பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, November 29, 2009

சன்டேனா இரண்டு (29-11-09) செய்திவிமர்சனம்

இந்த வாரம்,ஒரு சின்ன இடைவேளைக்கு பிறகு 'சண்டேனா இரண்டு' வரலாற்றில்(?) அரசியல், சினிமா இல்லாத செய்திகள்...

செய்தி # 1

விடுமுறையில் ஊருக்கு வந்தபோது இரண்டு கோவில்களுக்கு சென்ற அனுபவம்..

முதலில் சென்றது என் நெருங்கிய நண்பன் ஒருவனை காண கும்பகோணம் அருகே இருக்கும் பாபநாசம் சென்றுஇருந்த போது, தீவிர பெருமாள் பக்தரான அவன் என்னை அழைத்து சென்ற கோவில்...புள்ளபூதங்குடி ராமர் கோவில். பாபநாசத்தில் இருந்து ஆதனூர்(இங்கும் பெருமாள் கோவில் உள்ளது) செல்லும் மினி பஸ்ஸில், காலையில் கிராமங்கள் வழியே பயணம் செய்த அனுபவமே அலாதியானது.

நாங்கள் அந்த கோவிலை சென்று அடைந்தபோது, ஆள் நடமாட்டமே இல்லை. நண்பனுக்கு பரிச்சியம் என்பதால், கோவிலுக்கு அருகாமையில் இருக்கும் அர்ச்சகரின் வீட்டிற்க்கு சென்று அழைத்தோம்.

மிக பழமையான் கோவில். சுமார் 1000 வருட பழமை என்றார் அர்ச்சகர். புள்ளபூதங்குடி - 108 திவ்விய தேசங்களில் ஒன்று.
திருமங்கை ஆழ்வாரால் பாடல் பெற்ற தலம். இங்கு பள்ளி கொண்டு இருக்கும் ராமர் ஸ்ரீ வல்வில் ராமர்.
தாயார் பொற்றாமரையாள் என்கிற ஹேமாம்புஜவல்லி. மற்ற ராமர் கோவில்களுக்கும் இங்கு உள்ள ராமருக்கும் உள்ள சிறப்பு அம்சம்...இங்கு ராமர் சயன நிலையில் காட்சி தருகிறார். புள்ளினம் என்றால் பறவையை குறிக்கும். சீதையை கவர்ந்த ராவணனை எதிர்த்து போர் செய்த ஜடாயு, அடிபட்டு விழ, அங்கு வந்த ராமர் மற்றும் லட்சுமணரும் ஜடாயுவுக்கு ஈம கிரியைகள் செய்ததாக தல வரலாறு கூறுகிறது.

இந்த கோவிலில் உள்ள மற்றுமொரு அம்சம்...உத்தியோக நரசிம்மர் என்னும் சந்நிதி. வேலை கிடைக்க, அல்லது பணி உயர்வுக்கு வேண்டிக்கொண்டு, இவர்க்கு வடமாலையும்,பட்டுத்துணியும் சாத்தினால், அந்த வேண்டுகோள் நிறைவேறும் என்று சொன்னார் அர்ச்சகர். Economical crisis சூழலை கருத்தில் கொண்டு, அசம்பாவிதம் ஏதும் நடக்ககூடாது என்று வேண்டிக்கொண்டு கிளம்பினோம்.

"உலகத்தில் எனக்கு மிகவும் பிடித்த இடம் கும்பகோணமும், அதை சுற்றி உள்ள கோவில்களும்தான். அங்கு கிடைக்கும் நிம்மதி வேறு எங்கும் கிடைப்பது இல்லை " என்று எழுதி இருந்தார் திரு. பாலகுமாரன். அது எவ்வளவு உண்மை என்பது என்னால் உணர முடிந்தது.

கும்பகோணத்திலும், அதை சுற்றி உள்ள கிராமங்களிலும் பல புராதன கோவில்கள், கலைசின்னங்கள் சின்னா பின்னமாகி கிடக்கின்றன. கேட்பார் அற்று, ஜன நடமாட்டமே இல்லாமல் இருக்கின்றன. இவற்றின் அருமை பற்றி, இத்தைகைய கோவில்களை பாதுக்காப்பது குறித்து எந்த அரசும் அக்கறை காட்டுவதாக தெரியவில்லை.

இதே சமயத்தில், நான் சென்னையில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்று இருந்தேன். ஒரு புகழ் பெற்ற கோவிலின் ஜூனியர் கோவில் என்றார்கள். ஏ.சி வழியும் கோவில். வழுவழு மொசைக் தரை. அலங்கார பல்புகள். எதோ ஒரு ஆடம்பர அறை போல இருந்தது. அர்ச்சனை தட்டில் 20 ருபாய் போட்ட ஒருவரை அற்ப ஜந்துவை போல பார்த்தார் அங்கு ஒரு அர்ச்சகர்.

ஏழை கோவில், பணக்கார கோவில் என்று கோவில்களுக்கு இடையே வர்க்க பேதமே இருக்கிறது போலும்

கும்பகோணம் கிராமத்து கோவிலில் கிடைத்த மனநிறைவு ஏனோ இங்கு கிடைக்கவில்லை
.
. கோவில் என்பது கல்வியை போலவே, வியாபாரமாய், ஆடம்பர பொருளாய் ஆகிவிட்டது என்று உணர்த்துவதாய் அங்கு காதுகளில் நராசரமாய் ஒலித்தது எலெக்ட்ரானிக் மணியோசை...

செய்தி # 2

"ஏலே..மாட்டுக்கு புண்ணாக்கு கூட, ஒரு பாட்டில் சாராயமும் கலந்து கொடுத்து இருக்கேன். தொட்டவன் குடலை உருவிடும்" என்று பாரதிராஜா படத்தில் ஒரு காட்சி வரும். இதுபோல நடப்பது உண்மைதான் என்கிறார் மதுரை பக்கத்தை சேர்ந்த என் நண்பர்.

பொங்கல் வரப்போகிறது. கூடவே ஒவ்வொரு தை மாதமும் வரும் ஜல்லிக்கட்டு சர்ச்சையும் இந்த முறையும் வரப்போவதாக ஒரு செய்தி தெரிவிக்கிறது.

ஜல்லிக்கட்டு போன்ற கிராம விளையாட்டுகளுக்கு தடை போடுவதை தடுக்க, லோக்சபாவில் தனி நபர் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த தனி நபர் தீர்மானம் கடந்த வெள்ளியன்று விவாதிப்பதற்கு எடுக்கப்பட இருந்தது. ஆனால், கரும்பு விவசாயிகள் பிரச்னையால், சபை திங்கட்கிழமை வரை ஒத்தி வைக்கப் பட்டதால், இந்த மசோதா இந்த வாரத்தில் எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.


இந்த மசோதாவை தமிழகத்தை சேர்ந்த எம்.பி.,க்கள் கொண்டு வரவில்லை. கோவாவைச் சேர்ந்த பிரான் சிஸ்கோ சர்தினா, ஜல்லிக்கட்டு விளையாட்டை தடை செய்ய முயற்சிப்பது, தனது மாநிலத்தில் மிகப்பெரிய அரசியல் பிரச்னையாக தலையெடுத்து இருந்ததால், இந்த தனி நபர் மசோதாவை, சபை ஜூன் மாதம் தொடங்கியவுடன் முன்மொழிந்து, அதை அலுவல்களில் இடம் பெறச் செய்தார்.அவர் முன்மொழிந்த மசோதாவில், மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட விலங்கினங்கள் கொடுமைகளை தடுக் கும் சட்டத்தில், சில திருத்தங்களை கொண்டு வந்துள்ளார். "ஜல்லிக்கட்டு விளையாட்டு நடப்பதற்கு முன் காளையின் கொம்புகளிலும், அதன் உடலுக்கும் உறைகளை அணிந்து, அதற்கு காயங்கள் ஏற்படாமல் பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.


இந்த முன்னேற்பாடுகள் சரியான முறையில் எடுக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட கலெக்டர் சான்றிதழ் வழங்கிய பிறகு தான், ஜல்லிக்கட்டு விளையாட்டை தொடங்க வேண்டும்' என்று அவர் மசோதாவில் கூறியுள் ளார். தெற்கு கோவாவில் ஜல்லிக் கட்டு விளையாட்டு காலங்காலமாக நடந்து வருகிறது. இதற்கு பெயர் "திரையோ விளையாட்டு' என்று அம்மாநில மக்கள் கூறுகின்றனர்.நெல் அறுவடை ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் நடைபெற்றவுடன், இந்த திரையோ விளையாட்டு கிராமங்கள் தோறும் நடந்து வருகிறது. விலங்கின பாதுகாவலர்கள் இந்த விளையாட்டு காளைகளுக்கு காயங்களை ஏற்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி, கடந்த சில ஆண்டுகளாக இதற்கு தடை செய்து வருவது, அந்த மாநில மக்களிடையே கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.


இது கடந்த லோக்சபா தேர்தல்களில், பெரிய அரசியல் பிரச்னையாக உருவெடுத்ததால், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரான்சிஸ்கோ சர்தினா, லோக்சபாவில் இந்த தீர்மானத்தை கொண்டு வந்துள்ளார். தமிழகத்தின் தென்மாவட்டங்கள் குறிப்பாக மதுரையில் இந்த ஜல்லிக்கட்டு விளையாட்டு மிகவும் பிரபலமானது.கடந்த ஆண்டு, இந்த விளையாட்டை தடை செய்ய விலங்கின ஆர்லர்கள் மறியல் செய்தனர். பிரச்னை சுப்ரீம் கோர்ட் வரை சென்றது. மாநில அரசு காளைகளுக்கும், விளையாட்டுகளில் ஈடுபடும் மக்களுக்கும் தகுந்த பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று உறுதிமொழி வழங்கியதால், இந்த விளையாட்டுக்கு கோர்ட் அனுமதி அளித்தது.


தமிழக எம்.பி.,க்கள் இந்த விளையாட்டுக்கு ஆதவராக நடவடிக்கை எதுவும் எடுக்காவிட்டாலும், இந்த மசோதா சபையில் விவாதத்திற்கு வரும் போது, இதற்கு எப்படி ஆதரவு தெரிவிக்கப்போகிறார்கள் என்று தெரியவில்லை என்கிறது அந்த செய்தி.


4 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிந்து சமவெளி நாகரீக காலத்திலேயே புழக்கத்தில் இருந்த பொருட்கள், தற்போதைய பாகிஸ்தானில் உள்ள மொகஞ்சதாரோவில் கடந்த 1930-களில் கண்டெடுக்கப்பட்டன. அந்த பொருட்களில் கல்லால் ஆன ஒரு முத்திரையும் அடங்கும். அந்த முத்திரையில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை சித்தரிக்கும் ஒரு சிற்பம் செதுக்கப்பட்டு உள்ளது. ஒரு காளை மாடு தன்னை அடக்க முயலும் வாலிபர்களை முட்டி தூக்கி வீசுவது போலவும், வாலிபர்கள் அந்தரத்தில் பறப்பது போலவும் அந்த முத்திரை செதுக்கப்பட்டு உள்ளது. இந்த முத்திரை 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அதாவது கி.மு. 2000ஆம் ஆண்டைச் சேர்ந்ததாக கருதப்படுகிறது என்கிறது ஒரு குறிப்பு
.
நமது கலித்தொகை போன்ற பழந்தமிழ், சங்க இலக்கியங்களிலும் ஜல்லிக்கட்டு "ஏறு தழுவுதல்' என்று
குறிப்பிட படுகின்றன. முல்லை நிலத்தில் வாழ்ந்த இடையர்களின் வாழ்வு கால்நடைகளை மையமாக வைத்தே பின்னப்பட்டிருந்தது. மாட்டை அடக்கிப் பெண்ணை மணப்பது என்ற இனக் குழு நிலையில் இருந்த ஏறு தழுவுதல், நாயக்கர் ஆட்சிக் காலத்தில் அரங்க விளையாட்டாக, ஜல்லிக்கட்டாக உருப்பெற்றது. பிரிட்டிஷ் ஆட்சியில் கூட இதைத் தடை செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்றன. ஆனாலும் மக்களின் உணர்வே அப்போதும் வென்றது.


""உண்மையில் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் பாமர மக்கள் அளவுக்கு மாட்டின் மீதும், விலங்குகள் மீதும் அக்கறை செலுத்துபவர்கள் வேறு எவரும் இருக்க மாட்டார்கள். தினசரி வாழ்க்கையும் அவர்களுக்கு மாடுகளுடன்தான் பின்னிப் பிணைந்திருக்கிறது. மாட்டுக்கு நன்றி செலுத்தி மாட்டுப் பொங்கல் நடத்தும் எளிய மனிதர்கள், கவனித்துப் பார்த்தால், ஜல்லிக்கட்டில் மாடு பிடிப்பவர்கள் பெரும்பாலும் இறப்பதில்லை. பார்வையாளர்கள்தான் இறந்து போகின்றனர். இவற்றை முறைப்படுத்தி, பார்வையாளர்களையும் மாடுபிடி வீரர்களையும் தனித்தனியாகப் பிரித்த பிறகு கடந்த மூன்று ஆண்டுகளாக அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டுகளில் எந்த உயிரிழப்பும் இல்லை!

மது அருந்திட்டு மாடு பிடிக்கிறதும், மாட்டுக்கு மது கொடுக்குறதும் தப்பு'ன்னு சொல்றது நியாயம். ஆனா, ஜல்லிக்கட்டே வேண்டாம்னு சொல்றது, கலாசாரத்தையே காலால உதைக்குற மாதிரி.கோயிலுக்குப் போறதையும், மொட்டை அடிக்கிறதையும், நல்ல நேரம் பார்க்குறதையும் விட்டுடலையே! அது போலத்தான் இதுவும். 400, 500 வருஷப் பழக்கத்தை எல்லாம் பொசுக்குனு மூட்டை கட்டிட முடியாது"

- இது ஒரு தரப்பு வாதம்.

"ஒரு மாட்டை ஒருத்தன் அடக்குறதுதான் வீரம். அஞ்சறிவுள்ள மாட்டை 20,30 பேர் சேர்ந்து அமுக்குறதுல என்னங்க வீரம் இருக்கு? நாட்டுல வெட்டுக்குத்தும் வன்முறையும் ஏற்கெனவே அதிகமாகிட்டு இருக்கு. இந்த நிலையில் மாடுகிட்ட குத்துப்பட்டு இளைஞர்கள் ரத்தம் சிந்துறதையும், சாகுறதையும் கைதட்டி, விசிலடிச்சு ரசிக்கிறது, வன்முறை மன நிலையை ஊக்குவிக்காதா? "இது வீரம், பண்பாடு, பாரம்பரியம்'னு சொல்லி, வேடிக்கை பார்த்துட்டு நீங்க போயிடுவீங்க. மகனை. கணவனை, தகப்பனை இழந்து வாழ்க்கை முழுக்க நிராதரவா இருக்கிற அந்த குடும்பங்களை யாரு காப்பாத்துவா? அரசியல் கட்சிகள் எல்லாத்துக்கும் ஒரு அணி வெச்சிருக்கிறது மாதிரி, "மாடு பிடி அணி'ன்னு வெச்சு அதுல உள்ளவங்களை மாடு பிடிக்க அனுப்பட்டும். அப்ப தெரியும், அதோட வலி என்னன்னு. பழைய காலம் மாதிரி திறந்தவெளி அரங்கத்துல ஒரு மாட்டை ஒரு நேரத்துல ஒரு மனிதன் அடக்கினா, அதை ஆதரிக்கலாம். இப்போ நடக்குறது இளைஞர்களின் உயிர் குடிக்கிற விளையாட்டு. இதை ஏத்துக்க முடியாது!"

-இது ஒரு இன்னொரு தரப்பு வாதம்

இரு தரப்பு வாதங்களையும் உங்கள் முன் வைத்து இருக்கிறேன்.இப்போது நீங்கள் சொல்லுங்கள் நண்பர்களே - ஜல்லிக்கட்டு வீர விளையாட்டா? இல்லை மிருக வதையா?

(நன்றி..இனி அடுத்த வாரம்)

-இன்பா


40 Comments:

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

இன்று கைசிக துவாதசி என்னும் ஒரு புண்ணிய தினம். பெரும்பாலான வைணவ கோயில்களில் இது விமரிசையாகக் கொண்டாடப் படும். இந்தப் புனித நாளில் பெருமாள் தரிசனம், இட்லிவடைக்கும் இன்பாவுக்கும் என் நன்றிகள்.

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

இம்மாதிரி கிராமக் கோயில்கள் பல உள்ளன. உண்மைதான்,இம்மாதிரி கோயில்களில் கிடைக்கும் மன நிம்மதி பெரிய கோயில்களில் கிடைப்பதில்லை.

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

// 400, 500 வருஷப் பழக்கத்தை எல்லாம் பொசுக்குனு மூட்டை கட்டிட முடியாது"
//
the so called "பார்ப்பனீய ஆதிக்க"மும்தான் பழமையான ஒன்று. அதை மட்டும் ஏன் எதிர்க்க வேண்டும்? ஜல்லிக்கட்டுவில் மனிதனுக்கு மட்டுமல்ல, கலந்து கொள்ளும் மாடுகளும்தான் வதை செய்யப் படுகின்றன, எனவே, ஜல்லிக்கட்டு தடை செய்யப் பட வேண்டியதுதான். இதில் கொடுமை என்னவென்றால், சென்ற ஆண்டு, இந்த வழக்கு நீதிமன்றத்தில் வந்த போது, புராண காலத்திலேயே கண்ணன் காளைகளை அடக்கி நப்பின்னை என்ற பெண்ணை மணந்தான் என்று தமிழக அரசு வாதாடியது. தனக்கு வேண்டுமென்றால், புராணங்கள் உண்மை, இதுதான் "தல"யின் நாத்திக உணர்வு.

வீரராகவன் said...

அசைவர்கள் அதிகமுள்ள நாட்டில், உயிர் காருண்யம் பற்றியோ, உணர்ச்சிகளையும் வலியையும் மற்றவர் புரியும்படி வெளிப்படுத்த இயலாத விலங்கினங்களை துனபுறுத்துவதை வீரம் எனக் கருதுபவரிடம் சாதுவான பசுவை மூர்க்கமாக மாற்றி, அமைதியாக குப்பையை கிளறும் சேவலை சண்டையிட்டு சாவதை வேடிக்கை பார்க்கும் மூடரிடம் நாம் முறையிடுவது கோவணம் கட்டாத ஊரில்... இப்படிக்கு, தற்போது கல்யாணங்களில் கூட சைவ சாப்பாடு கிடைக்காமல் வாடுபவர் சங்கம்.

vedanarayanan said...

சாய்,
thank you for informing about the ஸ்பெஷல் துவாதசி.
And தேங்க்ஸ் டு இட்லிவடை for the ராம தரிசனம். மொதல்ல அனந்த சயனமோ என்று நினைத்தேன். But ராமர் in சயனம், surprising .

நம்ம கோவில்களை மார்க்கெட் பண்ணியே , நம்ம TN govt ஏகப்பட்ட நிதி சேர்க்கலாம் என்று பல நேரங்களில் எண்ணுவதுண்டு. Think of this sitution , you have a version of god for downtime worshipping. we have gods for everything .

And poor temples are bound to exist until economic situation improves for individuals at towns. other option is Govt should promote tourism around kovil. For that they have to spend money.

But asian paints அடிச்சு, பழமை சின்னத்த கொலை பண்ணறாங்க. ஒரு அறிவே கிடையாது. தஞ்சாவூர் temple is preserved well .

ஜல்லிக்கட்டு...ஞானி இதை பற்றி ஏகப்பட்டது எழுதி விட்டார். so படிக்கவே சோம்பலா இறுக்கு. Anyway பொங்கல் வருகிறது, so யாருக்கும் காயம் படமா இருந்த சரி தான்.

Guru said...

anbulla idlyvadai,

sundena rendu pathivil eluthu pizhaikal athikam.ellam valla perumal porutharuzhvaaraaga.

melum andha kovil mugavari allathu archakarin tholaipesi enkalaiyum kuripittal matravarkallukku payan ullathaaka irukkum..

jallikkattu thodarbaana sarcha i thamilakathil vazhakkam pol namadhu thesiya viyathiyaal peedikkappattulathu. meendum january 1m thethi muthal case pottu pinnar samadhaanam aguvaarkal.
kalaignar kavithai veru eluthuvaar..

jallikkatu veeravilayattu enkira pozhuthu nam paarambariyathai kaapathil enna thavaru? jallikaatu anumathikkapada vendum.

யதிராஜ சம்பத் குமார் said...

மிக அருமையான இரு கட்டுரைகளை வழங்கிய இன்பாவிற்கு பாராட்டுக்கள்.


தஞ்சை மற்றும் கும்பகோணத்தைச் சுற்றிலும் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட எண்ணிலடங்காத கோவில்கள் உரிய பராமரிப்பின்றி பின்னமாகிக் கிடக்கின்றன. தமிழக அரசாங்கத்தில் அறநிலையத்துறை என்ற ஒன்று எதற்கு இருக்கிறது என்பது புதிராகவே இருக்கிறது. தவிர இவ்வாறான கிராம கோவில்களிலிருந்து அறநிலையத் துறையைச் சேரும் உண்டியல் வருமானம் அதிகம் இல்லாமையால் அரசாங்கம் அவற்றைக் கண்டு கொள்வதில்லை என்பது கசப்பான உண்மை. கடவுளும் சம்திங் கொடுத்தால்தான் பராமரிக்கப்படுவார். ஆனால் இவற்றையெல்லாம் நொந்து கொள்வதில் பிரயோஜனம் இல்லை. அரசாங்கமும் அதனை வழிநடத்துபவர்களும் ஹிந்து கோவில்களையும், தெய்வங்களையும் நிந்திப்பவர்களாக இருப்பதால் அவற்றிற்கு விடிவுகாலத்தை கடவுளர்களே தேடிக் கொண்டால்தான் உண்டு.

அடுத்தமுறை இன்பா விடுமுறைக்கு வரும்போது தவறாமல், கும்பகோணம் அருகே இருக்கும் திருவாலி மற்றும் திருநகரி ஆகிய இரட்டை ஸ்தலங்களை தரிசித்து வர வேண்டும். திருநகரி, திருமங்கையாழ்வாரின் ஜென்மஸ்தலம். அங்கிருக்கும் அவரது விக்ரஹம் பல்லாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒன்று....பார்த்தால் மனித ஸ்ருஷ்டி போன்றே இருக்காது.

யதிராஜ சம்பத் குமார் said...

முற்காலத்தில் ஜல்லிக்கட்டு வீர விளையாட்டாக இருந்ததோ என்னவோ!! ஆனால் இப்போதைய ஜல்லிக்கட்டை வீர விளையாட்டு என்று கூறுவது மிகவும் அபத்தம். சுற்றிலும் பல்லாயிரக்கான ஜனங்களுக்கிடையே ஒரு மாட்டை பலர் விரட்டுவது எப்படி வீரத்தில் சேர்த்தியோ?? அதனை நடத்துபவர்களுக்கும், ஆதரிப்பவர்களுக்குமே வெளிச்சம்.வருடந்தோரும் பல உயிர்களைப் பறிக்கும் இந்த ஆபத்தான அபத்தத்தை தடை செய்ய அரசிற்கு என்ன தயக்கமோ தெரியவில்லை. இதில் மாடுகளுக்கு சாராயம் வேறு!!

தயக்கமில்லாத கடும் நடவடிக்கை தேவை!!

ஜெயக்குமார் said...

உண்மைதான்..எத்தனையோ கோவில்கள் பராமரிப்பின்றி அழிய இருக்கின்ற கோவில்களில் மொசைக் தரையும், எலெக்ட்ரானிக் மணீயோசையுமாக ஏதோ கோவில்களின் மாடல்களைப் பார்ப்பதுபோல் இருக்கிறது.

திண்டுக்கல் அருகிலிருக்கும் தாடிக்கொம்பு சௌந்திரராஜப் பெருமாள் கோவிலுக்குச் சென்று வாருங்கள். அங்கிருக்கும் சிற்பங்கள்போல அழகான சிற்பங்களை திண்டுக்கல் மவட்டத்தில் எந்ந்தக் கோவிலிலும் பார்க்க இயலாது.

------------

ஜல்லிக்கட்டு நிச்சயம் வீரவிளையாட்டுதன். அவசியம் இருக்க வேண்டும், ஆனால் முறையான பார்வையாளர்களின் பாதுகாப்புடன்.

maddy73 said...

Thanks for the temple message. Nice photo attached. I had the opportunity of having dharshan at 'pullaboothamkudi' & 'Adhanur' way back in ..early 90s.

Kameswara Rao said...

Inba

Nice fact about our temples.. I had the pleasure of visiting temples in and around Kumbakonam along with my friend and its still etched in my memory. The Govt has not taken any care in protecting
they have their business agenda all the time and who has the time in the world to look after god and his temples you should visit thiruvelangadu also the experience was really nice to me..
Kamesh

மானஸ்தன் said...

very thought provoking post. இரண்டு விஷயங்களும் நன்கு எழுதப்பட்டுள்ளன.
பாராட்டுகள் இன்பா.

glad to see you back in form.

ஸ்ரீராம். said...

தூணிலும் துரும்பிலும் இருக்கக் கூடிய கடவுள் என் நவீனக் கோவிலிலும் புராதனக் கோவிலிலும் இருக்க மாட்டார்?
ஆனால் புராதனங்களில் கிடைக்கும் ஒரு அமைதி, ஒரு சொல்ல முடியாத உணர்வு இங்கெல்லாம் கிடைப்பதில்லைதான்....

ஸ்ரீராம். said...

ஜல்லிக் கட்டு - வீரமான மிருக வதை.

Anonymous said...

"அடுத்தமுறை இன்பா விடுமுறைக்கு வரும்போது தவறாமல், கும்பகோணம் அருகே இருக்கும் திருவாலி மற்றும் திருநகரி ஆகிய இரட்டை ஸ்தலங்களை தரிசித்து வர வேண்டும். திருநகரி, திருமங்கையாழ்வாரின் ஜென்மஸ்தலம். அங்கிருக்கும் அவரது விக்ரஹம் பல்லாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒன்று....பார்த்தால் மனித ஸ்ருஷ்டி போன்றே இருக்காது"

Please inform the route to go to this temples.Even though I am from Tanjore Dt , I am not aware of this temple.Please give information about the route to go to this temples.

மணிகண்டன் said...

அருமையாக பழமை மாறாமல் maintain செய்யப்படும் பழங்கோவில் போகவேண்டுமென்றால் திருவானைக்கோவில் சென்று வாருங்கள் :)- நீங்கள் எதிர்ப்பார்க்கும் அமைதி கிடைக்கலாம் !

Anonymous said...

The case against Jallikattu is being filed by a non-Hindu.

If it were filed by some Hindu, especially by someone belonging to Hindu organisations, there will be lot of noise about 'Hindutva', 'Brahminism, anti-secularisms and other things at an All India level. Muka would have written a Kavithai about Parpaneeyam etc., Even communists would have jumped in in support.

-Praveen

Anonymous said...

Dear IdlyVadai,
Can you publish an awareness article on Environment. According to a recent study by Space Application Centre in Current Science journal, a landmass of 80 million hectraes almost a quarter of India's 328-million hectare land area is under desertification. The desertification/land degradation status mapping of the entire country is based on scientific methods. The study noted that India accounted for 2.4 percent of the global land mass, but supported about 16.7 percent of the world's population and 18 percent of its cattle. Hence there is tremendous pressure on landbased resources. India's water needs were set to double by 2030, which could dry up its river basins. Demand for rice, wheat and sugar will push India's huge agricultural sector to consume 1.5 trillion cubic metres (53 trillion cubic feet) of water by 2030, almost double that of China.

I request IdlyVadai to invite all its readers for a debate on "contribution of individuals towards this".

Anonymous said...

" Please inform the route to go to this temples.Even though I am from Tanjore Dt , I am not aware of this temple.Please give information about the route to go to this temples."

It is near to sirkazhi , from sirkazhi you can go to thiruvali , thirunagari.

Anonymous said...

திரு.தேசிகன் கூட இதை பற்றி எழுதியிருக்கார்.

http://www.desikan.com/blogcms/?item=149

Anonymous said...

//இதே சமயத்தில், நான் சென்னையில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்று இருந்தேன். ஒரு புகழ் பெற்ற கோவிலின் ஜூனியர் கோவில் என்றார்கள். ஏ.சி வழியும் கோவில். வழுவழு மொசைக் தரை//

which Temple is this...plse let us know.....

Anonymous said...

// மணிகண்டன் said...

அருமையாக பழமை மாறாமல் maintain செய்யப்படும் பழங்கோவில் போகவேண்டுமென்றால் திருவானைக்கோவில் சென்று வாருங்கள் :)- நீங்கள் எதிர்ப்பார்க்கும் அமைதி கிடைக்கலாம் ! //

மிக மிக சரி.

அனால் அது திருவானைக்கோவில் அல்ல, அதன் பெயர் திருவானைக்காவல் :)

Anonymous said...

திருவானைக்காவல் இருக்குமிடம் திருச்சி . அனைவரும் அதை ஜம்புவனமாக, அதாவது நாவல்வனமாக (அதாவது ஊரிலும் மற்றும் ஊரை சுற்றியும் ) மறுபடியும் மாற்ற என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பதை ஆலோசிக்க வேண்டுகிறேன்.

can we start discussing this in trichyportal or somewhere or any ideas ?

- Sami

Soma said...

it would be great if you can give the detailed route & if possible contact number for the temple or archagar so that we can easily reach the temple & for the persons who are abroad can ask their parents / relatives to go their. Also if there are ny numbers to the contactable person there we can ask them to perform few pooja's also. So kindly help us... May be send the contact number to my mail id if this cannot be published here.. Thx so much for idlyvadai & inba...

krish3898 said...

திருநகரி, திருமங்கையாழ்வாரின் ஜென்மஸ்தலம். அங்கிருக்கும் அவரது விக்ரஹம் பல்லாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒன்று....பார்த்தால் மனித ஸ்ருஷ்டி போன்றே இருக்காது.
yes,
around sirkali there is 11 vinava temple,all are very famous,and every year Thai Ammavasai,very famous, திருமங்கையாழ்வா,visit all these 11 temple this Thai ammavasi,and gathered in Nangoor,.
Bus Route is,
Sirkali - Nangoor.
or.
Mayavaram - nangoor.
and there is special buses will arrange during Thai Ammavasi.
I think this write time, இன்பா
wrote this artical,because THAI AMMAVASI- jan mid to feb.2010.date next post I will let you know.
and I was born கைசிக துவாதசி ......

krish3898 said...

even anybody need more information about 11 vinava temple around sirkali please post here.

பார்ப்பனீய ஆதிக்க"மும்தான் பழமையான ஒன்று????.

Anonymous said...

The Chennai temple he talked about is the Venkatachalapathy temple in T.Nagar. I also went to that temple and I felt more of business organization than a temple

cho visiri said...

one friend stated'
//"The Chennai temple he talked about is the Venkatachalapathy temple in T.Nagar. I also went to that temple and I felt more of business organization than a temple"//

The statement may be true. But one must appreciate that the Temple is better known as TTD information Centre. the authorities do not charge any thing for sitting for hours together if medidation/prayer is the only purpose.
Secondly, such of those temples which find it very hard to meet the basic needs, (pooja, naivedyam etc.,), may write to TTD, Tirumala, for financial assistance and I am told the great TTD renders such assistance.
Please understand that TTD Information Centre need not be taken to be a temple run by any organisation with profit motive.
This brief is limited to TTD information centre.

நாரத முனி said...

parisu vanthiruchooooiiii

krish3898 said...

Here can find the all details about temple & contact NOs.

http://temple.dinamalar.com/KoilList.aspx?cat=8

Balaji said...

I think Lord Rama in 'Thirupullani' is also in 'Sayana kOlam'.

மர தமிழன் said...

உண்மைதான் பச்சை வயல் புல்வெளியும், நுரைத்து ஓடும் காவிரியும் (அசுத்தமில்லாத) அதன் கரைகளும், கும்பகோணம் மற்றும் அதனை சுற்றி உள்ள கோவில்களுக்கு செல்லும் வழியும் நம்மை சோழ சாம்ராஜ்யத்துக்கே இட்டு செல்லும். முக்கியமாக சோழர் கோவில்களில் சிலைகளின் அளவுகள் மிகவும் பிரமிக்க தக்கவை. தமிழகத்தில் பல கோவில்கள் கேட்பாரற்று கிடக்கின்றன... அதன் புராதன பழமை தெரியாமல் (நாம தான் 1000 வருஷ ஓவியங்களின் மேலே சுண்ணாம்பு அடிக்கரவங்களாச்சே) மக்கள் எங்கெங்கோ அலைந்து கொண்டிருக்கிறார்கள். உலக டூர் போறதுக்கு முன்னாடி உள்ளூர்லேயே பாக்க வேண்டிய, தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் எவ்ளவோ இருக்கு (கோவில்கள் மட்டும் அல்ல). மேலும் கோவில் மற்றும் அதன் நிர்வாகங்கள், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு உபசரிப்பு என பல விஷயங்களில் பெங்களூர் கோவில்கள் மிகவும் அருமையாக இருக்கிறது (நான் பார்த்தவரையில்) அலங்காரங்கள், பிரசாதம், சுத்தம் என ரொம்பவும் சிறப்பாக இருக்கிறது.
====================
எனக்கு என்னவோ இப்போ இருக்கிற சூழ் நிலையில நம்ம கில்லி விஜய் மாதிரி எவன் ஒருவ(ர்)ன் ATLEAST 50 பேரயாவது ஒண்டிக்கு ஒண்டி சண்ட போட்டு ஜெயிச்சு வராங்களோ அவங்கள மாடு பிடிக்கிறதுக்கு தகுதி ஆனவங்களா SELECT பண்ணலாம். அந்த மாதிரி செலக்ட் ஆகறவங்க 50 பேரோ 100 பேரோ ஒரு மாட்ட அடக்கட்டும் - அதுல ஒரு JUSTIFICATION இருக்கும். மத்த படிக்கு இது வீர விளையாட்டுன்னா I AM SORRY,

Soma said...

Its the exact address...
http://temple.dinamalar.com/New.aspx?id=394

Very useful dinamalar link by Balaji.. Thx for it.....

Soma said...

Very useful dinamalar link by Mr.Krish.. The exact link is http://temple.dinamalar.com/New.aspx?id=394

vedanarayanan said...

என்ன இட்லி வடை சார்,
ராமரை பற்றி எழுதிய உடனே வனவாசம் அனுப்பி விட்டாரா? ஒரு நியூ போஸ்ட் காணவில்லை.

அமுதா கிருஷ்ணா said...

இரண்டு முறை ஜல்லிக்கட்டு அலங்காநல்லூரில் பார்த்து இருக்கிறேன். பார்வையாளர்கள் தான் காயம் அடைகிறார்கள். மாடுகளை மிகவும் பாசமுடன் பார்த்து கொள்கிறார்கள்.ஆனால்,ஆண்டாண்டு காலமாய் வரும் வழக்கத்தினை திடீரென்று விட முடியாது..சாமி குத்தம் என்று நினைக்கிறார்கள்...

Anonymous said...

Hi, IV:

It is typically unIdlyvadailike.
No further news/views/comments
after "Sundaynaa rendu vimarsanam"? R u out of station
or have stopped for some reason?

Guru said...

Vandhavasi,Tiruchendur Therthal,kaarthigai deepam,kodambakkathil kalaignar kudumbathin adutha vaarisu

Idlyvadai Thoongukiratha??

krish3898 said...

THAI AMMAVASAI.
15/01/2010.
SO இன்பா OR ANY BADY WANT TO SELL ALL PERUMAL IN ONE PLEASE TRY VISIT,NANGOOR,WHEN YOU REACH SIRKALI,THERE IS SPECIAL BUS FOR NANGOOR,THIS BIG FESTIVAL,
YOU CAN SEE ALL 11 PERUMAL IN ONE PLACE, 11 KARUDASEVAI...
TRY TO MAKE IT, WRITE HERE HOW IT IS.

ஜெயக்குமார் said...

// ஜெயக்குமார் said...

திண்டுக்கல் அருகிலிருக்கும் தாடிக்கொம்பு சௌந்திரராஜப் பெருமாள் கோவிலுக்குச் சென்று வாருங்கள். அங்கிருக்கும் சிற்பங்கள்போல அழகான சிற்பங்களை திண்டுக்கல் மவட்டத்தில் எந்ந்தக் கோவிலிலும் பார்க்க இயலாது. //

ஜெயமோகன் பாத்துட்டு வந்து கட்டுரையும் எழுதிட்டார்..

http://jeyamohan.in/?p=5412