பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, October 18, 2009

சண்டேனா இரண்டு (18-10-09) செய்திவிமர்சனம் - இன்பா

இந்த வார இரண்டு செய்திகள்...

செய்தி # 1

மும்பை தாக்குதல் தொடர்பாக கைதான தீவிரவாதி யான அஜ்மல் மீது வழக்கு தொடரப்பட்டு மும்பை கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது.

இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதி தசிலியானிக்கு, அஜ்மல் ஒரு மனு எழுதி இருந்தார். உருது மொழியில் தனது கைப்பட எழுதி இந்த மனுவை ஜெயில் அதிகாரிகளிடம் கொடுத்தார். அதை ஜெயில் அதிகாரிகள் மராத்தியில் மொழி பெயர்த்து கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.

அதில், இந்திய கோர்ட்டு மீது எனக்கு நம்பிக்கை இல்லை. எனவே எனது வழக்கை சர்வதேச கோர்ட்டு விசாரிக்க வேண்டும் என்று கூறியிருந்தான்.
நீதிபதி தசிலியானி இந்த மனுவை தள்ளுபடி செய்தார். இதுபற்றி அவர் கூறும்போது, "அஜ்மல் குறும்புத்தனமாக இந்த மனுவை அனுப்பி இருக்கிறார். வழக்கை இழுத்தடிக்கும் முயற்சியில் இதுவும் ஒன்று. இதை ஏற்க முடியாது" என்றார்
போனதடவை, எனக்கு மட்டன் பிரியாணிதான் வேண்டும் என ஜெயில் அதிகாரிகளிடம் அடம் பிடித்துஇருக்கிறான் அஜ்மல் காசாப்.

விரைவில், தீவிரவாதி அஜ்மல் வழக்கை நடத்துவதர்க்கான செலவுகள், சிறையில் வைத்து அவரை 'மெயின்டைன்' செய்யும் செலவுகள் போன்றவற்றை, மும்பை ஹோட்டல் தாக்குதல்களால் ஏற்ப்பட்ட நஷ்டத்தோடு ஒரு Balance sheet போட்டால் Tally ஆகும் என்று தோன்றுகிறது

இதை படித்த உடனே, உணர்ச்சிவசப்பட்டு, வாசக நண்பர்கள் யாராவது, There will be many plastic expostions in your city என்று மும்பை போலீஸ் கமிஷனருக்கு போன் போட்டால், அதற்க்கு நானோ, இட்லிவடை குழுமமோ(?) பொறுப்பல்ல.

செய்தி # 2

ஆந்திராவில் கடந்த வாரம் வரலாறு காணாத அளவுக்கு பலத்த மழை பெய்தது. இதில் அங்குள்ள மெகபூப் நகர், கர்னூல், விஜய வாடா போன்ற மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தன. விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி நாசமாயின. இந்நிலையில் வெள்ள சேதத்தை பார்வையிட ஆந்திர முதல்வர் ரோசையா முடிவு செய்தார். இதன் படி அவர் மெகபூப் நகர், கர்னூல் மாவட்டங்களுக்கு திறந்த வேனில் சென்றார்.

அவர் மெகபூப் நகர் மாவட்டம் ஆலம்பூர் கிராமத்திற்கு சென்றார். அவருடன் மந்திரிகள் சிலரும் சென்றனர். அப்போது கிராம மக்கள் கும்பலாக திரண்டு வந்து, நாங்கள் வெள்ளத்தால் வீடுகளை இழந்து ஒரு வாரம் தெருவில் வசித்து வருகிறோம்.

எங்களுக்கு அரசு எந்த வித உதவியும் செய்யவில்லை. கண்துடைப்புக்காக இங்கு வரக்கூடாது. நீங்கள் அரசியல் பண்றதுக்கு நாங்களா கிடைத்தோம். தயவு செய்து திரும்பி சென்று விடுகள் என்று சத்தமாகக்கூறினார்கள்.

இதை கேட்டதும் அதிர்ச்சி அடைந்த ரோசையா. நான் உங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை நேரில் கண்டறியத்தான் வந்துள்ளேன் என்றார்.

ஆனால் கிராமத்தினர் நீங்கள் சேதத்தை பார்த்தால் எங்கள் வயிறு நிறைந்து விடுமா? ஆபத்து நேரத்தில் உதவி செய்யாமல், எல்லாவற்றையும் இழந்த பிறகு இங்கு வந்து என்ன பயன்? முதலில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டு ஜெகன் மோகன் ரெட்டியை முதல்வராக்குங்கள் என்று கூறி வேனை முற்றுகையிட்டனர்.

ஆனால் அதையும் மீறி வேன் ஊருக்குள் சென்றது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திடீரென கற்களை எடுத்து ரோசையா மீது வீசினார்கள். இதைப்பார்த்ததும் ரோசையா “டக்” கென கீழே குனிந்து கொண்டார். அருகில் நின்று கொண்டிருந்த மந்திரிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வேனுக்குள்படுத்துக் கொண்டனர்.


இதனால் அவர்கள் தப்பினார்கள். உடனே ரோசையா வேனை வேகமாக ஓட்டும்படி கூறினார். இதையடுத்து வேன் அங்கிருந்து வேன் வேகமாகச் சென்றது. ஆனாலும் கிராம மக்கள் விடவில்லை. வேகமாக விரட்டிச் சென்று ரோசையா வேன் மீது கற்களை வீசினார்கள்.
பின்னர் தடியடி நடத்தி மக்கள் கூட்டம் கலைக்கப்பட்டது.


இந் நிலையில் முதல்வர் ரோசையா, விஜயவாடாவில் உள்ள கிருஷ்ணலங்கா பகுதியில் வெள்ளம் பாதித்த மக்களிடம் குறை கேட்க சென்றபோது, அவரை பொது மக்கள் கல்வீசித் தாக்கும் அபாயம் காரணமாக போலீசார் மிகப் பெரிய கம்பிவேலி அமைத்தனர்.


அந்த கம்பி வேலிக்குள் ரோசையா பாதுகாப்பாக நின்றபடி பொதுமக்களிடம் குறை கேட்டார். அப்போதும் சில பெண்கள் வேலியை ஓங்கி அடித்து, ஆபத்து நேரத்தில் அரசு அதிகாரிகள் யாரும் உதவிக்கு வரவில்லை. சமூக சேவை அமைப்புகள் தான் எங்களுக்கு உணவு அளித்து அடைக்கலம் கொடுத்தன. நீங்கள் அரசியல் செய்வதற்கு எங்களைப் போன்ற ஏழைகள் தான் கிடைத்தார்களா? மரியாதையாக திரும்பி சென்று விடுங்கள் என்று சத்தம் போட்டனர்.


நிருபர்கள், ரோசையாவிடம் வேலிக்குள் இருந்து கொண்டு மக்களை குறை கேட்டது சரியான அணுகு முறைதானா என்று கேட்டனர்.

அதற்கு ரோசையா கூறும் போது, நான் மக்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அவர்களிடம் நேரில் குறை கேட்க செல்கிறேன். இதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பது தேவை இல்லாத ஒன்று. மக்களின் மனநிலையை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
ஆனால் ஒன்று மட்டும் நன்றாக புரிகிறது. மக்கள் ஆந்திர அரசு மீது கடும் கோபத்தில் உள்ளனர். அவர்களை சமாதானப்படுத்துவது எப்படி என்று தான் தெரிய வில்லை என்று புலம்பினார்.

ஒரு முக்கிய அறிவிப்பு : ஆந்திர மக்கள் காரவகை உணவுகளை விரும்பி சாப்பிடுவார்கள். தமிழக மக்களுக்கு இனிப்புவகைகள் பிடிக்கும்.

இந்த வார உலக(?) செய்தி

அருணாசலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 13) நடைபெற்றது. முன்னதாக தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் மன்மோகன் சிங் கடந்த 3-ம் தேதி அருணாசலப் பிரதேசம் சென்றார்.

ஆனால் இதற்கு சீனா ஆட்சேபம் தெரிவித்துள்ளது. எங்களின் ஆட்சேபத்தை கருத்தில் கொள்ளுமாறு இந்தியாவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே பிரச்னைக்குரிய பகுதியில் இதுபோன்ற செயலால்

மேலும் பிரச்னையை ஏற்படுத்த வேண்டாம் என்று சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் எச்சரித்துள்ளார். அவரது அறிக்கை சீன வெளியுறவு அமைச்சக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான எல்லை இன்னும் அதிகாரப்பூர்வமாக நிர்ணயிக்கப்படவில்லை. சீன - இந்திய எல்லையின் கிழக்குப் பகுதியில் சீனாவின் நிலை மிகவும் தெளிவானது, உறுதியானது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சீனத் தூதர்: தில்லியில் உள்ள சீனத் தூதர் ஷயாங் யான் வெளியுறவு அமைச்சக அலுவலகத்துக்குச் சென்று அங்கு இணைச் செயலர் விஜய் கோகலேயைச் சந்தித்துப் பேசினார்.

சீனாவின் ஆட்சேபம் தொடர்பாக இந்தியத் தரப்பில் அவரிடம் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
எல்லைப் பகுதியில் உள்ள அருணாசலப் பிரதேச மாநிலத்தில் 90 ஆயிரம் சதுர கி.மீ. தமக்கு சொந்தமான பகுதி. அதை இந்தியா ஆக்கிரமிப்புச் செய்துள்ளது என்று சீனா கூறி வருகிறது. ஆனால் அருணாசலப் பிரதேசத்தில் சீனா கோரும் பகுதி எங்களுக்குச் சொந்தமானது என்று இந்தியா கூறி வருகிறது.
இதனால் அருணாசலப் பிரதேசத்தில் எல்லைக் கோடு இன்னும் தீர்மானிக்கப்படாமலேயே உள்ளது.

அருணாசலப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட இருக்கும் வளர்ச்சிப் பணிகளுக்கு ஆசிய வளர்ச்சி வங்கி கடனுதவி அளிப்பதாக இருந்தது. ஆனால் சீனா கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால் அருணாசலப் பிரதேசத்துக்கு கடனுதவி மறுக்கப்பட்டது.

ஏற்கெனவே இதுபோன்று இந்த ஆண்டின் தொடக்கத்தில் பிரதமர் மன்மோகன் சிங் அருணாசலப் பிரதேசம் சென்றார். இந்தியாவில் சூரியன் உதிக்கும் பூமி என்று அருணாசலப் பிரதேசத்தை வர்ணித்தார். அப்போதும் சீனா எதிர்ப்புத் தெரிவித்தது. ஆனால் இதை இந்தியா நிராகரித்துவிட்டது.

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் சீனா சட்டவிரோதமாக 43,180 சதுர கிலோ மீட்டரை ஆக்கிரமித்துக் கொண்டதாக இந்தியா குற்றம்சாட்டி வருகிறது. அதுபோல் அருணாசலப் பிரதேசத்தில் 90 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவை இந்தியா பிடித்து வைத்துக் கொண்டதாக சீனா குற்றம்சாட்டி வருகிறது.
பேச்சுக்கு தடையாக இருக்கக் கூடாது: அருணாசலப் பிரதேசம் இந்தியாவின் ஒரு பகுதி. அங்கு இந்தியப் பிரதமர் செல்வதற்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை. எனவே சீனாவின் இதுபோன்ற நடவடிக்கைகள் இரு நாடுகளிடையே இருதரப்பு பேச்சுக்கு எந்த வகையிலும் உதவாது என்று வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா கூறினார்.


இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே உள்ள பிரச்னைகள் இருநாட்டுக்கும் இடையே நல்லுறவை மேம்படுத்த தடையாக இருக்கக் கூடாது என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. சீனாவும் இந்த
நிலையில் உறுதியாக இருக்க வேண்டும் என்றார் அவர்.


தேர்தல் நடைபெறும் மாநிலத்தில் பிரதமர் பிரசாரத்துக்குச் செல்வது வழக்கம். இதை சீனா ஆட்சேபிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் விஷ்ணு பிரகாஷ் கூறினார்.

டெல்லியை தவிர மற்ற எல்லைபுற மாநிலங்கள் எல்லாம் நம் கையைவிட்டு போய்விடும் போலிருக்கிறது.

(நன்றி...அடுத்தவாரம் சந்திப்போம்)

-இன்பா

13 Comments:

Dubai Nara said...

எல்லைப் பகுதிகளில் பிரச்சனை இல்லாமல் இருக்க வேண்டுமெனில் இந்தியர்கள் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கத் தொடங்க வேண்டும்.

ஆளும் கட்சிக்காரர்களில் தலைவராக அடையாளம் காணக்கூடிய ஆட்கள் அறவே கிடையாது.

எதிர் கட்சியோ அய்யோ பாவம்.

ஒட்டே அளிக்காமல் திரியும் போலி படித்த வர்க்கம் இனிமேலாவது திருந்தனும்.

நக்சலைட்கள் தீவிரவாதிகள் இல்லை என்று பிரதமரே பேசினால் அயோக்கியத்தனம் செய்பவர்களுக்கு ஊக்கம் வரத்தான் செய்யும்.

Anonymous said...

Your last comment is very apt.
As long as we have a government that is as spineless as the
present one in Delhi why only
border states, even the middle
states will also slip from its
hands. You have Naxals (Maoists)
running from north/northeast
via central India and to south
India. That is the fate our
country is destined to meet.
Only, really only, God can save
our country.

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

தீவிரவாதிகள் விஷயத்தில் மெத்தனம் காட்டுவது எந்த சூழ்நிலையை உருவாக்கும் என்பது முதல் செய்தி தரும் பாடம்.

அரசியல்வியாதிகளுக்கு நாட்டு நலன் பெரிதில்லை என்பது உலக(?)செய்தி தரும் பாடம்.

இந்த இரண்டு பாடங்களும் மக்களுக்கு.

நடுச்செய்தி தரும் பாடம் நாட்டை ஆள்பவர்களுக்கு;

மக்கள் கோபப்பட்டால் அரசனும் ஆடிப் போய்விட வேண்டியதுதான்.

வெல்டன் இன்பா

R.Gopi said...

//டெல்லியை தவிர மற்ற எல்லைபுற மாநிலங்கள் எல்லாம் நம் கையைவிட்டு போய்விடும் போலிருக்கிறது.//

அதிர்ச்சி ம‌ற்றும் க‌வ‌லை த‌ரும் செய்தி....

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

இது என் இரண்டாம் பதிவு.

http://ulagamahauthamar.blogspot.com/2009/10/blog-post_17.ஹ்த்ம்ல்

படித்துக் கருத்து கூறுங்கள்.

ஸ்ரீராம். said...

பிரதமர் இதையும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருப்பதாக அறிக்கை வெளியிட வேண்டியதுதான்....பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்று வேறு யாராவது அறிக்கை விட்டு விடுவார்கள். முடிந்தது பிரச்னை.

kggouthaman said...

அஜ்மல் குற்றமற்றவர் என்று அஜகஜாந்தரம் பண்ணி - நிரூபணம் ஆயிடிச்சுன்னா - அப்போ கொல்லப்பட்ட அவருடைய கூட்டாளிங்களுக்காக - இந்தியா வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டாலும் கேப்பாங்க போலிருக்கே!

இரண்டு : ரோசையா ஜகன் மோகன் ரெட்டியையும் கூப்பிட்டுகிட்டுப் போயிருக்கலாம் - குறை கேக்க!

மூன்று : மன் மோகன் - சீனப் பிரதமரையும் கூப்பிட்டுகிட்டுப் போயிருக்கலாம் - வோட்டு கேக்க!

கேக்க கேக்க கேவலமா இல்லே?

இரும்புக்குதிரை said...

[டெல்லியை தவிர மற்ற எல்லைபுற மாநிலங்கள் எல்லாம் நம் கையைவிட்டு போய்விடும் போலிருக்கிறது.]
டெல்லி ஒரு எல்லைபுற மாநிலமா இன்பா?

Erode Nagaraj... said...

ராசையா சென்ற போது நடந்தவைகள் ஜெகனின் ஏற்பாடாக இருக்கும்.

எல்லைகளைப் பொறுத்தவரை, பிரதமருக்கு எந்த ஒரு விஷயத்திலும் தன்னுடைய எல்லை எது என்று தீர்மானிக்கவே நேரமில்லை. சோனியா ராகுலில் இருந்து சிபு சோரன் வரை யார் எப்போது குறுக்கே வருவார்கள் என்பதே அவருக்குத் தெரியாது...

சீனா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகள் இது போன்ற ஒரு சூழல் நிலவும் போதே, ராஜ தந்திரமாக எல்லை முதல் சகல வழக்குகளிலும் ஆதாயம் தேட முற்படுவதில் ஆச்சிரியமேதுமில்லை.

Guru said...

இலக்கை மிஞ்சியது டாஸ்மாக் : ரூ.220 கோடிக்கு சரக்கு விற்பனை செய்து சாதனை -


தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது 100 கோடி ரூபாய் வரை மதுவகைகள் விற்பனையாயின. இந்த ஆண்டு, தீபாவளியை அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால், எதிர்பார்க்காத வகையில் கடந்த ஆண்டை விட விற்பனை 100 சதவீதத்தை தாண்டியுள்ளது. மொத்தத்தில் 220 கோடி ரூபாய்க்கு மேல் சரக்குகள் விற்று தீர்ந்துள்ளன.

R.Gopi said...

//Guru said...
இலக்கை மிஞ்சியது டாஸ்மாக் : ரூ.220 கோடிக்கு சரக்கு விற்பனை செய்து சாதனை ‍//

இதுல‌ என் ப‌ங்கு வெறும் 20 முழு பாட்டில்தான்... (மூன்று நாள் விடுமுறை கொண்டாட்டத்தை சேர்த்து...)

டாஸ்மாக் ச‌ங்க‌ த‌லைவ‌ர் : கேப்ட‌ன் "வி.......த்".....

R.Gopi said...

அஜ்மல்கானுக்கு தமிழ் கற்று கொடுத்து, குற்ற பத்திரிக்கை நகலின் முழு 3335 பக்கங்களையும் தமிழில் தருமாறு வலியுறுத்தி, வரும் விடுமுறை நாளன்று "சட்டசபை" முன்பு போராட்டம் நடைபெறும்... (தீவிர தமிழ் பேசுவோர் சங்கம்...தலைவர் 1000 பெல்)

Pure Green Tamilan Who Thinks, Speaks, and Writes in English as per the Order of E.V. Ramasami Naicker said...

//டெல்லியை தவிர மற்ற எல்லைபுற மாநிலங்கள் எல்லாம் நம் கையைவிட்டு போய்விடும் போலிருக்கிறது.//

The British government is now processing a request to withheld the freedom given to Tamilnadu.

The request was sent by some one who is accepted by all the major political parties in Tamilnadu as their leader, and they say that they are working towards achieving his plans.

Name of the person who sent the request is: E.V. Ramasami Naicker.

E.V. Ramasami Naicker is dead !! Long live the Queen !!