பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, November 18, 2009

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 18-11-2009

முனி இட்லிவடைக்கு எழுதும் கடிதம்...

அன்புள்ள இட்லிவடை,

சமீபத்தில் மதுரைப் பக்கம் சென்றிருந்தேன். வந்தே மாதரம் பாடலை வைத்து இந்து-முஸ்லிம் அமைப்புகளுக்கு இடையே போஸ்டர் யுத்தம் தொடங்கியுள்ளது. நம் நாட்டில் தைரியமாக இது தான் நாட்டின் கொள்கை என்று சொல்லாதவரை இது மாதிரி மத சண்டைகள் நடந்துக்கொண்டு தான் இருக்கும். இதனால் பெரிய அசம்பாவிதம் நடக்கக் கூடாது என்று காவல்துறை பாவம் கலங்கி போயிருக்கிறது. ஆனால் காவல்துறையை தன் கீழ் வைத்துள்ளவர் முரசொலியில் "வந்தே மாதரத்தை கட்டாயமாகத் திணிக்கக்கூடாது; அதை மக்களே மனமுவந்து ஏற்க அனுமதிக்க வேண்டும்" என்று அத்வானி 1998ல் அறிவித்தார்" என்று இந்த பிரச்சனையை அணையாமல் பார்த்துக்கொள்கிறார். இன்னொரு கோவை குண்டு வெடிப்பு மாதிரி ஒரு சம்பவம் தமிழ் நாட்டுக்குத் தேவையா? எல்லோருக்கும் தெய்வ பக்தியும் இருக்கணும், தேச பக்தியும் இருக்கணும். அதை உணர்த்துவது மாதிரி பெரியவர்கள் பேச வேண்டும். அரசியல் தலைவர்களிடம் அதை எதிர்பார்க்க முடியாது. "நான் ஒரு மராட்டியன் என்பதில் பெருமை அடைகிறேன். ஆனால், முதலில் நான் ஒரு இந்தியன்" என்று சச்சின் மாதிரி தைரியமா எப்போது நம் தலைவர்கள் கற்றுக்கொள்ள போகிறார்கள்? சச்சின் 100 அடித்து இந்தியா வெற்றி பெறுகிறதோ இல்லையோ, நிச்சயமாக இந்தப் பேச்சில் வெற்றி பெற்றுவிட்டார்.

மராத்தியோ ஹிந்தியோ எல்லாம் நல்ல மொழி தான் என்ற உணர்வு நமக்கு வேண்டும். தமிழக அரசியல்வாதிகள் ஹிந்திக்கு தார் அடித்த பலனை நாம் இன்றும் அனுபவித்துக்கொண்டு தான் இருக்கோம். ஹிந்தியோ தமிழோ இசைக்கு மொழி கிடையாது என்பதை மீண்டும் நிருபித்துள்ளார் இளையராஜா. கும் சும் கும் என்ற காப்பி சாயலில் ( காப்பி அடித்த அல்ல) இருக்கும் பாடலை மீண்டும் பா(paa) படத்தில் உபயோகித்துள்ளார். பவதாரினி மற்றும் அருமையான கோரஸ் கொண்டு பாடப்பட்ட பாடலுக்கு மொழி கிடையாது என்பதை உணர்த்துகிறது. அதே போல பக்திக்கு மதம் கிடையாது. தெய்வ பக்திக்கும் தேச பக்திக்கும் சின்ன வித்தியாசம் இருக்கு. தெய்வ பக்தி தாயின் படத்தைத் தரிசிப்பது மாதிரி, தாயையே தரிசிப்பது போன்றது தேச பக்தி. (இங்கே "அம்மா" வாசனை வருதே என்று நினைப்பவர்கள் "தந்தை" என்று மாற்றிப் படித்துக்கொள்ளுங்கள்). இதை எல்லோரும் உணர்ந்தால் நாட்டுக்கு நல்லது. இல்லை என்றால் ஓபாமா மாதிரி ஆட்கள் நாட்டாமை செய்வதை நாம் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும்.

நேற்றுவரை இந்தியா பாகிஸ்தான் இடையேயுள்ள காஷ்மீர் பிரச்சனை, உள்நாட்டுப் பிரச்சனை, இதில் அமெரிக்கா தலையிடாது என்று கூறி வந்த அமெரிக்கா திடீர் என்று நேற்று இந்தியா பாகிஸ்தான் இடையேயுள்ள உறவைக் கண்காணிப்பதற்கு சீனாவை நியமிக்கிறது. மன்மோகன் சிங் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். ஒபாமாவிற்கு யார் அதிகாரம் அளித்தது? தவிர இந்தியாவின் வெளியுறவு விவகாரங்களில் கட்டபஞ்சாயத்து வேலை செய்வதற்கு சீனாவிற்கு என்ன அதிகாரம் இருக்கிறது?? அநேகமாக இந்தியாவில் உள்ள அறிவு ஜீவிகளான கம்யூனிஸ்டுகள் அமெரிக்காவின் இம்முடிவை வரவேற்று இன்றோ அல்லது நாளையோ அறிக்கை வெளியிடுவர். அமெரிக்காவுடன் அவர்கள் ஒத்துப் போகும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக இது அமையலாம். இந்த கூட்டறிக்கைக்கு வழக்கம் போல் நம் முதுகெலும்பற்ற இந்திய அரசு மெளனம் காக்கிறது. எதிர்க்கட்சிகள் (கம்யூனிஸ்டுகள் தவிர) யாரேனும் இப்பிரச்சனையைக் கிளப்பினால் அதிகபட்சமாக கண்டனம் தெரிவிக்கப்படும். நீ என்ன நினைக்கிற இதப் பத்தி?

அட, முதலில் அருணாச்சலத்தின் பிரச்சனையை தீர்க்க முடியுமா என்று பார்க்கட்டும் அமெரிக்கா. சென்ற ஆண்டு அருணாச்சலைச் சேர்ந்த IAS அதிகாரிகள் சீனாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள விசா தேவையில்லை என சீனா அறிவித்தது. அருணாச்சலத்தை சீனாவின் ஒருங்கிணைந்த பகுதியாக அறிவித்து சீனா அறிக்கை விடுகிறது. அருணாச்சலத்திற்கு இந்திய அரசாங்கப் பிரதிநிதிகள் மற்றும் மன்மோகன் சிங் வருவதற்கு கண்டனம் தெரிவித்தது. காஷ்மீரத்தை தனிநாடாக பாவித்து, காஷ்மீரைச் சேர்ந்தவர்களுக்கு, இந்திய பாஸ்போர்ட்டில் அல்லாமல் தனியாக விசா வழங்க வேண்டும் என்று ஐடியா கொடுக்கிறது. அதை விடுங்க. காஷ்மீரிலிருந்து சீனாவிற்கு வியாபார நிமித்தமாக வருவோருக்கு சீனா இந்திய பாஸ்போர்ட்டிலல்லாமல், தனியானதோரு தாளில் விசா முத்திரையிட்டு வழங்கிவருகிறது.

இதுல ரொம்ப வேடிக்கை என்னன்னா இதுமாதிரி சீனா ரெண்டு வருஷமா பண்ணுதாம். நமக்கு போன மாசம்தான் தெரியும். ஐ மீன் இந்திய அரசுக்கு. அந்த அளவுக்கு இருக்கு நம்மை ஆளும் அரசு. நம்ம அலட்சியமா இருக்கோம். சீனாவின் திபெத் ஆக்கிரமிப்பு அதற்கு அவர்கள் வெளியிட்ட வரைபடம், இப்படி பல விஷய்ங்கள் இருக்கு. ஆனால் இது எல்லாம் ஓபாமா காதில் விழாமல் நோபல் பரிசு என்ற செய்தி மட்டும் தான் அவர் காதில் விழும் போலிருக்கு. நம்ம அரசாங்கத்துக்கு மூளை சைஸ் Zero!

பேசாம சோனி அறிமுகப்படுத்தியுள்ள சோனி எக்ஸ் (Sony X) லேப்டாப்புக்கு ஹிந்தி நடிகை கரீனா கபூரை தேர்ந்தெடுத்தற்கு பதிலா இந்திய அரசைத் தேர்தெடுத்திருக்கலாம். தன்னுடைய கச்சிதமான உருவத்திற்கு தகுந்த படி கரீனா கபூரை தேர்தெடுத்திருக்கிறது சோனி. எனக்கு ஒரு டவுட் இந்த மடி கணிணியை ஆண்கள் விரும்பி வாங்குவார்களா அல்லது பெண்கள் விரும்பி வாங்குவார்களா ? அடுத்த டவுட். Zero Sizeக்கு பிராண்ட் அம்பாசிடராக இருக்கும் கரீனா கபூர், Zero Degree புத்தகத்துக்கும் இருப்பாரா ?

குர்பான் படத்தில் நான் முதுகு தெரிய நடித்திருப்பது சிவசேனா தொண்டர்களை டென்ஷன் (?) படுத்தியுள்ளது. உடனே படத்தின் சுவரொட்டிகளை கிழித்து போராட்டம் நடத்தியுள்ளார்கள். ஆனால் கரீனா இதற்கு எல்லாம் அசரவில்லை இதில என்ன ஆபாசம் இருக்கிறது? இது டாப்லெஸ் இல்லை. மாறாக பேக்லெஸ் என்கிறார். கரீனாவின் வீட்டுக்கு நேரில் சென்று அவருக்கு ஒரு புடவையை அன்பளிப்பாக தரப்போவதாக சிவசேனா நிர்வாகி அறிவித்து இருக்கிறார். அவங்க கிட்ட கூடவே மறக்காமல் மேட்சிங் ஜாக்கெட் எடுத்துட்டுப் போகச்சொல்லி யாராவது சொன்னாத் தேவலை.

பெண்களுக்கு இந்திய அரசும் எதிர்கட்சிகளும் எவ்வளவு செய்கிறது. ஆனால் குமுதம் அரசு பதில்களில் போன வாரம் இதை படித்தேன்.
ஒரு ஊர்வலம். இரண்டு சவப்பெட்டிகள். அதன் பின்னால் ஒரு நாய். அதன் பின்னால் ஒரு மனிதன். அவர்களுக்குப் பின்னால் வரிசையாக நூற்றுக்கணக்கான ஆண்கள்.
இந்த ஊர்வலத்தைப் பார்க்க விசித்திரமாய் இருக்க, முதலாவது போய்க் கொண்டிருந்த மனிதனிடம் என்னவென்று விசாரித்தான் ஒருவன். அதற்கு அவன், `முதல் சவப்பெட்டியில் இருப்பது என் மனைவி. இரண்டாவதில் என் மாமியார்.அவர்களுக்கான ஊர்வலம் இது' என்றான்.
`ஐய்யய்யோ!அப்படியா! இந்த நாய்?' என்று நாயை சுட்டிக்காட்டினான் வந்தவன்.
`ஓ, அதுவா? இந்த நாய்தான் என் மனைவியையும் அவளுடைய அம்மாவையும் ஒரே கடியில் கொன்றது'
வந்தவன் சற்று யோசித்தான். `அந்த நாய் எனக்குக் கிடைக்குமா?'
`உனக்கும் வேணுமா, அப்போ பின்னாடி வர க்யூவுல போய் நில்லு' என்றான் மனைவியை பறிகொடுத்தவன்.

கூடிய சீக்கிரம் இந்த மாதிரி நாய் ஜோக்குக்கு மேனகா காந்தி கண்டனம் தெரிவிப்பார் என்று நினைக்கிறேன். ஒரிசா கால்நடை கல்லூரி விழாவில் நாய் முன்னங்கால்களை தூக்க செய்து நடக்க வைத்துள்ளனர். உடனே "இது மிருகவதைக்கு ஒப்பாகும்' என கூறி இதற்கு அனுமதியளித்த பல்கலைகழகத்துக்கு மேனகா கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியாவிலேயே முதல்முறையாக, தமிழக தீயணைப்புத் துறையில் மோப்ப நாய்கள் அடங்கிய மீட்புப் படைப் பிரிவு துவக்கப்பட்டுள்ளது. இந்த நாய்களும், போலீஸ் நாய்களும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும், இல்லை மேனகா காந்தி இதற்கு கண்டனம் தெரிவிப்பார். இந்த மோப்ப நாய்கள் வைத்து ஸ்பெக்ட்ரம் ஊழல் கண்டுபிடிக்க முடியுமா என்பது என் அடுத்த டவுட். இந்த கடிதம் பூரா எனக்கு ஒரே டவுட்டு டவுட்டா வருது.

முல்லைப் பெரியாறு அணை பற்றி தினமும் ஜெயலலிதா அல்லது விஜயகாந்த் ஏதாவது அறிக்கை விட்டுக் கொண்டு இருக்க, முரசொலியும் சளைக்காமல் எந்த பத்திரிக்கை "சளைக்காமல்" திமுக பற்றி நல்ல விதமாக எழுதியிருக்கிறார்கள் என்று எடுத்து போடுகிறது. தமிழ் நாட்டுக்கு எல்லா அண்டை மாநிலத்திலும் தண்ணீரால் பிரச்சனை தான். கேரளா பகை, ஆந்திராவும் அணை கட்டுவதில் தகராறு. கர்நாடகாவில் கேட்கவே வேண்டாம், காவிரி பிரச்சனை. பிரச்சனை இல்லாத ஒரே மாநிலம் புதுச்சேரி அங்கே நமக்கு கிடைப்பது வேற மாதிரி 'தண்ணீ'".

தமிழகத்துக்கு தண்ணீர் என்றாலே தலைவலி என்று ஆகிவிட்டது. பாஜக விற்கு எப்போதும் புதுத் தலைவலி வந்துக்கொண்டே இருக்கிறது. உமா பாரதி மற்றும் கல்யாண் சிங் ஆகிய இருவரும் தாய் கழகம் திரும்புகின்றனர். கல்யாண் சிங் இதற்கு முன் எவ்வளவு கட்சி மாறியிருக்கார் என்று அவருக்கே தெரியாதாம். உமா பாரதி பற்றி கேட்கவே வேண்டாம். ஒருவேளை இவர்கள் வருகிறார்கள் என்று தெரிந்து தான் திருநாவுக்கரசர் காங்கிரஸுக்கு ஓடி போய்ட்டாரா?

இந்தியா எங்கள் நாடு அப்படி இப்படி என்று உதார் விடும் பி.ஜே.பி ரெட்டி சகோதரர்கள் தங்கள் தொழில் வசதிக்காக கர்நாடகாவை பணயம் வைத்து பி.ஜே.பியை தோற்கடித்துள்ளார்கள். இவர்கள் இந்திய நாடு தேசிய ஒருமைபாடு என்ற ஜல்லி எல்லாம் இனிமே அடிக்க கூடாது. என்ன நான் சொல்லுவது?

உலகிலேயே அதிவேக, மற்றும் அதி நவீனமாக சுகோய் விமானத்தில் பயணம் செய்யப் போகும் முதல் பெண் ஜனாதிபதியாகப் போகிறார் இந்திய ஜனாதிபதி பிரதிபா பாட்டீல். இது கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெறப் போகிறதாம். இதை சீஃப் ஏர் மார்ஷல் பெருமையாக சொல்லியுள்ளார். இப்பயணம் முப்பது நிமிடங்கள் நீடிக்குமெனவும், அதற்கான முழு உடல்தகுதியுடன் ஜனாதிபதி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். நல்ல தில் உள்ள ஜனாதிபதி தான்!

ஆனால் பாரு, இந்த விஜய் டிவிக்கு என்ன தில் இருக்க வேண்டும் தாலி பற்றி விவாதம் நடத்த? பலர் டிவியில் அந்த நிகழ்ச்சியைப் பார்க்கவில்லையாம். தமிழ் ஹிந்து சைட்டில் வந்த பிறகு தான் அதை பலர் தேடிப் பார்த்துள்ளார்கள். அந்த விதத்தில் தமிழ் ஹிந்து சைட்டுக்கு விஜய் டிவி கடமை பட்டிருக்கிறது. விஜய் டிவி மீது ஆர்.சுப்ரமணியம் வழக்கு தொடர்ந்துள்ளார். கல்கியில் ஒரு பெண்மணி லாஜிக்கா ஒரு கேள்வி கேட்டிருக்கார் - சட்டசபையில் அமைச்சர் உறுதி மொழி எடுத்துக்கிறதை கிண்டலடிக்கிற மாதிரி ஒரு மத அடையாளத்தை எப்படி கிண்டலடிக்கலாம் என்று. இதற்கு கோபிநாத் என்ன பதில் சொல்லுவார்? அவருக்கு இதெல்லாம் கவலையே இல்லை. இதே மாதிரி இன்னும் ஒரு நிகழ்ச்சி நடத்தி ஒரு செட் மக்களை வைத்து அடுத்த பக்க மக்களக்கு லட்சோபலட்சம் விஜய் டிவி வாசகர்கள் பார்க்க சாபம் குடுக்க சொல்லி ரசித்தார். டீவில மூஞ்சி வந்தா என்ன எழவப் பேசறோம் என்ற நினைப்பே இல்லாமல் ஆட்டு மந்தை மாதிரி பேசும் ஆட்கள் இருக்கும் வரை கோபிநாத் மாதிரி "அதி புத்திசாலிகள்" காட்டில் நல்ல மழை அடித்துப் பெய்யும். என்ன சரிதானே?


சென்னையில் திரும்ப மழை ஆரம்பித்திருக்கிறது. பேப்பரில் சென்னையில் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு என்று போட்டிருக்கிறார்கள். எனக்கு என்னவோ பாதிப்பே இயல்பாகிவிட்ட பிறகு பாதிப்பே இல்லாமல் இருந்தால் தான் இயல்பு வாழ்க்கை பாதிப்பு என்று நீயூஸ் போடணும்இப்படிக்கு,
எப்பவும் போல இயல்பாய் இருக்கும் முனி

கடைசியாக இந்த லெட்டர் எழுதும் போது கிடைத்த தகவல்.
அடுத்த படத்தின் ஸ்கிரிப்டுடன் ரெடியாக வருகிறாராம் அச்சமுண்டு அச்சமுண்டு அருண். ஆனால், அது தமிழில் இருக்காது என்று சொல்கிறது ஒரு பட்சி ;). அருணிடம் உங்களுக்கு நிஜமாகவே பயமா இல்லையா என்று கேட்டதற்கு, எனக்கு தமிழ் படம் என்றால் தான் பயம் என்றார். ஏன் என்றதற்கு படம் வந்து இரண்டு வாரங்களில் அவர் அலுவலக வாசலிலேயே 30 ரூபாய்க்கு அச்சமுண்டு அச்சமுண்டு டிவிடியை அச்சமில்லை அச்சமில்லை என்று விற்றார்களாம்.

36 Comments:

மானஸ்தன் said...

:> OK.

Das said...

Atleast there is Menaka Gandhi to fight against cruelty to animals. Cruelty in any form should be condemned.

Anonymous said...

இந்தியாவின் தேசிய மொழி - நிச்சயமாக இந்தி அல்ல!

இந்தியாவின் தேசிய மொழி இந்தி என அரசியல் சாசனச் சட்டம் கூறுகிறது. ஆனால் உண்மையில் இந்தியாவில் தேசிய மொழி என்ற ஒன்றே இல்லை என்பதே நிதர்சனமாக உள்ளது. பின்னர் 1967ம் ஆண்டு ஆங்கிலத்தை அலுவலகப் பணிகளுக்காக பயன்படுத்திக் கொள்ள தனிச் சட்டத் திருத்தமே கொண்டு வரப்பட்டது. மேலும், ஒரு குறிப்பிட்ட மொழியை ஆட்சி மொழியாக கொள்ளவும் முடியாது என்ற கருத்தும் அப்போது மறைமுகமாக தெரிவிக்கப்பட்டது. மத்திய அமைச்சர் மு.க.அழகிரி நாடாளுமன்றத்தில் தமிழில் பேச விரும்புகிறார். ஆனால் மத்திய அமைச்சர் ஒருவர் நாடாளுமன்றத்தில் இந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும் என்று கூறுகிறது நாடாளுமன்ற விதி. இதுதொடர்பாக அழகிரி விடுத்த கோரிக்கையையும் நாடாளுமன்ற செயலகம் நிராகரித்து விட்டது. ஆனால், ஒரு நாட்டின் தேசிய மொழிகளில் ஒன்றாக இருக்கும் ஒரு மொழியில், நாடாளுமன்றத்தில் பேச அனுமதி மறுக்கப்படுவது நியாயமற்றது என்ற விவாதம் வெடித்துள்ளது. எம்.பிக்கள் தத்தமது தாய் மொழியில் பேசும்போது அதே சலுகை அமைச்சர்களுக்கும் தரப்படாதது நியாயமில்லை என்ற வாதமும் கிளம்பியுள்ளது. மொத்தத்தில் இந்தியா என்ற ஒரே நாட்டில் ஒரு குறிப்பிட்ட மொழி மட்டும் தேசிய மொழியாக இல்லாத நிலையும், தேசிய மொழிகளில் ஒன்றான ஒரு மொழியில் நாடாளுமன்றத்தில் எம்.பிக்கள் மட்டும் பேசலாம் அமைச்சர்கள் பேசக் கூடாது என்ற முரண்பாடான நிலையும் தான் நிலவி வருகிறது.

Source: http://thatstamil.oneindia.in/news/2009/11/16/india-doesn-t-have-any-national.html

பிரபாகர் said...

மனித வதையைக் கேட்க
மனமில்லாத மக்குப்பய மக்கள்
நாய்வதை பற்றி கேட்டு
மாய்ந்து நக்கும் விந்தை பாரீர்!

Anonymous said...

இந்தியா என்பது ஒரு நாடு இல்லை என்பதற்கும், இந்தியா என்பதற்கு இறைமை இல்லை என்பதற்கும் காஸ்மீர் விவாகாரமே ஒரு உதாரணம். பல நாடுகளை ஒன்றாக இணைத்து வெள்ளையர்கள் நிர்வாகித்தார்கள். அந்த நிலப் பகுதியை இந்தியா என்று சொன்னார்கள். அவ்வளவுதான். இன்றைக்கு தன்னை இந்தியன் என்று மார்தட்டுபவனின் தாத்தாவின் தாத்தாவிற்கு இந்தியா என்றாலே என்னவென்று தெரிந்திருக்காது.

Anonymous said...

சீனா மக்களின் மனித உரிமை பற்றி பேசகூடாது, என பல நிபந்தனைகளுடன் பேச்சு நடந்திருக்கிறது.
ஒரு நாடு முன்னேறுகிற போது அதற்க்கு கிடைக்கும் மரியாதை(?) இது.

இந்த அமெரிக்க அதிபரின் சுற்று பயணம் இந்தியாவிற்கு பெரிய ஆப்பு தான்

அமெரிக்காவின் பாண்டுகளில் மட்டும் எண்ணூறு பில்லியன் முதலீடு செய்திருகிறதாம் சீனா. சீனாவின் மொத்த அமெரிக்க முதலீடு இரண்டு ட்ரில்லியன் டாலர்களை தாண்டுகிறதாம்.

If I have to tell in Rajini style.
நூறு வருசத்துக்கு முன்னாடி பிரிட்டிஷ், அப்புறம் இப்போ அமெரிக்கா. அடுத்தது யாரோ?

நமக்குள் சண்டை நடப்பின், நன்மை அமெரிக்காவிற்கு.
பத்தவைச்சிட்டு கமுக்கமா எஸ் ஆகிடுவானுக. கொளுத்தி போடுவதில் பெரிய ஆளுங்க அமெரிக்கர்கள்.

சீனாவுடன் சுமுகமான நட்பிற்கு தேவையான நடவெடிக்கைகளை எடுப்பது நன்று.

Itsdifferent said...

I dont know if you guys have seen this or not.. check it out, its really cool. The opportunities are endless.
http://www.ted.com/talks/pranav_mistry_the_thrilling_potential_of_sixthsense_technology.html

வீரராகவன் said...

சீனா மட்டுமல்ல, கூகிளும் கூட நம்மை ஏமாற்றுகிறது. ஆதாரம் http://www.dinamalar.com//topnewsdetail.asp?print=1&news_id=1583
இட்லி வடையாரே இதை தனி பதிவாக போடவும்

kggouthaman said...

// நூறு வருசத்துக்கு முன்னாடி பிரிட்டிஷ், அப்புறம் இப்போ அமெரிக்கா. அடுத்தது யாரோ?//

நூறு வருசத்துக்கு முன்னாடி பிரிட்டிஷ்: UK

அப்புறம் இப்போ அமெரிக்கா:
US

அடுத்தது யாரோ?
"US"
நாம்பதான் - கவலையை விடுங்க!

Itsdifferent said...

//இந்தியா என்பது ஒரு நாடு இல்லை என்பதற்கும், இந்தியா என்பதற்கு இறைமை இல்லை என்பதற்கும் காஸ்மீர் விவாகாரமே ஒரு உதாரணம். பல நாடுகளை ஒன்றாக இணைத்து வெள்ளையர்கள் நிர்வாகித்தார்கள். அந்த நிலப் பகுதியை இந்தியா என்று சொன்னார்கள். அவ்வளவுதான். இன்றைக்கு தன்னை இந்தியன் என்று மார்தட்டுபவனின் தாத்தாவின் தாத்தாவிற்கு இந்தியா என்றாலே என்னவென்று தெரிந்திருக்காது//
அய்யா புத்திசாலி அனானி, அப்படி பார்த்தா உலகத்தில் இப்போது ஒரு நாடக இருக்கும் எந்த நாடுமே உங்கள் விதிக்குள் வராது. அமெரிக்கா 250 வருடங்களுக்கு முன் எப்படி இருந்தது? அதே போன்று தான் ஒவ்வொரு நாடும். உங்க தாத்தா வேட்டி கட்டி கொண்டிருந்தார், அவருக்கு தாத்தா குடுமி வைத்திருந்திருப்பார், நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? நாகரீகம் முன்னேற முன்னேற நாமும் நம்மை மாற்றி கொண்டு வாழவில்லையா? அது போலதான், நாடு என்ற ஒரு உணர்வும். எதாவது ஒரு முயற்சி அல்லது அமைப்பு தான், சிதறி கிடந்த சிற்றூர்களை நாடாக மாற்றியுள்ளது, இது தான், உலக வழக்கு. இன்று உள்ள அத்தனை நாடுகளுக்கும் ஒரு "காஷ்மீர்" உள்ளது. அதை அவர்கள் எப்படி கையாளுகிறார்கள் என்பதை பொருத்து அதன் தீவிரம் அதன் வீச்சு உள்ளது. நம் வோட்டு பொறுக்கிகள், முதுகெலும்பில்லாமல் இந்த மாநிலத்தை தேசிய நீரோட்டத்தில் இணைக்காமல், தனியாக காத்து வருகின்றனர். அவர்களை கேள்வி கேட்பதை விட்டு விட்டு, இந்தியா என்ற ஒரு அமைப்பை, கேள்வி கேட்காதீர்கள். ஒவ்வொரு மனிதனுக்கும், தம் தேசம் என்ற ஒரு உணர்வு முக்கியம், தேசம் இல்லா குடிகளை கேட்டு பாருங்கள், அதன் வலி தெரியும். அதனால், எவ்வளவோ பாடுபட்டு ரத்தம் சிந்தி, ஏற்படுத்தப்பட்ட இந்த ஒரு அமைப்பை, குலைக்கும் எண்ணத்தை தயவு செய்து விடுங்கள். கூட்டு குடும்பம் கஷ்டம் தான், ஆனால் தனிக்குடும்பம் நடத்தும் ஒவ்வொருவனின் ஏக்கத்தையும், புரிந்து கொள்ளுங்கள். நாடுகள் இணைந்து செயல் பட விழைகின்ற இந்த கால கட்டத்தில், ஒரு நாட்டை துண்டாட நினைப்பதில் எந்த வித பயனும் இல்லை. நம் தேசத்தை கொண்டாடுவோம், நாடு எனக்கு என்ன செய்தது என்று கேட்பதை விட, நாம் இந்த நாட்டுக்கு என்ன செய்தோம் என்று சிந்திப்போம்.

Balu said...

//**//இந்தியா என்பது ஒரு நாடு இல்லை என்பதற்கும், இந்தியா என்பதற்கு இறைமை இல்லை என்பதற்கும் காஸ்மீர் விவாகாரமே ஒரு உதாரணம். பல நாடுகளை ஒன்றாக இணைத்து வெள்ளையர்கள் நிர்வாகித்தார்கள். அந்த நிலப் பகுதியை இந்தியா என்று சொன்னார்கள். அவ்வளவுதான். இன்றைக்கு தன்னை இந்தியன் என்று மார்தட்டுபவனின் தாத்தாவின் தாத்தாவிற்கு இந்தியா என்றாலே என்னவென்று தெரிந்திருக்காது//***/

Itsdifferent said...
/***அய்யா புத்திசாலி அனானி, அப்படி பார்த்தா உலகத்தில் இப்போது ஒரு நாடக இருக்கும் எந்த நாடுமே உங்கள் விதிக்குள் வராது.***/

Beautiful reply to the idiotic comment!! I think the person who posted that stupid comment belongs to a rerrorist group!!

Anonymous said...

Where is that Thali Rajasthani meals served? Yummy photo. :-)

Dubai Nara said...

என்ன இட்லி என்னூட கமென்ட்-ஐ காணலையே ? ஏதாவது ஆகாதது எழுதிடனா ?

IdlyVadai said...

//என்ன இட்லி என்னூட கமென்ட்-ஐ காணலையே ? ஏதாவது ஆகாதது எழுதிடனா ?//

நான் எதையும் ரிஜக்ட் செய்யவில்லை.

Guru said...

idlyvadai on its full form.. Kalakkal Kaditham to muneeswaran.Idlyvadaiyin doubtukal seekiram clearaga muneeswaran arul puriya vendum, :)

Vikram said...

"I AM INDIAN"nu sonna koodava - naama naatulla prechanai -
enna kodumai sir idhu :-(

nalla gaalam - "nee ranji trophyla thaan aadanum - indiakku aada koodadhu"nnu - condition podala...

varuthathudan,
Vikram..

படுக்காளி said...

முனி லெட்டர் பிரமாதம்.

அரசியல், சினிமா, நிகழ்வு என ரவுண்ட் கட்டி அடித்து த்த்துவார்த்தமாய் சொன்ன இட்லி வடைக்கு சபாஷ்....

மதம், மொழி, தேசம் என எந்த அடையாளமுமே சைடில் இருந்தா நல்லது. நம்ம அடையாளம் தவிர மத்தது எல்லாம் ஜீஜீபி என்ற நினைப்பூ மாத்திப்புட்டு, அடுத்தவன மதிச்சா மேட்டர் ஒகே.

saivakothuparotta said...

well done "its different" i agree your comment.

Anonymous said...

INDIA IS CREATED ONLY AFTER BRITSH LEFT.BEFORE THAT ALL PART OF INDIA (WHAT WE CALLED NOW) WERE RULED BY DIFFENT KINGS.CAN ANY ONE SAY WHO RULED INDIA BEFORE BRITSH? OFCOURSE ALL PART OF INDIA COME TOGETHER TO FIGHT AGONIST BRITSH AS A NEBHIOUR.NOT AS ALL INDIANS.FEW CULCTRUAL THINGS CONNECT US .IT DOSENT MEANT THAT ALL WE ARE SAME.ONLY THE PAPPNAS CLAIM CLAIMS INDIA,NATIONA,ETC.TO RULE OVER THE POOR PEOPLE.CAN ANY BODY PONT OUT ANY THING IN COMMON WINTN OUR STAES? EACH STATE FIGHT BETWEEN THEM FOR SMALL RESON LIKE WATER,LANGAGUE,EMPLOMENT ETC.IF INDIAN IS ONE COUNTRY WHY THERE IS SO MANY PARTYS?(PL DONT SAY ITS DEMOCRACY)WHY RAJ THAKRES,EDYIURAPPA,KARUNANTHI SO MANY PEOPLE WHO CLAIMS THE LAND WHERE THEY STAY IS THEIR COUNTRY.THEN WHERE IS THE QUESTION OF NATONALITY.. INDIA ONE COUNTRY...? ALL RUBBISH.WE SHOULD ACCEPT FACT THAT INDIA IS NOT ONE COUNTRY.ITS GROUP OF COUNTRYS RULED BY THEIR ONWN SONS OF THE LAND. lIKE IDLY VADAI:(-

Anonymous said...

எனக்கு தமிழ் படம் என்றால் தான் பயம் என்றார். ஏன் என்றதற்கு படம் வந்து இரண்டு வாரங்களில் அவர் அலுவலக வாசலிலேயே 30 ரூபாய்க்கு அச்சமுண்டு அச்சமுண்டு டிவிடியை அச்சமில்லை அச்சமில்லை என்று விற்றார்களாம்.

Too bad, he should have been given a complimentary pirated DVD to check whether the full movie is in the DVD :).
Btb piracy is a problem in other languages too unless the movie will be in a language like sanskrit or c++ :).

Anonymous said...

முனி டிவிட்டரில் இல்லையா :)

Anonymous said...

the original song :

Sangathil Paadatha kavithai - Auto raja(1982) Ilayaraja song

see the video:

http://www.youtube.com/watch?v=eEQa7c4UAx4http://www.youtube.com/watch?v=eEQa7c4UAx4

யதிராஜ சம்பத் குமார் said...

இந்தியா ஒரு தேசம் இல்லை; பல தேசங்களின் கூட்டமைப்பு என கோஷிப்பவர்களுக்கு::


உங்களது வாதம் சரியெனக் கொண்டாலும், தமிழகம் கூட சேர, சோழ, பாண்டிய, பல்லவர்கள் என பலராலும் ஆளப்பட்ட நாடுகளின் கூட்டமைப்புதானே?? பிறகுதானே மதறாஸ் ஸ்டேட்டாக உருமாறி சமீபமாக தமிழகமாக பரிணாம வளர்ச்சி பெற்றிருக்கிறது??

வீரராகவன் said...

அய்யா அனானி தப்பு தப்பாக படித்து விட்டு பின்னோட்டம் போடாதீர்கள்.
ஏதோ இவர்தான் நேரில் கண்டது போல் ஆங்கிலேயர்கள் வந்த பிறகுதான் இந்தியா உருவானது என்கிறார். என்ன ஒரு அபத்தம். பரத வர்ஷ கண்டே என்றால் என்ன தெரியுமா? இதை படிக்கவும் http://vedantavaibhavam.blogspot.com/2009/09/in-english.html
பொதுவாக நான் பதிவுகளுக்கு மட்டுமே பின்னோட்டம் போட விரும்புகிறேன். கருணாநிதி சொன்னது போல் சிலரின் உளறல்களுக்கு பதில் சொல்வது காலத்தின் கட்டாயம். இட்லி வடையார் மன்னிக்கவும்.

வீரராகவன் said...

அய்யா அனானி தப்பு தப்பாக படித்து விட்டு பின்னோட்டம் போடாதீர்கள்.
ஏதோ இவர்தான் நேரில் கண்டது போல் ஆங்கிலேயர்கள் வந்த பிறகுதான் இந்தியா உருவானது என்கிறார். என்ன ஒரு அபத்தம். பரத வர்ஷ கண்டே என்றால் என்ன தெரியுமா? இதை படிக்கவும் http://vedantavaibhavam.blogspot.com/2009/09/in-english.html
பொதுவாக நான் பதிவுகளுக்கு மட்டுமே பின்னோட்டம் போட விரும்புகிறேன். கருணாநிதி சொன்னது போல் சிலரின் உளறல்களுக்கு பதில் சொல்வது காலத்தின் கட்டாயம். இட்லி வடையார் மன்னிக்கவும்.

Anonymous said...

வந்துட்டான்யா, வந்துட்டான்யா,
இப்போது இந்தியா என்று பேசினாலும், பார்ப்பான் என்று சொல்லி பழிக்க வந்துட்டான்யா.
ஒன்றே ஒன்று, தமிழகத்திற்கு பிழைப்புக்கு வந்த மற்ற மாநிலத்தவரை விட, வேற்று மாநிலத்திற்கு சென்ற தமிழர் அதிகம் என நினைக்கிறேன். (சாரி, பார்ப்பனர்கள் தான் தமிழர்களே இல்லையே என சொல்ல ஆரம்பித்தால் ஜூட்) .

IdlyVadai said...

Mr.No உங்க கமெண்டை ஏற்றுக்கொள்ள முடியாது. நன்றி

Balu said...

/***வீரராகவன் said...
அய்யா அனானி தப்பு தப்பாக படித்து விட்டு பின்னோட்டம் போடாதீர்கள்.
ஏதோ இவர்தான் நேரில் கண்டது போல் ஆங்கிலேயர்கள் வந்த பிறகுதான் இந்தியா உருவானது என்கிறார். என்ன ஒரு அபத்தம். பரத வர்ஷ கண்டே என்றால் என்ன தெரியுமா? இதை படிக்கவும் http://vedantavaibhavam.blogspot.com/2009/09/in-english.html
பொதுவாக நான் பதிவுகளுக்கு மட்டுமே பின்னோட்டம் போட விரும்புகிறேன். கருணாநிதி சொன்னது போல் சிலரின் உளறல்களுக்கு பதில் சொல்வது காலத்தின் கட்டாயம். இட்லி வடையார் மன்னிக்கவும்.***/
/***யதிராஜ சம்பத் குமார் said...
இந்தியா ஒரு தேசம் இல்லை; பல தேசங்களின் கூட்டமைப்பு என கோஷிப்பவர்களுக்கு::***/


Please dont waste your time for answering that stupid again and again. Please read that comment and laugh for few minutes then leave it.

மர தமிழன் said...

அம்மா அப்பா குழந்தைகள் தாத்தா பாட்டி = குடும்பம்னு சொல்றோமே அதெல்லாம் சும்மா!! அப்பா அம்மாவை கல்யாணம் பண்றதுக்கு முன்னாடி அப்பா அப்பாவா இருந்தாரா? அம்மா அம்மாவா இருந்தாளா? அப்பா எங்கியோ ஆம்பளையா இருந்தார் அம்மா எங்கியோ பொம்பளையா இருந்தாள், அட அத விடுங்க, இன்னிக்கு போட்டோவை பார்த்து மார் தட்டும் பேரனை கேட்டு பாருங்கள் அவங்க தாத்தாவுக்கு தாத்தாவுக்கெல்லாம் அவனோட அப்பா பேர் தெரியுமான்னு? உண்மையில் இந்த உலகத்தில் குடும்பம் என்ற ஒன்றே இல்லை சும்மா ரெண்டு பேர் சேர்ந்துகொண்டு நானும் குடும்பம் நடத்துறேன்னு சொல்லி குழந்தை பெத்தா அதே மாதிரி ஊர்ல இருக்கறவன் எல்லாம் செய்தா அது குடும்பம் ஆயிடுமாய்யா?

போகட்டும் மொதல்ல நீ மனுஷனே இல்ல தெரியுமா? தலைன்னு சொல்ற காலுன்னு சொல்ற அட போய்யா ஏதாவது ரெண்டு உறுப்பு ஒன்னா ஒரே மாதிரி அட பொறந்த மாதிரி இப்போ இருக்கியா? தலை ன்னு சொல்ற கை ன்னு சொல்ற... ஒம்போது ஓட்டை இருக்கு ஒடம்புல ஒன்னு வழியாதான் தின்னனம் ஒன்னு வழியாதான் தள்ளனம்னு எல்லாம் சுத்த பேத்தல்!! நீ மனுஷன்னு பீத்திக்கிற ஆனா நீ பொறக்கறதுக்கு முன்னாடி எப்படி இருந்தே எங்கே இருந்த ந்னு தெரியுமா உனக்கு?

புரிஞ்சிக்கங்கையா ஐயாயிர வருஷ சித்தரோட குருவோட அருள் வாக்கு! இத படிச்சு புரிஞ்சுதுன்னா பொழச்ச!! மவனே இல்லாங்காட்டி நீ துன்ன சோறு, குடிச்ச பாலு, உட்ட மூச்சு, போட்டுனு கிற துணி அப்புறம் பலானது பலானது எல்லாம் அதுக்கு முன்னாடி எப்படி இருந்துச்சு ன்னு புட்டு புட்டு வெச்சுடுவேன்,

Anonymous said...

""அய்யா அனானி தப்பு தப்பாக படித்து விட்டு பின்னோட்டம் போடாதீர்கள்.
ஏதோ இவர்தான் நேரில் கண்டது போல் ஆங்கிலேயர்கள் வந்த பிறகுதான் இந்தியா உருவானது என்கிறார். என்ன ஒரு அபத்தம். பரத வர்ஷ கண்டே என்றால் என்ன தெரியுமா? இதை படிக்கவும் ""

""இந்தியா ஒரு தேசம் இல்லை; பல தேசங்களின் கூட்டமைப்பு என கோஷிப்பவர்களுக்கு::


உங்களது வாதம் சரியெனக் கொண்டாலும், தமிழகம் கூட சேர, சோழ, பாண்டிய, பல்லவர்கள் என பலராலும் ஆளப்பட்ட நாடுகளின் கூட்டமைப்புதானே?? பிறகுதானே மதறாஸ் ஸ்டேட்டாக உருமாறி சமீபமாக தமிழகமாக பரிணாம வளர்ச்சி பெற்றிருக்கிறது?? ""

>>>>>>>>>
yes i don' know the history .What about you? in which history its writtern "BARADHA VARSHE" Its all your own pappara manusruthi! You haven't answer my single question.But you are saying I am blabering.Even for the sake arguement if we take india is one nation ,then why we have so many disputes between the states? don't you feel that you are the one who is blabering?
Yathiraj:
You thing yue are asking a very clever question ?its the langauge which connected all chera ,chola etc There is no fight between madurai distt and truchi dirst.if people come from madurai and work in chennai ,people from chennai dont agitate that they should go back to madurai and wofk.That is difference

Baski said...

Itsdifferent said...
/***அய்யா புத்திசாலி அனானி, அப்படி பார்த்தா உலகத்தில் இப்போது ஒரு நாடக இருக்கும் எந்த நாடுமே உங்கள் விதிக்குள் வராது.***/

நல்லா சொன்னீங்க.

/** நாடுகள் இணைந்து செயல் பட விழைகின்ற இந்த கால கட்டத்தில், ஒரு நாட்டை துண்டாட நினைப்பதில் எந்த வித பயனும் இல்லை. **/

அருமை.

.......... எந்த வித பயனும் "நமக்கு" இல்லை என நினைக்கிறன்.
இந்தியா உடைவதில் பல அண்டை நாடுகளுக்கு ஆதாயம் உள்ளது.
அறுபது வருசத்துக்கு முன்னாடி பாகிஸ்தான் என ஒன்றே இல்லை. நம்மில் இருந்து உடைந்த அந்த நாட்டிற்கும்-நமக்கும் ஆயுதம் சப்பளை செய்ய போட்டா போட்டி தான் நடக்கிறது. இன்னும் சில துண்டுகளாக உடைந்தால் நிறைய சப்பளைசெய்யலாமே.

Baski said...

//அடுத்தது யாரோ?
"US"
நாம்பதான் - கவலையை விடுங்க!//

Sir,
I like optimism. But you are too optimistic.

Anony8 said...

If one regularly watches Gopi's both programs, one can feel a flavour of Evangelic propaganda with a subtle anti-Hinduism and anti-Beliefs in it.

Vijay TV is showing its true colours these days. After all it belongs to the Star group which is the front-runner of Evangelic activities in all the developing and 3rd world countries.

Kameswara Rao said...

IV,
Nice letter to Muni.. good topics to touch with and I could see our friends anquish over Nation and Nationality ..it is there in each and everyone of us and who questions it and relates it with Casteism .. what to say ?

If you want to get notice in a mathematician club you should have the guts to say 2+2 = 5 and prove if not you will be called a "Mentally not stable" we have many of them

what to do

Kamesh

Anony8 said...

The anony can't be blamed as a whole, after all that is how it is taught(brain washed) in most of the Madrassas or Xian institutions about India.

In the case of Madrassas itz the fanatic Mughals who did the Indian integration and the crooked British in case of Xian insts.

needless to say, the only common link we all had after British left was the Indic religions and our Vedic roots.

vedanarayanan said...

அருணாச்சல் பிரதேஷ் (AP ) problem :

நம்ம திபெத் பற்றி கவலை படமா இருந்தால், சீனா AP இல் problem பண்ணாது. இது எல்லாம் சீனா பண்ணுற pressure tactic . Very logical for china to do this .

China is worried that இந்தியா பங்களாதேஷ் create பண்ணின மாதிரி, திபெத் create பண்ணிட போகுதேந கவலை.

So இந்தியா tibet problemtha UN கிட்ட விட்டுடலாம்நு தோணுது. No moral support also . We should support them as refuges.

But கம்யூனிஸ்ட் சீனாவ நம்பவே கூடாது.