பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, November 08, 2009

சண்டேனா இரண்டு (8-11-09) செய்திவிமர்சனம், இன்பா


இந்த வார இரண்டு செய்திகள்...

செய்தி # 1

இடம் : திருவண்ணாமலை.

கிரிவலம் சென்று கொண்டிருந்த மின் ஊழியர் ஒருவர்
சாலை ஓரமாக இருந்த மரத்தடியில் சடா முடியுடன் சித்தர் ஒருவரை கண்டார்.
அவர் பார்த்துகொண்டிருக்கும் போதே, அவர் கண்முன்பாக, திடிரென்று அந்த சித்தர் தரையிலிரிந்து வானத்தை நோக்கி பறந்துபோனார்.

இந்த காட்சியை, உடனே தனது மொபைல் கேமராவில் படம்பிடித்து, பத்திரிக்கைகளுக்கு செய்தி அளித்தார் அவர்.

கடந்த 1-11-09 அன்று ஜெயா டிவியில் இந்த காட்சி ஒளிப்பரப்பபட்டது.

"புராண காலத்தில் பார்வதி தேவியார் சிவனின் இடப்பாகம் பெற வேண்டும் என்பதற்காக கார்த்திகை மாதத்தில் கிருத்திகை நட்சத்திரத்தில் தன் பரிவாரங்களூடன் மலையை வலம் வந்தார். அப்போது சிவன் காட்சி தந்து உமையாளுக்கு இடப்பாகம் அளித்தார் என்பது வரலாறு. சித்தர்கள், ஞானிகள் ஆகியோர் ஒவ்வொரு மாதப்பிறப்பு மற்றும் பிரதோஷ காலத்தில் மலை வலம் வந்தனர். இன்றும் சூட்சும ரீதியாக வந்து கொண்டிருக்கின்றனர்" என்று கருதப்பட்டுவரும் இடம்தான் திருவண்ணாமலை.

அஞ்ஞானக் கங்குல் அகற்று மலை – அன்பருக்கு
மெய்ஞானச் சோதி விளக்கு மலை
ஞானத் தபோதனரை வா என்று அழைக்கு மலை
அண்ணாமலை”

-என்றெல்லாம் போற்றப்படும் திருவண்ணாமலை திருத்தலம், அண்ணாமலை என்றும் அருணாசலம் என்றும் அழைக்கப்படுகின்றது. அருணாசலம் என்பதைப் பிரித்தால் அருணம் + அசலம் என்று வரும். அருணம் என்றால் நெருப்பு. அசலம் என்றால் மலை. ஆகவே இது நெருப்பு மலையாக விளங்குகிறது. அதனால் தான் இதனை அக்னி பர்வதம் என்றும் அழைப்பர் பெரியோர். இந்த அக்னி பர்வதமாகிய நெருப்பு மலையே அருணாசலமாகக் காட்சியளிக்கிறது. அண்ணாமலை என்றால் அண்ண முடியாத மலை என்பது பொருளாகும். அண்ணுதல் என்றால் நெருங்குதல் என்பது பொருள். ஆக யாவரும் எளிதாய் நெருங்க இயலாத பரம் பொருளே இங்கு அண்ணாமலையாய், அருணாசலமாய் வீற்றிருக்கிறது என்பதே உண்மை. இது வெறும் கல் மலை அன்றி, பல்வேறு அதிர்வுகளைத் தன்னகத்தே கொண்டது என்பதே உண்மை.

இம்மலைப்பாதைகளில் சேஷாத்ரி சுவாமிகள் ஆஸ்ரமம், ரமணாஸ்ரமம், யோகி ராம் சுரத் குமார் (விசிறி சாமியார்) ஆஸ்ரமம், ஈசான்ய ஞான தேசிகர் மடம், அடிமுடிச் சித்தர் ஜீவ சமாதி ஆலயம் போன்ற பல ஞானியரது ஆஸ்ரமங்களும், ஜீவ சமாதிகளும், பல கோயில்களும் உள்ளன. இங்குள்ள மலைப் பாதையில் அஷ்ட லிங்கங்கள் உள்ளன.

எல்லா மாதங்களும் கிரி வலத்திற்கு ஏற்ற மாதங்களே! இருந்த போதும் ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, பௌர்ணமி காலங்கள் மலை வலத்திற்கு ஏற்ற காலங்களும், மாதங்களும் ஆகும்.

பௌர்ணமி காலத்தில் மலைவலம் வருவது ஏன்?

சந்திரன் நம் மனத்துக்கு (எண்ணத்திற்கும்) காரகன். பௌரணமியன்று பூமியில் சூரியனிடமிருந்து சக்திகளை அதிகளவில் கிரகித்து பூர்ண நிலவாக, அதிகக் கலைகள் கொண்டவனாக சந்திரன் விளங்குகிறான். இதனால் பௌர்ணமி மலை வலம் வருவது சாலச்சிறந்தது என பெரியோர்களால் போற்றப்பட்டது.

(நன்றி : அருணாச்சல மகிமை)

கடல்அலைகளை போலவே, முழு சந்திரனுக்கும் நமது எண்ண அலைகளுக்கும் தொடர்பு இருக்கிறது என்கிறது மனோதத்துவம்.

நம்ப இயலாத, ஆனால் உணமையான ஆச்சர்யங்களையும்,சூட்ச்சும சங்கதிகளையும் கொண்டிருக்கிறது திருவண்ணாமலை.

“கயிலையைக் கண்டால் முக்தி. திருவாரூரில் பிறந்தால் முக்தி. காசியில் மரணமடைந்தால் முக்தி. அருணாசலத்தை நினைத்தாலே முக்தி.”

செய்தி # 2

தமிழகத்தில் படிக்கும் அனைத்து மாணவர்களும் ஒரேவிதமான பாடத்திட்டத்தை பயில்வது என்பதுதான் சமச்சீர் கல்வி.

இத்திட்டத்தின்படி, தமிழகத்தில் தற்போதுள்ள மாநிலக்கல்வி வாரியம், மெட்ரிக்குலேசன் கல்வி வாரியம், ஆங்கிலோ இந்தியன் கல்வி வாரியம், ஓரியண்டல் கல்வி வாரியம் ஆகிய நான்கு கல்வி வாரியங்களையும் ஒருங்கிணைத்து இந்த நான்கு வாரியங்களிலும் உள்ள சிறப்பு அம்சங்களைத் தொகுத்து, ஒரு பொதுக்கல்வி வாரியத்தை அமைத்து, ஒரு பொதுவான பாடத்திட்டத்தை வகுக்கிறது.

தனியார் மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் கட்டணம் செலுத்தி படிக்கமுடியாத ஏழை,கிராமப்புற மாணவர்கள் ஒரு பொதுவான பாடத்திட்டத்தால் ஒன்றிணைக்க படுகிறார்கள். கல்வி, ஒரே தரத்துடன் அனைத்து தரப்பினரையும் சென்றடைகிறது.

இந்த வருடம் அமல்படுத்த போகும் இந்த திட்டத்தின் அவசியத்தை உறுதி செய்கிறது ஒரு செய்தி.....

"திறமையான ஊழியர்கள் கிடைக்காததால், இன்ஜினியரிங், ஜவுளித்தொழில் நிறுவனங்கள் திணறி வருகின்றன. தொழில் மேம்பாடு, நவீன வளர்ச்சிக்கு ஏற்ப, கல்வி முறையிலும் பெரும் மாற்றம் இல்லாததால், ஆட்கள் பற்றாக்குறை நிலவுகிறது" - என்கிறது அந்த செய்தி.

தொழிலாளர் பற்றாக்குறை குறித்து, கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்க தலைவர் இளங்கோ கூறியதாவது: "மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடாக இந்தியா இருந்தாலும், திறமையானவர்கள் குறைவே. சம்பளமும், நவீன தொழில்நுட்பமும் உயர்ந்த அளவிற்கு, தொழிலாளர்களின் திறமை அதிகரிக்கவில்லை. பல தொழில் நிறுவனங்களில் கூடுதலான உற்பத்தியை அளிக்க திறமையான தொழிலாளர்கள் இல்லை. திறமையானவர்களை உருவாக்க திறன் மேம்பாட்டு மையங்களை உருவாக்கி, படித்த இளைஞர்கள், படிப்பை கைவிட்ட இளைஞர்கள் போன்றோருக்கு அரசு பயிற்சி அளிக்க வேண்டும்".
இதற்க்கு ஒரு நல்ல தீர்வாக, எல்லாருக்கும் பொதுவான தரமான கல்வியை அளிக்கும் சமச்சீர் கல்வி திட்டம் நல்ல பலனை தரும் என்று எதிர்பார்க்கலாம். இந்தியாவில், நமது தமிழகத்தில் இந்த திட்டத்தை நடைமுறை படுத்தஇருக்கும் தமிழக அரசுக்கு நன்றி.

சமச்சீர் கல்வி பற்றிய முழு விவரத்திற்கு இங்கே(http://kadaitheru.blogspot.com/2009/11/blog-post_04.html) போகவும்

இந்த வார உலக செய்தி


கடந்த சில தினங்களுக்கு முன், அமெரிக்கா சென்றிருந்த இலங்கையின் அப்போதைய ராணுவ தளபதியும், இப்போதைய முப்படைகளின் கூட்டுத் தளபதியுமான சரத்பொன்சேகாவிடம், போர் காலத்தில் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை நடத்த அமெரிக்க அதிகாரிகள் அவருக்கு அழைப்பு விடுத்தனர்.

இதற்கு இலங்கை அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், "உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான விஷயங்களை மூன்றாம் நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளும் எந்த அதிகாரமும் சரத் பொன்சேகாவுக்கு இல்லை' என்றும் கூறியது.

இதை அடுத்து, அவர் விசாரணை ஏதும் இன்றி, இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுவிட்டார்.

இதற்கிடையே, சரத்பொன்சேகாவிடம் அமெரிக்கா விசாரணை நடத்துவதை தடுப்பதற்கான எல்லா வழிமுறைகளும், அரசியல் ரீதியாக கையாளப் பட்டது என, இலங்கை வெளியுறவு அமைச்சர் பொகோலகாமா அந்நாட்டு பார்லிமென்டில் தெரிவித்தார்.
போர் குற்றங்களுக்கும், மனித உரிமை மீறல்களுக்கும் இன்று இல்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் இலங்கை அரசு பதில் சொல்லித்தான் ஆகவேண்டும்.


(நன்றி....மீண்டும் அடுத்த வாரம்)

-இன்பா
Yellow
Green
Blue
Light Green

8 Comments:

Anonymous said...

இட்லி வடை & இன்பா

நல்ல கட்டுரை. ஆனால் எங்கிருந்து எடுத்து எழுதுயிருக்கிறீர்கள் என்ற சுட்டியையும் கொடுத்திருக்கலாமே, வெறுமே நன்றி அருணாசல மகிமை என்று போட்டதற்கு பதிலாக. ஏனென்றால் அதில் அண்ணாமலை பற்றி இன்னும் விரிவான நிறைய தகவல்கள் இருக்கின்றன. ஆன்மிகப் ப்ரியர்கள் யாருக்காவது பயன்படுமே!

சரி, சுட்டியை நான் தருகிறேன்.

http://ramanans.wordpress.com/2009/08/10/%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%a3%e0%ae%be%e0%ae%9a%e0%ae%b2-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88/

அந்த சித்தர் பறந்து போகும் டி.வி காட்சி லிங்கை நீங்கள் கொடுத்தால் நன்றாக இருக்கும்.

இவண்
இட்லிவடை ப்ரியன்

Sri Ram Jaya Ram Jaya Jaya Ram said...

http://www.youtube.com/watch?v=Jtzu84KC5Jk
here is the link

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

அன்புள்ள இன்பா,

அண்ணாமலை குறித்து அருமையான பதிவு. வாழ்த்துகள்!

சமச்சீர் கல்வி - ஒரே பாட திட்டத்துடன் வருவது நல்லது தான். ஆனால் கல்வி கற்றுத் தரும் ஆசிரியர்கள் ஒரே சீராக நடத்துவார்களா? அரசு பள்ளி ஆசிரியர்கள் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு இணையாக பாடம் நடத்துவார்களா? இந்த கேள்விகளுக்கு எல்லாம் பதில் இல்லாமல் சமச்சீர் கல்வி என்பது கானல் நீர் தான் என்பது என் கருத்து.

இலங்கை அரசு அட்டூழியம் செய்து வருகிறது. இது உலக மக்கள் அனைவருக்கும் தெரியும். இருந்தும், யாரும் இந்த பூனைக்கு மணி கட்டவில்லை என்பது தான் வயிற்றெரிச்சல்.

யதிராஜ சம்பத் குமார் said...

சித்தர் பறந்து போகும் காட்சி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றது. அப்போதே கூட அநேக தொலைக்காட்சி சானல்கள் அதனைக் காண்பித்தன. ஜெயா டிவி இப்பொழுது அதனை தூசி தட்டி எடுத்து சமீபத்தில் நடந்ததுபோல் காட்டியதன் மர்மம்தான் விளங்கவில்லை.


http://www.youtube.com/watch?v=lKSTqsUKWc8


அந்தப் படக்காட்சி இந்த யூட்யூப் சுட்டியில் உள்ளது. கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பதிவேற்றம் (upload) செய்யப்பட்ட வீடியோ. கூர்ந்து நோக்கினால் ஒரு வஸ்து திடீரென்று மேலே கிளம்புவது போல் இருக்கும்...ஆனால் அவ்வளவு தெளிவான உருவம் காணக் கிடைக்காது.


சித்த புருஷர்களின் மஹிமை உண்மைதான் என்றாலும் இந்த வீடியோ மற்றும் செய்திகளின் நம்பகத்தன்மை கேள்விக்குரிய ஒன்றே!! சாதாரணமாக சித்த புருஷர்கள் மனிதர்களின் கண்களுக்கு தென்படமாட்டார்கள். ஒருவர் வீடியோ எடுக்கும்வரை ஒரு சித்தர் காட்சியளித்தார் என்றால் நம்புவதற்கு சற்று கடினமாக இருக்கிறது.

ஜெயக்குமார் said...

ஹும்..இலங்கைக்குக் கூட முதுகெலும்பெல்லாம் இருக்கிறது. இந்தியாவிடம் எந்த நாடாவது கேட்டிருந்தால் இந்நேரம் நமது வெளியுறவுத்துறை மந்திரி அமெரிக்காவே போய் சொலிவிட்டு வந்திருப்பார்.

சமச்சீர் கல்வியை சொல்லித்தரப்போகும் ஆசிரியர்களை நினைத்தால், மாணவர்களின் பரிதாப நிலை மனக்கண்ணில் வந்துபோகிறது. என்ன செய்ய தமிழக மானவர்கள் கொடுத்து வைத்தது அவ்வளவுதான். கோனார் நோட்ஸ் மற்ற ஜாதிக்கார நோட்ஸுகளெல்லாம் சமச்சீர் இன்னும் ஓராண்டு தாமதிக்க செய்த முயற்சிகள் பலிக்கவில்லைப் போல் தெரிகிறது.

திருவண்ணாமலை பதிவு சும்மா போகிற போக்கில் போட்டதுபோல தெரிகிறது. இன்னும் நன்றாய் எழுதி இருக்கலாம்..

Anonymous said...

சித்தர் பறந்த செய்தியை
நானும் ஜெயா டிவியில் பார்த்தேன்.

அதனுடன்
திருவண்ணாமலை பற்றிய
செய்திகளை சேர்த்துஇருப்பது
இன்பாவின் சாமர்த்தியம்.

Mohan Kumar said...

With a huge population, India still does not have talented resources for certain fields. Probably this is because of the mind set of the parents and students to choose some specific fields only. For example not many prefer the send their children to Textile engineering. Hence average people only join these courses and Companies do not get good employees.

Mohan Kumar

http://veeduthirumbal.blogspot.com/

Anonymous said...

http://www.youtube.com/watch?v=TGAYHJLvZek

I do not know why you people are so stupid in the name of religion. Check the link date posted in youtube as malay ghost and check when it was telecasted in Jaya TV