பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, October 27, 2009

இட்லிவடை - திரை விமர்சனம் - இன்பா

ஆறு வருஷங்களாய் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் (அ)வலுக்கட்டாயமாக 'ஓட்ட'பட்டுகொண்டிருக்கும் இட்லிவடை 'படம்' பற்றிய திரை விமர்சனம்.

பட ஆரம்பத்தில், கதை,வசனம், இசை, இயக்கம்,தயாரிப்பு மற்றும் office boy எல்லாமே இட்லிவடை என்று 'டைட்டில்' போடுகிறார்கள். படத்தின் கதாநாயகனும் இட்லிவடையே. படத்தின் டைட்டில் பொருந்துவதற்கு இதைவிட என்ன வேண்டும்?

50% ஜாலி..50% லொள்ளு..Total கலாட்டா என்று விளம்பரங்களில் படத்திற்கு caption போட்டுஇருக்கிறார்கள். படத்தின் ஹீரோ இட்லிவடை முகம் காட்டாத ஒரு மர்ம மனிதர். அதே சமயம் பயந்த சுபாவம் உள்ளவர். அதுவும், அம்மணிகள் என்றாலே 'குலை' நடுங்குபவர். தன்னுடைய கேரக்டர் காமெடியா இல்லை சீரியஸா என்று அவருக்கே புரியாதவர். எதாவது எடக்கு மடக்காக (நன்றி கோபி) பேசி, ஏடாகூடமாக மாட்டிக்கொ(ல்)ள்பவர். அடி,உதைக்கு பயந்து படம் முழுக்க முகத்தை மறைத்துகொள்கிறார்.


சரி, 'கிளைமாக்ஸ்'சிலாவது அந்த மூஞ்சியை பார்க்கலாம் என்று பார்த்தால், படம் முடியும்போது 'விற்பனை தொடரும்' என்று போட்டுத்தொலைக்கிறார்கள்.

படம் முழுக்க யாரென்றே தெரியாத இவரை, யார் யாரோ ஆட்டோக்களில் தேடுகிறார்கள்.

படத்தின் கதைப்படி, ஆரம்ப காட்சிகளில் காமெடியாக தோன்றுபவர், 'இடைவேளைக்கு' பின் சீரியஸ் விஷயங்களில் ஈடுபட முயற்சி செய்கிறார். அந்த முயற்சியில் அவர் ஜெயித்தாரா, இல்லையா என்பதுதான் படத்தின் மொக்க ச்சே மொத்த கதை. மீதியை திரை(வலை)யில் காண்க.
.
இட்லிவடையை தவிர, அவரது நண்பராக மானஸ்தன் என்பவர் நடித்து இருக்கிறார். இவரது பெயர்க்காரணம் சொல்லாமல் விட்டு விட்டார்கள்.எதாவது வித்தியாசமாய் பெயர் வைத்துக்கொள்வது என்று 'கொலை வெறி'யோடு ஒரு கூட்டமே, இட்லிவடை தலைமையில் அலைகிறது. நம் ஹீரோ எது செய்தாலும், 'ஆஹா,ஒஹோ' என்று புகழும் காமெடி நடிகரின் இலக்கணங்களுக்கு சரியாய் பொருந்துகிறார் மானஸ்தன். சில சமயம் குணச்சித்திரமும் செய்கிறார்.

முகம் தெரியாத ஹீரோவுக்கு ஹீரோயின் எப்படி? எல்லாம் திரை 'மறைவில்' தான் போலிருக்கிறது. ஆங்காங்கே நமீதா, லக்ஷ்மி ராய் போன்ற நடிகைகள் தலை(மட்டும்தான்!) காட்டுகிறார்கள்.

'பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா,பன்ச் வெச்சா இட்லி தாண்டா','ஊர்ல சொல்றது சொலவடை உண்மையைச் சொல்றது இட்லிவடை' என்றல்லாம் படம் முழுக்க தேவையில்லாத இடங்களில் மற்ற மாஸ் ஹீரோக்களை போல இவர் 'பன்ச்' டயலாகுகள் பேசுவது, ஒருவேளை இவர் quick gun முருகனுக்கு அண்ணனோ என்று நினைக்க தோன்றுகிறது.

கூட்டம் சேர்க்கவா இல்லை நிஜமாலும் ஹீரோ கமல் ரசிகனா என்று தெரியவில்லை.பல காட்சிகளின் பின்னணியில் கமல் படம் தெரிகிறது (குறிப்பாய் உன்னை போல் ஒருவன்) .

'கிளீன்ஷேவ்' தலையுடனும், சோடாபுட்டி கண்ணாடியுடனும் உள்ள ஒரு வயதான மனிதர், நம் கதாநாயகனுக்கு ஆலோசனை சொல்பவராக வருகிறார். அடிக்கடி ச்'சோ'..ச்'சோ' என்று மானரிசம் வேறு செய்கிறார்.

படத்தின் ஒரு பெரிய ஹைலைட்டான விஷயம்... வில்லன் கேரக்டர்தான்...வித்தியாசம் காட்டுகிறோம் என்ற பெயரில் ஒரு கூத்தே அடித்து இருக்கிறார்கள்.


ஆனாலும், ஒரு கமர்ஷியல் சினிமாவுக்கு உரிய எல்லா அம்சங்களும் இந்த 'படத்தில்' குறைவில்லாமல் இருக்கிறது.


மொத்தத்தில், இட்லிவடை ஒரு பூரி(ப்பான) 'மசாலா'

நம்ம மார்க்கு 0.9/0.10

சீரியஸ் மேட்டர் : ஆறு வருஷம் ஒரு வலைப்பதிவை தொடர்ந்து நடத்துவது என்பது, அமரர் எம்.ஜி.ஆர் அவர்களின் வெற்றிகளுக்கு ஒப்பானது. இட்லிவடைக்கு,எனது கடை(த)தெரு வலைப்பதிவு சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்புடன்
இன்பாஇந்த மாதிரி போஸ்ட் இது தான் லாஸ்ட் போஸ்ட் - I Say !

17 Comments:

மானஸ்தன் said...

அடுத்ததா! எம்பூட்டு!!!! வந்துகிட்டே இருக்கு!!

பழையசோறு said...

No இட்லி வடை. Don't stop. இது ரொம்ப சுவாரசியமா இருக்கு.என்னை போல் ஒருவனுக்கு(புது ஆளுக்கு ;) ) ரொம்ப நிறைய விஷயம்)

குரோம்பேட்டைக் குறும்பன் said...

என்னவே! இட்லி வடையைப் போய் 'பாதிப் புலி'ன்னுரீக?
ஆமாம் - புலி என்ன செய்யும்?
பதுங்கிப் பாயும்.
இவுரு பதுங்குவாரு; ஆனா பாய மாட்டாரு! ரொம்ப நல்லவரு!

Anonymous said...

iv
valthuukal.thamzhyl type sevath eppadi.i am new pl help

Anonymous said...

valthuukal.thamzhal type seivathu eppadi i am new and in africa

Mohan Kumar said...

இன்பா கலக்கிட்டீங்க; அது என்ன மானஸ்தனுக்கு ஸ்பெஷல் கவனிப்பு?

சோ மீது இட்லி வடைக்கு இருக்கும் அன்பும் அனைவரும் அறிந்ததே.

இ. வ. உங்க வெற்றியை தன் வெற்றியா பலர் கொண்டாடுறாங்க. ஒரு வாரம் விழா எடுத்தா என்னவாம்?

மோகன் குமார்
http://veeduthirumbal.blogspot.com/

மானஸ்தன் said...

///Mohan Kumar said...
இன்பா கலக்கிட்டீங்க; அது என்ன மானஸ்தனுக்கு ஸ்பெஷல் கவனிப்பு?///

இட்லிவடையில் கமெண்ட் போடும் ஒரே காரணத்துக்காக என்னை "அடிச்சு-தொவச்சு- காயப்போட்டு" இருக்காரு இன்பா!! இப்படி ஒரு "ஸ்பெஷல்" கவனிப்புக்கு இப்படி ஒரு சந்தோஷமா!!!

SAN said...

IV,
Dont stop the posts.Its very interesting - I say!!!!!!

Anonymous said...

Excellent , Inba has written on his own style, Best wishes IV- Sankaran

Baski said...

//
இந்த மாதிரி போஸ்ட் இது தான் லாஸ்ட் போஸ்ட் - I Say ! //


you deserve this reward for your work for past 6 years.

பாராட்டு விழா எடுப்பதில், புகழாரம் கேட்பதில், அரசியல் பண்ணுவதில் மு.க வை மிஞ்சிவிடுவீர்கள் போல இருக்கே. ! :-)

வால்பையன் said...

தனக்கு தானே விருது கொடுக்கும் விழாவெல்லாம் கிடையாதா!?

pachhamilaka said...

valthuukal.thamzhyl type sevath eppadi..................http://www.google.co.in/transliterate/indic/Tamil............இதுல போய் துள் பண்ணுங்க

Kameswara Rao said...

இவ,

எல்லோரும் ஏற்கனவே பாராட்டி விட்டார்கள் (I mean all of them has said some thing good about you .. please do not read the tamil sentence in two and start writing another comment) Keep it up IV tharpuzhchi thaan koodathu pirar pugazhvathu ok. Maanasthan sir naan solla ninacchathu neriya per sollittanga athanala ungala pathi ethuvum ezhuthala idlyai nenecha... udan manathil nirpathu maanasthan thaan

Kamesh

R.Gopi said...

அது என்ன இன்பா.... மானஸ்தன் ஸ்பெஷல் லிஸ்ட்ல இருக்கார்... இது நமக்கு நாமே திட்டம் மாதிரி இல்லையே...

ஏன்னா, மோகன் குமார் கேட்டபோது, மானஸ்தன் “கண்கள் பனிக்க, இதயம் இனிக்க இப்படி சொன்னார்...

//இட்லிவடையில் கமெண்ட் போடும் ஒரே காரணத்துக்காக என்னை "அடிச்சு-தொவச்சு- காயப்போட்டு" இருக்காரு இன்பா!! இப்படி ஒரு "ஸ்பெஷல்" கவனிப்புக்கு இப்படி ஒரு சந்தோஷமா!!!//

அப்படியே “எடக்கு மடக்கு” என்று என் வலையையும் தொட்டது இன்பா ஸ்பெஷல்...

அடுத்து என்ன தலீவா??

Anonymous said...

யோவ்.இட்லி, இது உன் வேலைதான்யா.
நீயே எழுதிட்டு சீன் போடறியா?.

டோமரு.

maddy73 said...

Good Review,..but, I am puzzled how did you give 0.9 out of 0.1? I guess u mean to say 0.9 out of 1.0 (ie 90 %).

Still good to read, I enjoyed.

மானஸ்தன் said...

//maddy73 said...
Good Review,..but, I am puzzled how did you give 0.9 out of 0.1? I guess u mean to say 0.9 out of 1.0 (ie 90 %).
//

இதெல்லாம் அனுபவிக்கனும்...
ஆராயக்கூடாதுபா....

உங்கள மாதிரி ஆளுங்களுக்குக்காகத்தான் உ.நா.அன்னிக்கே சொல்லி வெச்சுருக்காரு...

:-)