நீங்க கணக்கில் புலியா ? சரி உங்களுக்கான கேள்வி - வருஷத்தில நீங்க ( அதாவது நாம் ) எவ்வளவு நாள்/நேரம் வேலை செய்யறோம் ?
சும்மா கெஸ் செய்யுங்க !
ஒரு வருஷத்துக்கு 365 நாள், அதாவது 52 வாரம்.
அதில சனி, ஞாயிறு இரண்டு நாள் விடுமுறை. ஆக வருஷத்தில 52 * 2 = 104 நாள் விடுமுறை. அதாவது(365 - 104) 261 மீதி இருக்கு.
ஒரு நாளைக்கு ஆபீஸ் 8 மணி நேரம் ( என்று வைத்துக்கொண்டால் ) 261 நாள்ல 87 நாள் தான் ஆபிஸ்ல (சும்மா) இருப்போம்.
அதுல ஆபீஸ் டீ-காபி, வம்பு பேசுவது, சாட் செய்வது, டெலிபோன் , எஸ்.எம்.எஸ், மச்சான் அந்த பிகர், இந்த புடவை சூப்பர் என்று ஒரு நாளைக்கு ~30 நிமிஷம் ( கம்மி தான், குத்தி காட்டல, குத்து மதிப்பா சொல்றேன் ) என்று வைச்சிகிட்டா அது 2 நாள்.
இப்ப கணக்கு 87 - 2 = 85.
அப்பறம் இருக்கவே இருக்கு வயத்து பிழைப்பு - ஆபீஸ் லஞ்ச் டைம் 1 மணி நேரம். அது ஒரு 4 நாள். 85 - 4 = 81
இருங்க இருங்க லீவுக்கு வரேன்
காஷுவல் லீவு, மெடிக்கல் லீவு, earned லீவு, அப்படி இப்படி என்று வருஷத்துக்கு 25 நாள் போயிடும். இப்ப கணக்கு 81 - 25 = 56. 25 நாள் எடுக்கவில்லை என்றால் நீங்க சரியா லீவு அப்பளை செய்யவதில்லை என்று நினைக்கிறேன்.
ஆபீஸுக்கு லேட்டா வர்றது, சீக்கிரமா போறது, பர்மிஷன் கேக்கறது இது எல்லாம் மொத்தமா 2 நாள்னு வெச்சிப்போம் 56 - 2 = 54
இப்ப மீதி இருக்கிற 54 நாள். ஸ்டிரைக், பந்த், மழைக்கு, தமிழ்ர்களுக்கும், தலைவர்களுக்கும் ... இப்படி ஏதாவது வரும். கண்டிப்பா ஒரு 4 நாள் வெச்சிப்போம் இப்ப கணக்கு 54-4 = 50
ஆக வருஷத்துக்கு 50 நாள்தான் நாம வேலை செய்யறோம். அதாவது சுமார் ஒண்ணரை மாசம். ஆனா 12 மாசத்துக்கு சம்பளம் வாங்கறோம்.
பிகு: இதில இட்லிவடை படிப்பது போன்ற உபயோகமான வேலைகளை சேர்க்கவில்லை.
பிகுகு: என்ன ஒண்ணரை மாசமா? என்று பெருமூச்சு விடுபவர்கள், அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம். அரசு வேலை கிடைக்கவில்லை என்றால் ரிடையர் ஆகலாம்.
பிகுகுகு: சே சே நான் உங்களை மாதிரி எல்லாம் இல்லை என்று சொல்லுபவர்கள், இந்த பதிவை படிக்க மாட்டார்கள். அல்லது எழுத்தாளர்களாக இருப்பார்கள்.
பிகுகுகுகு: படத்தில் இருப்பவர் (ரோல்) மாடலே :-)
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Tuesday, October 13, 2009
பஜனை டைம் !
Posted by IdlyVadai at 10/13/2009 11:20:00 PM
Labels: நகைச்சுவை
Subscribe to:
Post Comments (Atom)











26 Comments:
இந்த மாதிரி பதிவுகளை போடுவதால், என் ரோல் மாடல் இட்லிவடைதான்.
அதற்காக நான் இந்தப் படத்தில் இருப்பவர் இட்லிவடை என்று சொல்லவில்லை.
:-D
அப்ப நீங்க எழுத்தாளரா ?
// சே சே நான் உங்களை மாதிரி எல்லாம் இல்லை என்று சொல்லுபவர்கள், இந்த பதிவை படிக்க மாட்டார்கள். //
ரொம்ப சரி.
என் முதல வேலையில் (Non-IT), ஒரு நாளைக்கு 12-14 மணி நேரம் வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை. சனி, ஞாயிறு லீவெல்லாம் கிடையாது. மாதத்திற்கு ஒரு நாள் லீவு கிடைத்தால் பெரிய விசயம்.
இப்போ நிலைமை தலை கீழ். ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் வேலை செய்தாலே பெரிய விஷயம்.
எனக்கு வேலை வேண்டுமானால் நானே எதாவது எடுத்து செய்தால் தான் உண்டு. என்ன செய்தாலும் (செய்யவிட்டாலும்) ஒருத்தரும் கண்டுகொள்வதில்லை. கொஞ்சம் கொஞ்சமாய் முழு சோம்பேறி ஆகிவிட்டேன். (இட்லிவடை எல்லாம் படிக்கிற அளவிற்கு வெட்டியாக இருக்கேன்).
50 days for 24 hrs.
So 50 * 24 / 8 = 150 business days.
There should be reverse calculation on this. I mean 'reverse' like this.
The time I spend 'Thinking' about my 'Work' or 'Office' which is only related to the growth of my working 'Organization' or 'Project'.
Like:
1. Call from client while @ home
2. Call from Boss while @ home
3. Time spent on official Get together
4. Time spent with Friends from Office - @ personal functions
5. Time spent on educating myself towards the job. (one of the objectives of the organization to earn money from my learning) - U know I get less a piece of that :))
6. I get tortured about losing my job - due to the same economy which gave me the job
Spending sleeping - 8 hours in a day (normal)
Spending on logistics - office-home-office - 2 hours ?
Spending - preparation in morning 2 hours (thinking regarding the days work starts here itself!)
Spending - 8 hours whole time physically in office
Spending - only 4 hours @ home which parents/wife/children
Now - calculate Yearly ?
Why don't you try to post next blog on this?
Indians are the ones who had forgot about culture and got changes so much.
Earlier Work+Life was same. Now Work is different / Life is differnt. As such.... u see that as above - we don't have Life! But Americans/Europeans don't do that mistake/blunder.
மூக்கில குத்துறது, மூக்குல குத்து வாங்குறது, அதை போய் வேடிக்கை பாக்குறது, அதுக்கு நாட்டாமை பண்ணுறது, அப்புறமா கருத்து சொல்றேன்னு கெளம்பி வர்றது இதெல்லாம் இந்த லிஸ்ட்டிலே இல்லையா?
இதில கொடுமை என்னான்னா ஆனானப்பட்ட போலியை ஆதாரத்தோட நிருபிச்சப்பவே அதை ஒத்துக்கமாட்டேன்னு சொன்ன ஒரு யோக்கிய சிகாமணி (நம்மூரு 'பிரபல' எழுத்தாளர சொல்லல!), இப்போ குத்தினவரை பெரிய ததா மாதிரி உருவகப்படுத்தி கருத்து சொல்றாருப்பா.
மூக்கில குத்துறது, மூக்குல குத்து வாங்குறது, அதை போய் வேடிக்கை பாக்குறது, அதுக்கு நாட்டாமை பண்ணுறது, அப்புறமா கருத்து சொல்றேன்னு கெளம்பி வர்றது இதெல்லாம் இந்த லிஸ்ட்டிலே இல்லையா?
இதில கொடுமை என்னான்னா ஆனானப்பட்ட போலியை ஆதாரத்தோட நிருபிச்சப்பவே அதை ஒத்துக்கமாட்டேன்னு சொன்ன ஒரு யோக்கிய சிகாமணி (நம்மூரு 'பிரபல' எழுத்தாளர சொல்லல!), இப்போ குத்தினவரை பெரிய தாதா மாதிரி உருவகப்படுத்தி ***கருத்து*** சொல்றாருப்பா.
வாழ்க்கையின் தத்துவத்தை பூட்டு வைத்த இட்லி வாழ்க....
/***IdlyVadai said...
அப்ப நீங்க எழுத்தாளரா ?***/
எழுதுகிற எல்லோரும் எழுத்தாளர் தான்....மானஸ், நீங்க, நான், இன்ன பிறரும்!!! ஏனென்றால் எழுதாதவன் எழுத்தாளன் ஆக முடியாது அல்லவா அதனால்...
இட்லி நீங்க மெய்யலுமே பெரிய ஆள் தான் போங்க...உங்க வாக்கு பொய்க்கவில்லை!!!
http://www.envazhi.com/?p=12567
இது ரொம்ப ரொம்ப பழைய forward mail.
ப்ளீஸ், மொக்கையை குறையுங்கள். IV.
காலங்கார்த்தால இந்த மாதிரி பதிவ படிச்சா, அப்றோம் மீதி நேரம் எப்பிடி 'வேலை' பண்றது?
இட்லி வடை, கமல் விழா முடிந்து விட்டது. இன்னும் உங்கள் சபாவில் அர்ச்னையை ஆரம்பிக்கவில்லை யே. எல்லாம் ரெடியா இருப்பாங்க கமெண்ட் போட.. ம்ம்ம் ஆரம்பிங்க..தீபாவளிக்கு போறதுக்கு முன்னாடி எல்லாம் குத்திட்டு போகட்டும்.. :)
idlyvadai sir,
Intha information , konjam illa, romba romba old analysis cum joke. Ungaluku yenna vishayama illa, pls read below.
1. Defense contract bribe
2. Vijaykanth + Jaya new alliance
3. Rajini's speech in Kamal-Vijay TV 50 years anniversary
4. New twist by scribes on actors provocative speech.
a. And How MGR hit a scribe with ul-kaayam which the scribe could not prove - courtesy Sathyaraj.
b. The political heir that THEY wanted to protect from actress Bhuvaneshvari by booking a case against her.
5. Record breaking reviews and argumnets on UPO in web
6. Dinakaran's case ...450 acres of land (1/4 of teh village) when the ceiling is 15 acres.
7. Match fixing by Pak
Photo news :
8. Flood havoc in Kurnool with some pictures of ATM ( I am sure you will manage pic of ATM in garbage) or pictures of Swamiji of mantralayam being airlifted.
9. Rahul drinking the in-famous tea in kerala
Dear I.Va.,
>>>>
காஷுவல் லீவு, மெடிக்கல் லீவு, earned லீவு, அப்படி இப்படி என்று வருஷத்துக்கு 25 நாள் போயிடும். இப்ப கணக்கு 81 - 25 = 56. >>>>
Here, you should subtract only 25/3=8 days as you have already taken into account all 24 hours in a day as working hours. i.e.,
81-8=73.
>>>இப்ப மீதி இருக்கிற 54 நாள். ஸ்டிரைக், பந்த், மழைக்கு, தமிழ்ர்களுக்கும், தலைவர்களுக்கும் ... இப்படி ஏதாவது வரும். கண்டிப்பா ஒரு 4 நாள் வெச்சிப்போம் இப்ப கணக்கு 54-4 = 50<<<<
Again, this should be 73-4/3=70.
Now, these 70 days should be converted once again into business days i.e., 70x3 = 210 business days, as pointed out by someone earlier.
nanRi,
Cinema Virumbi
ஐயா, உம்ம கணக்கெல்லாம் சரிதான். ஆமா அது என்ன, கூட்டி கழித்து பெருக்கி வகுத்து வந்த (87*24) நாட்களில் இருந்து (25*8) நாட்களை அனாமத்தா கழிச்சிருக்கீங்க. உமக்கு கணக்கு வாத்தி யாரப்பா? நாம்பெற கணக்கு பண்ணினா ஒரே யூனிட் பயன்படுத்தணும். பெண்ணை கணக்கு பண்ணினா ஒரே சிந்தனையா இருக்கணும். என்ன ஒய், நான் சொல்றது சரிதானே?!
நான் உண்மையிலேயே இப்படித்தான் இருக்கேன்!
மொத்த வருடத்துக்கும் சேர்ந்து 10 மணிநேரம் வேலை செய்வதே அதிகம்!
/***நல்லூரான் said...
இட்லி வடை, கமல் விழா முடிந்து விட்டது. இன்னும் உங்கள் சபாவில் அர்ச்னையை ஆரம்பிக்கவில்லை யே. எல்லாம் ரெடியா இருப்பாங்க கமெண்ட் போட.. ம்ம்ம் ஆரம்பிங்க..தீபாவளிக்கு போறதுக்கு முன்னாடி எல்லாம் குத்திட்டு போகட்டும்.. :)***/
நீங்கள் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் இட்லியின் அடுத்த இலக்கு அதுதான், He is working on this now....என்ன இட்லி என்ன நான் சொல்வது சரிதானே?
Yes; this is an old forward mail. I do not accept this views. In my experience, many South Indians have been workaholics. They do other works or come to Blog only during some gap or when they dont have work. I know many people who work 7 days a week also (Which is actually not good).
Mohan Kumar
http://veeduthirumbal.blogspot.com/
இது போன்ற பதிவுகளை இட்லிவடை எப்போதும் பதிவதால் இட்லிவடைதான் என் ரோல்மாடல் என்று மானஸ்தன் கூறியதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை... அவரும் ஒரு ப்ளேட் இட்லிஸ்ல ஒரு இட்லிதான்... (கூட்டணி....).
//ப்ரியா said...
இது ரொம்ப ரொம்ப பழைய forward mail.
ப்ளீஸ், மொக்கையை குறையுங்கள். IV.
காலங்கார்த்தால இந்த மாதிரி பதிவ படிச்சா, அப்றோம் மீதி நேரம் எப்பிடி 'வேலை' பண்றது?//
வாசகியின் வேண்டுகோளுக்கு இட்லியாரின் பதில் என்ன??
அடுத்த அதிரடி பதிவு என்ன??
என் குறிப்பு : படத்தில் இருப்பது "மானஸ்தன்" அல்ல....
பஜனைகள் பலவிதம்
ஒவ்வொன்றும் ஒரு விதம்....
முக்கியமான கணக்கை விட்டுட்டீங்களே! ட்விட்டர் டைம் ஒரு நாளைக்கு 4 மணி நேரம்; அதை கழிச்சாக்கா! அட பாவி மக்கா நீங்கள்ளாம் தண்ட சம்பளமா?
அது என்ன பிகுகுகுகு?
//அது என்ன பிகுகுகுகு?//
பி'க்கு பின் நாலு கு.
//IdlyVadai said...
//அது என்ன பிகுகுகுகு?//
பி'க்கு பின் நாலு கு.
///
அபிஷ்டு. அபிஷ்டு.
/*** மானஸ்தன் said...
//IdlyVadai said...
//அது என்ன பிகுகுகுகு?//
பி'க்கு பின் நாலு கு.
///
அபிஷ்டு. அபிஷ்டு.
***/
Rhyming words are
அபிஷ்டு அம்மாஞ்சி தொடப்பகட்ட!!!
இதோ இதுதான் சரியான வரிசை:
பி கு
பி கு பி கு
பி கு பி கு பி கு
பி கு பி கு பி கு பி கு
சரிதானே இ வ?
// மானஸ்தன் said...
//IdlyVadai said...
//அது என்ன பிகுகுகுகு?//
பி'க்கு பின் நாலு கு.
///
அபிஷ்டு. அபிஷ்டு.//
அதானே பி'க்கு பின்னாடி நாலு கு'வா ?? :) :) .. அதிசய பிறவி போல .. :)
Post a Comment