பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, November 04, 2009

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 04-11-2009

இந்த வாரம் முனியுடன் ஒரு Chat..

bgmuni is offline. You can still send this person messages and he will receive them the next time when he is online.
idly: ஹலோ

bgmuni : என்ன விஷயம் ? ஏன் இரண்டு வாரமா லெட்டர் எதுவும் இல்லை

idly: :>

bgmuni: இப்ப என்ன விஷயம் ?

idly: கர்நாடக உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருக்கும் ஒரு தமிழர், உச்ச நீதிமன்றத்திற்கு உயர்த்தப்படும் வேளையில், அவர் மீது சரமாரியாக வீசப்பட்ட குற்றச்சாட்டுகள் என்னையும் இந்த நாட்டையே கதிகலங்க வைத்து விட்டன. அதை பற்றி பேசலாம் என்று

bgmuni: உனக்கு வேற வேலையே இல்லையா ? நாட்டில் நடக்கும் இந்த மாதிரி பல கூத்துக்கள் நம்ம சிந்திக்க வைக்கிறதோ இல்லையோ சிரிக்க வைக்கிறது.

idly: தினகரன் என்ன தப்பு செய்தார் ? அவர் தமிழர் என்பதால் தானே இந்த பிரச்சனை எல்லாம். எல்லாம் போட்டி பொறாமை தானே ?

bgmuni: உனக்கு விஷயம் சரியா தெரியலை என்று நினைக்கிறேன். காவிரி ராஜபுரம் திருத்தணி பக்கத்தில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள இந்த கிராமம் தான் இன்றைய ஹாட் டாப்பிக். இப்போது கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருக்கும் பி.டி.தினகரனின் ஊர் தான் இது. தினகரன் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டதைக் கடுமையாக எதிர்த்து வருகிறார்கள் உச்ச நீதிமன்றத்தின் புகழ் பெற்ற மூத்த வழக்கறிஞர்கள் வழக்கறிஞர்கள் மற்றும் கிராம மக்கள். உச்சநீதி மன்ற வழக்கறிஞர்கள் சாந்திபூஷன், நாரிமன், அனில்தாவன், ராம்ஜெத்மலானி எல்லாம் பதறிப் போய் இருக்கிறார்கள். இதை தவிர டெல்லி, கர்நாடகா மற்றும் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கங்கள் என்று பலர் இவர் மீது குற்றம்சாட்டியுள்ளார்கள். இவர்களுக்கு எதற்கு தினகரன் மீது என்ன காண்டு இருக்க முடியும் ? ( படம் : An Anna Nagar property Justice P.D. Dinakaran allegedly owns; fenced property in his village )

idly: அப்படி என்ன தான் செய்தார் இவர் எனக்கு தெரிந்து ஏதோ கொஞ்சம் சொத்து சேர்த்துவிட்டார் அவ்வளவு தானே. இது நாட்டில் நடக்காத தப்பா ?

bgmuni: அவரது சொந்த கிராமத்தில் 400 ஏக்கர் நிலத்தை எழை விவசாயிகளிடமிருந்து மிரட்டி விலைக்கு வாங்கியதுடன், அரசு புறம்போக்கு நிலத்தையும் வளைத்துப் போட்டிருக்கார் தினகரன் என்று சொல்லுகிறார்கள். 440 ஏக்கர் என்பது அந்தக் கிராமத்தில் உள்ள மொத்த நிலத்தில் காற்பங்கு இது! 440 ஏக்கரில் 310 ஏக்கர் நிலம் நீதிபதி தினகரன் பெயரிலும், மீதமுள்ள நிலங்கள் அவர் பிள்ளைகளின் பெயரில் இருப்பதாகக் குறிப்பிட்டுக் குற்றம்சாட்டியிருக்கிறார்கள். அது மட்டும் இல்ல இந்த நிலத்துக்குள் ஒரு ஏரியும் அடங்கியிருப்பதால் கிராமத்து விளைநிலங்களுக்குத் தண்ணீர் வருவது தடுக்கப்பட்டுவிட்டது. அது தவிர ஆடு மாடு மேய்ச்சல் நிலமும் அவர் சுற்று வளைத்துவிட்டார். அதை விடு, நடை பாதை கூட விட்டு வைக்கவிலையாம். இதில அந்த ஒரு சாலைக்கு இவர் பெயர் கூட வைத்திருக்கிறார். பாதிக்கப்பட்டவர்கள் புகார் செய்தால் அவர்களை மிரட்டியும் கைது செய்தும், அடக்குமுறை ஏவியும் விடப்படுகிறது என்கிறார்கள். ( படம்: A road named after Justice P.D. Dinakaran near land allegedly held by him at Kaverirajapuram in Tiruvallur district of Tamil Nadu. )


idly: சும்மா சொல்லாதீங்க ஏதோ நீங்க தான் சர்வே செய்தா மாதிரி

bgmuni: நான் சொல்லலை, அவர் நில ஆக்கிரமிப்பில் ஈடுபட்டது உண்மையே என்று தாசில்தார், மாவட்ட ஆட்சித் தலைவர் வருவாய் அதிகாரிகள் என்று அறிக்கை கொடுத்துள்ளனர். ஆத்திரம் அடைந்த காவேரிராஜபுரம் கிராம மக்கள் இப்ப போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

idly: சரி பணம் கொடுத்து தானே இதை எல்லாம் சட்டபடி வாங்கியிருப்பார் அப்பறம் ஏன் இந்த பிரச்சனை ?

bgmuni : நில உச்சவரம்பு சட்டப்படி, ஐந்து பேர் கொண்ட குடும்பத்துக்கு 15 ஏக்கருக்கு மேல் நிலம் இருக்கக்கூடாது. நேரு ஆட்சிக்கு வந்தவுடன் ஜமீன்தாரி நில ஒழிப்புச் சட்டம் வந்தது. காமராஜ் காலத்தில் 30 ஏக்கர் நில உச்ச வரம்புச் சட்டம் வந்தது. கருணாநிதி தன் பங்கிற்கு நிலத்தின் உச்ச வரம்பை 15 ஏக்கராகக் குறைத்தார். இப்ப புரியுதா ?

idly: "நான் பரம்பரை பணக்காரன்" என்று சொல்லியிருக்கார் நீதிபதி தினகரன். அப்படி இருக்கும் போது நீங்க இது மாதிரி சொல்றீங்க

bgmuni: அப்படியானால் 1980ல் அரக்கோணத்திலிருந்து இரண்டாம் வகுப்பில் சென்னைக்கு தினமும் ரயிலில் வந்து போனது ஏன்?" என்று எதிர்க் கேள்வி கேட்கிறார்கள் வழக்கறிஞர்கள். பல வழக்கறிஞர்கள். இதுக்கு என்ன பதில் ?

idly: தினகரன் ஒடுக்கப்ப்ட்ட இனத்தவர் என்பதால் தடைகளைப் போடுகிறார்கள் என்று சொல்லுகிறார் தி.க வீரமணி. இவர் முன் வைக்கும் காரணம் "மீண்டும் மனுதர்ம அணுகுமுறையா? நீதிபதி பி.டி. தினகரன் பற்றி கூச்சல் போடுவோர் கொடநாடு, சிறுதாவூர் பற்றி தாவவில்லையே ஏன்?தமிழர்களே இதைப் புரிந்துகொள்வீர்" என்று சொல்லி தனித்தனி குடும்பங்களான அவரது தாய், தந்தையர், மாமனார், மாமியார் எவருக்கும் சொத்து வாங்கிட உரிமை இல்லையா? தினகரன் வாங்கிய சொத்துக்கள் எல்லாம் அவர் நீதிபதியாவதற்கு முன்பே வாங்கியது என்றும் சொல்லியிருக்கார். அப்படி என்றால் "நான் பரம்பரை பணக்காரன்" என்று தினகரன் சொல்லுவது பொய்யா ?

bgmuni: காமெடி செய்வது அவர் பழக்கம் அதில நாம தலையிட கூடாது. ஜெயலலிதாவின் டான்ஸி வழக்கில் அவருக்கு ஆதரவாக ஒரு கட்டத்தில் தீர்ப்பு கொடுத்தவர் தினகரன் இப்போது கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஒரே நாளில் நாற்பதுக்கும் மேற்பட்ட வழக்குகளில் அவர் ஜாமின் கொடுத்ததை கர்நாடக வழக்கறிஞர்கள் சந்தேகத்துடன் பார்க்கிறார்கள். கின்னஸ் சாதனைக்கு போனாலும் ஆச்சரியப்பட கூடாது. இந்த சர்சசையில் சிக்கியதால் தினகரன் எந்த வழக்கையும் விசாரிக்கக் கூடாது என்று போர் கொடி பிடிக்கிறார்கள். வீரமணி அவர்களுக்கு இது எப்படி தெரியாமல் போய்விட்டது ?

idly: அக்டோபர் - 31ந் தேதி ‘முரசொலி’ யின் முதல் பக்கத்தில் அரைப்பக்க அளவில் வெளியிடப்பட்டுள்ள இந்த படம். பார்த்தாயா ?

bgmuni: இல்லையே !

idly: இரு அனுப்புகிறேன்.
[ download completed ]
bgmuni : ஓ. இந்த படமா ? இந்தியன் எக்ஸ்பிரஸ் அடுத்த நாள் "தி.மு.க. தனது மவுனத்தைக் கலைத்து நீதியரசர் தினகரனுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டது" என்று செய்து வெளியிட்டது. தெரியுமா ?

idly: ஆமாம். அடுத்த நாள் முரசொலியில் அந்த படத்துக்கான விளக்கம் இது என்று ஒரு கட்டுரை வெளியிட்டார்கள். அதில்
‘முரசொலி’ பாரதியார் கவிதை சாட்சியாக எழுப்பியுள்ள கேள்வி என்ன?

1. நீதியரசர் பி.டி.தினகரன் - பதவியைப் பயன்படுத்தி ஏராளமான சொத்துக்களை அபகரித்துவிட்டார் என்று நாள் தவறாமல் குற்றஞ்சாட்டி எழுதுகிறீர்களே -
2. கொடநாட்டில் நிலங்களை அபகரித்து பங்களா கட்டியுள்ள ஜெயலலிதா மீது மட்டும் பல்லிடுக்காலும் ஒரு வார்த்தை பகர்வதில்லையே நீங்கள் அது ஏன்?

என்று விளக்கம் அளித்துள்ளார்கள்.

bgmuni: பரவாயில்லையே அப்ப தினகரன் செய்தது மோசடி என்று ஒப்புக்கொள்கிறார்கள் போல. இவர்கள் பிரச்சனை தாழ்த்தப்பட்ட ஒருவர் தப்பு செய்தால் அதை கண்டிக்க கூடாது போல. பலே பலே.

idly: இரு நீதி - சமநீதியா? என்ற தலைப்பில் வந்த பாரதியார் கவிதை எனக்கு புரியவில்லை.

சூத்திரனுக்கொரு நீதி - தண்டச்
சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி
சாத்திரம் சொல்லிடுமாயின் - அது
சாத்திரமன்று சதியென்று கண்டோம்!

bgmuni: போன வார துக்ளகில் இதை படித்தேன் "மனுஸ்ம்ருதி சொல்கிறது : ‘அறிந்து திருட்டுக் குற்றத்தைச் செய்கிற சூத்திரனுக்கு, வழக்கமான தண்டனையை விட எட்டு மடங்கு அதிகமான தண்டனை விதிக்க வேண்டும்; வைச்யனுக்கு பதினாறு மடங்கு; க்ஷத்ரியனுக்கு முப்பத்திரண்டு மடங்கு; குற்றத்தின் தன்மையை அறிந்தவன் என்பதால், பிராமணனுக்கு அறுபத்தி நான்கு மடங்கு தண்டனை அல்லது நூறு மடங்கு அல்லது நூற்றி இருபத்தெட்டு மடங்கு தண்டனை விதிக்க வேண்டும்"
ஜெயலலிதா குற்றம் செய்தவர் என்று தெரிந்து ஏன் இந்த அரசு இன்னும் சும்மா இருக்கிறது ? இது தான் நீதியா ? யார் பிராமணர்களுக்குக் பாரபட்சமா காட்டுகிறார்கள் ?

idly: என்ன தான் இருந்தாலும் தாழ்த்தப்பட்ட சகோதரர் பி.டி.தினகரன் பற்றி சண்டப்பிரசண்டம் செய்கிறீர்களே அவர் தாழ்த்தப்பட்ட சகோதரர் என்ற காரணம் தானே ?

bgmuni: தினகரன் கிறிஸ்துவர், அவர் முழு பெயர் பால் டேனியல் தினகரன் பிரேம்குமார். தலித்துக்குரிய சலுகைகள் அவருக்கு கிடையாது அது தெரியுமா ? எனக்கு ஒரு சீனியர் வக்கீல் சொன்னார்.

idly: வீரமணி தினகரன் மீது குற்றம் இல்லை என்று சொல்லுகிறார். தினகரனே கூட் என் மீது குற்றம் இல்லை என்று சொல்லுகிறார். அப்படியானால் ?

bgmuni: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கோரியதன் பேரில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்தி அளித்திருக்கும் அறிக்கையில் தினகரன் 191 ஏக்கர் பொது நிலத்தை ஆக்கிரமிப்பு செய்திருப்பதாக தெரிவித்திருக்கிறார். கலெக்டர் சொல்வது பொய் என்கிறார் தினகரன். தன்னுடைய உயர் அதிகாரி பொய் சொல்வதாக ஒரு நீதிபதி சொல்லும்போது, தமிழக அரசு ஏன் மௌனமாக இருக்கிறது ? பொய் சொல்வது நீதிபதியா, ஐ.ஏ.எஸ் கலெக்டரா என்று பதில் சொல்ல தமிழக அரசு தயங்குவது ஏன் ? இரு நீதி - சமநீதியா?

idly: சரி இப்ப என்ன தான் சொல்லவர ?

bgmuni: நான் ஒன்றும் சொல்லலை, ஆனால் இந்த சர்ச்சை நடக்கும் போதே ஊட்டியில் ஏழு கோடியில் இவரது குடும்பத்தினர் சொத்து வாங்கியிருக்கிறார்கள். இவரை உச்சநீதிமன்ற நீதிபதியாக்க மிகவும் ஆர்வமாக இருப்பவர் தமிழகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர் ஒருவர் என்ற பேச்சும் அடிபடுகிறது.
Sent at 16:36 PM on Wednesday
bgmuni is offline. You can still send this person messages as He is God and He Will Receive it. But I am not sure if He Will Reply.

படிக்க வேண்டியவை: Issues Of Deep Concern
நீதிபதி நீதியரசர் என்ன வித்தியாசம் ?

18 Comments:

மானஸ்தன் said...

//idly: ஹலோ
bgmuni : என்ன விஷயம் ? ஏன் இரண்டு வாரமா லெட்டர் எதுவும் இல்லை
idly: :>
bgmuni: இப்ப என்ன விஷயம் ?
///


typical that of an "idly chat"!
:>

மானஸ்தன் said...

குடும்பத்துல கொழப்பம் பண்ண "தினகரன் மேட்டரையே" சகிச்சுண்டு காப்பாத்தின "தலைவர்" இந்த "தினகரன்" மேட்டர்ல உதவி செய்யாமலா போயிடுவார்!!

போங்கப்பு. ஏதாவது நல்ல காமெடி போஸ்ட் போடுங்க.

Inaya Subbudu said...

Judge = நீதிபதி
Justice = நீதியரசர்

இலவசக்கொத்தனார் said...

மானஸ்தரே,

நீங்களும் இந்த :> க்ரூப்தானா. இப்போ எனக்கு எல்லாம் நல்லாப் புரியுது!! :))

Anonymous said...

அப்படி ஜெயலலிதா சட்ட விரோதமா நிலத்த ஆக்கிரமிச்சுருந்தா, எதுக்கு பாரதியார் பாட்ட போட்டு நியாயம் கேட்கணும்? இவிங்ய தானேய்யா ஆட்சி பண்றாய்ங்ய? புடிச்சு உள்ள போட வேண்டியது தானய்யா?

Baski said...

He being a Judge his prosperity is well understandable....

Not only judges.
1. Police department.
2. Public Service Department.
3. All state/central officers.

The entire administration is corrupt. Blame all political leaders of present/past who failed to correct this.

யதிராஜ சம்பத் குமார் said...

இட்லி....நீர் இனம் காக்கும் மானமிகு தமிழர்களுக்கு மத்தியில் இருக்கிறீர் என்பதை அவ்வப்போது மறந்து விடுகிறீர்!!


நீதி-பதி...இதில் பதி என்பது ஸம்ஸ்க்ருத பதம்....எனவே நீதிபதி என்று குறிப்பிடுவது தமிழினத்திற்கு இழைக்கப்படும் அநீதி.

ஆக பதி என்பதற்கு மாற்றான அரசர் என்பதைச் சேர்த்து நீதியரசர் என்று மானமிகு வீரமணி அழைக்கிறார்.


மற்றபடி நீதிக்கும், நீதியின் அரசருக்கும் ஸ்நானப் ப்ராப்தி கூட கிடையாது.


பதிவு "நச்"!!!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

பதி என்றால் உடையவன் என்று பொருள். நீதிபதி என்றால் நீதியை உடையவன் என்று பொருள் கொள்ளலாம். அரசர் என்றால் ஆள்பவர், நீதியரசர் என்றால் நீதியை ஆள்பவர் என்று பொருள். (அப்படிஎன்றால் நீதி அவர் சொல்வதைக் கேட்டாக வேண்டும் என்று தான் பொருளா என்று கேட்டால், நான் எஸ்கேப்.)

Anonymous said...

Re Yatiraja Sampathkumar's comments:

Both Neethi and Pathi are Sanskrit words. Haven't you heard of
Bhartruhari's "Niti Shatakam"?
BTW, in New Delhi's Chanakyapuri there is a road called Niti Marg; also a Nyaya Marg.

So what will Veeramani now name
a judge in Tamil?

Anonymous said...

பூனைக்கு(மக்களை ஏமாற்றும் அரசியல் வியாதிகள், சலாம் போடும் அதிகாரிகள், நீதி.. ,காவல்..) மணி கட்ட இன்னும் சில வருடங்களே உள்ளது. அதுவரை ஆடுங்க ஆடுங்க.
இப்படியே எத்தனை நாள் ?

முதலில் மக்கள் மாற வேண்டும். மக்களை மாறாமல் பார்த்துக்கொள்வது அரசியல் வியாதிகள் வேலை.

கட்டப்பஞ்சாயத்து செய்த ஈரோடு N.K.K.P.ராஜாவின் இன்றைய நிலை, அரசியல் வியாதிகள் கொடுக்கப்படும் முதல் மணி. இது இனிவரும் வருடங்களில் தமிழகத்தில் பெரிய மாற்றத்தை கொண்டு வரும்.

பாரதி மணி said...

மீ.கி. வீரமணியே சொல்வதால், நீதி பதி/அரசர் தினகரன் அப்பழுக்கற்றவர் என்றே நம்புவோமாக! இல்லையென்றால் ‘இரு நீதி - சமநீதி’ தாழ்த்தப்பட்ட மைனாரிட்டி வகுப்பைசேர்ந்த ஒரு நல்லவரை பழிக்கும் குற்றத்துக்காளாவோம்!

அங்கே ஒரு முன்னாள் முதலமைச்சர் சி.பி.ஐ.க்கு பயந்து ஆஸ்பத்திரியில் படுத்துக்கொண்டிருக்கிறார். இரண்டாயிரம் கோடிக்குமேல் ஊழலாம். மாவோயிஸ்டுகள் கிராமத்து ஏழைமக்களை பலியாக்குவதை விட்டு இவர்களை மடக்கினால் பல லட்சம் கோடிகள் வெளியே வருமே! நூற்றுப்பதினேழு கோடி நாட்டு மக்களுக்கு இலவச டி.வி. வழங்கலாமே!

மர தமிழன் said...

அண்ணா சிலைகள் யாரையோ சுட்டிகாட்டுவதுபோல் வடிவமைத்ததின் காரணம் புரியாமல் இருந்தது அனால், அவங்க செய்யலையா அவங்க செய்யலையான்னு ஒவ்வொரு தப்புக்கும் ஜெயலலிதா வையோ வேற யாரையோ சுட்டிக்காட்டும்போது இது அண்ணா சிலை சொன்ன அருள் வாக்கா இருக்குமோ?

பல்லவநாடன் said...

இத போயி ஒரு மேட்டரா பேசரீங்க!
இன்னுமா நல்ல காலம் வரும்னு நம்பறீங்க!
அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா!
உங்களையெல்லாம் பார்த்தா எனக்கு சிரிப்பா வருது!

Dubai Nara said...

அப்படிப் பார்த்தால் "நீதி" என்பதே சமஸ்கிருதம் தான். தமிழின் பல வார்த்தைகள் சம்ஸ்கிருதமாய் இருந்து தொலைகிறதே என்ன செய்ய ? ஏன் வார்த்தை என்பதே சமஸ்கிருதம் தான்

Maha said...

அய்யா, ஒருத்தரோட திறமையை பார்த்து பதவி உயர்வு கொடுத்தா, நீங்க அந்த திறமையையே குறை சொல்றது நீதிக்கு அடுக்காது. என்ன செய்யிறது. கலி முத்திப் போச்சு.

Kameswara Rao said...

இவ,
"அய்யா, ஒருத்தரோட திறமையை பார்த்து பதவி உயர்வு கொடுத்தா, நீங்க அந்த திறமையையே குறை சொல்றது நீதிக்கு அடுக்காது. என்ன செய்யிறது. கலி முத்திப் போச்சு." ஐயா இத யாருக்கு சொல்றீங்க திருவாளர் தினகரனுக்க, என்ன நீங்க நீங்க எதாவது குற்றம் செஞ்சி அவர் அலுவலகம் போங்க அங்க ஒரு மாதிரி அட்டவணை இருக்கும் அதுல நீங்க செஞ்ச குற்றத்துக்கு என்ன பணம் செலுத்தனும் என்றும் பாருங்க கட்டிட்டு ஜாலிய irunga இதுவல்லவோ நீதி அரசரி ராஜாங்கம் இதுவல்ல்ளவோ நீதிபதியின் கோட்பாடு ...சொன்னதுபோல் தப்பை மறைக்கும் மறக்கும் தன்மை இருக்கும் வரை இது தொடரும் ...

"இதையும் கடந்து போவோம்"


காமேஷ்

Anonymous said...

DMK and ADMK and other political are silent in Dinakaran's issue.

Ordinary Bank Clerk, DGS. DINAKARARN became millionaire IN NAME OF JESUS and snatched 100 of acres of land in kovai district and changed a village name as karunya nagar...these parties CLOSED THEIR EARS AND EYES no one enquired, how he got lumpsum...

Justice. Dinakaran became millionaire IN THE NAME OF JUSTICE the same parties closed their eyes and ears and trying to shut others mouth now...

When KANCHI SANKARACHARYA bought the ex tamilnadu hospital property near chennai... this same parties shouted,throwed mud at him...and what they did atlast...no actions or enquiry....

So IDLY don't worry...this people will shout...
'KORAKIRAI NAIKAL vettai ADHADUGAL"

murali

vedanarayanan said...

இதெல்லாம் ரொம்ப கண்டு கொள்ளாதீங்க. நம்ம மாயாவதி பண்ணாத corruption ஆ!

இப்ப நம்ம எல்லோருக்கும் முக்கியமானது என்னவென்றல், இந்த ஒபாமா மாதிரி ஒருத்தரை எப்படி CM or PM ஆக்குவது என்பதே?

அதுவரைக்கும் இவங்க கொள்ளை அடிக்கட்டும்.