பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, October 19, 2009

அரசியலில் சீமானின் நாம் தமிழர் இயக்கம்!

சீமான் தொட‌ங்கும் "அதிர‌டி" அர‌சிய‌ல் க‌ட்சி


திருவண்ணாமலை: நாம் தமிழர் இயக்கம் மே மாதம் அரசியல் இயக்கமாக மாறுகிறது. திமுக, அதிமுகவை எதிர்த்து வெற்றி பெறுவோம். அடிக்கு அடி, உதைக்கு உதை என்பதில் நம்பிக்கை உள்ளவர்கள் இதில் சேரலாம் என்று கூறியுள்ளார் இயக்குநர் சீமான்.

நாம் தமிழர் இயக்கத்தை ஆரம்பித்து அதை தற்போது அரசியல் பாதைக்குக் கொண்டு சென்று வருகிறார் சீமான். அதற்கு முதல் படியாக பல்வேறு ஊர்களுக்கும் சென்று விளக்கக் கூட்டங்களை அவர் நடத்தி வருகிறார்.

திருவண்ணாமலையில் நடந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் சீமான் உணர்ச்சிகரமாக பேசினார்.

அப்போது சீமான் பேசுகையில், திமுக, அதிமுக கட்சிகளை விட இந்த இயக்கதை வலுப்படுத்திவிட்டுத்தான் தேர்தலில் இறங்க வேண்டும். இந்த இயக்கம் திராவிட கட்சிகள் போல் செயல்படாது. முற்றிலும் வேறுபடும். மக்களுக்காக தமிழனுக்காக பாடுபடும். திமுக,அதிமுகவை விட இந்த இயக்கம் வெல்லும்.

பிரபாகரனைக் காட்டிக் கொடுக்க மாட்டேன்...

பிரபாகரன் உயிருடன் இருக்கிறார். தமிழ் இன உணர்வாளர்கள் இதை நம்புகிறோம். ஆனால் அவர் எங்கே இருக்கிறார் என்று மட்டும் கேட்காதீர்கள். நான் சொல்ல மாட்டேன்.

அப்படி சொல்லி பிரபாகரனை காட்டிக்கொடுக்க விரும்பவில்லை.

நாம் தமிழர் இயக்கத்தை அரசியல் இயக்கமாக மாற்ற போகிறோம். மே-17ல் இதற்கான மாநாடு நடைபெறும். அதன் பிறகு அடிக்கு அடி; உதைக்கு உதைதான்.

அடி, உதை கொடுக்க தைரியமுள்ளவர்கள் என் இயக்கத்தில் சேருங்கள்.

தமிழனின் இன உணர்வை அரசியல்வாதிகள் குறைத்துவிட்டார்கள். தமிழனை இன உணர்வுள்ள தமிழனாக வாழ வைப்பதற்குத்தான் நாம் தமிழர் இயக்கம் உருவாயிற்று.

உலகில் தமிழனுக்கு எங்கே பிரச்சனை என்றாலும் அங்கே நாம் தமிழர் இயக்கம் நிற்கும்.

தமிழனை தமிழன்தான் ஆளவேண்டும் என்பது பெரியார் கனவு. அந்த கனவை நிறைவேற்றுவோம்.

முன்னதாக கூட்டம் நடந்த மாசிலாமணி திருமண மண்டபத்திற்கு வெளியே ஏராளமான பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இவற்றை அக்ற போலீஸார் உத்தரவிட்டனர். ஆனால் அதற்கு நாம் தமிழர் இயக்கத்தினர் முடியாது என்று கூறினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவற்றை அகற்ற போலீஸார் முடிவு செய்தனர்.

இதை எதிர்த்து நாம் தமிழர் இயக்கத்தினர் சாலை மறியலில் குதித்தனர். இதனால் பதட்டம் ஏற்பட்டது. போலீஸாரும் பெருமளவில் குவிக்கப்பட்டனர்.

இருப்பினும் தொண்டர்களை அமைதிப்படுத்திய சீமான். மறியல் வேண்டாம். வேறு மாதிரியாக இவர்களுக்குப் பதிலடி கொடுக்கலாம் என்று கூறி அனைவரையும் போராட்டத்தைக் கைவிடச் செய்தார்.


- R.Gopi

முன்பு ராமதாஸ், இப்ப சீமான்!

17 Comments:

மானஸ்தன் said...

//முன்பு ராமதாஸ், இப்ப சீமான்!//

முன்பு இன்பா, யதி...
இப்ப கோபி!! :-)

நடக்கட்டும்............

:-))

R.Gopi said...

//மானஸ்தன் said...
//முன்பு ராமதாஸ், இப்ப சீமான்!//

முன்பு இன்பா, யதி...
இப்ப கோபி!! :-)

நடக்கட்டும்............

:-))//

அய்யோ... நான் என்னிக்குமே ஒப்புக்கு "ச‌ப்பாணி"தேன்...

R.Gopi said...

மக்கள் அடிதடி இயக்கம்...

கை,கால் வாங்குவோர் கழகம்...

அடி, உதை கொடுப்போர் கழகம்...

குப்பாச்சி, குழ‌ப்பாச்சி கும்மியெடுப்போர் க‌ழ‌க‌ம்

சிவ‌ப்பு ர‌த்த‌ம் சிந்த‌ வைப்போர் க‌ழ‌க‌ம்

இப்ப‌டி ப‌ல‌ பெய‌ர்க‌ள் ப‌ரிசீல‌னையில் உள்ள‌து... விரைவில் ஒரு "அடித‌டி" அல்லது "ரணகள" பெய‌ர் வைக்க‌ப்ப‌டும் என்று செய்திக‌ள் வெளிவ‌ருகிற‌து...

ஆர‌ம்பிக்கும் போதே, அடி, உதையா... ஓப்ப‌னிங்கே "டெர்ர‌ரா" இருக்கேடா ம‌க்கா...

நம் த‌மிழ்நாடு இது போன்ற‌ பீடைக‌ளின் பிடியில் ஏற்க‌ன‌வே சிக்கி உள்ள‌தே... இன்னும் நீ வேற‌யாடா??

இதுபோன்று அனைத்து திசைக‌ளில் இருந்தும் தொட‌ர் தாக்குத‌ல் வந்தால், ந‌ம்மை காப்ப‌து தான் யார்??

kggouthaman said...

நா முந்தியிலிருந்தே சொல்லிக்கிட்டு இருக்கேன் - இட்லி வட தான் கேக்க மாட்டேங்கறாங்க - அ. உ. அ. வே அ பொ க (அரிசி உளுந்து அரைத்து வேக வைத்து & அதிரடியா பொரித்தெடுக்கும் கழகம்) என்று ஒன்று ஆரம்பிக்கச் சொல்லி. .. கேட்டா தானே ..!!

Krish said...

நல்ல வேலை..சீமான் இன்னுமே படம் எடுக்க மாட்டார்.

Anonymous said...

சீமான் அண்ணே ! அடிக்கு அடி - உதைக்கு உதை - பலே பலே -- நல்லா இருக்கு. ஆனா அதுல பாருங்க - இந்த சொற்றொடரில் - ஓர் இடர் இருக்கு. இதுல சேரும் தொண்டர்கள் அடி / உதை கொடுத்து வாங்கிப்பாங்களா - அல்லது வாங்கிகிட்டு, கொடுப்பாங்களா?
-- அடிக்கடி சந்தேகம்

சீனு said...

சிங்கம் கெளம்பிருச்சேய்...........

ஈ ரா said...

இன்னுமா இந்த உலகம் இவிங்க்யல நம்பிகிட்டு இருக்கு ?????

kggouthaman said...

நா 'அடிக்கு அடி / உதைக்கு உதை' கட்சியில எல்லாம் சேர்றதா இல்ல. ஓ.நோ.நோ.ஓ - என்று யாராவது கட்சி ஆரம்பிச்சா - அதுக்குத்தான் என் முழு ஆதரவு. அதாவது, 'ஓட்டுக்கு நோட்டு; நோட்டுக்கு ஓட்டு' கட்சிங்க!

ஸ்ரீராம். said...

நான் அ.உ.ந.வே.பா.ச.....அதாவது அடி உதை நடப்பதை வேடிக்கை பார்க்கும் சங்கம்.

Baski said...

//உலகில் தமிழனுக்கு எங்கே பிரச்சனை என்றாலும் அங்கே நாம் தமிழர் இயக்கம் நிற்கும்.

தமிழனை தமிழன்தான் ஆளவேண்டும் என்பது பெரியார் கனவு. அந்த கனவை நிறைவேற்றுவோம்.//

"உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்" - அருமை சீமான்.

தமிழனை தமிழன் தான் ஆளனுமா?

அமெரிக்கா, பிரிட்டிஷ் என தமிழன் வாழும் எல்லா ஊரிலேயும் தமிழனை அதிபராக்க போறாரா? வருங்கால தமிழ் அமெரிக்கா ஜனாதிபதி... வாழ்க.

tamilnadu said...

அவங்க சொன்ன மாதிரி நடந்தா சரி தான்

யதிராஜ சம்பத் குமார் said...

சீமான் அரசியல் கட்சி ஆரம்பிக்கறாரா?? நல்லது.


முன்னாடி இலங்கையோட கிரிக்கெட் மாட்ச் பாக்கற தமிழர்கள் அனைவரும் நல்ல அப்பனுக்கு பிறக்கலன்னு சொன்னார்....அடுத்து எனக்கு ஓட்டு போடாத தமிழர்கள் அனைவரும் நல்ல அப்பனுக்கு பொறக்கலன்னு சொல்லுவார்...நாடு நாசமா போகப் போறதுக்கு அறிகுறி நிறைய தென்படுது.

Hariharan # 03985177737685368452 said...

//தமிழனை தமிழன்தான் ஆளவேண்டும் என்பது பெரியார் கனவு. அந்த கனவை நிறைவேற்றுவோம்.//

Implementing a kannadiga's dream

NATTU said...

வழக்கம் போல ரவுண்டு கட்டி அடிக்கிறிங்க கோபி.. 'கலக்கல்' தொடர வாழ்த்துகள்.

பொதுவுடைமை said...

திருச்சி வே.ஆனைமுத்து அவர்களால் பெரியார் ஈ.வெ.ரா.சிந்தனைகள் நூல் மூன்று தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டு, 01.07.1974 இல் அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களால் வெளியிடப்பெற்றது. அதன் படிகள் விற்றுத் தீர்ந்தன. பல ஆண்டுகளாக அதன் படிகள் விற்பனைக்குக் கிடைக்கவில்லை. உலகு தழுவிய தமிழர்கள் இந்த நூலின் மறுபதிப்பு எப்பொழுது வெளிவரும் என்று ஆர்வமுடன் வினவியவண்ணம் இருந்தனர். அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் தந்தை பெரியார் பல காலம் எழுதியும் பேசியும் வந்த செய்திகள் உரிய வகையில் தொகுக்கப்பட்டு 2010 பிப்பரவரியில் வெளியிடப்பட உள்ளன. முன் வெளியீட்டுத் திட்டத்தில் இந்த நூல்கள் வெளியிடப்படுவதால் குறைந்த விலையில் வாங்கிக்கொள்ள அரிய வாய்ப்பு. Periyar E.V.R.தெமி 1/ 8 அளவிலான, 20 தொகுதிகளைக் கொண்ட (20 Volumes) இப்பெரும் தொகுப்பு முன்வெளியீட்டுத் திட்டத்தில் மிகவும் குறைந்த விலைக்குக் கிடைக்க உள்ளது. இத்தொகுப்பு உயரிய, அழகிய, தரமான பதிப்பாக அமைகிறது. 100 பக்கங்கள் முதல் 675 பக்கங்கள் வரையிலான தொகுப்புகளாக மொத்தம் 9000 பக்கங்களைக் கொண்டுள்ளது.

பெயர்க்குறிப்பு அடைவு, சொற்குறிப்பு அடைவு, அருஞ்சொற்பொருள் அகராதி, இன்றியமையாத அடிக்குறிப்புகள் தரப்பெற்றுள்ளன. நூலை வெளியிடுவோர் பெரியார் ஈ.வெ.இராமசாமி-நாகம்மை கல்வி,ஆராய்ச்சி அறக்கட்டளையினர் ஆவர்.

20 தொகுதிகளைக்கொண்ட 9000 பக்கம் கொண்டு இந்த நூலின் விற்பனை விலை 5,800 உருவா ஆகும். ஆனால் முன்பதிவுவிலையில் 3500 உருவாவுக்குக் கிடைக்கும்.

முன்பதிவுத் தொகை செலுத்திப் பதிவு செய்துகொள்ள கடைசி நாள் 15.11.2009.

இரண்டு தவணைகளில் முன்பதிவு செய்துகொள்ள விரும்புவோர் முதல் தவணையை (2000 உருவா) 15.11.2009 இலும், இரண்டாம் தவணையை(1800 உருவா) 15.12.2009 இலும் செலுத்தவேண்டும்.

வங்கி வரைவோலையாகத் தொகையை அனுப்ப விரும்புவோர் (Bank Draft) PERIYAR E.V.RAMASAMY-NAGAMMAI EDUCATIONAL AND RESEARCH TRUST என்று ஆங்கிலத்திலோ பெரியார் ஈ.வே,இராமசாமி -நாகம்மை கல்வி, ஆராய்ச்சி அறக்கட்டளை எனத் தமிழிலோ வரைவோலை எடுத்து,

திரு.வே.ஆனைமுத்து, தலைவர்

பெரியார்-நாகம்மை அறக்கட்டளை,

19, முருகப்பா தெரு,

சேப்பாக்கம்,சென்னை-600005, இந்தியா

என்னும் முகவரிக்கு அனுப்பலாம்.

தொலைபேசி எண்: + 91 44 2852 2862

Anonymous said...

வீரமணி கிட்ட சொல்லிட்டு, 5000 புக் என்னோட கருவூலத்துல சேர்த்துடுங்க "பொதுவுடைமை".......

என்னது காசா... ஹா...ஹா...ஹா... எனக்கு எப்போவும் வாங்கிதான் பழக்கம்... கொடுத்து இல்ல...

டோபாலபுர டலைஞன்.....