பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, October 26, 2009

நீங்க ஒரு உலகப்பதிவர் இட்லிவடை!

இதோ ஆச்சு இருபத்தேழாம் தேதியோட ஆறு வருஷம். இனி ஆளாளுக்கு, நீங்க சூப்பர், உங்க கடை இட்லி படு சாப்ட், வடை ரொம்ப மொறு மொறுப்பு ன்னு புகழ ஆரம்பிச்சுடுவாங்க. தப்பி தவறி யாராவது எழுத மாட்டேன்னு சொல்லிட்டா, உடனே இவரே அவங்கள மாதிரி தாளிச்சு கொட்டிடுவார். சரி இந்த கொடுமைக்கு எல்லாம் நாமளே புள்ளையார் சுழி போட்டு வைக்கலாம் ன்னு....

இட்லிவடை அபிமானியாக அறியப்படுவது இணையத்தில் அச்சப்பட வேண்டிய விஷயம் என்று சில நண்பர்களால் அறிவுறுத்தப் பட்டேன். இருந்தாலும் டைப் அடிச்ச கை சும்மா இருக்குமா? அச்சம்ன்னு சொன்னதும் ஞாபகம் வருது. 'அச்சமுண்டு அச்சமுண்டு' படத்துக்கு அருண் வைத்யநாதன் கூட இவ்வளவு விளம்பரம் பண்ணி இருக்க மாட்டார். அச்சமுண்டு stills, கேள்வி பதில், CD பரிசுன்னு பின்னிட்டார்.நான் கூட அந்த படம் பாக்குறப்போ, டைட்டில்ல, "Official Advertisement partner - Idlyvadai" இப்டி ஏதாவது கார்டு வருதா ன்னு தேடி தேடி பாத்தேன். அப்டி ஒண்ணையும் காணும். அதான் இப்போல்லாம் "சினிமாக்கள்ல முக்கியமானவங்களை எல்லாம் இருட்டடிப்பு பண்றாங்கன்னு" பொலம்பல் சத்தம் ஜாஸ்தியா கேக்குது கவனிச்சீங்களா?

சினிமா தியேட்டருக்குள்ள ஒரு டப்பா போன் எடுத்துட்டு போனாலே பயங்கரமா செக் பண்றாங்க. இவரு என்னன்னா ரிலீஸ் அன்னைக்கு போய், லைவ் விமர்சனம் எழுதறார். அநேகமா ஒரு லேப்டாப், wireless data card அல்லது குறைந்த பட்சம் ஒரு ஹை-டெக் செல்போன் எடுத்துட்டு போய் இருக்கணும்.
இல்ல சொந்தமா தியேட்டர் எதுவும் வெச்சுருக்கீங்களா இட்லி? எங்களுக்கு எந்திரன் படத்தை live-streaming பண்ண முடியுமா?

சரி அப்போ 'கனகவேல் காக்க' படத்துக்கும் இதே மாதிரி எழுதுவீங்களான்னு கேட்டேன். "மாட்டேன்"ன்னுட்டார். ஒரு கண்ணுல வெண்ணெய் மறு கண்ணுல சுண்ணாம்பா?
இது தெரியாம ஒருத்தர் இவருக்கு ஐந்தாண்டு பதிவும் எழுதி அதோட இவரை மாமி மெஸ்ஸுக்கு லஞ்ச் சாப்பிட வேற கூப்பிட்டார் பாவம்.

இட்லிவடை லிங்க்ல இருந்து கிளிக் பண்ணி, CD ஆர்டர் பண்ணா, கிழக்குல discount தராங்களாம். அவங்க நல்லவங்க. நானும் இவர் கிட்ட சாட்ல சொல்லிப்பாத்தேன். "உங்க கடைலயும் பாதி sales அவங்களை வெச்சு தான் பண்றீங்க, புத்தக விமர்சனம், ஆடியோ CD விமர்சனம், அது மட்டுமில்லாம அங்க இருக்க தலையில் இருந்து வால் வரை எல்லாரையும் சகட்டுமேனிக்கு சாத்தி தான் உங்க கடை நடக்குது. You must pay them some royalty" அப்டின்னு. வழக்கம் போல் smiley போட்டு எஸ்கேப்.

சரி இவர் கொஞ்சம் (கவனிக்கவும், கொஞ்சூண்டு தான்) நல்லா எழுதுறதுனால, கூட எழுதுற சகாக்களை கிண்டல் பண்றார், போனா போகுதுன்னா, "எனக்கு மட்டும் தான் ஹிந்துத்வம் தெரியும், வேற யாராச்சும் ஹிந்துத்வம் பேசினீங்களோ, தொலைச்சுடுவேன் ஜாக்கிரதை" என்கிற ரீதியில் monopoly பண்ணுவது :-( :-(

இவருக்கு என்ன? பதிவுக்கு மேட்டர் இல்லைன்னாலும், ஒரு பதினாறு பேர் கொண்ட விருந்தினர் குழு இருக்கு, எழுதி தர!

எங்களுக்கு எல்லாம் அப்டியா? ஏதோ கெடைச்ச மேட்டரை வெச்சு கேள்வி பதில் தொடர்பதிவு எழுதிட்டு இருந்தோம். உடனே எல்லாருக்கும் கொக்கி காய்ச்சல்ன்னு கெளப்பி விட்டுட்டார். உண்மை என்னன்னா, அந்த தொடர்பதிவுல இவர யாருமே கோர்த்து விடல...அந்த கடுப்பு.

Election வந்தாலும் வந்துச்சு. நம்ம IV ஒரே happening தான்.தொகுதிக்கு ஒரு ஆளைப்பிடிச்சு அலசல், கருத்து கணிப்பு, தேர்தல் அன்னைக்கு லைவ் discussion ன்னு பின்னி பெடலெடுத்தார்.ஆனா பாவம், ரிசல்ட் தான் ஊத்திக்கிச்சு. அட்லீஸ்ட் பாராளுமன்றம் இட்லிவடைக்கு பிடித்த மாதிரி இருக்க முனி தான் எதாவது பண்ணனும்.

Airtel சூப்பர் சிங்கர் finale லைவ் அப்டேட் பண்ணார். சரி நம்ம IVக்கு டிவி பாக்குறது, லைவ் அப்டேட் பண்றது எல்லாம் ரொம்ப பிடிச்சுருக்கேன்னு, "கலைஞர் டிவி" யில் ஒரு பிறந்த நாள் நிகழ்ச்சி வருது, அதை கண்டு களித்து அப்டியே லைவ் அப்டேட் பண்ணுங்கன்னு சொன்னேன். முடியாதுன்னா முடியாது ன்னு சொல்லணும். அதை விட்டுட்டு 'நீங்க உமாக்கு சொந்தமா'னு கேட்டு பிரச்னையை திசை திருப்பிட்டார்.

யானை இறந்தாலும் ஆயிரம் பொன் ன்னு ஒரு பழமொழி இருக்கு. நம்ம இட்லிவடை எதாவது போஸ்ட் போட்டு, அப்றோம் யாராவது திட்றாங்கன்னு அதை தூக்கிட்டாருன்னு வெய்யுங்க, "அது என்ன போஸ்ட் என்ன போஸ்ட்" ன்னு ஊரு முழுக்க பேச்சா இருக்கும்...நல்லா மார்க்கெட்டிங் பண்றீங்க இட்லி!

போன வருஷத்துக்கும் இந்த வருஷத்துக்கும் ஒரே difference தான். கேப்டனை freeயா விட்டுட்டார். 2011இல், நம்பிக்கை போய்டுச்சு போல. இல்ல '734 followers வந்தாச்சு, நாமளே கட்சி ஆரம்பிச்சுடுவோம்'ன்னு நெனைச்சுருக்கலாம். மானஸ்தன், இன்பா, யதிராஜ் மூணு பேரும் முறையே உள்துறை, கல்வி, திருப்பணி மந்திரிகள் ஆனதும் விமானத்துல போவீங்களா, ரயிலா?

அப்பறம் ஒரு நல்ல முன்னேற்றம், spelling mistakes வெகுவாக குறைந்து இருக்கிறது. எனக்கு தெரிஞ்சு nhm, ekalappai யில் எல்லாம் spellcheck இல்லை. ஒரு நல்ல தமிழ் வாத்தியார் அல்லது spellcheck assistant கெடைச்சுருக்கணும்.

ராசிபலன் எழுதும் ராமகிருஷ்ணன் கிட்ட தான் கேக்கணும். 'ஒரு நல்ல மந்திரவாதி தெரிந்தால் சொல்லுங்கள். வெற்றிலையில் மை போட்டு இட்லிவடை யார்ன்னு தெரியுதான்னு பாக்கணும்'.

இது விருதுகள் சீசன். அதனால இட்லிவடையோட ஆறாண்டு நிறைவு கொண்டாட்டத்தை முன்னிட்டு, நானும் அவருக்கு ஒரு விருது குடுக்கலாம்ன்னு இருக்கேன்.
அவருக்கு உலக நாயகனை தான ரொம்ப பிடிக்கும்.So, on the similar lines,இட்லிவடைக்கு 'உலகப்பதிவர்' விருது வழங்குகிறேன்(Sorry Jsri!)
அட, இது உள்குத்து விருது அல்ல.(அண்ணா விருது மாதிரி) ஒரு அக்மார்க் விருது.

பின்குறிப்பு: ஏழாவது ஆண்டிலாவது சமத்தா இருக்க முயற்சி செய்யவும்.
( நன்றி: Mrs.ப்ரியா கதிரவன் )

மானஸ்தன், இன்பா, யதிராஜ் மூணு பேரும் முறையே உள்துறை, கல்வி, திருப்பணி மந்திரிகள் என்றால் இவர் தான் கொள்கை (பரபரப்பு) பரப்பு செயலாளர். எப்போதும் பெண்கள் தான் அந்த பதவிக்கு லாயக்கு :-)

49 Comments:

யதிராஜ சம்பத் குமார் said...

ஆனாலும் எனக்கு அலாட் பண்ணிருக்கற இலாகா கேள்விப்படாததா இருக்கு!! திருப்பணி இலாகா?? :))

Ragavendiran said...

தினமும் எப்படி இட்லி தின்றால் போரடிப்பதில்லையோ அதுபோல் உங்கள் இட்லி வடை பிளாக் படிக்காமல் என்னால் இருக்க இயலவில்லை
அன்புடன்
ராகவேந்திரன் தம்மம்பட்டி

Anonymous said...

This is not acceptable, i want Telecom - Sankaran

R.Gopi said...

//இதோ ஆச்சு இருபத்தேழாம் தேதியோட ஆறு வருஷம்.//

மொதல்ல இதுக்கு பிடிங்கோ ஒரு பூங்கொத்து....

இலாகா ஒதுக்கீட்டில் ஏதேனும் உள்குத்து உள்ளதோ??

கௌதமன் சார் பேர் காணுமே...

R.Gopi said...

//அவருக்கு உலக நாயகனை தான ரொம்ப பிடிக்கும்.So, on the similar lines,இட்லிவடைக்கு 'உலகப்பதிவர்' விருது வழங்குகிறேன்(Sorry Jsri!)
அட, இது உள்குத்து விருது அல்ல.(அண்ணா விருது மாதிரி) ஒரு அக்மார்க் விருது.//

அட‌... த‌லீவா... நீங்க‌ ஒல‌க‌ நாய‌க‌ன் ர‌சிக‌ரா?? சொல்ல‌வே இல்ல‌...

Mohan Kumar said...

ஆகா ..சிக்ஸர் அடிச்சிட்டீங்களா.. வாழ்த்துக்கள்.. தினமும் இட்லி சாப்பிட்டால் போர் அடிக்கும். ஆனால் தினம் இட்லி வடை படிச்சா போர் அடிக்கலை. வாழ்க. இட்லி வடை.

மோகன் குமார்

பேராண்மை சினிமா விமர்சனம் படிக்க: Please visit our blog at : http://veeduthirumbal.blogspot.com/

Balu said...

/***R.Gopi said...
//அவருக்கு உலக நாயகனை தான ரொம்ப பிடிக்கும்.So, on the similar lines,இட்லிவடைக்கு 'உலகப்பதிவர்' விருது வழங்குகிறேன்(Sorry Jsri!)
அட, இது உள்குத்து விருது அல்ல.(அண்ணா விருது மாதிரி) ஒரு அக்மார்க் விருது.//

அட‌... த‌லீவா... நீங்க‌ ஒல‌க‌ நாய‌க‌ன் ர‌சிக‌ரா?? சொல்ல‌வே இல்ல‌...****/


அப்பாடா!! இனிமேல் கோபி கோபித்துக்கொண்டு பின்னூட்டம் போடாமல் இருந்தால் நல்லது.

படுக்காளி said...

சூப்பர் இட்லி வடை.

மிக பிரபலமான வலைப்பக்கம்.
வலை உலகின் ராஜா.
எல்லோராலும் ரசிக்கப்பட்டு, விருப்பப்பட்டு, படிக்கப்பட்டு, பரிமாறப்படுவது இட்லி வடை.

வேறு ஏதாவது போட்டி வலை தளம் தொடங்கினால் 'புல் மீல்ஸ்' 'பிரியாணி தயிர்பச்சடி' எனவும் தொடங்கலாம்.

அரசியல், சினிமா, பத்திரிக்கை, என ரவுண்ட் கட்டி அடிக்கும் தளம்.

எனக்கு பிடித்தது

1. நிகழ்வுகளை சுட சுட பரிமாறுவது
2. சுருங்கச் சொல்லி தமாஷாய் சொல்லுவது
3. ஏறக்குறைய நடுநிலை
4. பின்னூட்டம் பார்த்து போஸ்ட் தூக்குவது/ திருத்துவது


மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

இரண்டு இட்லி இரண்டு வடை தான் சைட்ல இருக்கு, உலகப் பதிவர்ன்னு விருது கொடுக்கும் போது அஞ்சு இட்லியும் இரண்டி வடையுமா நிறைவா கொடுத்துட்டாங்க மேடம்.

மானஸ்தன் said...

"ஆறு ஆண்டுகள் அருமையாகக் கடை நடத்தி ஏழாம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் இட்லிவடைக்கு நல்வாழ்த்துகள். தொடரட்டும் உங்கள் நற்பணி".

உள்துறை பதவிக்கு பரிந்துரை செய்த திருமதி பிரியா கதிரவனுக்கும், அதை வழங்கிய இட்லிவடைக்கும் நன்றி. இது "காபினெட்" ரேங்க்தானே?

என்னதான் இருந்தாலும், உள்ளுக்குள்ள உள்(குத்துத்)துறை வழங்கியதன் உள்குத்து என்ன என்று கொஞ்சம் ரொம்பவே உதறலாகத்தான் இருக்கு.

:-)

R.Gopi said...

//அப்பாடா!! இனிமேல் கோபி கோபித்துக்கொண்டு பின்னூட்டம் போடாமல் இருந்தால் நல்லது.//

நண்பர் பாலு அவர்களே... உங்களுக்கு ஏன் இந்த கொலவெறி....??

(எனக்கு "திரிஷாவும் வேணும், "பெர்னாட்ஷாவும்" வேண்டும்...)

மானஸ்தன் said...

ஆறு ஆண்டு நிறைவை கொண்டாடும் விதமாக இட்லிவடை ஏதாவது போட்டி வைத்து, சிறப்புப் பரிசு(களு)ம் அளிக்க சிபாரிசு செய்கிறேன்.

:-)

ஸ்ரீராம். said...

வாழ்த்துக்கள்

Balu said...

/****3. ஏறக்குறைய நடுநிலை***/

பச்சை பொய்.

Anonymous said...

யாரோ இப்படி எழுதியிருந்தார்கள் முந்தைய பதிவில்.எழுதியவர் சிறிய தவறு செய்துள்ளார் இட்லிவடை போல, அது போல உவம உருபு is missing after சாருநிவேதிதா.

சாருநிவேதிதா போல சங்கரமடம், கமலஹாசன், இளையராஜா இவர்களைப் பற்றியெல்லாம் எழுதினால் ஹிட்ஸ் கூடும் என்பது இட்லிவடைக்கு நன்றாகத் தெரியும் என்பதுதான் எனக்கு எழுந்த உணர்வு. நடத்துங்கள்!Original Text
துன்பா said...
//இதை படித்தவுடன்..உங்களுக்கு தோன்றிய உணர்வு என்ன என்பதை பின்னூட்டத்தில் எழுதுங்கள்
//

சாருநிவேதிதா, சங்கரமடம், கமலஹாசன், இளையராஜா இவர்களைப் பற்றியெல்லாம் எழுதினால் ஹிட்ஸ் கூடும் என்பது இட்லிவடைக்கு நன்றாகத் தெரியும் என்பதுதான் எனக்கு எழுந்த உணர்வு. நடத்துங்கள்!

சீனு said...

ஏழாம் ஆண்டு வாழ்த்துக்கள். (ஏழரை முடிய இன்னும் 6 மாசம் இருக்குதா?)

ஆனா ஒன்னு. எவ்ளோ திட்டினாலும் காது கொடுத்து கேக்கறீங்க பாருங்க. அதுக்கே உங்களுக்கு ஒரு சபாஷ்.

மற்றபடி, நானும் இ.வ.வின் வாசகன்...

srinivasan said...

Idlyvadai

happy hunting!

Rajagopalan,Dubai

படுக்காளி said...

பாலு !!!!

பொய்யில் பச்சை என்று சொல்லியிருக்கிறீர்களே!!!

இட்லி வடை மஞ்சள் கமெண்ட் தானே போடுவார்.

அப்போ மஞ்சப் பொய் என சொல்லலாமா....

பாவ‌ம் இ.வ. நான் வேர, ஏற‌க்குறைய‌ ந‌டு நிலை என‌ உள்குத்து விட்டுட்டேன். எவ்வளவு அடிச்சாலும் தாங்குறார்... ரொம்ப நல்லவரு

R.Gopi said...

//மானஸ்தன் said...
ஆறு ஆண்டு நிறைவை கொண்டாடும் விதமாக இட்லிவடை ஏதாவது போட்டி வைத்து, சிறப்புப் பரிசு(களு)ம் அளிக்க சிபாரிசு செய்கிறேன்.

:-)//

அண்ண‌ன் மான‌ஸ்த‌ன் சொன்ன விஷ‌ய‌த்தை ப‌ற்றி பேசி முடிவெடுக்க‌ பொதுக்குழு கூடுமா??

Sriram said...

Anonymous said...
யாரோ இப்படி எழுதியிருந்தார்கள் முந்தைய பதிவில்.எழுதியவர் சிறிய தவறு செய்துள்ளார் இட்லிவடை போல, அது போல உவம உருபு is missing after சாருநிவேதிதா.**/

Can anybody interpret this? I didn't understand what he tries to convey.

Anonymous said...

இந்த ஆறு வருஷ வெற்றிக்கு காரணம் நாட்ல வேல வெட்டி இல்லாம இந்த மாதிரி வெட்டியா பின்னூட்டம் போடற நாங்கதான்!!!!

kggouthaman said...

ஆறு முடித்து ஏழுக்கு ஏற்றம் பெற்றிருக்கும் இட்லி வடைக்கு என் அன்பான வாழ்த்துக்கள்.
வாழ்க, வளர்க!
வலைப் பதிவு என்றால் என்ன என்று நான் விருப்ப ஓய்வு பெற்ற நாளில் எனக்குத் தெரியாது. எப்படி, என்றைக்கு நான் இட்லி வடை வலையில் விழுந்தேன் என்பதும் மறந்துவிட்டது. என்றைக்கு முதன் முதலில் பார்த்துப் படித்தேனோ - அன்றிலிருந்து இட்லி வடை ருசிகன் ஆகிவிட்டேன். என்னைத் தெரிந்தவர்களுக்கும், என் யாஹூ குழுமங்கள் - எல்லாவற்றிற்கும் சிபாரிசு செய்து, அவர்களையும் படிக்கச் செய்து, சந்தோஷப் பட்டுக் கொண்டிருக்கிறேன். எனக்கும் வலைப் பதிவு பதிய ஆர்வம்
உண்டுபண்ணிய இட்லி வடையில் நான் இரசிப்பது. இ வ வின் பன்முகம், சூடு, சுவை, நகைச் சுவை மற்றும் புதிய யுக்திகள்.

Balu said...

/**** R.Gopi said...
//அப்பாடா!! இனிமேல் கோபி கோபித்துக்கொண்டு பின்னூட்டம் போடாமல் இருந்தால் நல்லது.//

நண்பர் பாலு அவர்களே... உங்களுக்கு ஏன் இந்த கொலவெறி....??****/

பதில் : சில நேரங்களில் சில மனிதர்கள், பதில் உங்களுக்கு புரிகிறதோ இல்லையோ உங்கள் பழைய பின்னூட்டங்களை படித்தவர்களுக்கு தெளிவாக புரியும்.

ஊடகன் said...

ஆறாம் ஆண்டு விழாவிற்கு வாழ்த்துக்கள்..........
நன்று தொடருங்கள்...........

vedanarayanan said...

நான் ஒரு புதிய வாசகன். So எனக்கு இந்த blog -in history தெரியாது. But definitely interesting blog. Bias இல்லாதது தான் ஒரு important point .
Preaching கிடையாது. All comments are allowed that is psycological point for followers to continue coming. ஏகப்பட்டது படிப்பீர் and வாங்குவீர் போலும். Thank you and best wishes .

Balu said...

/*** vedanarayanan said...
Bias இல்லாதது தான் ஒரு important point .
Preaching கிடையாது. All comments are allowed that is psycological point for followers to continue coming. ***/

ஐயா சாமி, இது எதுவுமே உண்மை கிடையாது. அனுபவத்தில் சொல்கிறேன், கெட்ட வார்த்தைகளை கூட அனுமதிப்பார் இட்லி ஆனால் ஒரு சிலவற்றை reject செய்து விடுவார், அது இட்லிக்கே வெளிச்சம்!!!, நான் சொல்வது யாருக்கு புரிகிறதோ இல்லை இட்லிக்கு நன்றாக புரியும்.

Anonymous said...

கலைஞருக்கு அண்ணா விருது எதற்கு என்று பட்டி மன்றம் வாலி தலைமையில் நடந்தது போல, மானஸ்தானை நடுவராக போட்டு இன்ன பிறரை ஜெகத்ராட்சகன், ராசா, வைரமுத்து போல பேச சொல்லி இல்லை இல்லை புகழ சொல்லி கடைசியில் இட்லி தான் சிறந்த வலை பதிவர் என்ற பட்டத்தை உறுதி செய்து கொள்வதை நினைத்தால் வயிறு வலிக்க சிரிப்பு வருகிறது.நீங்கள் யாரை திட்டுகிறீர்களோ நீங்களும் அப்படியே!!!

jaisankar jaganathan said...

//நீங்கள் யாரை திட்டுகிறீர்களோ நீங்களும் அப்படியே!!!
/
repeataiiii

R.Gopi said...

//பதில் : சில நேரங்களில் சில மனிதர்கள், பதில் உங்களுக்கு புரிகிறதோ இல்லையோ உங்கள் பழைய பின்னூட்டங்களை படித்தவர்களுக்கு தெளிவாக புரியும்.//

பாலு சார்... ஒருத்த‌ரால‌ எல்லாரையும் திருப்தி ப‌டுத்த‌ முடியாது...

நீங்க‌ ஒழிக‌ன்னு சொல்ற‌ அள‌வுக்கு நான் அவ்ளோ கெட்ட‌வ‌னோ, இல்ல "வாழ்க‌"ன்னு சொல்லுங்க‌ன்னு சொல்ற‌துக்கு அவ்ளோ ந‌ல்ல‌வ‌னோ இல்ல‌....

நானும் உங்க‌ளை போல‌
(பாலுவை போல‌), ரேஷ‌ன் க‌டை க்யூவில‌ ச‌ர்க்க‌ரை வாங்க‌ கால் க‌டுக்க‌ நிற்கும் ஒரு ச‌ராச‌ரிதேன்... என்ன‌ நீங்க‌, என‌க்கு கொஞ்ச‌ம் முன்னாடி நிப்பீங்க‌... நான், க்யூவுல‌ க‌டைசில‌ நிற்பேன்...அவ்ளோதான்...

Balu said...

/***பாலு சார்... ஒருத்த‌ரால‌ எல்லாரையும் திருப்தி ப‌டுத்த‌ முடியாது...***/

அப்பாடா இப்பவாது புரிந்து கொண்டீர்களே!!!

Vikram said...

IV,
vaalthukkal - thodarattum unga narpanni ;-)

By the way - kuppa thotti vechi romba naal aagudhe - thotti stock illaya or thotti vekkara allavukku naatulla onnum nadakalaiya?

appuram - pudiya "cabinet" mandirigallukku nalvaravu - edavadhu 100 naal thittam irruka?

Vikram..

ma_mba said...

இன்றைக்குத்தான் இந்த வலைபதிவு காண கிடைத்தது. உண்மையில் ஒரு நல்ல அரட்டை கட்சேரியில் உட்கார்ந்த சுகம் எனக்கு! உள்ளே போய் படித்து பார்த்து என் பதிவையும் பதிவு செய்கிறேன்.

செந்தழல் ரவி said...

வாழ்த்துக்கள் இட்லிவடை !

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

வாழ்த்துக்கள் அண்ணே.. இந்த ஆறு அறுபதாகட்டும்..!

வலையுலகம் இருக்கும்வரையிலும் இட்லிவடையும் இருக்க வேண்டும்..!

Jagannathan said...

Happy Anniversary! I have been following this blogsite for quite some time and have recommended it to my friends as well. It saves time from reading many mags. / papers and also gives unpublished info. like full reportage of Vali's jalra kavithai on MK and the comments on it etc. I am enjoying. Thanks - R. Jagannathan

தங்க முகுந்தன் said...

6வருடம் ஒரு பதிவைத் தொடர்ந்து மிகச் சிறப்பாக பொடி - சாம்பார் - சட்னி - சம்பல் என இந்த இட்லி வடை கடையைக் கொண்டு நடத்தியதற்கு 750ஆவது நபராக உங்கள் பதிவுக்கு(கடைக்கு) வரும் நான் மனதார வாழ்த்துகிறேன்!
தொடர்க உம் தமிழ்ப்பணி!

pachhamilaka said...

இன்று போல் என்றும் ருசிமாராமல் இருக்க இட்லி வடைக்கு வாழ்த்துக்கள்

Kameswara Rao said...

IV

Happy birthday. Continue your good work.. for me I came to know about IV through one of my friends blog (Arun) after that I am a regular (may be I think) got to know a lot of people ... Maanasthan, yathiraj sampath kumar and so on. still remember manasthan's correction on "En jayalalitha" and cos I am an IV reader I get mails from frieds about blog updates and so on... wonderful experience of being a regular reader and would cherish it also.

Kamesh
Gaborone
Botswana

Baski said...

I am wishing many many happy returns to IdlyVadai Blog...

I am just following him for a year... I like this.. all the best..

The best qualities I would say.

- unbiased reviews(?)
- Muni Letter
- Election Reviews - Constituency-wise
- Your (un)official writers/commenters (Inba, Uthiraj, erode nagaraj, gothaman, Manasthan)

Needs Improvement (in my view?)
- sometimes you vanish. (write more good stuff)
- Movie reviews.

Anonymous said...

Idlyvadai oru group

Endha postukku idlayvadaigale vazthukkal idlyvadainnu comment pottukuvanga...pottuerukkanga...

Comment podara engalakku velai vetti ellai than anal engalai avalo muttalla assume pannikka vendam...

neway this is the best tamil blog among the crowd. Keep up the good show..Entertain us regularly..Ethuvum samuga sevai than..Vazthukkal

sundaikai said...

என்றும் போல் ஊசாமல், அரைச்ச மாவையே அரைக்காமல் பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன்.

SAN said...

HI IV,
Best Wishes for a long journey in the blog world.
Happy to be a follower of Idly Vadai.

ராஜசுப்ரமணியன் said...

ஆறு முடிந்து ஏழு ஆரம்பிக்கும் இந்நன்னாளில், எனது பாராட்டுக்கள். மேன்மேலும் வளர நிறைய வாழ்த்துக்கள்.

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

வாழ்த்துகள் இட்லிவடை. ஒரு ஜனரஞ்சகமான பதிவுலகம் என்றால் அது இட்லிவடைதான். ஆறு நூறாக என் மனமார்ந்த ஆசிகள்!

sreeja said...

தினமும் வீட்டில் இட்லி-யை சாப்பிட பிடிக்காதெனினும் - இந்த இட்லிவடை-யை தினமும் பார்க்காமல் தூங்குவதில்லை. அப்படி ஒரு அடிக்ட் ஆகிவிட்டது. மேலும் பல காலம் தழைத்தோங்கி எங்களை மகிழ்விக்க - உங்களை வாழ்த்துகிறேன்.

Erode Nagaraj... said...

பதிவுலக பெருசாய்,குறில்-நி அல்ல, நீ... வாரணம் வாரணம்...
(பல கால்களை எப்போதும் போல)

ஏழாவது மனிதனாய் எழுந்தருள, என்றும் ஏளனம் ஏளனம்..

R.Gopi said...

//Erode Nagaraj... said...
பதிவுலக பெருசாய்,குறில்-நி அல்ல, நீ... வாரணம் வாரணம்...
(பல கால்களை எப்போதும் போல)

ஏழாவது மனிதனாய் எழுந்தருள, என்றும் ஏளனம் ஏளனம்..//

*********

நாகு அண்ணா...வார்த்தையால‌ க‌ட்டிட்டார் தோர‌ண‌ம்...தோர‌ண‌ம்....

Anonymous said...

Congrats Idly! I'm a big fan of you..

kggouthaman said...

உலக நாயகனே
உளுந்து அரிசியனே
இட்லி வடையே
இன்ப அதிர்ச்சியரே
மானம் உள்ளவரே
மற்றும் உள்ள பெரியோரே
மங்காத புகழுடன்
நீங்காத நகையுடனும்
நீங்க வாழணும் பல்லாண்டு!

Ganesh said...

Happy Birthday IV

Congrats keep up the good work.
Yours' is a must read blog for Tamil community.