பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, November 24, 2009

நச் பூமராங் 24-11-2009

1. எந்திரன் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாம். இப்ப ரஜினி பிஸியாக டப்பிங் பேசிக்கொண்டு இருக்கார். படம் அடுத்த வருடம் சித்திரை திருநாளில் ரிலீஸாம். - செய்தி

தமிழ் பெயருக்கு சலுகை மாதிரி புதிய தமிழ் வருட பிறப்புக்கு தான் சலுகை என்று ஏதாவது சொல்லிவைக்க போகிறார் நம்ம முதலமைச்சர்.


2. 2010 சென்னை புத்தகக் கண்காட்சி இந்த வருடம் டிசம்பர் 30லிருந்து ஜனவரி 10 வரை - காதில் விழுந்தது

ஏன் என்று கேட்டதற்கு எல்லாம் பரமபிதாவிடம் கேளுங்கள் என்று சொல்லிவிட்டார் அந்த நபர்.

3. நடராஜர் கோவிலில் தீவிரவாதிகள் நடவடிக்கையை கண்டுபிடிக்க காமிரா பொருத்த முடிவு செய்திருக்கிறார்கள் போலீஸ். - செய்தி

தீவிரவாதிகள் உஷாரா இருக்க இந்த நியூஸ். மற்றபடி பப்ளிக் இதை பற்றி கவலை பட வேண்டாம்.

4. சிதம்பரம் நடராஜர் கோவிலில், முதல்வர் கருணாநிதியின் துணைவி ராஜாத்தி, தனது பேரனுடன் சாமி தரிசனம் செய்தார்கள். தி.மு.க., நகரச் செயலர் செந்தில்குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் அவரை வரவேற்று கோவிலுக்குள் அழைத்துச் சென்றனர். கோவிலில் சிற்றம்பல மேடையில் ஏறி சாமி தரிசனம் செய்தார்களாம்.- செய்தி

தில்லைச் சிற்றம்பல மேடையில் தமிழை முழங்குவோம் என்பதற்கு இது தான் அர்த்தம்.

5. வந்தவாசி, திருச்செந்தூரில் அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு செய்துட்டாங்க அம்மா. - செய்தி

வந்தவாசி, திருச்செந்தூர் கிராமங்களிலும் அதே வழக்கம் தானாம். காது குத்து(மக்களுக்கு) அப்பறம் கிடா வெட்டு(அதிமுக வேட்பாளருக்கு) அதுக்கு அப்பறம் கறிச்சோறு( திமுக ஸ்பான்சர் செய்யும் ).


6. பகவான் ஸ்ரீ சத்ய சாய் 84ஆம் பிறந்த நாளில் பக்தர்கள் அளித்த கேக்கை வெட்டினார். - செய்தி

இந்தியா இந்துக்களின் நாடு. இங்கு வாழும் முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் கூட இந்து கலாச்சாரத்தையே பின்பற்றுகிறார்கள். அவர்கள் இந்து பரம்பரையை சேர்ந்தவர்கள். எனவே அவர்களையும் இந்துக்களாகவே கருதுகிறோம். இந்துத்துவம் என்ற கொள்கையை அனைவரும் பின்பற்றுவதால் நாடு நன்றாக இருக்கிறது. இந்துத்துவம்தான் நாட்டுக்கு வலிமை கொடுக்கிறது என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பெங்களூரில் பேசியுள்ளார். - செய்தி

கேக் வெட்டுவது இந்தியர்களின் கலாச்சாரமா இல்லையா ?


7. மூத்த தமிழறிஞர்கள் பற்றிய விழா ஒன்றைப் பற்றிய செய்தியில் மறைந்த தமிழறிஞர்களுக்கு முதல்வர் அஞ்சலி செலுத்தினார் என்ற செய்தியை மறைந்த முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அஞ்சலி”னு தப்பா பிரிண்ட் பண்ணிட்டாங்களாம். தலைவர் என்ன ரியாக்ட் பண்ணுவாரோனு பயந்துகிட்டே அவர்கிட்டே தகவலைக் கொண்டு போனப்ப, ‘பரவாயில்லை... என் பேரன்கள் தயவில் என்னுடைய மறைவுக்கான அஞ்சலிக் கட்டுரையை நானே படிக்கும் வாய்ப்பு கிடைச்சிருக்கு” என்று சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டாராம். - செய்தி

இதே இடத்தில் அம்மாவை நினைச்சா கதி கலங்குது. அப்படி பிரிண்ட் அடித்தவருக்கு இன்னேரம் பால் ஊற்றியிருப்பார்கள்.

8. கேள்வி: ``தமன்னா இடுப்பில் கிள்ளினால் என்னவாகும்?''
பதில்: ``அந்த இடம் சிவப்பாகி விடும்''
- தினத்தந்தி குருவியார் கேள்வி பதில்
எது சிகப்பாகும் ? தமன்னாவின் இடுப்பா அல்லது கிள்ளியவரின் கன்னமா? இயக்குனர் பார்த்திபனின் டவுட்

போன ஜென்மத்தில் பார்த்திபன் கிள்ளிவளவனாக இருந்திருப்பார்.

9. மகாத்மா காந்தியை தேசத் தந்தை என்கிறோம், அதை “தேசத்தின் (நேஷன்) தந்தை மகாத்மா காந்தி, `ரேஷனின்’ தந்தை டாக்டர் கலைஞர்” - மு.க.ஸ்டாலின்

ஆந்திராவில் புழக்கத்தில் உள்ள போலி ரேஷன் கார்டுகளை கண்டுபிடிக்க வீடு, வீடாக சோதனை நடத்தப்பட்டது. அப்போது மகாத்மா காந்தி பெயரில் ரேஷன் கார்டு வழங்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதில், எம்.கே.காந்தி தாத்தா (வயது 65) என்ற பெயரில் காந்தியின் புகைப்படம் ஒட்டப்பட்டிருந்தது. அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால், காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேவின் பெயர், காந்தியின் தந்தை பெயராக குறிப்பிடப்பட்டு இருந்தது.

இப்ப சொல்லுங்க யார் ரேஷனின் தந்தை ?

10. `விருதகிரி' என்ற படத்தின் மூலம் விஜயகாந்த், `டைரக்டர்' ஆகியிருக்கிறார்.

அட்லீஸ்ட் இந்த கனவாவது 'கை'கூடட்டும்!12 Comments:

மானஸ்தன் said...

:>

jaisankar jaganathan said...

///எந்திரன் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாம். இப்ப ரஜினி பிஸியாக டப்பிங் பேசிக்கொண்டு இருக்கார். படம் அடுத்த வருடம் சித்திரை திருநாளில் ரிலீஸாம். - செய்தி//

gopi ethooda cine field la niraya matram varum. puthiya superstar varuvar

Guru said...

மூத்த தமிழறிஞர்கள் பற்றிய விழா ஒன்றைப் பற்றிய செய்தியில் மறைந்த தமிழறிஞர்களுக்கு முதல்வர் அஞ்சலி செலுத்தினார் என்ற செய்தியை மறைந்த முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அஞ்சலி”னு தப்பா பிரிண்ட் பண்ணிட்டாங்களாம். தலைவர் என்ன ரியாக்ட் பண்ணுவாரோனு பயந்துகிட்டே அவர்கிட்டே தகவலைக் கொண்டு போனப்ப, ‘பரவாயில்லை... என் பேரன்கள் தயவில் என்னுடைய மறைவுக்கான அஞ்சலிக் கட்டுரையை நானே படிக்கும் வாய்ப்பு கிடைச்சிருக்கு” என்று சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டாராம். - செய்தி

இதே இடத்தில் அம்மாவை நினைச்சா கதி கலங்குது. அப்படி பிரிண்ட் அடித்தவருக்கு இன்னேரம் பால் ஊற்றியிருப்பார்கள்.

Vilunthu vilunthu sirithen.. sirippai adakka mudiyavillai.. ella commentsum superrru.. Onnanglass.

ஜெயக்குமார் said...

இட்லிவடை ஏன் இப்படி ஆறிப்போய்க் கிடக்கு???

:-)

Anonymous said...

It's very easy to comment satirically about anything. Those who comment satirically can never come forward and take up any challenges. It's a basic fault in every Indian's character. Satirist believe that they're cracking a big joke, but never knew that they themselves are the joke. Even as these people continue with their jokes none one can stop, MK's family from finding place in world's top 10 list for years to come. Even the humor in this post was poor - Sorry.

Anonymous said...

1.If enthiran floops that will be end of carrier for rajini and shakar too.Hope sujatha's story and dailgue will lfit the movie
2.Iv you can complile your all posts in your blog and realese the book.i don't think you will hsve difficulties as you have your own publishing co(keazhku pathipagam)
may yathiraj,haran and manasthan can give Muunurai
I will come and buy the Book!!
3.we can have chance to see who really read Devaram
4.Paktharrivu parimana Vallarchi
5.Announcement done.Must to go to Koda nadu for rest
6.Keke veetuvatu Indian kalacharam ellai.but B. day kake Veetuvathu (a)samiyarkalin kalacharam.By the what happend to the case where 4 students were shot dead in the madam (Ashramam)few yers back .maan veeti mudiyacha?? Same like our two " s. charis " who were involevd in murder case and sex scandle who are laofing arrung freely
7.vayasu ayiedichuu.othereise 'nanada sethen '? neethanda setheupone variya ondiku ondi!!
10 ."full " director or "half" director

kggouthaman said...

// கேக் வெட்டுவது இந்தியர்களின் கலாச்சாரமா இல்லையா ?//
அது சரியா தெரியல.
ஆனா - இனி வரும் நாட்களில், கேக்குக்கு பதிலாக - இட்லி வெட்டலாம் என - நம் தமிழ்க் கலாச்சார - தகிடுதத்தப் பிரதிநிதி என்கிற வகையில் - கோரிக்கை வைக்கிறேன்.

cdhurai said...

பதிவுலகில் முத்திரை பதித்துவரும் அன்பரே,

இந்த பதிவுலகிற்கு புதியவன் ஒரு காதல் கதை எழுதியுள்ளேன்..தங்களது ஆதரவை விரும்பி, தங்களே எனது வலைக்கு அழைக்கிறேன்….

http://idhayame.blogspot.com/2009/11/blog-post_12.html

அன்புடன்

செல்லத்துரை…..

Anonymous said...

11.http://blogs.abcnews.com/politicalpunch/2009/11/white-house-state-dinner-the-menu-entertainment-and-decor.html

Bannerji said...

আমি গোধ চুসছি...পারা চশ্চি...থার্পরে বোধ মার্চ্চি..

மஞ்சள் ஜட்டி said...

ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில், மகாத்மா காந்தி பெயரில் போலி ரேஷன் கார்டு புழக்கத்தில் இருந்தது தெரிய வந்துள்ளது. அதில் காந்தியின் அப்பா பெயராக கோட்சே என்று குறிப்பிடப்பட்டிருந்ததும் தெரிய வந்துள்ளது.

அந்த போலி ரேஷன் கார்டில் பெயர் எம்.கே.காந்தி தாத்தா, வயது 65, முகவரி 46541, காந்தி தெரு, காந்தி சாலை, சித்தூர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் கொடுமை என்னவென்றால் காந்தி தாத்தாவின் தந்தை பெயர் நாதுராம் கோட்சே என கூறப்பட்டுள்ளது. மகாத்மாவைக் கொன்றவர்தான் கோட்சே என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் Godse என்பதற்குப் பதில் Godsay என அவரது பெயர் இடம் பெற்றுள்ளது.

சித்தூர் மாவட்டம் ராமச்சந்தராபுரம் மண்டலம், சுட்டகுந்தா கிராமத்தில் இந்த கார்டு விநியோகிக்கப்பட்டுள்ளது.


இதென்ன கொடுமை அய்யா??

Anonymous said...

//10. `விருதகிரி' என்ற படத்தின் மூலம் விஜயகாந்த், `டைரக்டர்' ஆகியிருக்கிறார்.

அட்லீஸ்ட் இந்த கனவாவது 'கை'கூடட்டும்!//

எங்கள அண்ணன் ... பீனிக்ஸ் பறவையைப் போல மீண்டு வருவார்.

http://snehiti.blogspot.com