பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, November 28, 2009

*#06#

அடையாள எண் இல்லாத செல்போன் இணைப்பு வரும் திங்கட்கிழமை துண்டிக்கப்படுகிறது. சென்னை பர்மா பஜாரில்( அல்லது ஏதாவது ஒரு பஜாரில் ) கொரியா, சீனா மொபைல் போன் வாங்கினீர்களா ? அப்படி என்றால் கீழே படியுங்கள்....

இந்த மாதிரி சீப்பான மொபைல் போனின் இந்த அடையாள எண் இருக்காது. இது என்ன என்று கேட்பவர்களுக்கு சின்ன விளக்கம்

செல்போன்களில் ஐ.எம்.இ.ஐ. (சர்வதேச செல்போன் குறியீட்டு எண்) என்ற ரகசிய குறியீட்டு எண் உள்ளது. இந்த எண் 15 இலக்கங்களை கொண்டது ஆகும். ஒவ்வொரு செல்போனுக்கும் ஒவ்வொரு ஐ.எம்.இ.ஐ. குறியீட்டு எண் இருக்கும்.

ஒரு செல்போன் எந்த இடத்தில் இருந்து பேசப்படுகிறது என்பதை இந்த எண்ணின் மூலம்தான் கண்டுபிடிக்க முடியும். செல்போன் தொலைந்து விட்டால், உரிமையாளர் அதன் செயல்பாட்டை நிறுத்தி வைக்கவும் இந்த எண் தான் உதவுகிறது. நாம் அதை செய்வதில்லை, உடனே சிம் கார்டை மாற்றிவிடுவோம்.

கொரியா, சீனாவில் இருந்து கொண்டு வந்து விற்கப்படும் ஏராளமான செல்போன்களில் ஐ.எம்.இ.ஐ. என்ற சர்வதேச ரகசிய குறியீட்டு எண் இருப்பது இல்லை. இந்தியா முழுவதும், ரகசிய குறியீட்டு எண் இல்லாத சுமார் 2 1/2 கோடி செல்போன்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டு உள்ளது.

இந்த குறியீட்டு எண் இல்லாத செல்போன்களை பயன்படுத்துவதில் பாதுகாப்பு தொடர்பான பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இந்த வகை செல்போன்களில் இருந்து பேசும் போது எங்கிருந்து பேசுகிறார்கள் என்பதை கண்டுபிடிக்க முடியாது. இது தீவிரவாதிகளுக்கு மிகவும் வசதியாக போய் விடுகிறது.

அத்தகைய செல்போன் வைத்திருப்பவர்கள் அதை மாற்றிக் கொள்வதற்கு வசதியாக வருகிற 30-ந் தேதி (திங்கட்கிழமை) வரை `கெடு' விதித்து மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அந்த `கெடு' முடிய இன்னும் 2 நாட்களே உள்ளன. எனவே, திங்கட்கிழமை நள்ளிரவு 12 மணி முதல், சர்வதேச ரகசிய குறியீட்டு எண் இல்லாத செல்போன்களின் இணைப்புகள் துண்டிக்கப்படும். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட செல்போன் நிறுவனங்களுக்கு தொலைத்தொடர்பு துறை ஏற்கனவே உத்தரவிட்டு உள்ளது.

எந்த செல்போன்களில் ஐ.எம்.இ.ஐ. சர்வதேச ரகசிய குறியீட்டு எண் இல்லையோ அல்லது எல்லா குறியீட்டு எண்களும் பூஜ்ஜியமாக இருக்கிறதோ அந்த செல்போனில் இருந்து செய்யப்படும் அழைப்புகள் மற்றும் பெறப்படும் அழைப்புகளை ஏற்றுக் கொள்ளக்கூடாது என்று அந்த உத்தரவில் கூறி இருக்கிறது.

எப்படி கண்டுபிடிப்பது ?

முதல் வழி :
செல்போனில் ஸ்டார் பட்டனை முதலில் அழுத்த வேண்டும் பின்னர் ஆஷ் பட்டனை அழுத்தி 06ஐ அழுத்தவும். அதைத் தொடர்ந்து ஆஷ் பட்டனை அழுத்தினால் உங்கள் போனில் 15 இலக்கு எண்கள் வரும். அதுதான் அடையாள குறியிட்டு எண்ணாகும்.

இரண்டாம் வழி:
57886 என்ற எண்ணுக்கு IMEI என்று எஸ்.எம்.எஸ். அனுப்பினால் தங்கள் செல்போனின் ரகசிய குறியீட்டு எண்ணை உறுதி செய்து கொள்ளலாம்.

அப்டேட்: ஏர்டெல் வாடிக்கையாளர்கள் IMEI டைப் செய்து 121க்கு அனுப்பினால் சுட்ட பழமா சுடாத பழமா என்று சொல்லுகிறார்கள்.


என்னுடைய செல்போனிலிருந்து
57886க்கு அனுப்பி பார்த்தேன். This IMEI number is invalid என்று வந்துவிட்டது. இது தப்பான தகவல் ஆகவே உங்களுக்கும் அது மாதிரி வந்தால் பயப்பட வேண்டாம். முதல் வழியை பின்பற்றுங்கள் அல்லது செவ்வாய்கிழமை வரை காத்திருங்கள் :-)

17 Comments:

jaisankar jaganathan said...

phone use pannura ponnu freea?

naan kadavul said...

dubai bank mathiri ithukkum ethavathu seivanga

kggouthaman said...

// முதல் வழியை பின்பற்றுங்கள் அல்லது செவ்வாய்கிழமை வரை காத்திருங்கள் :-) //
இந்த எடக்கு மடக்கு தானே கூடாதுங்கறது!

maddy73 said...

Cell phone technology is launched in our country, atleast 11 years back. I wonder why this was not made mandatory from the begining(genuine/approved handset ie having valid IMEI #), for usage. Sleeping administrators/officials.. poor India/Indian..

Bitter fact.

THIYAGU said...

தகவலுக்கு நன்றி.

IMEI <15 DIGIT NUMBER> டைப் செய்து 57886 என்ற எண்ணுக்கு SMS அனுப்பி நம்முடைய மொபைல் IMEI நம்பர் VALID OR INVALID என்று தெரிந்து கொள்ளலாம்.

என்னுடையது VALID என்று தெரிந்து கொண்டேன் .

Litmuszine said...

Those with invalid IMEI mobile phone sets,there is an option to get a valid IMEI by paying Rs.199 (inclusive of taxes)in the authorized GII (Genuine IMEI Implant) partners

..MSAI is exclusively authorized body in India by GSM Association (GSMA) to perform Genuine IMEI Implant program (GII).MSAI is working in partnership with Cellular Operators Association of India (COAI) and Department of Telecommunications (DOT) to implant the genuine IMEI numbers on to the mobile handsets which are carrying bad/non genuine IMEI numbers as a one time Amnesty Program....

For further information refer below URLs.
http://www.msai.in/gii.html

http://www.msai.in/listofcentre.php

ந.லோகநாதன் said...

My mobile shows 16digit number, thanks for the information ..keep it up IDLYVADAI

vedanarayanan said...

maddy73 ,
நீங்க எங்க இருக்கீங்க?
India விலா OR அமெரிக்கா வா?
இப்ப பண்ணியதே ரொம்ப early ..26/11 நடந்து 1 year குள்ள பண்ணிட்டாங்க. இதுவே ரொம்ப early ..கொஞ்சம் சந்தோஷ படலாம்.

maddy73 said...

vedarayanan said...

"maddy73 நீங்க எங்க இருக்கீங்க?
India விலா OR அமெரிக்கா வா?"

நான் இந்தியாலதான் இருக்கேன்.

"இப்ப பண்ணியதே ரொம்ப early ..26/11 நடந்து 1 year குள்ள பண்ணிட்டாங்க. இதுவே ரொம்ப early ..கொஞ்சம் சந்தோஷ படலாம்."

நல்லா சொன்னீங்க சார். Agreed.

"poor India/Indians" --nothing but expressing my 'self-pity'ness

Karthikeyan TR said...

Idlyvadai,

It's not enough typing only IMEI, you have to type the 15 digit number also and send it to 53232. you will get your mobile manufacturer details and model number. Try it again. I feel 57886 is not working properly.

Anonymous said...

*#06# பண்ணினேன். ஒரு மண்ணும் வரவில்லை.செல் ரிலையன்ஸில் வாங்கினேன்.
-டில்லி பல்லி

Anonymous said...

57886 என்ற எண்ணுக்கு sms செய்தால் காசு புடுங்குவாங்களா இல்ல இலவசமா?

ஸ்ரீராம். said...

இப்படிதான் சமீபத்தில் Nokia காரர்கள் 7210 மாடலுக்கு சார்ஜர் கோளாறு...SMS அனுப்புங்கள் என்றார்கள்...யார் அனுப்பினாலும் உங்களுடைய சார்ஜர் பிரச்னை இல்லை என்றார்கள்... இதெல்லாம் கணக்கெடுப்பு வேலையில் ஒரு சுலப குறுக்கு வழியோ என்று தோன்றுகிறது...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

For verification of your imei visit http://www.numberingplans.com/?page=analysis&sub=imeinr to know whether is valid or not.

praveen said...

This is for the kind information of people who blame TRAI and other Indian regulators:

You may not know that India has one of the best Telco policies and stricter procedures compared to countries like US. Here in US, I get an AT&T GoPhone (Prepaid) for my friends who visit here and I don't even need to give any identity or address proof to get the connection. Needless to say IMEI is not enforced here. The GoPhone connection that I got a few weeks back is not even on my name. It is on the dealer's name!

Apart from this, the tariff is great in India. So, we should stop blaming everything and appreciate some of the good things like this.

மர தமிழன் said...

என்து சுட்டதுதான், ஆனா சுடல... சுட்ரதுல இருக்கற ருசியே அது சுடாதுங்கரதுதான்..:-)))

அன்பு நண்பர் maddy73 இதுல மட்டுமா நம்மாளுங்க லேட்டு ? praveen அவர்கள் சொல்ற மாதிரி.. அவல நினச்சி உரல இடிக்க வேண்டியதுதான்..

Anonymous said...

//This is for the kind information of people who blame TRAI and other Indian regulators:

You may not know that India has one of the best Telco policies and stricter procedures compared to countries like US. Here in US, I get an AT&T GoPhone (Prepaid) for my friends who visit here and I don't even need to give any identity or address proof to get the connection. Needless to say IMEI is not enforced here. The GoPhone connection that I got a few weeks back is not even on my name. It is on the dealer's name!

Apart from this, the tariff is great in India. So, we should stop blaming everything and appreciate some of the good things like this.//

TRAI is only work for private operators benefits. 57886 is a paid service. If MSAI wants to help the suffered people who purchased invalid mobile they made facility to check the
IMEI in internet.but they don't do it. This is also one type of business.