பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, November 11, 2009

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 11-11-2009

முனிக்கு இட்லிவடை எழுதும் ஒரு கடிதம்..

மக்கா முனி,

எப்டிகீரே? நேற்று லுங்கி கட்டிகிணு ஆபீசாண்ட போனா படா பேஜாரா பூடுச்சுபா. ரிப்போட்டர்ல 'உ' எழிதராரே அவுரு நம்ம டிவிட் பக்கம் வந்து ஏதோ சொல்ல உடனே அடாங் கொக்க மக்கா என்று லக்கி தம்பி( உங்களுக்கு மட்டும் எப்படி இந்த 'மாதிரி' படம் எல்லாம் கடைகீது ? ) லுங்கியை காலிலிருந்து தலைவரை அவுத்துட்டார், சாரிபா எழுதிட்டார். மேட்டர் இன்னான்னா சினிமாவுல லுங்கி கட்டிக்கொண்டு வந்தா அவங்க ரவுடி; இருந்தாலும் ரவுடியோட பாஸ் கஞ்சி போட்ட வேஷ்டி கட்டிகிணு ஆலின்ஆல் அழகுராஜா மாதிரி இருக்கணும். அது தான் ரூல்ஸ். ராங்கு செய்யரவங்க அப்பாலிகா டீஜென்டா இருக்கவேணாமா ?
( லுங்கி படம் : நன்றி வால்பையன் )

சரி லுங்கி மேட்டர் என்பதால் சென்னை தமிழ்ல எழுதினேன். இனிமே டீஜென்டான தமிழ்! ( நமக்கும் இதுக்கு மேல எழுதவராது )...

"இப்படித்தான் இருக்கவேண்டும் பொம்பளை" என்ற பழைய பாடல் முதல் நேற்று வந்த விஜய் படம் வரைக்கும் பெண்களுக்கு அட்வைஸ் என்பது தமிழ் சினிமாவில் "அஞ்சு சாங்கு நாலு ஃபைட்டு" மாதிரி ஒரு அங்கமாக ஆயிருச்சு. எவ்வளவு அழகான பொண் குட்டியாக இருந்தாலும், சினிமாவில் அட்வைஸ் வாங்காமல் இருக்க மாட்டார்கள். அட்வைஸ் வாங்கினால் தான் அவர்களுக்கு மார்கெட்.

எப்போது இந்த அட்வைஸ் வரும்? கதாநாயகிகள் திமிர் பிடித்தவர்களாக இருப்பார்கள். திமிர் என்றால் என்ன? அவர்கள் படித்த பெண்களாக இருப்பது ஒரு வகை திமிர், சொந்தக்காலில் நிற்க விரும்புபவளாக இருந்தாலும் திமிரு தான். அட இப்ப எல்லாம் படத்தில் சொந்த குரலில் பேசினால் கூட திமிரு தான். உடனே நம்ம கதாநாயகர்கள் (அதாம்ப்பா தமிழ் சமுதாயத்தின் காவலர்கள்) அதை ஏற்றுக்கொள்ளாமல் பஞ்ச் அடிக்க ஆரம்பித்துவிடுவார்கள். "ஆயிரந்தான் இருந்தாலும் அவன் ஆம்பளை, போலீசாவே இருந்தாலும் நீ பொம்பளை" இது விஜய் ரஜினியிடம் கற்றுக்கொண்டது. "ஆம்பளை வீட்டில இருந்தா கெட்டுப் போயிடுவான். பொம்பளை வெளிய சுத்தினா கெட்டுப் போயிடுவா" இது ரஜினி. கலாச்சாரம் உள்ள பெண்கள் தமிழ் நாட்டில் இல்லயாம், தெரியுமா உனக்கு? 'சிவாஜி' திரைப்படத்தில் ரஜினி தனக்கு தமிழ் கலாச்சாரமுள்ள பெண் மனைவியாக வேண்டுமென விவேக்கிடம் கேட்க அப்படியானால் "நாம் யாழ்ப்பாணம் தான் போக வேண்டுமென" விவேக் சொல்லுவார். அப்படியா ? இதை எல்லாம் பார்த்து நம் தமிழ் பெண்கள் யாரும் கோபப்படவில்லை ஏன் தெரியுமா ? "அதிகமா ஆசைப்பட்ட ஆம்பளையும், அதிகமா கோபப்பட்ட பொம்பளையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரம் இல்லை" என்று ரஜினி சொன்ன அட்வைஸ் தான்.

"பொம்பளைங்க வீட்டு வேலை செய்ரதுதான் அழகு" என்ற மன்னன் படத்தில் வரும் வசனத்தை உடைத்து தள்ளியுள்ளார் ஜூலி கணபதி என்ற இளம் எழுத்தாளர். வேலைக்கு போகும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை என்ன என்ன என்று அடிக்கியுள்ளார். அதற்கு தீர்வும் (நம்புப்பா!) எழுதியுள்ளார். பெண்கள் கஷ்டம் பெண்களுக்கு தான் தெரியும் என்று பெண்கள் சொல்லும் டயலாக்கை எந்த ஆண்களாவது சொல்லியுள்ளார்களா என்று தெரியாது.

இப்படி எல்லாம் எழுதும் பெண்களுக்கு பிடித்த நடிகர் யார் என்றால் "ஐ லைக் சூப்பர் ஸ்டார்" என்பார்கள். பிடித்த நடிகை என்ற பேச்சுக்கே இடமில்லை, ஏனென்றால் அது ஆண்கள் சமாசாராம்.

அக்கா பிளாக் ஆரம்பித்து இரண்டு வருடம் ஆகிறது, குழந்தைகள் தினத்துக்கு அடுத்த நாள் இவருக்கு நம்ம சார்பில் வாழ்த்து போடுங்க. பதில் மரியாதை செய்வது தானே நல்ல பண்பு ?

ரஜினி படம் ஹிட்டாகிறதோ இல்லையோ நம்ம டோண்டு சாரும் அவர் பதிவும் அடிக்கடி ஹிட்டாகிறார்கள். "தற்போது இந்த பதிவை எழுதும் போது என் கவுண்டர் 5 லட்சம் தொடப் போகிறது"என்று கேப்டன் விஜயகாந்த் மாதிரி புள்ளி விவரங்களோட ஒரு பதிவு போட்டு ஐந்து லட்சம் தொட்டது அவர் சாமர்த்தியம் சுஜாதா உயிருடன் இருந்திருந்தால் "அஞ்சு பேர் அஞ்சு கோடி தடவை அஞ்சு லட்சம் தடவை பதிவை படிப்பது தப்பா?" என்று வசனம் எழுதியிருப்பார். ( படத்தில் உள்ளது போல நீங்க ஒரு கவுண்டர் செட் செய்துக்கொள்ளுங்கள் நல்லா இருக்கும் )

ரஜினி பற்றி சொல்லிவிட்டு கமல் பற்றி சொல்லவில்லை என்றால்? பாரதிராஜாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றான சிவப்பு ரோஜாக்கள் ரீமேக் செய்யப்படுகிறது. ட்வீட் மக்கள் கொஞ்சம் குறைப்பட்டுக் கொன்றார்கள். பாரதிராஜா பையன், இளையராஜா பையன் எல்லாம் இருக்காங்க, ஸ்ரீதேவியோட பொண்ணு இல்லையா என்று!! ரீமேக் என்றாலும் கமலே மீண்டும் இதில் நடிக்கலாம். இன்னும் இளமையாகத்தானே இருக்காரு? இல்லை இருக்கவே இருக்கு நாலு மணி நேரம் மேக்கப். இன்னும் ஒரு விஷயம். அபூர்வ சகோதரர்கள்? போன்ற புத்தம் புதிய காப்பி ஒன்று வந்திருக்கிறது. நிச்சயம் படிக்க வேண்டிய பதிவு. படத்தில் அவருடைய தாயின் முகத்தில் தெரியும் மகிழ்ச்சி - "ஈன்றபொழுதில் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்" என்கிறது. நண்பர் கல்யாணுக்கு வாழ்த்து. எப்ப சார் ஜக்குபாய் வரும் ? ஓசி டிக்கெட் கிடைக்குமா ?

தினமும் லஞ்ச் சாப்பிட்டுவிட்டு திரும்பிய உடன் "இன்று போகும் போது ஒரு விளம்பரங்கள் பார்த்தேன், ஒரு ஃபிளாட் விலை 5 கோடி" , "இன்று லஞ்ச் முடிக்க எனக்கு 11 நிமிஷம் ஆனது, ஃபை ஸ்டார் ஹோட்டல் எதிரில் உள்ள கையேந்தி பவனில் சாப்பிட்டேன்" போன்ற ஆறிய தகவல்களை ட்விட்டர்ல இன்று ஏனோ சொக்கன் சொல்லவில்லை. பாவம், லஞ்ச் சாப்பிட்டாரா என்று தெரியவில்லை. நீங்களாவது அவரிடம் டிவிட்டரில் கேட்டு சொல்லுங்க ப்ளீஸ்! சொக்கனுடைய அடுத்த புத்தகம் இப்போது குஜராத்தியில். கூடிய விரைவில் மராத்தியில். தப்பித்தவறி ராஜ் தாக்கரேவுக்கு இந்த புத்தகத்தை இலவச விமர்சனத்துக்க்காக கிழக்கே இருந்து மேற்கே அனுப்பிட போகிறார்கள். ராஜ் தாக்கரேவோட பையன் மராத்தி மீடியம் ஸ்கூல்-ல படிக்கலியாம்....பாம்பே ஸ்காட்டிஷ் ஸ்கூலாம்....பர்ஸ்ட் லாங்க்வேஜ் ஆங்கிலம் எடுக்காம வேற எதோ பாரின் லாங்க்வேஜ் எடுத்து படித்திருக்கிறான் அந்தப் பையன் இன்று செய்தி. இனமானம், மொழிமானம்னு பேசற எல்லா டுபாக்கூர் அரசியல்வாதிகளின் லட்சணமும் இதுதான்.....தமிழகத்தில் வேற்று மொழி பெயர் பலகைகளை தார் பூசி அழித்த ராமதாஸின் பேத்திகள் ஸம்யுக்தா, ஸங்கமித்ரா ஆகிய இருவரும் தில்லியில் உள்ள ஒரு ஆங்கிலோ இந்தியப் பள்ளியில் பயின்று வருகின்றனர்.த மிழ்க் குடியோ - தாக்கரேயோ, யாரா இருந்தாலும் அரசியல்ல மெரினாவில் கிரிக்கெட் விளையாடுவது போல இதெல்லாம் சகஜமப்பா!

நேற்று ஒரு சக பதிவர், டிவிட்டரில் என்னிடம் ஒரு வித்தியாசமான கோரிக்கையை வைத்தார். எப்படி சார் பாலாவை டிவிட் செய்யாமல் தடுப்பது என்பது தான் அந்த கோரிக்கை. சச்சின், பாலா 11000 ரன்கள், அல்லது 11000 டிவிட்டுகள் அடித்துவுட்டால் ரிடையர் ஆகவேண்டும் என்பது எல்லோருடைய அன்பு கோரிக்கை. அட்லீஸ்ட் செமி ரிடையர்மெண்ட் செய்யலாம். அப்பறம் பாலாவிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும், தப்பா நினைச்சுப்பார் இருந்தாலும் நமக்கு என்ன கவலை. உங்களுக்கு இந்தியா தோற்றாலும் கிரிக்கெட் பிடிக்கும் ஆனால் நீங்க மெரினா பீச்சில் கிரிக்கெட் விளையாடுவீங்களா ? ஆம் என்றால் கலைஞர் உங்க மீது ரொம்ப கடுப்பில் இருக்கிறார். முரசொலியில் இப்படி எழுதியிருக்கார்.


"...(பல) விளையாட்டுகள் இருந்தாலும் அதெல்லாம் பார்ப்பனச் சிறுவர்களின் பூப்போன்ற உடலமைப்புக்கு ஒத்துவராது! பார்ப்பனர்களின் ஒரே விளையாட்டு

கிரிக்கெட்தான்! மெரினாவில் கிரிக்கெட் ஆடும் சிறுவர்களில் பெரும்பாலானவர்கள் யார்? மாம்பலம் - மைலாப்பூர் - திருவல்லிக்கேணிப் பகுதிகளைச் சேர்ந்த பார்ப்பனச் சிறுவர்கள்தான்!

மெரினாவில் கிரிக்கெட் விளையாடத் தடை விதிப்பதால் - இந்த மூன்று பகுதிப் பார்ப்பனச் சிறுவர்களைத் தவிர வேறு யாருக்கு என்ன நஷ்டம்?

சென்னையில் மெரினா மட்டும்தான் இருக்கிறதா? திருவல்லிக்கேணி, தியாகராயநகர், மைலாப்பூர் போன்ற சென்னை நகரின் பல பகுதிகளிலும் - பெரிய பெரிய கோவில்களெல்லாம் இருக்கின்றன. இந்தக் கோயில்களில் பிரகாரங்கள் என்ற பெயரில் எத்தனை விரிவான இடங்கள் இருக்கின்றன - அந்தக் கோயில் பிரகாரங்களில் கிரிக்கெட் விளையாடலாமே! யார் பேரிலும் காயம்படாதே; பட்டாலும் டென்னிஸ் பந்துகளால்தானே அடித்தார்கள் என்று பக்தகோடிகள் மகிழ்ச்சியோடு அடியைத் தாங்கிக் கொள்வார்களே!


பாலாவோட லேட்டஸ்ட் ட்விட்டர் போட்டோ கூட cricketer மாதிரி நல்லா இருக்கு. இருந்தாலும் திருவல்லிக்கேணி கோயில் குளத்தில் இப்ப நெறைய தண்ணீர் இருக்கும், அது வடிந்த பின் அதில அவர் கிரிக்கெட் விளையாடலாம். இல்ல, பேசாம "கும்ப்ளே" மாதிரி ரிடையர் ஆயிடலாம். ரிடையார் ஆனாலும் டிவிட்டரில் விளையாடலாம் என்பதை அவரிடம் சொல்லுங்க முனி. இவர் கிரிக்கெட் விளையாடாமல் இருக்க இவருக்கு கலைஞர் இலவச டிவி கூட கொடுத்திருக்கார் என்றால் பாருங்களேன்.


சில மாதங்களுக்கு முன் க்ருபாவிடம் பேசிக்கொண்டிருந்த போது ( இது வேற க்ருபா இவருக்கும் கரும்பு ஜூஸுக்கும் சம்பந்தம் இல்லை) CROWDSOURCING tweet 140 bite-sized என்ற புத்தகம் பற்றி பேசிக்கொண்டிருந்தார். உடனே க்ருபாவிற்கு இட்லிவடை யார் என்று தெரியும் என்று கிளம்பாதீங்க :-) இதே போல, இப்ப தங்களுடைய டிவிட்டை எல்லாம் சேகரித்து புத்தகம் போட கிளம்பியுள்ளார்கள் இரண்டு தமிழ் ரைட்டர்கள். எதுக்குமே மனம் இருந்தால் மார்கம் உண்டு!

நேசமுடன் இதழ் 14ல் நேசமுடன் வெங்கடேஷ் "மனம்" பற்றி அருமையான கட்டுரை ஒன்றை எழுதியிருக்கார். அது புரியவில்லை என்றால் எழுத்தும் எடிட்டிங்கும் என்ற கட்டுரையை படிக்கலாம்.

தமிழ் சினிமா எடிட்டிங் பற்றி வெங்கடேஷ் அடுத்த இதழில் இரு கட்டுரை எழுதலாம். ரசிக்கும் சீமாட்டி ஜப் வி மெட் Vs கண்டேன் காதலை பற்றி அருமையா எழுதியிருக்காங்க அதாவது தமிழ் படம் எப்படி சொதப்பியிருக்காங்க. "அப்பறம் கரீனா ரொம்ப துறுதுறுப்பான பொண்ணா வலம் வருவாங்க. அதையே நம்ம (?) தம்மன்னா தங்கச்சி ஓவர் ஆக்டிங் பண்ணி கொஞ்சம் ரொம்பவே லூசு மாதிரி சிலபல சீன் ல பண்ணிருச்சு....." என்றெல்லாம். எழுதியிருக்காங்க. என்னதான் சொல்லுங்க ஒரு பெண்ணை பற்றி இன்னொரு பெண்ணுக்கு தான் நல்லா தெரியுது!

சரி கடைசியாக "கடல் சிறுமியாக மாறிய கதை" என்று கவிதை எழுதிய எழுத்தாளரைக் காணவில்லை. சரக்கு மாஸ்டர் எங்கு இருந்தாலும் வரவும்

சட்னி சாம்பார் (நிஜமாகவே அப்படி ஒருத்தர் இருக்கார்) எனக்கு அனுப்பிய சில உதிரி கவிதைகளிலிருந்து ஒன்று தலைப்பு "லஞ்சம்"


வாங்கினேன்...கைது செய்தார்கள்
கொடுத்தேன்...விடுதலை செய்தார்கள்!


அன்புடன்,
இட்லிவடை

21 Comments:

மானஸ்தன் said...

:-) பலே!

Dubai Nara said...

நிலைய வித்வான் கம்ப்யூட்டர் முன்னால் கயித்துக் கட்டில் போட்டு படுத்திருக்கிறாரா ? சும்மா கில்லி மாதிரி முதல் கமெண்ட் போட்டுறார்.

தமிழ்குடிமகன் 0ன்னு ஒருத்தர் போர்ட் தமிழில் தான் இருக்குனும்னு சொன்னாரே ? அவர் இப்ப எங்க இருக்கார் ?

அமுதப்ரியன் said...

Very Informative and Good Post.

--------------------------
ஆனால் சைடு பாரில் முனிக்கு கடிதம் DATE UPDATE செய்யவில்லை.

அமுதப்ரியன்

பேயோன் said...

ட்வீட்களை முதன்முதலாக மின்னூலாக்கியது நான்தான். 100, 500, 1000 ட்வீட்கள் என மூன்று பதிப்புகளையும் Scribd வலைதளத்தில் வெளியிட்டுள்ளேன். அதற்கு பின்னரே மற்றவர்கள் தொடர்ந்திருப்பார்கள்.

enRenRum-anbudan.BALA said...

//மெரினாவில் கிரிக்கெட் ஆடும் சிறுவர்களில் பெரும்பாலானவர்கள் யார்? மாம்பலம் - மைலாப்பூர் - திருவல்லிக்கேணிப் பகுதிகளைச் சேர்ந்த பார்ப்பனச் சிறுவர்கள்தான்!
//
"தவறான தகவல், எந்தக் காலத்திலும்" என்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.

எனக்குப் பல வருடங்களாக பீச்சையும் தெரியும், கிரிக்கெட்டையும் தெரியும் !!!

மர தமிழன் said...

சுத்தறதிலுருந்து பார்த்தா சுத்தாததும் சுத்தும் சுத்தாதேலேர்ந்து பார்த்தா சுத்தறதும் சுத்தாது...
****************************************
தரை, கடலோட முடிஞ்சிடுச்சுன்னு நெனச்சா நீ தண்ணி போட்டிருக்கன்னு அர்த்தம், கடலுக்கு அடிய்யிலயும் தரைதாண்டா ன்னு நீ சொன்னா நீ தண்ணிக்குள்ள இருக்கன்னு அர்த்தம்...

3009 லயும் தமிழ் சினிமாவுல இந்த மாதிரி பஞ்ச் பூதங்கள் வருமோ என்னமோ..
****************************************
வெறும் இட்லி வடை தின்றவங்களுக்கு இன்னிக்கு சட்னி சாம்பார் வேறயா!!!

kiruthika said...

//எவ்வளவு அழகான பொண் குட்டியாக இருந்தாலும், சினிமாவில் அட்வைஸ் வாங்காமல் இருக்க மாட்டார்கள். //

உண்மை தான். ஆனால் இதை விட எனக்கு ரொம்ம்ப நாளா இருக்கும் ஓர் ஆதங்கம்.

நம்ம ஊரில் பொண்ணு பிறந்தாலே "ஐயோ பாவம்" என சொல்லும் நிலை தான். கல்யாணம், நகை, டவ்ரி, டெலிவரி என பெண் பெற்றவரின் தலையில் பெரிய சுமையை தூக்கி வைக்கிறது நம் சமுதாயம்.

பொண்ணுகளுக்கு அச்சம், மடம், நாணம் என்ன ஒரு லிஸ்ட் உண்டு.
ஆனால் சுயமரியாதை, சமநீதி, சம உரிமை என ஒன்னும் கிடையாது.
பல வீடுகளில் பெண்களை வேலைகாரி போல் நடத்துவது இன்னும் அசிங்கம்.

கல்யாண செலவை ஏன் இரு வீட்டாரும் சமமாக செலவு செய்ய கூடாது?
டெலிவரி செலவை ஏன் கணவன் முழுவதுமாக செய்ய கூடாது?

மாமனாரின் பர்சை காலிசெய்யும் மருமகன்கள் இருக்கவே செய்கிறார்கள்.
சில ஆண்கள் நேராக கேட்டு விடுவார்கள்.
சிலர் அவர்களின் பெற்றோர் கேட்கும் போது அமைதி காப்பார்கள்.
சிலர் மனைவியை விட்டு கேட்பவர்கள்.
இன்னும் பல ஸ்டைலில் வசூல் செய்வார்கள்.

Erode Nagaraj... said...

லுங்கி: டீஜெண்டா இல்லபா.. ரீஜென்டா...

பெண்கள் கஷ்டம்: அதைப் ஆற்றிக் கவலைப்படாத விஜய் மற்றும் ரஜினி இரசிகைகள் இருக்கும் வரை...

கவுண்டர்: நல்ல பதிவுகள் "முதலியார்" போடுகிறார்களோ, அந்த "பிள்ளை" வலையுலக "நாயக்கர்" ஆகி, சண்டேனா ரெண்டு போல "நாயரானா" மூணு என்று ஆரம்பிக்கலாம்...

தாயின் மகிழ்ச்சி: தேவையா என்றெண்ணாமல் தேவைய்யா மோதிரம் போட்டது பலே!


தமிழ்க்குடி:குடியை விடச்சொன்னவர் தமிழை விட்டுவிட்டார், குடி தான் மிஞ்சும்...

பார்ப்பனச் சிறுவர்: சிறுவர் பார்ப்பனர் என்று எண்ணாதீர், பார்க்காமலேயே போய் விடுவர்..

டிவிட்: மார்க்கத்துல ஒரு "இக்கு" வெச்சிருப்பீங்கன்னு பார்த்தா, விட்டுட்டீங்களே!

பெண்ணை பற்றி: இப்போது தான் என் வலைப்பக்கத்தில் இந்த 'பெண் மனசு பெண்ணுக்கு தான்' என்பதை எழுதினேன், இங்கயுமா!

கடல் சிறுமி: presentnaa கவிதையில் சிறுமி absentணா !

லஞ்சம்: give and take policy!!

Matra said...

//தமிழ்குடிமகன் 0ன்னு ஒருத்தர் போர்ட் தமிழில் தான் இருக்குனும்னு சொன்னாரே ? அவர் இப்ப எங்க இருக்கார் ?//

Thamizhkudimagan passed away a few years back.

He was know for extreme views on usage of Thamizh.

His aim was for the 100% usage of Thamizh in TN.

He even wanted planes which land in TN to have logo/lettering in Thamizh and also the the communication between the pilots and the air traffic controllers in Thamizh.

He was in DMK but got sidelined (probably after lot of people got very uncomfortable with his views and efforts). Then he joined AIADMK but faded away.

He was the person behind the renaming of Madras to Chennai (Is 'Chennai' of pure Thamizh origin ?)

R.Gopi said...

//Dubai Nara said...
நிலைய வித்வான் கம்ப்யூட்டர் முன்னால் கயித்துக் கட்டில் போட்டு படுத்திருக்கிறாரா ? சும்மா கில்லி மாதிரி முதல் கமெண்ட் போட்டுறார்.//

ஹா...ஹா...ஹா...

ப‌திவு மிக‌ மிக‌ சுவார‌சிய‌ம்...

ஆனால் அதை விட‌ சூப்ப‌ர் Dubai Nara க‌மெண்ட்......

Anonymous said...

தொடுப்பதும் முடிப்பதும் “பார்ப்பனன்” என்ற சொல்லிலே. “நார்மல்” மனதாகத் தெரியவில்லையே!

R.Gopi said...

// மர தமிழன் said...
சுத்தறதிலுருந்து பார்த்தா சுத்தாததும் சுத்தும் சுத்தாதேலேர்ந்து பார்த்தா சுத்தறதும் சுத்தாது...
****************************************
தரை, கடலோட முடிஞ்சிடுச்சுன்னு நெனச்சா நீ தண்ணி போட்டிருக்கன்னு அர்த்தம், கடலுக்கு அடிய்யிலயும் தரைதாண்டா ன்னு நீ சொன்னா நீ தண்ணிக்குள்ள இருக்கன்னு அர்த்தம்...

3009 லயும் தமிழ் சினிமாவுல இந்த மாதிரி பஞ்ச் பூதங்கள் வருமோ என்னமோ..
****************************************
வெறும் இட்லி வடை தின்றவங்களுக்கு இன்னிக்கு சட்னி சாம்பார் வேறயா!!!//

க‌ல‌க்க‌ல் ம‌ர‌ த‌மிழா...... ர‌சித்தேன்..

அடுத்து என்ன‌ பூரி கிழ‌ங்கா??

venkatramanan said...

நள்ளெண் யாமம் http://sivakannivadi.blogspot.com/: க.சீ.சிவகுமாரின் புதிய வலைப்பதிவு!
எழுத்து, எழுத்தாளர்களைப் பற்றி இடுகையில் நிறைய இருப்பதால் ஒரு தகவலுக்காக இங்கே பதிகிறேன்!

அன்புடன்
வெங்கட்ரமணன்

சீனு said...

வர வர முனிக்கு உப்பு சப்பில்லாம கடிதம் எழுதுது இட்லியும் வடையும். இன்னும் கொஞ்ச நேரம் சூடு வெக்கனும் போல இருக்கு.

வால்பையன் said...

இணையமே உங்கள் சொத்து தல!

உங்க வலையை பார்த்து தான் நான் ப்ளாக் உலகத்துக்குள்லயே நுழைந்தேன்!
எனக்கு எதுக்கு நன்றியெல்லாம்!

kggouthaman said...

// உங்க வலையை பார்த்து தான் நான் ப்ளாக் உலகத்துக்குள்லயே நுழைந்தேன்!//

நானுந்தான்.

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

என்ன மஞ்சள் கமென்ட்? இதெல்லாம் பத்து வருசத்துக்கு முன்னமேயே வந்து விட்ட கவிதை, ஏதாவது புதுசா எழுதுங்க தலைவா!

மத்தபடி சூப்பர் கடிதம் தான்.

யதிராஜ சம்பத் குமார் said...

இட்லி யாரைத் தேடுகிறார்?? ஹரன்பிரசன்னாவையா அல்லது சுஜாதாவையா??


சுஜாதா எழுதிய சிறுகதையின் தாக்கம்தானோ அக்கவிதை??

Anonymous said...

Your comment about "paarpanargal" playing cricket is all good. But, instead of giving such sarcastic solutions, idly vadai can give a serious and better solution. Edhukku thevai illama "paarpanargal" a poi uralla idikkareenga. thiruvallikeni yil ippozhudhu adhigamaga irupppadhu islamiyargal dhaan. Please do not release such comments unless you have statistical data or proof for your claim. Yen boss enga televisiona kelappareenga.

மஞ்சள் ஜட்டி said...

சென்னை மதுரவாயலில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா வேலப்பன்சாவடியில் உள்ள ஏ.சி.எஸ். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நேற்று நடந்தது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ், சினிமா டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார், விஞ்ஞானி வி.கே.சரஸ்வத், கல்வியாளர் ஆர்.பி.சத்தா ஆகியோருக்கு டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது.
---------------------------
PRO கிட்ட சொல்லி ஏற்ப்பாடு பண்ணும் பொது தெரியலையா? பணம் கொடுக்கும் பொது தெரியயல??
அடுத்த வருடம் டாக்டர் பட்டம் வாங்குவோர் பட்டியல் தனுஷ் முமைத்கான் கஞ்சாகருப்பு ....

モバゲー said...

モバゲーが遂に出会いをプロデュースする事になりました。今まで禁止していた事も全て解放で皆様の出会いをお手伝いさせて頂きます。