பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, October 06, 2009

இந்திய அரசின் விளையாட்டுஇந்தியவின் தங்கமங்கை என்று அழைக்கப்படும் பி.டி.உஷா இன்று CNN-IBN தொலைக்காட்சியில் தனக்கு நேர்ந்த அவமானத்தை பற்றி கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார்.

போபாலில் தேசிய தடகள போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் கலந்து கொள்வதற்காக தனது பயிற்சி அகெடமியை சேர்ந்த போட்டியாளர்களுடன் போபால் சென்றுள்ளார் பி.டி.உஷா. அவரை அங்கு யாரும் கண்டு கொள்ளவில்லை.(நம் நாட்டுக்கு என்ன பவுண்டரிகளா அடித்துள்ளார் ? )

தனக்கும் தன்னுடன் வந்தவர்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தங்குமிடம் குறித்து விசாரிக்க அங்கும் இங்கும் அலைந்து திரிந்துள்ளார் உஷா. பிறகு ஐந்து பேர் தங்கியுள்ள ஒரு அறையில் சேர்ந்து தங்கிக் கொள்ளுமாறு கூறப்பட்டுள்ளார்.

எனக்கு நல்ல அறையாக கொடுங்கள் என்று கேட்டபோது அதற்கு அதிகாரிள் மறுத்து விட்டனராம். இதையடுத்து செய்தியாளர்கள் முன்பு கண்ணீர் விட்டு அழுதார் பி.டி.உஷா.

நம் நாட்டில் இரண்டு விளையாட்டு தான் இருக்கிறது ஒன்று Cricket மற்றொன்று Non-Cricket. கிரிக்கெட்டில் இருப்பது Wealth, மற்ற விளையாட்டில் இருப்பது Commonwealth. இதை புரிந்துக்கொண்டால் அழுகை வராது.

பிகு: 1984ல் பத்மஸ்ரீ விருது வழங்கி இந்திய அரசு இவரை கவுரவித்தது.

17 Comments:

ஈ ரா said...

வருந்தத்தக்க விஷயம்....

அப்புறம் இ.வ.

தலைப்பு அவரை கிண்டல் செய்வது போல் இருக்கிறது...

indian said...

The worst thing is that nobody even apologized for this and are trying to shift blame from themselves to others

வால்பையன் said...

//1984ல் பத்மஸ்ரீ விருது வழங்கி இந்திய அரசு இவரை கவுரவித்தது.//

பின் மறந்ததுன்னு ஒரு வார்த்தை சேர்த்திருக்கலாம்!

butterfly Surya said...

மிக மிக வருந்த தக்கது.

சரியா சொன்னீங்க வாலு..

ஸ்ரீராம். said...

கண்டிக்கப் பட வேண்டிய விஷயம். ஆனால் உஷா அழுதிருக்கக் கூடாது. தன் குழுவினருடன் இந்தப் போட்டியை Boycott செய்வதாக அறிவித்து வெளியேறி இருக்க வேண்டும். வேறு சில உடன் போட்டியாளரும் உடன் வந்திருக்கலாம். Effective ஆக இருந்திருக்கும்.

Anonymous said...

I thought she retired. Shame to our country, still the old people are running ......


murali

Anonymous said...

பிகு: 1984ல் பத்மஸ்ரீ விருது வழங்கி இந்திய அரசு இவரை கவுரவித்தது.

All Padma Awards...can have an Expiry Date.Say 10 years,20 Years etc....so That they dont feel Bad when such things Happens....

SUBBU said...

என்னத்த சொல்ல :((((

ந.லோகநாதன் said...

வருந்துகிறேன்...கேவலம் எல்லாம் அரசியல் தான்... ஒருத்த்ருக்குகூட தேசபற்று இல்லையா?

Mohan Kumar said...

Liked your comment that in India, there are only 2 kinds of games: Cricket and Non cricket. The other worst part is so many youngsters waste so much of time in watching cricket for hours together.

Because of cricket, some make money and many loose their precious time.

Until Govt starts giving proper respect & encouragement to all sportspersons, India cannot shine in other sports.

A. Mohan Kumar
http://veeduthirumbal.blogspot.com/

யதிராஜ சம்பத் குமார் said...

இந்திய கிரிக்கெட் அணியில் ஏதாவது ஒரு போட்டியில் 12th MAN' ஆக விளையாடும் வீரருக்குக் கிடைக்கும் அங்கீகாரம் கூட இந்தியாவில் மற்ற விளையாட்டு வீரர்களுக்குக் கிடைப்பதில்லை என்பது மிகவும் வேதனைக்குரிய விஷயம்.

Mona said...

Why blame others? wat are we doing at home. Do we ever miss a cricket match or its live updates. Accpeted that it is been our interest. May be being in a family, we can motivate the kids interest towards other games. As TV plays a major role in shaping them, we can guide children to see other sports too. Interest in watching will lead them to play it. DD sports is one of the channels which does a balancing act between all the games.

RkSN said...

// இந்தப் போட்டியை Boycott செய்வதாக அறிவித்து வெளியேறி இருக்க வேண்டும். வேறு சில உடன் போட்டியாளரும் உடன் வந்திருக்கலாம். //
Nobody would have bothered. Very few Athlthics meets happen, so the athletes cannot afford to miss this. For Usha it is only lodging problem, lot of other athletes are treated as personal slaves of officials. Many of the successful athletes had a Godfather who saved them from these humiliations.

//I thought she retired. Shame to our country, still the old people are running ......


murali//
Thalaiva, ....
She had brought a team.. Coach- like Gary Kirsten.
Though Usha , Shiny all ran till they became really old.

RKSN

Varadaradjalou .P said...

//கண்டிக்கப் பட வேண்டிய விஷயம். ஆனால் உஷா அழுதிருக்கக் கூடாது. தன் குழுவினருடன் இந்தப் போட்டியை Boycott செய்வதாக அறிவித்து வெளியேறி இருக்க வேண்டும். வேறு சில உடன் போட்டியாளரும் உடன் வந்திருக்கலாம். Effective ஆக இருந்திருக்கும்.//

ஆமாம்.

Ramadoss Magesh said...
This comment has been removed by the author.
Anonymous said...

I am not sure what is the issue here and why she cried. It looks like all VIPs of India wants to be treated differently compared to others in india and abroad.

Let us not confuse with cricket which has got money. Because BCCI makes lots of money, our cricketers are put in better hotels. They are not enjoying those benefits out of public money.

And since non cricket sports bodies have less money, they are put in accomodations that they can afford, 2 star or 1 star. I am sure, if PTusha didnot accompany those athlets, this issue would not have come up . Then are we saying, if those athelts are ill treated, it is fine and only if PTUsha is ill traeted it is not fine.

Anonymous said...

Like IT job non-IT job ??