பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, October 12, 2009

மகரம் ராசி பலன்கள்


மகரம் இராசிக்குள்ள சனிப்பெயர்ச்சி பொது பலன்கள்

குறிப்பு:

சில வாசகர்கள் என்னிடம் ஐயா, இராகு கேது பெயர்ச்சி வேறு வருகிறதே, அதற்கும் பலன் எழுதுவீர்களா என்று என்னிடம் வினவியிருந்தனர். அவர்களுக்கான பதில், அந்த பெயர்ச்சிக்குண்டான பலன்களையும் இணைத்துதான் நான் பலன்களைக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன் என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்களைப் பற்றி:

எதிலும் வழக்கு போடும் மகர ராசிக்காரர்களே நீங்கள் எவருக்கும் அஞ்சாமல் உண்மையைப் பேசுபவர்கள். எல்லாரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவர்.

எப்படி இருக்கப் போகிறது இந்த சனிப் பெயர்ச்சி:

இது வரை அஷ்டம ஸ்தானத்தில் இருந்த சனீஸ்வரன் இனி ஒன்பதாமிடத்தில் இருந்து வரும் 21/2 ஆண்டுகளுக்கு என்னென்னெ பலன்கள் தரப்போகிறார் என்பதைப் பார்ப்போம்.

இதுவரை பட்ட காலிலேயே படும் என்பது போன்ற நிலை மாறும். நீங்கள் செய்யாத தவறுக்கெல்லாம் மாட்டிக் கொண்டீர்களே, இனி நீங்கள் அதிலிருந்து தப்பிப்பீர்கள். கோர்ட், போலீஸ் என்றிருந்த நிலைமை மாறும். இதுவரை இருந்த வந்த உங்களுக்கு எதிராக இருந்த நிலைமை மாறும். வாழ்க்கைத்துணையுடன் இருந்த பிணக்க நிலை மாறும். முன்கோபம், பிடிவாதம் நீங்கும். குடும்பத்தில் இருந்த வந்த மந்த நிலை மாறி உற்சாகம் துளிர்விடும். உங்களது வார்த்தைக்கு முக்கியத்துவம் கிடைக்கும். பிரிந்த நண்பர்கள், உறவினர்கள் மீண்டும் வந்து சேருவார்கள்.இதுவரை இருந்து வந்த கடன் மெல்ல மெல்ல தீரும். அடிக்கடி கடன் வாங்கிய நிலை மாறும். நோய்கள் குணமடைந்து உடல்நிலை முன்னேற்றம் அடையும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். முக்கியஸ்தர்களின் ஆதரவு பெருகும். உங்கள் மீது குடும்பத்தில் பாசம் அதிகரிக்கும். வீட்டில் திருமணம் போன்ற சுபவிசேஷங்கள் நடக்கும். உங்களது தனித்திறமை வெளிஉலகுக்கு தெரிய வரும். புதிய வாகனத்தில் உலா வருவீர்கள். இதுவரை பேசியது போலல்லாமல் இனி இணக்கமாக பேசி காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள். அரசாங்கத்தில் இருந்து வந்த காரியத்தடை நீங்கும். புதிய வீடு, வாகனம் அமையும். பெற்றோர் ம்ற்றும் உடன்பிறந்தோரிடம் இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். உங்களைப் புரிந்து கொள்ளாத உறவினர்களும், நண்பர்களும் இனிமேல் புரிந்து கொண்டு நடப்பார்கள். உங்களிடம் கோபப்பட்டவர்கள் இனிமேல் இறங்கி வருவார்கள். திருட்டு போன பொருட்கள் திரும்ப கிடைக்கும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். வழக்கு, வியாஜ்ஜியங்களில் வெற்றி கிடைக்கும். வியாபாராத்தில் ஏற்பட்ட நஷ்டங்கள் விலகும். விற்பனை அதிகரிக்கும். பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். நல்ல வேலையாட்கள் கிடைப்பார்கள். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பங்குதாரர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். உங்கள் ஆலோசனைகள் ஏற்கப்படும். வியாபாரம் விருத்தியடையும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் நீங்கும். சக ஊழியர்களிடம் இருந்த மோதல்கள் நீங்கும். நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். அயல்நாட்டு வாய்ப்புகள் தேடி வரும். கனவுகளில் இருந்து வந்த தொல்லைகள் நீங்கும். நீண்ட நாட்கள் பிரச்சனைகள் நீங்கும். மாணவமணிகளே நீங்கள் எதிர்பார்த்த மதிப்பெண்கள் தேடிவரும். மந்தநிலை, மறதிவிலகி நன்மை ஏற்படும். கலைஞர்களுக்கு பாராட்டுகளும், பரிசுகளும் குவியும் காலம் இது. மொத்தத்தில் இதுவரை இருந்த வந்த வறுமை மற்றும் மன உளைச்சல் நீங்கி செல்வவளமும், நிம்மதியும் ஏற்படும்.

நக்ஷத்திர ரீதியான பலன்கள்:

உத்திராடம் 2,3,4ம் பாதம் : உடல்நலம் உற்சாகமாக இருக்கும். அனைவரிடமும் நல்ல பெயர் எடுக்க வேகமும், விவேகமும் அவசியமாகும். குடுமுறவில் மகிழ்ச்சி ஏற்படும். சிவபெருமானை வணங்கி எதையும் ஆரம்பித்தால் வெற்றிதான்.

திருவோணம் : ஆடை, ஆபரணம், அசையாசொத்து சேரும். உங்களுடைய வட்டாரம் பெரிதாகும். நண்பர்களால் அதிக நன்மைகள் கிடைக்கும். திருமணம் மற்றும் சுபகாரியங்கள் தங்குதடையின்றி நடக்கும். ஸ்ரீமஹாவிஷ்ணுவை வணங்குங்கள், நன்மைகள் பல கிடைக்கும்.

அவிட்டம் 1,2 ம் பாதம் : வியாபாரம் பெருகும். மிகவும் தைரியமாக உபதொழில் ஒன்றும் ஆரம்பிப்பீர்கள். உத்தியோக ரீதியாக அயல்நாடு செல்ல வேண்டி வரும். உடல்நிலை சிறப்பாக இருக்கும். முருகனை வணங்குங்கள், வாழ்வு சிறக்கும்.

குறிப்பு: இது மாணவ மணிகளுக்கு: ஸ்ரீ ஸரஸ்வதி ஸ்லோகம் படிப்பது நன்மையைத்தரும்.

லக்ன ரீதியான பலன்கள்:

லக்னம் இராசி பலன்கள் பரிகாரம்
மேஷம் மகரம் 70/100 சண்முக கவசம் படிப்பது
ரிஷபம் மகரம் 75/100 ஸ்ரீமஹால்க்ஷ்மி அஷ்டகம் சொல்வது
மிதுனம் மகரம் 65/100 விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்வது
கடகம் மகரம் 75/100 ஸ்ரீசௌந்தர்யலஹரி சொல்வது
ஸிம்ஹம் மகரம் 65/100 ஆதித்யஹ்ருதயம், மஹாலக்ஷிமி காயத்ரி, நாராயண காயத்ரி, நவக்ரஹ காயத்ரி சொல்வது
கன்னி மகரம் 60/100 விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்வது, முடிந்த வரை இராம நாமம் சொல்வது, மகான்களை வழிபடவும்
துலாம் மகரம் 65/100 நவக்ரஹ ஸூக்தம் சொல்வது, ஸ்ரீஸூக்தம் சொல்வது.
விருச்சிகம் மகரம் 70/100 கணபதி பூஜை மற்றும துர்ஹா ஸூக்தம் சொல்வது, முடிந்த வரையில் அம்பாள் நாமாவை சொல்வது
தனுசு மகரம் 65/100 கோளறு பதிகம் சொல்லுங்கள், ஹனுமன் வழிபாடு
மகரம் மகரம் 70/100 குலதெய்வ வழிபாடு செய்வது மற்றும் முன்னோர்களை வழிபடுவது.
கும்பம் மகரம் 65/100 துர்க்கா ஸகஸ்ரநாம பாராயணம் மற்றும் மூகபஞ்சக சதீ சொல்வது
மீனம் மகரம் 65/100 தன்வந்திரி ஸ்லோகம் சொல்வது மற்றும் கணபதி உபநிஷத் சொல்வது
லக்னமே தெரியாது மகரம் 70/100 கோளறு பதிகம் சொல்லுங்கள், ஹனுமன் வழிபாடு
குறிப்பு:

[1] மேலே உள்ள டேபிளை எப்படி பயன்படுத்துவது?

நீங்கள் மகரம்
இராசியில் பிறந்து லக்னம் தெரிந்ததென்றால் அதற்குள்ள பலனைத் தெரிந்து கொள்ளவும். அதற்குள்ள பரிகாரத்தை தெரிந்து கொள்ளவும். உதாரணமாக, நீங்கள் மகரம் இராசியில் பிறந்து மீனம் லக்னத்தில் பிறந்தவரென்றால் உங்களுக்கு 65% சதவிகிதம் நல்ல பலன்கள் கிடைக்கும். மேலும் நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரம்: தன்வந்திரி ஸ்லோகம் சொல்வது மற்றும் கணபதி உபநிஷத் சொல்வது. எனக்கு லக்னமேத் தெரியாது ஆனால் மகரம் இராசி என்பவர்கள் குலதெய்வ வழிபாடு செய்வது மற்றும் முன்னோர்களை வழிபடுவது.

[2] இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுபலன்களே. இவை ஜாதகத்திற்கு ஜாதகம் திசை ரீதியாக மாறலாம்.

நக்ஷத்திர வாரியாக சில குறிப்புகள்:

* நக்ஷத்திரங்கள்
பலன்கள் உத்திராடம் 2,3,4 திருவோணம் அவிட்டம் 1,2
இராசி மகரம் மகரம் மகரம்
இராசியாதிபதி சனி சனி சனி
நக்ஷத்திர அதிபதி சூரியன் சந்திரன் செவ்வாய்
அதிதேவதைகள் விஸ்வேதேவர் விஷ்ணு வஸுக்கள்
கணம் மனுஷ்ய கணம் தேவ கணம் இராக்ஷஸ கணம்
நாடி பார்ஸுவ - இடது பார்ஸுவ - வலது மத்ய நாடி
மிருகம் பசு பெண் குரங்கு பெண் சிங்கம்
பக்ஷி வலியன் காரை வண்டு
விருக்ஷம் பலாமரம் எருக்கு வன்னி
இரஜ்ஜு வயிறு கண்ட இரஜ்ஜு சிரோ
வேதை நக்ஷத்ரம் புனர்பூசம் திருவாதிரை மிருகசீர்ஷம், சித்திரை
அதிர்ஷ்டம் தரும் எண்கள் 1, 4, 5, 7, 9 1, 3, 6, 7, 9 1, 3, 6, 7, 9
அதிர்ஷ்டம் தரும் திசைகள் கிழக்கு, மேற்கு கிழக்கு, தெற்கு கிழக்கு, தெற்கு
குறிப்பு:

அதிர்ஷ்டம் தரும் எண்களும், திசைகளும் ஜாதகத்திற்கு ஜாதகம் மாறும். இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுவானவையே.

இன்றைய ஜோதிடக் குறிப்பு:

இன்று நாம் பார்க்கப் போகும் தலைப்பு:

திருமணப் பொருத்தம் எப்படி பார்ப்பது? - பாகம் 3

[ குறிப்பு: திருமணமானவர்கள் இதை பிரயோகப்படுத்தி பார்க்க கூடாது, மிக முக்கியமாக திருமணம் முடிவானவர்கள், காதலித்துக் கொண்டிருப்பவர்கள் பிரயோகப்படுத்தி பார்க்காதீர்கள்]

எத்தனை ஸ்டெப்ஸ் உள்ளன?

[1] நக்ஷத்ர விஷயாதி - தசவிதப் பொருத்தம் - நாம் ஏற்கனவே விருச்சிக ராசி பலன்களில் பார்த்து விட்டோம்

[2] திசா விஷயாதி - இருவருக்கும் உள்ள திசையை வைத்து பார்ப்பது.

[3] பாப ஸாம்மிய விஷயாதி.

[4] செவ்வாய் தோஷ விஷயாதி.

[5] தோஷ நிவர்த்தி விஷயாதி.

என 5 விதமான ஸ்டெப்ஸ் உள்ளன.

இப்போது நாம் பார்க்கப் போவது 3வது ஸ்டெப்பான பாவஸாம்மிய விஷயாதி மற்றும் 5வது ஸ்டெப்பான தோஷ நிவர்த்தி விஷயாதி.

பாப ஸாம்மிய விஷயாதி ( WHICH MEANS PAAVASAMYAM NOT BHAVASAMYAM - இதற்குண்டான வித்தியாசங்களை பிறகு விவரிக்கிறேன் ) :-

கொஞ்சம் கடினமாக இருந்தாலும் மறுபடியும் படிக்க படிக்க புரியும்.

கீழ்க்கண்ட இரு ஜாதகங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.

இதில் பெண் குழந்தை பிறந்தது.

DOB: 12-05-1972; 11:17 am; Trichy

ஆண் குழந்தை பிறந்தது

DOB: 18-11-1967; 02:55 am; Tirunelveli

பாவ ஸாம்மியம் பார்ப்பது எப்படி?

இதில் 3 ஸ்டெப்ஸ் உள்ளன.

ஏற்கனவே பெண் ஜாதகத்தைப் பார்த்து விட்டோம் இப்போது ஆண் ஜாதகத்தில் பாவம் சக்கரத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

[1] பாவம் சக்கரத்தில் "ல" என்று போட்டுருக்கிறது அல்லவா அதுதான் லக்னம். அதுதான் ஒன்றாம் இடம். அதிலிருந்து CLOCKWISE ஆக எண்ணுங்கள். அதில் 1ம் இடம், 2ம் இடம், 7ம் இடம் ஆகியவற்றில் செவ்வாய் or ராகு or கேது ஆகிய கிரஹங்களில் ஏதாவது ஒன்று இருந்தால் அது 1 பாவம் - ஒரு பாவம் என கூறவும்(தோஷம்). உதாரணம்: நமது ஆண் ஜாதகத்தில் 1ம் இடத்தில் ஒன்றும் இல்லை. எனவே 0 பாவம். 2ம் இடத்தில் கேது இருக்கிறது, எனவே 1 பாவம். 7ம் இடத்தில் எதுவும் இல்லை, எனவே 0 பாவம். ஆக மொத்தம் 1 பாவம். ( எதற்காக 1,2,7ம் இடங்களை மட்டும் பார்க்க வேண்டும் என சில பேர் என்னிடம் கேள்வி கேட்கலாம், அவர்களுக்கு எனது பதில் இதுதான் - சனிப் பெயர்ச்சி பலன்கள் முடிந்தவுடன் தொடர்ச்சியாக ஜோதிட தொடரே எழுதலாம் என்று இருக்கிறேன், எனவே ஜோதிட அரிச்சுவடி தெரிந்தவர்கள் மட்டும் இப்போது இதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள் )

[2] பாவம் சக்கரத்தில் "சந்" என்று போட்டுருக்கிறது அல்லவா அதுதான் சந்திர லக்னம். இப்போது அதை ஒன்றாம் இடம எனக் கொண்டு அதிலிருந்து CLOCKWISE ஆக எண்ணுங்கள். அதில் 1ம் இடம், 2ம் இடம், 7ம் இடம் ஆகியவற்றில் செவ்வாய் or ராகு or கேது ஆகிய கிரஹங்களில் ஏதாவது ஒன்று இருந்தால் அது 3/4 பாவம் - முக்கால் பாவம் என கூறவும்(தோஷம்). உதாரணம்: நமது ஆண் ஜாதகத்தில் சந்திர லக்னத்தில் எதுவும் இல்லை, எனவே 0 பாவம். 2ம் இடத்தில் எதுவும் இல்லை, எனவே 0 பாவம். 7ம் இடத்தில் எதுவும் இல்லை. ஆக மொத்தம் 0 பாவம்.

[3] பாவம் சக்கரத்தில் "சுக்" என்று போட்டுருக்கிறது அல்லவா அதுதான் சுக்ர லக்னம். இப்போது அதை ஒன்றாம் இடம எனக் கொண்டு அதிலிருந்து CLOCKWISE ஆக எண்ணுங்கள். அதில் 1ம் இடம், 2ம் இடம், 7ம் இடம் ஆகியவற்றில் செவ்வாய் or ராகு or கேது ஆகிய கிரஹங்களில் ஏதாவது ஒன்று இருந்தால் அது 1/2 பாவம் - அரை பாவம் என கூறவும்(தோஷம்). உதாரணம்: நமது ஆண் ஜாதகத்தில் 1ம் இடத்தில் ஒன்றும் இல்லை. எனவே 0 பாவம். 2ம் இடத்தில் கேது இருக்கிறது, எனவே 1/2 பாவம். 7ம் இடத்தில் எதுவும் இல்லை, எனவே 0 பாவம். ஆக மொத்தம் 1/2 பாவம்.

கீழ்க்கண்ட டேபிளைப் பாருங்கள் முழுவதுமாக புரியும்.

லக்னம் 1ம் இடம் 2ம் இடம் 7ம் இடம் மொத்தபாவம்
லக்னம் 0 1 0 1
சந்திரன் 0 0 0 0
சுக்ரன் 0 1/2 0 1/2
ஆக மொத்தபாவம் 1 1/2 (1.5)

இப்போது ஆண் ஜாதகத்தில் நவாம்சம் சக்கரத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

[1] நவாம்சம் சக்கரத்தில் "ல" என்று போட்டுருக்கிறது அல்லவா அதுதான் லக்னம். அதுதான் ஒன்றாம் இடம். அதிலிருந்து CLOCKWISE ஆக எண்ணுங்கள். அதில் 1ம் இடம், 2ம் இடம், 7ம் இடம் ஆகியவற்றில் செவ்வாய் or ராகு or கேது ஆகிய கிரஹங்களில் ஏதாவது ஒன்று இருந்தால் அது 1 பாவம் - ஒரு பாவம் என கூறவும்(தோஷம்). உதாரணம்: நமது ஆண் ஜாதகத்தில் லக்னத்தில் இராகு இருக்கிறது, எனவே 1 பாவம்.2ம் இடத்தில் எதுவும் இல்லை.7ம் இடத்தில் கேது இருகிறது. எனவே 1 பாவம் ஆக மொத்தம் 2 பாவம்.

[2] நவாம்சம் சக்கரத்தில் "சந்" என்று போட்டுருக்கிறது அல்லவா அதுதான் சந்திர லக்னம். இப்போது அதை ஒன்றாம் இடம எனக் கொண்டு அதிலிருந்து CLOCKWISE ஆக எண்ணுங்கள். அதில் 1ம் இடம், 2ம் இடம், 7ம் இடம் ஆகியவற்றில் செவ்வாய் or ராகு or கேது ஆகிய கிரஹங்களில் ஏதாவது ஒன்று இருந்தால் அது 3/4 பாவம் - முக்கால் பாவம் என கூறவும்(தோஷம்). உதாரணம்: நமது ஆண் ஜாதகத்தில் லக்னத்தில் எதுவும் இல்லை, எனவே 0 பாவம். 2ம் இடத்தில் ராகு இருக்கிறது, எனவே 3/4 பாவம். 7ம் இடத்தில் எதுவும் இல்லை. ஆக மொத்தம் 3/4 பாவம்.

[3] நவாம்சம் சக்கரத்தில் "சுக்" என்று போட்டுருக்கிறது அல்லவா அதுதான் சுக்ர லக்னம். இப்போது அதை ஒன்றாம் இடம எனக் கொண்டு அதிலிருந்து CLOCKWISE ஆக எண்ணுங்கள். அதில் 1ம் இடம், 2ம் இடம், 7ம் இடம் ஆகியவற்றில் செவ்வாய் or ராகு or கேது ஆகிய கிரஹங்களில் ஏதாவது ஒன்று இருந்தால் அது 1/2 பாவம் - அரை பாவம் என கூறவும்(தோஷம்). உதாரணம்: நமது பெண் ஜாதகத்தில் சுக்ர லக்னத்தில் எதுவும் இல்லை, எனவே 0 பாவம். 2ம் இடத்தில் எதுவும் இல்லை, எனவே 0 பாவம். 7ம் இடத்தில் செவ்வாய் இருக்கிறது. எனவே 1/2 பாவம். ஆக மொத்தம் 1/2 பாவம்.

கீழ்க்கண்ட டேபிளைப் பாருங்கள் முழுவதுமாக புரியும்.

லக்னம் 1ம் இடம் 2ம் இடம் 7ம் இடம் மொத்தபாவம்
லக்னம் 1 0 1 2.0
சந்திரன் 0 3/4 0 3/4
சுக்ரன் 0 0 1/2 1/2
ஆக மொத்தபாவம் 3.25

தொடர்ச்சி அடுத்த பதிவில்.....

இனி கும்பம் இராசிக்குண்டான பலன்களில் சந்திபோம். நன்றி







3 Comments:

Anonymous said...

"சில வாசகர்கள் என்னிடம் ஐயா, இராகு கேது பெயர்ச்சி வேறு வருகிறதே, அதற்கும் பலன் எழுதுவீர்களா என்று என்னிடம் வினவியிருந்தனர். அவர்களுக்கான பதில், அந்த பெயர்ச்சிக்குண்டான பலன்களையும் இணைத்துதான் நான் பலன்களைக் கொடுடுதுக் கொண்டிருக்கிறேன் என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன்."

அம்புட்டு நல்லவரா நீங்க....

Anonymous said...

Thanks for magara raasi palan. Keep up the good work

Baski said...

Thanks.