பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, October 30, 2009

பெண்ணெடுக்க சில வழிகள் - ச.ந. கண்ணன்

முதியோர் தின'க்கொண்டாட்டம் என்று பாரதி மணி சொன்னவுடன் என்ன செய்வது என்று தெரியலை. சரி நம்ம புது மாப்ளே சத்தியமங்கலம் நவநீத கிருஷ்ணன் கண்ணன், அதாங்க ச.ந.கண்ணன் எழுதி தர சொன்னேன். இதோ...

பெண்ணெடுக்க சில வழிகள்

சமீபத்தில் திருமணம் ஆனவன் நான். எனக்குக் கிடைத்த அனுபவங்கள் வழியாக நாளைய மாப்பிளைகளுக்கு சில ஆலோசனைகள் :

* முப்பது வயதுக்குள் திருமணம் செய்துகொள்ளுங்கள். கல்யாண சந்தையில் 29 வயதுவரைக்கும்தான் நல்ல மார்க்கெட். வயது அதிகமாக ஆக உங்கள் கல்யாணத் தகுதிகளின் காலாவதி தேதி காலியாகிக்கொண்டே வரும்.

* மேட்ரிமோனியல் போன்ற ஊடகம் மூலமாக சம்பந்தம் ஏற்படுத்திக்கொள்வது கயிற்றில் நடப்பதற்குச் சமம். அவற்றில் வெங்கி, நாராயண மூர்த்திக்கு இணையான தகுதியை எதிர்பார்க்கும் வரன்கள்தான் அதிகம். பெரிய ஃபாரம் வேறு ஃபில்அப் செய்யச் சொல்வார்கள். சிறந்த வழி, உறவினர், நண்பர்கள் சிபாரிசு செய்யும் பெண்ணைத் தேர்ந்தெடுப்பது. இதில் கிடைக்கக்கூடிய நம்பிக்கை நிம்மதியாக திருமணம் செய்துகொள்ள வைக்கும்.

* சுஜாதாவின் தேஜஸ்வினி கதை நாயகிபோல இருவருக்கும் ஒரே ஐக்யூ, அவளுக்கும் சச்சின் பிடிக்கவேண்டும் என்றெல்லாம் ஒப்பிட்டுப் பார்த்து சம்பந்தத்தை நிராகரிப்பது பெரிய தவறு. எதிரும் புதிருமான துணை கிடைக்கப் பெற்றால் அதைக் கொண்டாடுங்கள்.

* தம், தண்ணி பழக்கம் உள்ளவர் என்றால் வினையே வேண்டாம். இவை பெரிய எதிரி. வெளியே தெரியாது என்றால் பாதகம் இல்லை.

* உறவினர் வட்டாரத்தில் நல்ல பையன், தங்கமான பையன் என்கிற சான்றிதழ் பெற்றவர் என்றால் கவலையை விடுங்கள். அவர்களே உங்களுக்கு ஏற்ற மீனாட்சியைத் தேடிப் பிடித்து கையில் ஒப்படைத்து விடுவார்கள். படிப்பு, பணத்தை விடவும் இந்தத் தகுதிக்குத்தான் ஏக டிமாண்ட்.

* அழகான பெண்ணா, படித்த பெண்ணா, பெற்றோர் தேர்ந்தெடுத்த பெண்ணா என்றெல்லாம் குழம்ப வேண்டாம். எந்தப் பெண்ணைப் பார்த்தால் மனத்துக்குள் மணி அடிக்கிறதோ அவள்தான் உங்களுக்காகப் பிறந்த பெண். மணி ஒலிக்காமல் பெண்ணைத் தேர்வு செய்யாதீர்.

* புகைப்படத்தில் ஓகே. பெற்றோருக்கும் முழு சம்மதம். எல்லாம் சரியாக இருக்கிறது என்று திருப்தி கிடைத்த பிறகு பெண்ணைப் பார்க்க நேரில் செல்க. நேரில் பார்த்த பெண்ணை நிராகரிப்பது பாவத்திலும் பெரிய பாவம்.


* சொந்தக் காலில் நிற்பவர், நிற்க ஆசைப்படுவர் என்றால் இதைக் கட்டாயம் செயல்படுத்திக் காட்டுங்கள். பெண் வீட்டாரிடம், ‘நாங்க நகை பத்தி பேசப்போறதில்லை. இது உங்க பொண்ணு. உங்களுக்குத் தெரியாதா, எவ்வளவு போடணும்னு’ என்கிற வசனத்தைக்கூட உங்கள் வீட்டில் பேசச் சொல்லவேண்டாம். அப்படியே நகை போட்டாலும் அதை லட்சியம் செய்யாதீர்கள். ’உங்கப்பா பொட்டுநகைகூட கேட்கலை தெரியுமா. எல்லாமே அவர் கஷ்டப்பட்டு சம்பாதிச்சது’ என்று நாளை உங்கள் மகன் - மகளிடம் பெருமிதம் கொள்ள மனைவிக்கு வாய்ப்பு அளியுங்கள்.


* சே, காதலி, காதல் திருமணம் எதுவும் அமையவில்லையே என்றெல்லாம் நொடிந்துபோகவேண்டாம். பாக்கியவான் நீங்கள். நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில்தான் ஏராளமான ’கிக்’குகள் உண்டு.

- ச.ந. கண்ணன்
www.sanakannan.com

[ ஆசிரியர் குறிப்பு: சத்தியமங்கலம் நவநீத கிருஷ்ணன் கண்ணன் என்கிற ச.ந.கண்ணனின் வயது 31.( 6 மாதம் முன்பு திருமணம் ஆனவர்). கல்கி வார இதழில் தொடர்ந்து கட்டுரை எழுதி வருபவர். தற்போது கிழக்கு பதிப்பகத்தின் முதன்மை துணையாசிரியராகப் பணிபுரிகிறார். இவருடைய அடுத்தப் புத்தகம், அப்துல் கலாமின் வாழ்க்கை. ஏர் டெல் சூப்பர் சிங்கர் பார்ப்பது இவர் பொழுதுபொக்கு.]

நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில்தான் ஏராளமான ’கிக்’குகள் உண்டு - எந்த 'கிக்' என்று தெளிவு படுத்தவும் :-)

34 Comments:

மானஸ்தன் said...

//நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில்தான் ஏராளமான ’கிக்’குகள் உண்டு - எந்த 'கிக்' என்று தெளிவு படுத்தவும் :-) //

அடுத்தவன் வாயப் புடுங்கி அத வெச்சே அவன அடிக்கறதே இட்லிக்கு பொழப்பாப்போச்சு.


"முதியோர் லிஸ்டுல" சேர்ந்த/சேர்க்கப்பட்ட திரு ச.ந. கண்ணனுக்கு வாழ்த்துகள்.

Mohan Kumar said...

கண்ணன் எழுதியதில் பெரும்பாலும் ஒத்து கொள்கிற மாதிரி தான் உள்ளது. குறிப்பாய் எனக்கும் 12 வருசத்துக்கு முன் "மணி" அடித்தது. இப்போ சொல்வதானால் " 12 வருசத்துக்கு முன் மணி அடித்து தொலைத்தது!!"

ஒரு விஷயம்: சமீபத்தில் என் நண்பர் ஒருவர் சொன்னார். " தற்போதெல்லாம் ஆண்கள் பெண்களை பார்த்த பின் வேண்டாம் என்று சொல்வதில். ஆனால் பெண்கள் பல தடவை ஆண்களை பல காரணங்களுக்காக பிடிக்கலை என்கின்றனர் !!" உண்மை தான்.

மோகன் குமார்

எனது blog -ல் சமீபத்திய பதிவு:
ஏலகிரி - சென்னைக்கருகே ஒரு hill station

வாசிக்க :
http://veeduthirumbal.blogspot.com/

Anonymous said...

இ.வ., தட்ஸ்டமிலின் குறும்பை பாருங்கள்.


http://picturepush.com/public/2439592


டெல்லி: பிச்சைக்காரர்களை அகற்றக்கூடாது - இது முதல் செய்தி.
அடுத்த செய்தி :

டெல்லி : மு.க. அழகிரிக்கு வீடு ஒதுக்கீடு

இது எப்படி இருக்கு?

Dubai Nara said...

உண்மையிலும் உண்மை. நெட் வரன் பார்க்க தான் ஹைடெக் அதன் மூலம் மணமுடித்த நன்பர்களுக்கு கிக் கிடைகிறதோ இல்லையோ நிறைய சர்பரைஸ் கிடைக்கிறது.


நிலைய வித்வான் “மானஸ்தன்” சுட சுட 8 நிமிடத்தில் வந்து கச்சேரி நடத்திட்டாறே !!

RAMesh Kumar SS said...

சத்தியமங்கலம் நவநீத கிருஷ்ணன் கண்ணன் வாழ்க வளமுடன்.

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது

I think IdlyVadai Posted this article for me.
இட்லி வடை வாழ்க வளமுடன்.
உங்கள் சேவை வாழ்க வளமுடன்.
இதை படிக்கும் நண்பர்கள் அனைவரும்,

அருளோடு செல்வம் கீர்த்தி மேன்மேலும் நிறைவை பெற்று வளமோடு வாழ்க வளமுடன்.

நம்ம ஊர் ஆளு நம்ப மாதிரி தான். நாளை தான் வேலைக்கு அப்பளை செய்வது போல் Photo, T.C, Community Certificate கொண்டுபோய் ஈரோட்டில் கொ...ல் வரன் பார்க்க அப்பளை செய்யனும்.

மேட்ரிமோனியல் போன்ற ஊடகம் மூலமாக சம்பந்தம் ஏற்படுத்திக்கொள்வது கயிற்றில் நடப்பதற்குச் சமம் - Thanks for your advice. Already blocked my profile after creating it.

எதிரும் புதிருமான துணை கிடைக்கப் பெற்றால் அதைக் கொண்டாடுங்கள் - Its real truth. வாழ்க வளமுடன் என்று சொல்லி மனதார வரவேற்பது நன்று.

உறவினர் வட்டாரத்தில் நல்ல பையன், தங்கமான பையன் என்கிற சான்றிதழ் பெற்றவர் என்றால் கவலையை விடுங்கள் - Really i am happy to read this :)

நேரில் பார்த்த பெண்ணை நிராகரிப்பது பாவத்திலும் பெரிய பாவம் - Exactly.

அப்படியே நகை போட்டாலும் அதை லட்சியம் செய்யாதீர்கள் - Correct.

நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில்தான் ஏராளமான ’கிக்’குகள் உண்டு - Yes my two married Sisters Enjoy as you said.

@@@@@ @@@@@ @@@@@ @@@@@ @@@@@
அனானி என்ற போர்வையில் எழுதியபோது எவர் மனமும் வருத்தப்பட வைத்திருப்பின் மன்னிக்கவும். கமலகாசன் சொல்வது போல் மன்னிப்பு கேட்பவன் ...
@@@@@ @@@@@ @@@@@ @@@@@ @@@@@

மானஸ்தன் வாழ்க வளமுடன்.அவர்களது அன்பு குடும்பம் வாழ்க வளமுடன்.

இப்படிக்கு அன்புடன் said...

சா. நா. கண்ணன் முன்பு சொன்னது போல, ’என்னோடு ’நாக்க முக்க’ பாடலுக்கு ஆடத் தயாரா?’ என்று கேட்டாரா?

ஆயில்யன் said...

//மேட்ரிமோனியல் போன்ற ஊடகம் மூலமாக சம்பந்தம் ஏற்படுத்திக்கொள்வது கயிற்றில் நடப்பதற்குச் சமம். அவற்றில் வெங்கி, நாராயண மூர்த்திக்கு இணையான தகுதியை எதிர்பார்க்கும் வரன்கள்தான் அதிகம். பெரிய ஃபாரம் வேறு ஃபில்அப் செய்யச் சொல்வார்கள்//

:))))))))))))))))))

kggouthaman said...

// உறவினர் வட்டாரத்தில் நல்ல பையன், தங்கமான பையன் என்கிற சான்றிதழ் பெற்றவர் என்றால் கவலையை விடுங்கள். அவர்களே உங்களுக்கு ஏற்ற மீனாட்சியைத் தேடிப் பிடித்து கையில் ஒப்படைத்து விடுவார்கள்.//
ஆமாமுங்கோ - மெய்தானுங்கோ - ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபத்தேழுல - இப்பிடித்தாங்கோ ஒரு மீனாட்சி எனக்கு கெடச்சாங்கோ!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//ஆமாமுங்கோ - மெய்தானுங்கோ - ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபத்தேழுல - இப்பிடித்தாங்கோ ஒரு மீனாட்சி எனக்கு கெடச்சாங்கோ//

வந்துட்டாருய்யா வந்துட்டாரு, இதோ இன்னொரு முதியோர் தின கொண்டாட்ட நாயகன். ஏனுங்கோ கௌதமன் அய்யா, இட்லிவடைல உங்க பதிவு எதுவும் இல்லையா?

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

என்னுடைய மலரும் நினைவுகளைக் கிளறிய நண்பருக்கு நன்றி. (வருஷத்தைச் சொல்ல மாட்டேனே!)
நினைவுகளில் இருந்து சில துளிகள்:

நானும் ஒரு முறைதான் பெண் பார்க்கச் சென்றேன். போன பொழுது, ஒரு முடிவோடு தான் போனேன். பெண் எப்படி இருந்தாலும் மறுக்கக் கூடாது. (அந்த பெண் என்னை மறுக்கக் கூடாதே என்ற கவலையும் இருந்தது)

பெண்ணை பற்றி யாரிடமும் விசாரிக்கக் கூடாது என்றும் முடிவு செய்து இருந்தேன். (அவர்கள் வீட்டில் என்னைப் பற்றி அலுவலகத்திலும், என் நட்பு வட்டாரத்திலும் விசாரித்தது தனி கதை.)

முன்னமே என் தந்தை தாயிடம் வரதட்சினை வாங்கக் கூடாது என்று உறுதியாக கூறி இருந்தேன். (பையனுக்கு ஏதேனும் குறை இருக்கோ என்று பெண் வீட்டார் நினைத்தாலும் பரவாயில்லை).

திருமணம் முடித்து மண வாழ்க்கையும் இனிமையாக ஓடிக் கொண்டிருக்கிறது.

And you are right.

நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில்தான் ஏராளமான ’கிக்’குகள் உண்டு

jaisankar jaganathan said...

kazhuthai uthaikkumeay antha kicka

Easwaran said...

Pillai Parpathil Sila Vazhigal endru poduveergala - Penkalukku udhaviyaga irukkum.

Easwaran

Kanaiyaazhi said...

Vittukkoodupadthuthaan vazhkkai! ithai nirubikindra oru vidayam than "nichiyam seithu" thirumanam mudipathu.

Baski said...

//நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில்தான் ஏராளமான ’கிக்’குகள் உண்டு - எந்த 'கிக்' என்று தெளிவு படுத்தவும் :-) //

"அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்" :-)))

erodde said...

ஒரே ரசனையுள்ள துணை என்பது தேவை தான். 93-இல் கோவை சென்றிருந்த போது, நான் பாடிக்கொண்டிருந்ததைக் கேட்ட, மாடி வீடு பத்மா, ஹம்சநாதம் எனக்கு பிடிக்கும், பாடுங்களேன் என்றாள். பாடினேன். பிறகு, அவருக்கு சங்கீதம் கேட்பது எல்லாம் ரொம்ப பிடிக்காது என்று குறை பட்டுக்கொண்டவளிடம் அதனாலென்ன, அப்படி ஒரு contrast இருந்தால் நன்றாகத் தானே இருக்கும் என்றேன்.

"ஒண்ணும் வேண்டாம்.. நான் பெண்;அவர் ஆண்... அந்த வித்யாசம் போதும், மத்த விஷயங்களில் ரசனையும் மனமும் ஒன்றுபட்டால் தான் நன்றாக இருக்கும் என்றாள்.

erodde said...

"கிக்குகள்" என்பவை அன்பை வெளிப்படுத்தும் அல்லது அதற்குத் தவிக்கும் சில பொழுதுகளில் நாமாக ஏற்படுத்திக்கொள்ளுபவை தான். அதற்குத் தேவை கொடுத்தலில் உள்ள ஆனந்தம் அறிதலும் கொஞ்சம் creative mind -ம் தான். இதில், காதல் திருமணம் அல்லது நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்ற வேறுபாடுகள் இல்லை.

erodde said...

'பழ' - 'கிக்'கொள்ளவே பரபரக்கும் மனம் கூட,
'பழகிக்'கொண்டதால் பண்படும்; பணிவு கற்கும்.

'சிக்-கிக்'கொள்ளும் மனங்களினூடே
சிறை மீள மனமின்றி
'ஆக்கிக்' கொள்ள அலைபாயும்
ஆதலினால் காதல் பெருகும்.

எத்தனை முயங்கியும் பத்தாமல் மீதம்
பாக்'கிக்'கென்றே பகலும் போகும்...
'தாக்கிக்'கொள்வது போல் ஊடலும் கொண்டபின்
'தங்கிக்'கொள்ளவே தன்னை மறக்கும்.

Sattanathan said...

நல்ல இடுகை.

"நல்ல குடும்பத்தில் பெண்ணெடுக்க நல்ல ஆண்களுக்கு சில வழிகள்" என்று கருதுகிறேன் :P

ஸ்ரீராம். said...

//சே, காதலி, காதல் திருமணம் எதுவும் அமையவில்லையே என்றெல்லாம் நொடிந்துபோகவேண்டாம். பாக்கியவான் நீங்கள். நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில்தான் ஏராளமான ’கிக்’குகள் உண்டு//

"அவரவர்க்கு வாய்த்த இடம் அவன் போட்ட பிச்சை...
அறியாத மானிடர்க்கு அக்கரையில் இச்சை...
இல்லாத பொருள் மீது எல்லோர்க்கும் ஆசை வரும்
இக்கரைக்கு அக்கரைப் பச்சை..."

ஈ ரா said...

காதல் திருமணம் அரேஞ்சுட் திருமணம் ஆனாலும், அரேஞ்சுடு திருமணம் காதல் திருமணம் ஆனாலும் அருமையாகத்தான் இருக்கும்.

ந.லோகநாதன் said...

எனக்கும் பெண் பார்க்கும் படலம் ஆரம்பித்தாயிற்று.நாங்க நகை பத்தி பேசப்போறதில்லை

Killivalavan said...

பயனுள்ள பதிவு :-)

சீனு said...

//பெண்ணெடுக்க சில வழிகள்//

சே! அவசரத்துல "Bendடெடுக்க சில வழிகள்"னு படிச்சுட்டேன்.

Anonymous said...

போட்டாவில் ஆள் பெண்டேடுக்கப்பட்டவர் போல் இருக்கிறார் :).

Swami said...

He he .. i'm 34 and yet to start the search.. Super senior citizen ..?? :) or should i abort the search . Anyhow useful post

ஸ்ரீராம். said...

சே! அவசரத்துல "Bendடெடுக்க சில வழிகள்"னு படிச்சுட்டேன்//

சுளுக்கிக் கொண்ட வயிறை சரி செய்யறது எப்படின்னு சீனு தான் சொல்லணும். அல்லது இட்லிவடை அதற்கு தனியாய் யாரையாவது கேட்டு பதிவிடணும்!

Anonymous said...

last line punch was good.

Anonymous said...

1.முதலில் சாதியை விட்டு வெளியே வாங்க.
2.வரதட்சணை ன்னு "பிச்சை" எடுப்பதை நிறுத்துங்கள்.
3.பெண்ணை அடிமைப் படுத்தாதீர்கள்
4.பெண்ணை திருமணம் செய்துக் கொள்வது பாரம் என்றால், கலாம் போல இருந்து விடுங்கள்.
5.மனைவி, குழந்தைகள் எல்லாம் உங்கள் சொத்து இல்லை. அவர்களை அவர்களாக இருக்க விடுங்கள்.

karthi said...

apdiyae mappila pakka enna pannanum nu sonninga na engalukum vasathiya irukum...

SATHEESH said...

///"முதியோர் லிஸ்டுல" சேர்ந்த/சேர்க்கப்பட்ட திரு ச.ந. கண்ணனுக்கு வாழ்த்துகள்.//
மானஸ்தன் நீங்க எந்த லிஸ்ட் ?

வருகிற பதிவெல்லாம் பார்த்தால் இந்த கூட்டமே முதியோர் கூட்டமா இருக்குமோ ?
( இ. வ உம் சேர்த்து ).

R.Gopi said...

மானஸ்தன் அவர்களை சீனியர் சிட்டிசன் என்று கூறிய அண்ணன் "சதீஷ்" வாழ்க...

Anonymous said...

என்னமோ ஆண்கள்தான் பெண்களை நிராகரிப்பது போல் சொல்லுகிரார்கள். அந்த காலம் எல்லாம் மலையேறி பல யுகங்கள் ஆகிவிட்டது. இப்பொமுது பெண்கள்தான் ஆண்களை reject செய்கொறார்கள். +2 பெயிலாகி கொல்லபுறத்துல பத்து பாத்திரம் தேய்ச்சிகிட்டு இருந்தா கூட IT மாப்பிள்ளைதான் வேண்டுமாம் பொண்ணுக்கும் அவள் அப்பனுக்கும், துட்டு குடுத்து வாங்கிடம்லுனு கனவு.

அப்புறம் போட்டேவ பர்ர்தே தீர்மானித்து விட வேண்டுமாம். அய்யோ அய்யோ.. அய்யா எந்த உலகத்தில் இருகீரீர்கள். பொண்ணு தவளும்போது எடுத்த போட்ட குடுத்து ஊரை ஏமாற்றுகிறார்கள்(ஆண் வீட்டார்கள் செய்வது போல்).

பெண்தேடுவது எனது ஒரு ஆணின் வாழ்வில்
படிப்பதை, வேலை தேடுவதைவிட கஷ்டமான விசயமா மாறி வருகிறது தற்பொழுது

எவனோ ஒருவன் (எ) அதி பிரதாபன் said...

//புகைப்படத்தில் ஓகே. பெற்றோருக்கும் முழு சம்மதம். எல்லாம் சரியாக இருக்கிறது என்று திருப்தி கிடைத்த பிறகு பெண்ணைப் பார்க்க நேரில் செல்க. நேரில் பார்த்த பெண்ணை நிராகரிப்பது பாவத்திலும் பெரிய பாவம்.//
ஏன் இப்படியெல்லாம்... இதைப் பாவம் என்று யார் சொன்னது?

இப்படிச் சொல்லிவிட்டு...
//எந்தப் பெண்ணைப் பார்த்தால் மனத்துக்குள் மணி அடிக்கிறதோ அவள்தான் உங்களுக்காகப் பிறந்த பெண். மணி ஒலிக்காமல் பெண்ணைத் தேர்வு செய்யாதீர்.//

இப்படியும் சொல்கிறீர்களே! நேரில் பார்க்கும்போது மணி அடிக்கவில்லையெனில் பாவம் செய்யாமல் இருப்பதா? உங்கள் கூற்றுப்படி வேண்டாமென்று சொல்வதா?

நீங்கள் சொல்வதில் ’மணி’ மேட்டரோடு ஒத்துப்போகிறேன். ஆனால் பாவம் என்று சொல்வதிலெல்லாம் பழங்கதை மாதிரித் தெரிகிறது.

ஏன் இன்னும் பழைய காலத்திலேயே இருக்கிறீர்கள். புதிதாக செய்ய நினைப்பவர்களையும் குழப்புகிறீர்கள். இப்போது முதலில் விசாரிப்பு, பின்பு இமெயிலில் போட்டோ பரிமாற்றம், அதன்பின் பொது இடத்தில் பையனும் பெண்ணும் சந்திப்பு. பேசி பிடித்திருந்தால் மற்ற ஏற்பாடுகள்.

நீங்கள்தான் இப்படி சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள். பெண்களெல்லாம் தைரியமாக எனக்குப் பிடிக்கவில்லை என்று சாதாரணமாக சொல்லிவிடுகிறார்கள்.

பெண்ணுரிமை வளரட்டும், அதற்காக ஆணுரிமையைப் புதைத்துவிடவேண்டாம். இருவரும் சமமாகவே இருக்கட்டும். பிடிக்கவில்லையெனில் இருவருமே பிடிக்கவில்லை என்று சொல்லலாம்.

யுவகிருஷ்ணா said...

ச.ந.கண்ணனின் டிப்ஸ்கள் எதிர்காலத்தில் உதவும். நன்றி!