SAVE TADA – தடாவைக் காப்பாற்றுவோம்
மேலும் விவரங்கள் கீழே....
தடா, சென்னையைச் சேர்ந்தவர்களுக்கு இந்த இடம் தெரியாமல் இருக்காது. சென்னைக்கு வடக்குப் பக்கமாக 2 மணிநேரம் பிரயாணம் செய்து போனால் தடாவை அடையலாம். தடா நீர்வீழ்ச்சி இளசுகள் மத்தியில் பிரசித்தி பெற்றது. சென்னை டிரக்கிங் கிளப்ல் இருந்து பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 200 பேர் அங்கு சென்று ‘Save Thada’ என்று உச்சரித்ததோடு மட்டுமல்லாமல் அந்த இடத்தினை தூய்மைப் படுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர். நவம்பர் 1, ஒரு நாள் பூரா அங்கு தங்கி பிளாஸ்டிக் குப்பைகள், உடைந்த பாட்டில்கள் ஏனைய குப்பைகள் என்று அனைத்தையும் கட்டி சுமார் 500 குப்பை பொதிகளை அகற்றி இருக்கிறார்கள். இவர்களை வரவேற்ற வன சரக அதிகாரிகள், உள்ளூர் பொழுது போக்கு இடத்தைத் தூய்மைப் படுத்த வந்தவர்களைப் பார்த்து அதிசயித்திருக்கின்றனர்.
அசுத்தம் செய்யாதே என்று போர்டுகளை நட்டு வைத்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர். பல இடங்களிலிருந்தும் இங்கு வந்து குமியும் ‘குடி’மகன்கள், அங்கே வந்து செய்யும் அட்டூழியம் அத்து மீறும் வகையில் அமைந்துள்ளதாக அங்கலாய்கின்றனர் இவர்கள். குடிப்பதும், பாட்டில்களை உடைத்து எறிவதும், குடும்பத்துடன் வரும் மக்களை வம்பிழுப்பதும் என்று சேட்டைகள் அதிகமாவதை, வனத்துறையினரிடம் புகார் அளித்ததுடன், அந்த இடத்தை ‘no alcohol zone’ என்று மாற்றும்படியும் கோரிக்கை வைத்துள்ளனர்.
சென்னை டிரக்கிங் கிளப் இணைய தளம்
Save Tada நிகழ்வு பற்றிய இணைய தளம்
( நேரடி ரிப்போர்ட் உதவி: செந்தில் சென்னை டிரக்கிங் கிளப் உறுப்பினர் )
இட்லிவடை இவர்களை பசுமையாக வாழ்த்துகிறது!!
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Saturday, November 07, 2009
தடாவைக் காப்பாற்றுவோம்
Posted by IdlyVadai at 11/07/2009 08:00:00 AM
Subscribe to:
Post Comments (Atom)

நன்றி: தினமணி










7 Comments:
நல்ல பதிவு!! சுற்றுச் சூழல் மாசுபடுவதைப் பற்றி கவலைப் படுவதோடு மட்டுமல்லாமல், அதைத் தடுப்பதற்கு தங்களாலியன்றதைச் செய்த நல்ல உள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
நல்ல முயற்சி. வாழ்த்துக்கள். தடா மட்டுமல்லாமல் எல்லா இடங்களையுமே சுத்தமாக வைத்துக் கொள்ளும் விழிப்புணர்வு பரவ வேண்டும்.
மஞ்சள் சாயம் வெளுத்துப்போச்சா இல்லை அலுத்துப்போச்சா? எப்படி இருப்பினும்
வளரட்டும் பசுமைக் கமெண்டுகள்!
பசுமையை நேசிக்கும் உள்ளங்களுக்கு நன்றி! வந்தனம்!
இது ஆரம்பம் என்றுதான் தோன்றுகிறது இன்னும் சில காலத்தில் பசுமையின் அருமை மற்றும் விவசாயத்தின் பெருமையை நம் மக்கள் உணர துவங்கி விடுவார்கள், காங்க்ரீட் காடுகளின் வாசம் வெருத்துப்போகும் நாள் வெகு தூரத்தில் இல்லை.
இது போன்ற பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்.
குடி குடியைக் கெடுக்கும்.
குடிப்பவர்களின் குடியைத்தான்
தடை - தடாவைக் காக்கும்
குடிப்பவர்களிடமிருந்துதான்!
Hats off for the news.Infact IdlyVadai must publish more items like this.The use of plastic is the maximum in Tamilnadu.Even thudaipams are in plastic. many metros have banned plastic carry bags.Chennai is yet to do.The civic conscience of Tamils have to be awakened against Plastic.IdlyVadai must wage a crusade against plastic.your energy and Networking capablities will definitely have a positve impact.
நமது அன்புமணி இப்போது சும்மாதானே இருக்கிறார்! அவரது பார்வைக்கு இதைக் கொண்டுபோவதுதானே! மதுத்தடையோடு மாசுத்தடையும் சேர்ந்து பா.ம.க. வளம் பெறட்டுமே!
கிருஷ்ணமூர்த்தி
Post a Comment