பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, November 04, 2009

இரண்டு பேர் - இரண்டு போஸ்ட்

இன்பா மற்றும் யதிராஜ சம்பத் குமார் எழுதிய கட்டுரைகள்...

ஒரு கோப்பை நாத்திகம் - இன்பா
கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு. கோவிலுக்கு போகாத மனிதர்கள் இல்லாத நூற்றாண்டு.
வேத மந்திரங்களை உட்ச்சரிக்கும் பிராமிணர்களே அன்றைக்கு இறைதூதர்கள். இறைவனுக்கு,மக்கள் பயந்து நடுங்கிய யுகம். மாற்றுசிந்தனைகளுக்கோ, கேள்விகளுக்கோ இடமில்லாத காலக்கட்டம்.

அன்று ஒரு மனிதனை மட்டும் திடுக்கிட வைக்கும் கேள்வியொன்று ஆட்டிப்படைத்தது. அன்றைக்கு யாருக்கும் நினைத்துபார்க்க இயலாத,கற்பனைக்கும் எட்டாத அந்த கேள்வி.....கடவுள் இருக்கிறாரா?. அப்படி இருந்தால் அவர் எங்கே இருக்கிறார் நாம் வணங்கும் கல்லிலா அல்லது வேறு எங்காவதா?

கேள்வி..கேள்விகள் ஆகி...சிந்தனை தீ கொழுந்துவிட்டு எரிந்து....முற்றிலும் ஒரு புதிய தத்துவம் உருவானது. அதுதான் பகுத்தறிவு என்று இன்றைக்கு அழைக்கப்படும் நாத்திகம்.

"நட்ட கல்லை தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
சுற்றிவந்து முணமுனவென்று சொல்லு மந்திரம் ஏதடா?
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்.
சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமா?"

இறைவன் நமக்குள் இருக்கிறார் பின் வெறும் கற்களை வணங்குவது ஏன்? அதை சுற்றிவந்து சொல்லும் வேத.மந்திரங்களுக்கு அர்த்தம் என்ன? - இப்படி ஒரு சிந்தனை உருவான காலகட்டமே நமக்கு ஒரு பிரமிப்பை தருகிறது. இந்த சிந்தனைகளை உருவாக்கிய அந்த மனிதர்தான்...சிவவாக்கியர்.

சிவவாக்கியர்....பதினெண் சித்தர்களில் ஒருவர். தாயுமானவரால் குறிப்பிடப்படும் பெருமை பெற்றவர். இவர் இயற்றிய நூலுக்கு சிவவாக்கியம் என்று பெயர்.

"சாத்திரம் ஓதுகின்ற சட்டநாத பட்டரே...வேர்த்து,இரைப்பு வந்தபோது வேதம் வந்து உதவுமா"

கடவுள் மறுப்பு மட்டும் இல்லாமல்...புரட்சிகரமான சமுக சிந்தனைகளை வித்திட்டவர் இவர். சாதி ஒழிப்புக்கு எதிராக ஒலித்த முதல் குரல் இவருடையது.

"சாதியாவது ஏதடா சலம் திரண்ட நீராலோ
பூத வாசல் ஒன்றலோ பூதம் ஐந்தும் ஒன்றலோ"

சாதிகள் ஏது. நம் உடலில் ஓடும் குருதி ஒன்றல்லவா என்கிறார் சிவவாக்கியர்..

"பறைச்சியாவது ஏதடா? பணத்தியாவது ஏதடா? இறைச்சிதோல்,எலும்பினும் இலக்கமிட்டு இருக்குதோ?"

படிக்கின்ற நெஞ்சங்களில் ஆணியாய் அறையும் எழுத்துக்கள் இவருடையது.

சாதி ஒழிப்பை தன் கவிதைகளில் மட்டும் சொல்லாமல், தனது வாழ்க்கையிலும் கடைபிடித்தார் சிவவாக்கியர். ஆம்; 'அபிதான சிந்தாமணி' என்னும் நூலில், இவர் வேதியர் குலத்தில் பிறந்தவர். சக்கிலியன் என்னும் தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த ஒருவன் இவரிடம் ஒரு சுரைக்காயையும்,மணலையும் கொடுத்து,இதை எவள் உமக்கு சமைத்து தருகிறாளோ அவளே உன் மனைவி என கூறியதாகவும்,அதன்படி, அப்படி சமைத்துதந்த ஒரு குறவர் குல பெண்ணை, சிவவாக்கியர் மணம் புரிந்து கொண்டதாகவும், இந்த நூல் குறிப்பிடுகிறது.

"வெட்ட வெளிய தன்றிமற்று வேறு தெய்வம் இல்லையே" என்ற சிவவாக்கியர், நாத்திக சிந்தனைகளின் வித்து.

கி.பி பதினெட்டாம் நூற்றாண்டு. அதன்பிறகு, ஏன்? எதற்கு? எப்படி? என கேள்விகள் கேட்கும், ஒரு துணிச்சல் வாய்ந்த பகுத்தறிவாளனுக்காய் நம் தமிழ் சமுகம் பல நூற்றாண்டுகள் காத்திருக்க வேண்டியதாயிற்று. 1879 ஆம் வருடம் அந்த காத்திருப்பு முடிவுக்கு வந்தது. அந்த வருடம்தான் மாமனிதர் ஈ.வெ. ரா தோன்றினார்.

"சாதி ஒழிக்க முயன்றவர்கள் மிகவும் குறைவு. புத்தர் ஒழிக்க ஆரம்பித்தார். அவர் கருத்துகள் பரவ ஆரம்பித்தவுடன் அவரை ஒழித்துக் கட்டி விட்டார்கள். வள்ளுவர் ஏதோ இரண்டு கவி சொன்னார். அதையும் மறைத்துவிட்டனர். பிறகு தோன்றிய வள்ளலார் இராமலிங்கர் கூடச் சொன்னார். "பல சமயமும் கொள்ளை வினைக்கூட்டத்தின் பிள்ளை விளையாட்டும்" என்று சொன்னார். அவர்கள் போட்ட அஸ்திவாரத்தில் அவற்றையெல்லாம் அசைக்கக் கூட முடியவில்லை " என்று சொன்ன பெரியார்,

"எனது வாழ்க்கையில் நான் முதல் இலட்சியமாகக் கொண்டிருப்பது சாதி ஒழிப்பு; என் இனம், எனது சமூதாயம் பிறவியிலே அவர்கள் தாய்நாட்டிலேயே இழிமக்களாக இருப்பதை ஒழிப்பது எனது கடமை" என சாதி ஒழிப்பே சமுதாய முன்னேற்றத்திற்க்கான அடிப்படை என்பதில் இறுதிவரை உறுதியாய் இருந்தார்.

"நம்முடைய நாட்டில் பொதுத்தொண்டு என்பது மிக அருமையாக ஆகிவிட்டது. நம்முடைய பழக்க வழக்கங்கள், சமூதாயநிலை முதலியன அவரவர் சுயநலத்தைப் பற்றிக் கவலைப்படும்படிச் செய்கிறதே யொழிய மற்றப்படி பொதுத்தொண்டு குறித்துக் கவலைப்படுவதாக இல்லை. மற்ற உலக நாடுகளைப் போல் இன்று நாமில்லை. ஒரே கடவுள், ஒரே மதம், ஒரே இனம் என்கிற நிலையில் அவர்கள் இருக்கிறார்கள்! நம் நிலை மிகவும் மோசம். பத்தாயிரம் கடவுள்கள். பல மதங்கள்! பல சாதிகள் பிறவி இழிவு இவைகளால் சிதறுண்டு கிடக்கிறோம்" என்று அன்று அவர் கூறிய கருத்துக்கள் இன்றைக்கும் பொருத்தமாய் இருக்கிறது.

தோழர்களே! சாதி, மதம், மூடப்பழக்க வழக்கங்கள்,இது மூன்றும் மாறினால் தானேநமக்கு நன்மை ஏற்படும்?இவற்றைப் பாதுகாத்துக் கொண்டு எப்படி நம் சாதி இழிவை மடமையை, தற்குறித்தனத்தை ஒழிக்க முடியும்? இவை மூன்றும் ஒழிவது தான்முக்கியமே ஒழிய வரி குறைக்க வேண்டும் என்று கேட்பதோ, பண்டத்தின் விலைவாசியைக் குறைக்கின்றேன் என்பதோ முக்கியம் இல்லை. அப்படிச் செய்கிறேன் என்பதும் பித்தலாட்டமாகும் - என்கிறார் தந்தை பெரியார்.

பெண்ணடிமைதனம் மேலோங்கிஇருந்த காலத்தில், விதவை திருமணம், பெண் கல்வி முதலிய பெண்ணுரிமைகளுக்காக ஒலித்த முதல் போர்குரல் தந்தை பெரியார் அவர்களுடையது. பெண்ணுரிமை குறித்த இவரது கருத்துக்களை நீங்கள் உலகின் எந்த மூலையில் இருப்பவருடனும் "எங்க அய்யா சொன்னாரு" என்று கூறலாம்.

பெண்கள் பெருமை, வருணனை ஆகியவைகளில் பெண்கள் அங்கம், அவயவங்கள், சாயல் ஆகியவைகளைப் பற்றி ஜம்பது வரி இருந்தால் அவர்களது அறிவு அவர்களால் ஏற்படும் பயன் சக்தி திறமைப் பற்றி ஒரு ஐந்து வரி கூட இருக்காது.பெண்களின் உருவை அலங்கரிப்பது,அழகை மெச்சுவது, சாயலைப் புகழுவது ஆகியவை பெண்கள் சமூதாயத்திற்கு அவமானம், இழிவு, அடிமைத்தனம் என்பதை ஆயிரத்தில் ஒரு பெண்ணாவது உணர்ந்திருக்கிறது என்று சொல்ல முடியுமா? - இப்படி சொல்ல நம் பெரியாரை தவிர வேறு யாரால் முடிந்திருக்கிறது?

காதல் உணர்வை அய்யாவைபோல அறிவுப்பூர்வமாக அணுகியவர்கள் யாரும் இல்லை.

"காதல் என்பது மிகச் சாதாரண அற்ப விஷயம். காதலுக்கு அடிமையாவது இன்றைய சமூதாய வாழ்க்கை முறைக்குச் சிறிதும் பொருந்தாது. கண்டதும் காதல் கொண்டு, காதல் பசி தீர்ந்ததும் சலிப்படைந்து, அதன் பயனைப் பிறகு வேதனையுடன் பொறுத்துக் கொண்டிருப்பதென்றால், அது இன்ப வாழ்க்கையாக இருக்க முடியாது.

ஆனால், வாழ்க்கைத் துணை விஷயத்தில் காதல் போதாது. அறிவு, அன்பு, பொருத்தம், அனுபவம் ஆகிய பல காரியங்களே முக்கியமானதாகும். பழங்காலத்தில் காதலே போதுமானதாக இருக்கலாம். அப்போதைய அறிவுக்கு அவ்வளவு பிறவிக்குணங்களையும் மேன்மைப்படுத்துவதாக இருக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட இச்சையின் பெருக்கம் தான் பெரிதும் காதலின் முழு இடத்தையும் பெற்று விடுகிறது. மற்ற பல வாழ்க்கை வேறுபாடுகளுக்கு அந்த இச்சைப் பெருக்கம் இருவருக்கும் போதவே போதாது.

ஆகையால், அறிவையும், நிகழ்ச்சிப் பயனையும் அலட்சியப்படுத்தும் காதலை மனிதன் அடக்கி, வாழ்க்கைத் தன்னையைக் கொண்டு வாழ்க்கைத் துணையைப் பொருத்திக் கொள்ள வேண்டும் என்பதே எனது கருத்தாகும். ஆதலாலேயும் பழைய தமிழர் மணமுறைகளுக்கோ - ஆரியர் மணமுறைகளுக்கோ இங்கு வேலை கிடையாது. அறிவு, அனுபவம், ஆராய்ச்சி ஆகியவற்றின் மீது ஏற்பட்ட மணமுறைகளுக்கே இங்கு வேலையுண்டு. அவை பழையதானாலும், புதியதானாலும், தமிழனுடையதானாலும், வேற்று நாட்டுக்காரனுடையதானாலும், அய்ரோப்பியனுடையதானாலும் இருந்து விட்டுப் போகட்டும்!"

இன்று ஓரளவிற்காவது தமிழ் பெண்கள் சுதந்திரம் அடைந்திருக்கிறார்கள் என்றால், வடமாநிலங்களைபோல் இல்லாமல் தென்னகம் பெரியதாய் சாதி,மத சண்டைகள் அற்று அமைதியாய் இருக்கிறது என்றால், அதற்க்கு காரணம் பெரியாரும், அவரது அன்றைய(கவனிக்க) சுயமரியாதை இயக்க பணிகளுமே ஆகும்.

சமுகத்தின் மீது, அடித்தட்டு மக்கள் மீது மிகவும் உண்மையான அக்கறை கொண்ட தலைவர் அவர். தனது கொள்கைகளை ஏற்றுகொள்ளதவர்களுக்கும் பெரியார் ஒரு நல்ல நண்பராக இருந்தது அவர் ஒரு மிக சிறந்த மனிதர் என்பதற்கு அடையாளம். உதாரணம் ராஜாஜி அவர்களிடம் பெரியார் கொண்டிருந்த ஆத்மார்த்தமான நட்பு.

மானம் கெடுப்பாரை அறிவைத் தடுப்பாரை
மண்ணோடு பெயர்த்த கடப்பாரை!
வானம் உள்ள வரை வையம் உள்ள வரை
யார் இங்கு மறப்பார் பெரியாரை.

- கவிஞர் காசி ஆனந்தன்.

இது கசப்பாவதும், இனிப்பாவதும் அவரவர் தனிப்பட்ட உணர்வை பொறுத்தது. ஆனால், திரு.ஜெயகாந்தன் ஒருமுறை சொன்னதுபோல, சமுதாயவளர்ச்சிக்கு ஆத்திகம் எவ்வளவு முக்கியமோ, அதுபோலவே நாத்திக சிந்தனைகளும் அவசியம் என நாம் உணர்வோமாக. நன்றிஅன்றும் இன்றும் : சரத் குமார் - யதிராஜ சம்பத் குமார்

அன்று:


திமுக-வை விட்டு வெளியேறுவதற்கு முன் கலைஞருக்கு எழுதிய கடிதத்தில் சரத் குமார் இவ்வாறு கூறுகிறார்.

".........எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் இயக்கத்திற்கு நான் ஊறு விளைவித்ததில்லை என்பதனை இவ்வுலகமே அறியும்.

இது ஒருபுறம் இருக்க எத்தனையோ சந்தர்ப்பங்களில் தங்களைச் சார்ந்த சிலரே என்னை அவமானத்திற்கு உள்ளாக்கியிருக்கிறார்கள்.

அதனை தங்களுக்காகவும், இயக்கத்திற்காகவும், என் மனைவி ராதிகாசரத்குமாருக்காகவும் சில காலம் தாங்கிக் கொண்டிருந்தேன். அதையும் மீறி ஒருகட்டத்தில் எனது உண்மையான உணர்வுகளை வெளிகாட்டியிருக்கிறேன்.அப்பா என்று பாசத்தோடு தங்களிடம் வந்தேன். என்ன என்று கேட்டீர்கள் ..சொன்னேன். எனது வேதனைகளுக்கும், நான் பட்ட காயங்களுக்கும் காரணம்தங்களது நெருங்கிய சொந்தங்களே என்பதை தெளிவாக உணர்ந்தீர்கள்.

எனினும் அவர்களை அழைத்து சுப்ரீம் ஸ்டார் தம்பி சரத்குமார் நமக்கு உண்மையானவன், உழைப்பவன் அவனது மனைவி ராதிகா நம் வீட்டுப் பெண்.இருவரையும் எக்காரணம் கொண்டும் வேதனைப்படுத்தாதீர்கள் என்று தங்களால்சொல்ல இயலவில்லை. தங்களது சூழ்நிலை அதற்கு வழி வகுக்கவில்லை என்றே அதனை நான் எடுத்துக் கொள்கிறேன்.

தங்களிடம் சொல்லி விட்டேன் என்பதற்காகவே என்னை எதிரியாக நடத்தத்தொடங்கினார்கள். எனது உண்மையான உழைப்பு கேலிக் கூத்தாக்கப்பட்டது. நான் தங்களிடம் தெரிவித்த கருத்துக்கள் எல்லாம் தங்களைச் சார்ந்தவர்களுக்கு மாற்றுக்கருத்தாகவே தெரிந்ததால் அதன் பாதிப்பும், தாக்கம் என் மனைவி ராதிகாசரத்குமாருக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தியது.

.............இப்படிப்பட்ட சூழ்நிலையில் நான் இயக்கத்தில் இருந்து விடுவித்துக் கொள்வதுதான்எனக்கு ஒரே வழி. இதுகாலம் வரை தங்களிடம் கற்ற அரசியல் பாடம், என்னைவளர்த்த ரசிகர்களும், தாய்மார்களும், நண்பர்களும், கலை உலகத் தாழர்களும்,என்னைச் சார்ந்த சமுதாயமும், தமிழக மக்களும் இனி எனது அரசியல் வாழ்க்கைக்குதுணை நிற்பர்."


இவ்வாறு கட்சியை விட்டு விலகுவதற்கான காரணங்களை சரத்குமார் விவரிக்கிறார்.


பிறகு அதிமுக வில் மனைவி ராதிகாவுடன் இணைதல், கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக ராதிகா அதிமுக விலிருந்து விலக்கப்படுதல், சினிமா பளுவைக் காரணம் காட்டி சரத் குமார் கட்சியிலிருந்து விலகுதல், பிறகு காமராஜர் ஆட்சியமைப்பேன் என்ற கூற்றுடன் அகில இந்திய சமத்துவ முற்போக்கு கட்சி துவங்குதல் என்ற காட்சிகள் குறுகிய காலத்தில் நிகழ்ந்தேறுகின்றன.


திருமங்கலம் பிரச்சாரத்தில் ராதிகா:


அப்துல் கலாம் சொன்னது போல இளைஞர்களுடன் பெண்களும் அரசியலில் ஈடுபடுவேண்டும். அப்போது தான் வன்முறை, ரெளடியிஸம் ஒழியும். சமத்துவ மக்கள் கட்சிக்கு வாருங்கள். பெரிய மாற்றத்தைக் கொண்டு வருவோம். ஆனால உங்களிடம் ஒரு குறை உள்ளது. இவ்வளவு காலமாக இரண்டு கட்சிகளும் மாறிமாறி ஆட்சி செய்து வருகின்றன. இந்த இரு கட்சிகளுக்கும் நீங்கள் மாறிமாறி வாக்களித்து உள்ளீர்கள். இனி இந்த இரு கட்சிகளுக்கம் வாக்களிக்காதீர்கள்.உங்கள் நம்பிக்ககை நட்சத்திரமாக சமக கட்சி உள்ளது. காமராஜர் ஆட்சி மீண்டும் வரப்போகிறது. அந்த பொற்கால ஆட்சியை மீண்டும் சமக கட்சி கொண்டுவரும்.திருமங்கலம் தோல்வி குறித்து சரத்குமார்:


"" இந்த ஜனநாயக சீர்கேடுகளுக்கு காரணமாய் இருந்தவர்களை மக்கள் அடையாளம் காணும் நாள் வெகு தூரத்தில் இல்லை. பண பலத்தாலும், அராஜகத்தாலும், அச்சுறுத்தலாலும் ஏற்பட்ட இந்த முடிவுகளை ஒட்டுமொத்த மக்களின் தீர்ப்பாகவும், ஜனநாயகத்தின் உண்மையான தீர்ப்பாகவும் எடுத்துக் கொள்ள முடியாது.""


இலங்கைப் பிரச்சனையில் சரத்குமார்:

இலங்கைப் பிரச்சனை தொடர்பாக, தில்லியில் இவ்வருடம் பிப்ரவரி 25 ஆம் தேதி தமது கட்சியின் சார்பாக அடையாள அணிவகுப்பு நடத்திய சரத் குமார், செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுக அரசு இலங்கைப் பிரச்சனையில் மத்திய அரசை நிர்பந்திக்கத் தவறி விட்டதாகவும், தமிழர்களைக் காக்கத் தவறி விட்டதாகவும் குற்றம் சாட்டினார்.


இன்று:

இதனிடையே அயராத அரசு பணிகளுக்கிடையில், கலைஞர் அவர்கள் சரத் குமார் - மம்மூட்டி இணைந்து நடித்த பழசி ராஜா படத்தை விசேஷக் காட்சியில் பார்த்தார். அநேகமாக இந்நிகழ்வுதான் சரத்குமாரின் முந்தைய அவமான வடுக்களை நீக்குவதற்கான அருமருந்தாக அமைந்தது என்று எண்ணத் தோன்றுகிறது. இதனையடுத்து, சரத்குமார் திமுக வுடன் கூட்டணியமைக்கலாம் என்றும், அல்லது மனைவியுடன் திமுகவுடன் ஐக்கியமாகலாம் என்றும் வதந்திகள் வந்தவண்ணம் இருந்தன. என்னடா இது, திமுகவை பல பிரச்சனைகளில் காட்டமாக விமர்சித்தவர் மறுபடியும் திமுகவிலே இணைவதாவது?? என்று அரசியல் தெரியாத சில பத்தாம்பசலிகள் நினைத்துக் கொண்டு திரியலாம். அதற்காக நடப்பது நடக்காமலிருக்குமா??

இதனையடுத்து கட்சி சுற்றுப் பயணமாக தமிழகமெங்கும் பயணிக்கும் சரத் குமார், நேற்றைய தினம் கட்சியினர் மத்தியில் பேசிய போது, வரும் இடைத்தேர்தலில் ஒத்த கருத்துடைய, சேவை மனப்பான்மையுடைய, Clean Track Record- உடைய கட்சியுடன் புதிய கூட்டணி அமையும் என்று தெரிவித்தார். (அதாவது திமுக!!.....திமுக வின் க்ளீன் ட்ராக் ரெக்கார்டு பற்றி திருமங்கலம் தேர்தல் தோல்விக்குப் பிறகு சரத் குமார் தெரிவித்தது மேலே இருக்கிறது.....அரசியல் தெரியாத ஆஷாடபூதிகள் இரண்டும் முரண்பட்டிருக்கிறதே என்று கேள்வியெழுப்பினால் அதற்கு சரத் குமார் பொறுப்பல்ல.).

மேலும் பேசுகையில், கலைஞர்தான் தமது அரசியல் குருநாதர் என்று குறிப்பிட்டு, கலைஞர் காப்பீட்டுத் திட்டத்திற்கு புகழாரம் சூட்டினார். மேலும், இலங்கைத் தமிழர் அகதிகள் முகாம்களில் வசதிகள் மேம்படுத்தப்பட்டதற்காக தமிழக அரசைப் பாராட்டினார் (முன்பு இலங்கைத் தமிழர் பிரச்சனையில் தமிழக அரசு செயல்படவில்லை என்று சரத் குமார் குற்றம் சாட்டியதை இங்கு யாரும் நினைவு கூறத் தேவையில்லை).


லோக் சபா தேர்தலில் படு தோல்வி, திருமங்கலத்தில் வெறும் 831 வாக்குகள்....ஆக பண்டார பரதேசிகளுடன் கூட்டணி கண்டு கட்சி நடத்தினால் கல்லா கட்ட முடியாது என்று சரத்குமார் உணர்ந்துள்ளார் என்றே தோன்றுகிறது. வாழ்த்துக்கள்!!

16 Comments:

யதிராஜ சம்பத் குமார் said...

நம்முடைய பழக்க வழக்கங்கள், சமூதாயநிலை முதலியன அவரவர் சுயநலத்தைப் பற்றிக் கவலைப்படும்படிச் செய்கிறதே யொழிய மற்றப்படி பொதுத்தொண்டு குறித்துக் கவலைப்படுவதாக இல்லை. ///


இதற்கு ஈ.வெ.ரா வும் விதிவிலக்கில்லையே?? அவருக்கும் மிகவும் பொருந்தி வருகிறது இம்மேற்குறிப்பிட்ட வரிகள். சீர்திருத்தத் திருமணம் என்பது சட்டத்தால் அங்கீகரிக்கப்படாத காலத்தில், மற்றவற்களுக்கு இம்முறைப்படியான திருமணத்தை வலியுறுத்திய ஈ.வெ.ரா, தான் மட்டும் ஏன் மணியம்மையைப் பதிவுத் திருமணம் செய்து கொண்டார்?? அது சுயநலம் கருதுவதாக ஆகாதா??

என்னுடைய கூற்றில் தவறேதும் இருப்பின் கட்டுரையாளர் சுட்டிக் காட்ட வேண்டுகிறேன். திருத்திக் கொள்ள கடமைப்பட்டவனாகிறேன்.

Anonymous said...

//பெண்ணடிமைதனம் மேலோங்கிஇருந்த காலத்தில், விதவை திருமணம், பெண் கல்வி முதலிய பெண்ணுரிமைகளுக்காக ஒலித்த முதல் போர்குரல் தந்தை பெரியார் அவர்களுடையது. பெண்ணுரிமை குறித்த இவரது கருத்துக்களை நீங்கள் உலகின் எந்த மூலையில் இருப்பவருடனும் "எங்க அய்யா சொன்னாரு" என்று கூறலாம்// கொஞ்சம் தெளிவா எந்த காலத்திலிருந்துன்னு சொல்லலாம். நாஞ்சின்னப்புள்ளையா இருக்குறப்ப பள்ளிக்கூடத்துல படிக்கும்போது எனக்கு இராஜாராம் மோகன் ராய், ஜான்சிராணி பத்தியெல்லாம் கூட சொல்லிக் குடுத்திருக்காங்க. அப்புறம் சதி, குழந்தைத் திருமணம் போன்ற மூடப்பழக்கங்களெல்லாத்தையும் கூட ”ஈவெரா அவர்கள் தான் ஒழித்துக் கட்டினார்”-னு எழுதீருந்தைங்கன்னா கட்டுரை இன்னும் முழுமையா இருந்திருக்கும். மற்றபடி, ஈவேரா அவர்கள் சாதியாத்துக்கு எதிரா என்னென்ன போராட்டங்கள் எங்கெங்கு நடத்தினார்ன்னு ஒரு விவரத்தையும் காணோம் (இது வரைக்கும் யாருமே இந்த மாதிரி ஒரு பட்டியல் குடுத்ததில்லை). ஏகப்பட்டது எழுதிருக்காரு, ’பெரியார்’, எங்க ஐயா ’சமத்துவப் பெரியார்’ மாதிரி. இதெல்லாம் தெரியாம, யதி அவர்கள் கூட தத்துப்பித்துன்னு ஏதோ கேள்வியெழுப்பிருக்காரு.

R.Gopi said...

ச‌ர‌த்குமார் சொன்ன‌துக்கு ஏன் இவ்வ‌ள‌வு முக்கிய‌த்துவ‌ம், அதுவும் நீங்க‌ளே சுட்டிக்காட்டிய‌ப‌டி 831 வாக்குக‌ள் ம‌ட்டுமே வாங்கிய‌வ‌ருக்கு....

அவரை பற்றி இவ்வளவு கூர்ந்து கவனித்து நீங்கள் எழுதி இருக்கிறீர்கள் என்று தெரிந்தால் அவர் சந்தோஷப்படுவாரே...

அக்னி பார்வை said...

பொதுவாக இட்லிவடையின் பதிவுகளுக்கு பின்னுட்டதில் ஜல்லியடிக்கும் கூட்டத்தை இந்த மாதிரி பதிவுகளில் பார்க்க முடிவதில்லை...

Anonymous said...

அய்யா இட்டலி சடையாரே,

//சாத்திரம் ஓதுகின்ற சட்டநாத பட்டரே...வேர்த்து,இரைப்பு வந்தபோது வேதம் வந்து உதவுமா//

/வெட்ட வெளிய தன்றிமற்று வேறு தெய்வம் இல்லையே" என்ற சிவவாக்கியர், நாத்திக சிந்தனைகளின் வித்து/

சிவவாக்கியர் ஓர் நாத்திகர் என்று எப்படிக் கூறுகின்றீர்? அவருடைய பாடல்களை முழுமையாகப் படித்துள்ளீர்களா? அல்லது அதுகுறித்து ஆய்ந்துள்ளீர்களா? அவர் எதைச் சாடுகிறார் அல்லது எதைப் போற்றுகிறார் என்பதாவது அறிவீரா?

இதோ உதாரணத்திற்கு அதே சிவவாக்கியரின் சில பாடல்கள்..

கோயிலாவது ஏதடா? குளங்களாவது ஏதடா?
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே!
கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே

இங்கே அவர் கூறுவது அகம் பிரம்மாஸ்மி தத்துவத்தை...

பிறப்பதற்கு முன்னெல்லாம் இருக்குமாற தெங்ஙனே?
பிறந்துமண் ணிறந்துபோய் இருக்குமாறு தெங்ஙனே?
குறித்துநீர் சொலாவிடில் குறிப்பில்லாத மாந்தரே.
அறுப்பென செவிஇரண்டும் அஞ்செழுத்து வாளினால்

அஞ்செழுத்து என்றால் என்ன என்று அறிவீர்தானே!

நாழிஅப்பும் நாழிஉப்பும் நாழியான வாறுபோல்
ஆழியோனும் ஈசனும் அமர்ந்து வாழ்ந்திருந்த இடம்
ஏறில்ஆறு ஈசனும் இயங்கு சக்ரதரனையும்
வேறுகூறு பேசுவார் வீழ்வர்வீண் நரகிலே.

தில்லைநாய கன்அவன்; திருவரங் கனும்அவன்;
எல்லையான புவனமும் ஏகமுத்தி யானவன்
பல்லுநாவும் உள்ளபேர் பகுத்துகூறி மகிழுவார்;
வல்லபங்கள் பேசுவார் வாய்புழுத்து மாய்வரே.

புரியுதா ஐயா என்ன சொல்றாருன்னு?


உற்றநூல்கள் உம்முளே உணர்ந்துணர்ந்து பாடுவீர்;
பற்றறுத்து நின்றுநீர் பராபரங்கள் எய்துவீர்;
செற்றமாவை யுள்ளரைச் செருக்கறுத்து இருத்திடில்
சுற்றமாக உம்முளே சோதிஎன்றும் வாழுமே

ஓம்நமசி வாயமே உணர்ந்துமெய் உணர்ந்தபின்
ஓம்நமசி வாயமே உணர்ந்துமெய் தெளிந்தபின்
ஓம்நமசி வாயமே உணர்ந்துமெய் உணர்ந்தபின்
ஓம்நமசி வாயமே உட்கலந்து நிற்குமே

காரகார காரகார காவல்ஊழி காவலன்
போரபோர போரபோர போரில்நின்ற புண்ணியன்
மாரமார மாரமார மரங்கள்ஏழும் எய்தசீ
ராமராம ராமராம ராமஎன்னும் நாமமே.

நீடுபாரி லேபிறந்து நேரமான காயந்தான்
வீடுபேறி தென்றபோது வேண்டிஇன்பம் வேண்டுமோ?
பாடிநாலு வேதமும் பாரிலே படர்ந்ததோ?
நாடுராம ராமராம ராமமென்னுன் நாமமே!

இதுக்கெல்லாம் நாம் அருத்தம் சொல்ல வேண்டுமா என்ன? தமிழில் முதுகலைப் பட்டம் பெற்ற இட்டலிவடை குழுமத்தினருக்கு நன்கு தெரியுமே!

எதுவுமே அறியாத அல்லது அறிவதில் ஆர்வமோ அறிவோ அல்லாத போலி நாத்திகக் கும்பலோடு மெய்ஞ்ஞானி சிவவாக்கியரை ஒப்பிடுவது மதியீனம். இன்னமும் எடுத்தியம்ப நிறைய உள. விரிவுகண்டஞ்சி யாமித்தோடு முடிக்கிறோம். ஓம் நமசிவாய.


சிவ ப்ரியன்

vedanarayanan said...

Sarathkumar படங்கள பற்றி பேசலாம். அவரு poltics பற்றி பேசி அவரை என் பெரிய ஆளா ஆக்கணும் !!!

பெரியார் , அவரோட circumstances , அவர் பண்ணியது, அவர பெரிய ஆளா ஆக்கியது. அவர் அப்பவே CM ஆகி இருந்தார்னா, yellow கலர் வேஷ்டியே கட்டி இருப்பாரு.

Anonymous said...

பெண்ணடிமைதனம் மேலோங்கிஇருந்த காலத்தில், விதவை திருமணம், பெண் கல்வி முதலிய பெண்ணுரிமைகளுக்காக ஒலித்த முதல் போர்குரல் தந்தை பெரியார் அவர்களுடையது.
Subramania Bharathi wrote on this much before him.So was Iyothee Das Pandithar.Social reform has a long history.Widow marriage was not an issue in many communities including christians and muslims.
Periyar passed resolutions,wrote some tracts but never launched an agitation for womens rights.Bharathi founded the first magazine on women for women.Periyar did not even do that.
After 1947 reforms in Hindu personal law were proposed by Amedkar and supported by Nehru but could not be enacted due to resistance from conservatives.In 1956 Nehru enacted them.Periyar did not do anything tangible for women.

Anonymous said...

siva priyare

siva vakkiyarum thirumazhisai alvarum oruvare enru solgirargale adhai patri udhum thiriyuma ? mudhalil savarai erundhu pine vainavaramavarame ?

ethanayao bloggalil edhil anmeegamana varigal ! ?

ladha

Anonymous said...

siva priyare

siva vakkiyarum thirumazhisai alvarum oruvare enru solgirargale adhai patri udhum thiriyuma ? mudhalil savarai erundhu pine vainavaramavarame ?

ethanayao bloggalil edhil anmeegamana varigal ! ?

ladha

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

படத்தில் சிவ வாக்கியர் வைணவராகத் தெரிகிறாரே. நானும் திருமழிசை ஆழ்வார் முன்னாளில் சிவ வாக்கியர் என்னும் பெயருடன் சைவராக இருந்தார் என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.

Anonymous said...

//siva priyare

siva vakkiyarum thirumazhisai alvarum oruvare enru solgirargale adhai patri udhum thiriyuma ? mudhalil savarai erundhu pine vainavaramavarame ?//

அம்மணி/ அய்யன்மீர்

சிவ வாக்கியர் - திருமழிசை ஆழ்வார் பற்றி அப்படிச் சொல்வாருண்டு. ஆயினும் அதற்கேதும் வலிய ஆதாரமில்லை. ஒரு சைவர் ராமரைப் பாடியிருக்கிறார் என்றால் இது மாதிரி கற்பனைக் கதைகள் பரவுவதில் வியப்பில்லை.

ஆனால் சிவனுக்குப் பிடித்த நாமமே ராம நாமம் தான் என்பது பலர் அறியாதது.

விஷ்ணு சகஸ்ரநாமத்தில் வரும் வரி இது...

ஈஸ்வர உவாச:

ஸ்ரீ ராம ராமேதி ரமே ராமே மனோரமே|
சகஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே!

பார்வதி சிவனிடம் உங்களுக்குப் பிடித்த நாமம் எதுவென்று கேட்க அவர் இப்படி பதில் கூறுகிறார். ஆக, இங்கே சைவ, வைணவச் சண்டைகள் தேவையில்லை. மாப்பிள்ளை, மச்சான்களுக்குள் அவ்வபோது ஊடல் வருவது சகஜம் தானே!.

சிவ வாக்கியருக்கும் ஈ.வெ. ராமசாமி நாயக்கருக்கும் என்ன சம்பந்தம் என்பதுதான் யான் எழுப்பிய கேள்வி.

ஒருவேளை ராமசாமி என்ற பெயர் இருப்பதால் இன்ப வடையார் அதை இங்கு கட்டுரையாக்கி விட்டாரோ என்னவோ? அடியேன் அறியேன்.

சிவ வாக்கியம் ஒரு ஞான நூல். போலி ஆசார, அனுஷ்டாச் சடங்குகளை விடுத்து அகத்துள்ளே இருக்கும் கடவுளை ஆய்ந்து பார் என்கிறது.

அதைச் சரியாகப் படிக்காமல், புரிந்து கொள்ளாமல் ராமசாமி நாயக்க தாசர்கள் மேடைகளில் ஒரு சில பாடல்களை மட்டும் எடுத்துக் கொண்டு மேற்கோள் காட்டுகின்றனர். முட்டாள் ஜனங்களும் கை தட்டுகின்றனர்.

விநாயகர் சிலைகளை உடைத்தும், செருப்பு மாலை அணிவித்தும் புளகாங்கிதப் பட்டவர்கள் அய்யனார் சிலைக்கோ, பாவாடை ராயன் சிலைக்கோ, மாடன் சிலைக்கோ,கருப்பன், திரௌபதி அம்மன், காத்தாயி அம்மனுக்கோ செருப்பு மாலை அணிவிப்பார்களா?, போட்டு உடைப்பார்களா? - கிராமங்களில் போல் அப்படிச் செய்ய முடியுமா? அதற்கு கொஞ்சமாவது தைரியமிருக்கிறதா? என்பதுதான் அடியேனின் கேள்வி.

உண்மையான ஆண்மை, தைரியமிருக்கிறதா இந்த போலி நாத்திகர்களிடம்?

சிவ (வைணவ) ப்ரியன்

மர தமிழன் said...

ச ம க ன்னா சத்தமில்லாம மங்களம் பாடும் கட்சி அவ்ளோவ்தான்! ஷேர் மார்க்கெட் மாதிரி ஒட்டுக்கு பிரிமீயம் கொடுத்து ஆட்சியை பிடித்த தி மு க கம்பனியில் வேணும்னா மேனேஜர் ஆகலாம் அப்போப்போ டிவிடென்ட் கிடைக்க வாய்பிருக்கிறது.

ஆமாம் இந்த இன மான தமிழன் ன்னு சொல்றாங்களே அப்படீன்னா???

திரு இட்லி வடை இத பத்தி ஒரு விவாதம் தொடங்கினா நல்லா இருக்கும்.

Anonymous said...

The problem about Tamil Nadu is the great amount of hypocrisy and fear of honest criticism. If one rightly criticises Periyar, Anna or Karunanidhi or their contribution to the cause of Tamils, Tamil language, literature or culture one will be beaten up. Even the print media will not publish it. But they will criticise everyone from Gandhi to Lord Rama and go scotfree. Periyar's contribution towards eradication of caste system and the upliftment of women is questionable. What he has written about Tamil and Tamil literature cannot be published in decent words. He became popular because of his Anti-brahmanism. All the non-Brahmins wanted to group themselves under one head and Periyar provided the means of polarisation. Other than this there is no tangible evidence on record for Periyar's activities on removal of caste system or upliftment of women. Till the end the words "Nayakar" was attached to his name. Then how can he be lionised as one who fought for the removal of caste system. He had scant respect for tamil culture. The only positive thing about him was he did not contradict himself like his so-called followers, Hehas been lionised beyond a limit by DMK since they wanted some Heroes for their organisation.

Same is the case with Anna. Can anybody cite any tangible contribution of him to tamil literature.DMK was responsible for bringing in indecency into tamil politics. The way they have abused Gandhi, Nehru & Kamraj cannot be written in words. The humiliations Anantnayki suffered in their hands is histroy. He is being called Aringer. Can anybody spell out the path finding philosophy of him which enables him to hold this title. Then comes our great Karunanidhi who is a bundle of contradictions. A moeny spinner by birth. The man who swears by "Valluvar" will always use bad language. Whwere is the Kural "Inniya Ulayaga". All his children publicly admit going to temples. His daughter in law gives an interview where she tells she is an ardent devotee of Angala Parameswari. His grandson ends his movie with the picture of Lord Venkateswara. In a culture where one woman for one man is adored has the audacity to come with his wife and Thunaivi to public functions. His daughter continues to use his name after her name for political purposes in a society where husband is worshipped as god.More can be said about the hypocrisy of the Drawadian parties. Due to paucity of time and space I conclude here.

அ. நம்பி said...

இன்பா அவர்கள் தமக்கு நன்கு தெரிந்தவற்றைப்பற்றி மட்டுமே எழுதுவது அவருக்கும் படிப்பவர்க்கும் நன்மை தரும். தம் அறியாமையை வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்காகக் கட்டுரை எழுதுவதனை அன்புகூர்ந்து நிறுத்திக்கொள்ளவேண்டும்.

Maha said...

பசி வர பத்தும் பறந்து போம். நாலு இட்லி, எட்டு வடை உள்ளே தள்ளிட்டு சிவ வாக்கியர் எப்பவும் சொன்னது பிரம்ம தத்வம் மட்டுமே என்பத மறக்காம, அவருக்கும் நாஸ்திகத்திற்கும் ரொம்ப தூரன்னு புரிஞ்சுகிட்டு, இது போல பதிவுகள் பண்ணி மாக்களை, சாரி, மக்களை குழப்பாதீங்க.

Rajaraman said...

Kadavul illai enru sonnaram
kazhurtghil uthiracha kottai
nethiyil perisa perisa pattaiyum
Idhu enna nathigamo idhu enna nambikkaiyo
o kadavule ennai ivargaldam irundhu kappatru