பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, October 11, 2009

சண்டேனா இரண்டு (11-10-09) செய்திவிமர்சனம், இன்பா


இந்த வார இரண்டு செய்திகள்.



செய்தி # 1

நடிகை புவனேஸ்வரி விபசாரவழக்கில் கைதுசெய்யப்பட போது, அவர் தனக்கு தெரிந்த சில நடிகைகளின் அந்தரங்கத்தை வெளியிடபோவதாக அறிவித்தார். அதை தொடர்ந்து நடிகைகள்
எல்லாரும் 'அந்த' மாதரிதான் என்று விமர்சனங்கள் எழ, உடனே நடிகர் சங்க அவசர கூட்டம் நடத்தப்பட்டது.

அதில் கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது :

பொதுவா எனக்குக் கோபம் வந்தா அதிகம் பேசமாட்டேன். ரிலாக்ஸான மைன்ட்ல இருக்கும்போது நிறையப் பேசுவேன். இப்போ நான் ரொம்ப கோபமா இருக்கேன்.

அந்தப் பத்திரிகையில போட்டோவோட செய்தி பார்த்தப்போ எனக்கே மனசு சரியில்லை. ஒருவேளை ஏப்ரல் ஒண்ணா இருக்குமோன்னு நினைச்சேன். ஆனா தேதியைப் பார்த்தப்போதான் இது சீரியஸ் மேட்டர்னு புரிஞ்சது. ஒரு வேலையும் ஓடல. என்ன செய்யுறதுன்னே தெரியல.

பொதுவா விபச்சார வழக்குகளில் கைதாகும் பெண்களை பர்தா போட்டு மூடி போலீசார் அழைச்சிட்டுப் போறதை படம் பிடிச்சி போடறதை பார்க்கும்போதே மனசுக்கு கஷ்டமா இருக்கும். பத்திரிகைகள் தயவு செய்து இதைச் செய்யக்கூடாது.

கேவலம், ரெண்டு வேளை சோத்துக்குதானே இவங்க அப்படி தப்பு செய்றாங்கன்னு தோணும். தப்பு செஞ்ச அவங்க மேலேயே நமக்கு இவ்வளவு அனுதாபம் வரும்போது, தவறே செய்யாத இங்க உட்கார்ந்திருக்கிற நம்ம சகோதரிகளைப் பத்தி போட்டோவோட நியூஸ் வந்தா அவங்க மனசு என்ன பாடுபடும்...

நான் சொல்றேன்... நீங்க தப்பு செஞ்சீங்களா இல்லையான்னு உங்களுக்குத் தெரியும். உங்க உறவுக்காரங்க, அப்பா அம்மா, பிள்ளைங்களுக்குத் தெரியும... அந்த ஆண்டவனுக்குத் தெரியும்... இதெல்லாம் ஒண்ணுமில்லை... மனசைத் தளர விடாதீங்க.

நான் கேட்கிறதெல்லாம்... உண்மையிலேயே இவங்க தப்பு செஞ்சிருந்தாங்கன்னா, அதை ஆதாரத்தோட நிரூபிச்சி தண்டனை வாங்கிக் கொடுங்க. ஆனா இப்படி ஆதாரமில்லாம போட்டோ போட்டு அசிங்கப்படுத்தக்கூடாது. நான் ரொம்ப நேரம் பேசினா உணர்ச்சிவசப்பட்டுடுவேன். அதனால இதோட முடிச்சிக்க விரும்பறேன்.

இப்போ கடைசியா ஒரு நல்ல செய்தி வந்திருக்கு... அந்த நியூஸ் போட்ட பத்திரிகை ஆசிரியரை கைது பண்ணியிருக்கிறதா செய்தி வந்திருக்கு. காவல் துறையினருக்கு நன்றி... இந்த அதிரடி நடவடிக்கை எடுத்த முதல்வர் கலைஞருக்கும் நன்றி தெரிவிச்சிக்கிறேன்... என்றார் ரஜினி.

தவறு செய்யும் பெண்கள் சினிமாவில் மட்டும் அல்ல, எல்லா துறைகளிலும் இருகிறார்கள்.
குடும்ப பெண்கள் என்னும் போர்வையிலும் இருக்கிறார்கள் என்று உணர்வோம்.

செய்தி # 2

பின்வரும் செய்தியை படித்தவுடன், எனக்கு விவேக் நடித்த ஒரு காமெடி ட்ராக் நினைவுக்கு வந்தது. விவேக்கிற்கு தவறுதலாய் ஆபரேஷன் செய்த டாக்டரிடம், அவரின் உதவியாளர் ஓடிவந்து 'டாக்டர் நீங்க பிளஸ் டூ பாஸ் பண்ணிட்டிங்க' என்பார்.

மதுரை நீதிமன்றங்களில் கடந்த 4 ஆண்டுகளாக வக்கீலாக ஆஜராகி வந்த சட்டக்கல்லூரி மாணவரை வக்கீல் சங்கம் பொறி வைத்துப் பிடித்தது.

மதுரை வளர்நகரில் வசிப்பவர் கிருஷ்ணமூர்த்தி(41). இவர் பி.இ. முடித்தபின், எம்ஏபிஎல் படித்துள்ளதாகவும், பார் கவுன்சிலில் தனது பதிவு நம்பர் "306பி039" என்று குறிப்பிட்டு உயர்நீதிமன்ற கிளை மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகளில் ஆஜராகி வந்தார்.

வக்கீல்கள் நடத்திய போராட்டங்களில் கல்வீச்சு சம்பவங்களில் ஈடுபட்டதால், இவர் மீது மற்ற வக்கீல்களுக்கு சந்தேகம் வலுத்தது. இவர் வக்கீல்தானா என்பதை விசாரிக்கக் கோரி வக்கீல்கள் முத்துக்குமார், அருண்குமார் ஆகியோர் சங்கத்தில் புகார் அளித்தனர். விசாரணையில், அவர் மதுரை சட்டக்கல்லூரி 3ம்ஆண்டு மாணவர் என தெரிய வந்தது. மாவட்ட நீதிமன்றத்திற்கு வந்த கிருஷ்ணமூர்த்தியை, வக்கீல்கள் பிடித்து சங்கத்தில் ஒப்படைத்தனர். வக்கீல் சங்கத்தலைவர் தர்மராஜ், செயலாளர் ஏகே.ராமசாமி, பார் கவுன்சில் உறுப்பினர்கள் ராஜேந்திரன், கோவிந்தன் ஆகியோர் அவரிடம் விசாரித்தனர்.

அவர் பதிவு செய்த வக்கீல் இல்லை என்பது உறுதியானது. அவரது சொந்த ஊர் தஞ்சாவூர் என்றும், மதுரை வளர்நகரில் வசித்து வருவதாகவும் கூறினார். சங்க அவசர பொதுக்குழுக்கூட்டம் கூடி, அவரை போலீசில் ஒப்படைத்து கிரிமினல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவது, பார் கவுன்சிலில் அவரை வக்கீலாக பதிவு செய்யக் கூடாது என பரிந்துரை செய்வது என தீர்மானிக்கப்பட்டது. அண்ணாநகர் போலீசில் அவர் ஒப்படைக்கப்பட்டார்.

சங்க செயலாளர் ராமசாமி கூறுகையில், ‘வக்கீல் என்ற போர்வையில் தலைமை நீதிபதி முன்பாக கூட ஆஜராகி வாதாடியுள்ளார். கடந்த 4 ஆண்டுகளாக பொது மக்கள் பலரிடமும் வழக்கு நடத்துகிறேன் எனக்கூறி பணம் பறித்துள்ளார்’ என்றார்.

போலிகள் இல்லாத துறைகள் இந்தியாவில் இல்லை எனலாம். ரவுடியிசம் புழங்கும்
சட்டகல்லூரிகளில் இருந்து கிருஷ்ணமூர்த்தி போன்ற கிரிமினல்கள் வெளிவருவதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்???

இந்த வார உலக செய்தி

விநாயகமூர்த்தி முரளிதரன் - இப்படி சொன்னால் புரியாதவர்களுக்கு, இவர்தான் தற்சமயம் இலங்கையில் உள்ள தமிழர்களின் பிரிதிநிதியாக பார்க்கப்படும் கருணா.
இலங்கையில் அமைச்சர் பொறுப்பிலும் இருக்கிறார்.

தமிழ்நாட்டில் தங்கி இருக்கக்கூடிய ஈழத் தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்று தமிழ்நாட்டின் ஆளும் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் அண்மையில் தீர்மானம் நிறைவேற்றி இருந்தது.

அந்தத் தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன், அது தொடர்பாக தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி ஆகியோரை நேரில் சந்தித்து எடுத்துக் கூறி இருந்தார்.

தி.மு.கவின் இந்த நடவடிக்கையை வாழும் கலை அமைப்பின் தலைவர் சிறீ ரவிசங்கரும் வரவேற்றிருந்தார். அத்துடன், ஈழத் தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார்.

இந்நிலையில் அத்தகைய தேவை எதுவும் இல்லை என மறுத்துள்ள அமைச்சர் முரளிதரன், இலங்கையில் நிலைமைகள் நல்ல முறையில் முன்னேற்றம் கண்டு வருவதால் இந்தியாவில் இருந்து தமிழ் அகதிகளைத் திருப்பி அனுப்புவதற்கு இதுதான் சரியான தருணம் எனவும் குறிப்பிட்டார்.

"எமது நாட்டில் நிலைமைகள் நல்ல முறையில் இருக்கின்றன. மக்களை நாம் வரவேற்பதற்கான சிறந்த நேரம் இது என நான் நினைக்கிறேன்" என்றார் முரளிதரன்

இந்த விவகாரத்தில், திமுக மற்றும் அதனுடன் கூட்டணி சேரதுடிக்கும் பாமக போன்றவற்றை தவிர, அதிமுக மற்றும் இரு பெரும் தேசிய கட்சிகளான காங்கிரஸ்,பாஜக ஆகியவை ஒரே கருத்தை வலியுறித்து உள்ளன.

அது "ஈழத் தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட கூடாது " என்பதே.


(நன்றி, மீண்டும் அடுத்த வாரம்)

-இன்பா
( இன்பாவின் வலைப்பதிவு முகவரி : http://www.kadaitheru.blogspot.com/ )

19 Comments:

jaisankar jaganathan said...

//இந்த விவகாரத்தில், திமுக மற்றும் அதனுடன் கூட்டணி சேரதுடிக்கும் பாமக போன்றவற்றை தவிர, அதிமுக மற்றும் இரு பெரும் தேசிய கட்சிகளான காங்கிரஸ்,பாஜக ஆகியவை ஒரே கருத்தை வலியுறித்து உள்ளன.
//

இத்தாலிக்காரங்களுக்கு மட்டும் இந்திய குடியுரிமை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது

seetha said...

the chief minister absolutely has no job other than meeting people from the film world. what dinamalar did was wrong and mean, so the stars could have sued the paper heavily. instead wasting time when there are many other pressing issues in the state.tragedy

ராகவன் பாண்டியன் said...

இத்தாலிக்காரங்களுக்கு மட்டும் இந்திய குடியுரிமை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது
//
:)
அட அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!

Anonymous said...

/***இத்தாலிக்காரங்களுக்கு மட்டும் இந்திய குடியுரிமை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது***/

Good question!!!

Anonymous said...

/****அந்தப் பத்திரிகையில போட்டோவோட செய்தி பார்த்தப்போ எனக்கே மனசு சரியில்லை. ஒருவேளை ஏப்ரல் ஒண்ணா இருக்குமோன்னு நினைச்சேன். ஆனா தேதியைப் பார்த்தப்போதான் இது சீரியஸ் மேட்டர்னு புரிஞ்சது. ஒரு வேலையும் ஓடல. என்ன செய்யுறதுன்னே தெரியல.


இப்போ கடைசியா ஒரு நல்ல செய்தி வந்திருக்கு... அந்த நியூஸ் போட்ட பத்திரிகை ஆசிரியரை கைது பண்ணியிருக்கிறதா செய்தி வந்திருக்கு. காவல் துறையினருக்கு நன்றி... இந்த அதிரடி நடவடிக்கை எடுத்த முதல்வர் கலைஞருக்கும் நன்றி தெரிவிச்சிக்கிறேன்... என்றார் ரஜினி. ***/


இவரு கையில் யாரு மைக்கை கொடுத்தது??? வந்தோமா attendance போட்டோமா என்றில்லாமல் எதற்கு இந்த வேண்டாத வேலை? அப்புறம் அடுத்த படத்தை ரிலீஸ் செய்ய மன்னிப்பு கேட்க வேண்டும் என்று செய்தியாளர்கள் கேட்டால் மன்னிப்பு கேட்பார், தேவையா அதெல்லாம்???

Sriram said...

/***இவரு கையில் யாரு மைக்கை கொடுத்தது??? வந்தோமா attendance போட்டோமா என்றில்லாமல் எதற்கு இந்த வேண்டாத வேலை? அப்புறம் அடுத்த படத்தை ரிலீஸ் செய்ய மன்னிப்பு கேட்க வேண்டும் என்று செய்தியாளர்கள் கேட்டால் மன்னிப்பு கேட்பார், தேவையா அதெல்லாம்???***/



கோபி மற்றும் அருண் அண்ணாச்சி கோபம் கொள்ள வேண்டாம் யாரோ அணானி போட்டுவிட்டார், வரிந்து கட்டிக்கொண்டு சண்டை போட வேண்டாம்.

Anonymous said...

நான் அங்கு வந்தால், நாளை என் பெயரையும், ஃபோட்டோவையும் போட்டு எழுதி விடுவார்களோ என்று அச்சம் கொள்ளாமல் வரலாம் என்று நினைத்து பின் நிஜமாகவே எழுதி விட்டால் என்ன செய்வது என்று முடிவு செய்து கௌ...யிடம் கேட்ட போது, அவர் என்னை போக வேண்டாம் என்று சொன்னதால் நான் வரவில்லை என்று சொல்லவில்லை... (க......ன்).

இதை படித்து விட்டு என் ரசிக கண்மணிகள் என் மேல் கோபம் கொள்ள வேண்டாம்...

((பெண்ணை போல் ஒருவன்)

Sriram said...

/***இதை படித்து விட்டு என் ரசிக கண்மணிகள் என் மேல் கோபம் கொள்ள வேண்டாம்...

((பெண்ணை போல் ஒருவன்)***/

No body will scold you!! since you posted the comment as annony, really you are பெண்ணை போல் ஒருவன்.

Anonymous said...

//இத்தாலிக்காரங்களுக்கு மட்டும் இந்திய குடியுரிமை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது//

அப்பேர்ப்பட்டவளுக்கு போட்டீங்கல்ல வோட்டு, அதுக்குத்தான் இப்போ அவ வெக்கரா உங்களுக்கு ஆப்பு.

Anonymous said...

Super star hence proved it!!
இந்த பதிவை படிக்கும் போது நடிகர் பார்த்திபணின் கிறுக்கல்கள் தான் ஏனோ ஞாபகம் வருகிறது.

Anonymous said...

ரஜினி பேசியதை முழுமையாக வெளியிட்டமைக்கு நன்றி! தினமலரில் “இரண்டு வேளை சாப்பாட்டிற்க்காக விபசாரம் செய்தால் தப்பில்லை” என்று ரஜினி சொன்னதாக மட்டும் எழுதியிருந்தார்கள். நடிகைகள் விபசாரம் செய்தார்களோ இல்லையோ, ரஜினி பேசியதில் தவறில்லை என்பதே எனது அபிப்ராயம்.

Prabhu Swaminathan said...

//கேவலம், ரெண்டு வேளை சோத்துக்குதானே இவங்க அப்படி தப்பு செய்றாங்கன்னு தோணும்

Comedy of the year. Everyone here knows that these actress starting from people who are in top slot to the outdated ones earn thousands of bucks doing prostitution and this guy is talking if they are doing because of poverty.

As usual stupid by our so called superstar...

VambeSivam said...

////கேவலம், ரெண்டு வேளை சோத்துக்குதானே இவங்க அப்படி தப்பு செய்றாங்கன்னு தோணும்//
//Comedy of the year. As usual stupid by our so called superstar//

தம்பி பிரபு,

ரஜினி அப்பிடி சொன்னது, போலீஸ் காரங்களால் விபச்சார கேசில் பிடிக்கப்பட்டு, பத்திரிகைலே போட்டோ வரும் சாதாரண அடித்தட்டு பெண்களை பற்றி. செய்திய ஒழுங்கா இல்ல முழுமையா படிச்சா இது உங்களுக்கு புரிஞ்சிரிக்கும். என்ன செய்ய. பெரு நாட்டு சாப்பாடும், எதியோப்பியா சாப்பாடும் உள்ள போனா, மூளை மழுங்கித்தான் போகும்.

Prabhu Swaminathan said...

My friend Mr.VambeSivam, when prostitution is declared as a crime in our constitution then how is it different if you do it for food or luxury?

Can we apply this "Special" treatment to people involved in pickpocket and other petty crimes?

If Mr. Rajinikanth has spoken this because of his social responsibility then he should have given his voice when some prostitute (who is not an actress) was arrested and her picture was published.

It not only matters what you are saying but it also depends on what context you are saying it.

Idam, porul, evalnu onnu irukula sir?
Yen sir eelai na veera entha veelaykum poga mudiatha enna? Tamilnadula Veelai illatha thindatam ellam poi 10 varusham aachu sir...

Anonymous said...

/**** Prabhu Swaminathan said...
My friend Mr.VambeSivam, when prostitution is declared as a crime in our constitution then how is it different if you do it for food or luxury?

Can we apply this "Special" treatment to people involved in pickpocket and other petty crimes?

If Mr. Rajinikanth has spoken this because of his social responsibility then he should have given his voice when some prostitute (who is not an actress) was arrested and her picture was published.

It not only matters what you are saying but it also depends on what context you are saying it.

Idam, porul, evalnu onnu irukula sir?
Yen sir eelai na veera entha veelaykum poga mudiatha enna? Tamilnadula Veelai illatha thindatam ellam poi 10 varusham aachu sir...***/

Your questions are very good, super nose cut to vambe sivam. one correction in your last paragraph,
before 10 years velai illamal illai makkal velaikku sellavillai enbathey unmai.


Mr .Vambesivam,
rajiniai patri sonna udane kamalai kindal seyyanum endra kolkaiai kai vidungal, paithiakarathanamaaka ullathu.

VambeSivam said...

//My friend Mr.VambeSivam, when prostitution is declared as a crime in our constitution then how is it different if you do it for food or luxury?//

Your single-point agenda seems to be to somehow find fault in what Rajinikant spoke & nothing else. Rajini never said prostitution is not a crime. On the other hand, he told them to arrest people if they have proof but not to defame people just based on hearsay or without any proof, which is unfair.

First you tried to mis-interpret a 'part' of his speech as if he spoke about the actress & tried to jump saying actress are not poor. Now, when your 'mischief' is being pointed out, you are trying to yet again mis-interpret it saying "even if they are doing it out of hunger, prostitution is a crime". Good try by you to project Rajini's comments totally out of context.

அட்வைஸ் எல்லாம் மத்தவங்களுக்குத்தான் போலிருக்கு. உங்களுக்கு இல்லையா?

Also, since you seem to be an expert in Criminal & Constitutional Law, hope you are aware of the basic tenet of any jurisprudence: a PERSON IS INNOCENT UNTIL PROVEN GUILTY. In other words, legally everyone has to be PROVEN to have committed a crime, before being pronounced as guilty.

By the bye, in case you are not aware, in India, Constitution has given powers only to the Courts in India to dispense justice based on facts and not to the Press.

Prabhu Swaminathan said...

Mr. VambeSivam, I don't want to get involved in this nasty brawl and that is not my interest. But what i meant is you and me know that these actress if not all but most of them are involved in prostitution.

My only question is why are they making such a hype for this when there are so many social stigma that needs their attention?

If you are die hard fan of Mr. Rajinikanth, well and good you be it but it doesn't mean others cannot comment on him.

VambeSivam said...

Mr. Prabhu Swaminathan,

//I don't want to get involved in this nasty brawl//
Good. You better escape.

//But what i meant is you and me know that these actress if not all but most of them are involved in prostitution.//
That 'knowledge' doesn't give you or me any right to throw mud on such people without proof. This is as per the constitution you only quoted, OK?

//My only question is why are they making such a hype for this when there are so many social stigma that needs their attention?//
Everyone has got a legal right to defend their honour. Whether they succeed in that or not, is a different question altogether. But, you have no right to question, why should they even defend the baseless accusations thrown against them in public.

//If you are die hard fan of Mr. Rajinikanth, well and good you be it but it doesn't mean others cannot comment on him.//
If you are a die-hard critic of Mr. Rajinikanth, well and good. But that doesn't mean you can criticise him just for the heck of it (like some mentally imbecile people do in the Tamil blog world) and by quoting his speech OUT OF CONTEXT & MIS-ITERPRETING THE SAME JUST TO SUIT YOUR ARGUMENT.

Anonymous said...

/****Everyone has got a legal right to defend their honour. Whether they succeed in that or not, is a different question altogether. But, you have no right to question, why should they even defend the baseless accusations thrown against them in public.***/

Similarly everyone should follow the law, if they violate the law then somebody has to intrupt to bring those to public.