பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, November 03, 2009

என் மேல் கேஸ் போடட்டும் - விஜயகாந்த்

ரிப்போட்டரில் வந்த விஜயகாந்த் பேட்டி...

`விருதகிரி' படத்தின் அவுட்-லைன் பற்றிச் சொல்லுங்களேன்?

"இது ஒரு சஸ்பென்ஸ் கதை. ஒரு லைனை வைத்துக்கொண்டு அடுத்தடுத்து பயணிக்கப் போகும் கதை. இப்போதைக்கு கதையின் முழு அம்சத்தையும் கூற முடியாது. படத்தில் போலீஸ் அதிகாரியாக வருகிறேன். அவ்வளவுதான் சொல்ல முடியும்.''

`விருதகிரி'யில் அரசியல் வசனங்கள் இருக்குமா?

"அது வழக்கமானதுதான். நான் அரசியலுக்கு வருவதற்கு முன்பே நடித்த `ஏழை ஜாதி' படத்தில், `ஒலியும், ஒளியும் ஒரு மணி நேரமும், ஐந்து கிலோ அரிசியும் கொடுத்தால் மக்கள் நமக்குத்தான் ஓட்டுப் போடுவார்கள்' எனப் பேசினேன். அந்தப் படத்தில் இன்னொரு காட்சியில், `நீங்கள் ஏழு வருடம் ஆட்சியில் இருந்து 700 கோடி சம்பாதித்தீர்கள். நான் ஆறு வருடம் ஆட்சியில் இருந்து 600 கோடி சம்பாதித்தேன். ஆனால், நம்மையும் தாண்டி புதிய சக்தி உள்ளே வந்துவிடக் கூடாது' என கட்சித் தலைவர் ஒருவர் பேசுவதுபோல் வரும். அப்போதே இப்படியெல்லாம் காட்சிகள் வைக்கப்பட்டன. இப்போது இதைப் பற்றி நீங்கள் கேட்கவா வேண்டும்?''

இப்போதெல்லாம் எந்த சினிமா ஓடும்; எந்த சினிமா காலை வாரும் என்றெல்லாம் கணிக்க முடியாத சூழல் நிலவுகிறதே?

"இதற்குக் காரணம் படத்தின் டைட்டிலுக்குத் தகுந்த எதிர்பார்ப்பு இருப்பதுதான். அந்தக் காலத்து `ஜெகன்மோகினி' படத்தில் எரிகிற அடுப்புக்குள் கால் விடுவது போன்ற காட்சிக்குப் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இப்போது அதுபோன்ற எதிர்பார்ப்புகள் இருப்பதில்லை. நம்மிடம் ஒரு கதையும், எடுக்கும்போது வேறு கதையும் கொடுத்தால் வெற்றியை எப்படி கணிக்க முடியும்? எம்.ஜி.ஆர். சிவாஜி காலத்திலேயே தோல்விப் படங்கள் இருக்கத்தானே செய்தன.''

சரி.. சமீபகாலமாக அறிக்கையின் மூலம் மட்டுமே ஆளுங்கட்சிக்கு எதிரான வார்த்தைகளை வீசுகிறீர்கள்...

"யார் சொன்னது? மக்களின் தேவைகளுக்கு ஏற்ப போராட்டம் நடத்திக் கொண்டுதான் இருக்கிறேன். நீங்கள் சொல்லும் அதிரடி அரசியல் என்னவென்று புரியவில்லை. யாரையாவது அடிக்க வேண்டும் என்கிறீர்களா? மீனவர் பிரச்னைக்காக டெல்லி, ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம், விலைவாசி உயர்வு எதிர்ப்புப் போராட்டம் என தொடர்ந்து வேகமாக இயங்கிக் கொண்டிருக்கிறேன். அத்துடன் அறிக்கைகள் மூலமும் அரசின் நிர்வாகத் தவறுகளைச் சுட்டிக்காட்டுகிறேன். ஆனால், பல பத்திரிகைகள் நான் சொல்வதை பெருமளவு வெளியில் காட்டுவதில்லை. இதற்கு கலைஞர் மீதுள்ள பயம்தான் காரணம்.''

வடமாநிலங்களில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி பெருமளவு வெற்றியைக் குவித்திருக்கிறது. அப்படியென்றால் நாடு முழுவதும் காங்கிரஸ் அலை வீசுகிறது என்று எடுத்துக் கொள்ளலாமா?

"வடமாநிலங்களில் அலை வீசுவது இருக்கட்டும். தெற்கில் உள்ள ஆந்திரா, கர்நாடகா, கேரளாவில் கூடத்தான் அலை வீசுகிறதாம். ஆனால், 67-ம் ஆண்டுக்குப் பிறகு இன்றுவரை தமிழகத்தில் அலை வீசியதா? ஆனால், 72-ம் ஆண்டில் இருந்து காங்கிரஸ் கட்சியைப் புறக்கணித்து யாரும் ஆட்சி நடத்தியதில்லை. அதனால்தான் கச்சத்தீவு முதல் இப்போதுள்ள முல்லைப் பெரியாறு வரை பிரச்னை நீண்டுகொண்டே போகிறது'' என்றவர், (முரசொலி பத்திரிகையில் முல்லைப் பெரியாறு விவகாரம் குறித்து முதல்வர் வெளியிட்ட அறிக்கைகளை விலாவாரியாகச் சுட்டிக் காட்டிவிட்டு),

" ஆரம்பத்தில் மத்திய அமைச்சரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் என்றார். அடுத்து, மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் என்றார். இறுதியாக, முல்லைப் பெரியாறு பிரச்னை குறித்து பொதுக் கூட்டம் என்ற ரேஞ்சில் விளம்பரம் கொடுத்துவிட்டு, அதையும் கடைசி நேரத்தில் ஒத்தி வைத்துவிட்டார். இப்போது வழக்கு நிலுவையில் உள்ளதைக் காரணம் காட்டுகிறார். ஆனால், கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்தபோதே வழக்கு நிலுவையில் இருந்தது தெரியாதா? இப்படி புறநானூற்று வீரம் புறமுதுகு காட்டி ஓடுவது ஏன்? ஆக, தமிழினத்தை அழிக்கும் துரோகிதான் கலைஞர். தமிழினத்தைக் காட்டிக் கொடுத்த துரோகியும் கலைஞர்தான். தமிழக நலனில் சிறிதும் அக்கறை இல்லாதவர். தன் குடும்பம் சம்பாதிப்பது மட்டும்தான் அவரது நோக்கம். இந்த வார்த்தைகளைச் சொல்வதற்காக என் மேல் வழக்குப் போடட்டும். பார்த்துக் கொள்ளலாம்.''

இலவச கலர் டி.வி, கேஸ் அடுப்பு, ஒரு ரூபாய் அரிசி போன்றவற்றுக்கு ஏழை மக்களிடம் வரவேற்பு இருக்கத்தானே செய்கிறது?

"தவறாகச் சொல்லாதீர்கள். இப்படியெல்லாம் வரவேற்பு இருந்தால் தேர்தல் காலத்தில் ஒவ்வொரு ஓட்டுக்கும் பணம் கொடுக்கும் கலாசாரத்தை ஏன் செய்கிறார்கள்? இவர்களின் செயலுக்கு வரவேற்பு இல்லை என்பதால்தானே? அத்துடன் இதுபோன்ற இலவசங்களில் கோடி கோடியாகச் சம்பாதிப்பதுதான் நடக்கிறதாம்.''

அதற்காக, ஏழை மக்களின் உயிர் காக்கும் திட்டமான `கலைஞர் காப்பீட்டுத் திட்டத்'தைக்கூட குறை சொல்வது நியாயமா?

" இந்தத் திட்டமே குளறுபடியான திட்டம்தான். இந்தத் திட்டம் ஒன்றும் கலைஞர் மூளையில் உதித்த திட்டம் அல்ல. ஆந்திராவில் ஏற்கெனவே இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு விளம்பரத்தில் ஒரு கோடிப் பேர் பயன்பெறுவார்கள் என அரசு சொல்கிறது. மற்றொரு விளம்பரத்தில் அறுபது லட்சம் என்கின்றனர். அமைச்சர் பன்னீர்செல்வமோ, 69 லட்சத்து 44,959 குடும்பங்களை இணைத்துள்ளோம் என்கிறார். உண்மையில் எவ்வளவு பேர்தான் பயன்பெறுவார்கள் என்று சொல்லவில்லை. திட்டத்தின் ஆரம்பகட்டமே இவ்வளவு குளறுபடியாக இருந்தால் எப்படி?

ஏழைகளுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் தேவைதான். கலைஞர் காப்பீட்டுத் திட்டம் ஏழைகளுக்குத் தினையளவு நன்மையென்றால், இதைச் செயல்படுத்தும் நிறுவனங்களுக்கு பனையளவு கொள்ளையடிக்க வழி செய்துள்ளது. இதற்காக முன்கூட்டியே ஒரு பெருந்தொகையை முதல்வர் தனியார் காப்பீட்டு கம்பெனிக்கு வழங்கியுள்ளார். காப்பீட்டு கம்பெனிக்கு 517 கோடி ரூபாய் செலவாகும் என எந்த அடிப்படையில் கணக்கிட்டுக் கொடுக்கப்பட்டது என்பது எமனுக்கே வெளிச்சம்.

இதைச் சொல்வதால் என் மீது புழுதி வாரித் தூற்றுகிறார். இதனால் அவரது கைகள்தான் அழுக்காகும். வாரித் தூற்றிய புழுதியும் எதிர்க்காற்றால் அவர் மீதுதான் வந்து படியும். நான் என்ன சொல்கிறேன் என்பதை ஆராய வேண்டுமே தவிர, இவர் யார் இதைச் சொல்ல என்ற ஆணவப் போக்கு இருக்கக் கூடாது. இதைவிட வேடிக்கை என்னவென்றால், ஒரு திருமண விழாவில் கலைஞர், `சாதியை மறந்து அனைவரும் தமிழராய் ஒன்றுபட வேண்டும்' என்கிறார். தமிழ்நாட்டில் சாதி அரசியல் செய்து, சாதிக் கட்சிகளோடு கூட்டணி வைத்து, சாதியை வளர்த்துவிட்டவரே கலைஞர்தான்.''

மத்திய அரசின் செயல்பாடுகள் எப்படித்தான் இருக்கிறது?

"கடந்த ஐந்து ஆண்டுகள் தி.மு.க.விற்கு காங்கிரஸ் கட்சி ஜால்ரா போட்டது. இப்போதுள்ள ஐந்தாண்டுகள் மக்களை ஏமாற்றுவதற்காக ஆட்சி செய்யப் போகிறது.''

மத்தியில் அங்கம் வகிக்கும் தி.மு.க. அமைச்சர்கள் எப்படிச் செயல்படுகிறார்கள்?

"கொள்ளையடிப்பதில் போட்டி போடுகிறார்களாம். ஸ்பெக்ட்ரம் ஊழல் பெரும் பரபரப்பாகப் பேசப்படுகிற விஷயம். இந்த ஊழல் பற்றி ஒரு வார்த்தையாவது கலைஞர் பேசினாரா? அதுவும், அமைச்சரின் அலுவலகத்தில் சி.பி.ஐ. விசாரணை நடக்கிறது. இது மிகப் பெரிய விஷயம். இதை மூடி மறைத்து ஏமாற்றும் வேலையில் ஆட்சியாளர்கள் இறங்குகிறார்கள். இந்த விவகாரத்தில் ராசா கூறும்போது, இந்தப் பதவியில் முன்பு இருந்த அமைச்சரின் வழிகாட்டல்படிதான் செயல்படுகிறேன்' என்கிறார். இதன் மூலம் தயாநிதி மாறனை வம்புக்கு இழுக்கிறாரா ராசா? அதுமட்டுமன்றி பிரதமரின் ஆலோசனைப்படிதான் செயல்பட்டேன் என்கிறார். இவர்கள் ஊழல் செய்வதற்கு பிரதமரா ஆலோசனை கூறுகிறார்? தி.மு.க. சார்பில் மத்தியில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் ஊழலில் திளைக்கிறார்கள். கலைஞருக்கு ஊழல் விஞ்ஞானி என்ற பெயரையே சர்க்காரியா கமிஷன் கொடுத்தது. அப்புறம் இவர்கள் செயல்பாடு எப்படி இருக்கும்?'

இலங்கையில் முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்கள் சொந்த ஊருக்குத் திரும்புவதற்கு நமது எம்.பி.க்கள் குழுவின் விசிட்தானே காரணம்?

"அது அப்பட்டமான நாடகம். தமிழினத் துரோகி டக்ளஸ் தேவானந்தாவுடன்தானே இவர்கள் இலங்கையை வலம் வந்தார்கள். அந்தத் துரோகியோடு இந்தத் துரோகிகள் சேர்ந்தால் உருப்படுமா? மக்கள் சொந்த ஊருக்குத் திரும்புவதாக இவர்கள்தான் செய்தி பரப்புகிறார்கள். அது உண்மையென்று நான் நம்பவில்லை.''

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு பற்றி என்னதான் சொல்கிறீர்கள்?

"இலங்கைத் தமிழர் பிரச்னையில் இவர்கள் ஆடிய தப்பாட்டத்தை மறைப்பதற்காகத்தான் இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டார்கள். ஆரம்பத்தில் ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு என்றார்கள். அதற்குரிய அனுமதியை வாங்காததால் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என்றார்கள். இதுபோன்ற செயல்பாடுகளால் தமிழர்களிடையே பிரித்தாளும் சூழ்ச்சியை ஏற்படுத்துகிறார் கலைஞர். மூத்த தமிழறிஞர் சிவத்தம்பி இதோ வருகிறார், அதோ வருகிறார் என்றார். கடைசியில் பார்த்தால் தமிழக அரசின் பாதுகாப்பில்தான் இருக்கிறாராம். இதைவிடக் கொடுமை, `உளியின் ஓசை' படத்திற்காக கலைஞருக்கு அவரே விருது கொடுத்துக்கொள்ளப் போகிறாராம். அந்தப் படத்தில் ஏதாவது ஒரு வசனத்தை எனக்குச் சொல்லுங்கள் பார்க்கலாம். நாற்பது வருடங்களுக்கு முன்பு வந்த, `மனோகரா' படத்தின் வசனங்கள்தான் எனக்குத் தெரியும். நல்லவேளை நோபல் பரிசுக்கென்று ஒரு கமிட்டி இருக்கிறது.''

வரும் தேர்தலுக்குள் தமிழக அரசியலில் அணி மாற்றம் நடக்கும் என்கிறார்களே?

"கூட்டணி மாற்றம் என்பது பதவி ஆசையால் நடப்பது. ஏன் ஒவ்வொரு தேர்தலுக்கும் மாறுகிறார்கள் என்பதை அவர்களிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும். நான் அ.தி.மு.க. கூட்டணியில் சேரப் போகிறேன் என்றெல்லாம் எழுதினார்கள். நிழலுக்கு மாலை போட எனக்கு விருப்பமில்லை என்பதை எத்தனை முறைதான் சொல்வது!''

ஆனால், விரைவில் சட்டமன்றத் தேர்தல் வரும் என்கிறார்கள். அதை எதிர்கொள்ள நீங்கள் தயாரா?

"கட்சி ஆரம்பித்து எதிர்கொண்ட தேர்தல்களில் எங்கள் கட்சி டெபாசிட் இழக்காமல் மக்களிடம் பெயர் பெற்று வருகிறது. ஒவ்வொரு தேர்தலிலும் எங்களுக்கான வாக்கு வங்கி அதிகரித்துக்கொண்டே போகிறது. இந்நிலையில், எப்போது தேர்தல் வந்தாலும் எதிர்கொள்ளத் தயாராகவே இருக்கிறோம்.''

`கூத்தாடிகளின் பின்னால் தமிழக இளைஞர்கள் செல்கிறார்கள்' என பா.ம.க. நிர்வாகிகள் உங்களைக் குறிவைத்துப் பேசியிருக்கிறார்களே?

"அவர்கள் ஜெயலலிதாவையும்தான் கூத்தாடி எனக் கூறியிருக்கிறார்கள். இப்படிச் சொன்னவர்கள்தான் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துக் கொண்டார்கள். மக்களால் மறக்கப்பட்ட கட்சி பா.ம.க. அதைப் பற்றி பேசுவதில் எந்தப் பிரயோஜனமும் இல்லை. எனக்கென்று ஏராளமான அரசியல் பணிகள் இருக்கின்றன'' என்றதோடு பேட்டியை முடித்துக்கொண்டு `விருதகிரி' படத்திற்கான அடுத்தகட்ட வேலைகளுக்காக நம்மிடம் இருந்து விடைபெற்றார் விஜயகாந்த்.

விருதகிரி வெற்றி பெற வாழ்த்துகள் :-)

19 Comments:

தமிழி said...

இட்லிவடைக்கு போட்டியோ?
http://epaper.timesofindia.com/Repository/getimage.dll?path=TOICH/2009/11/03/19/Img/Pg019.png

யதிராஜ சம்பத் குமார் said...

விஜயகாந்த் இன்னமும் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறாரா??


உண்மையாகச் சொல்லப்போனால், விஜயகாந்தின் தற்போதைய உடல்வாகு அவர் ஏற்று நடிக்கும் பாத்திரங்களுக்கு ஏற்றதாக இல்லை. எனவே உடல்வாகிற்கு ஏற்றாற்போல் பாத்திரங்களையோ அல்லது பாத்திரங்களுக்கு ஏற்றாற்போல் உடல்வாகையோ மாற்றிக் கொள்வது நலம்.


அரசியல் தலைவர்களைச் சாடுவதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல், தனக்கென்று ஒரு தெளிவான அரசியல் கொள்கையையும் தேர்ந்தெடுத்துக் கொள்வது விஜயகாந்தின் அரசியல் எதிர்காலத்திற்கு சாலச் சிறந்ததாகும்.

ந.லோகநாதன் said...

I'm surprised about Vijayakanth... He cannot do anything being alone. the day will come, to hands with DMK/ADMK / CONGRESS ..he will spoil himself. He has over confidence. He should forgot his party people also from TN and same mentality like other parties

Anonymous said...

//அரசியல் தலைவர்களைச் சாடுவதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல், தனக்கென்று ஒரு தெளிவான அரசியல் கொள்கையையும் தேர்ந்தெடுத்துக் கொள்வது விஜயகாந்தின் அரசியல் எதிர்காலத்திற்கு சாலச் சிறந்ததாகும்//

Well said :)

Dubai Nara said...

நாடாளுமன்ற தேர்தலில் நிழலுக்கு மாலை போடாமல் இருப்பதற்கு எத்தனை கோடி வாங்கினாராம் இந்த "மாற்றத்தை" கொண்டுவரப் போகிற புதுத் தலைவர்.

Dubai Nara said...

//யதிராஜ சம்பத் குமார் said...
எனவே உடல்வாகிற்கு ஏற்றாற்போல் பாத்திரங்களையோ அல்லது பாத்திரங்களுக்கு ஏற்றாற்போல் உடல்வாகையோ மாற்றிக் கொள்வது நலம். //அது மட்டும் சொல்லதீங்க!! அவர் பாடல் காட்சியில் வருவதே தனி அழகு.

செந்திலை அடித்து சிரிக்க வைப்பார் கவுண்டர், அடிவாங்கியே சிரிக்க வைப்பார் வடிவேல் ஆனால் பாடல் காட்சியில கூட சிரிக்க வைக்க முடியும் என்றவர் இவர் தான்

Anonymous said...

குத்தம் கண்டுபுடிச்ச்சே எத்தன நாள் யா பேர் வாங்க முடியும். எதாவது செஞ்சு காட்டு பாப்போம்.

சீனு said...

ஐயையோ! சுப்பிரமணிய சுவாமியை மிஞ்சிவிடுவார் போல இருக்கே?

Mohan Kumar said...

பாத்தீங்களா.. புள்ளி விவரம் சரியா இல்லைன்னு கேப்டன் கோபப்படுறார்! சும்மா அறுபது லட்சம்னு ஒருத்தர் சொல்றது. இன்னொருத்தர் 66 லட்சம்னு சொல்றது.அவரை மாதிரி சரியா புள்ளி விவரம் சொல்ல வேணாமா?

On a serious note: நல்ல விஷயம் யாரிடமிருந்தும் எடுத்துக்கலாம்.. ஆந்திரா பார்த்து தமிழக அரசு ஏழை மக்களுக்கு காப்பீடு செய்தால் என்ன தப்பு?

மோகன் குமார்
http://veeduthirumbal.blogspot.com/

jaisankar jaganathan said...

//என் மேல் கேஸ் போடட்டும் - விஜயகாந்த்"//

ethukku famous akurathukka

R Gopinathan said...

>> ஆந்திரா பார்த்து தமிழக அரசு ஏழை மக்களுக்கு காப்பீடு செய்தால் என்ன தப்பு?

அரசாங்கமே மெடிக்கல் இன்சூரன்ஸ் திட்டம் தான் மக்களுக்கு மருத்துவ சேவையைத் தர முடியும் என்று முடிவு செய்துவிட்டால் அப்புறம் என்ன எழவுக்கு இந்த அரசாங்க மருத்துவமனைகள்? தான் நடத்தும் மருத்துவமனைகள் எல்லாம் தண்டம் என்று இந்த அரசே ஒப்புதல் அளிக்கிற மாதிரி இருக்கே? அந்த டாக்டர்ங்க, ஊழியருங்க வேற அப்பப்ப ஊதிய உயர்வு கேட்டு ஸ்டிரைக் பண்ணி எல்லாரையும் டார்ச்சர் பண்றாங்க. பேசாம இந்த அரசாங்க மருத்துவமனைகளுக்கு ஒட்டு மொத்தமா பூட்டு போட்டுட்டு மெடிக்கல் இன்சூரன்ஸ் திட்டத்தை அறிவிக்க வேண்டியதுதானே? எப்படியும் தனியார் இன்சூரன்ஸ் கம்பனிகளும், கார்பொரேட் மருத்துவமனைகளும் கொள்ளை லாபம் அடிக்க வழி செய்வது என்று முடிவு செய்தாகி விட்டது. இப்பவே எத்தனை நூறு கோடிகள் யார் யாரோட கைக்குப் போச்சோ? எல்லாம் இந்த தமிழ்நாட்டோட சாபக் கேடு. எல்லாத்தையும் இலவசமா குடுத்து குடுத்து மக்கள் மனசில் பிச்சை எடுப்பது தப்பில்லைங்கர எண்ணத்தை ஏற்படுத்தியாச்சு. சமுத்திரம் போல் குவிந்திருக்கும் பணத்தில் ஒரு சின்ன பர்சென்டை எடுத்து அடிச்சா எல்லாரும் மானங்கெட்டுப் பொய் வோட்டு போட்டுருவானுங்க. இனிமே இவங்களுக்கென்ன? என்னென்ன வழியில் எல்லாம் புதுசு புதுசா கொள்ளை அடிக்கலாம்ன்னு ரூம் போட்டு யோசிக்க வேண்டியதுதான். கொடுமை. கடவுள் தான் இந்த நாட்டைக் காப்பாத்தணும்.

மர தமிழன் said...

சொல்வன யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்

Kameswara Rao said...

இவ,

என்ன கோபி இதுக்கெல்லாம் கோவிச்சுண்டு ? From Lanjam to Uuzhal (Scam) they are defenitely doing it systematically (நீங்க வேற ரூம் போட்டு யோசிக்ப்பங்கலன்னு சிறுபிள்ளை தனமா கேள்விகேட்டுக்கிட்டு) ஏதோ முதல் தடவை செஞ்ச ரூம் போட்டு இது தான் தொழில்னு ஆனபிற்பாடு ரூமா நீங்க வேற தனி வீடே இருக்கும்.. நாம ஜெனங்களுக்கு இலவசமா பெநோஇல் குடுத்த கூட சவ்கரியம் தான் அவங்கள திட்டி புண்யம் இல்ல அத மாதிரி ஆகிட்டாங்க... ஜாதி அரசியல், அடுத்தவன் பன்றதுதான் தப்பு, தான் மட்டும் தப்பு பன்றதுக்கு பள்ளி முதல் காலேஜ் வரை பயிர்ச்சி மானக்கேடு

அமுதப்ரியன் said...

இந்த முறை பதில்கள் கொஞ்சம் கடுமையாத்தான் இருக்குப்பா...

---------------------------------

ஊழல் ஊழல் என்று சொல்கிறார்களே அப்படீன்னா என்னப்பா?
கொஞ்சம் யாராவது தெரிந்தால் சொல்லுங்களேன்.

....அமுதப்ரியன்.

Anonymous said...

Sivanesachelvan writes
You cannot be going on finding fault with whatever said by
Sri VK. Are you agreeing or not is the question. Sofar as TN is concerned , both the Dravidan Parties have disproved the confidence bestowed on them . They have been ruling this part for more than 42 years and both
D M K. & A I A D M K swindled TN all these years and Our People Are Enamoured by only Freebies and Soaps Given by them both. The Critics Are Only Supporting them without shame. They want V K to align with ADMK. If Not Aligning with it , they accuse " He got Box From DMK/ Cong". What is This? Is he not enjoying that freedom as to decide to align or not to align ? Mind You ! he got more than 19 % of total votes polled. Support him in his endeavours!
India, Coimbatore 04th Nov ' 09

R.Gopi said...

டன்மான டமிலன் @ டகால்டி டயலாக்ஸ் டாட் காம் (Part-I)

தே.மு.தி.க. கட்சியின் "தலை"வர் "கேப்டன்" என்ற அடைமொழியில் அனைவராலும் செல்லமாக (??) அழைக்கப்படுபவரும், தமிழ் கரடி விஜய டி.ராஜேந்தரால் "டாஸ்மாக் தாதா" என்று அழைக்கப்பட்டவரும், ஜெ.ஜெ. அவர்களால் காட்டமாக "குடிகாரன்" என்று அழைக்கப்பட்டவரும், கலைஞர் அவர்களால் "டாஸ்மாக் சகோதரன்" என்று அன்பாக விளிக்கப்பட்டவருமான திரு.விஜயகாந்த் (விஜயராஜ், இவர் இயற்பெயர், ரைஸ் மில் ஓனர்)திரு. விஜயகாந்த் அவர்களின் உரை, கேட்போமா??

குட் ஈவினிங். என்னடா, இவன் எப்போவும் டமில்-ல தானே வணக்கம் சொல்லுவான், இப்போ என்ன புதுசா இங்கிலிஷ்-ல வணக்கம் சொல்றேன்னு பாக்கறீங்களா?? எல்லாரும் எனக்கு இங்கிலிஷ் தெரியாதுன்னு நெனக்கறாங்க .... அவங்களுக்கு தான் இந்த குட் ஈவினிங். போன வாரம்தான் A,B,C,D, கத்துகிட்டேன். அடுத்த வாரம் ரைம்ஸ் எல்லாம் சொல்லி குடுக்கறேன்னு டீச்சர் சொல்லி இருக்காங்க. இனிமே, A,B,C,D, தான், இங்கலிஷ்-ல ரைம்ஸ் தான் .... அம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.

இங்க கூட்டமா கூடி இருக்கற உங்கள எல்லாம் பாத்தா எனக்கு பாவமா இருக்கு. யார் பேச்சையோ கேட்டு, யாருக்கு ஓட்டு போட்டு, அங்க எதுவும் கெடைக்காம, இங்க வந்து இருக்கீங்க. இப்போ கூட சொல்றேன். நான் உங்க எல்லாருக்கும் வயிறு நெறைய பிரியாணி போடறேன். ஆனா, வர்ற எலக்ஷன்-ல எனக்கு தான் ஓட்டு போடணும். சரின்னா, இப்போவே, பிரியாணி போடறேன். ஊர்ல சுத்திட்டு இருந்த எல்லா ஆட்டையும், இப்போதான் ஆட்டை போட்டு, பிரியாணி ரெடி ஆயிட்டு இருக்கு.

போன எலக்சன்ல பணம் வாங்கிட்டு ஓட்டு போட்டீங்க. இந்த எலக்சன் அப்பவும் பணம் கேளுங்க. 500 குடுத்தா, 1000 கேளுங்க, 1000 குடுத்தா, 2000 கேளுங்க. அதுவும் ஒரே நோட்டுதான்..... 2000 நோட்டு இல்லேன்னு சொல்லுவாங்க, புதுசா அடிச்சு குடுக்க சொல்லுங்க. ஏன்னா, அது எல்லாம் உங்க பணம், அதனால கேட்டு வாங்குங்க.

நல்ல சாப்பாடு சாப்பிட்டு ரெம்ப நாள் ஆச்சு. ஆனா, என்னிய தேடி வந்துட்டா, மொதல்ல ஒரு வேப்பம்குச்சி குடுத்து, பல்லு வெளக்க சொல்லிட்டு, சூடா சுக்கு காப்பி தண்ணி தருவேன். பொறவு, சூடா சாப்பாடு தயார் ஆகும், நான் வீட்டுல இருந்தா, என்னிய பாக்க வரவங்க எல்லாருக்கும் வயிறார சாப்பாடு கெடைக்கும். ஆனா முக்கியமா ஒரு விசயம் சொல்றேன். நான் வாரத்துல 7 நாளு மட்டும் வீட்டுல இருக்க மாட்டேன்.

என் கட்சில சேரணும்னு நெறைய பேரு வாராங்க. எல்லாரும் சீக்கிரமா வந்து சேந்துடுங்க. கட்சில சேர்ர எல்லாருக்கும் சுக்கு காப்பி தண்ணியும், கோழி பிரியாணியும் உண்டு. இப்போ கூட, வர்ற வழியில "வெட்டி வாலிபர்கள் சங்கம்"ன்ற ஒரு சமுதாய கூடத்த தொறந்து வச்சுட்டுதான் வரேன்.

இதுக்கு முன்னை ஆட்சில இருந்தவங்க உங்களுக்கு இலவச டி.வி. குடுத்தாங்க. நாங்க ஆட்சிக்கு வந்தா, இலவசமா, ரேடியோ பொட்டி, ஐஸ் பொட்டி (அதாங்க பிரிட்ஜ்), ஜில் ஜில் பொட்டி (அதாங்க ஏ.சி.), கையில தூக்கிட்டு போய் பேசுற போனு (அதாங்க அண்ணன் சொல்றது என்னனா, மொபைல்) எல்லாம் இலவசமா குடுப்போம். இது தவிர மழை காலத்துல, நீங்க நனையாம இருக்கறதுக்கு நாங்களே வந்து உங்களுக்கு குடை பிடிப்போம், எப்படி. அம்ம்ம்ம்ம்ம்ம்.

(Thodarum...)

R.Gopi said...

Part-II

நம்ம ஆளுங்க எல்லாருக்கும், நம்ம மண்டபத்திலேயே இலவசமா திருமணம் நடத்தி வைப்போம், ..... டெபாசிட் மட்டும் ஒரு லட்சம் குடுத்துடுங்க. அந்த டெபாசிட் கூட உங்க மூணாவது புள்ள பொறந்த உடனே, திருப்பி குடுத்துடுவோம்.
என்னது, மண்டபத்த இடிச்சிட்டாங்களா?? திருப்பி கட்டுவான் இந்த மதுரக்கார மொரட்டுப்பய.என்னது, கட்டுவேன்ன்னு நான் சொன்னது, மறுபடியும் கல்யாணம் இல்லடா (குடும்பத்துல கொழப்பம் பண்ணிடுவான் போல இருக்கே), பரதேசி, கல்யாண மண்டபத்தடா.....

டேய். நீ கேள்வி கேக்கறத பாத்தா, நீ அந்த குடிவேலு-வோட ஆளா?? என்னது, குடிவேலு, யாருன்னு தெரியாதா?? அது தெரியரவங்களுக்கு தெரிஞ்சா போதும்டா (நாக்கை மடித்து துண்டால் அடிப்பது போல் ஆக்ஷன் காட்டுகிறார்).

இங்க ஒரு பெரியவரும் , பெரியம்மாவும் என்னிய குடிகாரன்-னு சொன்னாங்களாம். ஆமாம், நான் குடிக்கறவன் தான். ஆனா, உங்கள மாதிரி அந்த டாஸ்மாக் கடைய மட்டும் நம்பி வாழறவன் இல்ல, தானே காய்ச்சி, தானே அடிப்பான் இந்த சல்பேட்டா சபரி.

நீ காய்ச்சி, அத டாஸ்மாக்-ல வித்து, நான் குடிச்சா எனக்கு அசிங்கம்
நானே காய்ச்சி, அத, என் பங்களாவுல வச்சு குடிச்சா நான் சிங்கம்

என் அடுத்த படம் என்னன்னு கேக்கறீங்களா?? ஏற்கனவே நடிச்ச படமே வெளியே வரல. என்னது, எப்போ வருமா, யாருக்குய்யா தெரியும், ஒரு பயலும் படத்த வாங்க மாட்டேங்கறான். வாங்குனாதான வெளியே வரும். ஆனா, இப்போ ஒரு சூப்பர் கதை ரெடி பண்ணி வச்சு இருக்கேன். கிராமத்து கதை. டைட்டில் கூட ரெடி, படத்தோட பேரு பெரிய செட்டியார்.

என்னோட சின்ன கவுண்டர் நல்லா ஓடினதால, இந்த படத்துக்கு பெரிய செட்டியார்னு பேரு வச்சு இருக்கேன். அந்த படத்துல, குடிவேலு-ன்னு ஒரு காமெடி நடிகன அறிமுகப்படுத்தறேன். அவன் வந்து இங்க இருக்கற இன்னொரு வேலு-க்கு ஆப்பு வைப்பான். யாரு அந்த வேலுவா?? அவனுக்கு தெரிஞ்சா சரி....... வெக்கறேண்டா அந்த வேலுவுக்கு வேட்டு.

எனக்கு நடிகர் சங்க பதவிய தந்த நீங்க, இந்த நாட்ட ஆளுற பதவியும் தந்து பாருங்க. அப்புறம் நம்ம நாட்ட தேடி, அமெரிக்கா காரன் வருவான். எதுக்காக வருவானா?? என்னிய கேட்டா?? எனக்கு என்னடா தெரியும்?!!

கடைசியா ஒண்ணு சொல்றேன், எனக்கு ஓட்டு போடுங்க, வீட்டுக்கு ஒரு ரேசன் கடை தொரப்பேன். சீம எண்ணை, அஸ்கா சக்கரை, வருசா வருசம் பொங்கலுக்கு இலவசமா கரும்பு, தீபாவளிக்கு வெடி எல்லாம் இலவசமா குடுத்து பட்டைய கெளப்ப போறேன்.

இன்னும் பேசறதுக்கு நெறைய இருக்கு, பேசிட்டே இருந்தா, அடுத்தவன் வந்து ஆட்சிய புடிச்சி, 5 வருசம் ஆட்சி பண்ணிட்டு போய்டுவான், எல்லாரும் எனக்கே ஓட்டு போடுங்க. நான் இன்னும் 5-10 காலேஜ் கட்டணும், 10-15 கல்யாண மண்டபம் கட்டணும், அதுக்கு உங்க எல்லாரோட ஆச்சியும் தேவை.

யோவ், அது ஆச்சி இல்லைய்யா, ஆசி,
ஆட்சி வேற, ஆச்சி வேற......ஆசி வேற....

(ஐயோ, நமக்கு தமிழே தள்ளாடுதே. நாம மொதல்ல, இந்த தமிழ ஒழுங்கா பேச கத்துக்கணும், நமக்கு தமிழே தகராறு, இதுல அடுத்த மீட்டிங்-ல இங்கலிஷ் வேறயா?? ஐயோ நெனச்சாவே தல சுத்துதே... இவனுங்க வேற நம்ம டங்குவார அறுத்துருவானுங்க. எல்லாத்தையும் போட்டோ புடிக்கறானுங்க ..... அங்க இங்க போட்டு நம்ம மானத்த வாங்கிட போறாங்க .......

(பின்னால் திரும்பி)

தம்பி ஒரு கிளாஸ் சர்பத் போட்டு குடுப்பா ....
டேய் ........... ஏண்டா, சர்பத் கேட்டா அதையே தரணுமா?? சர்பத் குடுக்கற மாதிரி சல்பேட்டா குடுடா பரதேசி)

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//ஊழல் ஊழல் என்று சொல்கிறார்களே அப்படீன்னா என்னப்பா?
கொஞ்சம் யாராவது தெரிந்தால் சொல்லுங்களேன்.

....அமுதப்ரியன்
//

யாரையும் கேட்காதீங்க. என்கிட்டே கேளுங்க. காதை இன்னும் கிட்டே கொண்டு வாங்க. இன்னும் ..... அட இன்னும் பக்கத்திலே வாங்க. ..... சொன்னா என்ன தருவீங்க? நம்மளுக்குள்ள முடிச்சுக்கலாம்.

Anonymous said...

/அவர்கள் ஜெயலலிதாவையும்தான் கூத்தாடி எனக் கூறியிருக்கிறார்கள்/
--செம காமெடி---