பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, November 26, 2009

26/11


ஐம்பது நிமிஷத்துக்கு குறைவாக ஓடும் இந்த வீடியோவை எல்லோரும் ஒரு முறை பார்க்க வேண்டும்.


26/11 - ஓராண்டு நிறைவு - யதிராஜ சம்பத் குமார்

முன்னுரை:
2008, நவம்பர் 26 துவங்கி மூன்று நாட்கள், நவம்பர் 28 வரை, பாரத வரலாற்றின் மறக்க முடியாத கருப்பு தினங்கள். இன்றோடு ஒரு வருடம் பூர்த்தியாகிறது. சென்ற வருடத்தின் இதே தினத்தில் மும்பை நகரம் பற்றி எரிந்து கொண்டிருந்த்து. சத்ரபதி சிவாஜி ரயில்நிலையம், தாஜ் ஓபராய், ட்ரைடெண்ட் ஹோட்டல்கள் மற்றும் நாரிமன் இல்லம் ஆகியவை பிணக்காடகவும், புகை மண்டலமாகவும் காட்சியளித்தன. அநேகமாக பத்திரிக்கைகள் முதலாமாண்டு நினைவஞ்சலி கொண்டாடும். அரசியல் தலைவர்கள் துவங்கி அனைவரும் துக்கம் அனுஷ்டிப்பார்கள். ஏதோ அவர்களால் முடிந்தது அவ்வளவுதான்!!

தீவிரவாதிகள் ஊடுருவல்:
பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற “லஷ்கர்-ஈ-தொய்பா” அமைப்பைச் சார்ந்த சுமார் எட்டு தீவிரவாதிகள், பாகிஸ்தானிலிருந்து அரபிக் கடல் மார்க்கமாக மும்பைக்குள் ஊடுருவினர். இதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே குஜராத் கடலோரக் காவல்படையினருக்கு இவ்வாறு ஊடுருவக்கூடும் என உளவுத் துறைத் தகவல் கிடைத்து, அதனை குஜராத் அரசாங்கம் மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்ற பிறகும், மத்திய அரசின் மெத்தனத்திற்கும், அலட்சியத்திற்கும் கிடைத்த சாட்டையடி இந்த தாக்குதல்கள். சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் (விக்டோரியா டெர்மினஸ், V.T), தாஜ் மற்றும் ட்ரெடெண்ட் ஹோட்டல்கள், நாரிமன் இல்லம் ஆகியவற்றில் புகுந்த நவீன ரக ஆயுதங்கள் தரித்த தீவிரவாதிகளின் சரமாரியான துப்பாக்கிச் சூட்டில் 179 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்; 400க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். 179 பேரில் சுமார் 8 பேர் அயல்நாட்டு சுற்றுலாப்பயணிகள். தவிர, ஹேமந்த் கர்கரே, விஜய் சாலஸ்கர், அஷோக் காம்தே போன்ற காவல்துறை உயர் அதிகாரிகள் தீவிரவாதிகளின் வெறியாட்ட்த்திற்கு பலியாயினர்.


உள்நாட்டுப் பாதுகாப்பில் மெத்தனம்:

கடந்த ஆறு ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் தொடர்ந்து, தில்லி(இருமுறை), ஜெய்ப்பூர், ஹைதராபாத், மும்பை (மின்சார ரயிலில்), மாலேகான், உத்திரப் பிரதேசம் (நீதிமன்ற வளாகங்கள்), அஹமதாபாத், பெங்களூர் என வட தேச யாத்திரை மேற்கொள்வது போல் தீவிரவாதிகள் அனைத்து இடங்களிலும் குண்டு வைத்து அப்பாவி மக்களைக் கொன்றனர். இவையத்தனைக்கும் அரசின் நடவடிக்கை வெறும் அறிக்கைகளின் வாயிலான கண்டனங்கள் மற்றும் வாய்ச் சவடால்கள் மட்டுமே. 2008-இல் அனைத்திற்கும் சிகரம் வைத்தாற் போன்றதான மிகப்பெரிய தாக்குதல். இந்த ஆறு ஆண்டுகளில் இந்தியாவின் உள்துறையமைச்சர் பொறுப்பிலிருந்தவர் திரு.சிவராஜ் பாட்டீல். ஒவ்வொரு குண்டு வெடிப்பிற்குப் பிறகும் இவரிடமிருந்து தவறாமல் ஒரு கண்டனமும், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென்ற சம்பிரதாயப் பேச்சையும் எதிர்பார்க்கலாம். பிரதமரும் தன் பங்கிற்கு தான் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டங்களில், குறிப்பாக சுதந்திர தின மற்றும் குடியரசு தின உரைகளில், தீவிரவாத்திற்கெதிராக இரும்புக் கரம் கொண்டு நடவடிக்கை எடுப்போம் என சூளுரைப்பார். ஆனால் இதுவரை ப்ளாஸ்டிக் கரம் கொண்டு கூட எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவ்வளவு மதச்சார்பின்மை மயக்கம் மற்றும் சிறுபான்மை ஓட்டு பயம். இவ்வளவு குண்டு வெடிப்பு நடந்த பிறகும் உள்நாட்டுப் பாதுகாப்பில் எவ்வித அக்கறையும் காண்பிக்கவில்லை இந்த மெத்தன அரசு. இருக்கவே இருக்கிறது கண்டனம்...அது தெரிவிக்கப்பட்டால் அடுத்த குண்டு வெடிப்பு நிகழும் வரை ஆபத்தில்லை. தீவிரவாத்திற்கெதிரான நடவடிக்கை அதோடு சரி.

இத்தீவிரவாதிகளுக்கெதிரான தாக்குதல்களில், தீவிரவாதிகளின் ஆயுதங்களோடு, நமது பாதுகாப்புப் படையினரின் ஆயுத பலத்தை ஒப்பிட்டால், தீபாவளித் துப்பாக்கி கூட சற்றே பலம் வாய்ந்ததுதான். (விஜய் டிவியில், கமலஹாசனுடன் நேயர்களும் பங்குபெற்ற
உன்னைப் போல் ஒருவன் படத்தைப் பற்றிய ஒரு நேர்காணலில், மும்பை தாக்குதலை நேரில் கண்ட ஒருவர் கூறியது, “As a citizen of india, நான் என்னோட tax-a ஒழுங்கா கட்டலாம். ஆனா பாதுகாப்புப் படையினருக்கு ஆயுதம் வாங்கித் தர முடியுமா?? எவ்வளவு நிதர்சனம்?)

சமீபத்தில், இத்தாக்குதலில் கொல்லப்பட்ட காவல்துறை அதிகாரியான ஹேமந்த் கர்கரேவின் மனைவி, அஜ்மல் கஸாப் இன்னமும் தூக்கிலிடப்படாத்து குறித்து தனது கடும் கண்டனத்தையும், அதிருப்தியையும் தெரிவித்தார். அதெல்லாம் நமது அரசிடம் எடுபடாது. செவிடன் காதில் ஊதிய சங்கு போலாகும் என்பது தெரிந்ததே. அப்ஸல் குரு தூக்கிலிடப்படாத்து தொடர்பாக, பாராளுமன்றத் தாக்குதலில் உயிர்நீத்த ராணுவ வீரர்களை கெளரவிக்கும் பொருட்டு அளிக்கப்பட்ட மெடல்களை, உயிர்நீத்தவர்களின் உறவினர்கள் ஜனாதிபதியிடம் திருப்பியளித்தனர். இது அரசிற்கு மாபெரும் வெட்க்க்கேடு மற்றும் தலைகுனிவு. இதற்கே அசைந்து கொடுக்காத அரசு, ஹேமந்த் கர்கரேவின் மனைவியின் கண்டனத்திற்கு அஞ்சும் என்று எண்ணினால் நாமல்லவோ மூடர்கள்?? சிறுபான்மை ஓட்டுவங்கியை விட ஹேமந்த் கர்கரேவின் உயிரென்ன அவ்வளவு பெரிதா?? மேலும் ஹேமந்த் கர்கரே அணிந்திருந்த குண்டு துளைக்காத உடையை பார்க்கவேண்டுமெனவும், அதன் தரம் குறித்து அறிக்கை தரவேண்டுமெனவும், தகவல் அறியும் உரிமைச் சட்ட்த்தினடிப்படையில் வினவியதற்கு, மஹராஷ்டிர அரசு மிகவும் மெத்தனமாக, அவ்வுடை தொலைந்து விட்டது என பதிலளித்துள்ளது. இவர்களை நம்பிதான் இந்திய ஜனநாயகம் இயங்கி வருகிறது என்பதை நினைத்தால் வேதனைதான் மிஞ்சுகிறது.

மீடியாக்களின் பரோபகாரம்:

இந்த தீவிரவாத தாக்குதல்களில் மீடியாக்களின், குறிப்பாக வட இந்தியா ஆங்கில செய்திச் சானல்களின் பங்கு அதி முக்கியத்துவம் வாய்ந்த்து. பொதுவாகவே இந்த செய்தி ஸ்தாபனங்களுக்கு நல்ல விஷயங்கள் எங்கு நடைபெற்றாலும், எதுவுமே தெரிய வராது. ஆனால் இது போன்ற அசம்பாவிதங்கள் எங்கு நடந்தாலும்/நடக்கப் போகிறதென்றாலும் முன்கூட்டியே ஆஜராகிவிடுவர். அதே போன்று இந்த தாக்குதல்களை கிரிக்கெட் போட்டிகளை நேரடி ஒளிபரப்பு செய்வது போன்று, லைவாக கமெண்டரிகளுடன் ஒளிபரப்பு செய்தனர். ஹோட்டல்களின் உள்ளே இயங்கும் தீவிரவாதிகளின் நடவடிக்கைகள், அவர்களை முறியடிக்க வெளியே காவல்துறையினரும், துணை ராணுவமும் என்னென்ன வியூகங்கள் வகுக்கின்றனர், மேலும் காவல்துறையினர் எது மாதிரியான ஆயுதங்கள் வைத்திருக்கின்றனர் என்பது உட்பட அனைத்து விஷயங்களையும் நேரடியாக ஒளிபரப்பினர். இவ்வகையில் தீவிரவாதிகளுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் பேருதவி புரிந்தனர். சில மணி நேரங்களிலேயே நடந்து முடிந்திருக்க வேண்டிய விஷயம், இவர்களின் பரோபகாரத்தால் மூன்று நாட்களுக்கு நீடித்த்து. தீவிரவாதிகள் வசமிருந்த அதிநவீன மொபைல்கள் மற்றும் சாட்டிலைட் உபகரணங்கள் மற்றும் ஹோட்டல்களுள் பொருத்தப்பட்டிருந்த தொலைக்காட்சிகளின் வாயிலாக வெளியே நடைபெறும் சம்பவங்கள் மற்றும் ராணுவத்தின் வியூகங்கள் உடனுக்குடன் தெரியப்படுத்தப்பட்ட்து. மீடியாக்களின் இந்த பேருபகாரம் இஸ்ரேல் உட்பட பல உலக நாடுகளால் காறி உமிழப்பட்ட்து.

சில சம்பிரதாயங்கள் மற்றும் பரிகாரங்கள்:

இது போன்ற அசம்பாவிதங்கள் நடந்தால், அதையொட்டிய சம்பிரதாயங்களும், பரிகாரங்களும் நடப்பது நமது தேசத்தில் தொன்று தொட்ட ஒரு வழக்கம். எதிர்க்கட்சிகள் ஆளுங்கட்சிகளுக்கு கண்டனம் தெரிவிப்பதும், ஆளுங்கட்சி இதை சும்மா விடமாட்டோம் என்று வசனம் பேசுவதும் வழக்கமே! அதையொட்டி பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஆளுங்கட்சியினரை பலமாக விமர்சனம் செய்தன. இவ்வாறான சம்பிரதாயங்கள் ஒருபுறம் நடக்க, இதற்குண்டான பரிகாரங்களில் காங்கிரஸ் முனைந்தது. உள்துறையமைச்சர் ஷிவராஜ் பாட்டீல், மஹராஷ்டிர முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் மற்றும் அவரது செயலர் R.R.பாட்டீல் போன்றோர் பதவி விலகினர்/விலக்கப்பட்டனர். ஏதோ அவர்களால் முடிந்த நடவடிக்கை இவ்வளவுதான். இதற்கு மேல் எதிர்பார்த்தால் அது நமது பிசகு.


நடவடிக்கைகள்:

இத்தாக்குதல்களின் போது உயிருடன் பிடிபட்ட ஒரே தீவிரவாதி அஜ்மல் கஸாப். நவம்பர் 28 முதல் 30 வரையிலான தாக்குதல்களுக்கான இவன் மீதான குற்றப்பத்திரிக்கை ஆற அமர 2009, மே 9 ஆம் இதற்காக மும்பையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஆரம்பத்தில் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்த இவன் ஜூன் மாத இறுதியில் தனது குற்றங்களை ஒப்புக் கொண்டு மன்னிப்பும் கோரினான். இதற்கிடையில் பாகிஸ்தான் அரசாங்கம், அஜ்மல் கஸாப் தங்கள் தேசத்தவன் அல்ல என்று சாதித்தது. இந்திய அரசாங்கம் கிட்ட்த்தட்ட கெஞ்சி மன்றாடியது என்றே சொல்லலாம். பிறகு ஒருவாறாக, பாகிஸ்தான் உள்துறையமைச்சர் ஷெரியர் ரஹ்மான், ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் அஜ்மல் பாகிஸ்தானைச் சேர்ந்தவந்தான் என்றும், இச்சதிக்கான திட்டங்கள் அனைத்தும் பாகிஸ்தானிலேயே தீட்டப்பட்டன என்றும் பகிரங்கமாகத் தெரிவித்தார். இதற்கு மறுதினமே இவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். உண்மை எப்போதுமே சுடுமென்பதற்கு இது ஓர் உதாரணம். இதற்குப் பிறகு பாகிஸ்தான் அரசாங்கம் தனது பிடிவாத்ததை இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. சிவராஜ் பாட்டீல் பதவி விலகிய பிறகு, உள்துறையமைச்சராக பதவியேற்ற ப.சிதம்பரம் அவர்களும், மன்மோகன் சிங் அவர்களும் இவ்விஷயம் தொடர்பாக அமெரிக்கா சென்று வந்ததுதான் மிச்சம். நம் நாட்டுப் பாதுகாப்பு தொடர்பான விஷயத்திற்கு அமெரிக்காவிடமிருந்து எவ்வகையான தீர்வு எதிர்பார்க்கிறார்கள் என்பது இந்திய அரசிற்கே வெளிச்சம். ஆனால் அமெரிக்க அரசோ ஒருபுறம் பாகிஸ்தானை “டெரர் ஸ்டேட்” என வர்ணித்துக் கொண்டே, மற்றொரு புறம் பாகிஸ்தானுக்கு ஆயுத உதவியும், நிதியுதவியும் மிக தாராளமாக வழங்கி வருகிறது. அதுவும் ஒபாமா பதவியேற்ற பிறகு இந்நிதியுதவிகள் மிகவும் தாராளமாக வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிதியுதவிகள் பாகிஸ்தானின் உளவு மற்றும் இந்தியாவிற்கு வேட்டு வைக்கும் அமைப்பான ISI மூலம் தீவிரவாதிகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது என்றும் பரவலாக குற்றச்சாட்டு இருக்கிறது. இதற்கு அமெரிக்கா இன்றுவரை மெளனம் ஒன்றையே பதிலாக அளித்து வருகிறது.

இத்தக்குதல்களுக்கு மூளையாகச் செயல்பட்ட்து லஷ்கர்-ஈ-தொய்பாவின் தலைவன் “ஹஃபீஸ் மொஹமது சயீத்” என்பது தெரிய வந்த பிறகு அவனைக் கைது செய்யுமாறு பாகிஸ்தானிடம் "கெஞ்சும் படலம்" துவங்கியது. ஆனால் பாகிஸ்தான் இதற்கெல்லாம் அசைந்து கொடுப்பதாக இல்லை. ஹபீஸ் சயீத் பாகிஸ்தானிலேயே இல்லை என ஒரேடியாக மறுத்தது பாகிஸ்தானிய அரசாங்கம். பிறகு அமெரிக்கா மூலமாக பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுக்கப்படவே, ஹபீஸ் மீது ஒரு சிறு வழக்கைப் பதிவு செய்து பெயருக்காக வீட்டுக் காவலில் வைத்தது. அதுவரை பாகிஸ்தானிலேயே இல்லை என்று பாகிஸ்தானால் மறுக்கப்பட்டு வந்த ஹபீஸ் எவ்வாறு திடீர் பிரவேசமாக வந்தான் என்பது பாகிஸ்தானுக்கே வெளிச்சம். இதிலிருந்தே பாகிஸ்தானின் பித்தலாட்டமும், அவர்களின் இந்தியாவிற்கெதிரான “ஜிஹாத்” தும் மிகத் தெளிவாக விளங்கும். இந்த நாடகத்தின் ஒருசில நாட்களுக்குப் பிறகு ஹபீஸ் வீட்டுக்காவலிலிருந்து விடுதலை செய்யப்பட்டான்


இதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்த பிறகு, ஹபீஸ் வீட்டுக்காவலிலிருந்து தப்பித்து விட்டதாக பாகிஸ்தான் புளுகியது. ஆனால் பாகிஸ்தானில் ஹபீஸ் மிகவும் சுதந்திரப் பறவையாகத் திரிவது பத்திரிக்கைகளில் அடிபட்ட வண்ணம் இருக்கிறது. நேற்றைய முந்தினம் ஒரு மசூதி ஒன்றில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய ஹபீஸ் சயீத், பாகிஸ்தான் அமெரிக்காவின் அடிமையாகச் செயல்படுவதாகவும், நாம் சரியான வழியில் பயணித்தால் இறைவன் நம்மை (இஸ்லாமியர்களை) உயர்ந்த ஸ்தானத்திற்கு உயர்த்த உறுதியளித்துள்ளார் என மூளைச் சலவை பேச்சுக்களை நிகழ்த்தி வருகிறான். இவையத்தனையையும் அமெரிக்கா உட்பட அனைத்து உலக நாடுகளும் கவனித்துக் கொண்டுதான் வருகின்றன. ஆனால் பாகிஸ்தான் அவனுக்கெதிரான நடவடிக்கைகள் எதையுமே எடுக்க முனையவில்லை. இன்னமும் பாகிஸ்தான் ஒரு அப்பாவி என்று கூறினால் அவர்களை விட மூடர்கள் எவருமே இருக்க முடியாது.


முடிவுரை மற்றும் இனி நடக்கப் போகிறவை:

அஜ்மல் கஸாப் துப்பாக்கியால் சரமாரியாக சுடுவதும், மக்கள் மரங்களைப் போலச் சாய்வதும் வீடியோவில் தெள்ளத் தெளிவாகப் பதிவாகியுள்ளது. இன்னமும் அவனிடம் என்ன விசாரணை வேண்டிக்கிடக்கிறது என்று தெரியவில்லை. எப்படியும் அவனுக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை விதிக்கப்படும். இதற்கு அவனுடைய தாயார் கதறியழுவார். இருக்கவே இருக்கின்றன வட இந்திய செய்தித் தொலைக்காட்சிகள் மற்றும் மனித உரிமை அமைப்பு. அவர் கதறுவதை நேரடியாக ஒளிபரப்பு செய்து அவருடைய துக்கத்தில் பங்கு கொள்வார்கள். இதனைப் பார்த்த நமது பிரதமர் மனமுடைந்து ஊண், உறக்கம் இன்றித் தவிப்பார். அவர் பாவம்...மனிதாபிமானி, நேர்மையாளர், ஜீவகாருண்ய சீலர்., அதெல்லாம் விட முக்கியமாக மதச்சார்பற்றவர். கருணை மனுவும் தாக்கல் செய்யப்படும்; எப்படி அப்ஸல் குருவுக்கு முன்னர் 21 பேர் இருக்கிறார்களோ, அதே போல் இவன் 23 ஆவது நபராக கருணைக்காக காத்திருப்பான். ஆளும் காங்கிரஸோ கருணா விலாஸம். அன்னை அனைவரையும் இரட்சிப்பார். ராஜீவ் கொலையாளிகள் முதல் அஜ்மல் கஸாப் வரை!! பாவம், அப்ஸல் குருவும் எவ்வளவு நாட்கள்தான் தனியாக இருப்பார்?? பிறகு ஏதாவது விமானம் கடத்தப்பட்டால், சிறையிலிருக்கும் இருவரையும் மாலை மரியாதையுடன் அரசு பிரதிநிதிகள் புடைசூழ வழியனுப்பி விடலாம்.

காங்கிரஸ் மற்றும் அதனைச் சார்ந்த மதச்சார்பற்ற ஜீவகாருண்ய சீலர்களும் திருந்தாதவரை, பாரதம் இனி மெல்லச் சாகும் என மிகவும் துக்கத்தோடு சொல்லத்தான் தோன்றுகிறது. ஆஸ்திகர்கள் ஆண்டவனையும், நாஸ்திகர்கள் இயற்கையையும், பாரதமே இல்லையென்று சொல்பவர்கள் லெமூரியாவின் காவல் தெய்வத்தையும் வேண்டுங்கள்.

--யதிராஜ சம்பத் குமார்

ஓராண்டு நிறைவு தினத்தில் பார்லிமெண்ட் கதவுகளை மூடிவிட்டு, ப.சிதம்பரம், மன்மோகன் சிங் மற்றும் முக்கியமானவர்கள் முதல் சீட்டில் உட்கார்ந்து இந்த வீடியோவை பார்க்க சிபாரிசு செய்கிறேன்.

25 Comments:

மானஸ்தன் said...

அருமையான கட்டுரை. ஒவ்வொரு இந்தியனும் படித்து உணர வேண்டிய விஷயங்கள்.
பாராட்டுகள்/நன்றி யதி.

///காங்கிரஸ் மற்றும் அதனைச் சார்ந்த மதச்சார்பற்ற ஜீவகாருண்ய சீலர்களும் திருந்தாதவரை, பாரதம் இனி மெல்லச் சாகும் என மிகவும் துக்கத்தோடு சொல்லத்தான் தோன்றுகிறது. ஆஸ்திகர்கள் ஆண்டவனையும், நாஸ்திகர்கள் இயற்கையையும், பாரதமே இல்லையென்று சொல்பவர்கள் லெமூரியாவின் காவல் தெய்வத்தையும் வேண்டுங்கள்.///

@இட்லிவடை
இதற்கும் மஞ்சள் அடித்து இருக்கலாமே!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

கசாபுக்கு தாத்தாவான அப்சல் குருவுக்கே இன்னும் தண்டனை கொடுக்க இந்த மானம் கெட்ட அரசுக்கு புத்தி வரவில்லை, இதில் அஜ்மல் கசாப் என்ன, ஒசாமா பின் லேடனே மாட்டினாலும் மான்கறி, கோழிக்கறி சாப்பிட்டுக் கொண்டு ஜாலியா இருப்பான்.

மஞ்சள் கமெண்டில் போட்டபடி அவர்களுக்கு இந்த விடியோவை காட்டினால் அவர்கள் அதைப் பார்க்க மாட்டார்கள், ஏன் தெரியுமா?
"இனியும் இது போன்ற பயங்கரவாதத்தை இந்த அரசு வேடிக்கை பார்க்கத் தயாராக இல்லை" என்று அவர்கள் அடிக்கடி கூறுவது வழக்கம்தானே?

Balu said...

இதை எதிர்த்து பட்வா பிறப்பிக்க எந்த இஸ்லாமிய ஆண் மகனுக்கு துணிவு உள்ளது????? பட்வா பிரபிப்பதெல்லாம் சில இளிச்சவாயர்களை எதிர்த்து மட்டும் தான்....
கேட்டால் எல்லா மதத்திலும் தான் தீவிரவாதம் உள்ளது என்று உளறுவார்கள்...கடவுள் தான் பதில் சொல்ல வேண்டும்! இருந்தால் தானே சொல்வதற்கு...

Anonymous said...

Oh horrible!! these creatures ( I do not want to call them humans)must be cut into pieces.

Islam does not advocate terrorism.
A true muslim will never harm others.
Please hindu brothers do not mistake the whole community.

iam ashamed of these killers. I wish that all these rascals commit suicide.

I do not know how to express my feelings.

PLEASE NEVER MISTAKE INNOCENT MUSLIMS.

abdul salam

Kuala Lumpur Malaysia

Anonymous said...

Stupids!!!!

Balu said...

Good article yuthiraj!! Keep going!

I put some comments like what you said in the article in a different way, but idly rejected that, not a matter!
Our channels supposed to show this videos to the people and not the other shits.But no body will do the good work in our country, people are ready to do the bad things for money.

வால்பையன் said...

//இந்த விடியோவை காட்டினால் அவர்கள் அதைப் பார்க்க மாட்டார்கள், ஏன் தெரியுமா?
"இனியும் இது போன்ற பயங்கரவாதத்தை இந்த அரசு வேடிக்கை பார்க்கத் தயாராக இல்லை" என்று அவர்கள் அடிக்கடி கூறுவது வழக்கம்தானே?//

ஆமாங்க ஒரே மாதிரி பார்த்தா போரடிக்குமுல்ல, அதனால புதுசு புதுசா தான் பார்ப்பாங்க!

Anonymous said...

Great use of words. Even if all of mumbai is killed, the govt won't respond, b'coz it's incapable. I feel pity for those who joined army - they've made a foolish decision. The incident reminds me of vadivel joke - "evalo adichalum thanguran evan romba nallavan". I read somewhere that the then home minister Patil refused to come out of his house and another one said - "Bade Bade sheharon main ye hoothe rahthe hain". And the later had been reinstated after temporary dismissal. Indians lack good leaders. Unless we have good leaders, there is no end for this.

Anonymous said...

I too viewed this video. And then
I saw your write up. You have
expressed and reflected the impotent anger raging in every patriotic Indian. Appeasement of
Hitler by Neville Chamberlain resulted in World War II. Our Indian version being enacted by the present government will take the country to total ruin and dismemberment and destruction.
We must take a leaf out of Israel's incessant pursuit of the
Nazi killers of Jews in Germany.
Israel relentlessly pursued Adolf
Eichmann more than two decades after the end of World War II in
Argentina (or was it Brazil?) and
brought him to Israel, tried and
sentenced him to death, and yes,
he was put to death. Here even after catching the killers our
government is dithering in the logical conclusion of the verdict
of death sentence. We are a nation
of talkers and shouters but never
active and alive to realities.

Anonymous said...

FOR THE THING HAPPEND MUMBAI 2000 KM AWAY FROM CHHENAI.
LOT OF CRTICRS,WHAT TO DO NEXT,WHAT WE SHOILD DO IN FUTURE,WHAT TO DO WITH POLICTIANS ETC ....
But just a 200 ks away from you 200 000 innocent lifes have been killed !!!!you guys reaction(so clled neutral person ) zero.beacuse They are not people.They Are sudhras?
If you have time see the photos(Not short movie) on the below link


http://urpudathathu.blogspot.com/2009/04/blog-post.html
Then in the same way can you post like this? you Cant.? beacsuse you are .......

sathish said...

Yeterday (ndtv) in an iterview our minister chidamparam ansrwed for a quetion:
" its not east job to protcet the things over night.it will take time for recruting ,traning Et"

if we have ministers lkie ths i don't think india will be safe.

Ofcusre for him its easy job do declare a lost cadidate as winner in the elction with his power!!

In sun tv on the news last night
They said the mumbai people are spennding sleepless night after 26/11 (sensational news !! just for money)

SATHEESH said...

என்னால் அரசியல்வாதிகளை குறை சொல்ல முடியவில்லை . இந்த அரசியல்வாதிகளை தேர்வு செய்ததே மக்கள் தானே ? நாம் நமது கடமைகளை ஒழுங்காக செய்கிறோமோ ? இல்லை . படிக்காதவன் பணத்திற்காக ஓட்டு போடுகிறான் . படித்தவன் ஓட்டு போடுவதே இல்லை. வாய் மட்டும் நன்றாக பேசுவார்கள். நான் 500 ரூபாய் செலவு செய்து ஊருக்கு போய் ஓட்டு போட்டால் எனக்கு என்ன கிடைக்கும் என்று. நாளுக்கு நாள் இந்திய மோசமாகி கொண்டே போகிறது . மக்களிடையே மொழியால் , மதத்தால் வேறுபாடு இல்லை என்றால் அந்த பிரிவினையை தூண்டும் அரசியல்வாதி மட்டும் எப்படி ஜெயிக்கிறான் ?
இந்தியன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா ?

வர வர தலை சாய்ந்து கொண்டே வருகிறது.( நான் என்னுடைய தலையை மட்டும் தான் சொன்னேன் வேறு எந்த தரு தலை யையும் சொல்லல )

அமுதப்ரியன் said...

நாம் இந்தியாவில்தான் இருக்கிறோம் என்பதே மானக்கேடு.

இந்த லட்சணத்தில் சுத்ந்திர தினம், குடியரசு தினம் வேறு.(இது போன்ற அரசு விடுமுறைகள் எப்படி இருக்கும் தெரியுமா. அன்று மானாட மயிலாடவில் சிறப்பு அழைப்பாளர்கள், தலைவரின் சிறப்பு கவிதை முழக்கம், அஞ்சாநெஞ்சரின்(?) பணப்பட்டுவாடா...)

அமுத்ப்ரியன்.

Anonymous said...

Dear Anani,

இங்கேயும் பார்பனீயத்தை புகுத்த வேண்டாம். நாங்கள் கீழே உள்ள பதிவுகளையும் பார்த்திருக்கிறோம். உங்களின் தலைவர் சொன்னது போல இது ஒரு துன்பியல் சம்பவம் என்று ஒதுக்கி தள்ளாமல் எங்கள் தலைவர் உங்களின் இனம் காக்க ஆவன செய்வார் (அவர் அறிக்கையின் பால்) என்று உறுதி கூறுகிறோம். மேலும் அவரும் 200 கிலோ மீட்டரில்தான் வாழ்கிறார் என்றும் இந்த நேரத்தில் கூற ஆசைப்படுகிறோம். எங்கள் இனத்திற்கே அவர்தான் தலைவர் என்பதால் அவர் வழியே எங்கள் வழி என்று புரிந்து கொள்ளும்படி வேண்டுகிறோம். இப்படி யான பேச்சுக்கள் உங்களுக்கு ஒருபோதும் உதவாது என்பதை அறிக.


http://idlyvadai.blogspot.com/2009/11/blog-post_24.html
http://www.results-source.com/2009/05/rajiv-gandhi-assassination-pictures.html
http://en.wikipedia.org/wiki/List_of_assassinations_of_the_Sri_Lankan_Civil_War

மர தமிழன் said...

இதுவும் கடந்து போகும்?? :-(((

Anonymous said...

""இங்கேயும் பார்பனீயத்தை புகுத்த வேண்டாம். நாங்கள் கீழே உள்ள பதிவுகளையும் பார்த்திருக்கிறோம். உங்களின் தலைவர் சொன்னது போல இது ஒரு துன்பியல் சம்பவம் என்று ஒதுக்கி தள்ளாமல் எங்கள் தலைவர் உங்களின் இனம் காக்க ஆவன செய்வார் (அவர் அறிக்கையின் பால்) என்று உறுதி கூறுகிறோம். மேலும் அவரும் 200 கிலோ மீட்டரில்தான் வாழ்கிறார் என்றும் இந்த நேரத்தில் கூற ஆசைப்படுகிறோம். எங்கள் இனத்திற்கே அவர்தான் தலைவர் என்பதால் அவர் வழியே எங்கள் வழி என்று புரிந்து கொள்ளும்படி வேண்டுகிறோம். இப்படி யான பேச்சுக்கள் உங்களுக்கு ஒருபோதும் உதவாது என்பதை அறிக.


http://idlyvadai.blogspot.com/2009/11/blog-post_24.html
http://www.results-source.com/2009/05/rajiv-gandhi-assassination-pictures.html
http://en.wikipedia.org/wiki/List_of_assassinations""

My dear freind
I doon't know whther you left the stuf at home(which i inside head) while reading the comment!!
My point is the guy who put the post do not have honesty ''
At no point i am supporiting voilence by any means.my q uestion is why you are biased.
By showing rajivis photos, are you trying to justify killing of kids in srilanka by sl.forcers with suowith a support of Indinan government? if so, you will accept
Tommorow if a muslim comes with photos of gujarath or any other killigs of muslims to justify 26/11
pl try to understand what iam trying to say.

Anonymous said...

மும்பை பயங்கராத தாக்குதலின் போது பிடிபட்ட பயங்கரவாதி அஜ்மல் கசாப்பின் பாதுகாப்புக்கு, இதுவரை 31 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது என்றும், தினமும் 85 லட்ச ரூபாய் வீணாகிறது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன........
High Time to Think of wasting Peoples money like this

Anonymous said...

//I don't know whther you left the stuf at home(which i inside head) while reading the comment!!
My point is the guy who put the post do not have honesty ''
At no point i am supporiting voilence by any means.my q uestion is why you are biased.
By showing rajivis photos, are you trying to justify killing of kids in srilanka by sl.forcers with suowith a support of Indinan government? if so, you will accept
Tommorow if a muslim comes with photos of gujarath or any other killigs of muslims to justify 26/11
pl try to understand what iam trying to say.//
My dear anani,
Ok i am not having any stuff inside my head... u r having a lot right, fine let me understand that..
FOR THE THING HAPPEND MUMBAI 2000 KM AWAY FROM CHHENAI.
LOT OF CRTICRS,WHAT TO DO NEXT,WHAT WE SHOILD DO IN FUTURE,WHAT TO DO WITH POLICTIANS ETC ....

It is our country man... that’s why we are more concerned abt it. Who are you? U ppls are chosen the armed way as per your so called leader and now crying after bleeding is that a stuff of a solder ?
It just a ‘THING’ (26/11) for you becoz your leader stuffed u so... but ours is a different history. Have you people done anything to this country before these crisis begin? See the rusted maniac kind of terrorist approach in your words!! Aren’t you selfish ... if that so & so am I
LOT OF CRTICRS,WHAT TO DO NEXT,WHAT WE SHOILD DO IN FUTURE,WHAT TO DO WITH POLICTIANS ETC ....
and what do you want us to do? sitting like a duck? One person without any negative thoughts and arms given Freedom to our country, when that was tested we the common people will respond like this, and only it is what stuffed in our mind (now u know why u failed)
But just a 200 ks away from you 200 000 innocent lifes have been killed !!!!
What do you want us to do?
If we send military then u say the following::
//By showing rajivis photos, are you trying to justify killing of kids in srilanka by sl.forcers with suowith a support of Indinan government?//
You people engaged kids in srilanka with AK 47. When u accept that u have to accept the consequences.
//if so, you will accept
Tommorow if a muslim comes with photos of gujarath or any other killigs of muslims to justify 26/11//
thats why i commented. So don’t compare and seek support. if count of death does matter for you then jews are the ultimate rights over here.
//My point is the guy who put the post do not have honesty '//

how abt yours?
//http://urpudathathu.blogspot.comf /2009/04/blog-post.html//

so this is the stuff you are finally having in your head huh?
//Then in the same way can you post like this? you Cant.? beacsuse you are .......//

சீனு said...

இ.வ.,

அந்த பரமசிவத்த கொஞ்சம் நிருத்த சொல்லுங்க. எந்த பதிவ தொறந்தாலும் அந்த டவுன்லோடே அதிக நேரத்த எடுத்துக்கிது. அத ஒரு தனி பதிவா போட்டுடுங்க, இல்லாட்டு யூ ட்யூப் லிங்க் இருந்தா கொடுத்திடுங்க. யூ ட்யூப்ல வேணும்னா பார்க்கலாம்.

Anony8 said...

1. Channel 4 carefully avoided the parts where the Pakis across the border and Kasab repeatedly mentioning about killing only "Hindus" and let go of Muslims. But they showed only the parts where they mention about Jews.

2. Indian Media obviously won't show such a documentary based on our own Nation, obviously because it will affect their masters Congress' chances in the next elections.

Only Indian party BJP and other Nationalists will die soon, but the anti-nationals Congress and other Sickulars won't die until this nation becomes a crypto Xian/Islamic Nation.

pachhamilaka said...

இப்படி பட்ட சம்பவத்தில் உருப்படாத அரசியல்வாதிகள் சாகும் வரை இப்படிப்பட்ட சம்பவங்களில் அப்பாவி மக்கள் தான் பலி கடா

jaisankar jaganathan said...

close to heaven? that may be indians

Ramana said...

Dear Friends,
First i would like to say i am writing here on Humanity Basis..not on any basis of geological locations/ god/ religion, I am just wondering how much hate we have developed during the course of Evolution of mankind in the name of country, religion, caste, god, money , color, etc etc....I have been reading the comments for this topics.. How much u guys have inside you.

Yarro oruvan sonnanam..."Aenndru manithan, Sagha manithargalai , manithanai Parkirano Andrae Manithanuku Vidiyal."

As some Anonymous ( Should y do hide urself) Said here about " Sri Lankan " thing.... !!!Thats B#$%^ S&^%...Yes they were only just 200kms away..we saw them Fighting, crying, killing, tortured etc etc and we also cried, felt the pain, ... and yes we also saw small children with guns ??? who gave them guns?? Who planted their minds with terrorism / hatred??? who forced them in to that atrocity ?? Do u call those people as humans ??? Ridiculous, atrocious... So what do u expect from people who really want to help and bring back everything to normal . Guys, First try to know whats humanity and bring it back in people of our society, neighbors, in your home and in yourself later there will be no need such topics as i believe

Mugamoodi said...

Around a year back in china thousands of newborns were food poisoned and some died due to a scam in a popular baby food product. A week back 2 of the companies top officials were convicted and executed. Namma oorla, Kasab is demanding mutton briyani. According to TOI, the expense of running Kasab's case till date is Rs. 31 Crores. Vaazhga Jananaayagam!!

Anonymous said...

hey, did anyone read this? an article on 26/11

http://solvanam.com/?p=4624