பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, November 20, 2009

தண்டனைக்கு 12 ஆண்டுகள், நஷ்ட ஈடுக்கு 25 ஆண்டுகள்

1984, ஜூன் 7. மாலை 6 மணி. 28 வயதான அந்த கிராமத்து பெண் தன் கணவருடன் போலீஸ் நிலையத்திற்கு புகார் கொடுக்க சென்றார். போலீஸ் இன்ஸ்பெக்டராக அப்போது பணியாற்றியவர் மங்கள தனராஜ்.

சினிமாவில் வருவதை போல் "நீங்கள் போகலாம்; உங்கள் மனைவியை விசாரித்து விட்டு அனுப்புகிறேன்" என்று கணவரை அனுப்பிவிட்டு, இப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் அந்த இன்ஸ்பெக்டர்.

சட்டம் தன் கடமையை செய்யும் என்று நம்பி, அந்த பெண் தனராஜ் மீது புகார் கொடுத்து சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க புறப்பட்டார். இன்ஸ்பெக்டராக இருந்த தனராஜ், DSP யாக பதவி உயர்வு பெற்று, அந்த பெண்ணின் சட்டரீதியான ஒவ்வொரு நடவடிக்கைக்கும் தனது பதவியை துஷ்பிரயோகம் செய்து முட்டுக்கட்டை போட்டுள்ளார்.

மேலும் அந்த இன்ஸ்பெக்டர் அப்பெண்ணுக்கு எதிராக நீதிமன்றத்தில் ஒரு மனுவையும் தாக்கல் செய்தார். ஆனால் அவை நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டு, இவரது குற்றமும் நிரூபணம் செய்யப்பட்டு (1996 இல்) 11 ஆண்டுகால சிறைவாசம் விதிக்கப்பட்டது.(திருச்சி மத்திய சிறையில் இப்பொழுது இவர் கம்பி எண்ணி வருகிறார்) அந்தபெணுக்கு ஒரு லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க தமிழக அரசும் உத்தரவிட்டது.
இந்த கிரிமினல் வழக்கு விசாரணை முடிய 12 ஆண்டுகளாகி உள்ளது.

செய்தி முடியவில்லை.

தனக்கு ஒன்பது லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்கக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் அந்தபெண் மனு தாக்கல் செய்தார். இது தொடர்பாக இந்த பெண் அரசுக்கு அனுப்பிய பல்வேறு மனுக்களுக்கு எவ்வித நடவடிக்கையும் இல்லை.

25 ஆண்டு போராட்டத்துக்கு பிறகு இந்த புதன் கிழமை தமிழக அரசாங்கம் வழங்க மறுத்த நஷ்ட ஈட்டை வட்டியுடன் வழங்க தமிழக அரசிற்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்திரவிட்டது.

இந்த கிராமத்துப் பெண் சாதாரணமாக வெற்றி பெறவில்லை. போலீஸ் அதிகாரிக்கு தண்டனை விதிக்கப்படும் வரை, 12 ஆண்டு காலம் வழக்கை இவர் நடத்தியுள்ளார். இவர் சந்திக்க நேர்ந்த சட்டச் சிக்கல்களுக்காக தனது அனைத்து உடமைகளையும் விற்றுள்ளார், இவருடைய வீட்டை உட்பட. இப்பெண் தன்னுடைய தோல்வியை ஒப்புக்கொள்ளாமல், சட்டத்தை தன்னுடைய கடமையைச் செய்யும்படி செய்துள்ளார் என நீதிபதி தன்னுடைய தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு தண்டனைக்கு 12 ஆண்டுகள், நஷ்ட ஈடு வாங்க 25 ஆண்டுகள்.

28 வயதில் புகார் கொடுத்து 53 வயதில் வெற்றி பெற்ற இந்த பெண்ணுக்கு ஆண்கள் தினத்தில் சலியூட் அடிப்போம்.


நவம்பர் 2 ஆம் தேதி செய்தி: காவல்துறையை பாராட்டி முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை நகலை சென்னை நகரில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் பொதுமக்கள் பார்வைக்காக போலீசார் ஒட்டி வைத்து மகிழ்ந்தனர்.18 Comments:

மானஸ்தன் said...

piles-தின செய்திகள்/ வாழ்த்துகள் என்று பதிவு போடாதவரை சந்தோஷம்.

:>

Anonymous said...

"25 ஆண்டு போராட்டத்துக்கு பிறகு இந்த புதன் கிழமை தமிழக அரசாங்கம் வழங்க மறுத்த நஷ்ட ஈட்டை வட்டியுடன் வழங்க தமிழக அரசிற்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்திரவிட்டது"
This 9 Lakh Rs When the government will hand over to this Lady???

அமுதப்ரியன் said...

எந்த தேசத்தில் சட்டம், ஒழுங்கு போன்றவைக்கு பங்கம் வருகிறதோ அந்த தேசம் வறுமையில் வாடும்.

திருக்குறள்.

--------
அமுதப்ரியன்

முருகான‌ந்த‌ம் said...

காலம் கடந்த நீதியும் மறுக்கப்பட்ட நீதிதான்....
ஆனாலும் இப்போவாச்சும் நீதி கிடைச்சுதே....
அந்த பெண்ணுக்கு வணக்கங்கள்....

Anonymous said...

இந்த வீராங்கனையைப் பேட்டி கண்டு எந்த ஊடகமாவது (டி.வி., வார/மாத/தின இதழ்கள்)இத்தகைய அராஜகத்தை வெளிப்படுத்தியதா?
புவனேஸ்வரியுடன் பத்திரிகை வீரம் ஓய்ந்துவிட்டதா?
மானமிகு தமிழ்க்குடிமகன்

seetha said...

இவரைப்பற்றி ஆனவியில் வந்தது என்று நினிக்கிறேன்.இவர் கண்வர் கூட அடித்தே கொலப்பட்டார்.இவருடய மகன் எப்படியாவது வக்கீலுக்கு படித்து போராடவேண்டுமென்று போராடவும் செய்தார்

kggouthaman said...

என்னவோ போங்க. தமிழகத்தின் தலை எழுத்து.

Baski said...

"Justice delayed is justice denied".

Instead of praising that woman, this issue can be approached how flaws can be corrected.

Nothing else can make the victim relieved except timely justice.

Also we need more severe punishments to such criminals who misuse their positions.

Raja said...

எத்தன வருஷம் தான் அந்த தேவதையின் கண்ணை கட்டி வெச்சே கேப்பாங்க !ஊரு இன்னும் மோசமாகிடுசுங்க ! அதை அவளும் பார்த்து தெரிஞ்சிகிட்டு, நீதி தரட்டும் !


அம்பேத்கர் சட்டத்தை காலங்களுக்கு ஏற்றவாறு மாற்றுங்கள் என்று சொன்னாருங்க !


ஊரை ஏக்கிரவனுங்க அவனுங்களுக்கு ஏத்த மாதிரி மாதினாங்கலே தவிர, ஒன்னும் நடக்கல !


மீண்டும் ஒரு புரட்சிக்கு என்ன செய்யலாம் ?

saivakothuparotta said...

intha mathiri caseil neethi mandram udanadi theerpu valanga vendum. appoluthuthan adavadikal kuraiyum.

Baski said...

//புவனேஸ்வரியுடன் பத்திரிகை வீரம் ஓய்ந்துவிட்டதா?
மானமிகு தமிழ்க்குடிமகன்//

Well said...

vedanarayanan said...

அந்த பெண்ணை பார்த்தால் நான் காலில் விழுந்து நமஸ்கரிததாக சொல்லுங்கள்.
நான் என்ன, இந்த நாடே ஒரு பெரிய நமஸ்காரம் செய்ய வேண்டும் including மன்மோகன் singh and one of his minister (you see how I meant indirectly , ரொம்ப பயம் )

R.Gopi said...

தலைவர் எவ்வழியோ, போலீஸ் அவ்வழி...

ந.லோகநாதன் said...

அட போங்க சார், சட்டமாவது, ஒழுங்காவது. எல்லாம் வேஸ்ட்... நாம தான் கையில எடுக்கணும் போல.

Anonymous said...

\\அட போங்க சார், சட்டமாவது, ஒழுங்காவது. எல்லாம் வேஸ்ட்... நாம தான் கையில எடுக்கணும் போல.//

லோகநாதன், எதை என்று சொன்னால்ம் நலம்!

அமுதப்ரியன் said...

இன்பா வரவர ரொம்ப தூங்குறீங்க போல. சண்டேனா ரெண்டு எங்க?.


அமுதப்ரியன்

Anonymous said...

An important but relevant information may throw some more surprises in this case. There was a police strike in tamilmnadu in 1979-80(do not remember exactly). This man was inspector in Tuticorin. He initially sided with the police association. After the repression by govt. incresed he switched side and led the govt forces to the hideout of police association leaders/strikers and betrayed his collegues. His betrayal might have cost him his liberty when his juniors might have become officers in the force after his retirement. Not that our police officrs have conscience in all cases. They have it only when it is convenient.

Big B " A Think Tank " said...

See This what the status of our Indian constitution and government, we praise ouself the we suceed in internantional level, sucsess without moral and good governenece and constitution is waste, the happiness of such sucess will not reach a comman man.