பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, November 02, 2009

ஓரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ...

முன் குறிப்பு: இந்த பதிவு ரொம்பப் பெருசு! ஊழல் மாதிரியே!

"On record it has been observed the license fee has been reduced for the private operators 1000 crores, for one year. you calculate up to 2010 another 10,000. 250 MHz, upper end sir, it will come another 60,000. so, more than in and around 1 lakh crores according to the phone estimation; they didn't apply their mind; they didn't get any TRAI recommendation, they didn't hike the price of the spectrum, they didn't follow any rules"! "

முந்தா நாள் இரவு சன் நியூஸில் தொலைதொடர்பு துறை அமைச்சர்.

புரியாதார்கள் தொடர்ந்து படிக்கலாம்...


சிங்கம்தான் காட்டுக்கு ராஜா. நானும் அப்படித்தான் இருந்தேன். இப்ப சிலர் என்னை அ.சிங்கமாக ஆக்கிட்டாங்க. எப்படின்னு என் சொந்தக் கதை சோகக்கதை குறிப்புகள்.

என் சொந்த ஊர், தமிழ்நாட்டுலதான் இருக்கு. நான் சின்னப் பையன், இப்பத் தான் திருத்த முடியாத ல்விநிலையத்துல 2ஆம் கிளாஸ்ல படிக்கறேன். என் செக்க்ஷன் 'G'. எனக்கு இது பிடிக்கவே இல்லை. ஏன் எனக்கு மட்டும் 'A', 'B' செக்ஷன் எல்லாம் இல்லைன்னு வாத்தியார்கிட்ட கேட்டேன். அவர் சொன்னார், "நீ 'லோ கிளாஸ்' ஸ்டுடண்ட். அதனால உனக்கு 'A, B' செக்ஷன் எல்லாம் கிடையாதுன்னு. எனக்குப் புரியலை. அப்பறம்தான் பேப்பர் படிச்சபோது லோகிளாஸ்னா நெஜமான அர்த்தம் 'தாழ்த்தப்பட்ட'ன்னு புரிஞ்சது. 2G செக்க்ஷன் ரொம்ப ராசியான செக்க்ஷன்ன்னும் அப்பறம்தான் புரிஞ்சது. எனக்கு முன்னால வாத்தியாரோட மருமான்கூட இந்த செக்ஷன்லதான் படிச்சார். வாத்தியாருக்கு ஏதோ ஒரு பிரச்சினைல மூக்கு மேலே கோபம் வந்துட்டுது. ( மதுரைன்னு சொன்னா மல்லிகைப் பூ நினைவு வரும். அதனால மூக்கு மேலே கோபம்.) அதனால அந்தத் தம்பியை வேற செக்ஷனுக்கு மாற்றிட்டார். இப்ப அவர் டிவியில, பேப்பர்ல எல்லாம் வரதில்லை. அதுக்குபதில் அவர் அண்ணன் கலைக்கு நிதி கொடுக்க, இப்ப சினிமா விளம்பரத்தில பெயரலவில் வரார். எல்லாம் காதல் நாக்கமுக்க படங்கள்தான். எனக்கு அதைப் பற்றி ஒன்னும் தெரியாது.

எனக்கு ஜோசியத்துல நம்பிக்கை இல்லை. நம்பிக்கை இருந்தாலும் வெளியே சொல்லக்கூடாது. இது வாத்தியார்கிட்ட நான் படிச்ச பாடம். அதாவது என் வாத்தியார் பெரியார் பள்ளில படிச்ச பாடம். போன மாசம் ஊருக்குப் போன போது என் ஜாதகத்தைக் கொடுத்து நமக்கு சனி-ராகு-கேது-குரு எல்லாம் எப்படின்னு எங்கவீட்டுல பார்த்தாங்க. ஜோசியர் காத்துல ஏதோ கணக்கு போட்டுப் பார்த்தார். என்னை மாதிரியே அவருக்கும் மனக்கணக்கு சரியா வராதுபோலிருக்கு. ஒரு 100 பக்கம் நோட்டை எடுத்து ஏதோ கணக்குப் போட ஆரம்பிச்சார். கொஞ்சம் நேரத்தில அவர் மயக்கம் போட்டுவிட்டார். எங்களுக்கு பேஜாரா போயிட்டுது. புத்தகம் பூரா ஒரே '0' வா வேற எழுதியிருக்கார். தண்ணி தெளிச்சு ஜோசியரை எழுப்பி விசாரிச்சாங்க. அவர் சொன்னார், "பையன்மேலே எல்லா கிரகமும் ஓவர் டைம்ல வேலை செய்யுது. இப்ப உங்களுக்கு வந்த சொத்து மதிப்பு தான் இதுன்னு முதல் பக்கத்துல 6ல ஆரம்பிச்சு அதுக்கு பக்கத்துல '0' தொடங்கி எல்லாப் பக்கத்திலேயும் போட்டிருந்தார். பேசிண்டிருக்கும்போதே மறுபடியும் '0' போட ஆரம்பிச்சுட்டார்ய். நீங்க '0' போட்டு முடியுங்க ஜோசியரே நான் கிளம்பறேன், வீட்டுப்பாடம் இருக்குன்னு சொன்னேன். போகும் போது அவர் சொல்றார், "தம்பி, உங்க யோகம் அமோகமா இருக்கு. மேலே இருக்கும் புதன் செவ்வாய் எல்லாம் உங்க ஸ்பெக்டரதுல தான் சுத்துது; இந்த கிளாசிலேயே இப்படின்னா அடுத்த கிளாஸ் போனீங்கனா கேட்கவே வேண்டாம்" என்றார். அடுத்த கிளாஸ் என்னன்னு கேட்டதுக்கு அவர் '3' ஸ்டாண்டர்ட், ஆனால் 'G' செக்ஷன்லையே இருப்பான்னார்.

அப்றம் வேற ஒன்னும் சொன்னார். அது தான் எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு. "உனக்கு பூ தண்ணீல கண்டம்; கொஞ்சம் பார்த்து இரு"ன்னார். எனக்கு புரியவே இல்லை. தேவரகசியம் அவ்ளோதான் அவரால சொல்லமுடியுமாம். அடுத்த நாள் பார்த்தா திடீர்னு சிபிஐகாரங்க இன்ஸ்பெக்ஷனுக்கு பிளைட்டுல வந்தாங்கன்னு பேப்பர்ல பார்த்ததும் எனக்கு காபி சாப்பிடமாலேயே காலைல வயித்தைக் கலக்கிடுச்சு. இன்ஸ்பெக்ஷன் வரதுன்னா முதல்லயே தேதி சொல்லி நமக்கு அழுக்கு நோட்டு புக் மேல எல்லாம் ப்ரௌன் கலர் அட்டைபோட்டு, தேர்ந்தெடுத்த கேள்விகளுக்கு பதில் மனப்பாடம் செய்யவாவது நேரம் தரவேண்டாமா? தடாலடியா வந்துட்டு 22,000 கோடி அரசுக்கு நஷ்டம்ன்னு சொல்லிட்டுப் போயிட்டாங்க. இது என்னடா வம்பா போச்சுன்னு ஜோசியர் 'பூ தண்ணீல கண்டம்' ன்னு சொன்னாரேன்னு பழைய முரசொலி பேப்பரெல்லாம் எடுத்துப் பார்த்தேன். அதில 22.10.2009 முரசொலில கவிதை கருமாந்திரம் மாதிரி புரியாத அலப்பறைகளை நீக்கிட்டுப் படிச்சா

மத்திய இணை அமைச்சரை கண்டித்து
மதுரையில் மாபெரும் பொதுக் கூட்டம்
தலைவர் கலைஞர் பங்கேற்பு
தலைமைக் கழகம் அறிவிப்பு
முல்லைப் பெரியாறு பிரச்சனையில் மத்திய இணை
அமைச்சர் ஒருவரைக் கண்டித்து மதுரை மாநகரில்...

அப்படீன்னு ஒரு அறிவிப்பு. அப்பத்தான் எனக்கு ஜோசியர் சொன்ன விஷயம் விளங்கிச்சு முல்லை - பூ, பெரியாறு - தண்ணி! உடனே வாத்தியாருக்கு போன் போட்டு என்ன வாத்தியாரே! என்னுடைய கிளாஸ்மேட்டை கண்டித்து ஏன் ஆர்பாட்டம் செய்யறீங்க? எதுக்கும் ப்ரின்சிபாலை ஒரு வார்த்தை கேட்டுக்கோங்கன்னு சொன்னேன்.. பிரின்சிபால் பத்தியும் சொல்லணும்னா அவர் ரொம்ப நல்லவர், வல்லவர். ஆனா கரஸ்பாண்டண்ட் மேடத்துக்கு ரொம்ப பயந்தவர். எனக்குத் தெரிச்சு ப்ரின்சிபாலுக்கும் இந்த அறிவிப்பு பத்தி தெரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். உடனே அவர் தன்னுடைய சார்பு வாத்தியார்களை அனுப்பிட்டார். அவங்களும் இப்பத்தான் குவாட்ரோச்சி பாடம் நடத்தி முடிச்சுட்டதால வேலை வெட்டி இல்லாம இருக்காங்க. எனக்கு பயமா போச்சு. உடனே எனக்குத் தெரிஞ்சவங்களை விட்டு கரஸ்பாண்டண்ட் மேடத்தை தரிசிச்சு, 'என் பேரில்' அர்ச்சனை செய்யச் சொன்னேன். டெல்லிக்கு போனவங்க என்ன மொழியில் அர்ச்சனை செய்யணும்னு கேட்டு எனக்கு ஃபோன் செஞ்சாங்க. நநன் சொன்னேன் கடவுளுக்குக் கனிவான மொழி எதுவோ அதுல அர்ச்சனை செய்ங்கன்னு. ஆனா போன நேரம் கோயில்ல திரை போட்டுடாங்கன்னு திரும்ப வந்துட்டாங்க. எனக்கு 'பக்'குனு ஆயிடுச்சு. வாத்தியாரிடம் விஷயத்தைச் சொன்னேன். நாளைக்கு முரசொலி நோட்டீஸ்போர்ட் பாருன்னார். அதுல மறுநாள்

"முல்லைப் பெரியாறு புதிய அணைக்கு தமிழ்நாடு எதிர்ப்பு
மதுரை மாநகரில் மாபெரும் பொதுக்கூட்டம்"

அப்படீன்னு திருக்குறள் மாதிரி அறிவிப்பு சின்னதா வந்தது. இருந்தாலும் அதுலயும் 'பூ, தண்ணீர்' வரது எனக்கு பயமாத்தான் இருக்கு. ஜோசியர் சொன்ன இன்னொன்னு ஞாபகம் வந்தது. பள்ளி அரசியல்ல 'நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு'ன்னு எது வந்தாலும் ஜாக்கிரதையா இருக்கணும்னு. நிலம் பத்தி கேட்கவே வேண்டாம். இப்ப தினகரனை பாருங்க. நீர்- சேது சமுத்திரம் என்ன ஆச்சு ? காற்று, ஆகாயம் - சொல்லத் தேவையேயில்லை. நெருப்பு - என் சொந்த காரங்களுக்கு கேஸ் கண்க்ஷன் கொடுத்தேன்னு என்று பாலு சொன்னான். இது எல்லாம் சாம்பிள் தான் நிறைய இருக்கு. குழப்பத்துல கேரளா போய் வேற ஏதாவது ஜோசியரைப் பார்க்கலாம்னா இப்போ பிரச்சனையே அங்கே இருந்துதான்.

இப்ப இந்த எதிர்ப்புக் கூட்டம் பருவ மழை காரணமா ஒத்திவெச்சுட்டாங்களாம்.

இங்கிலிஷ் கிளாஸை கட் செய்ற எங்க அண்ணன் மாதிரி நானும் இருந்திருக்கலாம். எனக்கு பிடிக்காத என் கிளாஸ்மேட் சிலர் நான் இந்த ஸ்கூலை விட்டு போயிடணும்னு சொல்றாங்க. கடுப்பா இருக்கு. போன கிளாசுல ஃபெயிலான பெரியார் பள்ளி உண்மையான வாரிசு, காங்கிரஸ் வாத்தியார் உங்க வாத்தியார் மட்டும் "முல்லைப் பெரியாறு" எதிர்த்து கண்டனம் செய்யும் போது நாங்க ஏன் "ஸ்பெக்ட்ரம்" எதிர்த்து போராட்டம் நடத்தக் கூடாதுன்னு கேட்கிறார். எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை. அண்ணன் தோத்து போன எரிச்சல்ல பேசினாலும் நியாயம் இருக்கு. ஆனாலும் நமக்கு என்ன வந்ததுன்னு இருக்கமுடியலை. ஸ்கூல் அரசியல்ல நியாயம் எல்லாம் பார்க்க கூடாதுன்னு வாத்தியார் எனக்கு சொல்லித்தந்த பாடம். அப்பறம் சுயமரியாதை என்ன ஆகும்? இவரை பற்றி எங்க டீச்சரிடம் சொன்னால் இவருக்கு நல்ல அடி கிடைக்கும். அப்பறம் இவர் பெயர் இளங்கோவடிகள் என்று மாற்ற வேண்டியிருக்கும்.

எனக்கு ஒரு பெரிய டவுட் வந்துட்டுது. இன்ஸ்பெக்ஷன் டீமே பள்ளி ப்ரின்சிபால் டீமா இருக்கும்போது எப்படி அவங்க பள்ளிலயே சோதனை நடத்துவாங்க? எப்பவும் சின்ன நம்பரா எழுதுங்கன்னு சொல்றாங்க. ஆனா நான் எழுதின உடனே இப்படி மிரட்டுராங்க. இப்படி சின்ன நம்பரா எழுதிக்கொடுத்தாதான் நாளைக்கி தாய்க்குலம் போனில் நிறைய பேசலாம். மகளிரிக்கு 33% தான் கிடைக்கவில்லை அட்லீஸ்ட் இதுவாவது கிடைக்கட்டுமே!. இது யாருக்கும் புரிய மாட்டேங்குது. அப்பறம் இப்படி முதல்ல எழுதினதே 1999ல் இருந்த பாஜக பள்ளி மாணவன்தான். நான் அவங்க 2007 கேள்வித்தாளுக்கு என்ன பதில் கொடுத்திருந்தாங்களோ அதே பதில்தான் கொடுத்திருந்தேன். வருஷா வருஷம் கேள்விக்கு பதில் மாறுமா என்ன? அப்றம் சொல்ல மறந்துட்டேன். என் தாத்தா சொத்து பழைய காலத்து வீடு ஒன்னு என்கிட்ட இருக்கு. ரொம்ப நாளைக்கு முன்னாடி தாத்தா அந்த வீட்டை லட்ச ரூபாய்க்கு வாங்கியிருக்கார். இப்ப அதன் மதிப்பு பக்கத்துல ரெண்டு பூஜ்யம் சேர்க்கணும், அவ்ளோதான். பூஜ்யத்துக்குதான் மதிப்பு கிடையாதே.

வாத்தியார்கிட்ட திரும்பவும் பேசினேன். என்னை டியூசனுக்கு போன்னு சொல்றார். எதுக்குன்னு கேட்டதுக்கு "தப்பு செய்யலாம். ஆனா அதை ஒழுங்கா செய்யத் தெரியணும். உனக்கு அது சரியா தெரியவில்லை. அதனால் டியூசன்"னு சொல்றார்.

எனக்கு ஒரே ஆறுதல் போஃபர்ஸ் மாதிரியே இன்ச்பெக்ஷன் டீம் இதையும் 'முடிச்சுடும்'. என்ன, அதுக்கு கொஞ்சம் எங்க வாத்தியார் அட்ஜஸ்ட் பண்ணிட்டு போகணும். பார்க்கலாம், என்ன நடக்குதுன்னு.

எங்க ஸ்கூல முக்கிய பாடம் லெட்டர் ரைட்டிங் தான். எங்க கிளாஸ் டீச்சர் இதில எக்ஸ்பர்ட். அவர் தினமும் தன் உடன்பிறப்புகளுக்கு ( அதாவது கூட பிறக்காதவர்களுக்கு ) கடிதம் எழுதுவார். எங்களுக்கும் இந்த லெட்டர் ரைட்டிங் பற்றி சொல்லி தந்துள்ளார். லெட்டர் ரைட்டிங் தமிழருடைய அடையாளம். இப்ப இட்லிவடை கூட முனிக்கு லெட்டர் எழுதறது இதனால தான். இப்ப எதுக்கு இந்த லெட்டர் மேட்டர் சொல்றேன் என்றால் கொஞ்சம் பழைய மேட்டர் இருக்கு. UPA-1 என்ன நடந்தது என்று நீங்க தெரிஞ்சுக்கணும்.

UPA-1ல் கிளாஸ்மேட்டாக இருந்த சட்ட அமைச்சர் பரத்வாஜ் கொஞ்சம் குட்டையை குழப்பினார். ஏதோ அவருக்கு தான் ஆங்கிலம் நல்லாத் தெரியும்னு நினைப்பு. (நானும் தான் இப்பல்லாம் டிவில ஆங்கிலத்துல எல்லாம் 'பொளந்து'கட்றேன்.) கோயில்ல முன்னாடி நிக்கறவங்களுக்கு தானே முதல்ல பிரசாதம். அதே மாதிரி முன்னாடி வரவங்களுக்குதான் ஒதுக்கீடுன்னு என்று சொன்னேன். இது தப்பா? இவர் 2007 நவம்பர்ல இப்படி கடிதம் எழுதறார்:

“In view of the importance of the case (2G spectrum allocation) and various options indicated in the statement of the case, it is necessary that the whole issue is first considered by an Empowered Group of Ministers and, in that process, the legal opinion of A-G (Attorney General) can be obtained.”

இது எல்லாம் பழைய மேட்டர், ஏன் சொல்றேன்னா பல சோதனைகளை சந்திக்க வேண்டியிருக்கு பாருங்க நீங்களும் தெரிஞ்சுக்க வேண்டாமா? எதுல விட்டேன்...ஆங்.. இப்படி கடிதம் எழுதறார். என்ன தைரியம் பாருங்க. விடுவேனா நான் நானும் இங்லிஷில ஒரு காட்டமான கடிதம் எழுதினேன். அதுக்கெல்லாம் எல்லாம் ஆள் வெச்சிருக்கேன். .

"“The Ministry of Law and Justice, instead of examining the legal tenability of these alternative procedures, suggested referring the matter to EGoM. Since generally new major policy decisions of a department or inter-departmental issues are referred to the GoM, and needless to say that the present issues relate to procedures, the suggestion of the Law Ministry is totally out of context.” (The emphasis is as in the letter.)... அப்படி என்று ஒரு பெரிய கடிதம் எழுதினேன்.

ஏதாவது புது பூதம் கிளம்ப போறதுன்னு என்று டெண்டர் 'கட்-ஆப்' தேதியை அக்டோபர் 1, 2007லிருந்து செப்டம்பர் 25, 2007க்கு மாத்தச்சொல்லி ப்ரின்சிபாலுக்கு முன்னாடி ஒரு கடிதம் எழுதினேன். ப்ரின்சிபால்தான் ரொம்ப நல்லவர்னு முன்னாலயே சொல்லியிருக்கேனே. உடனே ஒத்துண்டுட்டார். அதே போல இந்த கடிதத்தையும் எழுதினேன். ஆனா பிரின்சிபாலுக்கு என்ன தைரியம்? அவர் எனக்கு அன்னிக்கி மத்தியானமே இப்படி ஒரு பதில் அனுப்பறார்.

“I would request you to give urgent consideration to the issues being raised with a view to ensuring fairness and transparency and let me know of the position before you take any further action in this regard,” அப்படீன்னு சொல்லிட்டு முதல்ல வந்தவருக்கு சலுகை கோயில் பிரசாதத்தில்தான் ஒத்து வரும். ஸ்கூலுக்கு ஒத்துவராது. ஸ்கூல் பக்கா வியாபார ஸ்தலம். 2001ல் போட்ட கணக்கையே 2008க்கும் எப்படி போடலாம், TRAI கேக்கற கேள்விக்கு என்ன பதில், தாட் புட்னு ரெண்டு பக்கத்துக்கு கடிதம் அனுப்பியிருக்கார். அதைப் படிச்சு முடிக்கவே எனக்கு நைட் ஆயிட்டுது. அப்றம் தூங்கிட்டேன். திடீர்னு விடியற்காலை அலாரம் அடிச்சு எழுந்து சின்னதா ஒரு கடிதம் எழுதினேன்.

"“I would like to assure you that all my decisions and endeavours are honestly aimed at the development of the telecom sector…." அப்படி என்று. ஆனால் ப்ரின்சிபால் என்னிடம் சொல்லாமல் எதும் செய்யாதே என்று சொன்னதை பற்றி மூச்!. இவர் என்ன என் வாத்தியாரா? இவர் பிரின்சிபால்.

50 நாள் கழித்து வெளியுறவுத்துறை மாணவர் பிரணாப் முகர்ஜி, Solicitor General Goolam Vahanvati ரெண்டுபேரும் எனக்கு ஓ.கே சொல்லிட்டாங்கன்னு ஒரு கடிதம் எழுதினேன்.

“In these circumstances, the discussions with External Affairs Minister and Solicitor General of India have further enlightened me to take a pre-emptive and pro-active decision on these issues as per the guidelines and rules framed thereunder to avoid any further confusion and delay,”

நல்ல வேளை பிரின்சிபால் எப்படி வெளியுறவு துறை மாணவன், Solicitor General எல்லாம் ஓ.கே சொல்லலாம்னெல்லாம் கேக்கலை. கேள்வி கேட்கறதெல்லாம் பத்திரிகை வேலை. ப்ரின்சிபால் ஜனவரி மாசம் உங்க கடிதம் கிடைச்சதுன்னு வழக்கமான சப்பை பதிலோட நிறுத்திகிட்டார். (அத்வானி மாதிரி மற்ற ஸ்கூல் மாணவர்கள் அனுப்பும் லெட்டருக்கு இப்படி தான் பதில் அனுப்புவார்.) விதி யாரை விட்டது? ஏப்ரல் மாதம் பொது தேர்வு வந்தது. ரிசல்ட் மே மாசம் வந்த போது பழைய சட்ட மாணவர் பரத்வாஜ் ஃபெயில் ஆயிட்டார். இப்ப அவர் கிளாஸுக்கு வருவதில்லை. நானும் ஃபெயில் ஆகிவிட்டேன். ஆனாலும் கோயில்ல மணியக்காரார், தருமகர்த்தா, உபயதாரர்கெல்லாம் பிரசாத மான்யம் இருக்கற மாதிரி ஸ்கூல்ல எங்க வாத்தியாருக்குன்னு கொஞ்சம் இப்படி மான்யம் இருக்கு. அதுல என் கிளாஸ் டீச்சர் ப்ரின்சிபாலோட பேசி என்னை திரும்பவும் கோட்டா சிஸ்டத்தில் ஸ்கூலில் சேர்த்துவிட்டார்.

இப்ப ப்ரின்சிபால் நிலைமை திண்டாட்டமாப் போயிட்டுது. பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விக்கு "“I don’t want to comment in public on Cabinet matters or what happens in the Cabinet or what happens between me and the Ministers. It is not proper for me to join issue with a Cabinet colleague in public" ன்னு ஏதோ சொல்லி சமாளிக்கிறார். பப்ளிக்கால தேர்ந்தெடுக்கப்பட்டவர் பப்ளிக்கா பப்ளிக்குக்கு சொல்ல மாட்டேன்னு சொல்றார், நியாயமா?

சி.பி.ஐ இன்ஸ்பெக்ஷன் வந்ததைப் பத்தி சொல்லவே இல்லையே.வந்தவங்க நான் 2007ல் பிரணாப்முகர்ஜி எனக்குத் துணைன்னு பிரின்சிபாலுக்கு எழுதின லெட்டரைத் தேடி எடுத்து அதிர்ச்சி ஆயிட்டாங்க. அதாவது எனக்கு இவங்க எல்லாம் உடந்தைன்னு சொல்லாம சொல்லிட்டேன். எப்படி நம்ம புத்திசாலித்தனம்? கிளாஸ் டீச்சரிடம் கூட நான் எழுதிய லெட்டரை காண்பித்தேன். சபாஷ் என்று 100 மார்க் கொடுத்தார்.

சிவகங்கை மாணவர் சும்மா இல்லாமல் FCFS( first-come-first-served) கொள்கையை எனக்கு பிடிக்கல்லைன்னு சொல்றார். காலேஜ் சீட்லதான் FC எல்லாம் கிடையாது, வியாபாரத்தில் உண்டு. அப்பறம் சொல்ல மறந்துட்டேன், முன்னர் ஹோம் வர்க் செய்து கொடுத்த Siddharth Behura அப்படீங்கற மாணவனை டெலிகாம் செயலாளராக அமர்த்திகிட்டேன். குழந்தை சொன்ன பேச்சைக் கேட்கும். இவரைத்தான் சிவகங்கை மாணவருக்கு பதில் லெட்டர் எழுத வைத்தேன். பாவம், வாத்தியார் பாணில சொன்னா, சின்னப்பையன் பயந்துண்டு இப்ப தீவரவாதிகளை அடக்க போயிட்டார். இன்று கூட இந்தியா சும்மா இருக்காது. மும்பை சம்பவம் தான் கடைசி. இனிமேல் நாங்க பொறுத்துக்கொள்ள மாட்டோம் அப்படி இப்படி என்று பேசிக்கிட்டு இருக்கார். சரி அதை விடுங்க நம்ம சப்ஜெக்டுக்கு வருமோம்.

பா.ஜ.க. தவிர இதை ஜெ. கம்யூனிஸ்ட், விஜயகாந்த், வைகோன்னு அக்கம்பக்கத்து ஸ்கூல் பசங்க கூட இதை பத்தி பேசி பெருசாக்கிட்டாங்க. (என்ன, தமிழ்க் குடிதாங்கி ஏன் பேசலையா? அத அவர் கிட்ட கேளுங்க). பெரிசாக்கி என்ன பயன்? வாத்தியார் ஆதரவு இருக்கும் வரை எனக்கு என்ன பயம்?

ஸ்பெக்டரம்னா என்ன? வானவில். இதுவொரு வானவில்! இந்த வில்லை ஒடிக்க எந்த இராமனாலும் முடியாதுன்னு கலைஞர் கடிதம் எழுதி இதை வேற பிரச்சனையாத் தொடர... இருக்கவே இருக்கார் ராமகோபாலன்

படங்கள் உதவி: துக்ளக், ஜூவி, அவுட்லூக்

பிகு: 6ஆம் ஆண்டு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றி.

32 Comments:

R.Gopi said...

//திருத்த முடியாத கல்விநிலையத்துல 2ஆம் கிளாஸ்ல படிக்கறேன்.//

தி.மு.க. அட்டகாச அறிமுகம்...

//"பையன்மேலே எல்லா கிரகமும் ஓவர் டைம்ல வேலை செய்யுது. இப்ப உங்களுக்கு வந்த சொத்து மதிப்பு தான் இதுன்னு முதல் பக்கத்துல 6ல ஆரம்பிச்சு அதுக்கு பக்கத்துல '0' தொடங்கி எல்லாப் பக்கத்திலேயும் போட்டிருந்தார். பேசிண்டிருக்கும்போதே மறுபடியும் '0' போட ஆரம்பிச்சுட்டார்//

சூப்பரு......

//பிரின்சிபால் பத்தியும் சொல்லணும்னா அவர் ரொம்ப நல்லவர், வல்லவர். ஆனா கரஸ்பாண்டண்ட் மேடத்துக்கு ரொம்ப பயந்தவர். //

ஹா....ஹா....ஹா.... அட்டகாசத்தின் உச்சம் இட்லிவடை...

//அப்பறம் இப்படி முதல்ல எழுதினதே 1999ல் இருந்த பாஜக பள்ளி மாணவன்தான். நான் அவங்க 2007 கேள்வித்தாளுக்கு என்ன பதில் கொடுத்திருந்தாங்களோ அதே பதில்தான் கொடுத்திருந்தேன். வருஷா வருஷம் கேள்விக்கு பதில் மாறுமா என்ன? //

அதான...பதில் எப்பவும் ஒண்ணுதானே... அதெப்படி வருஷா வருஷம் மாறும்?/

லெட்டர்....அதுக்கு ஒரு பதில் லெட்டர்.. அந்த பதில் லெட்டருக்கு ஒரு பதில்... அந்த பதில் லெட்டருக்கு எழுதின பதில் லெட்டருக்கு ஒரு பதில் லெட்டர்.... யப்பா... இப்போவே கண்ண கட்டுதே...

//ஸ்பெக்டரம்னா என்ன? வானவில். இதுவொரு வானவில்! இந்த வில்லை ஒடிக்க எந்த இராமனாலும் முடியாதுன்னு கலைஞர் கடிதம் எழுதி இதை வேற பிரச்சனையாத் தொடர... இருக்கவே இருக்கார் ராமகோபாலன்//

சரியா தான சொல்லி இருக்காரு...

ராமகோபாலன் அவர்களை இனி கழக உடன்பிறப்புகள் வெறுமே கோபாலன் என்று சொன்னாலே போதுமானது... ஏனெனில், ராமன் என்ற ஒரு பெயரே கூட இல்லை என்பது தான் எனது வாதம்... ("குரசொலி" கடிதத்தில் வலைஞர்....)

Anonymous said...

Goodness gracious!!
What an audacious attempt at
satire on a contemporary scam of monumental proportions.
The number of hidden references
and punches is simply amazing.
Certainly Idlyvadai's brain needs
a thorough scanning (no insult
intended, but only admiration).
May you continue to enthral us
more and more similarly on other
subject matters too.

கு குறும்பன் said...

நீதிபதி : "எனவே, குற்றவாளிக் கூண்டில் நிற்கும் இந்த நபர் - எந்தப் பணத்தையும் கையாடல் செய்யவில்லை என்றும், அவர் மீது எந்தத் தவறும் இல்லை என்றும், அவர் ஒரு அப்பாவி என்றும், எப்பொழுதும்போல் இப்பவும் தீர்ப்பளிக்கவேண்டிய நிர்ப்பந்த சூழ்நிலையில் - அவருக்கு இந்த அளவுக்கு மன அழுத்தத்தைக் கொடுத்த எல்லோரும் இந்த நீதி மன்றத்துக்கு வந்து, மண்டியிட்டு மன்னிப்புக் கோரவேண்டும் என்றும் கூறி, அவரை விடுதலை செய்கிறேன்."
குற்றவாளிக் கூண்டில் இருப்பவர் - "அப்பிடீன்னா அந்த துட்டு எல்லாத்தையும் நானே வெச்சிக்கலாமா எஜமான்?"

Dubai Nara said...

"ஒட்"-ஐ விலை கொடுத்து வங்கலாம் என்ற புரட்சிகரமான ஐடியாவை செயல்படுத்த வேண்டுமானால் இப்படி அப்படி இருக்கத் தானே வேணும்.

இப்ப வேற ஓட்டு விலையெல்லாம் கூடிப் போச்சு.

இந்த வறட்டு சப்ஜெக்ட்-ல் கூட இத்தனை நகைச்சுவை கலந்து எழுத முடியுமா என்ன ?

அலுப்பே தட்டாமல் எதோ கதை படிப்பது போல் இருந்தது. Anyway நிஜத்திலும் இது கதை போல முடியப் போகிற விஷயம் தானே !!

மானஸ்தன் said...

What a post!!

This will surely be in the "top-three" posts of bloggers in the millennium.

ஒடம்புல இந்த அளவுக்கு நக்கல் ஊறி இருக்கற ஒருத்தர பாக்கறது அபூர்வம். என்ன ஒரு நடை! என்ன ஒரு எழுத்து!!
தொடருங்கள்.

i am extremely happy to have come across you(r) (blog) திரு இட்லிவடை.

:-)

ma_mba said...

ஐயா சாமிகளா,

இதெrல்லாம் அரசியல்ல சகஜமுங்க அப்படின்னு கவுண்டர் சொன்னப்போ நாமெல்லாம் சிரிச்சோம் ஆனா கவுண்டர் இப்போ சிந்திக்க வெச்சிருக்கார். பணம் பகுத்தறிவை படுத்தும் பாடு அடேங்கப்பா!

தமிழ், ஜாதி, பார்ப்பான், பூணூல், உடன்பிறப்பே, பகுத்தறிவு, ஹிந்தி ஒழிக, செயற்குழு, பொதுக்குழு, துணைவியார், அய்யோ கொல்றாங்களே, போராட்டம், தீர்மானம், போன்ற சாதாரணமான வார்த்தைகளை வைத்து ஒருவர் பிழைப்பு நடத்தி இன்றைக்கு அவரின் சிஷ்யரே சும்மா மில்லியன் கோடிளிகல் பூந்து விளையாடி கில்லி மாதிரி கல்லா கட்டுரார்னா, உண்மையில் தமிழன் மட்டுமல்ல ஹிந்திகாரனும், இத்தாலியும் கூட சோற்றால் அடித்த பிண்டம்தான் போல் இருக்கிறது. ஹூம் பகுத்தறிவு பகுத்தறிவுதான் ஏன்னா தனி தமிழ்நாடு வாங்கி இதெல்லாம் செஞ்சா ஆத்துல தண்ணி இல்லாத மழை பெய்யாத இந்த மாநிலத்துல இவங்க அறிவுக்கு காலணா தேறி இருக்காது இப்போ பேரன்களுக்கு ஹிந்தியும் இங்கிலீஷ் ம் கத்து கொடுத்து டெல்லி அனுப்பி மொத்தமா சொரண்டனும்னா எவ்ளோ ப்லான்னிங் வேணும்! வாரனாம் பப்பெட்டம், பில் கேட்ஸ் எல்லாம் இவங்க கிட்ட தொழில் கத்துக்க சொல்லுங்க பாஸு.

வாழ்க தமிழ்! வந்து ஏமாத்தறோம்.... சீ,,, த்து,,, சாரி வந்தே மாதரம்.

பழையசோறு said...

கலக்குங்க வாத்தியாரே!

SATHEESH said...

சூப்பர் போஸ்ட் இட்லிவடை .உங்கள் நடை யாருக்கும் வராது .

ஆனால் இது நமது நாட்டுக்கே பெரிய அவமானம் . நாம் என்றுமே ஊழல்களை பற்றி பேசிக்கொண்டுதான் இருக்கோமே தவிர ஊழல் பெருச்சாளிகளை விட்டு விடுகின்றோம்.

என்று தணியும் இந்த ஊழல் தாகம் ???

M Arunachalam said...

("அச்சம் என்பது மடமையடா! அஞ்சாமை திராவிடர் உடைமையடா!!" என்ற பாடலின் மெட்டில் இந்த பாடல் அமைக்கப்பட்டுள்ளது).

(பல்லவி)

கழகம் என்பது குடும்பமடா!

இது அறியாத மூடன் தொண்டனடா!!

ரோட்டிலும் லஞ்சம், போனிலும் லஞ்சம்,

லஞ்சமே கழக கடமையடா!

கழகத்தை காப்பது மடமையடா!!
(கழகம் .... )

(சரணம் 1)

கமிஷன் முறையிலே, சுவிஸ் வங்கி கணக்கிலே,

பணம் கொண்டு சேர்ப்பான் கழக அமைச்சன் .....

ஆ ஆ ..... ஆ ஆ ..... ஆ ஆ ..... ஆ ஆ .....

கமிஷன் முறையிலே, சுவிஸ் வங்கி கணக்கிலே,

பணம் கொண்டு சேர்ப்பான் கழக அமைச்சன்,

மனைவி, துணைவிகளின் மனம் கோணாமல்

பிரித்து, பகிர்ந்து கொள்வான் கழக தலைவன் .....

கழகம் என்பது குடும்பமடா!

இது அறியாத மூடன் தொண்டனடா!!


(சரணம் 2)

சேர்த்தது கோடி, புகலிடம் தேடி,

கழகத்தை நோக்கி வருகின்றார் ....

சேர்த்தது கோடி, புகலிடம் தேடி,

கழகத்தை நோக்கி வருகின்றார் ....

தாயுள்ளத் தலைவர், கோடிகளை கவர்ந்து,

இதயத்தில் 'மட்டும்' இடம் தருகின்றார் .....

கழகம் என்பது குடும்பமடா!

இது அறியாத மூடன் தொண்டனடா!!

ரோட்டிலும் லஞ்சம், போனிலும் லஞ்சம்,

லஞ்சமே கழக கடமையடா!

கழகத்தை காப்பது மடமையடா!!
(கழகம் .... )

M Arunachalam said...

இந்த ஊழல் முதலில் வெளிவந்தபோது இட்லிவடை தளத்தில் சில பேர் சப்பை கட்டு கட்டினார்கள் திருடர்கள் முன்னேற்ற கழகத்திற்கு. இப்போது காங்கிரஸ் ராணியோ அல்லது இளவரசரோ ஆணையிட்டதன் பேரில் C.B.I. இந்த விவகாரத்தில் நடந்த அனைத்து திருட்டு விவரங்களையும் கைப்பற்றி எந்தெந்த விதிமீறல்கள் நடை பெற்றுள்ளன; யார் யாருக்கெல்லாம் கோடி, கோடியாய் பணம் கைமாறியுள்ளது என்ற விவரங்களை சேகரித்து கூடிய சீக்கிரம் ஏதாவது கோர்ட்டில் முதல் தகவல் அறிக்கையும் தாக்கல் செய்து விடும்.

அதற்க்கு பிறகுதான் ஆட்டமே ஆரம்பம் ஆகப்போகிறது. எப்படி பீகாரில் லாலுவுக்கு மாட்டு தீவன ஊழலை வைத்து காங்கிரஸ் ஆப்பு வைத்ததோ, அதே போன்று தமிழ் நாட்டின் ஊழல் பிதாமகருக்கும் ஆப்பு வைக்க காங்கிரஸ் அதாவது இளவரசர் சாமர்த்தியமாக காய் நகர்த்திக்கொண்டு இருக்கிறார். அதன் ஒரு சிறு சாம்பிள்தான் முல்லை பெரியாறு ஆணை எதிர்ப்பு மீட்டிங் வுட்டலங்கடியான கதை. இது வெறும் டிரைலேர்தானுங்கோ..... மெயின் பிக்சர் வந்தா தெரியும் யாரு அரசியல் சானக்கியருன்னு(!).

ஊழல் பிதாமகரை பொறுத்தவரை தான் ஆடாவிட்டாலும் அவர் பணம் ஆடும். அந்த பணமே ஆட்டம் காண போகிறது என்றால், அவர் எவ்வளவு வேண்டுமானாலும் காங்கிரஸின் தாளத்திற்கு ஆடுவார்.

ஆடும் வரை ஆட்டம்; ஆயிரத்தில் நாட்டம்.

கூட வரும் கூட்டம்; கொள்ளி வரை வருமா?

naan kadavul said...

ஆயிரம் அரிச்சந்திரன் வந்தாலும் காந்தி வந்தாலும் உங்களுக்கு போதாதுடா சாமி..,

Anonymous said...

http://business.rediff.com/column/2009/nov/02/tech-the-noose-tightens-around-raja.htm

Telecom Minister A Raja's big hope now depends on whether Trai chairman J S Sarma bails him out. But with the evidence so clearly against the minister, what's the prime minister waiting for, asks Suni Jain.

It's difficult to say whether the Central Bureau of Investigation will find enough proof against Telecom Minister A Raja or whether it will get caught in the parcel of half-truths he's been dishing out on how he's just followed the recommendations of the Telecom Regulatory Authority of India and the actions of his predecessors.

One of the lines the CBI is following deals with how, in less than an hour of the policy being announced, a handful of firms were able to deposit their bank drafts -- this put them at the top of the line to get spectrum, and suggests they had advance knowledge of when the policy would be announced.

While this is a welcome line of investigation, it needs to be kept in mind that the Delhi High Court has already ruled Raja's actions illegal -- so when Raja says he just followed the Trai recommendations, the court says that's incorrect.

This creates two huge problems for Prime Minister Manmohan Singh.

One, Raja insists the prime minister was in the loop on this one -- indeed, Solicitor General GE Vahanvati gave an affidavit as late as last December in favour of Raja's actions.

Second, the judgment makes it clear that the government has to give licences to all 46 companies that applied instead of to just the nine that Raja favoured -- if any of these companies goes to court to enforce its rights, the government doesn't have a leg to stand on.

There is little doubt Trai's recommendations were wishy washy when it came to how the spectrum/licence was to be priced, but the very first recommendation of the authority was 'no cap (shall) be placed on the number of access service providers in any service area'. Indeed, when the ministry issued a press release on the new licences, it said Trai had recommended 'no cap' and this had been accepted by it.

Well, read the S Tel judgment delivered last July -- S Tel had applied for a licence in 16 telecom circles on September 28, 2007, well before Raja's original cut-off date of October 1 (on January 10, 2008, however, Raja said he'd give licences only to those firms that had applied till September 25, 2007).

In this judgment, the court has said "by amending the cut-off date, (Raja has) placed a cap on the number of (service) providers". In the event, the court quashed Raja's January 10 press release and said the government had to consider S Tel's application as well. By the same token, the government has to consider the applications of all the 46 companies.

More important, if Raja's decision to change the cut-off date is illegal as the high court has said, his subsequent decision to give licences on a first-come-first-served basis (to the companies that paid the licence fee first) is also illegal. In which case, it is not quite clear what Prime Minister Singh is waiting for as there is enough of a case to revoke the licences Raja issued -- action against Raja, even if it does happen, is of little help unless the original problem is fixed.

A perusal of various dates in l'affaire Raja is even more damning. Trai gave its recommendations on August 28, 2007 and though a press release was put out on January 10, 2008 saying only applications before September 25, 2007 would be processed, the capital was rife with rumours of deals being cut.

So, on October 15, 2007 and on October 19, 2007, Trai wrote letters to Raja saying he had to implement its recommendations in toto and not just cherry pick from them.

So, for instance, no mergers and acquisitions were to be allowed until firms had completed their rollout obligations -- Raja relaxed these (on April 22, 2008) to allow Swan and Unitech to sell part of their equity at several times the value paid to the government.

Anonymous said...

(Contd....)

Trai followed up with another letter on January 14, 2008 (two months before the licences were actually issued), saying new licences could only be issued after ensuring there was adequate spectrum (for all the 46 firms that applied, given the high court judgment!). . .

Raja ignored all of this, though Section 11 (fifth proviso) of the Trai Act is very clear, that if the government tinkers with Trai recommendations, it has to go back to Trai and ask for it to make fresh recommendations with respect to introduction of new service providers.

In mid-2003, when cellular operators were appealing against the government's decision to legalise Reliance [ Get Quote ] Infocomm's mobile operations, GE Vahanvati was one of their lawyers who got a favourable judgment from Telecom Disputes Settlement and Appellate Tribunal chairman Justice Wadhwa on this very point -- violation of the fifth proviso!

Interestingly, even Raja knows what he's done is illegal. So, instead of challenging the S Tel judgment in the Supreme Court, where his chances of victory are poor, he has rushed to Trai to ask it to change the policy and now put a cap on the number of service providers -- if you can't win on legal grounds, just change the policy!

Raja's big hope now depends on whether Trai chairman JS Sarma bails him out. But with the evidence so clear, what's the prime minister waiting for?

Prakash G.R. said...

Welcome back, Idlyvadai :-)

சீனு said...

அக்பார்க் இ.வ. பதிவு.

பள்ளிகூடம் எடுத்த தங்கர் பச்சான் தோற்றார் போங்க.

Anonymous said...

எது எப்படி இருந்தாலும் சரி. தீர்ப்பு என்னவோ "விடுதலை செய்கிறேன்" என்பதுதான், சிபிஐ குவாத்ரோச்சி மேல் செர்ன்ன குற்றத்தை விடவா தம்பி ராசா மேல் சொல்லிவிட்டது.

SAN said...

IV,
Super is not a word to describe this post.Enjoyed your satire(by any chance you worked in Thuklaq).what a flow man!Unbelievable.
Great going and keep it up.

M.Arunachalam ungal padalum arumai.

Heam said...

amazing .. excellent .. i do say this is the best post i ever seen in the tamil blogs.. " Nakkal , Nayyandi ullukul oru Kovam " arumai IV .. feeling proud to follow ur blog.

Anonymous said...

DMK defends Justice Dinakaran- see Murasoli cartoon.Here too the caste is invoked.

vedanarayanan said...

கொஞ்சும் careful ஆக இருந்து கொள்ளுங்கள். இந்த மாதிரி எழுதியதை படித்து feedback அனுப்புகின்ற எங்களுக்கே கொஞ்சம் உதறல் தான் ( ஈமெயில் இருக்கிறதே என்று ). நல்ல imagination and என்ன ஒரு தமிழ் நடை. கொன்று விட்டீர்கள்.

IdlyVadai said...

//DMK defends Justice Dinakaran- see Murasoli cartoon.Here too the caste is invoked.//

கார்டூன் இருந்தால் அனுப்புங்க. அப்படியே அக்டோபர் 31 தேதி முதல் பக்க முரசொலியிம் சேர்த்து அனுப்புங்க.

இலவசக்கொத்தனார் said...

இதை யார் எழுதிக் குடுத்தது? அதைச் சொல்லவே இல்லையே!!

jaisankar jaganathan said...

//ஆடும் வரை ஆட்டம்; ஆயிரத்தில் நாட்டம்.

கூட வரும் கூட்டம்; கொள்ளி வரை வருமா?
//

arunachalam ithu thalivar vanthathan sariyagum

Anonymous said...

தாழ்த்தப்பட்டவர் அஸ்திரம்?
இருக்கு.
பிரதமரை இழுத்து சம்பந்தப் படுத்தும் அஸ்திரம்?
இருக்கு.
எதிர்க் கட்சிகளின் மீது இதை விட பிரம்மாண்டமான ஊழல் புகார் அஸ்திரம்?
இருக்கு.
கனிவான மொழிகள் பேசி - அரசியிடம் கெஞ்சும் அஸ்திரம்?
இருக்கு.
வேறு செல்லப் பிள்ளைகளை உள்ளே இழுத்து அதில் குளிர் காயும் அஸ்திரம்?
இருக்கு.
அப்ப என்னதாங்க இல்லே?
நேரம் சரி இல்லே!

Anonymous said...

// சிபிஐ குவாத்ரோச்சி மேல் செர்ன்ன குற்றத்தை விடவா தம்பி ராசா மேல் சொல்லிவிட்டது.//
அவரு அரசிக்கு வேண்டிய அளவுக்கு கப்பம் கட்டியிருப்பாரு!
இவரு?

R. Jagannathan said...

The satirical report of the developments from the very beginning - with the help of extracts from other magazines - is really great and thought provoking. The comments from the visitors to this blog match equally the report. Particularly the long report by - Anonymous said...
http://business.rediff.com/column/2009/nov/02/tech-the-noose-tightens-around-raja.htm-,
by Mr. Kurumban (குற்றவாளிக் கூண்டில் இருப்பவர் - "அப்பிடீன்னா அந்த துட்டு எல்லாத்தையும் நானே வெச்சிக்கலாமா எஜமான்?") and the Achham enbadhu remix are superb. I wish the authorities concerned are aware of the concerns of the Public. - R Jagannathan

Erode Nagaraj... said...

//i am extremely happy to have come across you(r) (blog) திரு இட்லிவடை.//

என்னங்க... மானஸ்தன், இட்லி வடைய க்ராஸ் பண்ணறாரு? அதுல வேற, பழைய கனவுல சந்தோஷமாம்.. ex-dreamly(!)


ராசாவுக்கு ஒரே ஒரு வழி தாங்க இருக்கு.. நல்ல ஜோசியரைக் கேட்டு ராசிக் கலர்ல துண்டு போட்டுக்கிட்டார்னா, "தலைக்கு" உதவும்... (pun intended)

blogpaandi said...

திட்டம் போட்டு திருடுற கூட்டம்
திருடிக் கொண்டே இருக்குது
அதை சட்டம் போட்டு தடுக்குற கூட்டம்
தடுத்துக் கொண்டே இருக்குது
திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால்
திருட்டை ஒழிக்க முடியாது

Kameswara Rao said...

இ,வ,

என்ன அருமையான ஒரு பதிவு தி (ல்லு) மு(ல்லு) கழகத்தின் SOP's அப்படியே பதிவு எடுத்துபோல்... அருண் அவர்களின் கழக பாடல் அருமை,
I wonder how people ask what mr.singh has done he is just a rubber stamp and has no control over his cabinet ministers our country has lost revenue be lucky that they did no compile what we lost to the British and say that it is not that much when compared and get away with that... these people especially our pithamagar has to be awarded a nobel prize for scams that too doing them scientifically ( If I remember right this was one of the remarks of the Sarkaria) he works tirelessly to cover all these stuff.. for him its an organisation with a branch at delhi he has come back after a vanavasam i.e. almost 14 years and from there on he has not missed an opportunity to grab a share come what may...to swindle he needs to write book alonside his literary works which will serve as a guide to his successors he can be the only CM interested in Cinework other than official one (please refer tughlaq cartoon) who has the guts to bell the cat, IV you must have scratched your head to bring out this nice write up.. but alas things are going to continue in this way now he has kith and Kin to follow it up in State as well as central I can remember a telugu dub film dialogue "சென்ட்ரலும் நானே ச்டடேடும் நானே" which will fit the bill to the "T" these guys will scape through all these stuff with ease its like bread and butter to them they have been trained to all these stuff IInd class is too low where pithamagan has a PH'D in all these stuff.. moreover what is CBI "Congress Bureu of Investigation" when they want to tighten the screws they will use it when they want they will reverse the decision saying that evidence is not enogh eg. Jagdish tytler. Its the common man's money which is at stake we need a revolution in the system and in our attitude to stop all these else... I will be reading Idly for another episode the only difference will be "Subject Change" / Actor Change but the drama will be the same.
How many of us went to vote (I never came to India and many of my freinds told me its waste of time) with this approch and system in place IDLY I am sorry to say we can just write and release our anquish and that's it.

Kamesh
Botswana

Anonymous said...

Idlyvadai,

Latest news on Raja's scam... You never cared about this when people sent links of this scam to your id...

Finally Idly agrees after Thuglak reported this scam...

http://www.dailypioneer.com/213204/Babus-cook-Raja’s-goose-tell-CBI-of-his-‘dirty’-deals.html

sreeja said...

இந்த மேட்டர பத்தி ஜெ.. என்னவோ சொல்ல அத நம்ம "தல" புகழ்ந்து கேள்வி பதிலா முரசொலில சொல்லியிருக்காராமா ? கேள்வி பட்டீங்களா இல்லயா ? என்ன பதில காணோம்?


ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா - அதனால எல்லோரும் ராஜா சொன்னத கேட்டு தலயாட்டுங்க.

அருணாசலத்தின் கழக கீதம் - அருமை.

Anony8 said...

Superb post.

Seriously.... Be careful from the "Auto" Squads