இட்லிவடை! வலைமேயும் வாசகர்கள் அனைவரும் அறியத் துடிக்கும் - ஆராய்ந்து கொண்டே இருக்கும் மவராசன்! நேற்றுடன் (26.10.2009) அண்ணன் கடை போட்டு ஓஹோ என்று ஆறு ஆண்டுகள் முடிவடைகின்றன. எனக்கு இட்லிவடை வலைமனை பரிச்சயம் ஆனது சமீபத்தில்தான். அதுவும் quite accidentally! நான் இட்லிவடையைத் துரத்திக் கொண்டுஇருக்கும் இந்தக் குறுகிய காலத்தில், அவர் கடந்த ஆறு வருஷமாக அரியணையில் அமர்ந்து காட்டும் ஆட்டம் பார்த்து பிரமித்துப்போனேன்.
கடந்த ஆண்டு, இதே நேரம் இட்லிவடை ஐந்து ஆண்டுகள் நிறைவைக் கொண்டாடும் விதமாக பல மிகப்பிரபல பதிவர்கள் இட்லிவடையை வலை உலக கிருஷ்ண பரமாத்மா ரேஞ்சில் எழுதி உள்ளனர். அவற்றில் திரு பா.ரா. எழுதிய மேட்டர் நச் ரகம். முகமூடிக்குள் ஒளிந்து கொண்டு, அதுவும் இந்த டெக்னாலஜி யுகத்தில், வலைமனையில் "விளையாடுவது" அவ்வளவு சுலபம் அல்ல. இன்று பலரும் "அவனா நீ" என்று வார்த்தை விளையாட்டு ஆட திருவாளர் இட்லிவடை முக்கியக் காரணம் என்றால் அது மிகையில்லை. அடிக்கடி கேட்கப்படாத கேள்விகளுக்குக் கூட scientific-ஆக பதில் சொல்லி கலக்கி
இருந்தாலும், இன்றுவரை விடை தெரியாத இட்லிவடை யார் என்ற கேள்விக்கு, "கேள்விக்குறியை" மட்டுமே நமக்கு திரும்ப பதிலாகத் தரும் உலக நாயகன் படத்துலவந்த invisible-common man போல, நம்மைப் போல ஒருத்தனான, ஸ்ரீமான் இட்லிவடையாரின் பயணம், ஒரு பார்வை - இதோ உங்களுக்காக.
இருந்தாலும், இன்றுவரை விடை தெரியாத இட்லிவடை யார் என்ற கேள்விக்கு, "கேள்விக்குறியை" மட்டுமே நமக்கு திரும்ப பதிலாகத் தரும் உலக நாயகன் படத்துலவந்த நான் யார் ? இட்லி வடைக்குள் ஒளிந்து கொள்ள நான் சாம்பார் அல்ல - உங்களில் ஒருவன், உங்கள் நண்பன், உங்கள் பக்கத்து வீட்டுக்காரன் சில சமயம் உங்கள் மனசாட்சி.
27th அக்டோபர் 2003 சுக்லபக்ஷ த்ரிதீயை அனுஷ நக்ஷத்ரத்துல இப்படி சொன்னது யாரு? ஷாட்சாத் நம்ம இட்லிவடைதான். இப்படி அவர் clue குடுத்ததுக்கு அப்புறமும் இட்லிவடை "யார்" என்று தெரியவில்லை என்றால் நான் என்ன செய்வது?? மேலே படியுங்கள்.
கடை திறந்து முதல்ல கொஞ்ச நாளைக்கு சரியாகப் போணியாகவில்லை என்றும், சரக்கு சுமாராக இருந்தாலும் மக்கள் வருகை குறைவாகவே இருந்ததாகவும் அறியப்படுகிறது. வந்தவர்களும் பாத்துட்டு சைலெண்டா எஸ்கேப் ஆகி உள்ளனர். பின்னூட்டம் போட்டு encourage பண்ணக்கூட யாரும் தயாராக இல்லை போல. இருந்தாலும் நம்ம அண்ணன் அசராமல் கடையைத் தொடர்ந்து நடத்தினார். ஆள் பிடிக்க அப்போ அப்போ புதிர்-போட்டி என்று நடத்தி இருக்கிறார். பல அஸ்திரங்களையும் விட்டுப் பார்த்துட்டு பலன் கிடைக்கவில்லை என்றாலும்கூட கொஞ்சம் கூட மனம் தளராமல், 2005-ஆம் வருஷத்தின் கடைசிப்பதிவில் சினிமா விமர்சனம் என்ற போர்வையில் சக பதிவர்களை செமையாக வாரி, மக்களைத் திரும்பிப் பார்க்க வைத்து இருக்கிறார்.
2006-ல் நடந்த தமிழக தேர்தலை ஒரு தொலைக்காட்சி போல கவர் செய்தாராம். முக்கியமாக தேர்தல் நேரத்தில் கேப்டன் இவர் கீ-போர்ட்ல நல்லா விழுந்து புறப்பட ஆரம்பித்தது இன்றும் தொடர்கிறது. உலகநாயகன் படங்களில் வந்ததைப் போல் தீர்க்ததரிசியாக பன்றிக்காய்ச்சல் பற்றி 2006 அக்டோபர் மாசத்துலயே எழுதி வைத்துள்ளார். தனது நக்கல் - நையாண்டி வேலைகளையும் தொடர்ந்து ரொம்பவே அதிரடியாகச் செய்து, நெறைய ஆச்சர்யம்-அதிர்ச்சி கலந்த பாராட்டுகளையும், கூடவே கொஞ்சம் அர்ச்சனைகளையும் வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளார்.
22nd April, 2007 அன்று நடந்த நடேசன் பூங்கா பதிவர் சந்திப்பு முடியறதுக்கு முன்னாடியே FIR போஸ்ட் ஒன்றைப் பதிவு பண்ணி தனக்குப் பல சைஸ்களிலும், எல்லா இடங்களிலும் ஆள் உள்ளனர் என்று நிரூபித்து சக வலை பதிவர்களை மீண்டும் ஒருமுறை கலவரப்படுத்தி இருக்கிறார்.
மூன்றாம் ஆண்டு துவக்க விழாவைச் சரியாகச் செய்யாததாலோஎன்னவோ, அந்த ஆண்டின் கடைசி தினத்தில் (26.10.2007) இட்லிவடையின் கடவுச்சொல் திருடப்பட்டு ஆப்பு அடிக்கப்பட்டார் என்றும், இருந்தாலும் அதை உடனே சரி செய்து ராம நாம சங்கீர்த்தனத்துடன் நல்ல advertisement குடுத்ததன் மூலம் இட்லிவடை நான்காம் ஆண்டு துவக்கத்திலேயே கடை மிகவும் களை கட்டியது என்பதும் வரலாறு.
மூன்றாம் ஆண்டு துவக்க விழாவைச் சரியாகச் செய்யாததாலோ
தமிழுக்கு (சோ)சாதனையா? என்ற பதிவில் எழுத்தாளர் திரு.ஜெயமோகன் "வளைத்தளம்" அமைத்தார் என்று போட்டதில் என்ன உள்குத்து என்று மக்கள் ஆராய்ச்சி செய்ததாகக் கேள்வி. அதே போன்று வார்த்தை - விழா காட்சிகள் என்று ஒரு பதிவில் படங்களை மட்டுமே போட்டு வேறு "வார்த்தை" எதுவும் எழுதாத பதிவிலும் என்ன உள்குத்தோ என்று இன்றும் பேசுகிறார்கள். சரி, இதை இப்போ ரொம்ப ஆராய்ச்சி பண்ணாம மேல படிங்க!
பாம்பைப் பார்த்து எனக்கு பயம் கிடையாது என்ற நாட்டுக்கு முக்கியமான நமீதா நியூஸ் போட்ட இட்லிவடைக்கு மாமிகளைக் கண்டால் பயம்
என்பது ஊரறிஞ்ச விஷயம். "அம்மணி சொன்னால் பதிவை எடுப்பேன் அல்லது போடுவேன்" என்ற இட்லிவடையின் வேதவாக்கு இன்று வரை காப்பாற்றப்பட்டு வருகிறது. 2009 பொதுத்தேர்தலுக்காக தொகுதிவாரியாக ஆள் பிடித்து, கருத்து கணிப்பு நடத்தினார். இட்லிவடையின் இந்த கருத்துக் கணிப்பு "மரணஅடி" வாங்கினாலும், மிகவும் பாராட்டத்தக்க வகையில் interactive live-coverage குடுத்தார். உலகநாயகனின் "உபோஒ" படம் வந்தாலும் வந்தது, அதை வைத்து ஒரு "பதினைந்து பதிவுகள்" போட்டார். கடையில் ஓஹோ என்று நல்ல சூடாக வியாபாரம் ஓடியது. இந்த ஆண்டில் "ஆஸ்தான சரக்கு மாஸ்டருடன்" கை கோர்த்த இன்பாவும், யதிராஜ சம்பத்குமாரும் கடையில் கல்லாப்பொட்டி ரொம்ப உதவினர் என்றால் அது மிகையில்லை.
2008 அக்டோபர் மாசம் ~100 பேரால் மட்டுமே துரத்தப்பட்ட இட்லிவடைக்கு இந்தப் போஸ்ட் எழுதும்போது 750 registered வாசகர்கள். என்னே ஒரு அபரிமிதமான வளர்ச்சி!!! இவ்வாறாக இட்லி(க)வடை வளர்ந்து வீறுநடை போடும் நேரத்தில் யாரு போட்ட கண்ணோ (என் கண்ணு இல்லீங்கோ!), இட்லியோட கணினி கந்தல் ஆகி, ரெண்டு நாட்கள் கடையே திறக்க முடியவில்லை. அதுக்கு பரிகாரமா, இட்லிவடைய ஒரு போட்டி நடத்தச்சொல்லி பரிசு குடுக்க பரிந்துரை செய்கிறேன். எங்க ஊர்ப் பக்கம் "நாக்க புடுங்கிக்கற மாதிரி நாலு கேள்வின்னு" சொல்லுவாங்க. அதனால அதே மாதிரி இதோ போட்டிக்கான "மிகவும் சுலபமான" நாலு கேள்விகள்:
என்பது ஊரறிஞ்ச விஷயம். "அம்மணி சொன்னால் பதிவை எடுப்பேன் அல்லது போடுவேன்" என்ற இட்லிவடையின் வேதவாக்கு இன்று வரை காப்பாற்றப்பட்டு வருகிறது. 2009 பொதுத்தேர்தலுக்காக தொகுதிவாரி2008 அக்டோபர் மாசம் ~100 பேரால் மட்டுமே துரத்தப்பட்ட இட்லிவடைக்கு இந்தப் போஸ்ட் எழுதும்போது 750 registered வாசகர்கள். என்னே ஒரு அபரிமிதமான வளர்ச்சி!!! இவ்வாறாக இட்லி(க)வடை வளர்ந்து வீறுநடை போடும் நேரத்தில் யாரு போட்ட கண்ணோ (என் கண்ணு இல்லீங்கோ!), இட்லியோட கணினி கந்தல் ஆகி, ரெண்டு நாட்கள் கடையே திறக்க முடியவில்லை. அதுக்கு பரிகாரமா, இட்லிவடைய ஒரு போட்டி நடத்தச்சொல்லி பரிசு குடுக்க பரிந்துரை செய்கிறேன். எங்க ஊர்ப் பக்கம் "நாக்க புடுங்கிக்கற மாதிரி நாலு கேள்வின்னு" சொல்லுவாங்க. அதனால அதே மாதிரி இதோ போட்டிக்கான "மிகவும் சுலபமான"
1. இட்லிவடை பதிவு-1000 என்பதை விளம்பரப்படுத்தாமல், 1008-ஆம் பதிவை "நம்பர் போட்டுப்"
பதிந்ததில் உள்ள உள்குத்து என்ன?
2. இதுவரை இட்லி போட்ட 2720 பதிவுகளில் "ஒருபடம்" நிறைய முறை பயன்படுத்தப்பட்டுள்ளது.
அது எந்தப்படம்? எத்தனை முறை? காரணம் என்ன?
3. சண்டேன்னா ரெண்டு ஆரம்பிக்கப்பட்டது எப்போது?
4. கடைசிக் கேள்வி. ரொம்ப ரொம்ப ஈஸி. இத எழுதினது யாரு?
இந்த நாலு கேள்விகளுக்கும் மிகச் சரியான பதில் சொல்பவர்களுக்கு என்றைக்காணும் ஒருநாள் இட்லிவடை அவரைச் சந்திக்கும் வாய்ப்பும் குடுப்பாருன்னு நம்பறேன். என்னது, கியாரண்டியா?? அதெல்லாம் என்னால தர முடியாதுங்க. பலனை எதிர்பார்க்காம முயற்சி பண்ணுங்க, வெற்றி உமதே. இட்லிவடை மனசு வெச்சா நீங்க அவரை கண்டிப்பா மீட் பண்ணலாம். அதுக்கு முன்னாடி இட்லிவடையோட statistics கொஞ்சம் தெரிஞ்சு வெச்சுக்கங்க. (நமக்காக இட்லிவடை நெறைய "வெட்டி-ஒட்டி" போஸ்ட் போடறாரு. அதுனால ஏதோ என்னால முடிஞ்ச "பரமவெட்டி" வேலை).
Status as on 24th October, 2009 (1615 hours IST)
ரொம்பப் பேர் இட்லிவடை ஒரு "கூட்டம்"; "யார் என்ன புலம்பினாலும்-free-யா-எப்பவும் பாசத்தோட-பிரகாசமா-நிழலில் ஒக்காந்துண்டு-பத்தி பத்தியா" மாறி மாறி எழுதினா இட்லிவடைக்கு மேட்டர் ரெடி" என்று சொல்லிக் கொண்டு உள்ளனர். சந்தேக வட்டத்தில் கட்டம் கட்டப்பட்ட அந்தப் பிரபலங்களும் "நான் அவன் இல்லை" என்று ரொம்பத் தெளிவாகச் சொல்கின்றனர். என்னைப் பொறுத்தவரை, என்னதான் நம்மைச்சுற்றிப் பகுத்தறிவுப் பகலவகன்களும், நாத்திகம் பழகுபவர்களும் இருந்தாலும், இந்த "டிகிரி தோஸ்துகளுக்கு" தோஸ்தான "கடவுள் மாதிரி ஒருத்தர்தான்" இட்லிவடை என்பது நிச்சயம். திரு பாராவே கூட இட்லிவடை "வெங்கடாஜலபதி" போன்ற ரொம்பப் பரிச்சயமான பெயர் கொண்டவராக இருப்பார் என்று சொல்லி இருக்காரு. எது எப்படியோ, "அவனா நீ" விளையாட்டு கண்டிப்பாகத் தொடர வேண்டும் என்பதே என் மற்றும் எல்லாரது விருப்பமும். அவ்வாறு தொடர வசதியாக, தேவைப்பட்டால், ஒரு புதிய முகமூடி ஒன்று வாங்கித் தரவும் நான் தயார் என்று இந்த சபையில் உறுதிகூறுகிறேன்.கடை ஆரம்பித்த அன்று முதல் - இன்றுவரை செய்த(வ)தைப்போல "என்றென்றும்- இட்லிவடையார்" சமுதாய அக்கறையுடன்-தொடர்ந்து சிந்தனையைத் தூண்டி, என்னை மாதிரி விசிலடிச்சான் குஞ்சுகள் முதல், மதிப்பிற்குரிய மாமிகள் வரை, எல்லா வாசகர்(கி)களின் மனதை மகிழ்விக்கக் கூடிய பதிவுகளைப் போட, இன்று பொய்கை ஆழ்வாரின் திருநட்சத்திரமான திருவோணம் என்பதால் அவரோட சில "பாசுரங்களையும்", மற்றும் கந்தசஷ்டி முடிஞ்சு முதல் செவ்வாய்க் கிழமையாக இருப்பதால் கொஞ்சம் நேம நிஷ்டையோட "சஷ்டிகவசமும்" சேவித்துப் பிரார்த்திக்கிறேன்.
இட்லிவடையும்-வாசகர்களும் வாழ்க வளமுடன்!
இப்படிக்கு "என்றென்றும் அன்புடன்" ,
கி.அ.அ. அனானி மாதிரியே வேற ஒரு அனானி
நீங்க யாரு அதை சொல்லுங்க முதல்ல. படத்தில இருக்கும் இருவரில் ஒருவர் தானே நீங்க :-) (பிகு: இன்றுடன் கலைஞர் கவியரங்கம் 'மாதிரி' பதிவுகள் முடிவடைகிறது. நாளை முதல் சில ஸ்பெஷல் பதிவுகளுடன் உங்களை சந்திக்கிறேன். இப்ப ஸ்கூலுக்கு லேட்டாச்சு வரட்டா. ஆறு வயது ஆனால் எலிமெண்டரி ஸ்கூல் போகும் சமயம் என்று சொல்லுவார்கள்...





நன்றி: தினமணி










28 Comments:
Congrates IdlyVadai! I have been reading you for the past 2 years. whenever I use internet, I never miss reading your post. very interesting, sometimes informative, over all entertaining experience with you. Long Live Idly Vadai..
- Manikandan
// நீங்க யாரு அதை சொல்லுங்க முதல்ல. படத்தில இருக்கும் இருவரில் ஒருவர் தானே நீங்க :-) //
- இவ - தெளிவா சொல்லுங்க. சரத்குமார ஏன் இதுல இழுத்துவிட்டுட்டீங்க சத்தமில்லாம ?
//- இவ - தெளிவா சொல்லுங்க. சரத்குமார ஏன் இதுல இழுத்துவிட்டுட்டீங்க சத்தமில்லாம ?//
:-) அது தான் க்ளு !
வணக்கம் இட்லிவடையாரே உங்கள் சேவை இந்நாட்டுக்கு மிகவும் தேவை.
உங்கள் பூவலைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
- செல்வகுமார் இனியன்!!!
//...இதே நேரம் இட்லிவடை ஐந்து ஆண்டுகள் நிறைவைக் கொண்டாடும் விதமாக பல மிகப்பிரபல பதிவர்கள் இட்லிவடையை வலை உலக கிருஷ்ண பரமாத்மா ரேஞ்சில் எழுதி உள்ளனர். அவற்றில் திரு பா.ரா. எழுதிய மேட்டர் நச் ரகம்.///
**********************
/***வீ.சேகரின் இயக்கத்தில் வந்த "பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்" படத்தின் ஒரு ஜோக்:
சார்லி குளித்துக்கொண்டிருக்கும்போது வீட்டு வேலைக்காரி முதுகு தேய்த்துவிடுவாள். அதைப் பார்க்கும் ஒரு பெண், சார்லியின் மனைவி கோவை சரளாவிடம், "உன் புருஷனுக்கு அவ முதுகு தேச்சு விடுறாடீ" என்று சொல்வாள். அதற்கு கோவை சரளா, "எருமைக்கு எவ முதுகு தேச்சா என்ன?" என்பார்.
***/
ஹா ஹா ஹா.!!!
Anyway வாழ்க நீ பல்லாண்டு!!
நல்லூரானுக்கு ஏனிந்த சிண்டு முடியும் வேலை??
ஏற்கனவே இதற்காக இட்லி வாங்கிக் கட்டிக் கொண்டது போதாதா??
/*** IdlyVadai said...
//- இவ - தெளிவா சொல்லுங்க. சரத்குமார ஏன் இதுல இழுத்துவிட்டுட்டீங்க சத்தமில்லாம ?//
:-) அது தான் க்ளு !***/
என்ன கேவலாமானா ஆளு நீங்க?? நீங்களே மானஸ்தன் என்ற பெயரில் வந்து உங்களை புகழ்ந்து கொள்கிறீர்கள்...ச்சீ..தூ.. நீங்களெல்லாம் மு.கவை திட்ட யோக்கியதை இல்லாதவர். உங்களை விட மு.கவே பன்மடங்கு சிறந்தவர்...அல்பம்..
உன்னுடைய நண்பன் யார்?? நான் உன்னைப் பற்றிக் கூறுகிறேன் என்று ஒரு அறிஞர் சொல்லியிருக்கிறார்.
அனானி மு.க வின் அபிமானி (நண்பர்) போலிருக்கிறது.
முருகா.. பழனி ஆண்டவா... இருக்கிறாயா அல்லது இராது சென்றுவிட்டாயா... ? உள்குத்து என்ற வார்த்தையே, எழுதியது (ப்)யார் என்று சொல்லுமே... இதில் க்ளூ வேறு தேவையா?
வாழ்த்துக்கள்!
புதிருகெல்லாம் விடை தெரியல யாராவது சொன்னா ஒகே!
//Erode Nagaraj... said...
முருகா.. பழனி ஆண்டவா... இருக்கிறாயா அல்லது இராது சென்றுவிட்டாயா... ? உள்குத்து என்ற வார்த்தையே, எழுதியது (ப்)யார் என்று சொல்லுமே... இதில் க்ளூ வேறு தேவையா?//
யப்பா...முருகா....வேலவா...தண்டாயுதபாணி... நாகு சார்... அவர்தானா, இவர்??
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.... நாக்கு தள்ளி விட்டது சார்...
இவ்ளோ கஷ்டப்பட வேண்டியிருக்கிறது....
உன்னுடைய நண்பன் யார்?? நான் உன்னைப் பற்றிக் கூறுகிறேன் என்று ஒரு அறிஞர் சொல்லியிருக்கிறார்.
this seems to be another clue.. IV might be manasthan friend or friends
/***அனானி மு.க வின் அபிமானி (நண்பர்) போலிருக்கிறது.***/
இட்லிவடையின் அபிமானி (நண்பராக)யாக இருப்பதை விட மு.க வின்(வீண்) அபிமானியாக இருப்பதே எவ்வளவோ மேல் என்று தோன்றுகிறது, இட்லியின் யோக்கியதை தெரியாதா??? அவருக்கு நெருக்கமானவர் எழுதிய பாடலை ஆகா ஓஹோ என்பார், நண்பர் இயக்கிய படத்தை தலையில் வைத்து ஆடுவார்,தன்னை பற்றிய தம்பட்டங்கள், இது மு.க வைத்திருக்கும் கூட்டத்தை விட மோசமானது.... யுதிராஜ் நீங்கள் என்னை என்ன சொன்னாலும் சரி நான் அதைப் பற்றி கவலைப் பட போவதில்லை, நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என கருதுபவன் நான், இட்லியின் இது போன்ற கீழ்த்தரமான செய்கைகள்தான் என்னை வெறுப்படைய செய்கின்றன....
அடுத்த பதிவா!! நடக்கட்டும்!!!
ஆமாம், தெரியாமத்தான் கேக்கறேன், அதுதான் ஆறு முடிஞ்சு போச்சே! பொறவு ஏன் அந்த படத்துல 6 - It is my birthday - அப்டின்னு போட்டுருக்கு?
ஈரோடு அண்ணாச்சி!! எம்புட்டு நாள் ஆச்சு ஒங்களப் பாத்து!! எப்டி இருக்கீய?
(எனக்கு மட்டும் தனியா இந்த "அவனா நீ" யாருன்னு சொல்லுங்கப்பு!).....
ஆஹா - ஆரம்பிச்சுட்டாங்கையா, ஆரம்பிச்சுட்டாங்க! - இங்கே மேலே உள்ள நீல எழுத்துக்களை - கிளிக்கிப் பார்த்தாலே - எவ்வளவோ உண்மைகள் தெரியும் - என்று அறிவு ஜீவிகளுக்குத் தெரியாதா என்ன. சும்மா கும்மி அடிச்சுகிட்டு இருக்காதீங்க -
மானஸ்தன் said...
அடுத்த பதிவா!! நடக்கட்டும்!!!
ஆமாம், தெரியாமத்தான் கேக்கறேன், அதுதான் ஆறு முடிஞ்சு போச்சே! பொறவு ஏன் அந்த படத்துல 6 - It is my birthday - அப்டின்னு போட்டுருக்கு?
ஈரோடு அண்ணாச்சி!! எம்புட்டு நாள் ஆச்சு ஒங்களப் பாத்து!! எப்டி இருக்கீய?
(எனக்கு மட்டும் தனியா இந்த "அவனா நீ" யாருன்னு சொல்லுங்கப்பு!).....
October 27, 2009 2:33 PM
if o got to yr blog i dont see any artilcle. so you are iv !!!what brain i have !!!
Hi Idlyvadai! I wish you all the best.. Keep doing good work..
ஆறாவது வயதில்
அடி எடுத்து வைக்கும்
ஆள் யாரென்று
அறியமுடியாத இட்லிவடைக்கு
ஆயிரமாயிரம் பதிவுகளிட்டு
அணைத்து வளங்களும்பெற்று
ஆயிரம் ஆண்டு வாழ வாழ்த்துகிறேன்.
அன்புடன்,
வயதான வாலிபன்
//ஈரோடு அண்ணாச்சி!! எம்புட்டு நாள் ஆச்சு ஒங்களப் பாத்து!! எப்டி இருக்கீய? //
நீங்கள் குறிப்பிட்டுள்ளது என்னையா!?
//வால்பையன் said...
//ஈரோடு அண்ணாச்சி!! எம்புட்டு நாள் ஆச்சு ஒங்களப் பாத்து!! எப்டி இருக்கீய? //
நீங்கள் குறிப்பிட்டுள்ளது என்னையா!?//
உங்கள் பெயரில் வால்தான் உள்ளது, ஈரோடு இல்லை. அப்போது உங்களைக் கேட்காவிட்டாலும், இப்போது உங்களையும் கேட்டு வைக்கிறேன், மீண்டும் ஒரு முறை.
ஈரோடு அண்ணாச்சி!! எம்புட்டு நாள் ஆச்சு ஒங்களப் பாத்து!! எப்டி இருக்கீய?
:-)
//உங்கள் பெயரில் வால்தான் உள்ளது, ஈரோடு இல்லை. //
:)
நன்றி!
நண்பரே
//ஒரு புதிய முகமூடி ஒன்று //
ஏன் பழைய முகமூடிக்கு என்ன ஆச்சு? அதான் இப்போ எல்லாம் ஆளையே காணுமோ?!
இதைப் பத்தியாவது இவ எழுதலாமே!!
நன்னி ஹை!
எதற்கெடுத்தாலும் விளம்பரம் தேடும் தற்போதைய தமிழ்நாட்டுச்சூழலில், ஆறு வருடங்கள் ‘முகத்தை’க்காட்டாமல் இருப்பதுவே ஒரு பெரிய சாதனை தான்!
பிறந்தநாள் வாழ்த்துகள்!
பாரதி மணி
மானஸ் அண்ணே... வாங்க... எபபடியிருக்கீஹ... எடையில கொஞ்ச காலம் பாக்கவே இல்ல... எங்கிட்டு போயிருந்தீஹ...
இன்றுடன் கலைஞர் கவியரங்கம் 'மாதிரி' பதிவுகள் முடிவடைகிறது.
கலைஞர் கவியரங்கத்தில் நான் மிகவும் இரசித்தது,வாலி கருணாநிதியைப் பார்த்து "வென்று" என்று சொன்னதைத்தான்...
'வென்று' ? - பார்க்க: http://erodenagaraj.blogspot.com/2009/04/blog-post_11.html
Dear IV,
I heard about you last year while I was vacationing in the US. Since then, I have added you to my google reader and always look forward to your posts.
Some how, While I am back in India I am unable to see it regularly. But, while I am a vetti officer ( Gazetted) during my US trips. ( 6 months almost every year) I miss not.
Coming to the point, you are very crisp, unlike some others.Some where you have the likes of Sujatha's genes. There is some fact and some "nakkal" also.Meaning naiyandi.Not the kind of licking nakkal we see most of the people do in Kamal's and kalignar's functions.It is only decency to ta;lk in praise of the Vizha nayagan, but our people seem to go overboard.
By the way, what is a registered reader?
Good Luck and best wishes. Write what you want without fear or favor.
Like gnani does.But dont always take a negative and opposite stand.
Shankar
Now in US
//By the way, what is a registered reader??//
??
// ஆறு வயது ஆனால் எலிமெண்டரி ஸ்கூல் போகும் சமயம் என்று சொல்லுவார்கள்...//
அண்ணா, நிச்சயமா உங்களுக்கு வயது நாற்பதுக்கும் மேல் என்று தெரிகிறது. ஆனால் உங்களுக்கு ஸ்கூலுக்கு போகும் வயதுள்ள பையனோ/பெண்ணோ இல்லை என்றும் தெரிகிறது.
ஆறு வயசில் ஸ்கூல் போவதெல்லாம் போன நூற்றாண்டின் நடுவில்தான்.
இப்பல்லாம் இரண்டரை/மூன்று வயதிலேயே ஸ்கூலில் சேர்த்து விடுகிறார்கள் தெரியுமோ?
Post a Comment