பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, October 19, 2009

மீனம் ராசி பலன்கள்


மீனம் இராசிக்குள்ள சனிப்பெயர்ச்சி பொது பலன்கள்

உங்களைப் பற்றி:

நட்புக்கும், பாசத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கும் மீன இராசி வாசகர்களே, நீங்கள் எல்லோரையும் எளிதில் நம்புபவர்கள். மனிதநேயம் அதிகம் கொண்டவர்கள். உழைப்புக்கு முக்கியத்துவம் அளிப்பவர்கள்.

எப்படி இருக்கப் போகிறது இந்த சனிப் பெயர்ச்சி:

இது வரை 6வது ஸ்தானத்தில் இருந்த சனீஸ்வரன் இனி ஸப்தமஸ்தானத்தில் இருந்து வரும் 21/2 ஆண்டுகளுக்கு என்னென்னெ பலன்கள் தரப்போகிறார் என்பதைப் பார்ப்போம்.

இதுவரை தீராத பிரச்சனை, முடிவெடுக்க முடியாமல் குழப்பம், மருத்துவச் செலவுகள் என இருந்ததல்லவா, இனி அந்த நிலை மாறும். கணவன் - மனைவிக்குள் எந்த பிரச்சனையானாலும் மனம் விட்டு பேசி உங்கள் பிரச்சனைகளை நீங்களே முற்றுப்புள்ளி வையுங்கள். மூன்றாம் மனிதரின் தலையீடு வேண்டாம். பிள்ளைகளின் உணர்விகளுக்கும் இடம் கொடுங்கள். உணவு விஷயத்தில் கவனம் தேவை. உடல்நிலையிலும் அக்கறைசெலுத்தவும். தலைவலி மற்றும் வாயு சம்பந்தமான நோய்கள் வந்து குணமாகும். பெற்றோரது ஒத்துழைப்பு கிடைக்கும். வெளிவட்டடரத்தில் மதிப்பு, மரியாதை உயரும். எந்த மனிதரையும் விமர்சனம் வெளியில் வைத்து விமர்சனம் செய்ய வேண்டாம். அரசு விஷயாதிகளில் நிதானத்தையும், பொறுமையையும் கடைபிடிக்கவும். புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். பிரியமானவர்களிடம் அடிக்கடி உரையாடுங்கள். சொத்து சிக்கல்களில் பெரியோர்களின் ஆலோசனைகளைக் கேளுங்கள். தாய் மற்றும் தாய் வழி உறவினர்களிடம் சிறுசிறு சலசலப்பு ஏற்பட்டு சரியாகும். அலைச்சகள் நிறைந்த பயணங்கள் நிரம்ப இருக்கும். பணத்தட்டுப்பாடு குறையும். தியானம் யோகா போன்றவற்றில் மனம் செலுத்துங்கள். முடிந்த வரை இரவு நேர பயணங்களை தவிருங்கள். தடைபட்டிருந்த கட்டிட வேலைகள் முடிவடையும். பல சுபகாரியங்களில் கலந்து கொள்வீர்கள். வியாபாரம் மற்றும் உத்தியோகத்தில் சந்தர்பம் அறிந்து செயல்படுங்கள். கொடுக்கலில் வாங்கலில் கவனம் தேவை. கடன் கொடுக்கவும் வாங்கவும் கூடவே கூடாது. பங்குதாரர்களை அனுசரித்து போகவும். நம்பிக்கைக்கு உரியவர்களிடம் ஆலோசனைகள் பெற்று காரியங்களில் இறங்கவும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சம்பளம் உயரும். இடமாறுதல் கிடைக்கும். அடுத்தவர்கள் விஷயத்தில் மூக்கை நுழைக்காதீர்கள். மணமாகாதவர்களுக்கு மணமாகும். சுச்செலவுகள் இருக்கும். குழந்ததயில்லாதவர்களுக்கு பாக்கியம் கிட்டும். வீடு, வாகனம், மனை ஆகியவற்றை வாங்கும் போது கவனம் தேவை. மேற்படிப்பு விஷயமாக வெளிநாடு செல்வோர் மிகுந்த கவனமாக செயல்படவும். முடிந்தவரை வெளியில் சாப்பிடுவதை தவிர்க்கவும். மாணவமணிகளுக்கு உயர்கல்வி கிடைக்கும். நினைத்த மதிப்பெண்களை கொஞ்சம் முயற்சி செய்தால் அள்ளலாம். கலைஞர்கள் விருதுகள் பெறுவார்கள். மொத்தத்தில் சகிப்புத்தன்மையையும், தன்னடக்கத்தையும் தருவதாக இந்த சனிப்பெயர்ச்சி அமையும்.

நக்ஷத்திர ரீதியான பலன்கள்:

பூரட்டாதி 4ம் பாதம் : உங்களுக்கு ஏற்றத்தையும், பொலிவையும் கொடுக்கும் காலமிது. வெளியூர் பயணங்களால் அனுகூல்யம் உண்டு. பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். ஸ்ரீதக்ஷிணாமூர்த்தியையும் மகான்களையும் வியாழக்கிழமைகளில் தரிசனம் செய்து வாருங்கள்.

உத்திரட்டாதி : ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் தடைகள் விலகும். எதிரிகளின் பலம் என்ன என்று உங்களுக்கு தெரிய வரும். குழந்தைபாக்கியம் இல்லாதவர்களுக்கு பாக்கியம் கிட்டும். அனுமன் காயத்ரியை சொல்ல சொல்ல வாழ்வில் இனிதே நடக்கும்.

ரேவதி : உடல்நலம் சிறப்பாக இருக்கும். பதவி உயர்வும் இடமாறுதலும் கிடைக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். கலைஞர்களுக்கு இது சிறப்பான காலம். ஸ்ரீ மஹாவிஷ்ணுவை ஆராதனம் செய்தால் எல்லா நலமும் கிடைக்கும்.

குறிப்பு: இது மாணவ மணிகளுக்கு: விநாயகர் அகவல், ஸ்லோகம் படிப்பது நன்மையைத்தரும்.

லக்ன ரீதியான பலன்கள்:

லக்னம் இராசி பலன்கள் பரிகாரம்
மேஷம் மீனம் 60/100 சண்முக கவசம் படிப்பது
ரிஷபம் மீனம் 65/100 ஸ்ரீமஹால்க்ஷ்மி அஷ்டகம் சொல்வது
மிதுனம் மீனம் 60/100 விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்வது
கடகம் மீனம் 70/100 ஸ்ரீசியாமளா தண்டகம் சொல்வது
ஸிம்ஹம் மீனம் 60/100 ஆதித்யஹ்ருதயம், மஹாலக்ஷிமி காயத்ரி, நாராயண காயத்ரி, நவக்ரஹ காயத்ரி சொல்வது
கன்னி மீனம் 55/100 விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்வது, முடிந்த வரை இராம நாமம் சொல்வது, மகான்களை வழிபடவும்
துலாம் மீனம் 60/100 நவக்ரஹ ஸூக்தம் சொல்வது, ஸ்ரீஸூக்தம் சொல்வது
விருச்சிகம் மீனம் 70/100 கணபதி பூஜை மற்றும துர்ஹா ஸூக்தம் சொல்வது
தனுசு மீனம் 65/100 கோளறு பதிகம் சொல்லுங்கள், ஹனுமன் வழிபாடு
மகரம் மீனம் 75/100 குலதெய்வ வழிபாடு செய்வது மற்றும் முன்னோர்களை வழிபடுவது.
கும்பம் மீனம் 50/100 துர்க்கா ஸகஸ்ரநாம பாராயணம் மற்றும் மூகபஞ்சக சதீ சொல்வது
மீனம் மீனம் 55/100 தன்வந்திரி ஸ்லோகம் சொல்வது மற்றும் கணபதி உபநிஷத் சொல்வது
லக்னமே தெரியாது மீனம் 55/100 தன்வந்திரி ஸ்லோகம் சொல்வது மற்றும் கணபதி உபநிஷத் சொல்வது
குறிப்பு:

[1] மேலே உள்ள டேபிளை எப்படி பயன்படுத்துவது?

நீங்கள் மீனம் இராசியில் பிறந்து லக்னம் தெரிந்ததென்றால் அதற்குள்ள பலனைத் தெரிந்து கொள்ளவும். அதற்குள்ள பரிகாரத்தை தெரிந்து கொள்ளவும். உதாரணமாக, நீங்கள் மீனம் இராசியில் பிறந்து கும்பம் லக்னத்தில் பிறந்தவரென்றால் உங்களுக்கு 55% சதவிகிதம் நல்ல பலன்கள் கிடைக்கும். மேலும் நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரம்: துர்க்கா ஸகஸ்ரநாம பாராயணம் மற்றும் மூகபஞ்சக சதீ சொல்வது. . எனக்கு லக்னமேத் தெரியாது ஆனால் மீனம் இராசி என்பவர்கள் தன்வந்திரி ஸ்லோகம் சொல்வது மற்றும் கணபதி உபநிஷத் சொல்வது.

[2] இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுபலன்களே. இவை ஜாதகத்திற்கு ஜாதகம் திசை ரீதியாக மாறலாம்.

நக்ஷத்திர வாரியாக சில குறிப்புகள்:

* நக்ஷத்திரங்கள்
பலன்கள் பூரட்டாதி 4 உத்திரட்டாதி ரேவதி
இராசி மீனம் மீனம் மீனம்
இராசியாதிபதி வியாழன் வியாழன் வியாழன்
நக்ஷத்திர அதிபதி வியாழன் சனி புதன்
அதிதேவதைகள் அஜைகபாத் அகிர்புத்னியன் பூஷா
கணம் மனுஷ கணம் மனுஷ கணம் தேவ கணம்
நாடி பார்ஸுவ - வலது மத்ய நாடி பார்ஸுவ - இடது
மிருகம் சிங்கம் பசு யானை
பக்ஷி உள்ளான் குயில் வல்லூறு
விருக்ஷம் மாமரம்(தோமா) வேம்பு இலுப்பை
இரஜ்ஜு வயிறு தொடை இரஜ்ஜு பாதம்
வேதை நக்ஷத்ரம் உத்திரம் பூரம் மகம்
அதிர்ஷ்டம் தரும் எண்கள் 1, 3, 4, 5, 7, 9 1, 3, 4, 6, 7, 9 1, 3, 6, 7, 9
அதிர்ஷ்டம் தரும் திசைகள் கிழக்கு, மேற்கு கிழக்கு, தெற்கு கிழக்கு, தெற்கு
குறிப்பு:

அதிர்ஷ்டம் தரும் எண்களும், திசைகளும் ஜாதகத்திற்கு ஜாதகம் மாறும். இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுவானவையே.

அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

குறிப்பு:

[1] ஜோதிடக் குறிப்புகள் தனி பதிவாக தரப்போகிறேன். காத்திருங்கள்.

[2] சில நண்பர்கள் "ஐயா, ஏதேதோ ஸ்லோகங்கள் போட்டிருக்கிறீர்களே, சிலது எங்களுக்கு தெரியவில்லை" என்றனர். அவர்களுக்காக சிறப்பு PDF FILE ஒன்றும் தயாரித்து வருகிறேன். காத்திருங்கள்.
இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய இறைவனுக்கும், எனது குரு ப்ரும்மஸ்ரீ பெருங்குளம் குப்பு ஜோஸ்யரவர்களுக்கும் மற்றும் இட்லிவடைக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன்,

பெருங்குளம் இராமகிருஷ்ணன்.


13 Comments:

Anonymous said...

Raasi Plangalluku mikka nandri

sa said...

you may start next year sanipearchi palan right now

Anonymous said...

Thanks for all the raasi palan and other useful tips

Anonymous said...

/*** sa said...
you may start next year sanipearchi palan right now**/

For your information, sanipeyarchi 2.5 yearskku oru murai varum, varudathirku orumurai kidaiaathu...

R.Gopi said...

பெருங்குள‌ம் ராம‌கிருஷ்ண‌ன் அவ‌ர்க‌ளுக்கு ந‌ன்றி...

கூட‌வே இட்லிவ‌டை உம‌க்கும்....

R.Gopi said...

//sa said...
you may start next year sanipearchi palan right now//

அது.........

Sa ன்னு போட்டு இருக்கே, அப்ப‌டின்னா
ச‌னியோட‌ முத‌ல் எழுத்தா?

kumar.S said...

mikka nandri

Balakrishna said...

Will u do something which may enrich the readers with high knowldge on science,culture,new on agriculture,mind teasings.

surya said...

where is thulam rasi palan....?????

Lenin said...

Can I get Josiyar's contact info?

IdlyVadai said...

//Can I get Josiyar's contact info?//

rameshramky06.venkat@gmail.com

Lenin said...

"//Can I get Josiyar's contact info?//

rameshramky06.venkat@gmail.com "

thank you

Anonymous said...

Hi,

When I (meenam & Uththaraddaathi) have checked my chart for matching, I have been told that I have only '13 paavam' and it's too low. I have been advised to find a girl who is having nearly the same 'paavam' and it's not good to have one with higher. I couldn't understand that and can u please explain?

Thanks in advance.