பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, October 28, 2009

இது எங்க ஏரியா !

இட்லிவடை 6 ஆம் ஆண்டு கொண்டாட்ட பதிவுகளில் பல நல்ல எழுத்தாளர்களின் படைப்பை பதிவாக போடலாம் என்று பார்த்தால் நம்மளை விட மாட்டார்கள் போல.

போகிற போக்கைப் பார்த்தால் பபாஸி தேர்தல் நம் அரசியல் தேர்தலை மிஞ்சிவிடும் போலிருக்கிறது. கருணாநிதி, ஜெயலலிதா என்று அவர்கள் பாணியில் அவர்களையும் மிஞ்சி விடுகிறார்கள் இந்த பதிப்பாளர்கள். தேர்தலில் செயலாளராக நிற்கிறார் செண்பகா பதிப்பகத்தின் சண்முகம். இவர் சென்ற ஆட்சிக்குழுவிலும் செயலாளராக இருந்தவரே.
கடந்த சில நாள்களில் எல்லா பதிப்பாளர்களுக்கும், இவரை எதிர்த்து ஒரு மொட்டைக் கடுதாசி வந்திருக்கிறது. ( அது என்ன என்று கீழே கொடுத்திருக்கிறேன், கவலைப்படாதீங்க )

இவரை எதிர்த்து நிற்கும் அணியினர் காந்தி கண்ணதாசன் அணியினர். யார் மொட்டைக் கடுதாசி அனுப்பினார்கள் எனத் தெரியவில்லை. வழக்கம் போல எதிர் அணி மேலேயே எல்லாரும் சந்தேகத்தோடு பார்க்கிறார்களாம்.

உடனே சண்முகமும் தன் பங்குக்கு பதிலை அனுப்பியிருக்கிறார். என்னவோ நடக்குது 'இது எங்க ஏரியா' என்று சுட்டி டிவியில் வருவது மாதிரி இருக்கு இவர்கள் செய்யும் லூட்டி !

மொட்டை கடிதம்


பதில் கடிதம்
இந்த கடிதங்களை எனக்கு அனுப்பிய 'அந்த மொட்டை' மாமாவிற்கு நன்றி. அனானி விளையாட்டு எல்லா இடத்திலும் இருக்கு :-) ( கிளிக் செய்து படித்துப்பாருங்க )

பின்குறிப்பு: பத்ரியும் தேர்தலில் நிற்கிறாராம் - சுயேச்சையாக! :-)

12 Comments:

மானஸ்தன் said...

இவ்வளவு பெரிய லெட்டர்! என்னிக்கு படிச்சு முடிக்கறது? அதுக்குள்ள தேர்தலே முடிஞ்சுடும் போல!!
:-)

kggouthaman said...

அந்தக் காலத்துல - எங்க தொழிற்சாலையில் - தொழிற்சங்க தேர்தல் சமயத்தில், ஒரு நாள் சிவப்பு நோட்டீசும் - மறுநாள் பச்சை நோட்டீசுமாக - அறிக்கை - வெட்டு அறிக்கை, குத்து அறிக்கை என்று சுவாரஸ்யமாக - பொழுது போகும். நாங்க எல்லாத்தையும் வாங்கிப் படிச்சு, ரசிச்சு சிரிச்சிகிட்டு இருப்போம். கிசு கிசு, கிண்டல், நகைச் சுவை, புள்ளி விவரங்கள் - எல்லாமே இருக்கும். அந்த ஞாபகங்கள்தான் வந்தன. மத்தபடி - இங்கே இராமன் வந்தால் என்ன இராவணன் வந்தால் என்ன?

Baski said...

//பபாஸி தேர்தல் //

ஒன்னும் புரியலை இட்லி. அது என்ன பபாஸி தேர்தல்??

jaisankar jaganathan said...

//இது எங்க ஏரியா !"//
kandravi

டகிள் said...

இட்லி காஞ்சு போச்சு! வடை ஊசிப் போச்சு! வர வர மேட்டர் கெடைக்காம ஒரு வாரமா அறுக்கறாரே இ.வ.

vedanarayanan said...

இது ஒரு கம்யூனிஸ்ட் வட்ட செயலாளர் election போல இருக்கு . கொஞ்சம் புரிய மாட்டேன்குது!

Anonymous said...

ayyoh suttha bore katturai

murali

ஸ்ரீராம். said...

எனக்கு பபாஸியைத் தெரியாது...பிபாஷா பாசு தான் தெரியும்.

Anonymous said...

இருட்டில் தடவுவதுபோல இருக்கிறது.
கொஞ்சம் வெளிச்சம்போட்டீர்களானால் புரியும் என்று நப்பாசை.

IdlyVadai said...

//இருட்டில் தடவுவதுபோல இருக்கிறது.
கொஞ்சம் வெளிச்சம்போட்டீர்களானால் புரியும் என்று நப்பாசை.//

நீங்க சரியான டியூப் லைட். உங்களுக்கு எதற்கு வெளிச்சம் :-)

நல்லூரான் said...

// இட்லி காஞ்சு போச்சு! வடை ஊசிப் போச்சு! வர வர மேட்டர் கெடைக்காம ஒரு வாரமா அறுக்கறாரே இ.வ.//

ரொம்ப சரி.. !!

மானஸ்தன் said...

@இட்லிவடை
மொட்டக் கடுதாசியப் போட்டீங்க சரி. ரிசல்ட் வந்தாச்சுல்ல, அவிங்கள (கெலிச்சவிங்கள) பாராட்டி ஒரு "ஒருவரி போஸட்டானும்" நாளைக்கு போட்டுடுங்கள்!!

:-)