பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, November 22, 2009

சன்டேனா இரண்டு (22-11-09) செய்திவிமர்சனம்

இந்த படத்துக்கான செய்தி கடைசியில்...செய்தி # 1

காவல்துறை உங்கள் நண்பன் என்று அடிக்கடி நினைவு படுத்திக்கொள்ளும் நிலையில் இருக்கிறது நம்
தமிழக காவல் துறை.

போலீஸ் என்றாலே பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் ஒரு தவறான இமேஜ் உள்ளது. அதற்கு சினிமாவும் ஒரு காரணம் என்கின்றனர் போலீசார்.

காக்க...காக்க, அஞ்சாதே போன்ற ஒரு சில சினிமாக்களில் போலீஸ் அதிகாரிகளை உயர்வாக காட்டினாலும், பல சினிமாகளில் போலீசை காமெடி கதாபாத்திரமாகவே காட்டுகிறார்கள்.

மாணவர்கள் மத்தியில் போலீஸ் என்றாலே ஒருவித பயம் நிலவுகிறது. அதே நேரத்தில் அவர்களை வடிவேல் போல சிரிப்பு போலீசாகவே பொதுமக்கள் பார்க்கிறார்கள்.

மாணவர்களின் இந்த மனநிலையை போக்க சென்னை போலீசார் முடிவு செய்தனர். இதற்காக போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில் இன்று பள்ளி மாணவர்கள் போலீஸ் நிலையத்தை சுற்றிப்பார்க்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சென்னையில் உள்ள 80போலீஸ் நிலையங்களும் இதற்கு தயாராயின. முதல் நிலை காவலர் முதல், காவல் துறை இயக்குனர் (டி.ஜி.பி.) வரை அவர்கள் அணியும் சின்னங்கள், விதவிதமான துப்பாக்கிகள், குற்றவாளிகளின் போட்டோக்கள், போக்குவரத்து விதிமுறை சின்னங்கள், வயர்லெஸ் கருவிகள் அனைத்தும் ஒரிடத்தில் அணிவகுத்திருந்தன.

இதனால் அத்தனை போலீஸ் நிலையங்களும் கண்காட்சி அரங்குகளாக காட்சி அளித்தன. காலை 10மணிக்கு மாணவர்கள் போலீஸ் நிலையங்களுக்கு வரத் தொடங்கினர். போலீஸ் நிலையங்கள் அனைத்தும் ஒருநாள் பள்ளிக்கூடங்களாக மாறின. பூக்கடை போலீஸ் நிலையத்தில் மாணவர்கள் அனைவரையும் ஓரிடத்தில் நிற்க வைத்து உதவி கமிஷனர் ராதாகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் ஆகியோர் பாடம் நடத்தினர்.

போலீஸ் நிலையத்தை இதற்கு முன்பு பார்த்திருக்கிறீர்களா? என்று உதவி கமிஷனர் ராதாகிருஷ்ணன் கேட்டதும்... சினிமாவில் பார்த்திருக்கிறோம் என்று ஓட்டு மொத்த மாணவர்களும் கூறினர்.

சினிமாவில் நீங்கள் பார்த்த போலீஸ் மாதிரி நாங்கள் இல்லை... உங்களுக்கு உதவுவதற்காகவே நாங்கள் இருக்கிறோம். சினிமா போலீசை நம்பாதீர்கள் என்று கூறிய உதவிகமிஷனர் ராதாகிருஷ்ணன், பிஸ்டல் ரிவால்வர் போன்ற துப்பாக்கிகளை இயக்குவது எப்படி என்பது குறித்தும் மாணவர்களுக்கு விளக்கி கூறினார்.

கைதிகளை அடைக்கும் அறைக்குள் சென்ற மாணவர்களிடம் பேசிய இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், இது தப்பு செய்பவர்களை அடைத்து வைக்கும் இடம். யாரும் தவறு செய்யக்கூடாது என்றார். இதைகேட்டதும் ஒட்டு மொத்த மாணவர்களும் சரி சார் என்று ஒரே குரலில் கூறினர்.

மாணவர்கள் சிலரிடம் பேசியபோது, போலீஸ் என்றால் சினிமாக்களில் வருவது போல... சிரிப்பு போலீசாக இருப்பார்கள் என்று நினைத்திருந்தோம். இன்றிலிருந்து அவர்கள் மீது மரியாதை ஏற்பட்டுள்ளது என்றனர்.

மாணவர் ஒருவர் நானும் ஒரு நாள் இந்த ஏ.சி.யை போல பாடம் நடத்தாமல் விடமாட்டேன் என்று கூறிவிட்டு சென்றார்.

தேர்தல் நேரத்தில் இரண்டு மாதங்கள் வீட்டுக்கு போகாமல் பணி செய்ததாக காவல்துறையில் இருக்கும் ஒரு நண்பர் தெரிவித்து இருந்தார். நேர்மையான,தூய்மையான அரசியல் அமைப்பு உருவானால், காவல்துறை மட்டும் அல்ல எல்லா துறைகளின் சீர்கெடுகளும் தாமாகவே நீங்கிவிடும் என்பது என் தாழ்மையான கருத்து.செய்தி # 2

இரண்டு துணிச்சல்(!) வாய்ந்த அறிக்கைகளின் சாரம் மட்டும் தருகிறேன் இட்லிவடை நலன்(?) கருதி.

முதலாவது, உலக தமிழர்களிடையே பெரும் விவாதத்திற்கு உள்ளாகி இருக்கிறது

முதல்வர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கை:

ஈழத் தந்தை செல்வாவின் குரலோடு இணைந்து 1956 முதல் இலங்கை பிரச்னைக்காக திமுக குரல் எழுப்பியதோடு நில்லாமல், இலங்கையில் ஜனநாயகம் மலர வேண்டும் என்பதற்காக எடுத்து வைத்த வாதங்களும் நடத்திய அறப்போராட்டங்களும் சிறைகளை நிரப்பிய தியாகச் செயல்களும் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை தூக்கி எறிந்த நிகழ்வுகளும் இரு முறை ஆட்சியையே இழந்த சம்பவங்களும் நடந்தன. . முதலமைச்சராக இருந்து கொண்டே, இந்தியாவிற்கு திரும்பி வந்த அமைதிப் படையை வரவேற்கச் செல்லாமல் புறக்கணித்து, தமிழ்நாட்டின் உணர்வை நான் வெளிப்படுத்திய நிகழ்வு இலங்கையில் நடந்த விடுதலைப் போராட்டத்திற்கு நமது தாய் மண்ணிலிருந்து நீட்டப்பட்ட ஆதரவுக் கரம் என்பதை யாரும் மறந்துவிட முடியாது.

ஆனால் அங்கிருந்த ஒரு சிலருக்கு நாமே வலுவில் சென்று வழங்கிய ஆதரவு மிக லேசாகவே தெரிந்தது. வீரத்தை பயன்படுத்திய அளவுக்கு போர் முனையில் விவேகத்தையும் பயன்படுத்தவேண்டும் என்று நாம் தொடர்ந்து வலியுறுத்தியதை அலட்சியப்படுத்தி விட்டார்கள். ஜனநாயக ரீதியான ஒரு வாய்ப்பு வாசற்படி வரையில் வந்தபோது, அதை எட்டி உதைத்து விட்டனர். அண்மையில் சென்னை வந்த இலங்கை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்கே நக்கீரன் இதழுக்கு அளித்த பேட்டியில், ‘‘இந்தப் போரின் விளைவுகளுக்கு ஒரு வகையில் பிரபாகரனும் காரணம். தமிழர் பிரச்னைக்கு அரசியல் தீர்வுகாண முயற்சி நடந்த போதெல்லாம் அதனை தவிர்த்தார். 2003ல் நடந்த அமைதிப் பேச்சு வார்த்தையிலிருந்து தானாக வெளியேறினார். 2005 டோக்கியோ பேச்சுவார்த்தையிலும் தமிழர் கோரிக்கைகள் என்னவென்பதை தெரிவிக்காமலே இழுத்தடித்தார். அதில் கலந்து கொள்வதை தவிர்த்தார். 2005 அதிபர் தேர்தலில் தமிழர்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்கச் செய்தார். தேர்தலில் பங்கேற்று இருந்தால் தமிழர் மனநிலை என்ன என்பதை நாடு அறிந்து கொள்ள முடிந்திருக்கும். அந்த ஜனநாயக வாய்ப்பை தமிழ் மக்களுக்கு தர பிரபாகரன் தவறி விட்டார்’’ என்று கூறியிருக்கிறார். அதை கூர்ந்து கவனித்தால் விடுதலைப் புலிகள் போர் தந்திரத்தை எதிர்கால கணிப்போடு கையாளவில்லை என்பதை புரிந்து கொள்ள முடியும்.. முறையாக திட்டமிட்டு நடவடிக்கை மேற்கொள்ள தவறிய காரணத்தால் நம் பலத்தையும், மாற்றார் பலத்தையும் துல்லியமாக கணிக்காத காரணத்தால் நம் தமிழ் மக்கள் எத்தனை பேர் மாற்றாரின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரை இழக்க நேரிட்டது? இளம் சிறார்கள் எத்தனை பேர் பிஞ்சு வயதிலேயே வெந்து மாண்டனர்? அவர்களுடைய பெற்றோர் எத்தனை வேதனைப்பட்டிருப்பார்கள்? எத்தனை பேர் தங்கள் சொத்து சுகங்களை இழந்து நாடு விட்டு நாடு பஞ்சைகளாக, பராரிகளாக செல்ல நேரிட்டது? தங்கள் வாழ்க்கையை தொடர அவர்கள் எங்கெங்கு அலைந்து திரிய வேண்டியதாயிற்று? எத்தனை பேர் அகதிகள் முகாம்களில் ஆண்டுக்கணக்கில் வாட நேர்ந்தது? இதற்கெல்லாம் காரணம் என்ன? பிரபாகரன் மனைவி மக்கள் கதிதான் என்ன? இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து தமிழர் உயர்வுக்காக பாடுபட வேண்டியவர்கள் அற்ப ஆயுளில் போய் விட்டார்களே என்ற ஆதங்கத்தில்தான் இதனை எழுத நேரிட்டது. என்னையும், தம்பி மாறனையும் 9&2&1989ல் அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி டெல்லிக்கு அழைத்து ஈழப் பிரச்னை குறித்து இரண்டு நாள் உரையாடி, ‘நீங்களும், மாறனும், வைகோவும் இலங்கை சென்று கொழும்பிலோ அல்லது உங்களுக்கு விருப்பமான இடத்திலோ முகாமிட்டு பிரபாகரனுடன் பேசுங்கள். எத்தனை நாள் வேண்டுமானாலும் செலவிடுங்கள். தேவையான ஏற்பாடுகளை செய்து தருகிறேன். அவர் கோரிக்கை என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இலங்கை தமிழ் மக்களின் உரிமைகளை நிறைவேற்ற நான் தயாராக இருக்கிறேன்’ என்றெல்லாம் எங்களுக்கு சொல்லி உறுதியளித்தார். அந்த இளந்தலைவர் இந்திய மண்ணில் அதுவும் தமிழ் மண்ணிலேயே கொலையுண்டார் என்பது ஒரு மாபெரும் சோகச் சம்பவம். அது ஈழ விடுதலைப் போராட்ட தீயில் தண்ணீர் விட்டு அணைத்தது போல் ஆயிற்று.

அடுத்து 2005ல் இலங்கை அதிபர் தேர்தல் நடைபெற்றது. பிரதமராக இருந்த மகிந்த ராஜபட்சேவும் அவரை எதிர்த்து முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் போட்டியிட்டார்கள். தான் தேர்ந்தெடுக்கப்பட்டால் புலிகளுடன் அமைதிப் பேச்சை தொடருவேன் என்றார் ரணில். அந்த தேர்தலை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டுமென்று விடுதலைப் புலிகள் அறிவுறுத்தினர். அப்போது ரணில் சொன்னதைதான் இப்போது பேட்டியிலும் குறிப்பிட்டுள்ளார். அந்த தேர்தலில் ராஜபக்சே வெற்றி பெற்றார். அவருக்கு 48,87,152 (50.29 சதவிகிதம்) வாக்குகளும், ரணிலுக்கு 47,06,366 (48.43 சதவிகிதம்) வாக்குகளும் கிடைத்தன. 1 லட்சத்து 81 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ரணில் தோல்வி அடைந்தார். ஏழு இலட்சம் தமிழ் வாக்காளர்கள் தேர்தலை புறக்கணித்த காரணத்தால் ஏற்பட்ட முடிவை பார்த்தால், விடுதலைப் புலிகள் அவசரப்பட்டு அன்று எடுத்த அரசியல் முடிவின் விளைவுகள் எங்கே போய் முடிந்தன என்பது புரியும். அதை எண்ணிப் பார்த்து நாம் மௌனமாக அழுவது யார் காதில் விழப் போகிறது? நம் மௌன வலிதான் யாருக்கு தெரியப் போகிறது? இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.

இந்த அறிக்கையின் தலைப்பு என்ன தெரியுமா? " விளைவுகளை எண்ணி மவுனமாக அழுகிறோம".

இரண்டாவது அறிக்கை , காங்கிரஸ் கட்சியில் உறுப்பினர்களை சேர்க்க விண்ணப்பம் வழங்கும் விழா, ஈரோடு காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்தது. விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் விண்ணப்பங்களை வழங்கி பேசியதாவது:

"இங்கு வழங்கப்படும் விண்ணப்பங்களில் உறுப்பினர்களுக்கான எண்கள் குறிப்பிடப்படும். இந்த எண்கள் மாநில அளவில் குறிப்பிடப்படுகிறதா அல்லது தேசிய அளவில் குறிப்பிடப்படுகிறதா என்பது தெரியவில்லை. இப்போது காங்கிரஸ் தலைமை என்ன செய்கிறது என்று தெரியாத நிலை உள்ளது. காலை எழுந்தது முதல், வீணாக பொழுது கழிகிறது. ஏதாவது உருப்படியாக செய்ய வேண்டும் என உறுப்பினர்களை சேர்க்கிறோம்.ஒன்றுமில்லாத காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியால் பிரயோஜனம் இல்லை".இந்த வார உலக செய்தி :

அ​மெ​ரிக்​கா​வின் நியூ​யார்க்​கில் இருந்து வெளி​யா​கும் போர்ப்ஸ் பத்​தி​ரிகை இந்​திய கோடீஸ்​வ​ரர்​கள் பட்​டி​யலை வெளி​யிட்​டது.

இதில் ரூ.1.60 லட்​சம் கோடி சொத்து மதிப்​பு​டன் ரிலை​யன்ஸ் நிறு​வன அதி​பர் முகேஷ் அம்​பானி முத​லி​டத்​தைப் பிடித்​துள்​ளார்.

லண்​ட​னில் வசித்து வந்​தா​லும் இந்​திய பாஸ்​போர்ட் வைத்​துள்ள தொழி​ல​தி​பர் லட்​சுமி மித்​தல் ரூ.1.50 லட்​சம் கோடி சொத்து மதிப்​பு​டன் 2-ம் இடத்​தில் உள்​ளார்.

மு​கேஷ் அம்​பா​னி​யின் இளைய சகோ​த​ர​ரும்,​ அனில் திரு​பாய் அம்​பானி குழு​மத் தலை​வ​ரு​மான அனில் அம்​பானி ரூ.87,500 கோடி சொத்து மதிப்​பு​டன் 3-வது இடத்​தைப் பிடித்​துள்​ளார்.

கு​மார் பிர்லா ​(ரூ.39 ஆயி​ரம் கோடி)​ 9-வது இடத்​தி​லும்,​ ஹெச்​சி​எல் உரி​மை​யா​ளர் சிவ நாடார் ​ ​(ரூ.18,500 கோடி)​ 15-வது இடத்​தி​லும்,​ சன் டிவி உரி​மை​யா​ளர் கலா​நிதி மாறன் ​(ரூ.11,500 கோடி)​ 20-வது இடத்​தி​லும் உள்​ள​னர்.

க​லா​நிதி மாற​னின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டை விட 2 மடங்கு அதி​க​ரித்​துள்​ளது.

ரூ.5000 கோடிக்​கும் அதி​க​மாக சொத்து மதிப்பு உள்​ள​வர்​கள் தற்​போது இந்​தி​யா​வில் 52 பேர் உள்​ள​னர். கடந்த ஆண்டு 27 பேர்​தான் இருந்​த​னர் என்​பது குறிப்​பி​டத்​தக்​கது. பட்​டிய​லில் இடம் பிடித்​துள்ள 100 பேரின் சொத்து மதிப்பு ரூ.13 லட்​சம் கோடி​யா​கும். இது இந்​தி​யா​வின் மொத்த உள்​நாட்டு உற்​பத்​தி​யில் ​(ஜிடிபி)​ நான்​கில் ஒரு பங்​கா​கும்.

இந்த பட்டியலில் "'எந்திரன்" படம் வெளியான பின்னர் சன் டிவி கலாநிதி மாறன் முதல் இடம் பெறுவார் என்று என்னிடம் சொன்னார் கோபி என்ற ஒரு பகீர்(?) சித்தர்.


-இன்பா

26 Comments:

S. Krishnamoorthy said...

ஒரு சின்னக் கேள்வி. தமிழர்களைத் தவிற, இந்தியர் அனைவரும் கோடியைக் கோTi என்று சரியாக உச்சரிக்கின்றனர். தமிழர்கள் மட்டும் ஏன் கோDi என்று சொல்லுகிறார்கள்?
கிருஷ்ணமூர்த்தி

R.Gopi said...

உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...

யப்பா..........

இப்போவே கண்ண கட்டுதே......

R.Gopi said...

//இந்த பட்டியலில் "'எந்திரன்" படம் வெளியான பின்னர் சன் டிவி கலாநிதி மாறன் முதல் இடம் பெறுவார் என்று என்னிடம் சொன்னார் கோபி என்ற ஒரு பகீர்(?) சித்தர்.//

**********

முதல் பத்து இடத்தில் இடம் பெறுவார் என்று சொல்லி இருந்தால் கூட நான் தப்பித்து இருப்பேன்... இன்பா...

வட இந்திய பர்ணாட்ஷா said...

/// மாணவர்கள் சிலரிடம் பேசியபோது, போலீஸ் என்றால் சினிமாக்களில் வருவது போல... சிரிப்பு போலீசாக இருப்பார்கள் என்று நினைத்திருந்தோம். இன்றிலிருந்து அவர்கள் மீது மரியாதை ஏற்பட்டுள்ளது என்றனர்.
////

கட்சி ஆரம்பிக்க, ஆட்சி பிடிக்கத்தான் சினிமான்னு நினைச்சோம். போலீஸ் யாருண்ணு சொல்லக் கூட சினிமாதானா இன்பா...இன்னப்பா..!!!

/// இரண்டு துணிச்சல்(!) வாய்ந்த அறிக்கைகளின் சாரம் மட்டும் தருகிறேன் இட்லிவடை நலன்(?) கருதி///

தூள் கிளப்பிட்டீங்களே....

//// வீரத்தை பயன்படுத்திய அளவுக்கு போர் முனையில் விவேகத்தையும் பயன்படுத்தவேண்டும் என்று நாம் தொடர்ந்து வலியுறுத்தியதை ////

ஆமாங்க.... இத சொல்றதுக்கு சரியான் ஆள்தான்.

/// என்று என்னிடம் சொன்னார் கோபி என்ற ஒரு பகீர்(?) சித்தர்////

இந்த கூபீர் கிட்ட பகீருண்ணு இட்லிவடை 2012 ல எப்படி இருக்கும்னும் கேட்டுச் சொல்லுங்க... இந்த சித்தர் கேர் ஆப் எந்த மலை... கேட்டுச் சொல்லுங்க அந்த மலை நாமளும் ஏறிர வேண்டியதுதேன்....

RAD MADHAV said...

“செம்மொழிப் பைந்தமிழ் மன்றம்” வழங்கும் பரிசுப் போட்டி... http://simpleblabla.blogspot.com/2009/11/blog-post_22.html

மர தமிழன் said...

தேசத்தை காக்கும் கமாண்டோ க்களின் வீரத்தை மும்பை சதியில் நேரடியாக கண்ட பின்பும் - இத்துனை நாளும் அவர்களை அரசியல் வாதிகளின் பாடி கார்டாக உபயோகித்து கொண்டிருப்பது சகிக்கமுடியாத ஒன்று. உயிரையும் துச்சமென கருதி மக்களை காப்பாற்றும் அவர்களுக்கு படுத்து ஓய்வெடுக்கக் கூட மும்பயில் இடம் தராதது எல்லோரும் வெட்கப்படவேண்டியது. காவல்துறையும், கமாண்டோக்களும் என்றாவது ஒரு நாள் வேலை நிறுத்தமோ, போராட்டமோ அறிவித்தால் அன்று தெரியும் தானை தலைவர்களின் வீரம். இனி அந்தந்த கட்சிகளின் தீக்குளிக்கும் தொண்டர்களை கொண்டே அதனதன் தலைவர்களை பாதுகாத்துக்கொள்ள சட்டம் வரவேண்டும். இல்லாவிட்டால் இன்றைக்கு சுத்திப்பார்த்த மாணவர்கள் "ஏன் போலீஸ் அங்கிள் நீங்க காலேஜ் போற அண்ணங்க டம் டம் னு பஸ் ல தட்டிகிட்டு ஆட்டம்போடும்போது கண்டுக்காம ஜீப் எடுத்துகினு கூடவே போறீங்க?" ன்னு கேள்வி கேட்டு இவிங்க நிஜமாவே சிரிப்பு போலீஸ் தான் போல என்ற முடிவுக்கு வந்து விடுவார்கள். இட்லி வடையின் நலன் கருதி இரண்டாவது செய்திக்கு பின்னூட்டம் இடவில்லை. ^_^

மானஸ்தன் said...

//இரண்டு துணிச்சல்(!) வாய்ந்த அறிக்கைகளின் சாரம் மட்டும் தருகிறேன் இட்லிவடை நலன்(?) கருதி.
//

ரெண்டுமே "சர்வ சப்பை மேட்டர்". ஒண்ணுமே இல்லாத இந்த நியூஸ் ரெண்டுக்கும் எதுக்கு இந்த பில்ட்-அப் என்று தெரியவில்லை. இட்லிதான் விளக்க வேண்டும்.

ரீசன்ட் "தினகரன்" நியூஸ் போட்டு இருந்தாகூட ஏதோ ஓகே என்று சொல்லி இருக்கலாம்.

இட்லியோட சேந்ததால இன்பாவின் உப்பு-காரம் கொரஞ்சதா, இல்லை ............? சம்பந்தப்பட்டவர்கள் ஒரு வரி சொன்னால் வாசகர்கள் சந்தோஷப்படுவார்கள்.

குழந்தைவேலு said...

இந்த வாரம் சண்டேனா இரண்டு நன்று.

காவல்துறை - ஜெயலலிதா ஆட்சியில் கருணாநிதியாலும், கருணாநிதி ஆட்சியில் ஜெயலலிதாவாலும் ஈரல் கெட்டுப்போனதாக கூறப்படும் துறை. ஆக எப்போதும் ஈரல் கெட்டிருக்கும், அரசியல்வாதிகளின் பார்வையில்.. உண்மையை விளக்க காவல்துறை அடிக்கடி இதுபோன்ற காட்சிகளை நடத்த வேண்டும்.

கருணாநிதி வெளியிட்ட அறிக்கைகளிலேயே உண்மையுடன் எழுதப்பட்ட ஒரே அறிக்கை இதுதான் என நினைக்கிறேன்.

காங்கிரஸ் கட்சியின் புதிய கோஷ்டி இன்னும் செயல்பட ஆரம்பிக்கவில்லை போலத்தெரிகிறது. அதுவரை இளங்கோவன் அறிக்கைவிடலாம்.

அரசாங்கச் சான்றிதழ்களின் படி கலாநிதிமாறனும் அவரது குடும்பத்தினரும் இன்னும் மோஸ்ட் பேக்வர்டாமே.. நெசமாவா???

குழந்தைவேலு

தங்கராசு said...

எஸ்.கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு இரண்டு சின்னக் கேள்விகள்.
1. கோDi என்பது தவறு என்றும் கோTi என்பதுதான் சரியானது என்றும் எதை வைத்து சொல்கிறீர்கள்? இந்தியில் அப்படி சொல்வதாலா? (ஏன் ஹிந்தி என்று சரியாக எழுதவில்லை என்று கேள்வி எழுப்ப வேண்டாம்.)
2. >இந்தியர்கள் அனைவரும்... தமிழர்கள் மட்டும் < தமிழர்கள் இந்தியர்கள் இல்லையா?
பிற்குறிப்பு. தவிர என்பதை தவிற என்று எழுதும் நீங்கள் எழுத்துப் பிழைகளை களைந்து விட்டு உச்சரிப்பு பிழைகளுக்கு வாருங்கள்.

vedanarayanan said...

போலீஸ் என்றல் political influence , encounter killing இல்லாம இருக்கணும். அதெல்லாம் 60s .

நம்ம politician voteக்காக ஸ்ரீலங்கன் issue பயன் படுத்தினாங்க கறது ரொம்பவே வெளிச்சம்.

நம்ம மக்களுக்கு எப்படி alternative politicians இல்லையோ அதே மாதிரி, ஸ்ரீலங்கன் தமிழனுக்கும் alternative leaders இல்லை or கொல்ல பட்டனர் என்பதே உண்மை .

vedanarayanan said...

அப்பறம் இந்த கோடிஸ்வர பட்டியல் எல்லாம் share மார்க்கெட் trend பொறுத்த விஷயம். சன் டிவி share ஒழுங்கா இல்லாட்ட அவன்க கீழ போக சான்ஸ் இறுக்கு.

எந்திரன் success ஆகாது என எனக்கு தோன்றுகிறது. Old ரஜினி, Unknown ராய், robots பத்தின stroy ... சங்கர் உட first failure ஆகா இருக்கும் என நினைக்கிறன்.

jaisankar jaganathan said...

//இந்த பட்டியலில் "'எந்திரன்" படம் வெளியான பின்னர் சன் டிவி கலாநிதி மாறன் முதல் இடம் பெறுவார் என்று என்னிடம் சொன்னார் கோபி என்ற ஒரு பகீர்(?) சித்தர்//

pitchai edukakooda poolam

S. Krishnamoorthy said...

Koti or Kodi?
தவிர என்று தான் இருக்கவேண்டும். பிழைபொறுத்தருளுக தங்கராஜ் அவர்களே!
மீண்டும் சொல்லுகிறேன் கோTi என்பதுதான் சரியான உச்சரிப்பு.
ஸ்டாலினை சுடாலின் என்று உச்சரிக்கும் நமக்கு இதெல்லாம் எதற்கு?
விட்டுவிடுவோம்.
கிருஷ்ணமூர்த்தி

saivakothuparotta said...

valark police thuraiyin sevaikal

cho visiri said...

//Shree S.Karishnamurthi asked :"ஒரு சின்னக் கேள்வி. தமிழர்களைத் தவிற, இந்தியர் அனைவரும் கோடியைக் கோTi என்று சரியாக உச்சரிக்கின்றனர். தமிழர்கள் மட்டும் ஏன் கோDi என்று சொல்லுகிறார்கள்?"//

In sanskrit and a few other Indian languages, Koti, inter alia, means one hundred lakhs.
Tamil Language has adopted the word with a difference in pronounciation and the syllalbe "Ti" has been converted into "di".
There is nothing unusual about it. Instead of using "Kotti"(vallina Ragaram), Kodi (mellina Ragaram) is used.
The spelling as well as pronouncing is is perfectly in order.

R.Gopi said...

வயத்தெரிச்சலின் முழு உருவம் கண்ணாடியுடன் காட்சி அளிக்கிறது... பெயர் - ஜெய்சங்கர்...

Cinema Virumbi said...

அன்புள்ள இ.வ.

கோti யா கோdi யா?

தமிழில் மொத்த எழுத்துக்கள் குறைவாக இருப்பதால் சில எழுதப் படாத இலக்கண விதிகள் நடைமுறையில் உள்ளன. Maathavi என்று எழுதுவோம். ஆனால் Maadhavi என்று சரியாக உச்சரிப்போம். Maatip pati என்று எழுதுவோம். ஆனால் Maadip padi என்று சரியாக உச்சரிப்போம். அதாவது, இரண்டாம் எழுத்து பொதுவாக தடிக்கும். விதிவிலக்கான Rathi,Koti, Pathi போன்றவற்றில் இந்த விதியை நாம் இயல்பாக உபயோகப் படுத்தி விடுகிறோம்; அது வடமொழி உச்சரிப்பிலிருந்து மாறுபட்டு விடுகிறது. ஒன்றும் தலை போகிற பிரச்னை அல்ல என்பது என் கருத்து !


நன்றி!

சினிமா விரும்பி

Anonymous said...

கிருஷ்ணமூர்த்தியை கிட்டிணமூர்த்தி என்கிறார்களே அது சரியா ?

பிழை விரும்பி

Anonymous said...

PERHAPS THIS IS THE ONLY ARIKKAI OF KARUNANIDHI WHICH IS FACTUAL.BUT HE MUST HAVE TOLD IT WHEN PRABAKARAN WAS ALIVE.THE MIS GUIDING GIVEN BY TAMILNADU POLITICIANS TO LTTE WAS ONE OE THE REASONS FOR THEIR DOWNFALL.WHEN KARUNA BROKE AWAY IT WAS BIG BLOW TO LTTE.MOST OF THE FIGHTERS CAME FROM EAST.IT WAS KARUNA WHO WON THE FIRST TWO BATTLES FOR LTTE.HAD OUR POLITICIANS BROUGHT BOTH TOGETHR THE STORY WOULD HAHE BEEN DIFFERENT.LTTE LOST CONSIDERABLE MEN AND MATERIALS IN FIGHTING KARUNA.MOREOVER KARUNA KNEW LTTE AREAS AND THEIR STARATEGY LIKE THE BACK OF HIS PALM.HE FULLY TUTORED LANKAN ARMY.BUT FOR KAUNA AND INDIAN GOVT SUPPORT TEN RAJAPAKSHES COULD NOT HAVE WON THE WAR.BEING PART OF CENTRAL GOVT KARUNANIDHI WAS AWARE OF THE GOVTS THINKING.HE COULD HAVE CONVEYED THIS TO LTTE.THEIR STRATEGY WULD HAVE BEEN DIFFERENT.INSTEAD HE WAS ON FAST FOR TWO HOURS MAKING LTTE BELIEVE HE CAN ALTER THE COURSE OF THE WAR.IN THE LAST FEW DAYS EVERYONE KNEW LTTE WILL LOSE. AT THAT TIME KRUNANIDHI COULD HAVE ADVISED PRABHAKARAN TO LAY DOWN ARMS AND GO FOR TALKS. LANKAN GOVT. WAS WILLING FOR TALKS EVEN 10 DAYS PRIOR TO ELIMINATION OF PRABHAKARAN. TILL DATE DMK HAS NOT MOVED ANY RESOLUTION FOR LIFTING THE BAN ON LTTE. FURTHER NALINI WAS NEVER LET OFF SINCE KRUNANIDHI DID NOT WANT TO DISPLEASE SONIA. NOW HE IS SHEDDING CROCODILE TEARS. WHEN PRABHAKARAN CALLED FOR A BOYCOTT OF THE ELECTIONS ALL TAMILNADU POLITICIANS KEPT QUITE. EVERYBODY KNEW IT WILL BE RAJPAKSHE WHO WILL WIN IF TAMILS BOYCOTT THE ELECTION. AT THAT POINT PRABHAKARAN PREFERRED RAJPAKSHE TO RANIL WICKRAMANSHINGHE. THOSE WHO ARE TALKING ABOUT QUARELLING AMONG BROTHERS WERE HEADING THE GOVT. THAT HELPED PADMANABHA KILLERS TO ESCAPE. AT THAT TIME NOBODY ADVISED PRABHAKARAN FOR REASONS BEST KNOWN TO THEM. THE CONTRIBUTION OF TAMIL POLITICIANS IN LEADING LTTE TO BELIEVE THAT TAMILS AND GOVT. OF INDIA WILL SUPPORT THEM IS QUITE HIGH. THIS FALSE BELIEF ONLY LED TO THEIR DOWNFALL. ATLEAST NOW ALL THE TAMIL PARTIES MUST UNITE AND DO SOMETHING REALLY FOR THE WELFARE OF LANKAN TAMILS INSTEAD OF PAYING CHEAP VOTE CATCHING POLITICS. IDLY VADAI HAS GOT A DUTY TO PROBE AND PUBLISH THE NEGATIVE ROLE OF TAMIL NADU POLITICAL PARTIES.

Litmuszine said...

"// எந்திரன் success ஆகாது என எனக்கு தோன்றுகிறது. Old ரஜினி, Unknown ராய், robots பத்தின stroy ... சங்கர் உட first failure ஆகா இருக்கும் என நினைக்கிறன் //""

Leave that "Old ரஜினி" point, since most people enjoying him on screen. So whether he is old or not doesn't matter, atleast now.

But I agree with other points and there is no wonder if this would become a greatest disaster in Tamil cinema. I too sceptical that Sankar might be able to provide an 'interesting substance' (to keep the mainstream audience) without writer Sujatha. Though the story belong to Sujatha, sparkling dialogue would be missing like.. "சாகர நாள் தெரிஞ்சிட்டா வாழற நாள் நரகமாயிடும்" & so on. Sankar may try to cheer us nothing but with his old wines (with hands tied financially by Kalanidhi & call sheet issue(s) with rai bachan).

Anonymous said...

Hi iv
This comment is not related to this post.i went throu yr old blog post On SAKARA tV.On that my comment""""

will it telecost full story of those two sakarchrais who inolved in murser casr an sex scandle
Will it compatete sun or gemini" midnight masala?( as they have their own clipings !!! no need to take from movies!)
Flash News::!! Swamy premananda (A) shade os sai baba starts nwe tv Sankara -2
No need somebody form outside to destroy hiduhism.Thes guys are good enough""

I just remind the poonlas an the public that this criminals are still loafing arround freely.
Iv pl put an up dated post on this case .as sakar Raman got Justice ??

Anonymous said...

If muka would have told before prabakaran's Death it would have been different Story.Now praba is no more. so muka can blabber anything he wish, who cares or who can question.Soon he will say if ltt was not there he would got Thani Ellam Very long time .even he will say that prabakaran came in his dream (pakuatharivu!!)and apperciated hinm for his views and feel regert for his (praba)own mistaekes and requested him to care
the rest of tamils in srilanka as he is the only one can do !!
He is real camalin (in tamil: pachonthi)
But still some allakys beliving that prabakaran is alive and he will come in open soon ( today or
tommorow ?)
If so we will get one more arrikai from muka.imagine how funny it will and get may be get gayana pedanm virudhu for best novel bu muka

Anonymous said...

இட்லி வடை! தமிழன் ஒருத்தன் இந்தியாவின் முதல் பணக்காரன் ஆவதில் உங்களுக்கு என்ன இவ்வளவு காண்டு?

அமுதப்ரியன் said...

Anonymous said...
இட்லி வடை! தமிழன் ஒருத்தன் இந்தியாவின் முதல் பணக்காரன் ஆவதில் உங்களுக்கு என்ன இவ்வளவு காண்டு?

November 24, 2009 3:14 AM

--------------------------------

அனானி முதல் பணக்காரன் ஆவதில் எங்களுக்கு காண்டு இல்லை. தமிழன் வயிற்றில் அடித்துவிட்டு அந்தாள் பணக்காரன் ஆகிவிட்டதில்தான் காண்டு. ராஜ் டீவியிடம் கேளுங்கள். சொல்வார்கள்.

தமிழ்நாட்டில் நீதி என்பது அனைவருக்கும் பொதுவானது


(ஏட்டளவில் மட்டும்)

....அமுதப்ரியன்

Anonymous said...

நல்ல ஆரோக்கியமான விஷயம்... மாலைப்பத்திரிக்கையான மாலை முரசு (சென்னை பதிப்பு) இப்போது தினமும் கார்ட்டூன் வெளியிடுகிறது. பார்த்தீர்களா? அதும் பெண் கார்ட்டூனிச்ட் - பெயர் ஸ்ரீ தேவி _ இட்லி வடையில் அதையும் வெளியிடலாமே

Anonymous said...

நல்ல ஆரோக்கியமான விஷயம்... மாலைப்பத்திரிக்கையான மாலை முரசு (சென்னை பதிப்பு) இப்போது தினமும் கார்ட்டூன் வெளியிடுகிறது. பார்த்தீர்களா? அதும் பெண் கார்ட்டூனிச்ட் - பெயர் ஸ்ரீ தேவி _ இட்லி வடையில் அதையும் வெளியிடலாமே