பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, October 23, 2009

:-)

யார் கண் பட்டதோ தெரியவில்லை, எனது கம்ப்யூட்டருக்கு இரண்டு நாளா உடம்பு சரி இல்லை. பெருங்குளம் இராமகிருஷ்ணன் "இவ்வளவு நாளாக இருந்த வேலைப்பளு நீங்கும்" என்று என் ராசிக்கு கணித்த போது அதை நம்பவில்லை. ஆனால் இப்போது நம்புகிறேன்.


சரி விஷயம் இது தான், என் கம்ப்யூட்டருக்கு கொஞ்சம் பெரிய லெவல் வைத்தியம் செய்யவேண்டி உள்ளது. அதனால், அது சரி ஆகும் வரை கடையில் வியாபாரம் கொஞ்சம் கம்மியாகத்தான் இருக்கும். சந்தோஷப்பட வேண்டாம், விரைவில் உங்களை சந்திக்கிறேன். வேலை இல்லாதவர்கள், கமெண்ட் வந்திருக்கா, போஸ்ட் வந்திருக்கா என்று அடிக்கடி வந்து பார்த்துவிட்டு போங்க.

தமிழ்நாட்டில் உள்ள ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்று விளம்பரம் செய்கிறார்கள். தமிழ் வலைப்பதிவு வைத்திருப்பவர்கள் இதில் சேர்ந்து, பயன் பெறலாம். இட்லிவடையையும் இந்த திட்டத்தில் சேர்க்க முடிவு செய்துவிட்டேன்.

தொடர்ந்து ஆதரவு தரும் இட்லிவடையின் வாசகர்களுக்கும், மெயில் மற்றும் சாட் மூலம் விசாரித்த நல்ல உள்ளங்களுக்கும் நன்றி. ( என் பெருமையை பின்ன எப்படி சொல்லுவது )

படம்: இன்றைய தேதியிட்ட ஹிந்து நாளிதழில் இடம்பெற்றுள்ள தமிழக அரசின் காப்பீட்டுத் திட்டம் பற்றிய விளம்பரம் இது! திட்டம் பரவலாக நல்ல திட்டம் என்று அறியப்படுகிறது. ஆயினும் விளம்பர வாசகங்கள் பகுத்தறிவின் வளர்ச்சியை எண்ணி வியக்க வைக்கிறது.

காலம் வீசும் கயிற்றைத் "தடுக்கும்" கலைஞரின் காப்பீட்டுத் திட்டம்.

கலைஞர் தமிழகவாசிகளுக்கு சாகாவரம் ஏதும் அளிக்கப் போகிறாரா?? எப்படித் தடுப்பார் என்று விவரமறிந்தவர்கள் கூறலாம். இந்த திட்டம் முன்பே இருந்திருந்தால் பலர் கலைஞர் கனவில் வராமல் தடுத்திருக்கலாம்.

முடிவாக, ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்ற வாசகம்!

பகுத்தறிவே - RIP !

அன்புடன்
இட்லிவடை


மஞ்சள் பிட்: இந்த முறை இட்லிவடைக்கு வேலை வைக்கவில்லை கலைஞர். விளம்பரப் படத்தில் ஹைலைட்....யமன் பாசக்கயிற்றை வீசுவதை "மஞ்சள் துண்டு" அணிந்த கையொன்று கேடயத்தைக் கொண்டு தடுக்கிறது. :)) சின்ன மஞ்சள் பிட் என்றாலும் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

படம், மற்றும் தகவல் உதவி: யதிராஜ சம்பத் குமார்

17 Comments:

ஈ ரா said...
This comment has been removed by a blog administrator.
manju said...

Rendu naala post kaanome, idlyvadaiye thedi auto vandhirukkomo nu ninaichen. IV thappithu vittaar.

ராஜசுப்ரமணியன் said...

இன்று காலை பேப்பரில் இந்த விளம்பரத்தைப் பார்த்து நானும் சிரித்து விட்டேன்; பகுத்தறிவு பகலவர்களுக்கு காலன், பாசக்கயிறு, எருமை வாகனம், மார்க்கண்டேயன் புராணம் ஆகியவற்றில் நம்பிக்கை வந்து விட்டது போலிருக்கிறதே ?

23-10-2009

kggouthaman said...

// வேலை இல்லாதவர்கள், கமெண்ட் வந்திருக்கா, போஸ்ட் வந்திருக்கா என்று அடிக்கடி வந்து பார்த்துவிட்டு போங்க//
தேவைதானா எங்களுக்கு இந்த 'வேலை இல்லாதவன்' நையாண்டி?

kggouthaman said...

காலம் --- ? காலன்?

Anonymous said...

:)

seetha said...

விகடனில் , திரு மு கா வின் ,இலங்க்கயை பற்றிய அறிக்கை படித்தீர்களா

டகிள் பாட்சா said...

கலைஞர் காப்பீட்டு திட்டம் நம்ம மத்திய அமைச்சர் ராசாவையாவது காப்பாத்துமா?

Anonymous said...

Your pun(ch) about Manjal Thundu
trying to conquer Kaalam(n) is
audaciously apt and stingingly superb.
Ennay Manjal Mahimai!!!!!

Anonymous said...

I too was disappointed for being
unable to access IV. Hope that the
trouble is being sorted out and that IV will return with renewed vigour.

SAN said...

HI IV,
The following is the news item which appeared in today's pioneer new paper.

FRONT PAGE | Saturday, October 24, 2009 | Email | Print |


Sonia refuses to meet Kanimozhi

PNS | New Delhi

DMK patriarch Karunanidhi’s daughter Kanimozhi was denied an appointment to meet Congress chief Sonia Gandhi on Friday. It is widely believed that Kanimozhi tried to meet the Congress president to appeal on behalf of Telecom Minister A Raja, who is under attack following CBI raids over 2G spectrum allotments.

According to top DMK and Congress functionaries, Kanimozhi sought a separate appointment with Sonia on Friday evening, soon after a delegation of the Congress-DMK MPs from Tamil Nadu had met the Congress chief. “Kanimozhi sought a short separate meeting with Sonia after our meeting. She was also a member in the delegation which met

PM in the morning,” a Congress MP from Tamil Nadu said.

“But Soniaji was upset after Raja’s attempt to drag the Prime Minister into the spectrum controversy. I think that might be the reason a separate meeting was not allowed. So Kanimozhi withdrew from our delegation and left for Chennai early,” he added. The delegation, minus Kanimozhi, met Sonia at 7 pm. Telecom Minister Raja also left for Chennai in the evening.

ஈ ரா said...

நான் நையாண்டிக்காக அந்த பின்னூட்டமிடவில்லை...உண்மையிலேயே ஒரு நல்ல திட்டத்தை செயல்படுத்தியதால் லாஜிகலாக அப்படி இருந்துஇருக்கலாம் என்று எழுதி இருந்தேன்..

இ.வ.க்குஎனது வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறேன்...

Anonymous said...

60 lakh families- 4 per family-2.4 crore-more than 33% of population of tamil nadu.just like bogus ration cards there may be bogus beneficiaries in this also.Or perhaps crorepatis are also covered by this.IV why dont you
apply and get some benefits from this :).

Anonymous said...

This is a good scheme. Who is not advertising or which politian in india is not tyring to get fame. do you think people do not know all these (50% at least who vote). Name 1 politian who is following his said principles in real life. The scheme is good. While ridiculing the ad you should have atleast added a line that whatever the scheme will help some people with their lives. The line need not be in yellow colour it could be in any colour.

IdlyVadai said...

//நான் நையாண்டிக்காக அந்த பின்னூட்டமிடவில்லை...உண்மையிலேயே ஒரு நல்ல திட்டத்தை செயல்படுத்தியதால் லாஜிகலாக அப்படி இருந்துஇருக்கலாம் என்று எழுதி இருந்தேன்..

இ.வ.க்குஎனது வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறேன்...//

எனக்கு புரிகிறது ஆனால் மற்றவர்கள் அதை தப்பாக எடுத்துக்கொள்ளக் கூடும் என்று அந்த பின்னூட்டதை எடுத்துவிட்டேன். நீங்க வருத்தப்பட தேவையில்லை. நன்றி

சுவாசிகா said...

//வேலை இல்லாதவர்கள், கமெண்ட் வந்திருக்கா, போஸ்ட் வந்திருக்கா என்று அடிக்கடி வந்து பார்த்துவிட்டு போங்க.//

நீங்க சீரியஸா சொன்னீங்களா, காமெடிக்காக சொன்னீங்களான்னு தெரியல..ஆனா உங்க ரீடர்ஸ இப்படி நக்கலடிக்கிறது எனக்கு சரியா படல..

அன்புடன்,
சுவாசிகா
http://ksaw.me

R.Gopi said...

//ராஜசுப்ரமணியன் said...
இன்று காலை பேப்பரில் இந்த விளம்பரத்தைப் பார்த்து நானும் சிரித்து விட்டேன்; பகுத்தறிவு பகலவர்களுக்கு காலன், பாசக்கயிறு, எருமை வாகனம், மார்க்கண்டேயன் புராணம் ஆகியவற்றில் நம்பிக்கை வந்து விட்டது போலிருக்கிறதே ?//

அடுத்த‌தாக‌, க‌ருட‌ புராண‌ம் ப‌டிப்ப‌தாக கேள்வி...