பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, October 09, 2009

தனுசு இராசி பலன்கள்


தனுசு இராசிக்குள்ள சனிப்பெயர்ச்சி பொது பலன்கள்
குறிப்பு: மிக முக்கியமான நிகழ்ச்சிக்கு சென்றிருந்த காரணத்தால் என்னால் பதிவை தொடர்ந்து எழுத முடியவில்லை. எனவே இட்லிவடையும் அதன் வாசகர்களும் தயைகூர்ந்து என்னை மன்னித்து வரப் போகும் ஜோதிட பதிவுகளுக்கு ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.


உங்களைப் பற்றி:

எதிலும் அப்பாவியாக இருக்கும் தனுசு இராசி வாசகர்களே, நீங்கள் மனசாட்சிக்கு விரோதமான காரியங்களை செய்ய மாட்டீர்கள். வானத்தில் கோட்டை கட்டுபவர்கள். பிறருக்கு கொடுத்து கொடுத்தே மகிழ்ச்சியடைவீர்கள். பொதுவாக நீங்கள் சாதுவானவர்.

எப்படி இருக்கப் போகிறது இந்த சனிப் பெயர்ச்சி:

இது வரை பாக்கியஸ்தானமான ஒன்பதாவது ஸ்தானத்தில் இருந்த சனீஸ்வரன் இனி பத்தாமிடத்தில் வரும் 21/2 ஆண்டுகளுக்கு என்னென்னெ பலன்கள் தரப்போகிறார் என்பதைப் பார்ப்போம்.

இதுவரை 9ம் இடத்தில் இருந்து உங்கள் புண்ணியங்களை தடுத்து வந்த சனீஸ்வரன், இனி அதையெல்லாம் உங்களுக்கு தருவார். தந்தையாரின் உடல்நிலை மெதுவாக முன்னேற்றம் அடையும். தந்தை வழி சொத்துக்களில் உள்ள பிரச்சனைகள் நீங்கும். நம்பியவர்கள் எல்லாம் ஏமாற்றினார்களே, அதற்கு பதிலடி கொடுங்கள்.கணவன் மனைவி உறவு நெருக்கமடையும். தைரியம் அதிகரிக்கும். இளைய சகோதரர்களிடம் இருந்த பிணக்கு நீங்கும். கல்வித்தரம் உயரும். சகோதர வகையில் தனலாபம் கிடைக்கும். இடைத்த்ரகர்களை நம்பாமல் நீங்களே களத்தில் குதிப்பீர்கள். உங்களுக்கு சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும் காலமிது. உங்களுக்கு உதவ மறுத்தவர்கள் தானாக முன்வந்து உதவி செய்வார்கள். வீட்டில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கொடுப்பார்கள்.தடைகள் பல நீங்கி நன்மை கிடைக்கும். அரசு அதிகாரிகளின் உதவி கிடைக்கும். தாய்வழி சொத்துக்களை கவனமாக கையாளவும். வாகனத்தை இயக்கும் போது கவனம் தேவை. காடு, மலை, மரம் இவற்றால் லாபம் உண்டாகும். வெளிநாடுகள் மூலம் லாபம் உண்டாகும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். பக்கத்து வீட்டாருடன் இணக்கமாக இருப்பீர்கள்.பழைய கருத்து மோதல்கள் நீங்கும். வாழ்வில் மலர்ச்சி உண்டாகும்.மனைவியால் செவவு அதிகரிக்கும். நிறைய நாட்கள் தூங்காமல் இருக்க வேண்டி வரும். டிரஸ்ட், சங்கம் தொடங்குவீர்கள். சமூக விஷயங்களில் ஈடுபடுவீர்கள். சாதுக்கள், சந்நியாசிகள் தொடர்பு கிடைக்கும். சொத்துக்கள் வாங்குவது, விற்பது சுலபமாக முடியும். வியாபாரம் செழிக்கும். புதிய தொழில் அமையும். வேலைநிமித்தமாக வெளிநாடு, வெளியூர் சென்று வருவீர்கள். பங்குதாரர்களிடம் இருந்த பிணக்கு நீங்கி உற்சாகம் பிறக்கும். தள்ளிப் போன வாய்ப்புகள் கையில் வந்து சேரும். வாடிக்கையாளர்களைக் கவர புதிய திட்டங்களை வகுப்பீர்கள். போட்டிகள் நீங்கும். வேலையாட்களுடன் சுமுக உறவு ஏற்படும். தூங்கப் போகும் போது நிறைய யோசிக்க கூடாது. நீண்ட தூர பயணங்களை தவிர்க்க வேண்டும். உத்தியோகத்தில் உங்களது திறமை வெளிப்படும். எதிர்பார்த்த பணி உயர்வு கிடைக்கும். உயர்கல்வியில் தேர்ச்சி பெற்று தகுந்த சன்மானத்தை பெறுவீர்கள். சிலருக்கு சொந்த தொழில் கிட்டும். திருமணமாகாதவர்களுக்கு 2009 டிசம்பருக்கு மேல் திருமணமாகும். மாணவமணிகள் படிப்பின் மீது மிகுந்த கவனம் கொள்ள வேண்டும். கடினமான பாடங்களின் மீது அதிக அக்கறை தேவை. உங்களின் மீதிருந்த வீண் பழி விலகும். கலைஞர்களைப் பொறுத்தவரை அதிக வாய்ப்புகள் கிட்டும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி தடைபட்டிருந்த பாக்கியங்களை அள்ளித்தருவதுடன் பணம், பட்டம், பதவி ஆகியவற்றை தருவதாக அமையும்.

நக்ஷத்திர ரீதியான பலன்கள்:

மூலம்: எதிலும் அவசரம் இருக்கும். எச்சரிக்கை தேவை. பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டாலும் செலவுகளும் முன் வந்து நிற்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. ஹனுமனை வணங்கி எதையும் ஆரம்பித்தால் வெற்றி கிடைக்கும்.

பூராடம்: பேசுவதைக் குறையுங்கள் பாதி பிரச்சனை தீர்ந்து விடும். குடும்பத்தில் சிறுசிறு சலசலப்பு ஏற்பட்டு நீங்கும். பண விஷயத்தில் மிகுந்த கவனம் தேவை. திருமண முயற்சியில் வெற்றியடைவீர்கள். ஸ்ரீமஹாலக்ஷிமியை வணங்குங்கள், தன முன்னேற்றம் ஏற்படும்.

உத்திராடம் 1ம் பாதம் : உடல் நலத்தில் சற்று கவனமுடன் இருக்கவும். தந்தையாரின் உடல்நிலையில் கவனம் தேவை. உத்தியோகம் பார்க்கும் இடத்தில் மேலதிகாரிகளிடம் கவனமாக பழகவும். யாரையும் அனுசரித்து போனால் பிரச்சினை இல்லை. மஹான்களை வழிபட தடைபட்டிருந்த காரியங்கள் தடை விலகி நன்மை ஏற்படும்.

குறிப்பு: இது மாணவ மணிகளுக்கு: ஸ்ரீ விநாயகர் அகவல் படிப்பது நன்மையைத்தரும்.

லக்ன ரீதியான பலன்கள்:

லக்னம் இராசி பலன்கள் பரிகாரம்
மேஷம் தனுசு 60/100 கந்த ஷஷ்டி கவசம் படிப்பது
ரிஷபம் தனுசு 70/100 ஸ்ரீஸூக்தம் சொல்வது
மிதுனம் தனுசு 60/100 விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்வது
கடகம் தனுசு 70/100 ஸ்ரீசௌந்தர்யலஹரி சொல்வது
ஸிம்ஹம் தனுசு 60/100 ஆதித்யஹ்ருதயம், மஹாலக்ஷிமி காயத்ரி, நாராயண காயத்ரி, நவக்ரஹ காயத்ரி சொல்வது
கன்னி தனுசு 55/100 விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்வது, முடிந்த வரை இராம நாமம் சொல்வது, மகான்களை வழிபடவும்
துலாம் தனுசு 60/100 நவக்ரஹ ஸூக்தம் சொல்வது, ஸ்ரீஸூக்தம் சொல்வது.
விருச்சிகம் தனுசு 75/100 கணபதி பூஜை மற்றும துர்ஹா ஸூக்தம் சொல்வது, முடிந்த வரையில் அம்பாள் நாமாவை சொல்வது மற்றும் சண்முக கவசம் சொல்வது.
தனுசு தனுசு 65/100 கோளறு பதிகம் சொல்லுங்கள், ஹனுமன் வழிபாடு
மகரம் தனுசு 65/100 குலதெய்வ வழிபாடு செய்வது மற்றும் முன்னோர்களை வழிபடுவது.
கும்பம் தனுசு 60/100 லலிதா ஸகஸ்ரநாம பாராயணம் மற்றும் மூகபஞ்சக சதீ சொல்வது
மீனம் தனுசு 60/100 தன்வந்திரி ஸ்லோகம் சொல்வது மற்றும் கணபதி காயத்ரி சொல்வது
லக்னமே தெரியாது தனுசு 65/100 கோளறு பதிகம் சொல்லுங்கள், ஹனுமன் வழிபாடு
குறிப்பு:

[1] மேலே உள்ள டேபிளை எப்படி பயன்படுத்துவது?

நீங்கள் தனுசு இராசியில் பிறந்து லக்னம் தெரிந்ததென்றால் அதற்குள்ள பலனைத் தெரிந்து கொள்ளவும். அதற்குள்ள பரிகாரத்தை தெரிந்து கொள்ளவும். உதாரணமாக, நீங்கள் தனுசு இராசியில் பிறந்து கும்பம் லக்னத்தில் பிறந்தவரென்றால் உங்களுக்கு 60% சதவிகிதம் நல்ல பலன்கள் கிடைக்கும். மேலும் நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரம்: லலிதா ஸகஸ்ரநாம பாராயணம் மற்றும் மூகபஞ்சக சதீ சொல்வது. எனக்கு லக்னமேத் தெரியாது ஆனால் தனுசு இராசி என்பவர்கள் கோளறு பதிகம் சொல்லுங்கள், ஹனுமன் வழிபாடு.

[2] இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுபலன்களே. இவை ஜாதகத்திற்கு ஜாதகம் திசை ரீதியாக மாறலாம்.

நக்ஷத்திர வாரியாக சில குறிப்புகள்:

* நக்ஷத்திரங்கள்
பலன்கள் மூலம் பூராடம் உத்திராடம் 1ம் பாதம்
இராசி தனுசு தனுசு தனுசு
இராசியாதிபதி வியாழன் வியாழன் வியாழன்
நக்ஷத்திர அதிபதி கேது சுக்ரன் சூரியன்
அதிதேவதைகள் நிருதி ஜலதேவதை விஸ்வேதேவர்
கணம் இராக்ஷஸ் கணம் மனுஷ்ய கணம் மனுஷ்ய கணம்
நாடி பார்ஸுவ - வலது மத்ய பார்ஸுவ - இடது
மிருகம் பெண் நாய் ஆண் குரங்கு பசு
பக்ஷி செம்பரத்தி கௌதாரி வலியன்
விருக்ஷம் மராமரம் வஞ்சிமரம் பலாமரம்
இரஜ்ஜு பாதம் தொடை வயிறு
வேதை நக்ஷத்ரம் ஆயில்யம் பூசம் புனர்பூசம்
அதிர்ஷ்டம் தரும் எண்கள் 1, 3, 4, 7, 9 1, 3, 6, 7, 9 1, 3, 6, 7, 9
அதிர்ஷ்டம் தரும் திசைகள் கிழக்கு, வடக்கு கிழக்கு, தெற்கு கிழக்கு
குறிப்பு:

அதிர்ஷ்டம் தரும் எண்களும், திசைகளும் ஜாதகத்திற்கு ஜாதகம் மாறும். இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுவானவையே.

இன்றைய ஜோதிடக் குறிப்பு:

இன்று நாம் பார்க்கப் போகும் தலைப்பு:

திருமணப் பொருத்தம் எப்படி பார்ப்பது? - பாகம் 2

[ குறிப்பு: திருமணமானவர்கள் இதை பிரயோகப்படுத்தி பார்க்க கூடாது, மிக முக்கியமாக திருமணம் முடிவானவர்கள், காதலித்துக் கொண்டிருப்பவர்கள் பிரயோகப்படுத்தி பார்க்காதீர்கள்]

எத்தனை ஸ்டெப்ஸ் உள்ளன?

[1] நக்ஷத்ர விஷயாதி - தசவிதப் பொருத்தம் - நாம் ஏற்கனவே விருச்சிக ராசி பலன்களில் பார்த்து விட்டோம்

[2] திசா விஷயாதி - இருவருக்கும் உள்ள திசையை வைத்து பார்ப்பது.

[3] பாப ஸாம்மிய விஷயாதி.

[4] செவ்வாய் தோஷ விஷயாதி.

[5] தோஷ நிவர்த்தி விஷயாதி.

என 5 விதமான ஸ்டெப்ஸ் உள்ளன.

இப்போது நாம் பார்க்கப் போவது 3வது ஸ்டெப்பான பாவஸாம்மிய விஷயாதி மற்றும் 5வது ஸ்டெப்பான தோஷ நிவர்த்தி விஷயாதி.

பாப ஸாம்மிய விஷயாதி ( WHICH MEANS PAAVASAMYAM NOT BHAVASAMYAM - இதற்குண்டான வித்தியாசங்களை பிறகு விவரிக்கிறேன் ) :-

கொஞ்சம் கடினமாக இருந்தாலும் மறுபடியும் படிக்க படிக்க புரியும்.

கீழ்க்கண்ட இரு ஜாதகங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.

இதில் பெண் குழந்தை பிறந்தது.

DOB: 12-05-1972; 11:17 am; Trichy

ஆண் குழந்தை பிறந்தது

DOB: 18-11-1967; 02:55 am; Tirunelveli

பாவ ஸாம்மியம் பார்ப்பது எப்படி?

இதில் 3 ஸ்டெப்ஸ் உள்ளன.

முதலில் பெண் ஜாதகத்தில் பாவம் சக்கரத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

[1] பாவம் சக்கரத்தில் "ல" என்று போட்டுருக்கிறது அல்லவா அதுதான் லக்னம். அதுதான் ஒன்றாம் இடம். அதிலிருந்து CLOCKWISE ஆக எண்ணுங்கள். அதில் 1ம் இடம், 7ம் இடம், 8ம் இடம் ஆகியவற்றில் செவ்வாய் or ராகு or கேது ஆகிய கிரஹங்களில் ஏதாவது ஒன்று இருந்தால் அது 1 பாவம் - ஒரு பாவம் என கூறவும்(தோஷம்). உதாரணம்: நமது பெண் ஜாதகத்தில் லக்னத்தில் கேது இருக்கிறது, எனவே 1 பாவம். 7ம் இடத்தில் ராகு இருக்கிறது, எனவே 1 பாவம். 8ம் இடத்தில் எதுவும் இல்லை. ஆக மொத்தம் 2 பாவம். ( எதற்காக 1,7,8ம் இடங்களை மட்டும் பார்க்க வேண்டும் என சில பேர் என்னிடம் கேள்வி கேட்கலாம், அவர்களுக்கு எனது பதில் இதுதான் - சனிப் பெயர்ச்சி பலன்கள் முடிந்தவுடன் தொடர்ச்சியாக ஜோதிட தொடரே எழுதலாம் என்று இருக்கிறேன், எனவே ஜோதிட அரிச்சுவடி தெரிந்தவர்கள் மட்டும் இப்போது இதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள் )

[2] பாவம் சக்கரத்தில் "சந்" என்று போட்டுருக்கிறது அல்லவா அதுதான் சந்திர லக்னம். இப்போது அதை ஒன்றாம் இடம எனக் கொண்டு அதிலிருந்து CLOCKWISE ஆக எண்ணுங்கள். அதில் 1ம் இடம், 7ம் இடம், 8ம் இடம் ஆகியவற்றில் செவ்வாய் or ராகு or கேது ஆகிய கிரஹங்களில் ஏதாவது ஒன்று இருந்தால் அது 3/4 பாவம் - முக்கால் பாவம் என கூறவும்(தோஷம்). உதாரணம்: நமது பெண் ஜாதகத்தில் சந்திர லக்னத்தில் எதுவும் இல்லை, எனவே 0 பாவம். 7ம் இடத்தில் எதுவும் இல்லை, எனவே 0 பாவம். 8ம் இடத்தில் எதுவும் இல்லை. ஆக மொத்தம் 0 பாவம்.

[3] பாவம் சக்கரத்தில் "சுக்" என்று போட்டுருக்கிறது அல்லவா அதுதான் சுக்ர லக்னம். இப்போது அதை ஒன்றாம் இடம எனக் கொண்டு அதிலிருந்து CLOCKWISE ஆக எண்ணுங்கள். அதில் 1ம் இடம், 7ம் இடம், 8ம் இடம் ஆகியவற்றில் செவ்வாய் or ராகு or கேது ஆகிய கிரஹங்களில் ஏதாவது ஒன்று இருந்தால் அது 1/2 பாவம் - அரை பாவம் என கூறவும்(தோஷம்). உதாரணம்: நமது பெண் ஜாதகத்தில் சுக்ர லக்னத்தில் செவ்வாய் இருக்கிறது, எனவே 1/2 பாவம். 7ம் இடத்தில் எதுவும் இல்லை, எனவே 0 பாவம். 8ம் இடத்தில் ராகு இருக்கிறது, எனவே 1/2 பாவம். ஆக மொத்தம் 1 பாவம்.

கீழ்க்கண்ட டேபிளைப் பாருங்கள் முழுவதுமாக புரியும்.

லக்னம் 1ம் இடம் 7ம் இடம் 8ம் இடம் மொத்தபாவம்
லக்னம் 1 1 0 2
சந்திரன் 0 0 0 0
சுக்ரன் 1/2 0 1/2 1
ஆக மொத்தபாவம் 3

இப்போது பெண் ஜாதகத்தில் நவாம்சம் சக்கரத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

[1] நவாம்சம் சக்கரத்தில் "ல" என்று போட்டுருக்கிறது அல்லவா அதுதான் லக்னம். அதுதான் ஒன்றாம் இடம். அதிலிருந்து CLOCKWISE ஆக எண்ணுங்கள். அதில் 1ம் இடம், 7ம் இடம், 8ம் இடம் ஆகியவற்றில் செவ்வாய் or ராகு or கேது ஆகிய கிரஹங்களில் ஏதாவது ஒன்று இருந்தால் அது 1 பாவம் - ஒரு பாவம் என கூறவும்(தோஷம்). உதாரணம்: நமது பெண் ஜாதகத்தில் லக்னத்தில் செவ்வாய் இருக்கிறது, எனவே 1 பாவம். 7ம் இடத்தில் எதுவும் இல்லை. 8ம் இடத்தில் எதுவும் இல்லை. ஆக மொத்தம் 1 பாவம்.

[2] நவாம்சம் சக்கரத்தில் "சந்" என்று போட்டுருக்கிறது அல்லவா அதுதான் சந்திர லக்னம். இப்போது அதை ஒன்றாம் இடம எனக் கொண்டு அதிலிருந்து CLOCKWISE ஆக எண்ணுங்கள். அதில் 1ம் இடம், 7ம் இடம், 8ம் இடம் ஆகியவற்றில் செவ்வாய் or ராகு or கேது ஆகிய கிரஹங்களில் ஏதாவது ஒன்று இருந்தால் அது 3/4 பாவம் - முக்கால் பாவம் என கூறவும்(தோஷம்). உதாரணம்: நமது பெண் ஜாதகத்தில் லக்னத்தில் கேது இருக்கிறது, எனவே 3/4 பாவம். 7ம் இடத்தில் ராகு இருக்கிறது, எனவே 3/4 பாவம். 8ம் இடத்தில் எதுவும் இல்லை. ஆக மொத்தம் 1.5 பாவம்.

[3] நவாம்சம் சக்கரத்தில் "சுக்" என்று போட்டுருக்கிறது அல்லவா அதுதான் சுக்ர லக்னம். இப்போது அதை ஒன்றாம் இடம எனக் கொண்டு அதிலிருந்து CLOCKWISE ஆக எண்ணுங்கள். அதில் 1ம் இடம், 7ம் இடம், 8ம் இடம் ஆகியவற்றில் செவ்வாய் or ராகு or கேது ஆகிய கிரஹங்களில் ஏதாவது ஒன்று இருந்தால் அது 1/2 பாவம் - அரை பாவம் என கூறவும்(தோஷம்). உதாரணம்: நமது பெண் ஜாதகத்தில் சுக்ர லக்னத்தில் எதுவும் இல்லை, எனவே 0 பாவம். 7ம் இடத்தில் எதுவும் இல்லை, எனவே 0 பாவம். 8ம் இடத்தில் எதுவும் இல்லை. ஆக மொத்தம் 0 பாவம்.

கீழ்க்கண்ட டேபிளைப் பாருங்கள் முழுவதுமாக புரியும்.

லக்னம் 1ம் இடம் 7ம் இடம் 8ம் இடம் மொத்தபாவம்
லக்னம் 1 0 0 1.0
சந்திரன் 3/4 3/4 0 1.5
சுக்ரன் 0 0 0 0.0
ஆக மொத்தபாவம் 2.5

தொடர்ச்சி அடுத்த பதிவில்.....

இனி மகரம் இராசிக்குண்டான பலன்களில் சந்திபோம். நன்றி


நன்றி: பெருங்குளம் இராமகிருஷ்ணன்,
ஜோதிடர். [ முகவரி: rameshramky06.venkat@gmail.com ]

7 Comments:

Anonymous said...

Romba Thanks....

Anonymous said...

Me danusa rasi, thanks. waiting for other raasi's. magaram, meenam and kumbam...

Thanks a lot for ur effort.

Also other tips are very useful. Pls continue ur good work.

kggouthaman said...

அப்பா - ஒரு மண்டலம் காத்திருந்து பலன் பெற்றேன் நன்றிகள் பல.

Arul said...

//அப்பா - ஒரு மண்டலம் காத்திருந்து பலன் பெற்றேன் நன்றிகள் பல.//

me too...

Krish said...

ஜோதிடம் எனபது ஒரு நம்பிக்கை. இனிமேல் நமக்கு நல்ல காலம் என்று மனது உற்சாகமடையும் போது நம்பிக்கையும் சந்தோஷமும் கிடைக்கிறது. என்னைப் பொறுத்த வரை யாரும், யாருடைய வாழ்கையையும் கணிக்க முடியாது.

vanakkam said...

nandri

vanakkam said...

nandri