முன்னுரை: இதையும் ரெகுலரா அனுப்பற மாதிரி, எ.அ.பாலாவுக்குத் தான் அனுப்ப நினைத்தேன். ஆனால், இந்த "மூக்கு" மேட்டர் பற்றிப் பேசப் போவதில்லை என்று டிவிட்டரில் சொல்லி அவர் ஜகா வாங்கி விட்டதாகத் தெரிந்ததால், நான் எழுதியதை "பிரபஞசப் புகழ்" (எவ்வளவு நாள் தான் உலகப் புகழ் என்று சொல்லிக் கொண்டிருப்பது!) இட்லிவடைக்கு அனுப்புகிறேன். இ.வ இதை தன் பிளாகில் போடுவார் என்று நம்பிக்கை. இ.வ சாருக்கு அட்வான்ஸ் நன்றி.
வன்முறை கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று..இது அனேகமாக இந்த வாரம் தமிழ் வலைப்பதிவர்களில் நிறையபேர் பதிவு மற்றும் பின்னூட்டம் மூலமாக சொல்லி விட்ட ஒன்று. காந்தி இருந்திருந்தால் தமிழ் கூறும் நல்லுலகின் வலைப்பதிவுகளையும் பின்னூட்டங்களையும் படித்துப் பூரித்துப் போயிருப்பார் :)
அன்னியன் படத்தில் பஸ்ஸில் கதாயாயகியிடம் ஒரு ரெளடி சில்மிஷம் பண்ணுவான்.அதை எதிர்க்கும் கதாநாயகனுக்கும் ஒரு அடி விழும்.கதாநாயகன் பஸ்ஸில் உள்ள மற்ற பயணிகளிடம் இந்த அநியாயத்தைக் கேட்கக் கூடாதா என புலம்ப,அவர்களும் கதாநாயகியிடம் ரெளடி சில்மிஷம் பண்ணியதை உறுதிப் படுத்திக் கொண்டு தர்ம அடி போடத் துவங்குவர். அப்போது சட்டத்தை மதிக்கும் கதாநாயகன் : சட்டத்தைக் கையில் எடுக்காதீர்கள்" என்று சொல்லி அந்த ரெளடிக்கு எதிரான வன்முறையை ??!!! தடுத்து போலிசில் ஒப்படைப்பார். போலிஸ் ரவுடியை அடிக்கத் தொடங்க, உங்களுக்கு அதற்கு உரிமை கிடையாது., சட்டப்படி கோர்ட்டில் ஒப்படைத்து தண்டனை வாங்கிக் கொடுங்கள் " என்று போலிஸ் வன்முறையையும் தடுத்து???!! சொல்வார் நம் கதாநாயகன். அப்புறம் தான் ஹைலைட்டே ..போலிசைப் பார்த்து அந்த ரெளடி " கேட்டீல்ல, இனிமே அடிச்சீங்கன்னா என் வக்கீல்தான் பேசுவார் " என்று பிடித்துக் கொடுத்த கதாநாயகனைக் காட்டிவிட்டு முத்தாய்ப்பாய் " மத்தியானத்துக்கு பிரியாணி சொல்லிடுங்க" என்று நக்கலாக இன்ஸ்பெக்டரிடம் சொல்லுவார். வெளியே வரும் கதாநாயகனிடம் கதாநாயகி " தடவினா தடவிட்டுப் போறான். நீ ஏன் சட்டம், ஒழுங்கு என்று பேசி எல்லார் நேரத்தையும் வீணடித்தாய் " என்று கதாநாயகனிடம் சலித்துக் கொண்டே போவார்.
தமிழ் கூறும் வலையுலகம் இந்தக் காட்சியில் யார் யார் மீது எந்தெந்த மாதிரியான வன்முறைகளை ( எ.கா: வார்த்தை வன்முறை, செயல் வன்முறை, அதிகார வன்முறை) பிரயோகித்தார்கள்? இதில் எந்த வன்முறையெல்லாம் சரி, எந்த வன்முறையெல்லாம் தப்பு என்று அலசலாம். சில பேருக்கு சில பல பதிவுகள் போட ஏதுவாகவும் பல பேருக்கு பின்னூட்ட ஜல்லி மற்றும் ஜால்ரா தட்டவும் வசதியாகவும் இருக்கும்.
வன்முறை கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று.. கருத்தைக் கொண்டிருக்கும் சாத்வீகமான என் நண்ப வலைப்பதிவர் ஒருவரை ( அவரும் violence down! down! பின்னூட்டம் போட்டவர்தான் ) பஸ்ஸில் உன்னுடன் பயணிக்கும் போது இதே மாதிரி உன் மனைவிக்கு நடந்தால் உன் எதிர்வினை என்னவாக இருக்கும் ? என்று கேட்டு வைத்தேன். " அந்த ஆளோட செவுள்ளயே ரெண்டு விடுவேன் " என்று சற்றும் யோசியாமல் பட்டென்று சொன்னார் அந்த காந்தியின் வாரிசு. அடுத்தது தான் ஹைலைட் "
நான் செய்யுறது தப்புதான் ஆனால் அந்த நேரத்தில் உடனடி உந்துதல் எதிர்வினை அதுவாகத்தான் இருக்கும் " என்று அதற்கு சூப்பர் விளக்கம் வேறு கொடுத்தார். " ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தைக் காட்ட நாம ஒண்ணும் காந்தி இல்லியே " என்று அவர் மனசின் ஓரமாக உட்கார முயன்ற காந்தித் தாத்தாவையும் ஒரே போடாக போட்டுத் தள்ளி விட்டர். இதிலிருந்து எனக்கு ஒன்று புரிந்தது. " வன்முறை தவறு மற்றும் வன்முறை கண்டிக்கப் பட வேண்டும் " என்பதின் அருஞ் சொற்பொருள் " நான் மற்றும் எனக்குத் தெரிந்தவர் செய்யும் வன்முறை தவிர, மற்ற எல்லா வன்முறைகளும் தவறு . அதே போல் என் மீது மற்றும் எனக்கு வேண்டியவர் / தெரிந்தவர் மீது பிரயோகிக்கப் பட்ட அனைத்து வன்முறைகளும் கண்டிப்பாக கண்டிக்கப்பட வேண்டும்" என்பதுதான்.
அதே போல வன்முறையை எதிர்க்கும் எல்லாரிடமும் பொதுவாகப் பார்க்கும் ஒரு விஷயம் " இதை எதிர்க்கவில்லை என்றால் இது என் / எனக்குத் தெரிந்தவர்கள் மீது பிரயோகப்படுத்தப்பட்டு விடக் கூடிய சாத்தியக் கூறு உள்ளது " என்கின்ற ஆதார பயம் தான்.
டிஸ்கி: தலைப்பில் மூக்குடைபடுவது என்று போட்டது அனைவரையும் படிக்க வைக்கப் பண்ண மொள்ளமாரித்தனம்தான் தவிர "மூக்கு" நிகழ்வுக்கோ இந்தப் பதிவுக்கோ எந்த சம்பந்தமும் கிடையாது. ஆனால் அந்த விஷயத்தை வைத்து "ஜல்லி" அடிக்கும் அனைவருக்கும் சம்பந்தமுண்டு :)
வாழ்க ஜனநாயகம்... வளர்க (எனக்குத் தோதான) வன்முறையற்ற சமுதாயம்!!!
கி.அ.அ.அனானி
'எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்… இவன் ரொம்ப…. நல்லவன்' மாதிரி 'எந்த போஸ்ட் அனுப்பினாலும் இந்த (கை)புள்ள போடுகிறான்' என்று அனுப்பி அடிவாங்க வைக்கும் நண்பருக்கு என்றென்றும் அன்புடன் இட்லிவடையின் நன்றி.
இந்திய சிலைகள் பல மூக்கு உடைப்பட்டு இருப்பதற்கு காரணம் இப்போது புரிகிறது :-)
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Monday, October 12, 2009
வன்முறையின் வரைமுறைகளும் மூக்குடைபடுவதும் - கி.அ.அ.அனானி
Posted by IdlyVadai at 10/12/2009 01:43:00 PM
Labels: விருந்தினர்
Subscribe to:
Post Comments (Atom)

நன்றி: தினமணி










16 Comments:
எதற்கும் orgin அதாவது ஆதி கிடையாது, இந்த அளவை தாண்டினால் வன்முறை இல்லைஎன்றால் வன்முறை அல்ல என்று கூற. ஒருவருக்கு குண்டு வெடிப்பது சாதாரண நிகழ்வாக இருக்கலாம் அதற்கு இன்னொருவர் சும்மா இருக்க முடியுமா என்ன? என்னால் இதை அனுப்பியவர் யார் என்று ஊகிக்க முடிகிறது.
////இதிலிருந்து எனக்கு ஒன்று புரிந்தது. " வன்முறை தவறு மற்றும் வன்முறை கண்டிக்கப் பட வேண்டும் " என்பதின் அருஞ் சொற்பொருள்"///
இந்தப் போஸ்டுக்கும் "உன்னைப்போல் ஒருவனுக்கும்" சம்பந்தம் இருக்கா? தெரிந்தவர்கள் விளக்கவும்.
Well said. I agree fully with this article.
"If anything happens to me or my dear ones", I call it 'Vanmurai'.
If the same happens to any 3rd party, then I raise my voice against stamping anything as 'Vanmurai' --
Se should think at this point.
Is IV different E.A.B :)
அந்த காலத்தில் அனைவரும் ஏதாவது ஒரு வித்தையை தெரிந்திருந்தனர் . ஆனால் தற்போது சாமானிய மக்கள் அன்றாட தேவைகளுக்கே பெரும்பாடு படுகின்றனர். அதனால் வன்முறையை கண்டாலே அவர்களுக்கு ஒருவித பயம் தொற்றிகொள்கிறது. இதனை பயன் படுத்தி இந்த அரசியல்வாதிகளும் உழைக்க பயந்தவர்களும் குளிர்காய்கின்றனர் . எனவே வன்முறை தவறு என்ற பிரசாரம் எழுப்ப படுகிறது . ஆனால் ஒன்று மட்டும் உறுதி வன்முறையாளர்களுக்கு வன்முறை மட்டுமே உடனடி தண்டனை தர முடியும் . ஆனால் அது சரியானதாக இருக்க வாய்ப்புகள் குறைவு.
Dear Author,
Pl. do not dig at Gandhiji and those who pass comments on articles. After all you will look for comments about your article. Then why should you dig at people who have blogs and pass comments/ (Jalli adipathu). What you have written also is one kind of Jalli adipathu only. Pl. do not play with the emotions of others.
Mohan Kumar
you cannot equate an impulsive slap/punch on the face with a pre -planned , calculated attack.one can try to justify anything but certainly hoodwinking all readers is not possible. these diversionary tactics would only prove that obviously.
மூக்கு ஒடஞ்சிடுச்சி!!!!
படித்தவர்களும், சிந்திக்கத் தெரிந்தவர்களும், வன்முறையில் இறங்குவது - சற்றும் சரியில்லை. உணர்ச்சி வசப்படாமல், நிதானமாக சிந்தித்துச் செயல் படுவது ஆரோக்கியமானது. முதல் அடி கொடுப்பவர் பாதி சண்டை புரிந்தவர் ஆகிறார். அப்படி அவரை அடிக்கும் வரை வெறுப்பு ஏற்றுபவர் அடி கிடைத்தவுடன் - அடங்கிப் போய்விட்டால் பிரச்னை இல்லை - மேலும் மேலும் அடிகளும், வசவுகளும், தாக்குதல்களும் தொடர்ந்தால் - அது சம்பந்தப்பட்டவர்களையும் பாதித்தது, அவர்களைச் சார்ந்தோரையும் பாதிக்கும். "கோபம் என்பது இயலாமையின் ரூபம்" இதைப் புரிந்துகொண்டால் கோபத்திலிருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ளலாம்.
அடித்தால்தான் வன்முறை என்றால் எழுத்தில்
வடிக்கின்ற வன்முறைக்கு செய்வதென்ன -குடித்ததால்
பித்தம் தலைக்கேறி செய்த பிழைக்குநாம்
கத்துவதால் என்ன பயன்?
பெருமதிப்பிற்குரிய இட்லிவடை ஐயா,
இந்த வெண்பா தளை தட்டுதா என்று வெண்பாம் புயல் இலவசத்திடம் கேட்டுச் சொல்ல முடியுமா? நன்றி.
//Anonymous said...
என்னால் இதை அனுப்பியவர் யார் என்று ஊகிக்க முடிகிறது.//
நான் அவனில்லை :))
கி அ அ அனானி
//இந்தப் போஸ்டுக்கும் "உன்னைப்போல் ஒருவனுக்கும்" சம்பந்தம் இருக்கா?//
எனக்கு கிடைச்ச உன்னைப் போல் ஒருவன் திருட்டு வீசிடியில் ஒலியும் ஒளியும் சரியாக ஒருங்கிணைய வில்லை. கமல் பேசினால் மோஹன்லால் வாயசைக்கிறார்.அதனால் படத்தை முழுவதும் பார்க்கவில்லை. முழுவதும் பார்த்து விமர்சனம் எழுதிய இ வ (ஒரு வேளை) உங்களுக்கும் பதில் சொல்லலாம் :))
கி அ அ அனானி
// Anonymous said...
Well said. I agree fully with this article.//
Thanks :)
Satheesh
அந்தக் காலத்தில் வன்முறை இல்லை என்று யார் சொன்னது ?? ஆறாம் அறிவு வந்த பின் வன்முறையும் தொடங்கி விட்டது.
Dear Mohan kumar,
advice...advice..advice :)) still I am not going to argue with you :)
Rajan
what is yard stick for "வன்முறை " ??? is my doubt :)
Subbu
:))
KG Gouthaman
Well Said
கி அ அ அனானி
வெண்பா எழுதிய அனானி
உங்கள் பின்னூட்டம் இ வ க்கு கொடுத்த விண்ணப்பமாகையால் நான் சொல்ல ஒன்றும் இல்லை :)
கி அ அ அனானி
Post a Comment