பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, November 01, 2009

சண்டேனா இரண்டு (1-11-09) செய்திவிமர்சனம், இன்பா

இந்த வார இரண்டு செய்திகள்..செய்தி # 1

தமிழகத்தின் தற்போதைய எதிர்க்கட்சி யார் என்று கேட்டால் உடனே நம்மால் பதில் தரமுடியாது. அ. இ. அ. தி. மு. க என்று நம் நினைவுக்கு வர சில நிமிடங்களாவது ஆகும்.

எம்.ஜி.ஆர் அவர்களால் தொடங்கிவைக்கப்பட்ட ஒரு மாபெரும் கட்சி, இன்று பலவீனமான தலைமை, வலுவுள்ள இரண்டாம் கட்ட தலைவர்கள் இல்லாதது மற்றும் மிக முக்கியமாக ஒரு எதிர்கட்சிக்கே உரிய உத்வேகத்துடன் விலைவாசி போன்ற மக்கள் பிரச்சினைகளில் செயல்படாமல் அதன் தலைவி கண்காணாமல் 'ஓய்வு' எடுக்க சென்றது ஆகிய காரணங்களால் சிங்கம் தேய்ந்து சிற்றெரும்பு (என் புது உவமைங்க!) என்று ஆகிக்கொண்டு இருக்கிறது.

அ.இ.அ.தி.மு.க.வின் செல்வாக்கு குறைந்து விடவில்லை. இப்போதும் தமிழகத்தின் தனிப்பெரும் கட்சி அ.இ.அ.தி.மு.க.தான் என்று அக்கட்சிப் பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூ‌றினா‌ர்.

சென்னை அருகே வானகரத்தில் நடைபெற்ற அ.இ.அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் க‌ட்‌சி‌யி‌ன் பொதுச் செயலர் ஜெயலலிதா பேசுகை‌யி‌ல்,

முதலமைச்சர் கருணாநிதியால் அரசு நிர்வாகத்தில் கவனம் செலுத்த நேரமில்லை. கருணாநிதிக்கும், அவரது காவல்துறைக்கும் ஒரே ஒரு பணிதான் உள்ளது. ஜெயலலிதா என்ன செய்து கொண்டிருக்கிறார், எங்கே இருக்கிறார், யார் யாரெல்லாம் அவரை சந்திக்கிறார்கள் இதுபோன்ற கேள்விகளை காவல்துறையினரிடம் கேட்டுக்கொண்டிருப்பதால், அரசு நிர்வாகத்தை கவனிக்க நேரமில்லை.

மக்களவைத் தேர்தலுக்குப் பின் அ.இ.அ.தி.மு.க. கதை முடிந்து விட்டது என பலர் கூறுகின்றனர். எனது செல்வாக்கு சரிந்து விட்டது என்கிறார்கள். அ.இ.அ.தி.மு.க. அழிவுப்பாதையை நோக்கி செல்கிறது என்கிறார்கள்.

ஆனால் இன்றைக்கும் தமிழகத்தின் பத்திரிகைகளில் வரும் பிரதான செய்திகள் என்னைப் பற்றியதாகவும், அ.இ.அ.தி.மு.க.வைப் பற்றியதாகவும்தான் இருக்கின்றன. காரணம் காய்க்கும் மரம்தான் கல்லடி படும். இன்றைக்கும் தமிழகத்தின் தனிப்பெரும் கட்சி, மகத்தான மக்கள் இயக்கம் அ.இ.அ.தி.மு.க.தான்.

ஒரு குடும்பத்தை கட்டிக் காத்து, நல்வழிப்படுத்தி அழைத்துச் செல்வது தாய்தான். அக்குடும்பத்தின் பிள்ளைகளுக்கு நல்லது எது என்பது தாய்க்குத்தான் தெரியும். பிள்ளைகளின் மீது அன்பு காட்டும் தாய், சில நேரங்களில் கண்டிக்கவும் தவறுவதில்லை. கண்டிப்பு காட்டுவது அந்த பிள்ளைகளின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்.

அ.இ.அ.தி.மு.க. என்னும் மாபெரும் குடும்பத்தின் தாயாக நான் உள்ளேன். இக்குடும்பத்தில் உள்ள தொண்டர்களுக்கு எது நல்லதோ, அதைத்தான் நான் செய்வேன். ஆனால், மறுகூடாரத்தில் உள்ள தி.மு.க.வினர் அப்படி அல்ல. அ.இ.அ.தி.மு.க.வுக்கு வந்து யாரும் கெட்டதில்லை. அ.இ.அ.தி.மு.க.வில் சேர்ந்து சாதாரண நிலையில் இருந்தவர்கள் எல்லாம் பெரும் நிலைக்கு வந்திருக்கிறார்கள். மிகவும் வறுமையில் வாடிக்கொண்டிருந்தவர்கள் எல்லாம் பெரும் பணக்காரர்கள் ஆகியிருக்கிறார்கள்.

இந்த கட்சிக்கு வந்து தங்களை வளர்த்துக்கொண்டு, இந்த கட்சிக்கே துரோகம் செய்துவிட்டு வெளியேறி இருக்கிறார்களே தவிர, இந்த கட்சிக்கு வந்து அவர்கள் கெட்டதில்லை. இந்த கட்சிக்கு வந்து வீடு, வாசல், தோட்டம், துறவு எல்லாவற்றையும் இழந்து யாரும் தற்கொலை செய்யவில்லை. ஆகவே, நான் ஒரு அ.இ.அ.தி.மு.க. தொண்டன் என்று சொல்வதில் பெருமைப்பட வேண்டும்.

நேற்று வரை அமைச்சராக இருந்த ஒருவர் இன்று தலைமறைவாகி விட்டார். அவரை காவ‌ல்துறை தேடுகிறது. அமைச்சராக்குவதற்கு முன்பே அவரைப் பற்றி முதலமை‌ச்ச‌ர் கருணாநிதிக்கு தெரியாதா? கருணாநிதியின் கட்டுப்பாட்டில் கட்சியும் இல்லை; ஆட்சியும் இல்லை. அங்கே எல்லாமே குழப்பமாகத்தான் உள்ளது.

அ.இ.அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்ந்தது. இன்று நாட்டின் கடைகோடி மாநிலமாக உள்ளது. நிர்வாகத் திறமையற்ற, தமிழ்நாட்டை அமளிக்காடாக மாற்றிய, விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசின் மீது மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். வரும் சட்டப்பேரவை தேர்தலில் அ.இ.அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்க மக்கள் தயாராகிவிட்டனர்.
என்று ஜெயலலிதா கூ‌றினா‌ர்.

அவர் கூறிய, மக்கள் கொண்டிருக்கும் கடும் கோவத்தை எல்லாம் ஒரே நொ'டி(வி)'யில் போக்கிவிடும் சாமர்த்தியங்கள் ஆளும் கட்சிக்கு உண்டு என்பதை ஏனோ இன்னும் அவர் உணரவில்லை.

செய்தி # 2

"நான் லஞ்சம் இல்லாத நாடு, பஞ்சம் இல்லாத வீடு, வஞ்சம் இல்லாத மனுஷன், இதுக்குத்தான்யா போராடிகிட்டு இருக்கேன்" - இது நடிகர் விஜய் ஒரு படத்தில் பேசும் வசனம்.

இந்த ஏழை(?) பங்காளருக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் நிலம் ஒதுக்கீடு செய்து உள்ளது.

சென்னை ஷெனாய் நகரை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர், நடிகர் விஜய்க்கு கொரட்டூரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சுமார் 5 கிரவுண்டு நிலம் ஒதுக்கீடு செய்ததை ரத்து செய்ய கோரி உயர் நீதிமன்றத்தில் மனு‌த் தா‌க்க‌ல் செ‌‌ய்துள்ளார்.

அ‌தி‌ல், நடிகர் விஜய்க்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் நிலம் ஒதுக்கீடு செய்தது சட்ட விரோதம் என்றும் இதற்கான வீட்டு வசதி வாரியத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இந்த மனு நீதிபதி ஜோதி மணி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அ‌ப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரா‌கி வா‌தி‌‌ட்ட வழக்கறிஞர் எம்.வி.முர‌‌ளிதரன், ”மனுதாரரின் தந்தையிடம் இருந்து கொரட்டூரில் வீட்டு வசதி வாரியம் ஆர்ஜிதம் செய்த நிலத்தில் 0.27 ஏக்கர் நிலம், அதாவது சுமார் 5 கிரவுண்டு நிலம் நடிகர் விஜய்க்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு‌ள்ளது. இந்த நிலம் 2004ஆம் ஆண்டு திராவிடியன் பஞ்சாயத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது என தங்களுக்கு தெரிவிக்கப்ப‌ட்டது. அவர்களுக்கு ஒதுக்கிய நிலத்தை அதன் பிறகு 2007ஆம் ஆண்டு நடிகர் விஜய்க்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் எப்படி ஒதுக்கீடு செய்ய முடியும்” எ‌ன்று வாதிட்டார்.

இந்த விஷயத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பொய்யான தகவல்களை தெரிவித்திருப்பதாகவும், எனவே நடிகர் விஜய்க்கு 5 கிரவுண்டு நிலம் ஒதுக்கீடு செய்ததை ரத்து செய்ய வேண்டும் என்றும் வழ‌க்க‌றிஞ‌ர் முரளீதரன் வாதாடினா‌ர்.

இதைத் தொடர்ந்து வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் ஆஜரான வழ‌க்க‌றிஞ‌ர், யாருக்கு எவ்வளவு நிலம் ஒதுக்க வேண்டும் என்பது அரசாங்கத்திற்கு உள்ள அதிகாரம் எ‌ன்று கூறினார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, 2004ஆம் ஆண்டு திராவிடியன் பஞ்சாயத்துக்கு ஒதுக்கிய அதே நிலத்தை 2007ஆம் ஆண்டு மீண்டும் எப்படி நடிகர் விஜய்க்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் ஒதுக்கீடு செய்ய முடியும் என்று கேள்வி எழுப்பினார்.

இதை‌த் தொடர்ந்து தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு தா‌க்‌கீது அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, நடிகர் விஜய்க்கும் தா‌க்‌கீது அனுப்ப உத்தரவிட்டார். இருதரப்பினரும் நவம்பர் 9ஆ‌ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
விரைவில் சன் பிக்ச்சர்ச்சின் "வேட்டைக்காரன்" வெளி வரப்போகிறது. அதில் விஜய் பேசும் 'பன்ச்' வசனங்களை கேட்டு ரசிக பெருமக்கள் விசில் அடித்து, கைத்தட்டத்தான் போகிறார்கள்.

ஒரு நல்ல(?) அரசியல் தலைவராக உருவாவதற்கு உண்டான எல்லா தகுதிகளும் இளைய தளபதிக்கு இருப்பதாக தோன்றுகிறது.

இந்த வார உலக செய்தி

மேற்கத்திய நாடுகள் தற்போது ஈரானுடன் ஒத்துழைத்து வருவதாக அந்நாட்டு அதிபர் முகமத் அகமதுனிஜாத் தெரிவித்துள்ளார்.

ஈரானின் வடகிழக்குப் பகுதியிலுள்ள மாஷாத் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகையில் இதனை தெரிவித்த அவர்,அதே சமயம் ஈரான் தனது அணு திட்டங்களை கைவிடாது என்றார்.
ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் திட்டம் தொடர்பாக மோதல் போக்கை மேற்கொண்டிருந்த மேற்கத்திய நாடுகள், தற்போது விவாதிக்க முன்வந்துள்ளனர்.

இன்றைய தினம் ஈரான் மிக முக்கியமான ஒரு நிலையை எட்டியுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

பொதுவாக ஈரானை அரபு நாடுகள் தங்கள் கூட்டத்தில் சேர்த்து கொள்வதில்லை. காரணம், அது முஸ்லிம் மக்களின் ஒரு தனிப்பட்ட பிரிவான 'ஷியா' என்னும் மதத்தை கொண்ட நாடு.

தனது சகலவிதமான பிரச்சினைகளையும், பொருளாதாரத்தையும் 'தனியாக' நின்று சமாளிப்பதொடு, அணுஆயுத சோதனைகளையும் நடத்தும் திறன் பெற்ற, தன்னம்பிக்கை நாடு ஈரான்.

(நன்றி...இனி அடுத்தவாரம்)
- இன்பா

15 Comments:

மானஸ்தன் said...

காரம் கம்மியா இருக்கு, இன்பா!

ஒரு சந்தேகம்.
ஏன் இட்லி சண்டேன்னா ரெண்டு பதிவுகளில் கடந்த சில வாரங்களாக மஞ்சள் அடிப்பதில்லை??

Karthik Viswanathan said...

//மிகவும் வறுமையில் வாடிக்கொண்டிருந்தவர்கள் எல்லாம் பெரும் பணக்காரர்கள் ஆகியிருக்கிறார்கள்.//

இதிலிருந்து அம்மையார் என்ன சொல்ல வராங்க?

IdlyVadai said...

//காரம் கம்மியா இருக்கு, இன்பா!

ஒரு சந்தேகம்.
ஏன் இட்லி சண்டேன்னா ரெண்டு பதிவுகளில் கடந்த சில வாரங்களாக மஞ்சள் அடிப்பதில்லை??//

ஏற்கனவே காரம் கம்மி அதில் மஞ்சள் பொடியை போட்டா இன்னும் கம்மியாகிடும்.

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

ஏதோ பதிவு போடணுமேன்னு போட்டது போல் இருக்கு மக்கா. பிறந்த நாள் கொண்டாட்ட மயக்கம் இன்னும் தீரலியா?

S. Krishnamoorthy said...

அகில இந்த்திய அளவிலும் வலுவான எதிர்க்கட்சி இல்லை என்பதும் தெளிவு.
பா.ஜ.கவும் சிங்கம் சிற்றெறும்பு (ரு?) ஆகிவிட்ட கதைதான்.
ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்ட்டாட்டம் தான். (கூத்தாடி என்ற சொல்லுக்குப் பொருளை அகராதியில் காண்க).
அ.நாமதேயன்

sundaikai said...

ஜெயா ஒதுங்கி இருக்கும் காரணம், வர வேண்டிய % போயஸ் தோட்டத்துக்கு அவங்களே அரசியல் நடத்தும்பொழுது வந்ததை விட அதிகமாக வருவதால்.
விஜய்க்கு வாயடைக்க அப்-அப்பொழுது மு.க.வும் அதன் வாரிசுகளும் அழுத்திக்கொண்டே இருகிறார்கள்.
ஈரான் நல்ல மார்கத்திற்கு பயன் படுத்தினால் நல்லது. நமுக்கு தலைவலி சீனர்கள் தான். அவர்களின் நில ஆக்கிரமிபகளுக்கு முதுகு-எழும்பிலா அரசியல் வாதிகள் வளைந்து கெடு-கிறார்கள்.
உலக அளவில் காவல் துறை ஒப்பீடல்களை பார்போம்.
எல்லாம் விதி

Anonymous said...

'shia' is not a separate religion, it is a division of islam.

Anonymous said...

அட அது ஸ்டாலின் பையன் எடுத்த படத்தில் விஜய் நடித்ததற்குக் கூலியாகக் கொடுக்கப் பட்ட நிலம் ஐயா. அதாவது கருணாநிதியின் பேரனும் துணை முதல்வனின் பையனும் சினிமா எடுப்பான், அதில் நடித்த நடிகருக்கு நகரின் முக்கியமான இடத்தில் அரசு நிலத்தை ஓசியாகக் கொடுத்து கணக்கைத் தீர்த்திருக்கிறார்கள். இதற்குப் பெயர் கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது அல்லது ஊரான் வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே கதைதான். குருவியில் நடித்தற்கு பொது மக்கள் காசை எடுத்து தானம் செய்திருக்கிறார்கள் முத்தமிழ் வித்தகரின் குடும்பம். இதில் இந்த விஜய் பெரிய உத்தம புத்திரன் போலப் பேசும் வசனம் இருக்கிறதே. தாங்கலண்ணா. இது ரொம்ப நாட்களாக வெளியில் தெரியாமல் இருந்தது. இது போக மவுண்ட் ரோடிலேயே ஒரு அரசு நிலத்தை இதே விஜய்க்கு இதே கருணாநிதியின் அரசு தானம் செய்திருக்கிறது அது எப்பொழுது வெளியில் வரப்போகிறதோ? அதையெல்லாம் வைத்து மிரட்டித்தான் விஜயை காங்கிரஸ் பக்கம் ஒதுங்காமல் தடுத்தார்கள். அது சரி எவன் வீட்டுக் காசை எவன் எடுத்து எதுக்காக எந்த நடிகனுக்குக் கொடுத்தால் எனக்கென்ன, எனக்கு ரெண்டு பிரியாணி பொட்டலுமும், ஐநூறு ரூபாயும் கொடுத்தால் கருணாநிதிக்குக் காலம் காலமாக ஓட்டுப் போடுவேன் என்று தமிழ் நாட்டு மக்கள் சொல்லும் பொழுது இட்லி வடைக்கு ஏனைய்யா அதைப் பற்றி கவலை? போய் பிள்ளைக் குட்டியப் படிக்க வைக்கிற வேலையைப் பாருங்க போங்க போங்க

jaisankar jaganathan said...

/இப்போதும் தமிழகத்தின் தனிப்பெரும் கட்சி அ.இ.அ.தி.மு.க.தான் என்று அக்கட்சிப் பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூ‌றினா‌ர்.
//

super joke ithu. nadikar vijay than thalivar

R.Gopi said...

எல்.ஐ.சி.கட்டிடத்தை தன் மகன் பெயருக்கு எப்போது எழுதி வைப்பீர்கள்.... என்று எஸ்.ஏ.சந்திரசேகர் கேள்வி எழுப்பினார்...

kggouthaman said...

// "நான் லஞ்சம் இல்லாத நாடு, பஞ்சம் இல்லாத வீடு, வஞ்சம் இல்லாத மனுஷன், இதுக்குத்தான்யா போராடிகிட்டு இருக்கேன்" - இது நடிகர் விஜய் ஒரு படத்தில் பேசும் வசனம்.//
வருகின்ற சிரிப்பு 'கொஞ்சம் நஞ்சம்'
இல்லை !!!
ஹா ஹா ஹா ஹா ஹா !!

SATHEESH said...

செய்தி 1 , செய்தி மாதிரியே இல்லியே ? பிரசாரம் மாதிரி உள்ளது .
ஜெயா டிவி செய்தியோ ?

Kameswara Rao said...

இன்பா

இந்த வாரம் சண்டேன்னா ரெண்டு,

விஜய் வசனம் காமெடி போங்க

காமேஷ்

pachhamilaka said...

என்னக்கு என்னமோ பல அரசியல்வாதிகள் ..இன்னும் ஓய்வு எடுத்தால் ஜனங்க நிம்மதியா இருப்பாங்கனு தோனுது, புதுசா அரசியல் வியாபாரம் ஆரம்பிக்க ஒரு பிள்ளையார் சுழி நடிகர் விஜய் போட்ருக்கார் இன்னும் எவ்வளவோ இருக்கு இதுக்கே பயந்தாஎப்படி ?

அப்பா டக்கர் அமீர்பர் said...

Iranians are not ARABS but IRAQI's are ARABS.

IRANIANS are "PHARSIS" and they are not speaking ARABIC.

ARABS dislike iranians and they won't support in any issues