பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, October 19, 2009

கும்ப ராசி பலன்கள்

கும்பம் இராசிக்குள்ள சனிப்பெயர்ச்சி பொது பலன்கள்

உங்களைப் பற்றி:

எதிலும் மனசாட்சிக்கு விரோதமான காரியத்தை செய்யாத கும்ப இராசி வாசகர்களே, நீங்கள் குடும்பபெருமையைக் காப்பவர்கள். பெரியவர்களை மதிப்பவர்கள். சமுதாய மாற்றத்திற்கு பாடுபடுபவர்கள்.

எப்படி இருக்கப் போகிறது இந்த சனிப் பெயர்ச்சி:

இது வரை ஸப்தம ஸ்தானத்தில் இருந்த சனீஸ்வரன் இனி அஷ்டமஸ்தானத்தில் இருந்து வரும் 21/2 ஆண்டுகளுக்கு என்னென்னெ பலன்கள் தரப்போகிறார் என்பதைப் பார்ப்போம்.

இதுவரை ஏழ்மையும், ஏமாற்றமும் தந்துவந்தார். எதை எடுத்தாலும் காரியத்தடை, உடல்நிலை குறைபாடு என கடந்த 2 1/2 வருட காலமாக அப்பப்பா சொல்லமுடியாத வருத்தங்கள். இனி உடல்நிலையில் சிறந்த முன்னேற்றம் இருக்கும். சின்ன சின்ன கண்டங்களிலிருந்து தப்பித்து இருப்பீர்கள். எதையுமே முழுதாக அனுபவிக்க முடியாமல் ஏதாவது தடை இருந்து வந்திருக்கும். அது இனி மாறும். வாழ்க்கைத்துணையுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். நண்பர்கள் மற்றும் பங்குதாரர்களுடன் இருந்த மனக்கசப்புகளும் நீங்கும். தடைபட்டிருந்த கல்வி இனி சிறப்புறும். தாய் மற்றும் தாய் வழி உறவினர்களுடன் இருந்த மனக்கசப்பு நீங்கி உற்சாகம் துளிர்விடும். எவருக்காகவும் பரிந்து பேசுவதோ ஜாமின் கையெழுத்து போடுவதோ கூடவே கூடாது. அறிமுகம் இல்லாதவர்களிடம் பழக்கம் வைக்கும் போது கவனமாக இருக்கவும். அவர்களை நம்பி எந்த பெரிய முடிவும் எடுக்க கூடாது. கணவன் மனைவிக்குள் அனுசரித்து போகவும். பணவரவு அதிகரிக்கும். வீண் செலவுகளை செய்யாதீர்கள். ஆடம்பர பொருட்கள் வாங்குவதை சில நாட்கள் தள்ளி போடவும். பொது இடத்தில் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்யும் போது ஜாக்கிரதையாக இருக்கவும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. நீர்நிலைகளில் செல்லும்போதும் கவனம் தேவை. எதிலும் யோசித்து செயல்படவும். நீங்கள் நல்லது சொன்னாலும், செய்தாலும் விமர்சனம் செய்யப்படலாம். கவனம். நீங்கள் யாருக்கெல்லாம் நல்லது செய்தீர்களோ அவர்களில் சிலர் அதையெல்லாம் மறந்து விட்டு சண்டையிடலாம். முடிந்தவரை ஆன்மீகப்பாதையில் செல்லவும். தியானம் மற்றும் யோகாசனம் செய்யவும். அவற்றையும் பொறுமையாக கையாளவும். யாரிடமும் அளவாகப் பழகுங்கள். ஆடை அணிகலன்கள் சேரும். விஐபிக்களின் நட்பு கிடைக்கும். அரசாங்க அனுகூல்யம் கிடைக்கும். சிலர் உங்களை பணம் கேட்டு தொந்தரவு செய்யலாம். கடன் வாங்குவதையோ மற்றும் கொடுப்பதையோ தவிர்க்கவும். வெளிநாட்டு தொடர்புகள் அதிகரிக்கும். வெளிநாடு மற்றும் வெளியூர் செல்ல நேரிடலாம். குடும்ப ரகசியங்களை வெளியில் விவாதிக்க வேண்டாம். வாழ்க்கைத்துணையை சந்தேகப்படும் அளவுக்கு உங்களது நடவடிக்கைகள் இருக்காவண்ணம் பார்த்துக் கொள்ளுங்கள். குல தெயவபிரார்த்தனையை கைவிடாதீர்கள். வழக்கு வியாஜ்ஜியங்களில் பல பேரிடம் ஆலோசனைகளை கேளுங்கள். அதன்பின் முடிவெடுங்கள். பிள்ளைகள் மற்றும் உடன்பிறந்தோரின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும். வியாபாரத்தில் அதிரடியாக புதிய வியூகங்களை அமைப்பீர்கள். கொடுக்கல் வாங்கலில் சுமூக உறவு இருக்கும். உண்மையான நன்பர்களை அடையாளம் கண்டு கொள்வீர்கள். மாணவமணிகள் படிப்பில் மிகுந்த கவனம் செலுத்தவும். நல்ல நண்பர்களிடம் நட்பு வையுங்கள். பெற்றோர் சொல்வதை தயவுசெய்து கேளுங்கள். முன்கோபம் கூடவே கூடாது. கலைஞ்ர்கள் பரபரப்பாக இருப்பார்கள். அந்நிய வாய்ப்புகள் தேடிவரும். பொதுவாக கடந்த கால இழப்புகளிலிருந்து மீண்டு புதிய தன்னம்பிக்கையும், துணிவும் தருவதாககைந்தபெயர்ச்சி அமைந்திருக்கும்.

நக்ஷத்திர ரீதியான பலன்கள்:

அவிட்டம் ,3,4ம் பாதம் : சிறுசிறு உஷ்ண சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரலாம். தூக்கத்தைக் கட்டுப்படுத்தாதீர்கள். எந்த பிரச்சனையாக இருந்தாலும் உடனே மருத்துவரை அணுகவும். குடுமப வாழ்வில் பொறுமை தேவை. முருகனை வணங்குங்கள், முன்னின்று அனைத்தையும் நடத்துவான்.

ஸதயம் : இடையூறுகள் எடுத்த காரியத்தில் உறுதியாக இருங்கள். வீண் பேச்சு கூடவே கூடாது. வியாபார ரீதியாக போட்டிகள் வரலாம். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரிக்கும். வம்பு வழக்கு கூடவே கூடாது. துர்க்கையை வணங்கினால் எதிலும் சக்ஸஸ்தான்.

பூரட்டாதி 1,2,3 ம் பாதம் : பிள்ளைகளால் தொந்தரவு நேரலாம். வெளிவட்டாரபழக்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும். மனக்குழப்பம் ஏற்பட்டால் அருகிலிருக்கும் கோவிலுக்கு சென்று வரவும். வியாழபகவானை மனதில் நினைத்துக் கொண்டேஇருந்தால் மனதிடம் அதிகரிக்கும்.

குறிப்பு: இது மாணவ மணிகளுக்கு: ஸ்ரீ ஸரஸ்வதி ஸூக்தம் படிப்பது நன்மையைத்தரும்.

லக்ன ரீதியான பலன்கள்:

லக்னம் இராசி பலன்கள் பரிகாரம்
மேஷம் கும்பம் 60/100 சஷ்டி கவசம் படிப்பது
ரிஷபம் கும்பம் 55/100 ஸ்ரீமஹால்க்ஷ்மி அஷ்டகம் சொல்வது
மிதுனம் கும்பம் 55/100 விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்வது
கடகம் கும்பம் 70/100 ஸ்ரீசௌந்தர்யலஹரி சொல்வது
ஸிம்ஹம் கும்பம் 60/100 ஆதித்யஹ்ருதயம், மஹாலக்ஷிமி காயத்ரி, நாராயண காயத்ரி, நவக்ரஹ காயத்ரி சொல்வது
கன்னி கும்பம் 50/100 விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்வது, முடிந்த வரை இராம நாமம் சொல்வது, மகான்களை வழிபடவும்
துலாம் கும்பம் 55/100 நவக்ரஹ ஸூக்தம் சொல்வது, ஸ்ரீஸூக்தம் சொல்வது.
விருச்சிகம் கும்பம் 65/100 கணபதி பூஜை மற்றும துர்ஹா ஸூக்தம் சொல்வது, முடிந்த வரையில் அம்பாள் நாமாவை சொல்வது
தனுசு கும்பம் 60/100 கோளறு பதிகம் சொல்லுங்கள், ஹனுமன் வழிபாடு
மகரம். கும்பம் 60/100 குலதெய்வ வழிபாடு செய்வது மற்றும் முன்னோர்களை வழிபடுவது.
கும்பம் கும்பம் 50/100 கோளறு பதிகம் சொல்லுங்கள், ஹனுமன் வழிபாடு, எள் விளக்கு எரிப்பது.
மீனம் கும்பம் 55/100 தன்வந்திரி ஸ்லோகம், காயத்ரி சொல்வது மற்றும் கணபதி உபநிஷத் சொல்வது
லக்னமே தெரியாது கும்பம் 50/100 கோளறு பதிகம் சொல்லுங்கள், ஹனுமன் வழிபாடு, எள் விளக்கு எரிப்பது.
குறிப்பு:

[1] மேலே உள்ள டேபிளை எப்படி பயன்படுத்துவது?

நீங்கள் கும்பம் இராசியில் பிறந்து லக்னம் தெரிந்ததென்றால் அதற்குள்ள பலனைத் தெரிந்து கொள்ளவும். அதற்குள்ள பரிகாரத்தை தெரிந்து கொள்ளவும். உதாரணமாக, நீங்கள் கும்பம் இராசியில் பிறந்து கடகம் லக்னத்தில் பிறந்தவரென்றால் உங்களுக்கு 65% சதவிகிதம் நல்ல பலன்கள் கிடைக்கும். மேலும் நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரம்: ஸ்ரீசௌந்தர்யலஹரி சொல்வது. எனக்கு லக்னமேத் தெரியாது ஆனால் கும்பம் இராசி என்பவர்கள் கோளறு பதிகம் சொல்லுங்கள், ஹனுமன் வழிபாடு, எள் விளக்கு எரிப்பது.

[2] இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுபலன்களே. இவை ஜாதகத்திற்கு ஜாதகம் திசை ரீதியாக மாறலாம்.

நக்ஷத்திர வாரியாக சில குறிப்புகள்:

* நக்ஷத்திரங்கள்
பலன்கள் அவிட்டம் 3,4 ஸதயம் பூரட்டாதி் 1,2,3
இராசி கும்பம் கும்பம் கும்பம்
இராசியாதிபதி சனி சனி சனி
நக்ஷத்திர அதிபதி செவ்வாய் இராகு குரு
அதிதேவதைகள் வஸுக்கள் வருணன் அஜைகபாத்
கணம் இராக்ஷஸ கணம் இராக்ஷஸ கணம் மனுஷ கணம்
நாடி மத்ய பார்ஸுவ - வலது பார்ஸுவ - வலது
மிருகம் பெண் சிங்கம் பெண் குதிரை சிங்கம்
பக்ஷி வண்டு அண்டங்காக்கை உள்ளான்
விருக்ஷம் வன்னி கடம்பு மாமரம்(தோமா)
இரஜ்ஜு சிரோ கழுத்து இரஜ்ஜு வயிறு
வேதை நக்ஷத்ரம் மிருகசீர்ஷம், சித்திரை ஹஸ்தம் உத்திரம்
அதிர்ஷ்டம் தரும் எண்கள் 1, 3, 4, 5, 7, 9 1, 3, 4, 6, 7, 9 1, 3, 6, 7, 9
அதிர்ஷ்டம் தரும் திசைகள் கிழக்கு, தெற்கு கிழக்கு, தெற்கு கிழக்கு, தெற்கு
குறிப்பு:

அதிர்ஷ்டம் தரும் எண்களும், திசைகளும் ஜாதகத்திற்கு ஜாதகம் மாறும். இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுவானவையே.

இன்றைய ஜோதிடக் குறிப்பு:

இன்று நாம் பார்க்கப் போகும் தலைப்பு:

திருமணப் பொருத்தம் எப்படி பார்ப்பது? - பாகம் 4

[ குறிப்பு: திருமணமானவர்கள் இதை பிரயோகப்படுத்தி பார்க்க கூடாது, மிக முக்கியமாக திருமணம் முடிவானவர்கள், காதலித்துக் கொண்டிருப்பவர்கள் பிரயோகப்படுத்தி பார்க்காதீர்கள்]

எத்தனை ஸ்டெப்ஸ் உள்ளன?

[1] நக்ஷத்ர விஷயாதி - தசவிதப் பொருத்தம் - நாம் ஏற்கனவே விருச்சிக ராசி பலன்களில் பார்த்து விட்டோம்

[2] திசா விஷயாதி - இருவருக்கும் உள்ள திசையை வைத்து பார்ப்பது.

[3] பாப ஸாம்மிய விஷயாதி.

[4] செவ்வாய் தோஷ விஷயாதி - நாம் ஏற்கனவே பார்த்து விட்டோம்

[5] தோஷ நிவர்த்தி விஷயாதி.

என 5 விதமான ஸ்டெப்ஸ் உள்ளன.

இப்போது நாம் பார்க்கப் போவது 3வது ஸ்டெப்பான பாவஸாம்மிய விஷயாதி மற்றும் 5வது ஸ்டெப்பான தோஷ நிவர்த்தி விஷயாதி.

பாப ஸாம்மிய விஷயாதி ( WHICH MEANS PAAVASAMYAM NOT BHAVASAMYAM - இதற்குண்டான வித்தியாசங்களை பிறகு விவரிக்கிறேன் ) :-

கொஞ்சம் கடினமாக இருந்தாலும் மறுபடியும் படிக்க படிக்க புரியும்.

கீழ்க்கண்ட இரு ஜாதகங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.

இதில் பெண் குழந்தை பிறந்தது.

DOB: 12-05-1972; 11:17 am; Trichy

ஆண் குழந்தை பிறந்தது

DOB: 18-11-1967; 02:55 am; Tirunelveli

பாவ ஸாம்மியம் பார்ப்பது எப்படி?

பெண்ணுக்கு:

லக்னம் 1ம் இடம் 7ம் இடம் 8ம் இடம் மொத்தபாவம்
லக்னம் 1 1 0 2
சந்திரன் 0 0 0 0
சுக்ரன் 1/2 0 1/2 1
ஆக மொத்தபாவம் 3

லக்னம் 1ம் இடம் 7ம் இடம் 8ம் இடம் மொத்தபாவம்
லக்னம் 1 0 0 1.0
சந்திரன் 3/4 3/4 0 1.5
சுக்ரன் 0 0 0 0.0
ஆக மொத்தபாவம் 2.5

ஆணுக்கு:

லக்னம் 1ம் இடம் 2ம் இடம் 7ம் இடம் மொத்தபாவம்
லக்னம் 0 1 0 1
சந்திரன் 0 0 0 0
சுக்ரன் 0 1/2 0 1/2
ஆக மொத்தபாவம் 1 1/2 (1.5)

லக்னம் 1ம் இடம் 2ம் இடம் 7ம் இடம் மொத்தபாவம்
லக்னம் 1 0 1 2.0
சந்திரன் 0 3/4 0 3/4
சுக்ரன் 0 0 1/2 1/2
ஆக மொத்தபாவம் 3.25

இனி:

* பாவகச்சக்கரம் நவாம்ஸம்
ஆண் 1.5 3.25
பெண் 3.5 2.50

ஆக நமக்கு மேற்சொன்ன டேபிள் விடையாக வந்திருக்கிறது. இதில் ஆணுக்கு பெண்ணை விட பாவம் அதிகமாக இருக்க வேண்டும். பாருங்கள் - நமது விடையில் பெண்ணின் பாவகச்சக்கரம்(BHAVA CHART) பாவம்(PAAVAM) ஆணை விட அதிகமாக உள்ளது. எனவே சேர்க்கக் கூடாது. மற்றபடி சேர்க்கலாம்.

தொடர்ச்சி அடுத்த பதிவில்....

இனி மீனம் இராசிக்குண்டான பலன்களில் சந்திபோம். நன்றி


[ கணிப்பவர் பெருங்குளம் இராமகிருஷ்ணன் ( rameshramky06.venkat@gmail.com ) ]

0 Comments: