பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, October 25, 2009

சண்டேனா இரண்டு (25-10-09) செய்திவிமர்சனம், இன்பா

இந்த வார இரண்டு செய்திகள்...

செய்தி # 1
ஒட்டு மொத்த ஹிந்து மதத்தின் கூடாரமாக, மதத்தை வளர்ப்பதற்கு, பெருமைகளை கட்டிகாப்பதற்கு உருவாக்க பட்டது காஞ்சி சங்கர மடம். தனிமனித ஒழுக்க குறைபாடுகளோ..இல்லை ...அரசியல் காரணங்களோ என்ன காரணம் என்று என் சிற்றறிவுக்கு தெரியவில்லை..இன்று அந்த மடம் சங்கட மடம் ஆகி....ஈ ஒட்டிக்கொண்டு இருக்கிறது என்பது நான் நேரில் கண்ட உண்மை.

கடந்த 22 ஆம் தேதி அன்று, மதுரை சங்கர மடத்திற்கு வந்த ஜெயேந்திரர் கூறியதாவது:

"சமுதாயத்தில் இன்று நிறைய பக்தி வளர்ந்து வருகிறது. நல்ல பண்புகள் குறைந்து வருகின்றன. ஒவ்வொரு குடும்பத்திலும், பள்ளிகளிலும் நற்பண்புகளை வளர்க்க முயற்சிகள் எடுக்க வேண்டும். குழந்தை பருவத்தில் நல்ல பண்புகளை வளர்த்தால் தான் பெரியவர்களாகியும் நிற்கும். மனித வாழ்க்கையில் இரு கண்கள் தேவை. ஒரு கண் பக்தி. இரண்டாவது கண் நற்பண்புகள். நற்பண்புகள் வளர்ந்தால்தான் மனித வாழ்வு அமைதி, சாந்தி, சந்தோஷம் மிக்கதாகும்.

ஐந்தாண்டுகளுக்கு முன் கர்நாடகாவில் மழை வேண்டி பூஜை நடத்தப் பட்டது. அப்போது அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தற்போது திருநாவுக்கரசர் மழை வேண்டி பாடிய பதிகத்தை மக்களை படிக்க செய்ய வேண்டும். இயற்கை மாற்றங்கள் விரைவில் சரியாகும் " என்றார் அவர்

இதை படித்தவுடன்..உங்களுக்கு தோன்றிய உணர்வு என்ன என்பதை பின்னூட்டத்தில் எழுதுங்கள்


செய்தி # 2

குறை கூறுவதையே தனது அரசியல் கொள்கையாக வைத்து இருக்கும் விஜயகாந்த் இங்கே குறை சொல்லிஇருப்பது... உலக தமிழ் மாநாட்டை...

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உலக மக்கள் அனைவருக்கும் பொதுவான உயர்ந்த கருத்துக்களை கொண்டது தமிழ்மொழி. அம்மொழியின் சிறப்புக்களை அறியவும், ஆராயவும் இன்றைய உலகுக்கு ஏற்ற வகையில் எடுத்துரைக்கவும், உலகெங்கும் உள்ள தமிழர்கள் சார்பில் நடத்தப்படுவதே உலக தமிழ் மாநாடு.

முதலில் மலேசியாவிலும், பின்னர் அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகியோர் முதல்-அமைச்சர்களாக இருந்தபோது தமிழ்நாட்டிலும். உலக தமிழ் மாநாடு சிறப்பாக கொண்டாடப்பட்டது, பின்னர் வழி வழியாக எட்டு மாநாடுகள் நடைபெற்று முடிந்திருக்கின்றன. தற்பொழுது தமிழ்நாட்டில் ஒன்பதாவது உலக தமிழ் மாநாடு நடத்தப்போவதாக தமிழ்நாடு முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவித்தார்.

ஆனால் இப்பொழுது அதற்கு மாறாக, உலகத் தமிழ் செம்மொழி மாநாடு 2010-ம் ஆண்டு ஜுன் மாதம் கோவையில் நடத்தப்போவதாக அறிவித்துள்ளார். உலக தமிழ் மாநாடு நடத்துவதற்கென உள்ள அகில உலக தமிழியல் ஆய்வு நிறுவனம் போதிய அவகாசம் கேட்டது. அந்த கால அவகாசத்தை தந்து உலக தமிழ் மாநாடு 2011-ம் ஆண்டு நடத்துவது தானே முறை.

உலக தமிழ் மாநாடு நடத்தும் சூழ்நிலை தற்பொழுது உலக தமிழர்களிடையே உள்ளதா? ஒரு புறத்தில் இலங்கையில் இலங்கை அரசு தமிழினப்படுகொலை நடத்தியுள்ளது. இன்றும் சிங்கள இனவெறி அரசின் தலைவர் ராஜபக்சே போர் குற்றவாளி என்பதிலிருந்து தப்பிக்க முயற்சி செய்கிறார்.

அவரை போர் குற்றவாளியென்று ஆர்ப்பாட்டம் நடத்தி, அப்பாவி மக்களை ஏமாற்றுகின்றனர். தமிழர்கள் நாடற்றவர்களாகவும், நாதியற்றவர்களாகவும் உலகநாடுகள் அனைத்திலும் பிழைக்க வழியின்றி தினம் தினம் செத்துமடிகிறார்கள். தமிழராக பிறந்த ஒவ்வொருவரும் இந்த நேரத்தில் உலகெங்கும் உள்ள தமிழர்களின் துயர் துடைக்க தங்களை அர்ப்பணித்து கொள்வது தலையாய கடமையாகும்.

இப்பொழுது பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணைகட்டுகிறது. முல்லைப்பெரியாறு நீர் தேக்க அணையை புதிதாக கட்ட கேரள அரசு சர்வே செய்கிறது.

கோவையில் நடத்தவுள்ள இந்த மாநாடு தமிழ் மக்களை ஏமாற்றும் போக்கு என்று கருத்து தெரிவித்துள்ள சில தமிழறிஞர் பெருமக்களை ஏற்கனவே காவல்துறையை விட்டு மிரட்டுவதாக அறிகிறேன்.

தமிழர்களுக்காக தமிழர்கள் சார்பில் தமிழர்களின் நன்மதிப்பைப்பெற்ற ஒரு தலைவர் நடத்துவது தான் உண்மையான உலக தமிழ் மாநாடு. அதற்கு பதிலாக இத்தகைய போலிகளை கண்டு ஏமாறாதீர்கள் என்று தமிழ் மக்களையும், இத்தகைய முயற்சிக்கு இடம் கொடுக்க வேண்டாம் என்று தமிழ் அறிஞர் பெருமக்களையும் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு விஜயகாந்த் அறிக்கையில் கூறியுள்ளார்.

அவர் இப்படி சொன்னது ஓரளவுக்கு நியாயமாகபடுகிறது.

லட்சக்கணக்கான மக்கள் அகதிமுகாம்களில் வாடும்நிலையில் மாநாடு நடத்தி தமிழ்மொழியை கொண்டாடுவதற்கு என்ன அவசியம் வந்துவிட்டது?

இந்த வார உலக செய்தி :

பாகிஸ்தான் எல்லைப்பகுதியான தெற்கு வாஜிரிஸ்தானில் பாகிஸ்தான் ராணுவத்திற்கும் தாலிபான் தீவிரவாதிகளுக்கும் நடந்து வரும் சண்டையில் தாலிபானின் தாக்குதல் மற்றும் தடுப்பு உத்திகளால் ராணுவத் தாக்குதல் பின்னடைவு கண்டுள்ளது.

இதுவரை முக்கியப் பகுதியான கோட்காய் என்ற இடத்தின் ஒரு சில பகுதிகளை மட்டுமே ராணுவம் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. சுமார் 115 தாலிபன்கள் பலியாகியுள்ளனர்.

கோட்காய் பகுதியில் உள்ள தாலிபானின் தலைவர் ஹாகிமுல்லா மெஹ்சூத் என்பவரின் வீட்டை ராணுவத்தினர் தகர்த்தனர். முக்கிய தாலிபான் தளபதியாக கருதப்படும், தற்கொலைப் படை பயிற்சியாளருமான குவாரி ஹுஸைனின் வீடும் தகர்க்கப்பட்டதாக தொலைக்காட்சி செய்திகள் கூறுகின்றன.

கோட்காயை முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயற்சிகள் செய்து வருகின்ற்னர். ஆனால் தாலிபான் தடுப்பு உத்திகள் பாகிஸ்தான் ராணுவத்தினரை திணறடித்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீவிரவாதம் என்பது, பிடி இல்லாத இரண்டு பக்கமும் கூர்மையான கத்தி...அது தன்னை பிடித்தவனையும் கண்டிப்பாக கொல்லும் என்று எப்போது பாகிஸ்தான் உணரப்போகிறது??

(நன்றி...இனி அடுத்த வாரம்)

- இன்பா

21 Comments:

kggouthaman said...

// நற்பண்புகள் வளர்ந்தால்தான் மனித வாழ்வு அமைதி, சாந்தி, சந்தோஷம் மிக்கதாகும்.//
சொல்வது யாராக இருந்தாலும், சொல்லப் படுவது என்ன என்பதுதான் முக்கியம்; அந்த வகையில், இதை வரவேற்போம், கடைபிடிப்போம்.
செய்தி இரண்டு. டிட்டோ டிட்டோ
உலக செய்தி
// தீவிரவாதம் என்பது, பிடி இல்லாத இரண்டு பக்கமும் கூர்மையான கத்தி...அது தன்னை பிடித்தவனையும் கண்டிப்பாக கொல்லும் //
நன்று சொன்னீர்கள்!

R.Gopi said...

ச‌ங்க‌ர‌ ம‌ட‌த்தின் ச‌ங்க‌ட‌ங்க‌ள் விரைவில் தீரும் என்ப‌து உறுதி...

"த‌ர்ம‌த்தின் வாது த‌ன்னை சூது க‌வ்வும், மீண்டும் த‌ர்ம‌ம் வெல்லும்"...

//குறை கூறுவதையே தனது அரசியல் கொள்கையாக வைத்து இருக்கும் விஜயகாந்த் இங்கே குறை சொல்லிஇருப்பது... உலக தமிழ் மாநாட்டை...//

உல‌க‌ "ட‌மில்" மாநாடு ...........

//லட்சக்கணக்கான மக்கள் அகதிமுகாம்களில் வாடும்நிலையில் மாநாடு நடத்தி தமிழ்மொழியை கொண்டாடுவதற்கு என்ன அவசியம் வந்துவிட்டது?//

அர‌சிய‌ல்ல‌ இதெல்லாம் சாதார‌ண‌ம‌ப்பா... இது எல்லோருக்கும் தெரியும்... ஆட்சியில் இருப்ப‌வ‌ர்க‌ள் உட்ப‌ட‌...

//தீவிரவாதம் என்பது, பிடி இல்லாத இரண்டு பக்கமும் கூர்மையான கத்தி...அது தன்னை பிடித்தவனையும் கண்டிப்பாக கொல்லும் என்று எப்போது பாகிஸ்தான் உணரப்போகிறது??//

இதை பாகிஸ்தான் உண‌ரும் நாள் வெகுதொலைவில் இல்லை... இன்னும் எத்த‌னை கால‌ம் தான் ஏமாற்றுவார் இந்த‌ நாட்டிலே... வினை விதைத்த‌வ‌ன் வினை அறுப்பான்...

யதிராஜ சம்பத் குமார் said...

சங்கர மடாதிபதி சொன்னது மிகவும் நிதர்ஸனம். மக்கள் பக்தி செய்யும் அளவிற்கேற்றாற்போல் நற்பண்புகளை வளர்த்துக் கொள்வதில்லை. கோவிலுக்குச் செல்வதை விட நல்ல பண்புகளை வளர்த்துக் கொள்வது சமுதாய ஆரோக்யத்திற்கு நல்லது.


இரண்டாவது செய்தி., விஜயகாந்த் சொன்னதில் எந்த தவறும் கிடையாது. இந்த செம்மொழி மாநாடு, கலைஞருக்கு மற்றுமொரு பாராட்டுவிழாவாக அமையுமென்பதில் சந்தேகமே இல்லை. கட்சி வேறுபாடு பாராட்டாமல் அனைத்து கட்சிகளுமே இதற்கு ஆதரவு நல்கவேண்டுமென ஜெயலலிதாவிற்கு மடல் வரைந்த கலைஞர், அதே அரசியல் நாகரீகத்தை, ஜெயலலிதா உலகத் தமிழ் மாநாடு நடத்திய பொழுது காட்டத் தவறியது ஏனோ?? சமூகநீதி என்னாயிற்று??


""தீவிரவாதம் என்பது, பிடி இல்லாத இரண்டு பக்கமும் கூர்மையான கத்தி...அது தன்னை பிடித்தவனையும் கண்டிப்பாக கொல்லும் ""

நிதர்ஸனம்!! இவ்வரிகளுக்காக இன்பாவிற்கு எனது ஷொட்டுக்கள். அதே சமயத்தில் பாகிஸ்தானில் தொடர்ந்து நிகழும் தீவிரவாத சம்பவங்கள் சற்றே கவலையளிக்கிறது. என்னதான் நமக்கெதிராக பாகிஸ்தானிய அரசு மற்றும் ISI போன்றவை சதிவேலையில் ஈடுபட்டாலும், அங்கு கொல்லப்படுவது பெரும்பாலும் அப்பாவி பொதுமக்களே!! அதே சமயத்தில் நமது அரசின் தீவிரவாதத்திற்கெதிரான மெத்தனமான போக்கு மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது. நக்ஸல்களும், மாவோ தீவிரவாதிகளும் ஒருபுறம் மக்களையும் காவல்துறையினரையும் கொன்று குவிக்கின்றனர். மறுபுறம் நமது உள்துறையமைச்சர் சிதம்பரம், அவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்துக் கொண்டிருக்கிறார். இதில் வேடிக்கை என்னவெனில், காஷ்மீர தீவிரவாதமும், மாவோ தீவிரவாதமும் ஒன்றில்லை என சான்றிதழ் வேறு அளிக்கிறார். இன்று புதிதாக, நக்ஸல்களையும், மாவோக்களையும் ஆயுதங்களை கீழே போடுமாறு கூறவில்லை, அது அவர்களால் முடியாது. வன்முறையைதான் கைவிடுமாறு கோருகிறோமென்கிறார். இவ்வளவு அலட்சியமா?? கொலையாவது பொதுமக்கள்தானே என்ற அலட்சியமென்றே எண்ணத் தோன்றுகிறது. தீவிரவாதத்தை வேரறுக்க ஆட்சியாளர்களை நம்புவதை விட ஆண்டவனை சரணடைவதே உத்தமம்.

சீனு said...

//சமுதாயத்தில் இன்று நிறைய பக்தி வளர்ந்து வருகிறது. நல்ல பண்புகள் குறைந்து வருகின்றன. ஒவ்வொரு குடும்பத்திலும், பள்ளிகளிலும் நற்பண்புகளை வளர்க்க முயற்சிகள் எடுக்க வேண்டும். குழந்தை பருவத்தில் நல்ல பண்புகளை வளர்த்தால் தான் பெரியவர்களாகியும் நிற்கும்.//

குழந்தை பருவத்தில் இவருக்கு யாரும் சொல்லலியா?

துன்பா said...

//இதை படித்தவுடன்..உங்களுக்கு தோன்றிய உணர்வு என்ன என்பதை பின்னூட்டத்தில் எழுதுங்கள்
//

சாருநிவேதிதா, சங்கரமடம், கமலஹாசன், இளையராஜா இவர்களைப் பற்றியெல்லாம் எழுதினால் ஹிட்ஸ் கூடும் என்பது இட்லிவடைக்கு நன்றாகத் தெரியும் என்பதுதான் எனக்கு எழுந்த உணர்வு. நடத்துங்கள்!

Anonymous said...

http://www.sivajitv.com/events/Ilayaraja-Receives-Book-Launched-By-Gopalsamy.htm#

Jekathratchagan speech.

Vaazhka pakutharivu....

Anonymous said...

போடோவைப் பார்த்தல் ஈ ஓட்ற மாதிரி தெரியலையே.. நல்ல ஜாம் ஜாம்னு ஆதரவு சேருது போல...

IniyaHaji said...

maha periyavar irunthavarai sankaramadam sirappaaga irunthathu?

ippo... nallavarkal madaththil niraiyavendum enbathe em avaa?

vijayakanthin arasiyalil innum konjam vivekam vendum....

pakistan thamathu nilaiyai unaravendum.. adhupol RAW & IB nalla visayangalil kurippaga nam padhukappil ushaaraaga irukkavendum...?


IniyaHaji

R.Gopi said...

சனிப்பெயர்ச்சி முடிந்த பின் காணாமல் போன "பின்னூட்ட சிங்கம்" அண்ணன் "மானஸ்தன்" எங்கிருந்தாலும் வந்து ஒரு ஆஜர் சொல்லவும்...

இப்போதும் வரவில்லை என்றால் அவரை கண்டுபிடிக்க ஒரு "அடையாள உண்ணாவிரதம்" மேற்கொள்ளப்படும்... உண்ணாவிரத ஆரம்ப நேரம் காலை டிஃபனுக்கு பின்.... முடிவு மதிய சாப்பாட்டிற்கு முன்....

இப்படிக்கு "அகில உலக மானஸ்தன் ரசிகர் மன்றம்" / "அகில உலக மானஸ்தன் ரசிகர் கழகம்"...

மானஸ்தன் said...

ஆஜர்! :-)

Kameswara Rao said...

IV,

Sankaramadam was proper when Mahaperiyavar was there but now what to say .

VK has to survive next two years and then only again the last place is waiting for him

Pakistan is repenting for whatever they have done the toll will be higher which they will never disclose

Inthavaaram Sunday Na Rendu ... Good

By the way why no news about Sonia refusing to meet kanimozhi...

Kamesh

ஸ்ரீராம். said...

எப்படியாவது மழை வந்தா சரி...ஏதாவது செய்ங்கப்பா...

ஸ்ரீராம். said...

உலகத் தமிழ் மாநாடு செம்மொழி மாநாடாச்சு சீக்கிரமே அது கனிமொழி கஸ்பார் மாநாடாகலாம்...

கிருஷ்ணமூர்த்தி said...

உளறுவதைக் குறைத்துக் கொண்டாலே சங்கடங்கள் குறைய ஆரம்பிக்குமே!

pachhamilaka said...

நல்லதசொல்ல நான்குபேர் இருக்கிறாங்க ஆனா நடக்கதான் ஆள் இல்ல ....

sundaikai said...

துறவிகள் எடுத்துகாட்டாக விளங்க வேண்டும், வெறும் வாய்பேச்சில் மட்டும் அல்ல. தமில்-ய, தமிழ் என்று சொல்ல கற்றுக்கொள்ள வேண்டும் & தீவரவாதத்தின் வேர்களை கண்டறிந்து அறுக்க வேண்டும் (நாயகன் dialogue தான் - நாலு பேரு நல்ல இருக்கணும்னா ஒருத்தன் சாகிரதில தப்பில்லை).

முதுகு எலும்பில்லா மு.க வின் குடும்பமும், கொள்கையற்ற கூட்டணியும், பெட்டிக்கு விலை போகும் அரசில வியாதிகளும், காசுக்காக வோட்டை விற்கும் மாக்களும், காசிற்காக கடவுளை விற்கும் பிறவிகளும் வாழும் வரை இது சாத்தியம்இல்லை.

R.Gopi said...

பச்சை மிளகாய், சுண்டைக்காய் எல்லாம் சமையலில் மட்டுமில்லை, பின்னூட்டத்திலும் பட்டையை கிளப்புகிறது...

இருவரின் பின்னூட்டத்தை ரசித்தேன்...

"அதிரடி"யாக வந்து ஆஜர் சொல்லி போன அண்ணன் "மானஸ்தன்" வாழ்க...

Mohan Kumar said...

Inba,

I have been reading your articles; they are quite good. You have wide knowledge in various matters and write really well. Pl. continue your good show in future also.

Mohan Kumar
http://veeduthirumbal.blogspot.com/

vednarayanan said...

Hi,

Sankaracharya:

Is it possible to live without tasteful food.
Is it possible to live in a cell without seeing outside world.
Is it possible to live listening to silence?
Is it possible to live by controlling basic instincts.

I have come to the conclusion that
rules be modified for acharyas lifestyle and be made like any other human being like a simple married life. By eating sadhvic food and praying god and chanting mantras, one cannot change the nature of human tendencies, though exceptions may be there.

Gandhiji has proved that one can be a mahatma being in marriage.

Vijayganth : What he says is correct. This govt doesnot have any long term goals to get people out of poverty. And being part of central govt has become a curse on this govt for all decisions of central govt like mullai periyar.
And the problem of TN is that Jaya or Vijaykanth (or no-kanth), there seem to be no alternative.

Pakistan :
"Too many cooks, spoil the broth".

The cooks are usa, uk, pak military, pak govt, talibans, al qaeda, all kashmir terror groups, poverty of people, madrasas... what else required to spoil a country. I have a feeling that this country will get screwed thoroughly.

Anonymous said...

It is suggested the Ulaga Tamil manadu be conducted in the srilankan refugee camps in Tamillnadu
If we continue to follow the current leadership entire indian tamilcommunity will also end up in refugee camps

ஜிம்பலக்கடி பம்பா said...

கேப்டன் சொல்வது சரியே!! நியாயமே!!