain....The success is that at this age he is afraid to come to India.
அந்த பயம் ஒன்றே போதுமே. ஒருவர் சாவதை விட பயந்து பயந்து வாழ்வது பெரிய தண்டனை. அவர் இந்தியா வந்து வாழ்வது அவருக்கு இன்னும் பெரிய தண்டனை.

அவர் மட்டும் young age இல் இருந்து இருந்தால், நம்ம கால்ல எல்லாம் விழுந்து இருப்பார் .

Balaji said...

India vil than entha kodumai vendumanalaum nadakkum

vinu said...

அன்புள்ள இட்லி வடை அவர்களுக்கு ,
http://www.tamilhindu.com/2009/11/tele-medias-degrading-hindu-religious-feelings/
தயவுசெய்து இந்த வலை பதிவை பார்வை இட்டு
தங்கள் கருத்தை ,உங்கள் பதிவில் எழுதினால், உங்கள் தயவால் , பலரை சென்றிடுயும் வாய்ப்பு உள்ளது.
தயவு செய்து எழுதுங்களேன் .

மிக்க அன்புடன்
வினு

Anonymous said...

விஷயம் சகிப்புத்தன்மை பற்றியதில்லை. என்ன செய்தாலும் இந்து மதத்தில் தன்னை கேட்பார் யாரும் இல்லை என்ற இறுமாப்பு. மேலும், ஏன் அல்லாவை அல்லது இயேசுவை அல்லது "கன்னி" மேரியை வரைந்து தான் பார்க்கட்டுமே. ஏன் அவர்களுக்கு எல்லாம், இருக்க வேண்டியது அந்தந்த இடத்தில இல்லையா? இல்லை, ஆட்டோவில் கூட அல்ல, மனித வெடிகுண்டு வரும் என்று பயமா? இவர் இந்தியா வந்தார் என்றால், கொஞ்சம் பேர் கூடி சத்தம் போட்டு விட்டு, அவனவன் வேலையே பார்க்க போய் விடுவான், இவர் அப்படி செய்தார் என்றால், இப்போது இருக்கும், துபாயில் இவரின் உறுப்பை வெட்டி விடுவான், முதலில்.

kggouthaman said...

கோடி கோடி யாக கொள்ளையடித்தவர்களை
மன்னிச்சாச்சு;
கொலை கொலை யாக
செய்து முடித்தவர்களையும்
மன்னிச்சாச்சு - அட
நம்ம தெய்வங்களை
கொச்சைப் படுத்தியவரை
மன்னிப்பதா பெருசு?
மதச் சார்பின்மை பத்தி ஒண்ணுமே தெரியாம இப்பிடி
மக்காக இருக்கீங்களே இட்லி!

Kameswara Rao said...

இவ,
இந்து மதத்துக்கு சகிப்பு தனமை அதிகம். இல்லை என்றால் இவ்வளவு காலமாக இந்து மதம் இருக்குமா ? ஹுஸேனின் தாத்தாக்களையே சகித்துக்கொண்ட இந்து மதம் இவரையும் சகித்துக்கொண்டு போகும்
மஞ்சள் கமெண்ட் "இது தங்களுடைய கருத்தா அல்லது முடிவா", இதைவிட பெரிய கொடுமையெல்லாம் சந்தித்தாகிவிட்டது "இதுவும் kadanthu போவோம்" என்பது முறையாக உள்ளதா... குட்ட குட்ட குனிபவன் முட்டாள்... இது yennayaa கருத்து பிறந்த நாட்டிற்கு, மரியாதையை கொடுக்கத்தேரியதவன் is not at all a human being. I can understand yathiraj would have written more and as usual your editing was there... how long we are going to tolerate this don't we have the guts to go and fight கோழையாக இருப்பதைவிட maga பாவம் வேறேதும் இல்லை..

kamesh

Anonymous said...

""இந்து மதத்துக்கு சகிப்பு தனமை அதிகம். இல்லை என்றால் இவ்வளவு காலமாக இந்து மதம் இருக்குமா ? ஹுஸேனின் தாத்தாக்களையே சகித்துக்கொண்ட இந்து மதம் இவரையும் சகித்துக்கொண்டு போகும்""
ஹுசேனின் தாத்தாவும் ஒரு ஓவியரா?

யதிராஜ சம்பத் குமார் said...

எப்பொழுது 6 மாத காலம் மிச்சமிருக்கும் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக, மஹா புருஷனான ராமனே கற்பனைக் கதாபாத்திரம் என்று நீதிமன்றத்தில் சொல்லும் துணிவை காங்கிரஸ் பெற்றதோ அக்ஷணமே சநாதனிகள் அனைவரும் சமூக அனாதைகளாக்கப்பட்டு விட்டனர். 110 கோடி மக்களில் சில சதவிகிதம் இருக்கும் சிறுபான்மையினரின் ஓட்டுக்களைப் பெறுவதற்காக தீவிரவாதத்தையே எதிர்க்காமலிருக்கும் இந்த அரசு, பெரும்பான்மையினருக்கு எவ்வாறாயினும் நம்மை விட்டால் கதியில்லை என்ற இறுமாப்பில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு இழிவு படுத்துகிறது.


காங்கிரஸிற்கு எவ்விஷயத்திலுமே கையை சுட்டுக் கொண்ட பிறகு திருந்துவது என்பது இந்திரா முதல் ராஜீவ் வரை நிதர்ஸனம். இந்த போலி மதச்சார்பின்மையே அவர்களுக்கு ஒரு பெரிய பாடத்தைக் கற்பிக்கும்.


தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், இறுதியில் தர்மமே வெல்லும்.


(திரு.காமேஷ் அவர்களுக்கு, நான் எழுதிய கட்டுரை அப்படியே பதிப்பிக்கப்பட்டுள்ளது. அதில் எவ்விதமான திருத்தமும் இல்லை. மற்றபடி இட்லி அவர்கள் கொஞ்சம் விஷயங்கள் முன்னும் பின்னும் சேர்த்திருக்கிறார்.)

Anonymous said...

Artistic paintings !! by MFHussain

http://www.hindujagruti.org/activities/campaigns/national/mfhussain-campaign/

R.Gopi said...

க‌ட்டுரையும், பின்னூட்ட‌ங்க‌ளும் ப‌ர‌ப‌ர‌ வ‌கை...

த‌ர்ம‌த்தின் வாது த‌ன்னை சூது க‌வ்வும்
மீண்டும் அங்கே த‌ர்ம‌ம் வெல்லும்

ய‌திராஜ்... ந‌ல்ல‌வ‌ங்க கண்டிப்பா ஜெயிப்பாங்க‌... என்ன‌ கொஞ்ச‌ நாள் ஆகும்... இங்கு இதே கூற்று, ந‌ல்ல‌ விஷ‌ய‌ங்க‌ள்னு வெச்சுக்க‌லாம்...

ந‌ம் ச‌கிப்புத‌ன்மைக்கு தான் ஒரு அள‌வே இல்லையே..

//இந்து மதத்துக்கு சகிப்பு தனமை அதிகம். இல்லை என்றால் இவ்வளவு காலமாக இந்து மதம் இருக்குமா ? ஹுஸேனின் தாத்தாக்களையே சகித்துக்கொண்ட இந்து மதம் இவரையும் சகித்துக்கொண்டு போகும்.//

இட்லிவ‌டையின் இந்த‌ கூற்று என‌க்கு ச‌ம்ம‌த‌ம்தான்... ஆனாலும், ஒரு விஷயம்...ஹூஸேனின் "தாத்தா"வெல்லாம் இப்போ ரொம்ப‌ ஆடி போயிருக்க‌ற‌தா கேள்வி....

Mohan Kumar said...

ஒரு கெட்ட விஷயத்திலும், அதை வைத்து தனக்கு என்ன பலன் கிடைக்கும் என பார்ப்பது தான் அரசியல் வாதிகளின் வழக்கம். இந்த விஷயமும் அப்படியே. "சிறு பான்மை நலன் காக்கும் அரசாக" நிலை நிறுத்தி கொள்ள இதோ இன்னொரு வாய்ப்பு.. விடுவார்களா என்ன?

மோகன் குமார்
http://veeduthirumbal.blogspot.com/

Muthu said...

M.F.Hussain is not only insulted hindus, he insulted muslims as well in Meenaxi film. I request all readers to condiser him as 'Psycotic' and he is not representative of muslim religion; even muslims will not forgive him for what he did. We are with you Hindu friends!! We (muslim)condemn him, dont let him come back to India unless he apologize!!

Anonymous said...

If an accused wants to get discharged from a case HE has to file an appeal.Why the Government run with taxpayers' money should file an appeal
-Rishi

வலைஞன் said...

http://www.tamilhindu.com/2009/11/tele-medias-degrading-hindu-religious-feelings/

நன்றி வினு அனைத்து ஹிந்துக்களும் படிக்கவேண்டிய ஒரு நல்ல கட்டுரை

ஆனல் வினு, அங்கு பின்னோட்டத்தில் மன்னாரு என்பவர் சொல்லியிருப்பதை கவனித்தீர்களா ? அதற்க்கு என்ன பதில்?

நம்மால் ஒரு வாரம் விஜய் /கலைஞர் டிவி பார்க்காமல் இருக்கமுடியுமா?

எந்த கட்டுப்பாடும் இல்லாத ஒரு மதம் கட்டுக்கோப்புடன் உள்ள மதங்களை குறை சொல்லி என்ன பயன்?

வலைஞன் said...

யதிராஜ் அவர்களே!

ஹிந்து மதத்தை மதிக்கும் அனைவரும் ,

1.BJP க்கு மட்டுமே வாக்கு அளிக்க வேண்டும்

2 கலைஞர் மற்றும் விஜய் டிவி க்கு விளம்பரங்கள் அளிக்க கூடாது

3 கலைஞர் மற்றும் விஜய் டிவி நிகழ்ச்சிகளை பார்க்க கூடாது

முடியுமா?

முடியாதென்றால் எல்லாவற்றையும் பொத்திக்கொண்டு

சும்மா இருக்கத்தான் வேண்டும்

Muthu said...

நான் எம்.எப்.ஹுசைனுக்கு சப்போர்ட் பண்ணவில்லை - நான் ஒரு முஸ்லிம் என்பதால் . இந்துக்களுடைய பிரச்சினை புரியாததாகவே எனக்கு தோன்றுகிறது . இந்து கடவுள்கள் நிர்வாணமாக வரைந்தது பிரச்சினையாக தோன்றவில்லை , அதை ஒரு முஸ்லிம் வரைந்து விட்டார் என்றுதான் எல்லோரும் கோபபடுகிறார்கள் என்று தோன்றுகிறது . இதற்கு முன்பு எத்தனையோ ஆண்டுகளாய் கடவுள்களை நிர்வாணமாய் வரைந்தும், சிற்பமாக செதுக்கியும் வைத்து இருக்கிறார்கள் , அப்போது மட்டும் அதை கலை கண்ணோட்டத்தோடு எப்படி பார்க்க முடிந்தது? யாரவது விளக்கினால் நன்றாக இருக்கும்.

வால்பையன் said...

பாரதமாதாவுக்கு பதில் பாரததந்தைன்னு உருவகபடுத்தி அவரு எல்லா நாட்டு தந்தைகூடவும் உறவு வச்சிகிறா மாதிரி இருந்தா நல்லாயிருக்குமா!?

கடல் தாய்,
பூமி மாதா!

இப்படியெல்லாம் பேர் வைக்கிறதுக்கு முன்னாடி யோசிக்க மாட்டாங்களா!?

வால்பையன் said...
This comment has been removed by a blog administrator.
வலைஞன் said...

முத்து பாய்,

உங்க பேர்ல ஒரு தப்பும் இல்லை எங்களுக்கு ரத்தமும் வத்தி போச்சு,முதுகெலும்பும் நொறுங்கிபோச்சு ன்னா அதுக்கு நீங்க என்ன பண்ண முடியும்?
மேலும் எங்க தி.மு.க.,வும் ,
தி. க வும் செய்யாத ஒன்னையா உங்க ஹுசைன் செஞ்சுட்டார்? ஆனா உங்களுக்கு ஒன்னு சொல்றேன் எங்க கடவுள்களை யாரும் நிர்வாணமாக வரைத்து கிடையாது கஜுராகோ வில் இருப்பது எல்லாம் ஆண் மற்றும் பெண் உருவங்கள்; கடவுள்கள் இல்லை!

யதிராஜ சம்பத் குமார் said...

முத்து::


கோவிலில் எந்த கடவுள் நிர்வாணமாய் காட்சியளிக்கிறார்?? ரெங்கநாதரும், தில்லை நடராஜனும் அம்மணமாகவா நிற்கின்றனர்??


கோவில் பிரகாரத்திலுள்ள சிற்பங்களும் முழு நிர்வாணமாய் காட்சி தருவதில்லை. கோவிலில் உள்ள சிற்பங்களையும், ஹுஸேனின் வக்கிரத்தையும் ஒப்பிட்டுப் பார்ப்பது அபத்தத்தின் உச்சம். இதே ஹுஸேன் இஸ்லாமியப் பெண்டிரின் ஓவியங்களை ஆடையோடு வரைந்திருக்கிறார். ஹிந்துக்களை நிர்வாணமாக வரையும்போது இஸ்லாமியர்களை மட்டும் ஏன் ஆடையோடு வரைகிறீர்கள் என்பது எமது வாதம் அல்ல!! ஹிந்துக்களையும் ஆடையோடு வரையலாமே என்பதுதான்.


ஹுஸேன் தனது தயாரையோ, மகளையோ அல்லது மனைவியையோ இதே கலைக் கண்ணோட்டத்தோடு விலங்குடன் புணர்வது போல் வரைந்து வெளியிடுவாரா??


ஒரு இஸ்லாமியர் வரைந்து விட்டார் என்று ஹிந்துக்கள் கோபப்படுகின்றனர் என்பது தவறான வாதம். துர்க்கை புலியோடு புணர்வது போல் ரவிவர்மா வரைந்திருந்தாலும் இதே கோபம் வெளிப்படும்.

யதிராஜ சம்பத் குமார் said...

நபிகள் நாயகத்தை கேலிச் சித்திரமாக வரைந்ததற்கு ஏன் இஸ்லாமியர்களுக்கு கோபம் வர வேண்டும்?? வரைந்தது கிறிஸ்தவர் என்பதாலா என்று ஹிந்துக்கள் கேள்வியெழுப்பினால் அது எவ்வளவு அபத்தமாக இருக்குமோ இந்த உங்களது கேள்வியும் அவ்வளவு அபத்தம்.


லக்கும் தீனுக்கும் வலியதீன் என்று இஸ்லாம் மறை மார்க்கம்தான் வலியுறுத்துகிறது. இதன் அர்த்தம் இஸ்லாமியரான உங்களுக்கும் தெரிந்திருக்கும். ஆக எங்களது மார்க்கத்தை இழிவு படுத்துகிறவரை எங்களாலியன்றவரை நாங்கள் கண்டிக்கிறோம் அவ்வளவே!! இதற்கு தயை கூர்ந்து மதச் சாயம் ஏதும் பூச வேண்டாம். அடுத்தவர்களை இழிவுபடுத்துவதை ஸநாதனம் வலியுறுத்தவில்லை.

யதிராஜ சம்பத் குமார் said...

வலைஞன்::


அவ்வாறு சொல்வது திணிப்பு ஆகும். எல்லாம் அவரவர்களது விருப்பத்திற்காட்பட்டது. நீங்கள் சொல்வது எப்படியென்றால், குடும்பத் தகராறு காரணமாக கட்சியினர் எவரும் தினகரனுக்கு விளம்பரங்கள் அளிக்கக் கூடாது என கழகம் இட்ட கட்டளை போலிருக்கிறது.


பாஜக ஒன்றும் ஹிந்துக்களின் ஒட்டு மொத்தப் பிரதிநிதி அல்ல அவர்களுக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என அனைவரையும் அதிகாரம் செய்வதற்கு. அவர்களுக்கு தங்கள் சமயத்தின்பால் நம்பிக்கையும், பக்தியும் அதிகம். அவ்வளவே!!

வலைஞன் said...

யதிராஜ சம்பத் குமார்:

ரொம்ப நன்றி .
அப்போ , நாம தொடர்ந்து டைனோசாரை
ஈர்க்குச்சியால் அடித்துக்கொண்டே இருப்போம்.
ஒருநாள் அதுக்கு வலிக்காமையா போய்டும்?

சீனு said...

//இந்துக்களுடைய பிரச்சினை புரியாததாகவே எனக்கு தோன்றுகிறது . இந்து கடவுள்கள் நிர்வாணமாக வரைந்தது பிரச்சினையாக தோன்றவில்லை , அதை ஒரு முஸ்லிம் வரைந்து விட்டார் என்றுதான் எல்லோரும் கோபபடுகிறார்கள் என்று தோன்றுகிறது .//

ஒரு பேச்சுக்கு, நானும் கலை கண்ணோட்டத்தில் அல்லாவை (உடையோடவே!) வரைந்தால் இதே போல அமைதி காக்க சொல்வீர்களா, முத்து?

Muthu said...

திரு.வலைஞன் & யதிராஜ சம்பத் குமார்,

உண்மையில் கோயிலில் கடவுள்கள் & தெய்வங்கள் நிர்வாணமாகவோ அல்லது அரை நிர்வாணமாகவோ இல்லையா?
உங்கள் பார்வைக்கு,
1.Shiva's nude sculputure in Kailasanatha Temple, Kanchipuram (Serach in google for 'shiva bhikshatana')
2. http://en.wikipedia.org/wiki/Lajja_Gauri (nude sculpture of goddess)
3. http://en.wikipedia.org/wiki/Bhuvaneshvari (semi-nude picture of goddess)
4. www.vishvarupa.com (look for 'sakthi' and 'kali'- especially a b/w picture in sakthi gallery)

இது மட்டும் இல்லாமல் கலை என்ற பெயரில் எத்தனை சிற்பிகள் மேலாடை இல்லாமல் எல்லா தெய்வங்களையும் செய்து இருக்கிறார்கள்..
லுக் அட்.....http://www.lotussculpture.com
இவை எல்லாம் இதற்கு முன்பு உங்களுக்கு தெரியவில்லையா?
இவையாவும் இந்துக்களால் செய்தாலோ என்னவோ உங்களுக்கு கோபம் வரவில்லை என்று கேட்டேன். நண்பர்களே! ஹுசைன் செய்தது நிச்சயம் தவறு.. ஆனால் அவர் மட்டும் செய்ய வில்லை!!எழுமின்! விழிமின்!

Anonymous said...

இப்பிரச்சினையை தனி நபர் பிரச்சினையாகப் பார்த்தால் எவ்வித பூசல்களுக்கும் இடமில்லை, மாறாக அந்த ஓவியர் முஸ்லிம் என்பதால் அவரோடு இஸ்லாத்தை சம்பந்தப்படுத்தும் போது தான் பிரச்சினையே. மேலும் ஹுசேனின் தரங்கெட்ட செயலுக்கு எந்த முஸ்லிமோ அல்லது முஸ்லிம் இயக்கமோ வக்காலத்தும் வாங்கவில்லை என்பதும் குறிப்பிடதக்கது. அவர் செயலை இந்திய முஸ்லிம்கள் ஆதரிக்கவில்லை என்பதை உரக்கக் கூறுகிறேன். மற்ற மத கடவுள்களை இழிவுப்படுத்த வேண்டாம் என்று குரானில் தெளிவாகவே உள்ளது.

லெமூரியன் said...

முத்து இங்கிருப்பவர்கள் எல்லாம் ஆதிக்க வர்க்கத்தைச் சேர்ந்த காவிக் கூட்டம் இவர்கள் அப்படிதான் பேசுவார்கள்.....கண்ணன் என்ற கடவுள் பாத்திரம் அங்குள்ள கோபியர் இனப் பெண்களை வன்புணர்ச்சி செய்ததை கூட இவர்கள் அது தெய்வத்தின் விளையாட்டு என்றெண்ணிக் கொள்வார்கள்....ஆனால் அம்பது வருடத்துக்கு முன்பு தோன்றிய ஒரு தேசத்திற்கு இவர்களாகவே ஒரு சித்திரம் வரைந்து அதற்க்கு பாரத மாதா என்று பெயரும் சூட்டி விட்டு இப்படி தேச ஒற்றுமைப் பற்றியும் இந்து மதத்தைக் காக வந்த காவலர்களைப் போல குதிப்பார்கள்....

Anonymous said...

@Muthu
M.F.Hussain is not only insulted hindus, he insulted muslims as well in Meenaxi film. I request all readers to condiser him as 'Psycotic' and he is not representative of muslim religion; even muslims will not forgive him for what he did. We are with you Hindu friends!! We (muslim)condemn him, dont let him come back to India unless he apologize!!

------------------

Probably u don't know the complete story of what happened during Meenaxi controversy. The very same Lunatic Jihadi IMMEDIATELY withdrew the movie from the theaters as it offends Muslim sentiments. This is Indian secularism.

யதிராஜ சம்பத் குமார் said...

முத்து::


உங்களது வாதத்திற்கே வருகிறேன். நீங்கள் கொடுத்துள்ள சுட்டிகளில் ஒன்றில் லஜ்ஜா கெளரி என்ற பெண் தெய்வம் நிர்வாண சிற்பமாக காட்சியளிக்கிறது. அதிலும் தலையை காணோம். அது கடவுளர் சிற்பமாகவே இருக்கட்டும். ஆனால் அச்சிற்பம் எந்தவொரு விலங்குடனும் புணர்வது போல் இல்லையே?? ஆனால் ஹுஸேனின் கலைக்கண் அவ்வாறல்லவா தெய்வங்களை நோக்குகிறது?? உங்களது வழிக்கே வந்தாலும், எந்த கோவிலிலும், எந்த ஹிந்து சிற்பியும் ஒரு பெண் தெய்வம் விலங்குடன் உறவில் ஈடுபட்டிருப்பதுபோல் வடிக்கவில்லை. ஏனிந்த வக்கிரப் பார்வை என்பதே எமது கேள்வி!


நபியின் கேலிச்சித்திரத்திற்கு இஸ்லாமியரின் எதிர்ப்பு பற்றி கேட்டதற்கு உங்களிடமிருந்து இதுகாறும் பதிலில்லை. நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர், ஒரு தேசத்தின் தூதரகம் கொளுத்தப்பட்டுள்ளது. அதெல்லாம் ஹிந்துக்கள் செய்யவில்லையே?? வெறும் எழுத்து மூலமான எதிர்ப்பு மட்டுந்தானே தெரிவிக்கிறோம். அதற்கேன் மதச்சாயம் பூச முயற்சிக்கிறீர்??

R.Gopi said...

//யதிராஜ சம்பத் குமார் said...
நபிகள் நாயகத்தை கேலிச் சித்திரமாக வரைந்ததற்கு ஏன் இஸ்லாமியர்களுக்கு கோபம் வர வேண்டும்?? வரைந்தது கிறிஸ்தவர் என்பதாலா என்று ஹிந்துக்கள் கேள்வியெழுப்பினால் அது எவ்வளவு அபத்தமாக இருக்குமோ இந்த உங்களது கேள்வியும் அவ்வளவு அபத்தம்.//

ய‌திராஜ் ச‌ம்ப‌த் குமார்.... நெத்தி அடி....

வலைஞன் said...

அன்புள்ள முத்து,

இந்த விவாதம் முடிவின்றி தொடரும்.ஆகவே உங்கள் மதத்தை மதியுங்கள்.ஹிந்து மதத்தை அல்லது கொள்கைகளை உங்களில் யாரும் தவறாக விமரிசிக்காத படி பார்த்துக்கொள்ளுங்கள் தீவிரவாதத்தில் யார் ஈடுபட்டாலும் வெளிப்படையாக உங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துங்கள்.இதுவே போதுமானது.
மேலும் ஹிந்து மதம் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் தொன்மையானது.பல மாற்றங்களை கண்டது.ஒவ்வொன்றிக்கும காரணம் உள்ளது லெமூரியன் க்கு விளக்கம் கொடுக்கவே ஒரு கட்டுரை எழுதவேண்டி வரும்.மேலும் ஹிந்து மதத்தை ஒரு ஹிந்து நாத்திகர் விமரிசிக்கும் போதும் அல்லது வேறு மதத்தினர் விமரிசிக்கும்போதும் எழும் எதிர்ப்புகள் வெவ்வேறானவை.
எனவே பொறுப்புணர்ந்து
செயல் படவும்.
நன்றி.

மர தமிழன் said...

லெமூரியன் said...
...ஆனால் அம்பது வருடத்துக்கு முன்பு தோன்றிய ஒரு தேசத்திற்கு இவர்களாகவே ஒரு சித்திரம் வரைந்து அதற்க்கு பாரத மாதா என்று பெயரும் சூட்டி விட்டு இப்படி தேச ஒற்றுமைப் பற்றியும் இந்து மதத்தைக் காக வந்த காவலர்களைப் போல குதிப்பார்கள்...என்னது இந்திய தேசம் ஐம்பது வருடங்களுக்கு முன்புதான் தோன்றியதா? அப்போ எல்லாருமே ஆரியர்கள்தானா? அடங்கொக்கமக்கா!!!! இது பார்பன சதியவிட பயங்கரமா இல்ல இருக்கு!!! தானை தலைவர் கவனிப்பாராக!!மற்றபடிக்கு இதுவேதான் என் கருத்தும்::


வலைஞன் said...
அன்புள்ள முத்து,


இந்த விவாதம் முடிவின்றி தொடரும்.ஆகவே உங்கள் மதத்தை மதியுங்கள்.ஹிந்து மதத்தை அல்லது கொள்கைகளை உங்களில் யாரும் தவறாக விமரிசிக்காத படி பார்த்துக்கொள்ளுங்கள் தீவிரவாதத்தில் யார் ஈடுபட்டாலும் வெளிப்படையாக உங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துங்கள்.இதுவே போதுமானது.

வால்பையன் said...

//மற்ற மத கடவுள்களை இழிவுப்படுத்த வேண்டாம் என்று குரானில் தெளிவாகவே உள்ளது.//

கடவுள் ஒருவரே! அவரே அல்லா!

என்று சொன்ன குரானில் எப்படியப்பா மற்ற மத கடவுள்களை இழிவு படுத்த வேண்டாம் என்றிருக்கும்!

குரானை ஆளாளுக்கு ஒரு மாதிரி புரிஞ்சிகுவாங்களோ!

khaleel said...

In any other country he would have been thrown out or even executed for what he did. only in india this would be tolerated.

யதிராஜ சம்பத் குமார் said...

இங்கிருப்பவர்களெல்லாம் ஆரிய மொழி பேசும் ஆதிக்க வர்க்கத்தைச் சேர்ந்த காவிக் கூட்டம்...சரி!!


அராபிய மொழியை ஜெபிப்பவர்கள் எல்லாம் எப்பொழுது லெமூரியர்களானார்கள்??

லெமூரியன் said...

மரத தமிழன் அவர்களுக்கு....வாஸ்கோடகாமா இந்தியாவில் காலடி வைக்கும் பொது இது ஒன்றும் ஒரு முழு நீள தேசம் கிடையாது அப்போது இந்திய என்பது இந்த பகுதிகளின் ஒரு குறியீட்டு சொல் அவ்வளவே.....அவர் வந்த காலத்தில் இங்கு ஆரியத்திற்கும் மேற்ப்பட்ட சிற்றரசுகளும் நூற்றுக்கும் மேற்ப்பட்ட பேரரசுகளும் இருந்தன ....அவர்கள் யாரும் நாங்கள் இந்தியர்கள் என்று சொல்லிக்கொள்ளவில்லை....இந்த பகுதிகலானைத்தும் (பாகிஸ்தானம் வங்கதேசம் ஆப்கானிஸ்தானம் பூட்டான் மியன்மார் ) வெள்ளையர்களின் காலத்தில் மட்டுமே ஒன்றாக இருந்தன....அப்போதும் கூட தனித் தனி மாகாண கவர்னர்களின் கட்டுப்பாடுகளின் கீழேயே அவை இருந்தன....அம்பது வருடத்திற்கு முன் சுதந்திரம் பெற்ற போது வல்லபாய்ப் படேல் என்ற சாதி இந்து வெறியனால் இணைக்கப் பட்டு இந்திய என்றானது.....அதுவும் இந்த இணைப்பிற்காக ஒரு ஒரு மாநிலத்திலும் அவன் பிச்சை எடுத்த கதை வசதியாக அதன் பின் வந்த காங்கிரசு அரசுகளால் மறைக்கப் பட்டு அவனை மாவிரன் என்றழைக்க வைத்து விட்டது....(குறிப்பு:திராவிடர்களோ ஆரியர்களோ நாங்கள் இந்தியர்கள் என்று எங்காவது சொல்லி இருந்தால் சான்றுடன் விளக்கவும் உங்கள் போன்ற சான்றோர்களிடம் இருந்து நான் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் நிறைய இருக்கிரதேனவே உணர்கிறேன் பணிவாக)

வால்பையன் said...

//அம்பது வருடத்திற்கு முன் சுதந்திரம் பெற்ற போது வல்லபாய்ப் படேல் என்ற சாதி இந்து வெறியனால் இணைக்கப் பட்டு இந்திய என்றானது.//

அப்படியே இருந்தாலும் அதை இந்து மத வெறியன் என்று குறிப்பிட வேண்டுகிறேன்!

அப்படியே ஜின்னா என்ற இஸ்லாமிய மத வெறியனால் இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிக்கபட்டது என்பதையும் நினைவு கூறுகிறேன்!

மதம் பிடித்தாலே வெறியும் பிடிச்சுகிதே!

லெமூரியன் said...

\\யதிராஜ சம்பத் குமார் said...

இங்கிருப்பவர்களெல்லாம் ஆரிய மொழி பேசும் ஆதிக்க வர்க்கத்தைச் சேர்ந்த காவிக் கூட்டம்...சரி!!


அராபிய மொழியை ஜெபிப்பவர்கள் எல்லாம் எப்பொழுது லெமூரியர்களானார்கள்??//

ஆதி தமிழர்களான , ஆதி திராவிடர்கள் இயற்கையை மட்டுமே சக்தியாக பாவித்தார்கள்....அவர்களே லெமூரியர்கள்..... லெமூரியர்களுக்கு எவனையும் ஜெபிக்க வேண்டிய அவசியம் வந்ததில்லை தோழனே..!

லெமூரியன் said...

மன்னிக்க வேண்டும் வால் பையன் அவர்களே....ஆதிக்க சாதியத்தினரை தமிழில் சாதி இந்து என்றே குறிப்பிடும் வழக்கம் இருக்கிறது. அதனாலேயே சாதி இந்து வெறியன் என்ற வார்த்தை பயன்படுத்த வேண்டியதிருந்தது.

மேலும் ஜின்னாவைப் பற்றி உங்கள் காவிக் கூட்டத்தில் இருந்தே ஒருவர் புத்தகம் போட்டு அவரை முழு குற்றவாளிக் கூண்டில் நிறுத்தவில்லை. ஆதலால் அந்த விஷயங்களை நான் தொடவிரும்பவில்லை.

வால்பையன் said...
This comment has been removed by a blog administrator.
லெமூரியன் said...
This comment has been removed by a blog administrator.
யதிராஜ சம்பத் குமார் said...

லெமூரியர்களுக்கு எவனையும் ஜெபிக்க வேண்டிய அவசியம் வந்ததில்லை தோழனே..!///


தவறான புரிதல் தோழரே!! இங்கிருப்பவர்கள் அனைவரும் ஆதிக்க சாதி காவிக் கூட்டம் என்று உங்களது இஸ்லாமிய நண்பரிடம் கூறினீர்கள். அப்படியானால் இஸ்லாமியர்கள் அனைவரும் தமிழர்கள் என்று கூறுகிறீர்களா??


அதனால் இஸ்லாமியர்கள் எப்போது லெமூரியர்களானார்கள் என்று கேட்டேன். ஆரியர்களின் பூர்வீகத்திற்கும், இஸ்லாமியர்களின் பூர்வீகத்திற்கும் பூகோள ரீதியாக தொலைவு மிகக் குறைவு.

யதிராஜ சம்பத் குமார் said...

இட்லிவடையின் தற்போதைய பதிவிலிருந்தே ஒரு உதாரணம்....ஹிந்து மதத்தின் மாண்பை உணர்த்துவதற்கு இது ஒன்று போதும்!!


தச்சம்யோ ராவ்ருணீ மஹே! காதும் யஜ்ஞாய !
காதும் யக்ஞ பதயே: தைவீ ஸ்வஸ்திரஸ்துந :!
ஸ்வஸ்திர் மானுஷேப்ய:! ஊர்த்வம் ஜிகாது
பேஷஜம் ! சந்நோ அஸ்துத்விபதே ! சம்சதுஷ்பதே ஓம் சாந்தி : சாந்தி : சாந்தி :

தமிழில்:

மனித சமுதாயம் நன்மை பெற வேண்டும்;
செடி கொடிகளும் மூலிகைகளும் நன்கு வளர வேண்டும்; மரங்கள் ஆகாய மார்க்கமாக நெடிந்து வளர வேண்டும்; இரண்டு கால் ஜீவராசிகள் நலம் பெற வேண்டும்:
நான்கு கால் ஜீவராசிகள் நலம் பெற வேண்டும்....அமைதி அமைதி அமைதி என்பதே நிலவ வேண்டும்..


இதை விட செக்யூலரிஸம் என்ன வேண்டும்??


ஸர்வே ஜனா ஸுகினோ பவந்து....உலகில் எல்லா உயிர்களும் இன்புற்றிருக்க வேணும்....ஸமஸ்த ஸம் மங்களானி பந்து....அனைவருக்கும் நன்மையே உண்டாக வேணும்..

இதுவும் ஹிந்து மத வேதங்கள் கூறுவதுதான்....இதற்கு மேல் எதுவுமே பேசத் தேவையில்லை. மதத்தின் பெயரால் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளையும், பேதங்களையும் வளர்த்துக் கொள்வதில் ஆர்வமில்லை. தவிர அவரவர்களது மார்க்கம் அவரவர்களுக்கு!! அதனை இழிவு செய்கிறவர்களை அவர்களாலானவரை கண்டிக்கிறார்கள்.


இத்துடன் இப்பதிவிற்கான பின்னூட்டங்களுக்கு என்வரையில் ஒரு முற்றுப் புள்ளி வைத்துக் கொள்கிறேன்.

நன்றி.

Anonymous said...

There is no concept called Arians and Dravidians... it was created by British.. i would say Christians.. For more information, please refer the below links..

http://www.tamilhindu.com/2009/07/questions-to-michael-witzel/

Lamurian,

Krishna was in Gokul only till 6. After 6, He left from Gokul. Dont make wrong statements

வால்பையன் said...

//தச்சம்யோ ராவ்ருணீ மஹே! காதும் யஜ்ஞாய !
காதும் யக்ஞ பதயே: தைவீ ஸ்வஸ்திரஸ்துந :!
ஸ்வஸ்திர் மானுஷேப்ய:! ஊர்த்வம் ஜிகாது
பேஷஜம் ! சந்நோ அஸ்துத்விபதே ! சம்சதுஷ்பதே ஓம் //

மேலிருப்பது என்ன எழுவு மொழியோ தெரியல!

எனக்கு ஒன்னு தெரியும் சொல்றேன் கேளுங்க!


க்க்ஜச்ய்ஹ்ஃப்ன்ப்வ்ப
கக்ஃபின்ச்வ்பிபெச்க்
க்ஹ்ஃப்க்இஎக்ஹ்ஜ்வ்ச்
க்ப்கைஉன்ப்ஃப்வ்ப்ஹ்ச்ப்

அதாவது மக்களை ஏமாத்தி பிழைக்க கண்டுபிடித்த வழி தான் கடவுள்!
சும்மா கடவுள் கடவுள்னு பூச்சி காட்டிகிட்டே இருந்தா அவன் நாம சொல்றதெல்லாம் கேப்பான்!

முட்டாபய தானே இந்த மனிதகூட்டம்!

வால்பையன் said...

ஐயா அனானி!

அந்த ஹிந்து பதிவில் இருக்கும் செய்திகள் பொய்யின்னு நான் சொல்றேன்!
உண்மைன்னு நீங்க சரியா நீறுபிங்க!

உலக அளவில் சோதனை செய்யப்பட்ட ரத்ததின் டி.என்,ஏ க்கலீல் ஆரியன் என்று ஒரு இனம் உண்டு என்று கண்டுபிடிக்கப்பட்டது!

ரொம்ப சிலித்துகாதிங்க, ஜெர்மனியர்கள், கொஞ்சம் பிரிடிஷ்காரனும் உங்களுக்கு சொந்தகாரன் தான்

Anonymous said...

தா பார்ரா, ஐஸக் நீயூட்டன் தம்பி வால் பையன் கண்டுபிடிப்ப!! வாரே வா!!

மர தமிழன் said...

மூர்க்கமாய் இருந்த மனிதனை முட்டாளாக வைத்திருப்பது கடவுள்தான் என்றாலும் அவன் முட்டாளாய் இருந்தவரையில் பெரியதாக எந்த பாதகமும் இல்லை, இப்போது அந்த கடவுளின் பெயராலேயே மூர்க்கம் தலை தூக்குவது மனித இனத்தின் அழிவில்தானே போய் முடிகிறது, போகட்டும் இப்போது கடவுளிடம் ஏமாறுகிற மக்களைவிட கரைவேட்டிகளிடம் ஏமாறுகிறவர்கள் தானே அதிகம்.. பேசாமல் அம்மணமாய் பச்சை கறி தின்று ஜீவித்திருந்திருக்கலாம் போலிருக்கிறது!!

அது சரி கோடிக்கணக்கான மக்களை சேர்த்து வைத்தவர்களெல்லாம் வெறியர்கள் என்றால், பிரித்து வைத்தவர்களுக்கு என்ன பெயரோ? சேர்ந்தே இருப்பது எரிகிறது போல..

மற்றபடி::

யதிராஜ சம்பத் குமார் சொல்வது போல::


இதற்கு மேல் எதுவுமே பேசத் தேவையில்லை. மதத்தின் பெயரால் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளையும், பேதங்களையும் வளர்த்துக் கொள்வதில் ஆர்வமில்லை. தவிர அவரவர்களது மார்க்கம் அவரவர்களுக்கு!! அதனை இழிவு செய்கிறவர்களை அவர்களாலானவரை கண்டிக்கிறார்கள்.


இத்துடன் இப்பதிவிற்கான பின்னூட்டங்களுக்கு என்வரையில் (நானும்) ஒரு முற்றுப் புள்ளி வைத்துக் கொள்கிறேன்.

நன்றி.

வால்பையன் said...

//
தா பார்ரா, ஐஸக் நீயூட்டன் தம்பி வால் பையன் கண்டுபிடிப்ப!! வாரே வா!! //


தானே கண்டுபிடித்த தானை தலைவர் வாழ்க!

சரி சொல்லுங்க ஐஸக் நியூட்டன் ஆப்பிளே விளையாத நாட்டில் வாழ்ந்திருந்தா என்னாத்த கண்டுபிடித்திருப்பார்!

Muthu said...

//நபிகள் நாயகத்தை கேலிச் சித்திரமாக வரைந்ததற்கு ஏன் இஸ்லாமியர்களுக்கு கோபம் வர வேண்டும்?? வரைந்தது கிறிஸ்தவர் என்பதாலா என்று ஹிந்துக்கள் கேள்வியெழுப்பினால் அது எவ்வளவு அபத்தமாக இருக்குமோ இந்த உங்களது கேள்வியும் அவ்வளவு அபத்தம்.//
கிறிஸ்தவர் மட்டும் அல்ல, ஒரு முஸ்லிம் செய்து இருந்தாலும் கண்டித்து இருப்போம்.. உதாரணம்...தஸ்லிமா நஸ்ரின் மற்றும் சல்மான் ருஷ்டி!!
நீங்கள் கோழைகள்! அதனால்தான் வேறு ஒரு மதத்தவர் உங்களை இழிவு படுத்திவிட்டார் என்றால் கோபம் வருகிறது . ஆனால் உங்கள் மதத்தை சேர்ந்த தி.க, தி.மு.க ஆளுங்க எல்லாத்தையும் என்ன செய்வீங்க? ஒன்னும் செய்ய முடியாது!! .அதனால்தான் கேட்டேன்!!
திரு யதிராஜ சம்பத் குமார்,
//எந்த கோவிலிலும், எந்த ஹிந்து சிற்பியும் ஒரு பெண் தெய்வம் விலங்குடன் உறவில் ஈடுபட்டிருப்பதுபோல் வடிக்கவில்லை//
அப்ப உங்க பிரச்சினை நிர்வாணமாக படம் வரைந்தது இல்லை, விலங்குடன்
உறவில் ஈடுபட்டிருப்பதுபோல் வரைந்ததுதான் இல்லையா? So, நிர்வாணம் ஓகே, அப்படிதானே?? மிக அருமை!!!!காஞ்சிபுரத்தில் சிவன் உடையின்றி இருப்பதை பார்த்து எந்த பதிலும் இல்லை?? சக்தி படம் மேலாடை இன்றி இருந்ததை பற்றி எந்த பதிலும் இல்லை? அதே போல காளி தேவி யாருடனோ உடல் உறவு கொள்வது போன்ற படத்தை பார்த்த பின்ன பின்னும் எந்த பதிலும் இல்லை? முதலில் இதை செய்தவர்களை கண்டியுங்கள். ஹுசைனுக்கு எந்த தண்டனை வேண்டுமானாலும் கொடுங்கள்,எந்த முஸ்லிமும் எதிர்த்து கேட்க போவது இல்லை.

சரி இப்ப என செய்ய??

இனி நடக்கும் எந்த நிகழ்வையும் மதங்களின் பின்னணியில் பார்க்காதீர், எவனோ ஒரு முஸ்லிம் குண்டு வைத்தால் அது முஸ்லிம்கள் எல்லாம் செய்த தவறு என்று பேசாதீர்! ஒரு திவீரவாதியை தவிர மற்ற அனைத்து முஸ்லிம்களும் அதற்கு கண்டனம் தெறிவிக்கிறாஇர்கள் என்று எண்ணுங்கள்!! நாங்களும் இந்தியன் தான் என்பதை உணருங்கள்! உங்கள் உடம்பில் ஓடும் அதே இந்திய ரத்தம் தான் எங்களுக்கும் ஓடுகிறது, எங்களை பாகிஸ்தானுக்கு ஓடுங்கள் என்று சொல்லாதிர்கள்!! பாகிஸ்தானில் இருப்பவர்களையும் எங்களையும் இணைத்து பேசாதீர்கள்! காழ்ப்புணர்சியை விடுங்கள்..ஹுஸைனும் குண்டு வைக்கும் தீவிரவாதியும் முஸ்லிம்களின் பிரதிநிதி அல்ல, புரிந்து கொள்ளுங்கள்!!! இல்லை இப்படியே பத்திரிகை சொல்வது போல இன்னும் முஸ்லிம்கள் எல்லாம் தீவிரவாதிகள் , தாலிபான் க்ள் என்று சொல்லி கொன்டு இருந்தால் நல்லவனும் தீவிரவாதி ஆக வாய்ப்பு இருக்கு, அந்த பழி எல்லாம் பின் உங்களையே சேரும்!! சிந்தித்து செயல் படுங்கள்!!
//இந்து மதத்துக்கு சகிப்பு தனமை அதிகம்//- 1992 க்கு முந்தைய பழைய செய்தி!! (இதையே எத்தனை வருஷத்துக்கு சொல்ல போறீங்க???)

/இரண்டு கால் ஜீவராசிகள் நலம் பெற வேண்டும்:
நான்கு கால் ஜீவராசிகள் நலம் பெற வேண்டும்....அமைதி அமைதி அமைதி//
குண்டு வைக்கும் தீவிரவாதிகளுக்கும், குஜராத், மும்பை, அயோத்தி இடங்களில் தான் மனித ஜாதி அல்ல என்று நிரூபிததவர்களுக்கும் தேவையான ஒன்று!!

Muthu said...

//ஐஸக் நியூட்டன் ஆப்பிளே விளையாத நாட்டில் வாழ்ந்திருந்தா என்னாத்த கண்டுபிடித்திருப்பார்!//
நீங்கள் வால்பையன் இல்லை மடப்பையன் என்று!!(அனைத்து மதங்களையும் இழிவு படுத்தியதற்கு!!)

Rama said...
This comment has been removed by a blog administrator.
khaleel said...

check this. very good reply for your query

http://mathavaraj.blogspot.com/2009/11/blog-post_13.html